Mon. Sep 16th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-8

8

 

உத்தியுக்தன் நிழல்பதிவை எடுத்ததுமே சமர்த்திக்கு அவனுடைய நோக்கம் புரிந்து போயிற்று.

அலறி அடித்துக் கொண்டு அறைக் கதவை நோக்கி ஓடினாள்.

முடிந்தளவு தன் பலமெல்லாம் சேர்த்துத் திறந்து பார்த்தாள். அசைந்ததா அந்த இராட்சதக் கதவு. இறுதியாக முடியாமல் பலமாகக் கதவைத் தட்டி,

“ஹெல்ப்… யாரவது இருக்கிறீர்களா…” என்று கத்த, இவனோ முகத்தை சுளித்தவாறு காதுகளைக் குடைந்தான்.

“ஷ்.. எதுக்கு இந்த சத்தம். இங்கே நீயும் நானும்தான் இருக்கிறோம்… நீ கத்திய கத்தில் என் காது ஙொய் என்கிறது…” என்றவன்

“வா நம்முடைய காதல் காட்சியைப் படம் எடுத்து நமக்குள் உள்ள உறவை ஊர் உலகுக்குத் தம்பட்டம் அடிக்கலாம்… நமக்குள் நடக்கும் காமக் களியாட்டத்தை, அத்தனை ஊடகங்களுக்கும் அனுப்பி விடலாம். முக்கியமாகப் பிரைட்டன் பத்திரிகைக்கு.

இப்போதெல்லாம் ஆதாரத்தோடு காட்டினால் தான் நம்புவார்கள். அத்தனை செய்தி நிறுவனங்களுக்கும் செம வியாபாரமாக இருக்கும்…” என்றவன் வெளிறிய அவள் முகத்தைக் கண்டு,

“பயப்படாதே… உனக்கு சத்தியம் செய்கிறேன். இவை பிரசுரித்த கையேடு உனக்குப் பேசிய பணத்தையும் கொடுத்துவிடுவேன்…” என்று உறுதியாகக் கூறியவாறு அவளை நோக்கி வரத் தொடங்க சமர்த்தியின் உடல் நடுங்கத் தொடங்கியது.

கடவுளே என்ன கொடுமை இது. அவளும் அவனும்… அதற்கு மேல் அவளால் நினைக்கக் கூட முடியவில்லை. அவன் சொன்னதை நினைக்கும் போதே இவளுக்குக் குமட்டியது. இதிலிருந்து எப்படித் தப்பிக்கப் போகிறாள்? புரியாதவளாக சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அவனோ ஒரே இழுவையில் தன் மேலாடையைக் கழற்றி எறிந்தவாறு அவளை நெருங்கத் தொடங்க, அவன் வெற்றுடமைக் கண்டவளுக்கு மயக்கமே வந்தது.

அவனுடைய எய்ட் பக் வயிறும், இறுகிய தசைக்கோளங்களும், எழும்பிச் சுருண்டு திரண்ட இருதலைப் புஜங்களும், நரம்போடிய கழுத்தும், ஒடுங்கிய இடையும் ‘ப’ வடிவ மார்பும், என்று திமிறி நின்றவனைக் கண்டவளுக்கு ஒரு கணம் உயிரே ஊசலாடியது.

கூடவே அவனுடைய இடது மார்பில் அந்த ஜூலியட்டின் படம் பச்சை குத்தியிருக்கத் தன் அதிர்ச்சியை மறந்தவளாக அதை வெறித்தாள். அவளுடைய விழிகள் நிலைத்திருந்த இடத்தை உணர்ந்தவனாக அவனும் குனிந்து பார்த்தான். ஜூலியட்டின் உருவத்தைக் கண்டதும், வலது கரத்தால் அதை வருடிக் கொடுத்தவன்,

“ஜூலியட்.. மை லவ்…” என்று முணுமுணுத்து விட்டு அதே ஆவேசத்துடன் அவளைப் பார்த்தான்.

“என் காதல் தோற்றுப் போக நீதான் காரணம்… உன்னுடைய கட்டுரைதான் காரணம்… நீ மட்டும் அன்று அதை எழுதாமல் இருந்திருந்தால், அவளோடு நான் புதிய வாழ்க்கை வாழ்ந்திருப்பென்…” என்றதும் இவளுக்கு வயிற்றைக் கலக்கியது.

காதல் தோல்வி என்பது எத்தனை பயங்கரமானது என்பதை, தற்கொலை செய்யும் இளையவர்களை வைத்து அறிந்திருக்கிறாள்தான். அதை நேரில் கண்டபோது ஏனோ மனது பெரிதும் தவித்துப் போனது. அதற்கு என்ன பதில் கொடுப்பது என்று தெரியாமல் திணறியவளை இரக்கமற்றுப் பார்த்தான் உத்தியுக்தன்.

