(15)
ஏதோ பழரசத்தை அருந்துகிறாள் விதற்பரை. நான்கு மிடறு குடித்திருக்க மாட்டாள், தலைக்குள் எதுவோ கிறுகிறுக்கத் தொடங்குகிறது. திடீர் என்று பார்த்தால் யாரோ அவள் முகம் நோக்கிக் குனிகிறான். யார் என்று தெளிவாகத் தெரியவில்லை. தொடர்ந்து நிறையப் பேர் ஒரே நேரம் அவளைச் சுற்றி வளைத்து நிற்கின்றனர். ஒருவன் அவளுடைய மார்பைத் தொட முயல்கிறான். யார் என்கிற தெளிவில்லை. இன்னொருத்தன் பின்னாலிருந்து அணைக்க முயல்கிறான். அவர்களின் கரங்கள் பட்டதும் உடல் தீ பட்டது போலத் திகு திகு என்று எரியத் தொடங்க, அவர்களைத் தள்ள முயல்கிறாள். முடியவில்லை, அதற்குப் பிறகு அவள் வானத்தில் பறக்கிறாள். அவளோடு சேர்ந்து அவர்களும் பறந்து வந்து இவளைப் பற்ற முயல, முடிந்த வரை அவர்களின் கரங்களுக்குள் சிக்காமல் சென்றுவிடத்தான் முயல்கிறாள். ஆனால் ஒரு கட்டத்தில் அதுவும் முடியாமல், பதறித் துடித்து விழிகளைத் திறந்தாள் விதற்பரை.
மலங்க மலங்க விழித்தவளுக்கு இருட்டாக்கப்பட்ட அறைதான் கண்களுக்கு விருந்தானது.
விடிந்திருக்க வேண்டும். சூரிய ஒளி உள்ளே விழாதிருக்கத் திரை போடப்பட்டிருந்தது. பதட்டத்தோடு எழுந்தவள் சுத்தவரப் பார்த்தாள். யாருடைய அறை என்று தெரியவில்லை, இதுவரை பழக்கப்படாத இடம். ஆனால் சற்று ஆடம்பரமாக இருக்க, சிரமப்பட்டு எழுந்தாள்.
அவள் எங்கேயிருக்கிறாள் தெரியவில்லை. எப்படி இங்கே வந்தாள். யார் அழைத்து வந்தார்கள். குழப்பம் விருட்சமாகத் தலை வலிதான் மிஞ்சியது. வலித்த தலையைப் பற்றிக்கொண்டு குனிந்தவளுக்கு, எதுவும் நினைவில் இல்லை. குளிர் பாணம் குடித்தது மட்டும் நினைவுக்கு வந்தது. அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்தது நினைவுக்கு வந்தது.
அதன் பிறகு எல்லாமே வெள்ளைத் தாளாகத் தோன்றியது. தன்னை ஏதாவது செய்திருப்பார்களா? என்கிற அச்சத்தோடு தன் உடலைத் தொட்டுப் பார்த்தாள். மார்புகள் வலித்தன. மற்றும்படி எதுவும் தெரியவில்லை.
இப்படி எதுவும் தெரியாத அளவுக்கு எதைக் குடித்துத் தொலைத்தாள். ஏதாவது மதுபானம் குடித்தாளா? தெரியவில்லை. தொண்டை எரிந்து வறண்டு போக, எழுந்தவள் தள்ளாடினாள். யாராலோ கிழிக்கப்பட்ட ஆடை தோள்வரை கழன்று விழத் தனக்கு எதுவோ தப்பாக நடந்திருக்க வேண்டும் என்று புரிந்தது.
ஆனால் அதை உணர்ந்து கதறும் அளவுக்குப் புத்தி சரியாகச் செயல்படவில்லை. ஒரு வேளை அந்த மருந்தின் வீரியமாக இருக்கலாம். சிரமப்பட்டுக் கீழே சரிந்த ஆடையை இழுத்துச் சரியாக்கியவளுக்கு உலகம் அவளை இழுத்தவாறு சுழற முயன்றது. விழ முதலே அங்கிருந்த அலமாரியைப் பற்றித் தன்னைச் சமப்படுத்தியவள் ஆழ மூச்செடுத்துத் தன்னை நிதானப்படுத்தினாள்.
முதலில் எங்கே இருக்கிறாள் என்பதைக் கண்டறியவேண்டும். தத்தித் தவறி வெளியே வர, சற்று மங்கிய வெளிச்சம் அவளை வரவேற்றது.
எத்தனை மணி இப்போது? தெரியவில்லை.
மேலும் முன்னேற, சுவரில் தொங்கிய கடிகாரம் நான்கு மணி என்றது. காட்… கிட்டத்தட்ட இருபத்து நான்கு மணி நேரமாகவா சுயநினைவு இல்லாமல் இருந்திருக்கிறேன்.
