Tue. Nov 12th, 2024

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 19/20

(19)

அவனுடைய பிடிவாதத்தில் ஆத்திரம் வர, மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க அவனை முறைப்புடன் பார்த்துக் கொண்டிருக்க அதுவரை அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தவன், என்ன நினைத்தானோ, இப்போது மெல்ல மெல்ல அவளை நெருங்கத் தொடங்கினான்.

ஆரம்பத்தில் உன்னால் என்ன செய்துவிட முடியும் என்பதுபோல அலட்சியமாகப் பார்த்தவள், இப்போது அவன் நெருங்க தொடங்க இப்போது அச்சத்தையும் மீறி இதயம் படபடக்கத் தொடங்கியது. அதுவும் அவனுடைய விழிகளில் தெரிந்த வீரியமும் அழுத்தமும் எதையோ அவளுக்கு உணர்த்த, தொண்டை வறண்டு போனவளாய், அத்தனை உமிழ் நீரையும் கூட்டி விழுங்கியவாறு,

“என்ன… எதற்குக் கிட்டே… கிட்…டே வருகிறீர்கள்… அங்கேயே நி… நில்லுங்கள்…” என்று கூறியவாறு பின்னேற தொடங்கினாள் விதற்பரை.

அவளுக்கே தன் இதயத்தின் ஓசை பறையாய் முழங்குவது போலத் தோன்றத் தன்னையும் மீறி மார்பில் கரத்தைப் பதித்து அழுத்த, அவனோ எவ்வித மாற்றமும் இல்லாது அவளுடைய முகத்திலிருந்து தன் பார்வையை இம்மியும் விலக்காது மேலும் அவளை நெருங்கத் தொடங்கினான். எவ்வளவுதான் பின்னேறுவது? ஒரு கட்டத்தில் சுவரோடு மோதி நின்றாள் விதற்பரை.

இதோ நெருங்கி விட்டான். அவனுடைய மூச்சுக் காற்று அவளுடைய முகத்தில் பட்டுத் தெறிக்க, விதற்பரைக்கு உலகமே தன் சுழற்சியை நிறுத்திய உணர்வு.

அவசரமாக அவனை விட்டு விலகத் தொடங்க, அவனுடைய பலம் பொருந்திய கரங்கள் அவளுக்கு அணையாக இரு பக்கமும் பதிய, இவளோ தடுமாற்றத்துடன் அவனை அண்ணாந்து பார்த்தாள்.

அவனோ, அவள் விழிகளைத் தன் விழிகளால் பார்த்தவாறே. சற்றும் தயங்காமல் ஒரு கரத்தை விலக்கிக் குளிருக்குத் தோதாக அணிந்திருந்த அவளுடைய மேல் சட்டையின் ஜிப்பை மெல்ல மெல்லக் கழற்றத் தொடங்க, அது கூடப் புரியாமல் அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க, அவனோ ஒருவிதக் கிண்டலுடன் தன் செயலில் கவனமாக இருந்தான்.

இப்போது மேல்சட்டை கழற்றப் பட்டதும், இரு கரங்களையும் வசதியாய், அவளுடைய இடை நோக்கி எடுத்துச் சென்றவன், ரசனையுடன் அவள் அணிந்திருந்த டீஷேர்ட்டிற்கூடாகத் தன் கரங்களை நுழைத்து துடியிடையின் அளவைப் பரிசோதிப்பவன் போல உள்ளங்கையை அழுந்த பதிய, விதற்பரைக்கோ உச்சி முதல் பாதம் வரை சிலிர்த்துப் போனது. அவனுடைய அந்தத் தொடுகையில் அடிவயிற்றிலிருந்து ஏதோ ஒரு மாயை உருவாகி அப்படியே மேலேறி இதயத்திற்குள் புகுந்து அதன் வேகத்தை அதிகரிக்கச் செய்ய, அவளையும் மீறி உடலில் ஒரு நடுக்கம் ஓடியது. வியர்த்துக் கொட்டியது.

என்ன செய்கிறான்? ஏது செய்கிறான்? ஏன் தொலைந்து போகிறோம்? ஏன் கிறங்கிப் போகிறோம். இது என்ன உடலில் புது வித மாற்றம்? மயக்கம்? நம்ப முடியாத அதிர்வுடன் அவனைப் பார்க்க, அவனோ, அவளை இழுத்த வேகத்தில் எந்தச் சிரமமும் இல்லாமல் அவனுடைய மார்பில் முட்டி நின்றாள் விதற்பரை.

வத்திக் குச்சி உரசினால் பற்றிக் கொள்ளும் என்பது இதுதானோ? வெறும் மெய் தீண்டலில் தேகம் தீப்பற்றிக் கொள்கிறதே… நம்ப முடியாமல் விறைத்து நிற்க, அவனோ மோதி நின்றவளின் மேனியில் தொலைந்த எதையோ தேடுவது போலத் தன் கரங்களை அங்கும் இங்கும் வருடிச் செல்ல, மொத்தமாய்த் தொலைந்து நின்றாள் விதற்பரை.

அவன் கரங்கள் கூறிய கதையின் மொழி தெரிந்தும் தெரியாமலும் போக, அதைத் தாங்கும்  சக்தியிருந்தும்  இல்லாதவளுமாகத் தன் விழிகைளை மூடிக்கொண்டவளுக்கு, விழிகளை மூடினால் இருண்டு போகும் என்று நினைக்கும் பூனையின் நிலையானது.

அவனுடைய விரல்கள் தந்தி மீட்க, இளமை சந்தர்ப்பம் பார்த்து மலர்ந்து போகத், தன் விழிகளை மூடிக் கொண்டவளின் உதடுகள் சற்று பிளந்து ஒருவித ஓசையை வெளிப்படுத்த, அவனோ அதை ரசனையுடன் பார்த்தவாறு, மேலும் முன்னேறும் நோக்கத்தில் தன் கரங்களை மெல்ல மெல்ல இடையைத் தாண்டி மேலே மேலே எடுத்துச் செல்ல முகமோ அவளுடைய மலர் முகம் நோக்கிக் குனியத் தொடங்கியது.