“ஏன் சமர்த்தி! உங்கள் இனத்தவர்களுக்கு மட்டும்தான் கற்பு இருக்கிறதா? எங்களுக்கு இல்லையா? அல்லது இருக்கக் கூடாதா? காதலித்தவளைத் தவிர வேறு எவளையும் இது வரை தொட்டறியாதவன். அப்படிப்பட்ட எனக்குப் பெண் பித்தன் என்கிற பட்டம் கொடுத்தாய் அல்லவா…” என்று கேட்க இவளுடைய நெஞ்சுதான் தீஞ்சு போனது.

கூடவே என்ன நடந்தாலும் அவனிடம் சிக்க கூடாது என்கிற வேகத்துடன் தப்பி ஓட முயன்றவளின் காலை உத்தியுக்தன் இடறிவிடத் தொப்பென்று தரையில் விழுந்தாள் சமர்த்தி.

விழுந்த வேகத்தில் முழங்கையும் காலும் பலமாக அடிபட வலியில் துடித்துப்போனாள். ஆனாலும் அதை முழுதாக அனுபவிக்க முதல், உத்தியுக்தனின் வேக நடை பீதியை கிளப்பியது.

வேகமாக அவனை நோக்கித் திரும்பி அமர்ந்தவள் அவனை வெறித்தாள். அவன் நெருக்கம் கொடுத்த தகிப்பில் அமர்ந்த வாக்கிலே பின்னால் அரைபட்டுச் சென்றவள் கட்டிலோடு மோதி நிற்க இவனோ ஏளனத்துடன் அவளைப் பார்த்தான்.

“என்னம்மா… இப்படி பயப்படுகிறாய். முயன்ற வரை… உன்னை வலிக்காமல் ஆட்கொள்கிறேன். அப்படியே வலிக்கச் செய்தாலும் ஒவ்வொரு வலிக்கும் ஒவ்வொரு மில்லியன் டாலர்கள் அதிகமாகக் கொடுக்கிறேன்… சத்தியம்… இப்போது வா…” என்று கூற, அவன் பேச்சில் துடித்தவளாக,

“ப்ளீஸ்… டோன்ட்… டோன்ட் டூ திஸ் டு மி…” என்றாள் கெஞ்சலாய்.

கண்ணீரோ தாரை தாரையாக வழிந்தது. பெண்களின் கண்ணீருக்குப் பேயும் இரங்கும் என்பார்கள். அவனோ ராட்ஷசன் போலும். இம்மியும் இரங்குவதாயில்லை.

“வை… வை நாட்… இதைத்தானே உன் செய்தித்தாளில் போட ஆசைப்பட்டாய். பிறகு எதற்கு மறுக்கிறாய்? இப்போது அதற்கான வாய்ப்பு தானாகவே வந்திருக்கிறது… ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே. முன்புதான் என் தம்பியின் தவற்றை என் மீது போட்டாய். இப்போது நிஜமாகவே என்னுடைய காதல் காட்சிகளைத் தரப்போகிறேன்… அதுவும் உன்னோடு… எதையும் கண்ணால் பார்த்துக் காதால் கேட்டுப் பதிவிடுவதை விட, நேரடியாக அனுபவித்துவிட்டுப் பதிவிடுவது சுவாரசியமாக இருக்குமல்லவா. பார்வையாளர்களும் அதைத்தானே எதிர்பார்க்கிறார்கள். எவன் குடி கெடும், எவன் வாழ்க்கை நாசமாவதைச் சுவாரசியமாகப் பார்க்கலாம் என்று அலைந்து திரிபவர்களுக்குச் செம தீனி கொடுக்கலாம் வா… வந்து என் கூட படு… இன்பமாய் இரு…” என்று கூற, இவளோ மறுப்பாகத் தலையை அசைத்தாள்.

இவனோ ஆச்சரியம் போல அவளைப் பார்த்து, “எதற்கு மறுக்கிறாய்?” என்றான். பின் ஏதோ நினைவு வந்தவன் போலத் தன் தலையில் மெல்லியதாகத் தட்டி,

“அட இதை மறந்துவிட்டேனே… இது உன்னைச் சார்ந்ததும் அல்லவா… நீயும்தான் அந்தக் காட்சியில் இருப்பாய்… அதுவும் ஒட்டுத் துணியில்லாமல்…” என்று எகதாளமாகக் கூற இவளுடைய உடல் ஒரு முறை தூக்கிப் போட்டது.

இனியும் அவன் கூறுவதைக் கேட்கும் சக்தியற்றவளாக, எழுந்து ஓட முயல, அவனோ அவளுடைய வயிற்றில் கரம்கொடுத்துப் பற்றியவன்,

“எங்கே ஓடுகிறாய்… படுக்கை இங்கே இருக்கிறது சமர்த்தி… நிகழ்பதிவுக்கு கருவி அங்கே இருக்கிறது… இந்த இடம்தான் வசதி…” என்றவன் அவளை இழுத்துப் படுக்கையில் தள்ளி அவள் மீது விழ,

“நோ… நோ… என்னை விடு…” என்று அலறியவாறு அவன் பிடியிலிருந்து விலக முயன்று தோற்றவளை நகைப்புடன் தன் கைவளைவுக்குள் கொண்டுவந்தான் உத்தியுக்தன்.