குழப்பத்துடன் திரும்பியவளின் விழிகளில் தெரிந்தது யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த அவ்வியக்தனின் முதுகு.
இவன் எப்படி இங்கே? அவனுடைய இடத்திலா அவள் இருக்கிறாள்? காட் அப்படியானால்… அவளுடைய இந்த நிலைக்கு இவனா காரணம்? மீண்டும் தலை கிறுகிறுத்துக்கொண்டு வந்தது. இரண்டும் இரண்டும் மூன்று என்று அவள் மனம் கணக்குப் போட, அதிர்ச்சியில் மயங்கி விழாதிருக்கச் சுவரைப் பற்றியவாறு நின்றவளுக்குத் தேகம் நடுங்கியது.
அவளுடைய அவ்வியக்தனா இத்தகைய நாச காரியத்தை அவளுக்குச் சேய்தான்? இவனை நல்லவன் என்று நினைத்தாளே… ஆனால் இத்தனை பெரிய துரோகியா… வலியையும் மீறி ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வர, அதே நேரம் கைப்பேசியிலிருந்தவன், ஏதோ அசைவை உணர்ந்து திரும்பிப் பார்த்தான்.
அங்கே முகம் வெளிற அதிர்ச்சியில் நின்றிருந்த விதற்பரையைக் கண்டதும், முகம் மலர, பெரும் நிம்மதி தோன்ற, கைப்பேசியை அணைத்து விட்டு அவளை நோக்கி வந்தவனாக,
“ஹே… ஏஞ்சல்… ஹெள டு யு ஃபீல் நவ்? ஆர் யு ஓக்கே… நான்கு மணியாகியும் நீ எழவில்லை என்றதும் பயந்து போனேன். இப்போதுதான் ஒரு வைத்தியரோடு பேசிக்கொண்டிருந்தேன். நல்லவேளை நீயாக எழுந்து விட்டாய்” என்றவாறு அவளை நெருங்கி அவளுடைய தோளில் கரத்தைப் பதிக்க முயலக் கடும் சீற்றத்தோடு அவனுடைய கரத்தை உதறித் தள்ளியவள், அவனைக் கொல்லும் வெறியுடன் பார்த்தாள்.
முன்தினம் நடந்த அதிர்ச்சியிலிருந்து அவள் வெளிவரவில்லை என்று எண்ணி வருந்தியவனாக,
“இட்ஸ் ஓக்கே… பேபி… இட்ஸ் ஓக்கே… உனக்கொன்றுமில்லை… நான் சொல்வது புரிகிறதா…” என்று மேலும் அவளை நெருங்க முயன்றான்.
“ஐ கான்ட் பிலீவ் திஸ்… ஐ கான்ட் பிலீவ் திஸ்…” என்று குழறியவள், அடுத்த கணம் புயலாய் அவனுடைய விடுதியை விட்டு ஓடத் தொடங்கினாள்.
அவனும் அவள் இப்படிப் பைத்தியம் போல ஓடுவாள் என்று எதிர்பார்க்கவில்லை போலும், எதுவும் புரியாமல் ஒரு கணம் சிலையாய் நின்றவன், மறு கணம், அவளைப் பின் தொடர்ந்தவாறு,
“ஸ்டாப் தற்பரை… லிசின் டு மீ…” என்றவாறு அவளைத் தடுக்க முயன்றான்.
அதற்கிடையில் விதற்பரை அந்த விடுதியின் படிகளில் இறங்கி ஓடத் தொடங்கிவிட்டிருந்தாள்.
இவனோ வாயில் எதையோ கூறித் திட்டியவாறு பாய்ந்து தன் பணப்பையையும், வாகனத் திறப்பையும் எடுத்துக்கொண்டு தன் அறையைப் பூட்டாமலே அவள் பின்னால் ஓடினான்.
அவளோ, அந்தக் கடும் குளிரைக் கூடப் பொருட்படுத்தாது வெற்றுக் காலுடன் வெறி கொண்டவள் போல எங்கே போகிறோம் என்கிற அறிவு கூட இல்லாமல் தெரிந்த திசையில் ஆவேசமாக ஓடத் தொடங்கினாள்.
வெளியே வந்த அவ்வியக்தன், விதற்பைரையைத் தேட, கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் அவளைக் காணவில்லை. இந்தக் குளிரில் தடித்த ஆடை எதுவும் அணியாமல் எப்படிச் செல்வாள்? கலங்கியவனாகப் பாய்ந்து தன் வண்டியை எடுத்தவன் தெருவில் விட, சற்றுத் தொலைவில் ஓட்டமும் நடையுமாய் ஒரு பைத்திய காரி போல ஓடும் விதற்பரையைக் கண்டு தன் வாகனத்தை அவளை நோக்கி வேகமாகச் செலுத்தினான்.
இவளோ வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறு மேலும் தன் வேகத்தைக் கூட்டினாள்.
