(22)
அரவனின் உதடுகள் அவளுடைய உதடுகளை அணைத்துக்கொண்டதுதான் தாமதம் இதங்கனையின் கால்கள் தம் வலுவை முற்றாக இழந்து துவண்டுபோயின. அதைப் புரிந்துகொண்டவன் போலக் கரங்களால் அவள் இடையை இறுகப் பற்றித் தன்னோடு அணைத்துக்கொண்டான் அவன்.
என்ன நடக்கிறது? ஏது நடக்கிறது? அவன் என்ன செய்கிறான்? அவள் என்ன செய்கிறாள்? புரியாது குழம்பி நின்றவளுக்குப் புத்தி முழுதாகத் தன் செயற்பாட்டை இழந்ததுபோலத் தோன்றியது. அவளுடைய அந்தப் பலவீனம், அந்த மயக்கம் அவனுக்கு ஏதுவாகிற்றோ? மறு கணம் அவனுடைய கரங்கள் அவள் அணிந்திருந்த சுவட்டரின் ஊடாகப் பயணப்பட்டு அந்த மெல்லியளாளின் தேகத்தினை அறியத் தொடங்கின. அந்தக் கரங்கள் செய்த மாயாஜாலத்தில் அதுவரை உறங்கிக்கிடந்த புத்தி சட்டென்று விழித்துக் கொண்டது.
நடக்கும் விபரீதம் புரியப் பதறியவளாக, அவனிடமிருந்து திமிற முயன்றாள்.
எங்கே திமிறி விடுவிப்பது? அதுதான் அவன் அவளை அசையவிடாமல் இறுகப் பற்றியிருந்தானே. எவ்வளவுதான் அவனிடம் விடுபடப் போராடியும் முடியாமல், இறுதியாக முழங்காலால் அவனுடைய ஆண்மையில் ஓங்கி உதைய, அதை எதிர்பாராதவன், அவள் உதைத்த வேகத்தில் வலியெடுக்க, மெல்லிய முனங்கலோடு தன் பிடியைச் சற்றுத் தளர்த்த, அது போதுமானதாக இருந்தது இதங்கனைக்கு. சட்டென்று அவனைத் தள்ளி விட்டுத் துள்ளிப் பாய்ந்து ஓடத் தொடங்கிய அடுத்த கணம் தரையில் குப்புற விழுந்திருந்தாள்.
அவள் விலகும்போதே அவளுடைய கால்களைத் தட்டிவிட்டிருந்தான் அரவன்.
விழுந்தவள், வலியில் முனங்கியவாறு எழ முயல, இவனோ, வலியும், அவமானமும் ஒன்றாய்க் கலந்ததன் விளைவாகச் சிவந்த முகத்தோடு, சீற்றம் கொப்பளிக்கத் திரும்பி இதங்கனையை வெறித்தான். இன்னும் வலி மட்டுப்படவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளே இழுத்த மூச்சு வெளிவராமல் சண்டித்தனம் செய்துகொண்டிருந்தது. சற்று நேரத்தில் தன்னைச் சமப்படுத்தியவனாக எழுந்தவனிடத்தே, இப்போது வலிக்குப் பதிலாக ஆக்ரோஷம் பெருக்கெடுத்து ஓடியது.
அதன் விளைவு, தன் உயரத்திற்கேற்ப நிமிர்ந்து நின்றவன், விழிகளில் தீப்பொறி பறக்க, இதங்கனையை நெருங்கத் தொடங்கினான்.
அவனுடைய முகத்தில் கொந்தளித்த சீற்றத்தையும் அவன் வேகத்தையும் கண்டு அஞ்சியவள், எழுந்து ஓட எத்தனிக்க, கண்ணிமைக்கும் நொடியில், மலைப்பாம்பு தன் இரையை வளைத்துப் பிடிப்பது போல அவளைக் கையிடுக்கில் வளைத்துப் பிடித்திருந்தான் அரவன்.
தன் கை வளைவிலிருந்தவளைக் கைவிடாமல் தனக்கு முன்பாகக் கொண்டுவர, இதங்கனையோ அவனிடமிருந்து திமிறிப் பார்த்தாள். அந்த இராட்சதன் அவளுடைய திமிறலை நிதானமாக ரசித்துப் பார்த்தான். அந்த நிதானப் பார்வையில்தான் எத்தனை ஆங்காரம். எத்தனை கொதிப்பு. அதைக் கண்டவளின் இதயம் கிலியில் சில்லிட்டுப் போனது. விழிகளில் கண்ணீர் கோர்க்க,
“லெட்… லெட் மி கோ….” என்றாள் திக்கித் திணறி. இப்போதும் அவனுடைய முகத்தில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் சீற்றம் மட்டும் அந்த முகத்திலிருந்து இம்மியும் குறையவில்லை. மாறாக, ஒற்றைக் கரத்தால், அவளுடைய தலைமுடியை இறுகப் பற்றிப் பின்னால் சரித்தவன், அடுத்து ஒரு காலால் அவளுடைய ஒற்றைக் காலைத் தட்டிவிட, சட்டென்று மடிந்தவளை, மறுகணம் தரை சாய்த்தான் அரவன்.
அந்த நேரத்திலும் தன் காலால் அவனை உதைய முயல, இப்போது அவனுடைய ஒற்றைக் கால், அவளுடைய கால்களை அசையவிடாது சுற்றி வளைத்துக் கிடுக்குப் பிடி போட்டது. திமிற முயன்றவள் முடியாமல் பீதியுடன் அவனைப் பார்க்க, அவனோ, ஆவேசத்தோடு மீண்டும் அவள் இதழ்களை மிகப் பலமாகப் பற்றிக்கொண்டான்.
அவனுடைய ஆவேச வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாதவளாகத் திணறிய இதங்கனையின் நா, இரத்தத்தைச் சுவைக்க, மீண்டும் பலமாகத் தன்னை விடுவிக்க முயன்றாள். கரங்களால் அவனை அடித்துத் தள்ள முயன்றாள். அந்தோ பரிதாபம், மறு கணம், அவளுடைய கரங்கள் அவன் பலமான கரங்களுக்குள் சிறைப்பட்டுக் கொண்டன. என்னதான் திமிறியும் அவளால் இம்மியும் அசைய முடியவில்லை. பொதாததற்கு அவனுடைய கடிய தேகம், அவள் தேகத்தை மிக அதிகமாகவே அழுத்திக்கொண்டிருந்தது. அப்படியிருக்கும் போது, எப்படித்தான் அவள் தப்பிப்பது?