“அது எப்படி… இன்னொருத்தன் வாழ்க்கையில் நடப்பது உங்களுக்குச் செய்தி என்றால், உன்னுடைய வாழ்க்கையில் நடப்பது மட்டும் பவித்திரமானது ம்… இன்னொருத்தனின் அந்தரங்க வாழ்க்கை உங்களுக்குச் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் உங்களுடைய வாழ்க்கையை அம்பலப் படுத்தினால் மட்டும் கசக்கிறதா என்ன? எனக்குப் புரியவில்லையே இந்த லாஜிக்…” என்றவாறு மேலும் அவளைத் தனக்குள் புதைக்க முயல, சமர்த்திக்கு இருட்டிக்கொண்டு வந்தது.

அவனோ மேலும் மேலும் தன் செயலால் முன்னேறவும் தொடங்கினான்.

அவனுடைய உடல் அழுத்தம் இவளுடைய மூச்சைத் தடைசெய்ய அவனிடமிருந்து விலக முடியாது திணறியவளுக்கு மயக்கம் வரும்போலத் தோன்றியது. தூண்போன்ற அவனுடைய கரங்கள் மேனியில் பட்டதும், அது கொடுத்த தகிப்பில் உடலே சிதைந்துவிடும் போலத் தோன்ற,

“விடு… என்னை விடு…” என்று திமிறியவளின் விழிகள் அந்த நிலையிலும் நிகழ் பதிவுக் கருவியை வெறித்தது.

ஐயோ எல்லாவற்றையும் அது ஒளிப்பதிவு செய்கிறதே. இது வெளியே வந்தால் அவளுடைய நிலை என்ன? அவள் மீது முழு நம்பிக்கை வைத்த அண்ணன் அண்ணியின் நிலை என்ன? துடித்தவளாய்த் தன் முகம் நோக்கி வந்திருந்தவனை நோக்கி,

“அந்த நிகழ் பதிவில் நீங்களும்தானே இருப்பீர்கள். உங்களுடைய மானமும் தானே கப்பலில் ஏறும்…” என்றாள் தன்னை விடுவிக்க முயன்று தோற்றவளாய். இதில் அவனுடைய கரங்கள் பட்டு தேகம் வேறு வலித்தது. அவனோ அதைக் கேட்டுச் சிரித்தவனாய்,

“போவதற்கு மானம் இன்னும் இருக்கிறதா என்ன? அதுதான் உன் புண்ணியத்தால் ஒட்டு மொத்தமாகத் துடைத்து எடுத்துவிட்டாயே? இனிமேலா அது திரும்பி வரப்போகிறது… ஆனாலும் எனக்காக அதிகம்தான் வருத்தப்படுகிறாய். அந்தளவுக்கு நல்லவளா நீ? அடடே… ஆச்சரியமாக இருக்கிறதே?’ என்று எள்ளலும், ஏளனமுமாகக் கேட்க, இவளோ, அவனிடமிருந்து தன கரங்களை விளக்க முயன்று தோற்றவளாக,

“இதோ பார்… சத்தியமாக நான் வேண்டும் என்று செய்யவில்லை. நம்பு… அந்த நேரம் நம்முடைய மாகாணம் தப்பான ஒருவனின் கரத்தில் போகக் கூடாது என்கிற எண்ணத்தில்தான் அந்த ஒளிப்பதிவை எடுத்துக் கொடுத்தேன். அதைத் தவிர வேறு எந்த உள் நோக்கமும் இல்லை… அந்தப் பணம் கூட எனக்காக வாங்கவில்லை…. என் அண்ணா அண்ணிக்காக வாங்கினேன். தயவு செய்து வொல்வதை நம்புங்கள்…” என்று அழுகையுடன் சொன்னவள், அடுத்து அவன் கரம் சென்றிருந்த இடம் உணர்ந்து துடித்தவளாக அக்கரத்தைத் தடுக்க முயன்று தோற்றவாறே,

“சத்தியமாக நான் எனக்காக செய்யவில்லை… யாருமில்லாமல் அனாதையாக இருந்த என்னைத் தங்கள் குழந்தைகள் போல வளர்த்தவர்கள். அவர்கள் கடனில் தத்தளிக்கும்போது பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. அந்த நேரத்தில் பணம்தான் எனக்குப் பெரிதாக இருந்ததே தவிர, வேறு எதையும் நான் யோசிக்கவில்லை… அதற்காக நிஜமாகவே வருந்துகிறேன்… தயவு செய்து என்னை விட்டுவிடு… இதோ பார்… நீ என்ன கேட்டாலும் செய்கிறேன். இது மட்டும் வேண்டாம் ப்ளீஸ்…” என்று தன் முகம் நோக்கிக் குனிந்தவனிடமிருந்து விலக முடியாமல் அவள் விம்மி வெடிக்க, ஒரு கணம் அவனுடைய அகோர முகத்தில் சற்றுச் சாந்தம் நிலவியது. அது வந்த வேகத்திலேயே காணாமல் போக,

“என்ன வேண்டுமானாலும் செய்வாயா என்ன?” என்று இகழ்ச்சியாகக் கேட்டவன், திமிறிய அவள் உடலைத் தன் உடலால் தடுத்தவாறே.