விதற்பரையால் எதையும் சிந்திக்க முடியவில்லை. புத்தி மங்கிப்போக இது சரியா தவறா என்று கூட உணர முடியாத நிலையில் அவன் செயலில் மயங்கிக் கிறங்கிக் கிடந்தாள். கடவுளே சுவாசம் எந்தளவு முக்கியமோ, அந்தளவு அவனுடைய தீண்டலுமல்லவா முக்கியமாகத் தோன்றுகிறது. ஏனோ அந்தத் தீண்டலின் பாரம் தாங்க முடியாமல் கால்களோ துவள தொடங்கின.

அதை உணர்ந்தவன் போலத் தன் முகத்தை அவளுடைய கழுத்து வளைவில் பொருத்தி கீழே விழாதிருக்கத் தன்னோடு இறுகி அணைத்தவாறு, தன் நாசியால் அவள் சுகந்த வாசனையை உள் இழுத்து அதில் முத்தம் பதிக்க விதற்பரைக்கு மொத்தமும் தொலைந்து போனது. இப்போது அவன் தன் உதடுகளால் அக் கழுத்து வளைவுதனை அளக்கத் தொடங்க, அப்பப்பா… அந்த உணர்வை எப்படி விவரிப்பாள். உள்ளும் புறமும் மலர்ந்து மணம் பரப்புகிறதே. அவள் பெண்ணாய்ப் பிறந்தது இந்த ஆணுடைய வருடலை உணரத்தானோ… எத்தனை இன்பம்… எத்தனை இனிமை… தன்னை மறந்து ஆழ மூச்செடுத்து அதை இதமாய் மூச்சின் உதவியுடன் வெளியிட, இப்போது அவனுடைய உதடுகள் அவளுடைய காதுகளைத் தேடிச் சென்றன.

மெதுவாய் அவள் காது சோனையைப் பற்களால் கடித்து விடுவித்தவன், அவள் மேலும் சிலிர்த்து நிற்க, அவளுடைய செவிகளில் தன் உதடுகளால் சடுகுடு விளையாடிவிட்டு, உதடுகளைக் காதில் பொருத்தி,

“இப்போது சொல்… உனக்கு மயக்க மருந்து கொடுத்து, மயங்க வைத்துத்தான் உன்னை அடைய வேண்டும்?” என்றான் கிசுகிசுப்புடன்.

முதலில் அவன் கூறியதைக் கேட்டுக் குழம்பியவள். பின் நிதர்சனம் தெரிய அதிர்ந்து போய் மயக்கம் தெளிந்து விழிகளைப் பட்டென்று திறந்து, அதிர்ச்சியுடன் அவனை அண்ணாந்து பார்த்தாள்.

இப்போது அவளுடைய கழுத்து வளைவிலிருந்து தன்னை மீட்டெடுத்து அவளுடைய விழிகளுக்குத் தன் விழிகளைக் கலந்தான் அவ்வியக்தன்.

“சொல்… உன்னை அடைய நான் போதை மருந்து கொடுத்துத்தானா அடையவேண்டும்?”

அப்போதுதான் மொத்தமும் புரிந்தவளாய் இமைக்காமல் அவனை அண்ணாந்து பார்த்தாள்.

“சொல் விதற்பரை… உன்னைச் சுயநினைவு இழக்க வைத்துத்தானா தொடவேண்டும்?” என்றான் கிசுகிசுப்புடன்.

இப்போதும் அவளால் தெளிய முடியவில்லை. இன்னும் மயக்கம் முற்று முழுதாய் அவளை விட்டு விலகவில்லை. சற்று முன் நடந்ததையே அது அதிர்வுடன் நினைத்திருக்க, அவனோ தன் கரத்தில் சிக்கியிருந்த அவளுடைய கரத்தைப் பற்றி, உதடுகளைப் பொருத்தி எடுத்து,

“இரண்டு மாதங்களாக என்னோடு பழகியிருக்கிறாய்… இத்தனை நாட்களில் நாம் தனித்துத்தான் இருந்திருக்கிறோம்… உன்னோடு உறவு கொள்ள வெண்டும் என்றால்” இப்போது போட்ட மாத்திரையை அப்போது போட்டிருக்க மாட்டேனா? உன்னோடு தனித்திருந்த சந்தர்ப்பத்தில் ஒரு பொழுதேனும் உன்னோடு தவறாக நடந்திருக்கிறேனா…? இல்லை நீ சந்தேகப்படுவது போல எப்போதாவது தப்பாகப் பார்த்திருக்கிறேனா” என்று கேட்டான் அவ்வியுக்தன்.

உண்மைதானே. இத்தனை நாட்களில் ஒரு முறையாவது அவன் தவறாக அவளோடு நடந்து கொண்டதில்லையே. ஏன் அன்று அரை குறை ஆடையோடு வந்தபோது கூட நாகரிகமாக மாற்றச் சொன்னானே தவிர, தப்பாக ஒரு பார்வை கூட அவன் பார்க்கவில்லையே. சில வேளைகளில் அவன் அருகாமையில் தன்னைத் தொலைத்திருக்கிறாள். அப்போது கூட அவன் அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அவன் செய்யவில்லை… அப்படிப் பட்டவன், இவளுக்குத் துரோகம் செய்வானா? இதையேன் அப்போது அவள் யோசிக்கவில்லை? எப்படி அவன் தப்பாக நடந்துவிட்டான் என்று உறுதியாக நம்பினாள்? குழம்பியவளுக்கு அப்போதுதான் அவன் படுக்கையிலிருந்து எழுந்தது நினைவுக்கு வந்தது. ஒரு வேளை அவளுடைய அறையில் விழித்திருந்தால் இந்தச் சந்தேகம் வந்திருக்காதோ? தவிப்புடன் அவனைப் பார்க்க, அவனோ,