புலி தன் இரையைப் பற்றிக்கொள்ளும்போது, குறிப்பிட்ட நேரம் வரை சிக்கிக்கொண்ட இரை துடிக்கும். தவிக்கும். தன்னை விடுவிக்க எல்லா முயற்சியும் செய்யும். ஒரு கட்டத்தில் களைத்துப்போய் வலியைத் தாங்கி அமைதி காக்கும். இதங்கனையின் நிலையும் அதுவாகத்தான் இருந்தது. இங்கே அவனிடமிருந்து விடுபடத் துடித்தவள், ஒரு கட்டத்தில் ஓய்ந்துதான் போனாள்.
அருகே கொழுந்துவிட்டெரியும் நெருப்பின் ஆத்திரத்தோடு அரவனின் முத்தத்தின் வேகம் இருக்க, இதங்கனைதான் அந்த வெப்பத்தில் எரியத் தொடங்கினாள்.
எப்படித் திமிறினாலும் அவன் பிடியிலிருந்து விடுபட முடியாது என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தபின், முயன்று பயனில்லை என்று புரிந்தது. அது மட்டுமில்லை, அவளுடைய கரங்களைப் பற்றியிருந்த அவன் கரம், இப்போது அவற்றை விடுவித்து, மெல்ல மெல்ல அவள் தேகத்தில் சித்திரம் வரையத் தொடங்க, அந்த அவல நிலையிலும், அவன் வருடல்கள் இதுவரை அறியாத தெரியாத புதுவித செய்திகளை அவளுக்குக் கற்பிக்கத் தொடங்கின. அதன் விளைவு மெல்ல மெல்ல அவளுடைய திமிறல் அடங்கியது.
உதடுகளும் உதடுகளும் சந்தித்தால் அடிவயிறு சுண்டி இழுக்குமா என்ன? இதயத்தின் வேகம் கூடுமா என்ன? தேகம் சிலிர்க்குமா என்ன? இது தவறு முயற்சி செய்து விலகு என்று சொல்லும் அதே புத்தி, இது என்ன புதுமை, அவன் வருடும்போது இதமாய் இருக்கிறதே… போனால் போகட்டும் இசைந்துகொடு என்று சொன்னது. இதில் எது சொல்வதைக் கேட்பாள். இறுதியில் கொஞ்சம் கொஞ்சமாக இளகிப் போக, அரவனும் மெல்ல மெல்லத் தன் கோபம் தளர்த்தி, அவளோடு ஒன்றிப் போக முயன்றான். .
மெல்ல மெல்ல அவனுக்கும் புத்தி மங்கிப்போகத் தொடங்கியது. அந்த விநாடி அவளும் அவனும் மட்டும்தான் அந்த உலகத்தில் ஜனித்திருந்தனர். அருவமாகி உருவகமாகி அருவுருவமாகி ஒரு வித மாயையில் மொத்தமாகத் தொலைந்து போனவனாய் அவள் பெண்மை கொடுத்த தகிப்பில் இப்போது மெதுவாக அவளுடைய உதடுகளை விடுவித்து நிமிர்ந்தவன் ஒரு வித வேண்டுதலோடு அவளைப் பார்த்தான்.
அவளோ வெறுப்பை மீறிய அதிர்ச்சியோடு, அந்த அதிர்ச்சியையும் மீறிய, ஆச்சரியத்தோடு, அதையும் மீறிய வியப்போடு அதையும் தாண்டிய எதிர்பார்ப்போடு அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த விழிகளின் மொழியைக் கண்டுகொண்ட அரவனுக்கு அதற்கு மேல் தாமதிக்க முடியவில்லை.
முதலில் தண்டனையாய் ஆத்திரம் பொங்க முத்தத்தோடு அவளை விடுவிக்கத்தான் நினைத்தான், ஆனால், முதன் முதலில் போதை உட்கொண்டதும் புத்தி மேலும் மேலும் வேண்டும் என்று சண்டித்தனம் செய்யுமே. அது போல முதன் முதலில் பெண்மையை உணர்ந்தவனுக்கு முழுதாய் அவள் வேண்டும் என்று தேகம் பேயாட்டம் ஆடியது. அவளுடைய அருகாமை விலக்க முடியாத போதை. ஆழ் உயிர் தூக்கம். உயிர்காக்கும் பிராணவாயு. உயிரை உருக்கும் காமம். அதற்கு மேல் எதைப்பற்றியும் யோசிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை. மொத்தமாய் தொலைந்தவனாக, அவளுடைய தேகத்தில் தாபத்துடன் சடுகுடு விளையாடத் தொடங்கினான்.
இவளுக்கோ முதன் முறையாக எல்லை மீறும் அவன் கரங்கள் கொடுக்கும் தகிப்புக்கு எப்படிப் பிரதிபலிப்பதென்று சுத்தமாகத் தெரியவில்லை. திமிறுவதா, விட்டுக் கொடுப்பதா, தவிர்ப்பதா, வெறுப்பதா? என்ன செய்வது… ஏது செய்வது? ஆனால் அந்தத் தொடுகை ஒரு விதத் தேடலைக் கற்றுக் கொடுக்கிறதே… காற்று வீசும் திசைக்கு அசையும் நாணல் போல அவன் செல்லும் திசைக்கு அசையும் வேகம் பிறக்கிறதே… அது ஏன்…? புரியாத தவிப்புடன் அவன் வேகத்தைத் தடுக்கும் சக்தியற்றவளாக விழிகளை மூடிய இதங்கனையின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் வடிந்து செல்ல, அதைத் தன் உதடுகளால் ஒற்றி எடுத்தான் அரவன்,
காமம்தான் எத்தனை கொடியது. அது இடம்பொருள் ஏவல் என்றில்லாமல் எங்கிருந்தாலும் வந்து தொலைத்து விடுகிறதே. அங்கே ஒருவனைத் திருமணம் செய்யச் சம்மதித்து விட்டு இங்கே…’ சடார் என்று தன் விழிகளைத் திறந்தாள் இதங்கனை.
கடவுளே… என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறாள். அவளால் எப்படி ஒரு அன்னியனின் அணைப்பில் மயங்கிக் கிடக்க முடிந்தது? இதுவரை ஆணுடைய கரங்கள் என்ன செய்யும் என்பதை அறியாததால்தான் குழம்பிப் போனாளோ…? இல்லை இவன் என்பதால் மயங்கிக் கிடந்தாளா…? ஏன் இவன் என்றால் புத்தி மங்கிப் போகிறது…? சீ… இது எத்தனை அசிங்கம்? அதுவரை மயங்கிக் கிடந்த புத்தி சடார் என்று விழிக்கப் அவனைத் தள்ள முயன்றாள். அதுவரை சற்று இளகியிருந்தவன், இதங்கனை திமிறியதும், மீண்டும் உடும்பாய் அவளைப் பற்றிக்கொண்டான். திமிறிப் பார்த்தாள். ம்கூம்… அவளால் கொஞ்சம் கூட அசைய முடியவில்லை.