“உன்னால் தரைமட்டமான என் பெயரையும் புகழையும் விடிவதற்குள் மீட்டுக் கொடுக்க முடியுமா…?” என்றான் அழுத்தமாக.

இதற்கு என்ன பதிலைக் கூறுவாள்? நெஞ்சம் கனக்க அவனைப் பார்த்தாள் சமர்த்தி.

அந்த விழிகளை சற்று நேரம் இமைக்காமல் பார்த்தவன், அடுத்த கணம் அவளை விட்டு விலகி எழுந்தமர்ந்து அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“அது இறந்தகாலம் உன்னால் முடியாது. சரி அதை விடு… என்மீது நம்பிக்கையிழந்த மக்களின் நம்பிக்கையை உன்னால் மீட்டுக் கொடுக்க முடியுமா…?” என்றான் அடுத்து. அதற்கும் பதில் கூறாது விழிகளைத் தாழ்த்த, அவனோ,

“அது எப்படி முடியும். ஒவ்வொருத்தர் வீட்டிற்கும் சென்று பிரசங்கமா வைக்கமுடியும்…? அதுவும் முடியாது…” என்றவன் ஆத்திரத்தோடு அவளைப் பார்த்து,

“என் சாம்ராஜ்யமே வீழ்ந்த போது அத்தனை பேரின் முன்னாலும் அவமானப் பட்டுக் கூனிக் குறுகி நின்றேன் சமர்த்தி… வீழ்ந்த வியாபாரத்தைக் கட்டியெழுப்ப பிச்சைக்காரன் போல உதவி கேட்டு யார் யாருக்கோ முன்பாகவெல்லாம் கைக்கட்டி நின்றேன்… அந்த அவமானத்தை உன்னால் இல்லையென்றாக்கிவிட முடியுமா… என்னோடு நெருங்கிப் பழகிய பெண்கள், சொல்லப்போனால் அண்ணன் போலப் பழகிய என் வியாபார நண்பர்களின் மனைவியர்களும், பெண்களும் என்னைக் கண்டதும் ஒரு வித பயத்தோடு ஒதுங்கி நின்றார்களே… அப்போது ஏற்பட்ட அவமானத்தை உன்னால் இல்லையென்றாக்கிவிட முடியுமா? இது நானில்லை… எனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூற முடியாமல் உள்ளுக்குள்ளேயே வதங்கிய அந்த வலியை உன்னால் இல்லாததாக்க முடியுமா” என்று அவன் ஆவேசத்துடன் கேட்க அடிபட்ட பாவனையுடன் உத்தியுக்தனைப் பார்த்தாள் சமர்த்தி. இவனோ எங்கோ வெறித்தவாறு,

“நான் என்ன கேட்டாலும் உன்னால் செய்ய முடியாது சமர்த்தி… உன்னால் இப்போதைக்குச் செய்யக் கூடியது ஒன்றே ஒன்றுதான்…” என்றவாறு மீண்டும் அவளை நோக்கிச் சரிந்தவன், ஒற்றைக் கரத்தால் அவளுடைய முகத்தைப் பற்றி, உதடுகளைக் குவியச் செய்து, என்னோடு இன்பமாய் இருப்பது. அதை ஒளிப்பதிவு செய்து உலகுக்குக் கொடுப்பது என்றபோது இவளால் அழத்தான் முடிந்ததே தவிர, அவனிடமிருந்து இம்மியும் விலக முடியவில்லை.

“நான் தவறு செய்தவள்தான்… ஒத்துக் கொள்கிறேன்… உங்களுடைய இந்த நிலைக்கு உங்கள் தம்பியும் ஒரு காரணம்தானே… இன்று வரைக்கும் உங்கள் மீது தவறில்லை என்று அவர் சொல்லாதபோது, நான் மட்டும் எப்படி என் தவற்றை ஒத்துக்கொள்வேன்…” என்று என்று கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறு கேட்க அவளை வெறித்தான் உத்தியுக்தன்.

என் தம்பியைப் பற்றிப் பேசுவதற்கு உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது சமர்த்தி… அவன் என் தம்பி… அவன் ஒன்றும் பேசுபொருள் அல்ல கண்ட கண்டவர்கள் விமர்சிப்பதற்கு…” என்று பற்களைக் கடித்தவாறு சுள்ளென்று விழ மீண்டும் வாயை மூடிக்கொண்டாள் சமர்த்தி.

