September 23, 2026

நீயின்றி உயிராடும் திகிலாலே – 17

(17)

இங்கே விதரணையைத் தன் கரத்தில் நசித்துப் பிடித்தவாறு, அங்கிருந்தவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த வெள்ளையன். அவளோ வலியிலும் அவமானத்திலும் துடித்துக் கொண்டிருந்தாள். சற்று நேரம் அவன் பிடியில் இருந்து விடுபடப் போராடியவள், அதன்பின் தன் போராட்டத்தை விடுத்து, ‘அடுத்து என்ன செய்வது?’ என்கிற யோசனையில் இறங்கினாள். இது அவமானப்படும் நேரமோ, அழும் நேரமோ இல்லை; யோசிக்க வேண்டிய நேரம்! பெற்றவர்களையும் தம்பியையும் எப்படிக் காப்பாற்றுவது என்று சிந்திக்க வேண்டிய நேரம்! ‘யோசி விதரணை… யோசி…’ – தனக்குத் தானே சொன்னவளுக்கு புத்தி வேலை செய்தால்தானே.

‘இதில் அவர்கள் நடந்துகொள்ளும் முறையைப் பார்த்தால், எங்களை உயிரோடு விடுவார்கள் என்று தோன்றவில்லை. ஆனால் ஏன்…? அப்படி அப்பா எதை மறைத்து வைத்திருக்கிறார்? அப்படி ஒரு பொருளை மறைத்து வைக்க வேண்டிய காரணம் என்ன?’ இவன் இத்தனை செய்தும் அப்பா வாயைத் திறக்கவில்லை என்றால், நிச்சயமாக அதில் ஏதோ பயங்கரமான மர்மம் மறைந்திருக்கிறது. அது என்ன? குடும்பத்தையும் விட மிக முக்கியமான ஒன்றை அப்பா பாதுகாக்க நினைக்கிறார் என்றால், அதன் முக்கியத்துவம் பெரியதுதானே…!

அவள் தாறுமாறாக யோசித்துக்கொண்டிருந்த நேரம், அந்தக் கயவனின் கத்தி அவளுடைய ஜாக்கெட்டிற்குள் இரக்கமின்றி நுழைந்து, ஒரே இழுவையில் அதை வெட்டி எடுத்ததைக் கூட உணர வில்லை. அந்தளவுக்கு அவளது புத்தி அடுத்து என்ன செய்வது என்பதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தது. இதில் தோள்பட்டையில் வேறு கொல்லும் வலி அவளைப் படுத்தி எடுத்தது.

திறந்த ஜாக்கெட்டின் ஊடாக அவளது பெண்மையை அவன் ரசிப்பதைக் கூட உணராமல், இதிலிருந்து எப்படித் தப்புவது என்பதில்தான் தன் கவனத்தைச் செலுத்தியிருந்தாள். நிச்சயமாக அவர்களோடு போராடவோ, எதிர்க்கவோ அவளிடம் சக்தியில்லை; அப்பா, அம்மாவிடமும் சக்தியில்லை. விதுரனோ பேயறைந்தவன் போல அழுதுகொண்டு இருந்தான். இதை மிக அவதானமாகத்தான் கையாள வேண்டும்…

யோசிக்கும்போதே அவனுடைய கத்தி அவளுடைய உள்ளாடைக்குள் நுழையத் தொடங்கியது. இதில் கூரிய கத்தியின் முனை, மார்பின் மத்தியில் நெஞ்சின் தோலைக் கீறிக்கொண்டு செல்ல… அப்போதுதான் வலி உணர்ந்து குனிந்து  பார்த்தாள். தன் நிலை கண்டு முதலில் அதிர்ந்தவள், மறு கணம், அவனுடைய கத்தி அவள் உள்ளாடையை அறுத்தெறிய முயல்வதைக் கண்டு பதறியவளாக, அவன் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டாள்.

அவனோ ஏளனமும் கிண்டலுமாக அவளைப் பார்த்தவாறே, நெஞ்சைக் கீறியவாறு இறங்கிய கூரான கத்தி முனையைச் சட்டென்று திருப்பி உள்ளாடையை அறுத்தெடுக்க வசதியாகத் திருப்பிய நேரம் அவள் மார்புகளில் ஒருசில கத்தி வெட்டே நிகழ்ந்துவிட்டிருந்தது. உயிர்போக வலிக்கவே செய்தது. அதையும் தாண்டி புத்திசாலியாக நடந்து கொள்ளவேண்டிய அவசியம் அவளுக்கு.