உள்ளே எரிந்த எரிமலைக்கு வெளியே உரைய வைக்கும் குளிர் கூடப் பெரிதாகத் தெரியவில்லை.
அவளுக்கு அருகாமையில் வாகனத்தை நிறுத்திய அவ்வியக்தன், பாய்ந்து இறங்கி, ஓரெட்டில் அவளை நெருங்கி, அவளுடைய கரத்தைப் பற்ற, அவளோ பலம் கொண்ட மட்டும் தன் கரத்தை உதறிவிட்டு அவனை எரிப்பது போலப் பார்த்தாள்.
“கோ டு ஹெல்…” என்றாள் சீற்றமாக. ஆத்திரத்தில் உடல் நடுங்க, அவனை விட்டு விலகி நடக்கத் தொடங்கியவள் மறு கணம் சுழன்று வந்து அவன் மார்பில் விழுந்திருந்தாள்.
ஆத்திரமும் கோபமும் ஆவேசமும் போட்டிப்போட அவனிடமிருந்து தன்னை விடுவிக்க முயன்று தோற்றவளாய், அவனை அண்ணாந்து பார்த்தாள். அவனும் அவளைத்தான் அழுத்தமாகத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். கரங்களோ அவளை விட்டு விடக் கூடாது என்பதுபோல அவளுடைய இடையை இறுக அணைத்துக் கொண்டது.
“வில் யு ப்ளீஸ் கெட் இன் த கார் ரைட் நவ்…” என்றவனின் முகம் புன்னகைப்பது போலத்தான் இருந்தது. ஆனால் அதில் தெரிந்த சீற்றத்தையும், அழுத்தத்தையும் கண்ட விதற்பரைக்கு ஒரு கணம் குளிர் பரப்பியது மட்டும் உண்மை. ஆனாலும் அவனிடமிருந்து திமிறியவளாக,
“மரியாதையாக என் கரத்தை விடுங்கள்… இல்லை…” என்றாள் சீற்றமாக.
“கெட் இன் த கார் விதற்பரை…” என்றான் மீண்டும்.
அதே நேரம் குளிருக்குத் தோதாக ஆடைகள் அணியாமல் இப்படி நடுத் தெருவில் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு நின்றிருந்தவர்களைப் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தவர்கள், விநோதமாகப் பார்க்க, அதை உணர்ந்தவன் போல, அவளை நோக்கிக் குனிந்த அவ்வியக்தன்,
“லிசின்… உன் ‘அட்டை’ என்னைக் ப்ரோ என்று நினைத்து, அவன் வாழ்க்கையை அழித்தது போதும். நீயும் புதிய பிரச்சனையைக் கிளப்பாதே… வண்டியில் ஏறு…” என்று கடித்த பற்களுக்கிடையாக வார்த்தைகளைத் துப்ப, அப்போதும் அழுகையோடு எங்கோ வெறித்தாள் விதற்பரை.
அடுத்த கணம் அவளைத் தன் கரங்களில் தூக்கியவன், வேமாகச் சென்று அவளை வண்டியில் இருத்திவிட்டுக் கதவை அறைந்து சாற்ற, எந்த மறுப்பும் இல்லாமல் நெஞ்சம் கசங்க அழத் தொடங்கினாள் விதற்பரை.
சற்று நேரத்தில் அவளுடைய குடியிருப்புக்கு முன்பு வண்டி நின்றதுதான் தாமதம். பாய்ந்து இறங்கியவள், வேகமாக அந்தக் கட்டடத்திற்குள் ஓட்டமும் நடையுமாக நுழைந்து, மின்தூக்கிக்காகக் காத்திருக்காமல் அத்தனை கோபத்தையும் ஆத்திரத்தையும் வேதனையையும் வலியையும் ஒன்று சேர்த்துப் படிகளில் ஏறித் தன் வசிப்பிடத்துக்கு முன்பாக வர அவ்வியக்தன் அவளுக்காகவே வாசலில் காத்திருந்தான்.
மேலும் முகம் கண்டிச் சிவக்க, விழிகள் கலங்கிப் போகக் கதவைத் திறக்க முயன்றாள். திறப்பில்லாமல் எவ்வாறு கதவைத் திறப்பது? ஆனால் மந்தமாகிப் போன புத்திக்கு அது புரியவில்லை. மேலும் ஆத்திரத்தைக் கூட்டிக் கதவை உடைப்பது போலக் குமிழைத் திருகி இழுக்க, அவள் முன்னால் திறப்பைத் தூக்கிக் காட்டினான் அவ்வியக்தன்.
இவனிடம் எப்படித் திறப்பு வந்தது? அப்போதுதான் பார்த்தாள் அவனுடைய கையில் அவளுடைய கைப்பை இருப்பதை. உதடுகள் துடிக்க ஓரடி விலகி எங்கோ வெறித்தவாறு நின்றாள் விதற்பரை.
இவனும் அமைதியாகவே கதவைத் திறந்துவிட்டான்.
