Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-இறுதி அதிகாரம்

23

அவர்களின் வாழ்க்கை இனிதே தொடங்கியது. அவளுடைய பிக்கல் புடுங்கலை வரமாய் எண்ணி மகிழ்ந்த அந்தக் காதல் கணவனின் எல்லையற்ற அன்பில் முழுதாய் நனைந்தாள் அவன் காதல் மனைவி.

ஒரு கிழமை கழிய, அத்தனை செய்தித் தாள்களும், சஞ்சிகைகளும் இணையதளங்களும் வில்லியம் நேக்கருக்கும், ஜூலியட்டிற்குமான காதலை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து மேயத் தொடங்கின. அதன் விளைவு வேறு வழியில்லாமல் வில்லியம் நேக்கர் தன் பதவியை ராஜினாமா செய்தார். கூடவே அவர் மனைவி விவாகரத்திற்கும் மனுப்போட்டிருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வரத் தொடங்கின…

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு…

“மிஸஸ் உத்தியுக்தன்… நௌ யு ஆர் பேர்ஃபெக்ட்லி ஓக்கே… இனி பழையது போல நீங்கள் வாழலாம். ஆனால் படிகளில் ஏறும்போது கொஞ்சம் அவதானம் தேவை. எதற்கும் தடையைப் பற்றிக்கொண்டு ஏறி இறங்குங்கள்.. அதைத் தவிர யு ஃப்ரீ டு கோ…” என்று கூற உத்தியுக்தனும் சமர்த்தியும் ஆனந்தத்தின் எல்லைக்குச் சென்றனர்.

ஆம் சமர்த்தி இப்போது நடக்க ஆரம்பித்து இருந்தாள். இடைவிடாத உடல் பயிற்சியாலும், உத்தியுக்தனின் அதீத கவனிப்பாலும், அவனுடைய ஊக்குவிப்பாலும் சமர்த்தி நன்றாகவே எழுந்து நடக்கத் தொங்கியிருந்தாள்.

அன்றுதான் இறுதியாக வைத்தியரைச் சந்திக்க வந்திருந்தார்கள். அவரும் அவள் நலம் என்று வாக்குக் கொடுத்துவிட்டார். இதை விட வேறு என்ன வேண்டும்…?

“நன்றி டாக்டர்.’ என்றவள் சற்றுத் தயங்கியவாறு வைத்தியரைப் பார்த்தாள்.

“டாக்ட் இனி சாதாரண வாழ்க்கை வாழலாம் என்றீர்களே… தட்ஸ் மீன்… கான் ஐ… கான் ஐ…” என்றவள் எப்படி முடிப்பது என்று தெரியாமல் உத்தியுக்தனைப் பார்த்துவிட்ட வைத்தியரைப் பார்க்க, அவள் என்ன கேட்க வருகிறாள் என்பதைப் புரிந்துகொண்ட வைத்தியர் மெல்லமாய்ச் சிரித்து,

“சாதாரண வாழ்க்கை என்றால் எல்லாம்தான் மிஸ் சமர்த்தி… உங்கள் கணவரோடு மகிழ்ச்சியாக இருக்கலாம்… எந்தத் தடையுமில்லை. பட்…” என்றவர் உத்தியுக்தனைப் பார்த்து,

“நோ ரஃப்… டோக்” என்றதும்,

“நிச்சயமாக… நீங்கள் எச்சரித்தாலும், எச்சரிக்காவிட்டாலும், என் மனைவிக்கு வலிக்கச் செய்ய என்னால் முடியாது…” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு நேராக அவளுடைய அண்ணன் வீட்டிற்குச் சென்றான்.

அங்கே விளையாடிக்கொண்டிருந்த மகள் ஆருத்தமியுடன் அவளையும் விட்டுவிட்டு, இவன் ஏதோ வேலையிருப்பதாகச் சென்றுவிட்டான்.

அன்று மாலை ஒன்பது மணியளவில்தான் இவளை அழைத்துச் செல்ல வந்திருந்தான். உத்தியுக்தன்.