“லெட் மி கோ…! நோ…! விடு என்னை…” விலக முயன்றாள். அவனுடைய உடும்புப் பிடியில் எங்கனம் அசைவது? மயங்கிக் கிடந்த தன் முட்டாள்தனத்தின் மீது ஆத்திரம் வந்தது.
இப்போது என்ன செய்வது. எப்படி இதிலிருந்து தப்பிப்பது. அவன் கரங்களும் உதடுகளும் சொல்லும் செய்தியில் அவர்கள் தாண்ட இருக்கும் எல்லை அதிக தொலைவில் இல்லை என்பது புரிந்து போக, அழுகையும் கோபமும் ஒன்றாய் எழுந்தது. கூடவே எப்படித் தப்புவது என்கிற கேள்வியும் எழுந்தது. புரியாமல் திணறியவாறு விழிகளைச் சுழற்றியவளுக்குச் சற்றுத் தள்ளியிருந்த இரும்புக் கம்பியொன்று கண்ணில் பட்டது.
சிரமப்பட்டு அவனுடைய கருத்தைக் கவராத வகையில், தன் ஒற்றைக் கரத்தை நீட்டி அதை எடுக்க முயன்றாள். கைக்கு வர மறுத்தது அந்தக் கம்பி.
இன்னும் கொஞ்சம், கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும் போதும், கம்பியைப் பற்றிக் கொள்வாள். மீண்டும் முயன்றாள். கரம் இன்னும் கொஞ்சம் நீண்டது. ஆனால் அவன் உடலின் பலத்தால் அது மிகக் கடினமாகவே இருந்தது.
எப்படி அதைக் கைப்பற்றுவது. ஏதேதோ யோசித்தாள். இப்போது அந்த அரவனின் உதடுகள் அவளுடைய கழுத்து வளைவில் சிக்கியிருக்க, அடுத்த கணம், அதை வரவேற்பது போல அவனை அணைத்துக்கொண்டாள் இதங்கனை.
அதுவரை தன்னை மறந்திருந்த அரவன் சுயத்திற்கு வந்தவனாக அவனுடைய உடல் ஒரு கணம் இறுகியது.
அப்போதுதான் அவனுக்கும் தான் என்ன காரியம் செய்கிறோம் என்பது உறுத்தியதோ, மெதுவாக அவள் கழுத்து வளைவை விட்டு நிமிர்ந்தவன், அவளுடைய முகத்தைப் பரிசீலித்தான்.
கவர்ச்சியாக உதடுகள் அவன் அணைப்பையும் முத்தத்தையும் விரும்பியன போல மலர்ந்து விரிந்திருக்க, அதைக் கண்டவன், வியப்போடு அவளுடைய விழிகளைப் பார்க்க முயன்றான். அவை மூடியிருந்தன.
அந்த விழிகளிலும் அழைப்பிருக்கிறதா என்பதைப் பார்க்க விரும்பியவன் போல,
“ஓப்பன் யுவர் ஐஸ்…” என்றான் கிறக்கமாக. விழிகளைத் திறந்தால் அவளுடைய எண்ணத்தை அவன் கண்டுகொள்வானோ அச்சம் பிறக்க, அவனுடைய கழுத்தை நோக்கிக் கரங்களை எடுத்துச் சென்று தன்னை நோக்கி இழுக்க அவள் இழுத்த வேகத்தில் அவளுடைய உதடுகளை நோக்கிக் குனிந்தான் அரவன்.
காமம் பிறந்தால் புத்தியும் செயலிழந்து போகும் என்பது எத்தனை உண்மை. அவளுக்குத் தண்டனை கொடுக்க விளைந்தவனுக்கு, அதுவே தண்டனையாகும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டானோ?
மீண்டும் செழித்த உதடுகளை நோக்கி அவன் குனிய, இப்போது அவன் பிடி சற்று இளகியிருந்தது. அந்த இளக்கம் போதுமானதாக இருந்தது இதங்கனைக்கு. சட்டென்று அத்தனை பலத்தையும் கூட்டி அவனை உதறித் தள்ளி விட்டு எழும்போதே அந்தக் கம்பியை இழுத்து எடுத்துக்கொண்டு எழுந்தவள் அவன் சுதாரித்து எழ முன்பே, சற்றும் யோசிக்காமல் ஓங்கி அவன் மண்டையில் பலமாகத் தாக்கினாள் இதங்கனை.
எதிர்பாராத அந்தத் தாக்குதலில், பொறிபறக்கத் தலையைப் பற்றியவாறு குப்புறச் சரிந்தவனின் பின் தலையிலும் அத்தனை பலத்தையும் மொத்தமாகச் சேர்த்து மிகப் பலமாக இன்னொரு அடி கொடுக்க, நங் என்கிற சத்தத்தோடு, அவனுடைய பின் மண்டை பிளந்தது.
அவள் அடித்த அடியில், ஹக், என்கிற சத்தத்தோடுத் தலையைப் பற்றியவாறு கண்கள் மின்ன, மல்லாந்து சரிந்தான் அரவன். இத்தனைக்கும் அவனிடமிருந்து சின்ன முனங்கல் கூட வரவில்லை. ஏன் வலிக்குண்டான கசங்கல் கூட அவன் முகத்தில் இல்லை. மாறாக விழிகள் திறந்திருந்தன. பின் மூடின, திறந்தன… அவளை முயன்ற அளவு தெளிவாகப் பார்க்க முயன்றன. எதையோ சொல்வதற்கு வாய் திறந்தான்… வார்த்தைகள் வராது தடுமாறினான். இரத்தம் வேறு தரையில் ஊர்ந்து பரவத் தொடங்கியது. அதைக் கண்ட இதங்கனைக்கு அடிவயிற்றைக் கலக்கியது.
சத்தியமாக இத்தனை வேகம் தன்னிடமிருந்து வரும் என்று இவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அதுவும் அவன் தலையிலிருந்து பொலபொலவென்று கொட்டும் இரத்தத்தைக் கண்டு ஒரு கணம் பதறித்தான் போனாள்.
இதுவரை எந்த உயிருக்கும் எந்தச் சேதாரமும் அவள் செய்ததில்லை. முதன் முறையாக இப்படிப் பலமாக இரத்தம் வரும் வரை அடித்ததையிட்டுக் கலங்கித்தான் போனாள்.