அவனுடைய முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் உள்ளே விதற்பரை செல்ல, அவளைப் பின் தொடர்ந்தவன், மறு கணம் அவளுடைய கரத்தைப் பற்றி நிறுத்த முயன்றான்.
அதுவரை அடக்கியிருந்த ஆத்திரம் அணையுடைத்துப் பாய, அக் கரத்தை உதறியவள், அவனுடைய சட்டையைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்து,
“யு… xxxx xxxx xxxxx ஹெள டெயர் யு… ஹெள டெயர் யு… எத்தனை தைரியமிருந்தால் என்னை… என்னை… ” என்று சீறிக் கதறியவளுக்கு ஆத்திரக் கொந்தளிப்பில் அழுகைதான் வந்தது. கூடவே அந்த ஆத்திரத்திற்கு ஏற்பப் புத்தி செயல் பட மறுக்க வார்த்தைகள் திக்கின.
அவ்வியக்தன் பெண் பித்தன் என்று தெரியும். அப்படியிருந்தும் அதை மறந்து அவனோடு பழகினாள். பழகியது மட்டுமா? மனத்தையும் அல்லவா பறிகொடுத்தாள். ஆனால் அவன்… இப்படித் தவறாக அவளோடு… அவனைப் பற்றி எத்தனை உயர்வாக நினைத்திருந்தாள். ஆனால்… இப்படிக் கேவலமாக… சீ…’ என்று ஆத்திரத்துடன் எண்ணியவளுக்குத் தன் பெண்மை பறிபோன வலியை விட, அவன் தப்பாகிப் போனான் என்பதைத்தான் தாள முடியவில்லை.
கோபம் வடிந்தவளாக, நம்பிக்கை பொய்த்த வலியில் நெஞ்சம் துடிக்க, அவனை அண்ணாந்து பார்த்து வலியில் முகம் கசங்க,
“ஏன்… ஏன் இப்படிச் செய்தீர்கள்… உங்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தேன்…” என்று தாரை தாரையாக வழிந்த கண்ணீரோடு அவனைப் பார்த்துக் கேட்க அவனோ சற்று நேரம் எதுவும் பேசாமல் அவளையே வேறித்துக் கொண்டு இருந்தான்.
அவன் முகத்தில் என்ன இருந்தது? ஏமாற்றம், வலி, நம்ப முடியா அதிர்ச்சி… அவனையா அவள் தப்பாக நினைக்கிறாள்? அவளுக்கு அநீதி செய்ய அவன் யோசித்திருப்பானா?
ஏதோ உள்ளே நொறுங்கி உடைவது போன்ற வலியோடு அவளைப் பார்த்தவன், பான்ட் பாக்கட்டிற்குள் கரங்களைச் செலுத்தியவாறு,
“அப்படி நான் என்ன செய்துவிட்டேன் தற்பரை…” என்றான் இறுகிய குரலில்.
அந்த இறுகிய குரல், நேர் கொண்ட பார்வை, தயங்காமல் அவள் விழிகளை எதிர்கொண்ட பாங்கு இவை அவன் தவறு செய்யவில்லை என்பதற்கான ஆதாரம்தான். ஆனால் அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அவளுடைய மூளை வேலை செய்யவில்லையே. மருந்தின் தாக்கத்தாலும், அதிர்ச்சியின் விளைவாலும் மாந்தப்பட்டுப்போய் இருக்கிறதே.
தவற்றையும் செய்து விட்டு எத்தனை தெனாவெட்டாக நிற்கிறான். இப்போது அழுகை மறைய அங்கே ஆத்திரம் கண் மண் தெரியாமல் வந்தது.
இப்போதும் பிடித்த அவன் சட்டையை விடாமல், உலுப்பியவள்,
“நீங்கள் உண்மையானவர் என்று நினைத்தேன், நேர்மையானவர் என்று நினைத்தேன், எதையும் மறைக்க தெரியாதவன் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் பசுவல்ல, பசுந்தோல் போர்த்திய நரி என்று காட்டிவீட்டீர்களே… சே… நீங்கள் மனிதனே அல்ல… மிருகம்… இப்போது சொல்கிறேன்… ஐ ஹேட் யு…. ஐ ஹேட் யு…” என்று சீறியவள் தன் கரங்களை விடுவித்துவிட்டு வழிந்த கண்ணீரை ஆத்திரத்துடன் துடைக்க, இன்னும் அவளை நம்ப முடியாதவன் போலத்தான் பார்த்தான் அவ்வியக்தன்.
“தயவு செய்து இனிமேல் என்னைப் பார்க்க வராதீர்கள்… மீறி வந்தீர்கள் என்றால்…” என்று சீறியவளை இப்போதும் இமைக்காமல் பார்த்தான்.