“உன்னை மட்டுமல்ல தற்பரை… எந்தப் பெண்ணையும் என்னால் பலவந்தப் படுத்த முடியாது… அதுவும் உன்னுடைய அனுமதியில்லாமல் உன்னை… ம்கூம்… சத்தியமாக நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டேன் விதற்பரை…” என்று கூற, விதற்பரையின் கண்கள் கலங்கிக் கொண்டு வந்தன. கண்ணோரமாக அந்தக் கண்ணீர் வடிந்து செல்ல, அவளுடைய கரத்தை விடுவித்து, வடிந்த கண்ணீரைத் துடைத்தவன்,

“உனக்கு எந்தத் தீங்கும் நெருங்கக் கூடாது என்று நினைப்பவன் நான்… அதே தீங்கை நான் செய்திருப்பேனா? உன்னைத் தப்பாகத் தொடவேண்டும் என்றால், அந்த விழாவுக்குப் போகாதே என்று எச்சரித்திருப்பேனா… என் மீது உண்மையான நம்பிக்கை வைத்திருந்தால், எந்தச் சந்தர்ப்பத்திலும் என்னைத் தவறாக நினைத்திருக்க மாட்டாய் தானே…” என்று அவன் ஒரு வித வலியுடன் கேட்க, அதற்கு மேல் அவளால் எதையும் கேட்க முடியவில்லை. ஒரு விதக் கேவலுடன், பாய்ந்து அவனை இறுக அணைத்துக் கொண்டவள், குரல் குழற, நெஞ்சம் விம்மா,

“ஓ… அயன்… சாரி… சாரி… அயன்… ஐ ஆம் சோ சாரி… எனக்கு என்ன யோசிப்பதென்றே தெரியவில்லையே… என் புத்தி… என் புத்தி சரியான பாதையில் யோசிக்க மாட்டேன் என்கிறதே நான் என்ன செய்யட்டும்…” என்றவள் அண்ணாந்து அவனைப் பார்த்து,

“அன்று விழாவில் கடைசியாக நீங்கள் மட்டும்தான் என் நினைவிலிருந்தீர்கள்… அதற்குப் பிறகு எதுவும் எனக்கு நினைவு வரவில்லை. உங்கள் விடுதியில்தான் நான் இருக்கிறேன் என்று தெரிந்தபோது, புத்தி வேறு எதிலும் சரியாகச் செயல்படவில்லை. ஒரு வேளை நீங்கள்தான் என்னோடு தப்பாக நடந்துகொண்டீர்களோ என்கிற கோபத்தில்… தப்பாகப் பேசிவிட்டேன்..” என்றவள், கடந்த இரண்டு நாட்களாக வதைத்த வேதனையைக் கொட்டி அழத் தொடங்க, இப்போது அத்தனை ஏமாற்றத்தையும் கோபத்தையும் துறந்தவனாக தன்னை மறந்து அவளை இறுக அணைத்துக் கொண்டான் அவ்வியக்தன். அவள் அழுவதைக் காணச் சகிக்காதவனாக, பெரும் பரிதவிப்போடு அவளுடைய தலையை வருடிக் கொடுத்தவன்,

“ஷ்… ஷ்… இட்ஸ் ஓக்கே ஏஞ்சல்… இட்ஸ் ஓக்கே… ப்ளீஸ் டோன்ட் க்ரை… ஐ கான்ட் பியர் இட்… பேபி… ப்ளீஸ் டோன்ட் கிரை…” என்றவன் அவளை விட்டு விலகி, அவளுடைய நாடியைப் பற்றித் தூக்கி அவளைப் பரிதவிப்போடு பார்த்து”

“இட்ஸ் ஓக்கேமா… இட்ஸ் ஓக்கே… உன் நிலைமையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது… மருந்தின் வீரியம், அதிர்ச்சி” என்ன நடந்திருக்கும் என்று தெரியாத குழப்பம்… உன்னைத் தடுமாற வைத்துவிட்டது… அது புரிந்ததால்தான் உனக்குத் தெளிவு படுத்தவேண்டி இத்தனை பிடிவாதமாக நின்றான்…” என்று சமாதானம் செய்ய. விம்மியவாறு, மீண்டும் அவன் மார்பில் சாய்ந்தவள்,

“நீங்கள் சொன்னதை நான் கேட்டிருக்க வேண்டும்… நான் போயிருக்கக் கூடாது… போயே இருக்கக் கூடாது… அங்கே என்ன நடந்தது என்று கூட எனக்குத் தெரியவில்லை… யார் தப்பாக நடந்தார்கள் என்று கூடத் தெரியவில்லை… விக்டர் குடிக்கப் பழரசம் கொடுத்தான். குடித்தேன். அப்போதே என்னுள் ஒரு வித மாற்றம். ஏதோ தேவை… நீங்கள் அருகே இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதற்குப் பிறகு எதுவுமே எனக்கு நினைவில்லை அயன்…” என்று விம்ம, அவனோ அவளை அணைத்துத் தட்டிக் கொடுத்து,

“யார் அவர்கள் என்று சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம் தற்பரை… கலங்காதே…” என்றான் இதமாய். இவளோ அவனை அண்ணாந்து பார்த்து”

“எப்படி?” என்றாள் மூக்கை உறிஞ்சியவாறு.

“நேற்று முன்தினம் உன்னிடம் ஒரு கைப்பேசி கொடுத்தேனே… எங்கே அது…” என்று கேட்க இவளோ குழம்பியவாறு அவனைப் பார்த்தாள்.

“அதுவா” அதைத்தான் நான் எறிந்து உடைத்துவிட்டேனே…” என்றாள். அதைக் கேட்டு அதிர்ந்தவனாய்,

“வட்…” என்று அலற, அந்த அலறலில் ஒரு கணம் திருத் திரு என்று விழித்தாள் விதற்பரை.

அதைக் கண்டு தன் கோபத்தை அடக்கியவனாக,

“காட்… உன்னைக் கடத்தியவனின் கைப்பேசி அது… அது இருந்தால் தான் உனக்குப் போதை கொடுத்தவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியும்…” என்றதும் அவளோ என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.