அதற்கே இவனை ஒரு பிடி பிடித்துவிட்டாள் சமர்த்தி.

அப்படி என்ன எங்களை அழைத்துச் செல்ல முடியாத முக்கிய வேலை உங்களுக்கு… நேரத்தைப் பார்த்தீர்களா… ஒன்பது மணி… விட்டால் இங்கேயே என்னைத் தங்கச் சொல்லியிருப்பீர்கள் போல இருக்கிறதே… இன்று எத்தனை திட்டங்கள் போட்டிருந்தேன்… உங்களால் அத்தனையும் பாழ்…” என்று வீடு செல்லும் வரைக்கும் அவனைத் திட்டியே தீர்த்துவிட்டாள் சமர்த்தி.

இவனோ அதற்குப் பதிலே கூறாது மெல்லிய புன்னகையுடன், வீட்டிற்கு அழைத்து வந்தவன், ஏற்கெனவே உறங்கியிருந்த குழந்தையைத் தன் கரங்களில் வாங்கித் திரும்பி சமர்த்தியைப் பார்த்து,

“இங்கேயே இரு… இதோ வருகிறேன்…” என்று கூறிவிட்டுக் குழந்தையோடு உள்ளே செல்ல முயல, இவளோ,

“ஹலோ… இப்போது எனக்கு ஒன்றுமில்லை என்று வைத்தியரே சொல்லிவிட்டார். இனியும் முன்பு போல ஏந்திச் செல்லப் போகிறீர்களா? நானே நடப்பேன்…” என்றவாறு வாகனத்தை விட்டு இறங்கத் தொடங்க,

“நோ… சதி… ஐ மீன் இட்… ஸ்டே தெயர்…” என்று எப்போதாவது அவளை அடக்குவதற்காகப் பாவிக்கும் அந்தக் கடினக் குரலில் கூற, அந்தக் குரலில் நெஞ்சம் பயத்தில் தடதடக்க, உடனே உள்ளே அமர்ந்து கதவைச் சாத்திக்கொண்டாள் சமர்த்தி. ஆனாலும் உதடுகள் அவனைத் திட்டுவதை மட்டும் நிறுத்தவில்லை.

இவனோ உள்ளே எழுந்த சிரிப்பை அடக்க முயன்றவனாய் குழந்தையை ஏந்திச் சென்று அதன் தொட்டிலில் கிடத்தி, அன்பு பெருக்கெடுத்து ஓட, அதன் கன்னத்தை வருடிக் கொடுத்து,

“ஏஞ்சல்… ஸ்லீப் வெல்… டுடே ஸ்பெஷல் டே ஃபோர் மீ அன்ட் யுவர் மமா… ப்ளீஸ் விஷ் அஸ் த பெஸ்ட்…” என்றதும், அவர்களின் ஆருத்தமி தூக்கத்திலேயே உதடுகளை நெளித்துச் சிரிக்க, அந்த அழகில் மொத்தமாய்த் தொலைந்தவனாய் தன் உதட்டில் சுட்டுவிரலையும் நடு விரலையும் பதித்து அதன் கன்னத்தில் தொட்டு எடுத்துவிட்டு அதற்குப் போர்வையைப் போர்த்தி விட்டு, விலகியவன், வேகமாகப் படிகளில் இறங்கி சமர்த்தியைத் தேடிச் சென்றான்.

அங்கே இன்னும் அவனைத் திட்டிக்கொண்டு வாகனத்திற்குள்ளேயே அமர்ந்திருந்தாள் சமர்த்தி.

இவனோ கதவைத் திறந்து,

“இறங்கு…” என்றான் மென்மையாய். இவளோ உதடுகளைச் சுழித்து,

“இன்று உங்களை எப்படியெல்லாம் மகிழ்விக்க நினைத்தேன் தெரியுமா? அந்த எண்ணத்தையே அழித்து விட்டீர்கள். இன்று ஒரு முத்தம் கூட உங்களுக்குக் கிடையாது… போங்கள்…” என்றவாறு நடக்கத் தொடங்க, மறு கணம் அவளுடைய கரத்தைப் பற்றினான் உத்தியுக்தன்.