அவனுக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. உள்ளே ஆத்திரம் கனன்று கொண்டு வந்தது. அவனைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்? நினைவில்லாத ஒருத்தியைத் தொடும் அளவுக்கு அவன் கேவலமானவனா. அதுவும் அவளைப் போய் அவன்…’ ஏனோ அவனுக்கு அங்கே நிற்பதே தீயின் மீது நிற்பது போலத் தோன்ற, தன் பான்ட் பாக்கட்டிலிருந்த அந்தக் கைப்பேசியை எடுத்து அவளுடைய கரத்தைப் பற்றி வைத்துவிட்டு, அவளை அழுத்தமாகப் பார்த்தவன்,
“டேக் கெயர்…” என்றுவிட்டு வேகமாக அவள் குடியிருப்பை விட்டு வெளியேறினான்.
(16)
அவ்வியக்தனுக்கு நினைக்க நினைக்கத் தாளவில்லை. எத்தனை சுலபமாக அவளைத் தப்பாக எடைபோட்டு விட்டாள். அவளுக்காகப் பதறி அடித்துக் காப்பாற்ற வந்தால், நல்ல பாடம் கற்பித்து விட்டாள். அவன் மீது நம்பிக்கை இருந்திருந்தால் கொஞ்சமாவது யோசித்திருப்பாள். ஆனால்…” வலியுடன் எண்ணியவனுக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது.
நீ என்ன என்னை வெறுப்பது. நானும் உன்னை வெறுத்து விட்டேன். முழு மனதாக வெறுத்து விட்டேன். உன் மீதிருந்த அந்த இனம்புரியாத உணர்வை இதோ இப்போது… இந்தக் கணமே எரித்து விடுகிறேன். இனி உன்னைத் தேடி வர மாட்டேன். வரவே மாட்டேன்…” உறுதியாக முடிவெடுத்தவனின் வாகனம் நேராகச் சென்றது மதுக் கூடத்திற்குத்தான்.
எப்போதும் போல மது அருந்தினால் உலகம் மறந்து போகும். அவனை வதைக்கும் அவளும் மறந்து போவாள். கூடவே பெயர் தெரியாத யாரோ ஒருத்தி. அது போதும் அவனுக்கு. கடந்த இரண்டு மாதங்களாக விட்டதை இன்று தொடர வெண்டும். இனி பழையது போல தானாக வந்து மடியில் விழும் அழகிகளோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டியதுதான்.. உள்ளே வந்தவன், அடக்கப்பட்ட ஆத்திரத்துடன், மது கொடுக்கும் இடத்தில் சென்று அமர்ந்து,
‘ஷூட்டர்…” என்றான்.
அடுத்து அவன் முன்னால் சிறிய கண்ணாடிக் குவலையில் தண்ணீர் நிறத்தில் ஒரு திரவம் வைக்கப்பட்டது.
விநாடிக்குள் அதை வாய்க்குள் கொட்டி விழுங்க, அந்தத் திரவம் தொண்டையை எரித்துக்கொண்டு, இரைப்பையைக் கொளுத்திப் போட, அதைப் பற்களைக் கடித்து, விழிகளை இறுக மூடி “ம்…” என்கிற முனகலுடன் அனுபவித்தான். பின் அந்த எரிவு தணிய, கண்ணாடிக் குவலையை மேசையில் தொப்பென்று வைத்து,
“ஒன் மோர்…” என்றதும் மீண்டும் அதே திரவம் அவன் முன்னால் வைக்கப்பட, அதே போல விழுங்கியவன், அதன் எரிவை விழிகள் மூடி சற்று நேரம் ரசித்தான். ஆனாலும் விதற்பரையின் ‘ஐ ஹேட் யு…’ என்பதற்கு முன்னால் அந்த எரிவு விநாடி கூட நிற்பதாயில்லை.
மேலும் ஆத்திரம் வர,
“வன்ஸ் மோர்…” என்றான்.
இப்படி ஆறு குவளைகளை உள்ளே தள்ளிவிட்டான். ஆனாலும் ஆத்திரமும் ஏமாற்றமும் அவனுக்கு அடங்குவதாயில்லை. ஏனோ நெஞ்சம் தகித்தது. எதையும் சுலபத்தில் தாங்கக் கூடிய அவனால், விதற்பரையின் அவன் மீதான நம்பிக்கை இழப்பை இம்மியும் தாங்க முடியவில்லை. அவனையா தப்பாக நினைத்தாள். சிறு முள் கூட அவளைக் குத்திவிடக் கூடாது என்று துடிப்பவன் அவன். அவனையா தவறாக நினைத்தாள்? உள்ளே பெரும் ஏமாற்றம் பேரலையாக அவனை மூழ்கச் செய்தது.
குடித்த மதுபானத்தை விட, அவள் நினைவு அவனைப் பாடாகப் படுத்தியது. அவன் குடித்த போதையில் உலகம் மங்கினாலும் புத்தி மட்டும் தெளிவாய் அவளை நினைத்து இம்சைக்குள்ளானது. அந்தக் கடையில் உள்ள அத்தனை மதுபானங்களைக் குடித்தாலும் புத்தி தெளியும் போலில்லை.