“ஓ… எனக்கு அந்த நேரம் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. அப்போதிருந்த கோபத்தில், ஏமாற்றத்தில், என்ன செய்கிறோம் என்று கூடத் தெரியாமல், துக்கி எறிந்து உடைத்து விட்டேன்…” என்று சிறுத்துவிட்ட குரலில் கூறியவள்” பின் அச்சத்தோடு அவனைப் பார்த்து”

“அவர்கள்… அவர்கள் என்னோடு தப்பாக நடந்தார்களா குட்டிமாமா…?” என்று கலங்க, அவளை இழுத்து அணைத்து, அவளைச் சமாதானப் படுத்தும் வகையில், முதுகை வருடிக் கொடுத்தவாறு, கன்னத்தோடு கன்னம் இளைய,

“இல்லை… எதுவுமே நடக்கவில்லை. உன்னை வாகனத்தில் ஏற்றும்போதே வந்துவிட்டேன்…?” என்றவன் நடந்ததைக் கூற, அதைக் கேட்டவள், நிம்மதியுடன், விழாவில் தனக்கு என்ன நடந்தது என்பதையும் ஒன்று விடாமல் கூற, அவள் கூறியதைப் பொறுமையுடன் கேட்டவன், விக்டரைப் பற்றி அவள் கூறியதும், அவளை விட்டு விலகி, அவளுடைய தோளில் கரங்களைப் பதித்து,

“அப்படியானால் உன் நிலைக்குக் காரணம் அந்த விக்டர்தானா?” என்றான் ஆத்திரத்தோடு, உடனே மறுப்பாகத் தலை அசைத்தவள்,

“நான் நினைக்கவில்லை குட்டிமாமா.. ஏன் என்றால் இது நாள் வரை அவன் என்னோடு தப்பாக நடந்து கொண்டது கிடையாது. நண்பர்களின் விழாக்களுக்கு அவன்தான் அழைத்துச் செல்வான். அதே போலப் பத்திரமாக அழைத்தும் வந்துவிடுவான்… அவன் இப்படியொரு காரியத்தைச் செய்திருப்பானா என்று என்னால் நம்ப முடியவில்லை…” என்றதும் அவ்வியக்தனின் உடல் இறுகியது. அவளிடமிருந்து தன் கரத்தை விலக்கியவன், அவளை வெறுமையாகப் பார்த்து,

“அந்த விக்டரின் மீதிருக்கும் நம்பிக்கையில் ஒரு வீதம் கூட என்னிடம் இருக்கவில்லையே…” என்றான் பெரும் ஏமாற்றத்துடன். அதைக் கேட்டதும், இவளுடைய முகம் வாடிப் போயிற்று.

“விக்டர் உங்களைப் போலப் பல பெண்களோடு செல்பவனா என்ன?” என்று தமிழில் முணுமுணுத்தவள், அப்போதுதான் நினைவு வந்தவளாக, அவனைக் கோபத்துடன் பார்த்து

“யார் அந்தப் பெண்…?” என்றாள் தமிழில். அவனோ புரியாதவனாக அவளைப் பார்த்து,

“பென்… வட் பென்…” என்று புருவங்களைச் சுருக்க,

“பென்னில்லை… பெண்… கேர்ள்… நேற்று அழைத்த போது, ஒருத்தி எடுத்தாளே… அவள்…” என்று முகத்தைச் சுளுக்க, முதலில் குழம்பியவன்,

“நீ எடுத்தாயா? எப்போது எடுத்தாய்?” என்று ஆச்சரியத்துடன் கேட்க, அவளோ நடந்ததைக் கூறினாள். அதைக் கேட்டதும், பற்களைக் கடித்து”

“ஷ்…. சாரிமா… நேற்று போதையில் இருந்தேன்…” என்று மதுக் கூடத்தில்  நடந்ததைக் கூறி”

“அந்தப் பெண்தான் என்னைப் பத்திரமாக வண்டியேற்றி அனுப்பியிருந்தாள்…” என்றான். பின் யோசனையோடு நெற்றியைத் தேய்த்து விட்டவன்,

“ஆனால் நீ அழைத்தது என் கைபேசியில் காட்டவில்லையே…” என்றான் முனங்கலாக.

அதைக் கேட்டதும் முதலில் கோபப் பட்டவள், “போதையில் என்ன செய்தீர்களோ..” என்றாள் எரிச்சலாக.  பின் மலர்ந்தவளாய் அவனை அண்ணாந்து பார்த்துப் பளிச்சென்று சிரிக்க, அந்தச் சிரிப்பில் மொத்தமாய்த் தொலைந்து போனான் அவ்வியக்தன்.

அவளுடைய மலர்ந்த முகத்தில் நிலைத்த அவன் விழிகள் அங்கும் இங்கும் அசைவதாயில்லை. தன்னையும் அறியாமல் அவள் முகத்தை நோக்கிக் குனிந்தவனின் விழிகளோ இடம் மாறி அவள் விழிகளைச் சிறைபிடித்து கொண்டன.

அவன் விழிகளில் அவள் எதையோ தேடினாள். இவள் விழிகளில் அவன் எதையோ படித்தான். அவள் தேடியது அவளுக்குக் கிடைத்ததா தெரியவில்லை, இவன் படிக்க முயன்றதைச் சரிவரப் படித்து முடித்தானா என்றும் புரியவில்லை. ஆனாலும் ஒன்றை ஒன்று கைப்பற்றிய அந்த விழிகள் பிரிந்து செல்வதாயில்லை.

கொஞ்சம் அசைந்தாலும் இரு முகங்களும் முட்டிக்கொள்ளும் தொட்டுக் கொள்ளும். அப்படித் தொட்டுக்கொண்டால் அடுத்துப் பற்றிக்கொள்ளும். பற்றிக்கொண்டால், மீள முடியா உணர்வுக்குள் மூழ்கிப் போவர். இப்போது தொட்டுக்கொள்வதா, முட்டிக்கொள்வதா என்கிற குழப்பத்தில் அவளை நோக்கி மேலும் முன்னேற, இப்போது அவளுடைய விழிகள் அவன் விழிகளைக் கைவிட்டு அவன் உதடுகளில் நிலைத்துக் கொண்டன.