இவளோ இவனை நிமிர்ந்து பார்க்க,

“கம் வித் மி…” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் செல்ல, இவளோ புரியாத பாவனையுடன் அவன் இழுப்புக்கு ஏற்ப நடக்கத் தொடங்கிகினாள்.

பின்புற முத்தத்தின் கதவைத் திறக்க, அங்கே மலர்த் தோட்டத்தின் மத்தியில் மிக மிக அழகாய் எக்கச்சக்க மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருப்பதைக் கண்டு வாய்பிளந்தாள்.

மெழுகுதிரியின் ஒளியில் அந்த இடமே பெரும் வெளிச்சத்தில் அழகாய் மிளிர்ந்து போக நம்ப முடியாத ஆச்சரியத்துடன் தன்னவனைப் பார்த்தாள் சமர்த்தி.

இதற்காகத்தானா இவர்களை அழைத்துச் செல்லத் தாமதமாக வந்தான். அம்மாடி எத்தனை மெழுகுவர்த்திகள். ஆயிரத்திற்கும் மேலிருக்கும். அத்தனையையும் எப்படி ஏற்றி வைத்தான். அதுவும் எதனை நேர்த்தியாக அழகாக மலர்களுக்கு இடையில் அதுவும் ஒரு மலர் போல ஒளிரும் வண்ணம் அமைத்திருந்த விதம் எதோ சொர்க்க வாசலில் இருப்பது போலத் தோன்ற வைத்தது.

நம்ப மாட்டாமல் அவனை ஏறிட, அவனோ முகம் மலர இவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். இவளுக்கு விழிகள் கலங்கத் தொடங்கிய நேரம்,

“கம் என்றவாறு மேலும் அழைத்துச் சென்றவன், அங்கே நடந்து செல்லும் பாதையில் உள்ள காலடித்தடங்களில் அவள் கரத்தை விடாது பற்றி அழைத்துச் செல்ல, சமர்த்தியின் கண்கள் கலங்கி உதடுகள் நடுங்கத்தொடங்கிவிட்டன.

அன்று இத்தகைய நாளுக்காக ஏங்கினாளே. இதோ இப்போது கைகூடிவிட்டதே.

அவனும் இதை உணர்த்துவது போல,

“உனக்கு விபத்து நடந்த பின், சக்கர நாட்காலியில் இருந்தபோது, இங்கே இப்படி உன்னுடைய கரங்களை பற்றியவாறு நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். இது நிறைவேறுமா என்று ஏங்கி இருக்கிறேன். இன்று நீ முழுதாக சரியாகிவிட்டாய் என்று வைத்தியர் சொன்ன போது… எப்படி இருந்தது தெரியுமா…?” என்றவன் நின்று திரும்பி தன்னவளை அணைத்தவாறு,

“இப்படி உன்கூட நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்று தோன்றியது பம்கின்…” என்ற போது, நெஞ்சமெல்லலாம் காதலில் உருகிப் போனது சமர்த்திக்கு.

“ஓ… உதி இத்தகைய நாள் என் வாழ்வில் வருமா பயந்திருக்கிறேன் கலங்கி இருக்கிறேன். உங்களுக்க உபயோகம் அற்றவளாக இருந்து விடுவேனோ என்று துடிக்காத நாளே இல்லை… இப்போது இந்த விநாடி… உங்கள் கரங்களைப் பற்றியிருக்கும் இந்தக் கணம்… உதி… எப்படி சொல்வது என்று தெரியவில்லை… ஆனால் நான் மிகப் பெரும் அதிர்ஷ்டசாலி என்கிறது மட்டும் தெரிகிறது… இதனை மெழுகுதிரிகளையும் நீங்களா ஏற்றினீர்கள்…” என்று வியக்க,

“இதில் என்ன சிரமம்? உன்னை நினைத்தே ஏற்றினேனா… ஏற்றியதே தெரியவில்லை” என்றாவறு அவளை அனைத்துப்பிடித்தவாறே மேலும் நடக்கத் தொடங்க நீச்சல் குளம் இவர்களை வரவேற்றது.