ஆனால் அவனுக்குப் பரிதாபம் பார்த்தால் அவள் சிக்கவேண்டியதுதான். அவனுடைய அந்தத் துடிப்பையும் மீறித் தான் தப்பிக்கவேண்டியதன் அவசியமும் புரிய, அங்கும் இங்கும் பார்த்தாள். மேசையில் அவன் எடுத்து வந்த பொருட்கள் கிடக்க, உடனே கரத்திலிருந்த கம்பியைத் தரையில் போட்டு விட்டு அந்த மேசையை நோக்கி ஓடினாள்.
அரவன் கழற்றிப் போட்டிருந்த ரெய்ன் கோட்டை இழுத்து அணிந்தவள், அந்தப் பையைக் கிண்டிப் பார்த்தாள். டோச் லைட் இருந்தது. அதையும் எடுத்துக்கொண்டு, அரவனை நோக்கிப் பாய்ந்தாள்.
கிட்டத்தட்ட மயக்க நிலையிலிருந்தவனின் பான்ட் பாக்கட்டைத் தட்டிப் பார்த்தாள். கைப்பேசி சிக்கிக் கொண்டது. அதை இழுத்து எடுத்துக் கொண்டவள், முகம் மலர, எழுந்தவாறு வெளியே ஓடத் தொடங்கியவளுக்கு ஏனோ மெல்லிய தயக்கம் ஏற்பட்டது. தன்னை மறந்து திரும்பித் தரையில் கிடந்தவனைப் பார்த்தாள். அவன் கிடந்த நிலையைப் பார்த்ததும் ஓரளவு நிம்மதி எழுந்தது. நிச்சயமாக அவனால் இனி அவளைப் பிடிக்க முடியாது என்கிற உறுதியுடன், வெளியே ஓடத் தொடங்கினாள்.
அவள் ஓடியது அவனுக்கு மங்கிய விழிகளுக்குத் தெரிந்ததோ, இரத்தம் தோய்ந்த கரத்தைத் தூக்கி அவளைத் தடுக்க முயன்றவனாக,
“வேண்டாம் போகாதே… நில்… நீ போனால் உனக்கு ஆபத்து…” என்று அவன் திக்கித் திணறி முனங்க, அந்த முனங்கல் இவளுடைய காதில் திவ்வியமாக விழத் திரும்பி அவனை முறைத்தவள்,
“உன்னோடு இருப்பதை விடவா?” என்றவள்… மறுகணம் அங்கிருந்து மாயமானாள்.
(23)
அடுத்து காரியங்கள் மிக வேகமாக நடந்தேறின. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் அந்த அரவனின் எல்லையைத் தாண்டி வெளியே வந்த உடனேயே காவல்துறையோடு தொடர்பு கொள்ள, மகிந்தனே அவளை ஏற்றிச் செல்ல காவல்துறைக்குரிய உலங்கு வானூர்தியில் வந்து சேர்ந்தான்.
அங்கே இதங்கனையை யாருமற்றத் தனிமையான இடத்தில் கண்டதும் ஓடிப்போய் அணைத்து உச்சியில் உதடுகளைப் பொருத்தி,
“ஓ… மை பேபி… ஐ ஆம் சோ சாரி…” என்று பல முறை மன்னிப்பு வேண்ட இவளும் அவனை இறுக அணைத்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். பின் அவனிடம் தன் கையிலிருந்த கைப்பேசியை நீட்டி,
“என்னால் முடிந்தது… அரவனின் கைப்பேசி…” என்றதும் மகிந்தனின் முகம் மலர்ந்தது. மீண்டும் இதங்கனையை அணைத்து முத்தமிட்டவன்,
“நன்றி… நன்றி இதங்கனை… இது போதும்… இதை வைத்தே ஆளியுரவனைப் பற்றி அறிந்துவிடலாம்…” என்றவன் அவளைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து உலங்கு வானூர்தியில் ஏற்றி விட்டுக் கையோடு குளிருக்கு இதமாகப் போர்வையையும் யாரோ நீட்ட வாங்கிப் போர்த்திவிட்டான். அடிபட்ட காயங்களுக்கு முதலுதவி செய்யப்பட்டது. தொடர்ந்து அவளை ஏற்றிக்கொண்டு வானூர்தி மேலே செல்லத் தொடங்க அதுவரை அமைதியாக இருந்த இதங்கனை, தனக்கு அருகில் அமர்ந்திருந்த மகிந்தனைப் பார்த்து,
“மகிந்தன்… எனக்கு ஒரு விடயம் உறுத்திக்கொண்டே இருக்கிறது…” என்றாள். இவனோ என்ன என்பது போலப் பார்க்க,
“நீ எனக்கு கொடுத்த தகவலின் படி, அரவன் மிருகங்களின் தோல்களை ஏற்றுமதி செய்கிறான் இல்லையா…?” என்று கேட்க. இவன் ஆம் என்று தலையை ஆட்டினான்.
“ஆனால் இந்த அரவனுக்கு மிருக விதை பிடிக்காது… தவிரச் சுத்தமாக மாமிசம் உண்ண மாட்டான்..” என்றாள் யோசனையோடு. மகிந்தனோ, நம்பாமல் அவளைப் பார்த்து,
“ஆர் யு ஷூவர்…?” என்றான்.
“ஐ ஆம் டாம் ஷூர்… அவனிடம் விசாரித்தபோது அவனே சொன்னான்… இது என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது… அதுதான் உன்னிடம் சொன்னேன்… இது உனக்கு உதவுமா இல்லையா என்று தெரியவில்லை… ஆனால் சொல்லவேண்டும் என்று தோன்றியது…” என்றவள் அதற்குப் பிறகு பேரமைதி காத்தாள். அடுத்து டொரன்டோ அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
அதுவரை மகிந்தனின் அணைப்பில் கிடந்தவளுக்கு மனம் என்னவோ அந்த அரவனிடம்தான் நிலைத்திருந்தது. அவனைக் கம்பியால் வேறு அடித்து விட்டு வந்துவிட்டோமே… இரத்த வெள்ளத்தில் கிடந்தவன் உயிர் தப்பினானா செத்துப் போனானா… கலங்கியவளுக்குக் அவனுடைய இதழ் முத்தமும் நினைவுக்கு வந்து பெரிதும் அலைக்கழித்தது. கூடவே அவள் தேகத்தில் ஊர்ந்த அவன் கரங்களும்.