“நான்… நான் உனக்கு உதவுகிறேன்…” என்றாள் திக்கித் திணறி. அவனோ புரியாமல் அவளைக் குனிந்து பார்த்தான்.

“நான் அப்பாவிடம் பேசுகிறேன்… உனக்கு வேண்டியதை நான் எடுத்துக் கொடுக்கிறேன்…” என்றாள் இப்போது நிதானமாக. இன்னும் அவன் பின்னாலிருந்து அவளை அணைத்துக்கொண்டு தான் இருந்தான். அவனது விழிகளில் நம்பிக்கை இல்லை.

“உன்னால் முடியுமா?” – கேட்டான், தன் உதடுகளால் அவளுடைய காதுகளை உராய்ந்தவாறு.

அருவருப்பில் விதரணைக்கு வாந்தியே வந்து விடும் போல் இருந்தது; ஆனாலும் உமிழ்நீரைக் கூட்டி விழுங்கித் தன் உணர்வுகளை அடக்கியவள், ‘ஆம்’ என்பது போலத் தலையை மட்டும் அசைத்தாள்.

“எப்படி?” என்றான் அடுத்த சொல்லாக.

“நான் கேட்டால் நிச்சயமாகச் சொல்வார்… பிளீஸ்… ஒரு வாய்ப்புக் கொடு… நான் பேசுகிறேன்…” என்று அவள் சொல்ல, மெதுவாகத் தன் பிடியைத் தளர்த்தினான் அந்தத் தீயவன். அவன் கரத்தில் இருந்த கத்தி, உள்ளாடைக்குளிருந்து வெளியேறி, இப்போது அவளுடைய கன்னத்தை வருடியது.

விதரணையோ அப்போதுதான் கவனித்தாள், அவளுடைய ஜாக்கெட் முன்புறம் வெட்டப்பட்டு இரண்டாக விரிந்திருப்பதை. இதில் உள்ளாடையை மீறிக் கசிந்த இரத்தமும், அங்கங்களின் வடிவமும் கண்டு, அவளுக்கு அவமானமும் தவிப்பும் ஏற்படுவதற்குப் பதிலாக எரிச்சல்தான் வந்தது. இதில் மற்ற ஆண்களும் அவளை ஒரு மாதிரிப் பார்க்க, அவளுக்கோ உள்ளே ஒன்றும் தோன்றவில்லை. புத்தி முழுக்கப் பெற்றவர்களையும் தம்பியையும் எப்படிக் காப்பாற்றுவது என்பதில்தான் இருந்தது.

பற்களைக் கடித்தவள், ஒரு கரத்தால் ஜாக்கெட்டை ஒன்றாக இணைக்க முயன்றாள். வலது கரம் பயங்கரமாக வலித்தது. இடது கரத்தால் அதை இழுத்துப் பிடித்தவாறு, தன் தந்தையை நெருங்கி அவர் முன்பாக மண்டியிட்டு அமர்ந்தாள்.

அதே நேரம் அமுதா தன் மகளின் கோலம் கண்டு கதற, சட்டென்று திரும்பிக் கோபமும் எரிச்சலுமாகத் தாயைப் பார்த்தாள்.

“அம்மா… போதும் அழுவதை நிறுத்துங்கள்! இது அழும் நேரமில்லை. இது நம்முடைய உயிர் பிரச்சினை… கொஞ்சம் ஒத்துழையுங்கள்… பிளீஸ்…” எனத் தாயைப் பார்த்துச் சீறிவிட்டுத் தந்தையைப் பார்த்தாள்.

அறிவழகனோ பரிதாபமாகத் தன் மகளைப் பார்த்தார்.

“அப்பா… இங்கே என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்று சத்தியமாக எனக்குப் புரிய வில்லை. அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்றும் எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் கேட்பது ஏதாவது உங்களிடமிருந்தால், தயவுசெய்து கொடுத்துவிடுங்கள் அப்பா… பிளீஸ்…” என்று கெஞ்சலாகத் தமிழில் சொல்ல, அவள் பேசும் மொழி புரியாமல் அந்த வெள்ளையன் விழிகளைச் சுருக்கினான்.

கண்களில் கண்ணீர் வழிய, நிமிர்ந்து அந்தத் தீயவனின் வெறித்த பார்வையைச் சந்தித்த அறிவழகன், குனிந்து தன் மகளைப் பார்த்தார்.