ஆத்திரத்துடன், தன் சுட்டு விரலை மட்டும் உயர்த்தி இன்னும் ஒன்று என்றதும், மதுவைப் பரிமாறியவர் அவனை ஒரு மாதிரிப் பார்த்தான்.
“யு ஷூவர்? கான் யு ஹான்டில் திஸ்…” என்று அக்கறையாகக் கேட்க நிமிர்ந்து அவனைப் பார்த்து முறைத்தான்.
“என்னால் முடியாதென்றால் உன்னிடம் ஏன் கேட்கிறேன்…” என்று சுள்ளென்று விழ, வேறு வழியில்லாமல் இன்னொரு குவளையை முன்னால் வைத்தான் அவன்.
அதைக் கரத்தில் எடுத்து அங்கும் இங்கும் உருட்டியவனுக்கு அந்தக் கணமே ஓடிச்சென்று விதற்பரையைப் பார்க்கவேண்டும் என்கிற ஒரு வித வேகம் எழுந்தது. கூடவே நான் உன்னைக் காப்பாற்றினேனே தவிர, உனக்குத் தீங்கு விளைவிக்கவில்லை என்று சொல்லவேண்டும் என்று மனம் சண்டித்தனம் செய்தது. அதே வேளை, உன்னை நிராகரித்தவளைத் தேடி ஏன் போகிறாய், உனக்குப் பைத்தியமா…?” என்று இன்னொரு மனம் அவனைக் கடிய, ஆத்திரத்துடன் கரத்திலிருந்ததை வாய்க்குள் கொட்டிவிட்டு நிமிர்ந்த போது, மிக மிக அழகிய பெண் அவன் முன்னால் வந்தமர்ந்தாள்.
இளமையாக இருந்தாள். படு கவற்சியாக இருந்தாள். பார்க்கும் போதே தொடவேண்டும் என்று ஏங்கும் அளவுக்கு ஆடை அணிந்திருந்தாள்.
சற்று விழிகள் மங்கினாலும், நிமிர்ந்து பார்த்தவனுடைய உதடுகள் மெல்லிய கோணலுடன் புன்னகையைச் சிந்த, விழிகளோ சற்று அப்பட்டமாய்த் தெரிந்த அவளுடைய மார்பகங்களில் நிலைத்தன. ஆனாலும் உதடுகளைச் சுழித்துவிட்டு, நிமிர்ந்து அவளுடைய முகத்தைப் பார்க்க முயன்றான். விழிகள் சொக்கின.
“ஹாய் ஹான்ஸம்…” என்றாள் ஒரு வித போதையுடன். குரலில் கூட இளமையிருந்தது. பார்த்தால் இருபது இருபத்தொரு வயதுதான் இருக்கும் போல. இவனோ உதடுகளைப் பிளந்து சிரித்தவாறு,
“ஹாய் பியூட்டி…” என்றவன், தெளிவில்லாத விழிகளைத் தெளிவாக்க முயன்றவாறு தலையைக் குலுக்கிப் பார்த்தான். அவளுடைய முகம் தெளிவாகிப் பின் மங்க, அழகாய் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.
அவன் சிரிப்பில் அவள் கிறங்கினாளோ, அவன் தோற்றத்தில் மயங்கினாளோ, இல்லை அவன் குடித்த மது பாணத்திற்கான பெறுமதியைக் கண்டு, வந்தாளோ, அவன் பக்கமாகக் குனிந்து, அவன் தொடைகளில் தன் கரங்களைப் பதித்துத் தன் பெண்மையின் திரட்சியைச் சற்று அதிகமாகவே காட்டி,
“டு யு நீட் எனி ஹெல்ப்…” என்றாள். அவ்வியக்தனோ, மிகத் தாராளமாகவே அவள் அழகைப் பருகியவன் பின் நிமிர்ந்து பார்த்து, மேலும் சிரித்தான்.
“ஹெல்ப்… ம்… யெஸ்… ஐ நீட் யுவர் ஹெல்ப்…” என்றான் மெல்லிய குழறலுடன். பின் அவளைப் பார்த்து,
“கான் யு ஹெல்ப் மி டு கெட் அப்… ஃபெர்ஸ்ட்” என்றான். தன் தோள்களைக் குலுக்கியவள்,
“மை ப்ளஷர்…” என்றவாறு அவனை நெருங்கி அவன் கரங்களைப் பற்றித் தூக்கி விட, நன்றாகவே அவள் மீது சாய்ந்து நின்றவன், திரும்பி அவளைப் பார்த்து,
“என்னைப் பார்த்தால் எப்படி இருக்கிறது…” என்றான். அவளோ, அழகாய் சிரித்து,
“உனக்கென்ன, மிக மிகக் கம்பீரமாய், அத்தனை பெண்களையும் உன் பக்கம் இழுக்கும் வகையில் இருக்கிறாய்… நான் கூட உன்னைக் கண்டதும், மயங்கித்தானே வந்தேன்…” என்று அவள் கூற,
“தட்ஸ் இட்… தட்ஸ் இட்… ஐ லைக் யு…” என்றவன் மேலும் அவள் மீது நன்றாகச் சாய்ந்து அவள் முகத்தை ஏறிட்டு, உதடுகளைப் பிதுக்கி,
“ஆனால் அவள் என்னைத் தப்பாக நினைத்து விட்டாளே…” என்றான் பெரும் குறையோடு. இவனுக்கும், இவன் பெண் தோழிக்கும் இடையில் எதுவோ சரியில்லை என்பதைப் புரிந்துகொண்டவளாய், இப்போதும் அழகாய் சிரித்தாள்.