அவனையும் குற்றம் சொல்ல முடியாதுதான். ஒரு வேளை அவ்வியக்தன் தன் மீதுதான் தவறு என்று வெளிப்படையாகக் கூறியிருந்தாலும் கூட, நிச்சயமாக உத்தியுக்தனின் பெயரையும் ஏலத்தில் விட்டிருப்பார்கள். தவிர அவ்வியக்தன் சொன்னதை நம்பியும் இருக்கமாட்டார்கள். அண்ணனைக் காக்கத் தம்பி பொய் சொன்னாரா? ஆஃப்டர் த பிரேக் என்றுவிட்டு ஏதேதோ உளறியிருப்பார்கள். ஏன் என்றால் அவர்களின் குறிக்கோள் உத்தியுக்தனின் வீழ்ச்சி. அது எந்த உருவத்தில் வந்தாலும் அதைத் தமக்குச் சாதகமாகத்தான் பயன்படுத்தியிருப்பார்கள்.

என்னதான் அவ்வியக்தன் காட்டுக் கத்தலாகக் கத்தினாலும், பதவிக்காக இரட்டையரின் துணையோடு தப்பித்த உத்தியுக்தன் என்றுதான் பத்திரிகையில் வந்திருக்குமேயன்றி, நிச்சயமாக அவனுக்குச் சார்பாகப் பேசியிருக்க மாட்டார்கள். அப்படியே பேசியிருந்தாலும், உண்மை மழுங்கித்தான் போய் இருக்கும். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகப் பத்திரிகைத் துறையில் இருப்பவளுக்குத் தெரியாதா என்ன நடந்திருக்கும் என்று? பதில் கூற முடியாது அவன் பலத்தையும் தடுக்க முடியாமல் திணற, இப்போது அவனுடைய உதடுகள் அவளுடைய உதடுகளை நெருங்கத் தொடங்கியது.

இதோ உதடுகளை நோக்கி நெருங்கிவிட்டது. இதோ முத்தமிடப் போகிறான். இனி அவள் வாழ்க்கை அவ்வளவும்தான்… வெளிவர முடியாத இருட்டிற்குள் புதையப்போகிறாள்… விழிகளை மூடி, அழுந்த நின்றிருக்க, இப்போது நெருங்கிய உதடுகள் அந்தரத்திலேயே நிற்கத் தன்னை மறந்து விழிகளைத் திறந்தாள் சமர்த்தி.

மிக மிக நெருக்கத்தில் அவனுடைய முகம். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்றிருக்க, என்ன நினைத்தானோ, தன் இறுகிய பிடியை சற்றுத் தளர்த்தி அவளை விடுவிக்க முயன்ற தருணம், அதைக் கூடப் புரிந்துகொள்ள முடியாது அச்சம் அவளைச் சூழ்ந்திருக்கச் சற்றும் யோசிக்காமல், அந்த நேரம் கிடைத்த சிறிய இடைவெளியில், அத்தனை பலத்தையும் கூட்டி அவனுடைய ஆண்மையில் தன் முழங்காலால் ஓங்கி ஒரு உதை கொடுக்க, அதை எதிர்பார்க்காத உத்தியுக்தனின் உலகம் ஒருகணம் நின்று சுற்றியது.

அடிவயிற்றிலிருந்து உச்சந்தலை வரை சுர் என்கிற வலி பரவிச் செல்ல “ஹக்…” என்கிற முனங்கலோடு சரிய, அந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டவளாய், அவனைத் தள்ளிவிட்டுச் சுழன்று சென்று கட்டிலின் மறுபக்கமாகத் தொப்பென்று தரையில் விழுந்து நடுங்கிய உடலை அடக்கும் வழி தெரியாது அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ எழுந்த வலியை அடக்கும் முகமாகக் கட்டிலில் கரங்களை ஊன்றியவாறு பற்களை இறுகக் கடித்துத் தாடைகள் புடைக்க, விழிகளை அழுந்த மூடியவாறு நின்றிருந்தான்.

அவன் அடிபட்ட புலி. அப்படியிருக்கையில் மீண்டும் வலிக்கச் செய்துவிட்டோமே… சும்மாவே ஆக்ரோஷத்தில் இருப்பவன்… இப்போது மேலும் பலமடங்கு வேகத்தோடு அவளை நிலையிழக்கச் செய்வானே… ஐயோ… இப்போது என்ன செய்வது? எப்படித் தப்பிப்பது. இவளைக் காக்க யார் வரப்போகிறார்கள்.

செய்வதறியாது அச்சம் பிடரியில் அடிக்க எழுந்து மீண்டும் கதவை நோக்கி ஓடியவளின் விழிகளில் நிகழ் பதிவுக் கருவி விழுந்தது. அவன் சுதாரிக்க முதலே, அதை நெருங்கியவள், அதை எடுத்துக்கொண்டு மீண்டும் அறைக் கதவைத் திறக்க முற்பட்டாள்.

அப்போது திறக்காத கதவு இப்போது மட்டும் திறந்துவிடப்போகிறதா என்ன?