என்னதான் மறுத்தாலும் வெறுத்தாலும் உண்மை மாறிவிடப்போவதில்லையே. ஆம் அவள் ரசித்தாள். வெட்கமற்று அந்த அரவனின் இதழ் யுத்தத்தை ரசித்தாள். கரங்கள் தீண்டியதில் மயங்கினாள். ஒருத்தனை விரும்பிக்கொண்டு, இன்னொருத்தனின் இதழ் முத்தத்தை ரசிக்க முடியுமா என்ன? அவளால் மட்டும் எப்படி ரசிக்க முடிந்தது. அதுவும் பல முறை மகிந்தன் அவளை முத்தமிட வந்த போதெல்லாம் சட்டென்று விலகிக் கொள்பவள் எப்படி அன்னியன் ஒருவனின் முத்தத்தில் ஒன்றிப்போனாள்? ஒரு வேளை முதன் முறை என்பதால் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல்…! இல்லையே…! அதிர்ச்சியாக இருந்தாலும் மறு கணம் சுதாரித்திருப்பாளே….! இது… ரசித்தாள்…! அந்த முத்தத்தை ஏற்றுக் கொண்டாள்… கடவுளே…! அவளுக்கு என்னவாயிற்று? மகிந்தனின் கரங்கள் தேகத்தில் பட்டாலே எச்சரிக்கும் உள்ளம், அந்த அரவன் நெருங்கியதும் ஏன் எச்சரிக்கவில்லை? இது தவறு என்று சொல்லவில்லை? அதற்கான காரணம் என்ன? அது கூடச் சுத்தமாகப் புரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அவனை அடித்து விட்டு வந்தது வேறு மனத்தைப் பிசைந்துகொண்டிருந்தது.
இத்தனைக்கும் நடந்ததை அவளிடம் மகிந்தன் விசாரித்தபோது, ஒரு இயந்திரம் போல, அத்தனையையும் ஒப்புவித்தாலும், புத்தியும் சிந்தனையும் அரவனைச் சுற்றியே வட்டமடித்துக்கொண்டிருந்தது.
அவனுடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து விளைந்திருக்குமோ என்று ஏன் தவிக்கிறேன்… இதுவரை யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதவள் என்பதால், ஒருவனை அடித்தது மனதை ரணப்படுத்துகிறதோ? தெரியவில்லை… ஆனால் நெஞ்சம் பிசைந்தது மட்டும் நிஜம்
அவள் சொன்னதற்கமைய, அவள் குறிப்பிட்ட கைவிடப்பட்ட அந்தப் பாடசாலைக்கு காவல்துறை சென்றது. ஆனால் திரும்பி வரும் போது, வெற்றுக் கையோடுதான் வந்தது. அங்கே மருந்துக்கும் ஆட்கள் இருக்கவில்லை. இவ்வளவு ஏன்? அங்கே ஆட்கள் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை. அதைக் கேட்டு இதங்கனையே குழம்பிப் போனாள். கூடவே ஒரு வித நிம்மதியும் எழுந்தது.
அந்த நிம்மதி ஏன் வரவேண்டும் என்பதற்கான புரிதலும் அவளிடமில்லை.
இதற்கிடையில் அவள் கூறிய தகவல்களையும், அவள் கொடுத்த கைப்பேசியையும் வைத்து விபரங்களைக் கண்டறிய காவல்துறை படாத பாடு பதினெட்டும் பட்டுக்கொண்டிருந்த அதே வேளை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இதங்கனைக்கு ஒரு நாள் கழித்து மறு நாள் சத்திய சோதனை ஆரம்பமாகத் தொடங்கியது.
யார் யாரோ வந்தார்கள். கேள்விகளுக்கு மேல் கேள்வி கேட்டுக் குடைந்தார்கள். கிட்டத்தட்ட மிரட்டலாகக் கூட கேள்விகள் வந்தன. சரியான பதில் வரவில்லை என்றால், அவளைக் கைதுசெய்யவேண்டி வரும் என்று இன்முகத்துடனேயே பூச்சாண்டி காட்டினார்கள். இப்போது உடல் வேதனையோடு உளவேதனையும் சேர்ந்து அவளைப் படாத பாடு படுத்தியது. ஒரு கட்டத்தில் ‘ஏன்டா தப்பி வந்தோம்’ என்றுகூட எண்ணத் தொடங்கிவிட்டாள். அந்தளவுக்கு அவளை உண்டு இல்லை என்றாக்கிவிட்டார்கள் காவல்துறையினர்.
ஒரு சாரார் அவளும் சேர்ந்து நாடகம் ஆடுவது போலச் சந்தேகத்தோடு விசாரித்தார்கள். இன்னொரு சாரார் அவள் சொல்வதைச் சரி என்று ஏற்று அந்தப் பக்கமாக நின்று விசாரித்தார்கள். இன்னொரு சாரார் இரண்டு பக்கமும் நின்று இவளிடம் கேள்வி கேட்டுக் குடந்தெடுத்தார்கள். உடல் வலி ஒரு பக்கம். அச்சம் ஒரு பக்கம். ஒருத்தனைக் காயப்படுத்தி விட்டு வந்தோமே என்கிற கலக்கம் இன்னொரு பக்கம். அவள் சொன்ன இடத்தில் யாருமே இல்லை என்பதைக் கேட்டு வந்த குழப்பம். இத்தனைக்கு மத்தியில் விசாரணை… அப்பப்பா. தலையைப் பிடுங்கி எங்காவது ஒரு பக்கம் வைத்துவிடமாட்டோமா என்று தோன்றிவிட்டது அவளுக்கு.
அதே நேரம், திருமணத்தைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு இப்படியான ஆபத்தான விளையாட்டில் இறங்கிய தன் மகளின் மீது பார்வதிக்குக் கடும் ஆத்திரம் பிறந்தது. அதுவும் மகிந்தனின் வேண்டுதலின் பெயரில்தான் செய்தாள் என்பதைத் தெரிந்துகொண்டபோது அவரால் தாளவே முடியவில்லை. வருங்காலக் கணவனே என்றாலும், பெற்றவர்களிடம் மறைத்துச் செல்லவேண்டியதன் அவசியம் என்ன என்கிற ஏமாற்றம் அவரைப் பாடாகப் படுத்தியது.
அவள் வன்கூவர் சென்ற அன்று இவர்களோடு பேசியவள்தான். தொடர்ந்து மூன்று நாட்கள் அவளிடமிருந்து எந்த சத்தமும் வராது போக அடிவயிற்றில் பயப்பந்து உருண்டு திரிய, மகிந்தனிடம் விசாரித்த போது, அவன் ஏதேதோ பசப்புக்கதைகள் சொன்னாலும் அதை நம்பப் பார்வதி ஒன்றும் முட்டாள் இல்லையே.
இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் அமைதியாக இருந்தவர் அதற்கு மேல் முடியாமல், மகிந்தனை ஒரு பிடி பிடிக்கத் தொடங்கியபோதுதான், காவல்துறையிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.
தன் மகள் எதற்கு வன்கூவர் போனாள் என்பது அதற்குப் பிறகுதான் எல்லோருக்கும் தெரிய வந்தது. கடைசியாகத் தன் மகளை அந்த நிலையில் பார்த்தபோது பார்வதிக்கு மகிந்தனின் மீது கண்மண் தெரியாத ஆத்திரம் எழுந்தது.
என்னதான் கட்டிக்கொள்ளப்போகும் மனைவியாக இருந்தாலும் இப்படியான ஒரு ஆபத்து விளையாட்டிற்கு அனுப்பி வைக்கலாமா. அதுவும் ஒரு கயவனைத் துப்பறிய அனுப்புவதென்றால், அவனுடைய காதலை உண்மையென்று எப்படி நம்புவது. மனைவியாக வர முதலே இத்தனை ஆபத்தான காரியத்தில் அனுப்பியிருக்கிறான் என்றால், திருமணமான பின் எதற்கெல்லாம் அனுப்பிவைப்பானோ. அதுவரை மகிந்தன் மீதிருந்த அத்தனை நம்பிக்கையும் மதிப்பும் துனிகொண்டு துடைத்து விட்டது போலானது பார்வதிக்கு. அதன் விளைவு மகிந்தனின் முகத்தைப் பார்த்துப் பேசுவதையே வெறுத்தார் அவர்.
அவர்களுக்கு இருப்பதோ ஒரு மகள். ஒரு மகன். என்னதான் கண்டிப்பான அன்னையாக இருந்தாலும், தன் குழந்தைகளுக்காக உயிரையே விட்டுவிடுவார். இதுவரை எந்தக் கசடுகளும் அவர்களை அண்ட பார்வதியும் விட்டதில்லை, இந்திரகுமாரும் அனுமதித்ததில்லை. அப்படியிருக்கையில் இத்தகைய பெரிய ஆபத்தில் அவர்களின் மகளைத் தள்ளிவிட்டானே அந்த மகிந்தன்.
இந்திரகுமாருக்கும் மகிந்தன் மீது கோபம் வரத்தான் செய்தது. அதே வேளை, தன் மகள் நாட்டின் நன்மைக்காக மகிந்தனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாள் என்பதை அறிந்த போது, மகள் மீது பெருமையும் எழுந்தது.
‘லோரா சீகோர்ட்’ சாக்லட் செய்து விற்பனை செய்த சாதாரண பெண்மணி. 1813 ஆம் ஆண்டில், கனடாவை அமரிக்க இராணுவம் கைப்பற்றப் போகும் சதியை இருவர் பேசுவதில் வைத்துக் கண்டுபிடித்து, தன் நாட்டைக் காப்பதற்காக, 32 கிலோமீட்டர் ஓட்டமும் நடையுமாகச் சென்று கனடிய இராணுவத்திடம் செய்தியைத் தெரிவித்து, அன்று அமெரிக்காவிடமிருந்து கனடாவைக் காத்துக் கொள்ள மூல காரணமாக இருந்த மகத்தான பெண்மணி. அந்தப் பெண்மணிக்குத் தன் மகள் சற்றும் குறைந்தவள் அல்ல என்கிற பெருமை ஒரு தந்தையாய் அவரை நிமிரச் செய்தது மட்டும் நிஜம்.
ஆனால் எத்தனை வலி வேதனைகளை மகள் சுமந்துகொண்டாள் என்பதை அறிந்த போது அவரால் தாள முடியவில்லை. அதுவும் உடல் முழுவதும் காயங்களோடு, காலில் குண்டுக் காயமும் சேரத் தன் மகள் கிடந்த கிடப்பைக் கண்டு பாதி உயிர் துரந்து விட்டார் இந்திரகுமார். ஆனாலும் தன் வேதனையில் உழன்றாமல், தன் மனைவியைத் தேற்றும் பொறுப்பும் அவரதானது.
“சரிடி… விடு… மாப்பிள்ளைக்காகத்தானே இவள் இந்தக் காரியத்தைச் செய்தாள்…” என்று சமாதானம் செய்ய முயல,
“போதும் நிறுத்துங்கள்…! மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை…! எவன்தான் தன் வருங்கால மனைவியை இப்படி ஒரு ஆபத்தான வேலையில் இறக்கத் துணிவான்? ஒரு சமூகவிரோதியைப் பற்றித் துப்பறிய இவள் போனாளாம்! அவன் கடத்திச் சென்றானாம்! இவள் தப்பி வந்தாளாம்…! யாராவது இந்தக் கதையைச் சொன்னால் நம்புவார்களா? கடவுளே…! கடத்திய இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால்…? ஐயோ…! என் மகளை யார் திருப்பிக் கொடுப்பார்கள்…?” என்றவர் உடைந்து அழத் தன் மனைவியை இழுத்து அணைத்துக்கொண்டார் இந்திரகுமார்.
“சரிமா… அழாதே.. அதுதான் நம் மகளுக்கு எதுவும் நடக்கவில்லையே…?” என்று மென்மையாகக் கூற,
“நடக்கவில்லைதான்… ஆனால் நடந்திருந்தால்…? அவள் கிடக்கும் நிலையைப் பார்த்தீர்கள் தானே…? உடலில் எங்கேதான் காயமில்லை…? சின்ன கத்திக் கீறு பட்டாலே தாங்க மாட்டாள்…! இத்தனை காயங்களோடு…!” என்று கலங்க, தன் மனைவியின் தோளை அணைத்துக்கொண்ட இந்திரகுமார்,
“நீ அவளுடைய காயங்களைத்தான் பார்க்கிறாய் பார்வதி. நான் அவளுடைய முயற்சியையும், திடத்தையும், துணிச்சலையும், கண்டு வியக்கிறேன்! யோசித்துப் பார், நாங்கள் அந்த இடத்திலிருந்திருந்தால் என்ன செய்திருப்போம்? உயிருக்குப் பயந்து ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதிருப்போம். நம்மை விடுவானா மாட்டானா என்று கலங்கி அச்சத்திலேயே செத்திருப்போம். ஆனால், என் மகள், எதைக் கண்டும் பயப்படாமல் தப்புவதே குறியாக இருந்து அந்தக் கயவர்களிடமிருந்து தப்பி வந்திருக்கிறாளே… சத்தியமாகச் சொல்கிறேன்… என் மகளின் மன உறுதி யாருக்கும் வராது பாரு… அதை நினைத்துப் பெருமையாகத்தான் இருக்கிறது. எந்த சந்தர்ப்பத்திலும் என் மகள் துவண்டு போக மாட்டாள் என்கிற உறுதியே எனக்கு வந்துவிட்டது” என்று அவர் நெஞ்சை நிமிர்த்திக் கூற, எரிச்சலுடன் தன் கணவனை ஏறிட்டார் பார்வதி.