அந்த உதடுகளிலிருந்த தவிப்பை உணர்ந்தவள் போல, அந்தத் தவிப்பை அந்தக் கணமே துடைத்தெடுத்துவிடவேண்டும் என்று துடித்தவளாய் அவளும் அவன் உதடுகளை நோக்கிப் படையெடுக்க முயன்றாள். சற்று முகத்தைச் சரித்தால் போதும், எல்லாம் தோற்றுப் போகும். ஆனாலும் தேகம் பற்றிக் கொள்ளும். இதோ பற்றிக்கொள்ளும் நேரம்…

அடடா…! உலகத்தில்தான் எத்தனை வில்லர்கள். அந்த நேரம் பார்த்துத்தானா விதற்பரையின் வீட்டு மணி அடிக்கவேண்டும்?

(20)

இருவரும் தம்மை மறந்து வேறு உலகிற்குள் புக முயன்ற நேரம்” விதற்பரையின் வீட்டு மணி அடிக்க” கிடைத்த வாய்ப்பு கை நழுவிச் சென்ற உணர்வில் அவளை விட்டு விலகியவன்” எரிச்சலுடன் நடந்து சென்று வாசல் கதவைத் திறக்க அங்கே பதட்டத்தோடு நின்றிருந்தான் ஒரு இளைஞன்.

கதவைத் திறந்த அந்த உயரமானவனைக் கண்டு குழம்பியவன், தான் தவறான வீட்டிற்கு வந்துவிட்டோமோ என்று சந்தேகப்பட்டவனாக வீட்டுக் கதவில் பொறிக்கப்பட்டிருந்த இலக்கத்தை எட்டிப் பார்த்தான்.

இல்லையே சரியாகத்தான் வந்திருக்கிறோம்… அப்படியானால் இவன் யார்? வியந்தவனாக,

“ஹாய்… இது… இங்கே… விது.. விதற்பரை…” என்று இழுக்க, இவனோ வந்தவனையே முறைத்தவாறு,

“ஆமாம் அவள் இங்கேதான் இருக்கிறாள்… நீ யார்…” என்றான் அவ்வியக்தன் அதிகாரமாய்.

“ஐ… ஐ ஆம்… விக்டர்…” என்று சொன்னதுதான் தெரியும். அடுத்த கணம் பின் மண்டை சுவரோடு பலமாக மோதுமாறு தள்ளப்பட்டவனின் குரல்வளையை அழுத்திப் பிடித்த அவ்வியக்தன் மறு கணம் விகடரை ஒரு அடிக்கும் மேலாகத் தூக்கிவிட்டிருந்தான்.

திடீர் என்று நடந்த தாக்குதலில் அதிர்ந்துபோன விக்டர், மூச்சுக் குழாய் தடைப்படத் திணறியவாறு தன்னை விடுவிக்க முயன்றவனாய் கால்களை உதைய, அவ்வியக்தனோ, தன் பிடியை மேலும் மேலும் இறுக்கினான் அன்றிச் சற்றும் இளக்கினானில்லை.

அதே நேரம் பின்னால் வந்த விதற்பரை, இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ந்துபோனாள். பதறி ஓடிவந்து, விக்டரின் கழுத்தைப் பற்றித் தூக்கியிருந்த அவ்வியக்தனின் கரத்தைப் பற்றி விலக்க முயன்று தோற்றவளாக,

“என்ன காரியம் செய்கிறீர்கள்… அயன்… விடுங்கள் அவரை…” என்று விடுவிக்க முயல, அவ்வியக்தனோ, விதற்பரையின் கரம் பட்டதும் ஆத்திரத்துடன் மேலும் விக்டரை உலுப்பியவாறு,

“விடுவதா? இவனை விடுவதா? இவனால்தானே உனக்கு இந்த நிலை…” என்று சீறியவனாக விக்டரைக் கொல்லும் வெறியோடு பார்க்க, விதற்பரையோ, எங்கே இவன் நண்பனைக் கொன்றுவிடுவானோ என்கிற கிலியில்,

“தயவு செய்து அவரை விடுங்கள் அயன்… ப்ளீஸ்… லெட் ஹிம் கோ…” என்றாள் கெஞ்சலாக. அவள் கேட்டதால் வெறு வழியில்லாமல், அவ்வியக்தன் தன் பிடியைச் சற்றுத் தளர்த்தினான்.

தளர்த்தியதும், வேகமாக இருமத் தொடங்கினான் விக்டர். இன்னும் சற்று அழுத்தினாலும் அவனுடைய உயிர் போயிருக்கும். ஆனாலும் ஆத்திரம் மட்டுப்படாதவனாக, அவனுடைய சட்டையை ஒற்றைக் கரத்தால் பற்றித் தன்னை நோக்கி இழுத்து,

“சொல்லு… ஏன் இப்படிச் செய்தாய்… உனக்குப் பின்னால் யார் யார் இருக்கிறார்கள்…” என்றான் சீற்றமாக.

இன்னும் அவ்வியக்தன் கழுத்தை அழுத்தியதால் ஏற்பட்ட இருமல் அடங்காதவனாகத் தன்னை விடுவிக்க முயன்று போராடியவாறு,

“வி… விடுங்கள்… விடுங்கள் சார் என்னை…” என்று விடுவிக்க முயல, விதற்பரையோ, அவ்வியக்தனின் இந்தப் புதிய அவதாரத்தைக் கண்டு வாயடைத்துப் போய் நின்றாள்.

அவனைக் கண்ட நாள் முதல், அவன் முகத்தில் சதா இருந்தது புன்னகை மட்டுமே. கூடவே கரிசனையும். ஒரு கணம், ஒரு விநாடி கூட அவன் முகத்தில் இத்தகைய அகோரத்தைக் கண்டதில்லை. முதன் முறையாகப் புதிய அவ்வியக்தனைக் கண்ட விதற்பரைக்கு அவனை எப்படிக் கையாள்வது என்று சுத்தமாகத் தெரியவில்லை. அவனுடைய அந்தக் கோப தாண்டவத்தைக் கண்டவளுக்கு அச்சத்தில் உடல் இரத்தப் பசையை இழந்தது.