“அ… அவர்கள் கேட்பதை இப்போது கொடுத்தால், அடுத்த விநாடியே நம்மைக் கொன்று விடுவார்கள்மா… அதுமட்டுமில்லை… என்னால்… அதை என்னால் செய்யவும் முடியாது…” அவர் கலங்க,

“பிளீஸ்பா… இல்லை என்றால் அவன் நம்மைக் கொன்றுவிடுவார்கள்… கெஞ்சிக் கேட்கிறேன்… என்னவென்று சொல்லுங்களேன்…” தவிப்புடன் இவள் கேட்க, தன் மகளை வலி நிறைந்த விழிகளுடன் பார்த்து,

“சொன்னாலும் கொல்வார்கள் தாயி…” என்றவர் வேகமாக மூக்கை உறிஞ்சிவிட்டு மகளை அழுத்தமாகப் பார்த்தார்.

“கண்ணம்மா… நான் சொல்வதைக் கவனமாகக் கேள்… ஒரு வேளை நீ உயிரோடு தப்பித்தால்… நான் அந்த ஆவணங்களை எங்கே வைத்திருக்கிறேன் என்று உன்னால் யூகித்துக் கண்டுபிடிக்க முடியும். அப்படிக் கண்டுபிடித்தால், அதை எப்படியாவது…” அவர் சொல்லி முடிக்கவில்லை.

வேகமாக வந்த அந்த வெள்ளையன், ஓங்கி அறிவழகனின் நெஞ்சில் ஒரு மிதி மிதிக்க, நாற்காலியோடு பின்னால் சரிந்தவரின் தலை பலமாகத் தரையில் மோத, பொறிகலங்கிப் போனார் அவர்.

“ஐயோ… கண்ணா…!” என்று தன்னை மறந்து அமுதா கத்த, விதரணையோ தரையில் கிடந்த தந்தையை வெறித்துவிட்டு, மறுகணம் புலியாக மாறி எழுந்தாள். தந்தையைத் தள்ளிவிட்டவனை நோக்கிப் பாய்ந்தவள், மறு கணம் சுழன்று சென்று மேல் மாடியைத் தாங்கியிருந்த இரும்புத் தூணின் மீது நெற்றியும் மார்பும் பலமாக மோத தரையில் சரிந்தாள்.

கொஞ்ச நேரம் அவளுக்கு ஒன்றுமே புரிய வில்லை; கண்கள் மங்கிக்கொண்டு வந்தன. விழிகளை விரித்துத் தரையில் கிடந்த தந்தையைப் பார்க்க முயன்றாள். அதே நேரம் அமுதாவும் தன் மகளின் நிலையையும் கணவனின் நிலையையும் கண்டு கதற, அந்தச் சத்தம் வீட்டையே அலற வைத்தது.

இப்போது அமுதாவுக்குப் பின்னால் நின்றிருந்தவனின் கத்தி, இமைப்பதற்குள்ளாக அவருடைய கழுத்தில் பலமாக ஒரு கோடு கிழிக்க, மறுகணம் சீறிப் பாய்ந்த இரத்தத்தின் மத்தியில், கதறக்கூட முடியாமல் மூன்று முறை துடித்துத் தன் இறுதி மூச்சை நிறுத்தியிருந்தார் அமுதா.

அவர் கழுத்தை அறுத்த அந்தப் பிலிப்பினோவோ, கத்தியைத் தன் பேண்டின் தொடைப் பகுதியில் துடைத்துவிட்டு,

“சாரி பாஸ்… அப்போதிருந்தே ஙொய் ஙொய் என்று கத்திக்கொண்டே இருக்கிறது. காதுகள் இரண்டும் அடைத்துவிட்டன, அதுதான்… கொஞ்சம்

அமைதியாக இருக்கட்டுமே என்று…” சொன்னவாறு விலகி நிற்க, அந்தக் காட்சியைக் கண்ட விதரணைக்கு மூச்சே நின்றுவிட்ட உணர்வு! சத்தியமாக விதரணை இதை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் நெற்றியிலிருந்து வழிந்த இரத்தத்தோடு உயிரை விட்டிருந்த தாயைக் கண்டவளுக்குச் சர்வமும் நடுங்கிப்போனது.