அந்த நீச்சல் குளத்தையே தாமரைப் பொய்கையாக மாற்றியிருந்தான் உத்தியுக்தன். அங்கும் மலர்கள் தூவப்பட்டிருந்தன. அந்த மலர்களிலும் மெழுகு வர்த்திகள். அதன் அழகில் மயங்கியவளாய்,

“உதி…” என்றவாறு தன்னவனைப் பார்க்க, இவனோ அவளைத் தன்னை நோக்கி இழுத்து அணைத்தவாறு,

“பிடித்திருக்கிறதா…” என்றான் அவள் உதடுகளுக்கு நேராக உதடுகளைக் கொண்டு சென்று.

தன்னை நெருங்க முயன்ற உதடுகளைக் கண்டு, மயங்கியவளாய், அதைத் தொடும் அவசரத்துடன் இவளும் முன்னேற, இவனோ தன் உதடுகளைச் சற்றுப் பின்னே எடுத்து,

“கேட்டேனே… பிடித்திருக்கிறதா?” என்றான்.

இவளோ தன் கரங்களைத் தூக்கி அவன் கன்னத்தில் பதித்து, அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள்.

இத்தனை அன்பை இத்தனை காதலை இத்தனை பாசத்தை இத்தனை வேகத்தைக் காட்டும் அளவுக்கு அவள் அப்படி என்ன செய்துவிட்டாள்? எதுவுமேயில்லையே. ஆரம்பம் முதல் முடிவு வரை அவனைச் சந்தேகப்பட்டுக்கொண்டுதானே இருந்தாள். கடைசி வரை நம்ப மறுத்தாளே… ஆனால் அவன்… இத்தனை செய்தும் அவள் மீதிருந்த காதலை இம்மியும் குறைத்தானில்லையே…” தாங்க முடியாத வலியில் கண்கள் கலங்க,

“பிடித்திருக்கிறது உதி… உங்களைப் பிடித்து இருக்கிறது. நீங்கள் எனக்காய் செய்யும் ஒவ்வொரு செயலும் பிடித்திருக்கிறது. எனக்காய் திட்டும் அந்தத் திட்டும் பிடித்திருக்கிறது. கரிசனை பிடித்திருக்கிறது, காதல் பிடித்திருக்கிறது.. எனக்காய் நீங்கள் வாழ்வது மிக மிகப் பிடித்திருக்கிறது உத்தி…” என்றவள் தானாக அந்த வண்டைத் தேடிச் சென்று பற்றிக்கொள்ள, மலரே தேடிவந்த பின், மறுத்துச் செல்ல வண்டுக்கென்ன பைத்தியமா, ஆவேசத்துடன் அந்த மலரைக் கவ்விக்கொண்டது.

அப்பப்பா… யுத்தம் என்றால் வலிக்கவல்லவா செய்யவேண்டும். ஆனால் இந்த யுத்தம் தித்திக்கச் செய்கிறதே. மலரச் செய்கிறதே. அடிவயிற்றிலிருந்து இனம் புரியா இன்பத்தைப் பல்கிப் பரவச் செய்கிறதே. ம்கூம் யுத்தத்தில் விட்டுக் கொடுத்தல் அபத்தம், ஆனால் இந்த இதழ் யுத்தத்தில் விட்டுக் கொடுப்பது சுகமாக அல்லவா இருக்கிறது.

எத்தனை நேரம் இதழ் யுத்தத்தில் திளைத்து இருந்தார்களோ. மெதுவாகச் சுயத்திற்கு வந்த உத்தியுக்தன், தன்னவளை விட்டு விலகி,

“உனக்கு இன்னும் ஒன்று காட்டவேண்டும் பம்கின்…” என்றவன்,

“குளிக்கப்போகிறாயா?” என்றான் ஆர்வமாய். தலையை ஆட்டியவள், உடனே, தன் சப்பாத்தைக் கழற்றித் தூரப் போட்டுவிட்டு, அணிந்த ஆடையுடனே தண்ணீரில் குதிக்க, அவள் குதித்த வேகத்தில் ஒரு சில மெழுகுதிரிகள் அணைந்து போயின.