“அந்தத் தப்பைக் களையும் முயற்சியில் நீ இறங்கவில்லையா என்ன?”
இவனோ உதடுகளைப் பிதுக்கித் தலையை ஆட்டி,
“பிடிக்கவில்லை… நான் ஏன் களைய வேண்டும்… நான் எந்தத் தப்பும் செய்யவில்லை… என்னோடு ஆத்மார்த்தமாகப் பழகியிருந்தால், நான் தவறு செய்திருப்பேனா என்று யோசித்திருப்பாள். ஆனால் அவள் யோசிக்கவேயில்லை… யாரோ செய்த தவறைச் சுலபமாக என் தலையில் கொட்டிவிட்டாள்…” என்றான்.
பின் மார்பின் வலது பக்கம் கரத்தைப் பதித்து
“மை ஹார்ட்..” என்று முகம் கசங்க, அந்தப் பெண்ணோ புன்னகையுடன் அவனுடைய கரத்தைப் பற்றி இடதுபக்கம் வைத்து,
“ஹார்ட்… இங்கே இருக்கிறது…” என்றாள்.
உடனே அசடு வழிந்தவன்,
“என் இடயம் வழிகுத்து… மிக மிக வழிகுத்து…” என்றான் என்றான் தமிழில். அவளோ அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் குழப்பத்துடன்.
“சாரி எஸ்க்கியுஸ் மீ… புரியவில்லை…”
“என்ன புரியவில்லை?” என்றான் இவன் குழப்பத்தோடு.
“இல்லை இப்போது நீ சொன்னது புரியவில்லை…”
“ஓ உனக்குத் தமிழ் தெரியாதா…? எனக்கும் தெரியாது… அவள்தான் கற்றுக்கொடுத்தாள். உனக்கு ஒன்று தெரியுமா… டமில் உலகத்திலேயே பழைய மொழி… அவள்தான் சொன்னாள்… …” என்று அசடாய் சிரித்தவன் தமிழில் சொன்னதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூற.
“அவளுக்கு உன்னுடைய அருமை தெரியவில்லை போலும்…” என்றதும் தன்னுடைய பற்களைக் காட்டி சிரித்தவன்,
“அப்படிச் சொல்லு… அவளுக்கு என் அருமை தெரியவில்லை…” என்றவன், ஏதோ குழப்பத்துடன் இவளைப் பார்த்து,
“உனக்கு எத்தனை வயது… பார்க்கும் போது மிக இளமையாக இருக்கிறாய்…” என்று சந்தேகம் கேட்டான்.
“இருபத்து ஒன்று…” என்றாள் இனிமையாய். அதைக் கேட்டதும், கோணலாகச் சிரித்தவாறு,
“ஷால்வி கோ…” என்றான்.
“வை நாட்…” என்றவாறு அவனைத் தாராளமாகவே அணைத்துக்கொண்டு வெளியே வர, கனமாய்ப் பொழிந்த பனி மழைதான் இவர்களை வரவேற்றது.
“இங்கே நான் அழுகிறேன்… வானத்தைப் பார் சிரிக்கிறது…” என்று குழறியவன், பின் ஒரு முழு நிமிடம் அந்தப் பொழியும் பனியையே ஆவலுடன் பார்த்து,
“அவளுக்குப் பனி மழை என்றால் மிக மிகப் பிடிக்கும் தெரியுமா…” என்றான் சற்று இளகிய குரலில். பின் இவளைக் குனிந்து பார்த்து “ஐ மிஸ் ஹர்…” என்றான் வாடியவனாய். பின் தன் கைப்பிடியிலிருந்தவளை இழுத்துக் கொண்டு நடக்க, பனி படர்ந்த தரை இருவரையும் வழுக்கிவிடப் பார்த்தது.
நல்லவேளை அவள் ஒருவாறு சமாளித்து அவ்வியக்தனை இறுகப் பற்றிக்கொண்டாள்.