எத்தனை சுலபமாக ஒரு உயிரைக் கொன்று விட்டார்கள்! அதுவும் அவளுடைய அன்னையை அல்லவா கொன்றுவிட்டார்கள்! அதற்குமேல் எதைப் பற்றியும் யோசிக்கவோ சிந்திக்கவோ திராணியற்று, அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போக, விதுரனோ தாய்க்கு நடந்த நிகழ்வைக் கண்டு, மூளையில் ஏற்பட்ட அதிர்வில் விழிகள் விரித்து, ஆடாது அசையாது ஒரு சிலை போலத் தாயையே வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

அவனுக்கு அன்னை என்றால் உயிராயிற்றே! கண்முன்னே தாயின் சாவை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதற்கு மேல் அவனுடைய மூளை எதையும் உள்வாங்க மறுத்து மரத்துப் போக, அங்கே நடப்பது எதையும் ஏற்க முடியாமல் மரமாய் அமர்ந்திருந்தான் விதுரன்.

இது எதுவும் அந்த அரக்கர்களின் உணர்வைத் தட்டி எழுப்பவேயில்லை. மாறாக அந்தக் கறுப்பனோ, விரைந்து சென்று தரையில் சரிந்து கிடந்த அறிவழகனை நிமிர்த்தினான். அறிவழகனோ உயிரெல்லாம் உறைந்துபோனவராக, தன் இறுதி மூச்சை விட்டிருந்த தன் மனைவியை வெறித்துப் பார்த்தார்.

அவரின் சுவாசமாய் இருந்தவர் அவர்; இப்போது அவருக்காக அந்த சுவாசத்தைத் தொலைத்து விட்டவளைக் கண்டு ஆடிப்போனார். பின், திரும்பி அந்த வெள்ளையனைப் பார்த்தார் அறிவழகன்.

அந்தக் கணவன் அவர் முன்னால் ஒற்றைக்கால் மடித்து அமர்ந்தான். கத்தியால் அவர் கன்னத்தைத் தொட்டுத் தன்னை நோக்கித் திருப்பியவன்,

“இதோபார்… உன் மனைவியைக் கொன்றது போல, உன் பிள்ளைகளைக் கொல்வது ஒன்றும் எனக்குச் சிரமமில்லை… உனக்கு அவர்களாவது உயிரோடு வேண்டும் என்றால், நீ சேகரித்த ஆவணங்கள் எங்கே…? அதைக் கொடுத்துவிடு…” என்றவன், திரும்பி தாயின் இறப்பைக் கண்டு அதிர்ச்சியில் விழிகள் மூட மறந்து அமர்ந்திருந்த விதுரனையும், சற்றுத் தொலைவில் தரையில் சரிந்து கிடந்த விதரணையையும் காட்டினான். “இவர்களை உயிரோடு விட்டுவிடுகிறேன்… என்ன சொல்கிறாய்…?” என் அவன் அறிவழகனைப் பார்க்க… அவரோ இப்போது வேதனையை மறைத்து, இளக்காரமாக அந்த வெள்ளையனைப் பார்த்தார். பின் என்ன நினைத்தாரோ, திட்டவட்டமாக மறுப்பாகத் தலையசைத்தார்!

“நான் சொன்னால் அடுத்த விநாடியே எங்களையெல்லாம் கொன்றுவிடுவாய் என்று எனக்குத் தெரியும்… அதனால் சொல்ல மாட்டேன். என்ன செய்வாய்?” என்று அவர் நெஞ்சை நிமிர்த்திக் கேட்க, ஆத்திரம் தாள முடியாமல் ஓங்கி அவர் வயிற்றில் ஒரு குத்து விட்டான் அந்த வெள்ளையன். அவன் குத்திய வேகத்தில் குடல் சுருண்டு போக, வாயில் இரத்தம் கக்கியவாறு நிமிர்ந்து அந்த வெள்ளையனைப் பார்த்த அறிவழகன், “எது நடந்தாலும் எங்களுக்கு மரணம்தான் முடிவு என்று தெரிந்த பிறகும், உனக்குச் சொல்வேன் என்று நினைத்தாயா…? சொல்ல மாட்டேன்.. என்ன செய்ய வேண்டுமோ செய்துகொள்… ஐ… டோன்ட்… கேர்…” என்று அவர் சொல்லி முடிக்கவில்லை.

அமுதா போலவே அவர் கழுத்திலிருந்தும் இரத்தம் பீறிட்டு வரத் தொடங்கியது!