அதைக் கண்டு நாக்கைக் கடித்தவள், அசட்டுச் சிரிப்புடன் தன் கணவனைப் பார்க்க, அவனோ அவளுடைய செயலைக் கண்டு ரசித்தவனாய், தன் பான்டைக் கழற்றி ஓரமாகப் போட்டுவிட்டு மேல் ஷேர்ட்டோடு தண்ணீரில் இறங்கி, மெல்ல மெல்ல தன் மேலாடையின் பொத்தான்களைக் கழற்றத் தொடங்கினான். ஏனோ இவளுக்குள் இரத்தம் தாறுமாறாக ஓடத் தொடங்கியது.

இவனோ, ஒவ்வொரு பொத்தான்களாகக் கழற்றி, சட்டையைத் தூர எறிந்தபோது அவனுடைய மார்பைக் கண்ட சமர்த்திக்கு வாய் அடைத்துப் போனது.

தன்னை மறந்து கண்ணீர் பொங்க, அவனை நெருங்கியவள் நம்ப மாட்டாமல் இடது மார்பில் தன் கரத்தைப் பதித்தவளுக்கு விம்மல் வந்தது.

“உ… உதி…” என்றவாறு மீண்டும் அவனுடைய மார்பைப் பார்த்தாள். அங்கே அவள் குழந்தையை ஏந்தியிருக்கும் உருவம் பச்சையாகக் குத்தப் பட்டிருந்தது. கீழே மை சோல்… என்கிற வாசகம் எழுதப்பட்டிருக்க, அதைக் கண்டவளுக்குத் தாள முடியவில்லை. பாய்ந்து அவனை அணைத்தவள், அவன் மார்பில் தலையைச் சாய்த்து,

“உதி… உதி… என்னால் தாள முடியவில்லையே நான் என்ன செய்யட்டும்… இத்தகைய அன்பை வைத்திருக்கும் உங்களுக்கு நான் தகுதியானவளே கிடையாது உத்தி… சத்தியமாகக் கிடையாது… ஏன் உதி… என்னை இந்தளவு விரும்புகிறீர்கள்… நான் அப்படி என்ன செய்துவிட்டேன் உங்களுக்கு… சொல்லப்போனால் தீங்குதான் செய்திருக்கிறேன்… ஆனால் நீங்கள்…” என்றவாறு விம்ம, இவனோ,

“ஹே… பம்கின்… எத்தனை முறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன், எதுவாக இருந்தாலும் திட்டு அடி… ஆனால் அழாதே என்று… சொன்னால் கேட்கமாட்டாய்… இன்றைய இந்த இனிய நாளை சோக நாளாக்கிவிடுவாய் போல இருக்கிறதே… சதி…” என்று கடிந்தவாறு அவளைத் தன்னிடம் இருந்து பிரிக்க, இவளோ, உதடுகள் நடுங்க, பெரும் குற்ற உணர்ச்சியுடன் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இவனோ அவளுடைய கன்னத்தைப் பற்றித் தூக்கிக் கண்ணீர் சிந்திய விழிகளில் உதடுகளைப் பொருத்தி எடுத்து,

“ஹே… இதோ பார்… நீ என் உயிர்… உன்னை எப்படி நான் வெறுப்பேன். அவசரம், அந்தரம், தேவையற்ற கோபம், இவன் என்னவன் என்கிற உணர்வு, யோசிக்காமல் பேசும் தன்மை… எல்லாவற்றிற்கும் மேலாக, என்மீதான காதல் இதெல்லாம் சேர்த்துத்தான் நீ… இதில் ஒன்று குறைந்தாலும் அது என் சமர்த்தியல்ல…” என்றவன் மேலும் வழிந்த கண்ணீரைத் துடைத்து,