“போதும் நிறுத்துங்கள் இந்தர்! நானே அவள் நிலையை நினைத்துப் பயந்துகொண்டிருக்கிறேன்! இப்போது அவள் பெருமை தேவையா?” என்று சிடுசிடுத்து விட்டு,
“இந்தர்…! இந்தத் திருமணம் இப்போதைக்கு வேண்டாமே…! நிறுத்திவிடலாமா…?” என்றார் கலக்கமாக.
“இது என்ன முட்டாள்தனமான பேச்சு பாரு…!” கோபமாக வந்தது இந்திரகுமாரிடமிருந்து.
“அம்மா சொல்வதும் சரிதான்பா…! இந்தத் திருமணம் வேண்டாம்…!” என்றவாறு வந்தான் பாலேந்திரன். அவன் முகமும் கசங்கிப்போய் இருந்தது. இதுவரை தன் சகோதரியை இப்படிப் பார்த்து அறியாதவன். காயங்களோடு பார்த்தபோது துடித்துத்தான் போனான்.
என்னதான் சகோதரியோடு மல்லுக்கு நின்றாலும், அவள் மீது மிகுந்த பாசம் உள்ளவனாயிற்றே. அவளைப் போய் அந்த மகிந்தன் இத்தகைய காரியத்திற்கு அனுப்பி வைத்துவிட்டானே. நினைக்க நினைக்க அவனுக்குத் தாளவில்லை.
இந்த நிலையில் அவனும் தாய்க்கு ஒத்தூதிக்கொண்டு வர இந்திரகுமாருக்கு கோபம் வந்துவிட்டது.
“உன் அம்மாதான் புரியாமல் பேசுகிறாள் என்றால் நீயுமா? எல்லா காரியங்களும் செய்தாயிற்று. திருமணத்திற்கு ஒரு மாதம் கூட இல்லை. இந்த நிலையில் திருமணத்தை நிறுத்திவிடுவோம் என்று சுலபமாகவே சொல்கிறீர்களே? இது நடக்கும் காரியமா? எதற்காக நிறுத்தினோம் என்று கேட்டால் என்ன பதிலைச் சொல்வது? உறவுகளுக்கு என்ன? பல்லில் நாக்குப் படாமல் கண்டதையும் பேசுவார்கள்! கடத்திச் சென்றவன் தப்பாக நடந்துகொண்டான். அதனால்தான் இந்தத் திருமணத்தை நிறுத்திவிட்டார்கள் என்று கூசாமல் பேசுவார்கள். பாதிக்கப்படுவது நம் மகள்தானே? தவிர இது அவள் விரும்பிய திருமணம்… அதை நிறுத்தும் சக்தி எங்களுக்கு ஏது?” என்று கடிய, பாலேந்திரன் கோபத்தோடு தந்தையைப் பார்த்து,
“அவளுக்கு எப்போதுதான் புத்தி இருந்திருக்கிறது சரியானதைத் தேர்வெடுக்க…” என்றான் சுள்ளென்று. இந்திரகுமாரோ கோபத்தோடு தன் மகனைப் பார்த்து முறைக்க,
“முறைக்காதீர்கள் அப்பா…! நான் உண்மையைத்தான் சொல்கிறேன்… நாம் இருக்கும் போதே அவளை இந்த நிலைக்குத் தள்ளிய மகிந்தன், திருமணமான பின் அக்காவை வைத்து என்ன வேலை வாங்குவாரோ…? யோசித்துப் பாருங்கள்…! இப்போதே நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை…! திருமணமான பின் ஆணி கூட பிடுங்க முடியாது.” என்று எரிச்சலோடு கூறும்போதே அவனுடைய கண்களும் சற்றுக் கலங்கித்தான் போனது.. பார்வதியும் தன் கணவனின் அணைப்பிலிருந்து விலகி,
“பாலு சொல்வதும் சரிதான் இந்தர்…! குறைந்தது இந்தத் திருமணத்தை தள்ளியாவது வைக்கலாமே…?” என்றார் பரிதவிப்போடு. தன் மனைவியை ஏறிட்ட இந்திரகுமார்,
“பாரு…! நீ அஞ்ச அவசியமேயில்லை. மகிந்தன் ஒன்றும் தன் சுயநலத்திற்காக அனுப்பவில்லையே? இந்த நாட்டின் பாதுகாப்பிற்காகத்தானே நம் மகளிடம் உதவி கேட்டிருக்கிறான். இதங்கனையும் அவசர அவசியம் புரிந்து சம்மதித்திருக்கிறாள். இடையில் இப்படிச் சிக்கலாகும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்களே. தவிர, அவள் கடத்திச் செல்லப் பட்டது அறிந்ததும் மகிந்தன் தம்பி சும்மா இருந்துவிடவில்லையே? தன் சக்தி அனைத்தையும் கொடுத்துத் தேடத் தானே முயன்றிருக்கிறார்…? மகிந்தன் காவல்துறை அதிகாரிமா. அவர் தனக்காக யோசிக்காமல் மக்களுக்காகத்தான் யோசிப்பார்…” என்று கூறிய இந்திரகுமாருக்கு எங்கே தன் ஆசை மகளின் விருப்பம் நிறைவேறாமல் போய்விடுமோ என்கிற பதட்டம். என்ன சொன்னாலும் அவர் உயிரான மகள் விரும்பிக் கேட்ட திருமணம் அல்லவா அது. அதை எப்படி நிறுத்துவார்? அப்படி நிறுத்தினால், அவர் மகள் வருந்தமாட்டாளா…? அதை பாலேந்திரன் உணர்ந்தானோ, எரிச்சலோடு தந்தையைப் பார்த்து,
“அவள் கடத்தப்பட்டாள், வேதனைப்பட்டாள், மீட்கப்பட்டாள்… அதையெல்லாம் விடுங்கள். இதற்குப் பிறகு அவள் படும் சித்திரவதைக்கு யார் பொறுப்பு? பார்த்தீர்கள் தானே? அவளால் மூச்சுக் கூட விட முடியாமல் அத்தனை விசாரணை. ஒரு நாளைக்கு எத்தனை விசாரணையைத்தான் அவள் தாங்குவாள்? மனதளவில் அவள் அடைந்த பாதிப்புக்கு யார் பொறுப்பு…? கேட்டால் நாட்டுப் பற்று அது இது என்கிறீர்கள்…! அவள் எனக்கு மூத்தவள்தான்…! ஆனால் குழந்தை போலப்பா…! இனி இதிலிருந்து எப்படி வெளியே வரப் போகிறாள்…? அதை யோசியுங்கள்.” என்றவனுக்கு அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இறுதி வரி சொல்லும்போதே குரல் கமறத் தொடங்கிவிட்டது பாலேந்திரனுக்கு. ஆண்மகனாயிற்றே. தன் பலவீனத்தில் தனக்கே எரிச்சல் வர, வேகமாக அங்கிருந்து சென்றுவிட, இந்திரகுமாரோ என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் நின்றார்.