“சார் விடுங்கள் சார்… சத்தியமாக நீங்கள் சொல்வது எதுவும் எனக்குப் புரியவில்லை. விதற்பரை… தயவு செய்து இவரிடம் சொல்…” என்றான் கெஞ்சலாக.

அவ்வியக்தன், விக்டரைச் சுவரோடு மோதி, மிக நெருக்கமாக நின்றவாறு,

“புரியவில்லையா? உனக்குப் புரியவில்லை… எத்தனை தைரியமிருந்தால் இவளுடைய பழரசத்தில் போதை மருந்து கலந்திருப்பாய்…” என்று சீற, விக்டரோ அதிர்ச்சியோடு தன் விழிகளை விரித்தான்.

“என்ன சார் சொல்கிறீர்கள்… விதற்பரையின் பழரசத்தில் போதைப் பொருள் கலந்தேனா…” என்றவனுக்கு அப்போதுதான் எதுவோ புரிந்தது.

உடனே மறுப்பாகத் தலையை அசைத்து,

“இல்லை சார்… சத்தியமான நான் எதுவும் செய்யவில்லை… நம்புங்கள்…” என்று கெஞ்சியவன், விடுபடத் திணறியவாறு,

“நான் சொல்வது சத்தியம் சார்… நேற்று விதற்பரை மது அருந்த மறுத்ததால் பழரசம் எடுத்து கொடுக்கலாம் என்று சென்றேன். அப்போது ஒருவர் பழரசம் அடங்கிய குவளையை என்னிடம் கொடுத்தார். அப்போது கூட இது பழரசம் தானே என்று சந்தேகம் கேட்க, ஆம் என்று சொன்னார். அதை நம்பி எடுத்துவந்து விதுவிடம் கொடுத்தேன். அதைத் தவிர நான் எதுவும் செய்ய வில்லை. நம்புங்கள் சார்.” என்று கலங்கித் தவித்தவாறு கூற, விக்டரின் விழிகளை உற்றுப் பார்த்தான் அவ்வியக்தன்.

அந்த விழிகளில் அச்சமும், பயமும்தான் இருந்ததேயன்றி, பொய் சொல்வது போல இருக்கவில்லை. ஒரு வித நம்பிக்கை வர தன் கரத்தை இளக்கியவாறு,

“நிஜமாகவே நீ எதுவும் செய்யவிடலைத்தானே…” என்றான் அழுத்தமாக. இவனோ தலையை மறுப்பாக ஆட்டி,

“நம்புங்கள் சார்… சத்தியமாக எனக்கு எதுவும் தெரியாது. விதற்பரைக்குப் பழரசம் எடுத்து கொடுத்த பிறகு நண்பர்களிடம் சென்றுவிட்டேன். அவர்களோடு பேசியதில் விதற்பரையைச் சுத்தமாக மறந்துபோனேன் சார். திடீர் என்று காவல்துறையினர் சுற்றி வளைத்து எங்களை எல்லாம் கைதுசெய்து கொண்டுபோய்விட்டார்கள். அந்த நேரம் இவள் அங்கில்லை. எங்கே போனாள், என்ன ஆனது என்று எதுவும் தெரியவில்லை. சற்று நேரத்திற்கு முன்புதான் விசாரணையை முடித்து எங்களை விடுவித்தார்கள். எங்கள் கைபேசி முதல் கொண்டு அத்தனையும் காவல்துறையிடம் சிக்கியிருந்ததால் இவளை அழைத்து விசாரிக்கக் கூட முடியவில்லை. இவளுக்கு என்னானதோ என்று பயந்துதான் தேடிக்கொண்டு வந்தேன்… இவள் என்னுடைய நெருங்கிய தோழி. இவளுக்குப் போய் நான் துரோகம் செய்வேனா? அப்படிச் செய்திருந்தால், அவளுடைய வீட்டிற்கே விசாரிக்க வந்திருப்பேனா…” என்று கூறியவன் திரும்பி விதற்பரையைப் பார்த்து,

“சத்தியமாக அதைப் பழரசத்தில் போதைப் பொருள் கலந்திருந்தது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் தெட்டிருக்கவே மாட்டேன்… சத்தியம். இந்த விநாடி வரை நீ ஆபத்தில் சிக்கியிருந்தாய் என்று எனக்குத் தெரியாது” என்று அழும் குரலில் கூற, அப்போதுதான் தற்பரையின் புத்தியில் பளிச்சென்று தெரிந்தான் நகுலன். அதையே அவள் வாய்விட்டுக் கூற, இருவரும் வியப்புடன் அவளைப் பார்த்து,

“நகுலன்…” என்றனர். இவளோ ஆம் என் தலையை ஆட்டி,

“நகுலன்… அவன்தான் பல்கலைக் கழகத்தில் என்னோடு தப்பாக நடக்க முயன்றான். அன்று அந்தப் பழரசத்தை அருந்த முயன்ற போது, அவன் தொலைவிலிருந்து என்னைப் பார்த்துச் சிரித்தான்…” கலக்கத்தோடு சொல்ல, ஆத்திரத்தோடு அவளைப் பார்த்து முறைத்தான் அவ்வியக்தன்.

“இதையேன் என்னிடம் முன்பே சொல்லவில்லை… யார் அந்த நகுலன்… இப்போதே அவனை அடையாளம் காட்டு…” என்று கடித்த பற்களுக்கிடையில் வார்த்தைகளைத் துப்ப, விக்டரோ,

“நகுலனா…? விது…? நிஜமாகவா? ஏன் என்றால் இப்போது அவன் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான்… அவன் மட்டுமில்லை, அவனுடைய நெருங்கிய நண்பர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்…” என்றான் குழப்பமாக.