“உலகில் யாருமே சுத்தமானவர்கள் கிடையாது சதி… ஒவ்வொருத்தருக்கும் ஏதோ ஒரு வகையில் குறை இருக்கும். அதற்காக அவர்கள் மீது வைத்த காதல் இல்லையென்றாகி விடுமா… அந்தக் குறையோடு ஏற்றுக்கொள்வதுதானே காதல. எனக்கு உன்னைப் பிடிக்கும். உன்னை மட்டும்தான் பிடிக்கும். அதனால் உன்னோடு சேர்ந்த உன்னுடைய குறைகளும் பிடிக்கும்… ஆரம்பத்தில் நான் கூட உனக்கு நிறைய மன உளைச்சலைக் கொடுத்திருக்கிறேன். உன்னை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. அதெல்லாம் உன்னை எந்தளவுக்குப் பாதித்திருக்கும் என்று எனக்குத் தெரிகிறது சதி…” என்று கூற, அவன் மார்பில் சாய்ந்து ஒரு கணம் ஆழ மூச்செடுத்தவள்,

“ஆனாலும் அன்று உங்கள் காதலைச் சொல்ல வந்தபோது, நான் நடந்துகொண்டது மிக மிக அதிகப்படி… இப்போது அதை நினைத்தாலும் பெரும் அவமானமாக இருக்கும். அது கொடுத்த குற்ற உணர்வுதான் உங்கள் முகம் பார்க்க முடியாது ஓட வைத்தது… சத்தியமாக நான் ஏன் அப்படி நடந்துகொண்டேன் என்று எனக்குத் தெரியவே இல்லை…” என்று கலங்க, இவனோ சிரித்தவாறு,

“என் மீதும் தவறு இருக்கிறது. அன்று முன்தினம் உன் மனது நோகும்படி நிறையப் பேசிவிட்டேன் அல்லவா. அது கொடுத்த தாக்கம், எனக்கும் ஜூலியட்டிற்குமான உறவு கொடுத்த பயம், எல்லாவற்றிற்கும் மேலாகப் பசியின் களைப்பு.. உனக்குத்தான் பசி பொறுக்காதே… நானும் அன்று சற்று அவசரப்பட்டுவிட்டேன்… உனக்கு என்னை அறிவுறுத்தி இருக்கவேண்டும். உன்மீதானது காதல்தான் என்கிற உணர்வு தெரிந்ததும், அதை மறைத்து வைக்கத் தெரியவில்லை. அந்தக் கணமே சொல்லிவிடவேண்டும் என்கிற ஒரு வித வேகம். அந்த வேகம் ஏன் எனக்கு வந்தது என்று கூடத் தெரியவில்லை சதி… அதற்கு முதல் உன்னிடம் மன்னிப்பும் வேண்டவேண்டியிருந்தது. உனக்குப் பிடித்தமானது உணவு என்று தெரியும். அதைக் கண்டால் உன் கோபம் குறைந்துவிடும் என்று நினைத்தேன். அதன் பின் என் விருப்பத்தைக் கூறலாம் என்றும் எண்ணினேன். ஆனால் அந்த நாளை நாசமாக்கியது நீ படித்த சஞ்சிகைதான். அந்தச் சஞ்சிகை மட்டும் உன் கண்ணில் படாது இருந்திருந்தால், உன்னிடம் என் காதலைச் சொல்லத் தயங்கியிருந்தாலும், மன்னிப்பு வேண்டியிருப்பேன். ப்ச்… எல்லாம் தவறாகிப்போயிற்று..” என்று அவன் கூற, இவளோ மறுப்பாகத் தலையசைத்து,

“இல்லை உதி… உங்களைக் கொஞ்சமாவது புரிந்திருக்க வேண்டும். பத்திரிகைகளையும், மற்றவர்கள் சொல்வதையும் நம்பிய அளவுக்கு உங்களை நான் நம்ப மறுத்துவிட்டேனே…” என்று அப்போதும் தவிக்க, உடனே அவளைத் தன்னிடம் இருந்து பிரித்தவன், அவளுடைய நாடியைப் பற்றித் தூக்கி, அவள் விழிகளுக்குள் தன் விழிகளைச் சற்று நேரம் ஊடுருவ விட்டான்.