“பார்த்து…” என்றவள், இவனை அண்ணாந்து பார்த்து,
“பார்த்துத் தான் நடக்க முயல்கிறேன்… ஆனால் சறுக்கி விடுகிறது…” என்றவன் வாடினான். பின் உதடுகளைப் பிளந்து சிரித்து, “வா போகலாம்…” என்றவாறு அவளை இழுத்துக் கொண்டு நடந்தான். அவளோ, இவனை நிமிர்ந்து பார்த்து,
“என் வாகனத்தில் போகலாமா, இல்லை உன் வாகனத்தில் போவோமா?” என்றாள். இவனோ அதைக் கேட்டுக் கிளுகிளுத்துச் சிரித்தவாறு,
“கால் எக் கா ப்ளீஸ்…” என்றதும், அந்தப் பெண் தன் கைப்பேசியில் ஒரு வாடகைக் காரை அழைத்துவிட்டு நிமிர, இப்போது இவனுடைய கைப்பேசி அடித்தது. ஆனால் அதை எடுத்துப் பேசும் நிலையில் அவன் இருக்கவில்லை. இவள்தான் சத்தத்தைக் கேட்டுவிட்டு,
“உன்னுடைய கைப்பேசியில் யாரோ அழைக்கிறார்கள்…” என்று கூற,
“இஸ் இட்…?” என்றவன், தன் பான்ட் பாக்கட்டிற்குள் கையை விட்டுக் கைப்பேசியை எடுக்க முயல்வதற்குள் அது சத்தத்தை நிறுத்தியிருந்தது.
“இட்ஸ் ஸ்டாப்…” என்று கூறும்போதே மீண்டும் கைப்பேசி அழைத்தது. இப்போதும் எடுக்க முயன்றவன் தடுமாற, அது அடித்து விட்டு ஓய்ந்தது. மூன்றாம் முறையும் அடிக்க, இப்போது அந்தப் பெண்தான் உதவிக்கு வந்தாள்.
அவளே அவன் பான்ட் பாக்கட்டிற்குள் கையை விட்டுக் கைப்பேசியை எடுத்து உயிர்ப்பித்தவள், அவன் இருக்கும் நிலையில் பேச முடியாது என்பதைப் புரிந்துகொண்டவளாக தன் காதில் வைத்து,
“சாரி… அவர் வேலையாக இருக்கிறார்… பிறகு அழையுங்கள்…” என்று விட்டுக் கைப்பேசியை அணைக்கப் போக, இவன் அவள் அணைப்பிலிருந்து தடுமாற,
“அவுச்… ஹே… ஹனி… ஈசி…” என்றவாறு அவனை நிலைப்படுத்த முயன்ற விநாடி, அவர்களுக்கு அருகாமையில் வந்து நின்றது வாடகை வண்டி.
அந்தப் பெண்ணின் அணைப்பிலிருந்து விலகியவன், வாகனத்தில் ஏற முயன்றான். பின் எதையோ நினைத்தவனாக எழுந்து,
“ஊப்ஸ் உன்னை மறந்து விட்டேனே…” என்றவாறு கரங்களை விரித்து,
“கம் ஹியர்…” என்றான். அவள் நெருங்க அவளை இறுக அணைத்து விடுவித்தவன், தன் பான்ட் பாக்கட்டில் கைவிட்டுப் பணப்பையை எடுத்து, அதற்குள்ளிருந்து கத்தையாகப் பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு,
“உன்னுடைய உதவிக்கு நன்றி… என்ஜோய்…” என்றதும் இவளோ கரத்திலிருந்த பணத்தைப் பார்த்துவிட்டுப் புரியாமல் அவனை ஏறிட்டாள். சிரித்தவன்,
“சாரி உன்னை என்னோடு அழைத்துச் செல்ல முடியாது… வேறு பெண்களைத் தொடும் மன நிலையில் நானில்லை… டே கேயார் …” என்றவன் அவள் கன்னத்தைத் தட்டிவிட்டு, தள்ளாடியவாறே வாகனத்தின் பின்னிருக்கையில் அமர்ந்து தான் செல்லவேண்டிய இடத்தின் விலாசத்தைக் கூற, அடுத்த கணம் வண்டி அவன் தங்கும் விடுதியை நோக்கிச் சென்றது.
வாடகை வாகனத்திற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தவன் தள்ளாடியவாறே தங்கியிருந்த விடுதிக்கு உள்ளே சென்றான். எப்படியோ தன் அறைக்கு வந்தவன், கட்டிலில் விழ, அவனையும் மீறிக் கண்களில் கண்ணீர் பொங்கத் தொடங்கியது.
அழுகையில் உதடுகளைப் பிதுக்கியவன்,
“என்னை எப்படி நீ சந்தேகப் படலாம்… ஹெள டெயர் யு…” என்று வாய் விட்டுப் புலம்பியவனாகக் குப்புறப் படுத்தவனுக்கு, கண்ணீருடன் சேர்ந்து தூக்கமும் வர, அப்படியே உறங்கியும் போனான்.