அதைக் கண்ட பிலிப்பினோ அதிர்ந்தவனாய் ஓடிவந்து, அந்த வெள்ளையனைத் தள்ளிவிட்டு, கழுத்திலிருந்து இரத்தம் சீறிப்பாய தலைசரிந்திருந்த அறிவழகனை வெறித்தான். பின் தன் சகாவை ஆத்திரத்துடன் பார்த்தான்.

“லக்கி… நீ என்ன முட்டாளா? என்ன காரியம் செய்துவிட்டாய்? இவன் நமக்கு உயிரோடு தேவை! நமக்கு வேண்டிய ஆதாரங்கள், ஆவணங்கள் இவனிடம்தான் இருக்கின்றன. அது மட்டும் காவல் துறையின் கைக்குத் போனால் நாம் அனைவரும் கூண்டோடு பிடிபட்டுவிடுவோம். இப்போது இவனைக் கொன்றுவிட்டாயே… இனி என்ன செய்வது?” எனக் கோபத்தோடு கேட்க, தன் சகாவை அலட்சியமாகப் பார்த்தான் லக்கி.

“இவ்வளவு நடந்தும் எதையும் சொல்லாதவன், இனியா சொல்லப் போகிறான்…? எனக்கு அந்த நம்பிக்கையில்லை… தேவையற்ற நேர விரயம்…” என்றவனின் கவனம் இப்போது விதரணையிடம் சென்றது.

“கொஞ்ச நேரத்திற்கு முன்பு இவர்கள் இருவரும் ஏதோ ஒரு மொழியில் பேசினார்களே…” என்று லக்கி கேட்க,

“ம்… அது தமிழ்…” என்றான் அந்தப் பிலிப்பினோ.

“அவளிடம் உண்மையைச் சொல்லியிருப்பான் என்றுதான் நினைக்கிறேன்… நீண்டதாக எதையோ சொன்னான்?” என்ற லக்கியின் கவனம் விதரணையிடம் முழுமையாகப் படிந்தது.

இப்போது நிதானமாக விதரணையை நோக்கி வந்தவன், அவள் முன்பாக ஒற்றைக்கால் மடித்து அமர்ந்து, அவளை மல்லாக்காகப் படுக்க வைத்தான். அப்படியே அறிவழகனின் இரத்தம் தோய்ந்த கத்தியை அவளுடைய இடது நெஞ்சில் அழுத்தி,

“கொஞ்சத்திற்கு முன்பு உன் அப்பா உன்னிடம் என்ன சொன்னார்?” என்றான் அழுத்தமாக. அவளோ பதில் சொல்லாமல் வெறித்த பார்வையோடு தன் முன்னால் நின்றவனைப் பார்க்க, அந்த லக்கிக்குப் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியிருந்தது.

“இதோ பார்… எனக்கு நேரத்தை விரயமாக்குவதில் விருப்பமில்லை. சொன்னால் என் பாட்டிற்கு எனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு சென்று விடுவேன்… இல்லை…” – அவன் முடிக்கவில்லை.

மறுகணம் விதரணை தன் கோபம் அனைத்தை யும் ஒன்றாகச் சேர்த்து, அந்த லக்கியின் முகத்தில் காறித் துப்பிவிட்டு, அவனை வெறித்தவாறே கொஞ்சம் கூட யோசிக்காமல், இரு கரங்களையும் தூக்கி நெஞ்சில் அழுத்திக் கிடந்த கத்தியைப் பற்றியிருந்தவனின் கரத்தின் மீது வைத்தாள். அந்த லக்கி அவளைக் கேள்வியுடன் பார்த்தான். அவள் விழிகளில் தெரிந்த வெறியும், முகத்தில் தெரிந்த ஆத்திரமும் லக்கிக்கு எதையோ உணர்த்த, அவன் சுதாரிப்பதற்குள் அவனைப் பார்த்து “ஙீஙீஙீஙீ ஙீஙீஙீ” கெட்ட வார்த்தைகளால் துப்பிவிட்டு, தன் உடலில் எஞ்சியிருந்த அத்தனை பலத்தையும் ஒன்றாகச் சேர்த்து, அந்தக் கத்தியைத் தன் மார்பை நோக்கி ஆழமாக இழக்க, மிகக் கூரான அந்தக் கத்தியோ, எந்தவிதச் சிரமமும் இன்றி இன பேதம் பார்க்காமல் வெண்ணெய்க்குள் வழுக்கும் கத்தி போல அவள் மார்பைத் துளைத்துக்கொண்டு சென்றது!