“ஃபெஸ்ட் இம்ப்ரஷன் இஸ் த பெஸ்ட் இம்ப்ரஷன் என்பார்கள். உன் மனதில் ஆரம்பத்தில் இவன் இப்படித்தான் என்கிற பிம்பம் விழுந்துவிட்டது. நானும் அதற்கேற்ப நடந்துகொண்டேன். உன்னை மணந்தபோது என் கோபத்திற்கு வடிகாலாக எண்ணித்தான் மணந்தேன் சதி. உனக்குப் பல வகையில் துன்பம் கொடுக்கவேண்டும் என்று நினைத்துத்தான் மணந்தேன். அன்று நம் மண நாளில் நான் பேசியவை அணைத்தும் உன்மையாக உணர்ந்து சொன்னதுதான். ஆனால், நீ அருகில் இருக்கும் போது, நான் நினைத்ததில் ஒரு வீதம் கூட என்னால் நிறைவு செய்ய முடிந்திருக்கவில்லை. உன்னைத் தொடும்போதெல்லாம் உள்ளே என்னவோ செய்யும். அதுவும் நீ பூ போல மிக மிக மென்மையாக இருப்பாயா… கசக்கவே முடிய வில்லை… மிக மிகச் சிரமப்பட்டேன் சதி…” என்றவன், பேசி முடிப்பதற்குள்ளாக அவளுடைய ஆடைகளை அவிழ்த்துத் தண்ணீரில் போட்டிருந்தான்.

அது கூட உறைக்காமல் அவன் சொல்வதையே கேட்டுக் கொண்டிருக்க, இப்போது அவளை இழுத்துத் தன்னை நோக்கி அணைத்தவாறு,

“எனக்கு இந்தச் சதிதான் வேண்டும். அதே அவசரப்புத்தியோடு, இவன் எனக்கு மட்டும்தான் என்கிற பிடிவாதத்தோடு, குழந்தைத்தனமாகச் சண்டை பிடித்தவாறு…” என்றவன், மிகுதியை உதடுகளாலும் கரங்களாலும் கூறத் தொடங்க, தன் கணவனின் எல்லையற்ற அன்பில், தன்னை மறந்தவளாய், இன்பம் கண்டவளாய், வேண்டி நின்றவனுக்குத் தாராளமாக அள்ளிக் கொடுத்தவாறு அவனுக்குள் முழுதாய் மூழ்கிப்போக, முதல் உறவை விட, இந்த உறவு மாபெரும் தித்திப்பாக மலர, அந்த நேரத்திலும் அவளுக்கு ஒரு சந்தேகம் வந்தது.

“உதி…” என்றாள் அவசரமாக அவன் உதடுகளில் இருந்து தன உதடுகளை பிரித்தது எடுத்தவாறு. இவனோ,

“ம்…” என்றவாறு அவள் கழுத்தில் புதிய, அதில் மயங்கிக் கிரங்கியவளாக,

“என்னையும், ஆருவையும் மார்பில் பச்சை குத்திவிட்டீர்களே… அடுத்த வருஷம் இன்னொரு குழந்தை, அதுக்கடுத்த வருஷம் இன்னொரு குழந்தை அதுக்கு பிறகும் இன்னொரு குழந்தை… இவர்களின் படங்களை எங்கே பச்சை குத்துவீர்கள்…?” என்று அதி முக்கியமான சந்தேகத்தை அதி முக்கியமான நேரத்தில் கேட்க, ஒரு கணம் அதிர்ந்தவன், அவளைத் தண்ணீரில் இருந்து தூக்கி, தரையில் கிடத்திவிட்டு, அவளை நோக்கிப் பாய்ந்து,

“இப்போது கேக்கிற சந்தேகமா இது… நமக்கு ஒரு குழந்தை போதும்…” என்றவாறு காதலாய் முன்னேற, இவளோ,

“ஒன்றா…. ம்கூம்… அண்ணா அன்னிக்கே ஐந்து… குறைந்தது ஆறாவது நமக்கு வேண்டும்…” என்று கூற தன் வேலையே நிறுத்திவிட்டு அடப்பாவி என்பதுபோல அவளைப் பார்த்தான்.