எப்படி முயன்றாலும் திறக்க மறுத்த கதவை இழுத்தவாறே திரும்பி இவனைப் பார்க்க, இவனோ வலி அடங்கியவனாகக் கொழுந்துவிட்டெரியும் சீற்றத்தோடு, விழிகளைத் திறந்து இவள் பக்கமாகப் பார்த்தான். அந்தப் பார்வையில் உயிர் உறைந்தாள் சமர்த்தி.

உத்தியுக்தனின் முகமோ கண்டிக் கறுத்து இறுகிப் போயிருந்தன. அது வலியால் மட்டுமல்ல. மீண்டும் அவளால் அடிவாங்கிவிட்டோம் என்கிற அவமானத்தாலும் விழிகள் கொவ்வைப்பழமாகச் சிவந்து போயின.

மறு கணம் எழுந்தவன், ஆவேசத்துடன் அவளை நோக்கி வர,

பல்லி போலக் கதவோடு ஒட்டி நின்றவளின் கூந்தலைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தான்.

கண்ணீர் சொரிந்த விழிகளையும், அழுததால் சிவந்து வீங்கிய முகத்தையும், அச்சத்தால் நடுங்கிய உதடுகளையும் கடும் ஆத்திரத்தில் புருவங்கள் நெரிய உற்றுப்பார்த்தான். இவளோ அவன் சூட்டைத் தங்க முடியாமல்,

“தயவு செய்து என்னை விட்டுவிடு… என்னைக் காக்கவேண்டித்தான் உன்னை…” என்று முடிக்க முதல் தலை முடியைப் பற்றிய கரத்தை விடாமல் தன்னை நோக்கி இழுத்தவன்,

“ஹவ் டெயர் யு… யு ப்ளடி…” என்றவன் வசனத்தை முடிக்காமல் பற்களைக் கடித்து மேலும் அவள் முகத்தைத் தன்னை நோக்கி இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவளுடைய மெல்லிய மூக்கு அவனுடைய கூறிய மூக்கோடு மோதி நின்றது. அதைக் கூட உணராதவனாக, அவளை உறுத்து விழித்தவன்,

என்ன… சீண்டிப் பார்க்கிறாயா? போனால் போகிறது பெண்தானே, செய்த தப்பை உணர்த்தி மிரட்டி அனுப்பி விடலாம் என்று பார்த்தால், என்னையே உதைக்கிறாயா… எத்தனை தைரியம் உனக்கு…” என்று சீரியவனுக்கு ஆத்திரம் சிறிதும் மட்டுப்படவில்லை.

பெண் இதற்கு மேல் தங்கமாட்டாள் என்கிற எண்ணத்தில் விடுவிக்க நினைத்தால், அவனையே உதைக்கிறாளே. அதுவும் எங்கே…? கொஞ்ச நேரம் அவனுக்கு மூச்சுக்கூட விடமுடியவில்லையே. தப்பு செய்த அவளுக்கே இத்தனை இருந்தால், பாதிக்கப் பட்ட இவனுக்கு எத்தனை இருக்கும்.

அவனுடைய இறுகிய பிடியில் ஏற்பட்ட வலியில் முகம் சுருங்கத் தன் பிடியை விடுவிக்க முயன்றவளின் அந்த நீண்ட விழிகளை வெறுப்போடு ஏறிட்டான் உத்தியுக்தன்.

“இந்த இரு விழிகள்.. இரவு பகலாகத் தூங்க விடாமல் என்னை வதைத்த அந்த விழிகள்…” என்றவன், அடுத்த கணம் அவளுடைய இடையில் கரத்தைக் கொடுத்துத் தன்னை நோக்கி இழுத்து அவளை அணைத்த வாக்கிலேயே அவளுடைய கரத்திலிருந்த நிகழ்பதிவுக் கருவியைத் தன் கரத்திற்கு எடுத்துக்கொண்டான்.

திமிற முயன்றவளை விடாமலே, அந்தக் கருவியில் எதை எதையோ தட்டினான். பின் அவளை அணைத்தவாக்கில் நிற்கும் ஒளிப்பதிவை எடுத்தான். தொடர்ந்து அதை முன்பு போலவே மேசையில் வைத்துவிட்டு கரங்களில் சிக்கியிருந்தவளைத் திரும்பிப் பார்த்து,

“எனக்கே ஆட்டம் காட்டுகிறாயா? இதுவரை நடந்தவற்றை நான் பதிவு செய்யவில்லை. ஆனால் இனிப் பதிவு செய்யப்போகிறேன்…” என்று சீறியவாறு அவளைத் தூக்கிக் கட்டிலில் போட, வேறு வழியில்லாமல் அவனுக்கு முன்பாகக் கரம் கூப்பியவள்

“கையெடுத்துக் கும்பிடுகிறேன்… ஒத்துக் கொள்கிறேன்… நான் செய்தது தவறுதான். முட்டாள்தனமான செயல்தான். உனக்கு செய்தது அனைத்தும் தவறுதான்… ஒத்துக்கொள்கிறேன்… ப்ளீஸ் என்னை விட்டுவிடு. என்று கெஞ்சியவாறு கதற இரக்கமற்றுப் பார்த்தான் உத்தியுக்தன்.