எதற்கும் அதிராத லக்கியே அதிர்ந்துவிட்டான். “xxxx” வாய்க்குள் முனங்கியவன், தன் கத்தியை அவசர அவசரமாக இழுத்தெடுக்க… அவள் மார்பிலிருந்து சீறிய இரத்தம் தரையை நனைக்கத் தொடங்கியது!

இன்னும் அவள் சாகவில்லை; ஆனால், அதிக நேரம் தாக்குப்பிடிக்க மாட்டாள் என்று தெரிந்தது. எரிச்சலோடு எழுந்தவன், முகத்தில் தெறித்த இரத்தத்தையும் அவள் துப்பிய எச்சிலையும் கரத்தால் துடைத்தான். தன்னுடைய முயற்சிகளை அவள் தவிடுபொடியாக்கியதில் அவனுக்குத் தீராத ஆத்திரம் வந்தது. அவர்களின் இத்தனை திட்டங்களும் தோற்றதில் ஆத்திரம் வந்தது.

அந்த நேரம் அவனருகே வந்த அந்தப் பிலிப்பினோ, “இப்போது என்னதான் செய்வது? இனி அந்த ஆதாரங்களை எப்படிக் கண்டுபிடிப்பது? அது யாருடைய கையிலாவது சிக்கினால்…” என்று இழுக்க,

“சிக்கினால்தானே…” என்றான் லக்கி.

“என்ன சொல்கிறாய்…?” – நண்பன் புரியாமல் கேட்க, சிரித்தான் அந்த லக்கி. திரும்பி, மிச்ச சொச்ச உயிரை வைத்திருந்த விதரணையையும், உயிரோடு செத்துச் சிலையாகக் கிடந்த விதுரனையும் பார்த்தான்.

“இந்த வீட்டை எரிக்கப்போகிறேன்…” என்றான் நிதானமாக.

“என்னடா சொல்கிறாய்?”

“ம்… நமக்கு வேறு வழியில்லை. இந்த வீட்டில் முடிந்தவரை தேடிவிட்டோம். நமக்கு வேண்டிய பென்டிரைவோ அல்லது தேவையான கோப்புகளோ எதுவும் கிடைக்கவில்லை… நமக்கு வேண்டியது இங்கே இருக்கிறதா, இல்லையா என்று கூடத் தெரியவில்லை. அதனால், இனி நேரத்தை விரயமாக்குவது முட்டாள்தனம். ஒருவேளை இந்த வீட்டில்தான் நாம் தேடியது இருக்கிறது என்றால், அது யாருடைய கைக்கும் சிக்கக் கூடாது. அதற்கு ஒரே வழி, இந்த வீட்டை மொத்தமாக எரிப்பதுதான்!”  – அவன் சொல்ல, மற்றவன் உடனே மறுத்தான்.

“ஆதாரங்கள் அழிந்தால் பரவாயில்லை, இந்த நாய் திருடி வந்த முக்கிய ஆவணங்கள் எரிந்தால் என்ன செய்வது? இதற்காக எத்தனை பேர் போட்டி போடுகிறார்கள் என்று தெரியுமா? அதற்காகப் பேசப்பட்ட விலை எவ்வளவு தெரியுமா?” என்றான் அவன் கோபமாக.

அதைக் கேட்டு நெற்றியைத் தேய்த்த லக்கி, சுற்றிலும் பார்த்தான். நிலவறையில் அத்தனை பொருட்களும் சிதறித் தரையில் கிடந்தன; எல்லாம் இவர்களின் கைங்கரியம்தான்! அந்த வீடு முழுக்கத் தேடியாயிற்று; அவர்களுக்குத் தேவையானது கிடைக்கவில்லை. இதில் எங்கே என்று கண்டுபிடிப்பது? தலை சுற்றியது லக்கிக்கு.

“சரி… நீ படுக்கையறைக்கப் போய் பார். நீ சமதளத்தில் இருக்கும் அலுவலக அறை சமையலறை… கழிவறை… எல்லா இடமும் தேடுங்கள். நானும் இவனும் இங்கே தேடுகிறோம்…” சொல்ல, மேல்மாடிக்கு அனுப்பப்பட்ட இருவரும் படிகளில் ஏறிக்கொண்டிருந்த அந்த நேரம்…

What’s your Reaction?
+1
7
+1
3
+1
2
+1
0
+1
11
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!