“அது எப்படி… ஒரு குழந்தையை பெறுவதே உயிர்போகும் வலியைக் கொடுக்கிறது. அப்படி இருந்தும் இன்னொரு குழந்தையைப் பெறுவதற்கு யோசிக்க முடிகிறது… நமக்கு ஆருத்தமி ஒருத்தியே போதும் சதி…” என்றவாறு மறுக்க,

“வலிக்க பெற்றால்தான் அதன் அருமை தெரியும் உத்தி… நமக்கு நிறைய குழந்தைகள் வேண்டும். நாம் முதுமை அடைந்த பின்னாடி, ஆளுக்கு ஒருவராய் நம்மை பார்க்க வர வேண்டும். நிறைய பேரக்குழந்தைகள்… என்று கற்பனையில் அவள் போக, இவனோ,

“அதற்கு முதல் நீ என்னை இதற்கு விடவேண்டும்…” என்றவன் அவசரமாய் அவளை ஆட்சிசெய்ய முயல, அவனுடைய அவசர அவசிய அசாதாரண அன்பான அழகான அப்பழுக்கற்ற கூடலில் தன்னை முற்றும் தொலைத்தவளாகப், பஞ்ச பூதங்களுக்கும் சவால்விடும் சக்தியோடு ஒருவரை ஒருவர் மூழ்கடிக்கத் தொடங்க, மெழுகு திரிகளோ, பேனா இல்லாத ஊடகவியலாளர்கள் போல, ஜொள்ளு விட்டவாறு இரு காதல்கள் இணையும் இந்தக் காட்சிகளைப் பரவசமாகப் பார்க்கத் தொடங்கின.

உண்மைக் காதல் எதையும் மறக்கும் மன்னிக்கும் ஏற்றுக்கொள்ளும். ஆதரிக்கும். அதற்கு அகங்காரம் கிடையாது. ஆணவம் கிடையாது. காதலுக்கு முன் மாமலையும் ஓர் கடுகாம்.

 

முற்றும்.

What’s your Reaction?
+1
11
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

வெந்தும் தணியுமோ காதல் – 23

23 குழப்பத்தோடு நடந்து சென்று மின்விளக்கை உயிர்ப்பித்தவளுக்கு மின்சாரத்தைத் தொட்ட அதிர்ச்சி. அங்கே கண்முன்னே விரிந்த காட்சியைக் கண்டவள் சுவாசிக்கவும்…

14 hours ago

வெந்தும் தணியுமோ காதல் – 21/22

21 எது எப்படியோ நேயநறுமையின் வாழ்வில் அந்த நாள் மறக்க முடியாத அற்புதமான நாளாக அமைந்து விட்டிருந்தது. இருக்காதா பின்னே.…

3 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-21/22

21 ஜூலியட்டை அனுப்பிவிட்டு இவள் பக்கமாக வந்தவன், மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அவளை உற்றுப் பார்த்தான். இவளுக்குத்தான் படபடத்துக்கொண்டு…

4 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 20

20 நேயநறுமை, படகு ஏறும் இடத்திற்குச் செல்லும் வரைக்கும் ஆதியதுலனின் கரத்தை விட்டாளில்லை. இவனும் அந்தக் கரத்தை விலக்கவேண்டும் என்கிற…

5 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-20

20 ஒரு நாளாயிற்று. இரண்டு நாட்களாயிற்று இரண்டு கிழமைகளாயிற்று. உத்தியுக்தன் அவளைப் பார்க்க வரவேயில்லை. அவள் என்ன தவறு செய்தாலும்…

7 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 19

19 இரண்டு மணி நேரத்தில் அனைவரும் நயகராவிற்குப் புறப்பட்டார்கள். என்றுமில்லாத திருநாளாக தங்கள் மகள், நேர்த்தியாக வெளிக்கிட்டதில் அம்பிகாவுக்கு பரம…

1 week ago