“என்ன விக்டர் சொல்கிறாய்? ஏன்? அவர்களுக்கு ஏன் அவனுக்கு என்னாச்சு… நன்றாகத்தானே இருந்தான்”

“தெரியவில்லை விது… யாரிடமோ கடுமையாக அடி வாங்கியிருக்கிறான். அவனுடைய இரண்டு விலா எலும்புகள் உடைந்து விட்டனவாம். மூக்கு சிதைந்து விட்டதாம். அதைச் சத்திர சிகிச்சை செய்துதான் நேராக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். இத்தோடு கை வேறு உடைந்திருக்கிறதாம்…” என்றவன், தன் குரலைத் தணித்து,

“அந்த விழாவில் ஏதோ கடுமையான போதைப்பொருட்கள் பட்டுவாடா நடந்திருக்கிறது போல. அதுக்கும் இவனுக்கும் இடையில் சம்பந்தம் இருக்கலாம் என்று பேசிக்கொண்டார்கள். இப்போது நீ சொல்வதைப் பார்த்தால், நான் கொண்டு வந்த பழச்சாற்றில் நகுலன் எதையாவது கலந்திருப்பானோ?” என்றான் சந்தேகமாக.

பின் ஞாபகத்துக்கு வந்தவனாக,

“நீ எப்படி வீட்டுக்கு வந்தாய்? உன் பழரசத்தில் போதை கலந்திருந்தது என்று சொன்னாரே… உனக்கு எதுவும் ஆகவில்லையே…?” என்றான் பதற்றமாக.

விதற்பரையோ அவ்வியக்தனை அழுத்தமாக ஏறிட்டாள்.

உடனே, அவளிடமிருந்து தன் பார்வையை விலக்கித் தொண்டையைச் செருமியவாறு, விக்டரின் கசங்கிய ஆடையைச் சரியாக்கி இழுத்து விட்டவாறு,

“அது… அவள் இரண்டு வாய் குடித்ததுமே ஏதோ கலந்திருப்பதை அறிந்துகொண்டதும் உடனே என்னை அழைத்துவிட்டாள்…” என்றான் அவசரமாக.

“ஆனால் நீங்கள் யார் சார். இதுவரை உங்களை நான் பார்த்ததில்லையே…” கேட்ட நகுலனை அழுத்தமாகப் பார்த்தான் அவ்வியக்தன்.

“அதைத் தெரிந்து நீ என்ன செய்யப் போகிறாய்… சரி அதை விடு… நீ தப்பு செய்யவில்லை என்று நம்பி உன்னை விடுகிறேன்… போ… ஆனால் உன் மீது தப்பிருக்கிறது என்று எனக்குத் தெரிந்தால்…” அவன் முடிக்கவில்லை,

“சத்தியமாக நான் எந்தத் தப்பும் செய்யவில்லை சார்… நம்புங்கள்…” என்றவாறு விட்டால் போதும் என்று அங்கிருந்து மறைந்தே போனான் விக்டர்.

இவளோ மார்பில் கரங்களைக் கட்டியவாறு அவனை அழுத்தமாகப் பார்த்து,

“ம்… அப்படியானால்… நகுலனை அடித்தது…” என்று அவள் முடிக்கவில்லை, தன் தோள்களைக் குலுக்கியவன்,

“டோன்ட் நோ… அதில் யார் நகுலன் என்று எனக்குத் தெரியாது. நினைவில்லாத உன்னை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்ல முயன்றார்கள். அப்போதிருந்த ஆத்திரத்தில் என்ன செய்கிறேன் என்று தெரியாமல் கிடைத்தவர்களை நான்கு மொத்து மொத்தினேன். அவ்வளவுதான்…” என்று தன் தோள்களைக் குலுக்க, மலர்ந்து சிரித்தவள், அவனை நெருங்கி அவனுடைய கழுத்தைச் சுற்றிக் கரங்களைப் போட்டு அணைத்தவளாய்,

“நன்றி குட்டிமாமா..” என்றாள் நிம்மதி சிரிப்புடன். அவனோ முகம் கசங்கியவாறு,

“நீ… சொந்தேன்… கூப்பிடாடே குத்தி மாமா……” என்று சீற்றமாய்த் திக்கித் திணறித் தமிழில் கூற, அதைக் கேட்டதும் தன்னை மறந்து சிரித்தவள்,

“குட்டிமாமா என்று கூப்பிடாதே என்று சொன்னேன் “ என்று அவனுயைட தமிழைத் திருத்தியவாறே அவனுடைய மார்பு சாய்ந்தாள் விதற்பரை.

எத்தனை நேரமாக அவன் அணைப்பில் கிடந்தாளோ, மெல்ல மெல்ல நிதர்சனம் புரிய, மெதுவாக அவனை விட்டு விலகியவள், கலங்கிப் போன முகத்துடன், அவனை ஏறிட்டு,

“பயமாக இருக்கிறது அயன்… அம்மா அப்பாவிற்குத் தெரிந்தால் என்னாகுமோ என்று அச்சமாக இருக்கிறது…” என்றாள் பெரும் கலக்கத்துடன்.

“வாய்ப்பில்லை தற்பரை…”

“எப்படித் தெரியாமல் போகும், செய்தித்தாள்களில் வெளிவருமே… அப்படி வந்தால் என்னாகும்… அம்மா அப்பா துடித்துப் போவார்களே?” என்றபோது விதற்பரையின் குரல் கமறத் தொடங்க,

“ஷ்… ஷ்… ஷ்…” என்றவாறு அவளுடைய முகத்தைப் பற்றி, கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு,

“செய்தி வரும்தான்… ஆனால் நீ அதில் இருக்க மாட்டாய். ஏன் என்றால், உனக்கு நடந்தது என்னைத் தவிர வேறு யாருக்கும் இது தெரியாது. நம்பு…” என்று கூறினாலும் சமாதானம் ஆகாமல், யோசனையுடன் அவனைப் பார்த்து,

“ஆமாம் அங்கே தப்பு நடக்கிறது என்று நீங்களா காவல்துறைக்குச் சொன்னீர்கள்…” என்று கேட்க, இவன் மறுப்பாகத் தலையை ஆட்டி,

“இல்லை… ப்ரோவுக்குச் சொன்னேன். மிச்சம் அவனுடைய வேலைதான்…” என்றதும் அச்சத்தோடு அவனைப் பார்த்தாள்.