“சரி உன்னை மன்னிக்க முதல், முழுதாக உன்னை எடுத்துக்கொள்கிறேன் அதற்குப் பிறகு உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நீ என்னை மன்னித்தால், அந்தக் கணமே நானும் உன்னை மன்னிக்கிறேன். டீல் ஓக்கேவா…” என்றவாறு அவளுடைய கால்களைப் பற்றித் தன்னை நோக்கி இழுக்க,

“விடு… விடு என்னை…! தயவு செய்து என்னை விடு…! ப்ளீஸ்…!” என்று கெஞ்ச விட்டுவிடுவதற்கு அவன் என்ன சாதாரணமானவனா என்ன?

“விடுகிறேன். தக்க பாடம் புகட்டிவிட்டு விடுகிறேன்.” என்றவன் அவளை அழுத்திப் பிடித்தவாறு அவள் மீது படர்ந்து, அவளுடைய மேல் சட்டையின் கழுத்துப் பகுதியில் கரங்களை வைத்து ஒரு இழுவை இழுக்க அத்தனை பொத்தான்களும் தெறித்து விழச் சட்டை கழன்றது.

கதறித் துடித்தவளாக, தெறித்த மேல் சட்டையை இரு கரங்கள் கொண்டு பெண்மையை மூட முயல, அந்த முயற்சியைத் தடுத்தவனாய் கரங்களைப் பற்றித் தலைக்கு மேலாக எடுத்துச் சென்று அழுந்த பற்றி,

“அடடே…! இப்படி அழுதால் நிகழ்பதிவில் கற்பழிப்பது போல அல்லவா தோன்றும்…? சே…! சே…! நன்றாக இருக்காதே! இணங்கி இணைந்தால் தானே தத்ரூபமாக இருக்கும்…!” என்றவாறு தன் அழுத்தமான உதடுகளால் அவளுயைட உதடுகளை இறுகப் பற்றிக்கொண்டான் உத்தியுக்தன்.

அவளுக்கு உலகமே தட்டாமாலையாகச் சுற்றியது.

இதுவரை இதழ் முத்தம் பற்றி அறியாதவள். தெரியாதவள். அந்த முத்தம் இத்தனை கடுமையக இருக்கும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. முதல் முத்தத்தை எப்போதும் மறக்க முடியாது என்பார்கள். ஆம் அவளுக்கும் மறக்க முடியாதுதான். ஏன் எனில் அத்தனை பயங்கரமாக இருந்தது அந்த முத்தம். அந்த முத்தத்தில் உதடுகள் காயம்பட மூச்சோ தடைப்பட, உடலோ அசையமுடியாத கிடுக்குப் பிடியில் சிக்கியிருக்க, கையறு நிலையில் கிடந்தவளை மதித்தானா அவன்?

அவனுடைய அந்த அசுர முத்தத்தில் புத்தி மங்கிப் போனது. அதீத அதிர்ச்சியில் முழுவதுமாகச் செயலற்றுப்போனாள் சமர்த்தி.

கற்பழிப்பை உன்னால் தடுக்க முடியவில்லை என்றால், அதை அனுபவிக்கப் பார்… வலியாவது குறையும் என்று எங்கோ படித்தது நினைவிற்கு வந்தது. சொன்னவருக்கென்ன… வெறும் வார்த்தைகள்தான். ஆனால் அதை அனுபவிக்கும் பெண்களுக்குத்தானே அதன் வலியும் வேதனையும் புரியும். கடவுளே இந்த அசிங்கத்தை வேறு நிகழ் பதிவு செய்கிறானே. இதிலிருந்து தப்பக் கூட முடியவில்லையே…’ அசையக் கூட முடியாது மனதிற்குள் கதறித் துடிக்க, அவனோ பசைகொண்டு ஒட்டிய உதடுகள் போலப் பிரிய மறுத்த இதழ்களைச் சிரமப்பட்டு மெதுவாகப் பிரித்து, அந்தத் தளிர் உதடுகளைப் பார்த்தான்.

அவனுடைய அழுத்தமான ஆவேசமான அந்த இதழ் தொடுகையில் அவளுடைய உதடுகள் கண்டிச் சிவந்து வீங்கத் தொடங்கியிருந்தன.

அதை இரசனையுடன் பார்த்தவன், மீண்டும் அவள் இதழ்களை நோக்கிக் குனிய, இப்போது முன்னைய ஆவேசமில்லை. பட்டாம்பூச்சி மலர்களின் இதழ்களைக் கவ்வுவது போல மிக மென்மையாக முத்தமிட, அவளோ வேகமாத் தன் தலையைத் திருப்பிக் கொண்டாள்.