இதற்கிடையில் மகிந்தனின் தாய் தந்தையும் செய்தியறிந்து வந்தார்கள். சற்றுத் தள்ளி நின்று தங்கள் வருங்கால மருமகளைப் பார்த்து விட்டு, பார்வதியின் கையைப் பற்றி ஆறுதல் கூறி விட்டு வெளியேறியவர்கள் நேராகச் சென்றது தங்கள் மகனிடம்தான்.
அங்கே கைப்பேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த மகிந்தனை நெருங்கிய மேனகை, அவனுடைய தோள் மீது கரத்தைப் பதிக்க, திரும்பிப் பார்த்தான். அன்னையைக் கண்டதும், உடனே கைப்பேசியை அணைத்தவன்,
“ஹாய் மா… இதங்கனையைப் பார்த்தீர்களா?” என்று கேட்க, தலையை அசைத்த மேனகை, எதையோ சொல்லத் தயங்கியவர் போல அமைதி காத்தார். பின் மகனை அழுத்தமாகப் பார்த்து,
“என்ன முடிவு செய்திருக்கிறாய்?” என்றார். இவனோ புரியாமல் தாயைப் பார்த்து,
“புரியவில்லை மா…” என்று குழம்ப, மேனகையோ, ஆழ மூச்செடுத்து விட்டு,
“இந்தத் திருமணத்தைப் பற்றி என்ன முடிவு எடுத்திருக்கிறாய்?” என்றார்.
“என்ன முடிவு எடுக்கவேண்டும்… திருமணம் குறித்த நேரத்தில் நடக்கும்…” என்ற மகனை முறைத்தவர்,
“நீ என்ன முட்டாளா?” என்றார் அடக்கிய ஆத்திரத்துடன். இவனோ குழப்பமாகப் பார்க்க,
“பின்னே என்ன.. மூன்று நாட்கள், யாரோ எவனோ ஒருவனோடு இருந்து விட்டு வந்திருக்கிறாள்… அவளை இன்னும் திருமணம் முடிக்க எண்ணுகிறாயா… நீ அந்தளவுக்கு பைத்தியக்காரனா?” என்ற தாயைக் கோபமாக முறைத்தான் மகிந்தன்.
“ஸ்டாப் இட் மா… என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறீர்களா? அவள் ஒன்றும் அவர்களோடு உல்லாசமாகப் போய் விட்டு வரவில்லை. கடத்தப்பட்டிருக்கிறாள்… அதுவும் எனக்கு உதவப் போய் கடத்தப்பட்டிருக்கிறாள்… அவளைப் போய்… சே…” என்று அவன் சீற, தளராமல் தன் மகனை ஏறிட்டுப் பார்த்த மேனகை,
“கடத்தப்பட்டால் மட்டும், அவளைச் சும்மா விட்டு வைத்திருப்பார்கள் என்றா நினைக்கிறாய்? இவள் பெண் என்கிற ஒன்று போதாது? அவர்கள் கை காலை சும்மா வைத்துக்கொண்டு இருந்திருப்பார்கள் என்றா நினைக்கிறாய்…? இதோ பார் மகிந்தன்…! முன்னம் எப்படியோ, இப்போது அவள் உன்னைத் திருமணம் முடிக்கும் தகுதியை இழந்து விட்டாள்…! அவ்வளவும்தான் சொல்வேன்…” என்று ஆத்திரத்துடன் கூறத் தன் தாயைத் தளராமல் ஏறிட்டவன்,
“இதுக்காக அவளுடைய கன்னித்தன்மையைப் பரிசோதிக்க வேண்டும் என்கிறீர்களா… கமான்… மா.. இதங்கனைக்கு முன்னர், எனக்கு இரண்டு பெண் தோழிகள் இருந்தார்கள். அதில் ஒருத்தியோடு பல்கலைக்கழகம் படிக்கும்போது, ஒன்றாகத்தான் இருந்தேன்… ஒரே அறை, ஒரே படுக்கை… அப்படிப் பார்த்தால், இதங்கனையைத் திருமணம் செய்யும் தகுதியை நான் இழந்துவிட்டேன் என்று சொல்லலாமா…?” என்று மகிந்தன் நறுக்கென்று கேட்க, மேனகையோ கொதிப்புடன் தன் மகனைப் பார்த்தார்.
“என்ன பேச்சுப் பேசுகிறாய்… நீ ஆண்… என்ன நடந்தாலும் அது உன்னைப் பாதிக்காது.. ஆனால்…”
“ஸ்டாப் திஸ் நான்சன்ஸ்… நீங்கள் எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்…? இங்கே ஆண் பெண் என்கிற எந்தப் பாகுபாடும் கிடையாது… ஐ லைக் ஹேர்… தட்ஸ் ஆல்… இதற்கு மேல் நீங்கள் இது பற்றிப் பேசுவீர்கள் என்றால், இங்கே வராதீர்கள்… திருமணத்திற்கு மட்டும் வந்தால் போதுமானது…” என்று கறாராகக் கூற, அதற்கு மேல் தன் மகனோடு விவாதிக்கப் பிடிக்காமல் மேனகா வெளியேற, அவனுடைய தந்தையோ, வாய்பேசா பூச்சியாகத் தன் மனைவியின் பின்னே நடக்கத் தொடங்கினார்.
அவர்கள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த மகிந்தனுக்கு ஆயாசமானது. இப்போது அவன் சந்திக்கும் சிக்கல் ஏகப்பட்டது இருக்கும் போது, இடையில் இவர்கள் வேறு அவனுடைய பொறுமையைச் சோதிக்கிறார்கள்… என்று சலிப்புடன் எண்ணியவனாக இதங்கனையை நாடிச் சென்றான்.