“என்ன… மாமாக்குத் தெரியுமா… கடவுளே… அவர் என்ன நினைப்பார்… அவருக்குத் தெரிந்தால், அம்மா அப்பாவிற்குத் தெரிய வாய்ப்பிருக்கிறதே…” என்று பதற,

“ஹே… ஹே… ரிலாக்ஸ்… பிரோவுக்கு அது நீ என்று தெரியாது. எனக்குத் தெரிந்த பெண் என்று சொன்னேன்… அவனும் தோண்டித் துருவவில்லை. அவனால்தான் இத்தனை விரைவாக அவர்களைப் பிடிக்க முடிந்தது…” என்றதும் நிம்மதி பெரு மூச்சு விட்டவள்,

“கடவுளுக்கு நன்றி… அம்மா அப்பாக்குத் தெரிந்திருந்தால் அவ்வளவுதான்…” என்றாள் ஆசுவாச மூச்சு விட்டவாறு.

“ம்… அம்மா அப்பாக்கு அவ்வளவு பயமா?” என்று இவன் வியக்க, மறுப்பாகத் தலையை ஆட்டி மலர்ந்து சிரித்தவள்,

“பயமென்றில்லை… மரியாதை… என்னை நம்பி இத்தனை தூரம் அனுப்பியிருக்கிறார்கள். இந்த விழாக்களுக்குப் போவது அம்மாவுக்குப் பிடிக்காது… மீறிப்போனேன் என்று தெரிந்தால் வருந்துவார்கள்…” என்றவளின் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி நின்றவன் சற்று நேரம் விழிகளை மூடி அப்படியே அசையாது நின்றான். பின் அப்படியே மேலேறித் தன் உதடுகளை அவளுடைய நெற்றியில் பொருத்திச் சற்று நேரம் நின்றான். இவளும் அவனுடைய முத்தத்தின் சுவையை விழிகளை மூடியவாறு அனுபவித்து நின்றாள்.

பின் மெதுவாக அவளை விட்டு விலகி” அவளுடைய கன்னத்தைப் பெரும் விரலால் வருடிக் கொடுத்தவாறு”

“யு ஓக்கே நவ்…” என்றான் மென்மையாக. தலையை ஆட்டியவள்”

“ஐ வில்… ஐ ட்ரை…” என்றாள்.

“நாளைக்கு உனக்கு ஏதாவது வேலை இருக்கிறதா?” என்றான் மென்மையாய்.

“ஊருக்குப் போகிறேன் அயன்…”

அதைக் கேட்டதும் இவனுடைய முகம் வாடிப் போனது.

“ஓ… கட்டாயம் போக வேண்டுமா?” என்று கலைந்த கூந்தலை வருடிக் கொடுத்தவாறு கேட்க”

“இல்லையென்றால் அவர்கள் வருந்துவார்களே குட்டிமாமா…” என்றாள் மென்மையாய். அவள் குட்டிமாமாவில் முகம் எரிச்சலில் சுருங்கினாலும்”

“இரண்டு நாட்கள் உன் பயணத்தைப் பின் போட முடியுமா தற்பரை… உன்னை ஒரு இடத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்… ஒரே ஒரு நாள்தான். மறு நாள் நானே உன்னைப் பேருந்தில் ஏற்றிவிடுகிறேன்…” என்று கூற,

“ஒரு நாள் போய் வருவதற்கு எதற்கு இரண்டு நாள் பயணத்தை தள்ளிப் போடக் கேட்கிறீர்கள்?” என்றாள் வியப்பாக.

“ஏனா… உன் பாதத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது மறந்து விட்டதா? அது ஆற ஒரு நாளாவது வேண்டும் விதற்பரை… காயம் ஆறியதும் மறு நாள் போய் விட்ட வந்துவிடலாம்…” அவன் சொல்ல மகிழ்ச்சியுடனே தலையாட்டினாள் விதற்பரை.

“சரி… இரண்டு நாட்கள்தான்…” என்றதும் மீண்டும் அவளுடைய நெற்றியில் உதடுகளைப் பொருத்திவிட்டு “ஓக்கே” நாளை மறு நாள் ஐந்து மணிக்குத் தயாராக இரு” என்றான்.

“ஐ… ஐந்து மணிக்கா.. அத்தனை அதிகாலையிலா…” என்று தன்னை மறந்து வாய்விட்டு அலற,

“ஏன் அம்மையார் அதிகாலை எழமாட்டீர்களா என்ன?” என்றவனிடம் அசடு வழிந்து விட்டு,

“குளிர்காலத்தில் ஐந்து மணி சிரமம் குட்டிமாமா?” என்றாள் அழுவது போல. இவனோ சிரித்துவிட்டு,

“ஐந்து மணி தயாராக இரு…” என்று விட்டு விடைபெற, அவனை வழியனுப்பி விட்டுப் பூட்டிய கதவின் மீது நெற்றியை முட்டியவாறு சற்று நேரம் நின்றிருந்தாள் விதற்பரை.

இருவரும் தம் காதலைக் கூறவில்லை. காதல் சொல்ல எதற்கு வார்த்தைகள். அது இதயமும் இதயமும் கலக்கும் உணர்வு அல்லவா? பேசாத மௌனமே போதுமே இருவரின் உளமார்ந்த காதலை உணரச் செய்ய. விதற்பரை அந்தக் கணம் அவ்வியக்தனின் அப்பழுக்கற்ற காதலை மொத்தமாய் உணர்ந்தவளுக்கு ஒரு வித பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

ஒரு வேளை தன்னுடைய காதலைச் சொல்லத்தான் அழைத்துப் போகிறானோ? நினைக்கும் போதே உள்ளம் எல்லாம் தித்தித்தது.

What’s your Reaction?
+1
23
+1
4
+1
2
+1
0
+1
1
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!