விருந்து மறுக்கப்பட்ட கோபம் அவனுக்கு. அந்த ஆத்திரத்தில், ஒரு கரத்தால் அவளுடைய இரு கரங்களையும் பற்றி மறுகரத்தால் அவளுடைய முகத்தைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பி அவளை உற்றுப் பார்த்தான்.

மறுகணம் இரையை வளைத்துப் பிடித்த கணவாய் போல அவள் மீது படரத் தெங்கினான்.

அவனிடமிருந்து தன்னைக் காக்க முயன்று முடியாமல் குற்றுயிரும் குலை உயிருமாகிப் போனாள் சமர்த்தி.

அவளுடைய முயற்சியைச் சுலபமாகவே அடக்கியவாறு, அவளுடைய கழுத்தின் வளைவில் தன் முகத்தைப் புதைக்க யாரோ ஈயத்தைத் தன் மீது ஊற்றியது போலத் திணறிப்போனாள் சமர்த்தி.

அவனுடைய ஒற்றைக் கரமோ தாராளமாக அவள் மேனியில் தன் முத்திரியைப் பதிக்க, அது கொடுத்த கூச்சத்தையும், வேதனையையும் மீறி, நிகழ் பதிவு வேறு அவனுடைய அசுர ஆட்டத்தைப் பதிவு செய்கிறதே என்கிற அவமானத்தில் அரை உயிராகிப் போனாள்.

ஒரு கட்டத்தில் அவன் செய்கை கொடுத்த வலியில்,

“ப்ளீஸ்… என்னை விடு… நீ தொடும்போது ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதுபோல உடல் காந்துகிறது. இதை விட என்னைக் கொன்றுவிடு” என்று கதற, அந்தக் கதறல் அவனை அசைத்துப் பார்த்ததோ? சற்று நேரம் அசையாமல் அப்படியே கிடந்தான்.

தலையைத் தூக்கி அவளைப் பார்த்தவன்,

“என்ன சொன்னாய்…? நான் தொடுவது ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதுபோல இருக்கிறதா?” என்றவன், மறு கணம் அவளை விட்டு விலகி எழுந்து நின்றான்.

அவன் எழுந்ததுதான் தாமதம் அரக்கப் பரக்க, திறந்திருந்த தன் மேலாடையை இறுகப் பற்றித் தன் உடலை மறைத்தவாறு அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் கூனிக் குறுகிக் கிடக்க. சற்று நேரம் அப்படியே நின்றிருந்தான்.

பின் என்ன நினைத்தானோ, அதுவரை அழுத்தமாக ஒன்றோடு ஒன்று முட்டி நின்றிருந்த அவனுடைய உதடுகள் சட்டென்று மலர்ந்தன. பின் இவளை லட்சியம் செய்யாமல் நிதானமாக நிகழ் பதிவுக் கருவியை நோக்கிச் சென்று அதை உயிர்ப்பித்துப் பார்த்தான்.

திருப்தி கொண்டவனாக அதை மூடியவன் திரும்பி அழுதுகொண்டிருந்தவளை ஏறிட்டு,

“உனக்கும் எனக்கும் விரைவில் திருமணம்…” என்றான் புன்னகை மாறாமல்

What’s your Reaction?
+1
23
+1
7
+1
4
+1
3
+1
4
+1
1

Related Post

One thought on “முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-8”
  1. எதே கண்ணாலம் மூச்சுக்கப் போறானா?.என்னாங்கடா நடக்குது 🙄🙄🙄🙄🙄.
    புடிக்கலை புடிக்கலை எனக்கு இந்த டிசிசன் 😲😲😲😲😲.
    🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 அதென்ன டா வலிமையானவங்க எல்லாம் வலிமை கம்மியா இருக்கறவங்களை துன்புறுத்தி பாக்கறது ன்னு கேக்கறேன் 🤨 🤨 🤨 🤨 🤨.
    சின்ன வயசுல தட்டாம்பூச்சிய புடிச்சு வால்ல நூலைக் கட்டி பறக்கவுடாம பண்ணறது.
    வேலில போற ஒடக்கானை கல்லைக் கொண்டு இட்டு பறக்கடிச்சு சாவடிக்கிறது.
    இதைய சிறு வயசுல செஞ்ச ஒரு முனிவரை பெரியவர் ஆனதுக்கு அப்பறம்செய்யாத
    தப்புக்கு தண்டனை கழுமரத்துல உக்கார வச்சு தண்டனை குடுத்தாங்கலாம். முனிவரோட உயிர் போகாமையே இருந்துச்சாம்.
    அதுக்கு ரீசன் கேட்டதுக்கு எமதர்மன் ராசாவே நேர்ல வந்து தட்டாம்பூச்சியோட வாலோட பின் பாகத்துல குச்சிய வச்சு வெளையான்டதுக்கு உண்டான தண்டனை ன்னு சொன்னாராம்.
    அதனால பொண்ணுங்களை கிள்ளூகிரையா நெனைச்சு காரியம் ஆத்தறவனுங்களுக்கு தண்டனை கடுமையு கிடைக்கும் 😎😎😎😎😎😎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!