Fri. Nov 15th, 2024

தொலைதூரத்து வெளிச்சம் நீ 1-24

(24)

இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான்.

சொர்க்கம் நரகம் என்பது அவர் அவர் உணர்வைப் பொறுத்தது தானே. சிக்காமல் சிதறாமல். சிரமப்படாமல் சொர்க்கம் கைகளுக்குள் விழுந்து கிடக்கும்போது, அதை யார்தான் விட்டுச் செல்ல முன்வருவர்.

மீண்டும் மீண்டும் உதடுகளின் சேர்க்கை… விட்டுப்பிரிய முடியா சந்திப்பு. சற்று விலக முயன்றாலும் கதறும் குழந்தை போல அவளுடைய உதடுகள் தவிக்க, கதறும் உதடுகளுக்குக் காவலனாய் பொத்தி மூடிக்கொண்டன அவன் உதடுகள். உதடுகளில் மட்டும் தங்கிவிட்டால் போதுமா… அங்கேயே குடித்தனம் நடத்தினால் கன்னத்தின் மென்மையை அறிவது எப்படி?

இப்போது அவனுடைய உதடுகள் பயணித்து அவளுடைய கன்னத்தில் முட்டி நின்றன. அவளும் அந்த உதடுகளின் ஈரத்தை உணர்ந்தவளாக கிறங்கி நின்ற, இப்போது அவனுடைய உதடுகள் மெதுவாக அசைந்து அவளுடைய இடது காதை முத்தமிட்டு நின்றன.

அவனுடைய உதடுகள் காதுகளை வருடியதுதான் தாமதம், விதற்பரையின் உடலுக்குள் பெரும் மின்மினிப் பூச்சிகளின் ஆரவாரம். பட்டாம் பூச்சிகளின் குதுகலம்… அதில் உருகி நிற்க, அவனோ,

“யு மேக் மீ க்ரேசி…” என்றான் கிசுகிசுப்பாய். இதைக் கூறும்போதே பல முறை அவனுடைய உதடுகள் அவள் செவியைத் தீண்டித் தீண்டிச் செல்ல, மேலும் மதிமயங்கிப் போனவளாய், கால்களின் பலவீனம் இழந்தவளாய், அவனுடைய சட்டையை இறுக பற்றித் தன்னை நிலைப்படுத்தி நிற்க, இப்போது, அவனுடைய கரங்களும் அவளுடைய நிலையைப் புரிந்து கொண்டவை போல, மலைப்பாம்பென அவளை இறுக அணைத்துக் கொண்டன. கூடவே பொறுமையற்றவன் போலக் கரங்களால் அவள் தேகத்தை அளந்தவன்,

“தற்பரை…” என்றான் மதி மயக்கும் குரலில். இவளோ அவன் அணைப்பிலும் முத்தத்திலும் முழுதாகத் தொலைத்தவளாய்,

“ம்…” என்றாள். இப்போது அவளுடைய கழுத்தில் தன் முகத்தைப் புதைத்து நின்றவன், சீறலாய், அதீத தேவையாய் மூச்செடுத்து விட்டவாறு,

“ஐ… ஐ நீட் யு?” என்றான்.

இவளும்தான் தன்னைத் தொலைத்திருந்தாளே. தன்னை மறந்து ‘ம்…’ என்றாள். இப்போது மீண்டும் அவளுடைய கன்னத்தோடு உதடுகளால் விளையாடி, விழிகளால் சதிராடிக் கரங்களால் கபடியாடியவாறே,

“கான் யு கம் வித் மீ…” என்றான் ஒரு வித அவசர ஆவேசத்துடன்.

இப்போதைக்கு அவளுக்கு வேண்டியது அவனுடைய அணைப்பு மட்டுமே. வேறு எதையும் சிந்திக்கும் நிலையில் இல்லை. அந்த நேரம் நன்மை தீமை பற்றிச் சொன்னாலும் அவளால் புரிந்து கொண்டிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். இதில் பாழாய்ப் போன அந்த மந்த புத்தி வேறு சரி பிழை எதையும் யோசிக்கும் நிலையில் இருக்கவில்லை. இளமைக்கும் புத்திக்கும் நடந்த யுத்தத்தில் என்றுதான் புத்தி வென்றிருக்கிறது? அப்போதைக்கு உயிர் வாழ உள்ளிழுக்கும் சுவாசம் கூட முக்கியமிழந்து போக, ஒரு வித பரபரப்புடன் தலையை ஆம் என்று ஆட்டி,

“யெஸ் ஐ வில்…” என்றாள் பரவசமாய்.

இதற்குமேல் அவனுக்கு என்னதான் வேண்டும்? அண்டச் சராசரங்கள் அனைத்தும் அல்லவா மயங்கி அவன் கரங்களில் விழுந்து விட்டன. இதற்குப் பின் வேறு என்ன வேண்டும் அவனுக்கு? மீண்டும் ஆழமான ஆவேச முத்தத்தை வழங்கியவன், அடுத்து அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துச் சென்றான். பனிச்சறுக்கல் செய்யும் இடம் முடிந்ததும் சுமையாகிப்போன அந்தப் பிரத்தியேகச் சப்பாத்தைக் கழற்றி எறிந்து விட்டு, தங்கள் சப்பாத்தை அணிந்துவிட்டு நிமிரும் போதே விதற்பரை அவ்வியக்தனின் கரங்களில் மாலையென வீற்றிருந்தாள்.

அவன் கரங்களில் கிடந்தவாறு அவனுடைய முகத்தை அழப் பார்த்தவளுக்கு அங்கே தெரிந்த தாபத்தைக் கண்டதும் அதைத் தாங்கும் சக்தியில்லாதவளாகத் தவிப்புடன் தன் விழிகளை மூடிக்கொள்ள, அவனோ அவளுடைய கழுத்து வளைவில் தன் முகத்தைப் பொருத்தியவாறு, எங்கே விட்டால் அவள் மறுத்துவிடுவாளோ என்று அஞ்சியவன் போல, அவளுடன் இரண்டறக் கலந்துவிடும் வேகத்தோடு வாகனத்தை நோக்கிப் பாய்ந்தான்.

வானத்தைத் திறந்ததும், அடுத்த மூச்சுத் தடைப்பட்டு விடுமோ என்று அஞ்சுவது போல, அவசரமாக அவளைப் பின்னால் அமர வைத்தவன், தானும் உள்ளே நுழைந்து அதே வேகத்தோடு கதவைப் பூட்டிவிட்டு அவள் மீது பாய்ந்தான்.

அவளை அணைக்காவிட்டால் உலகமே அழிந்து போகுமோ, முத்தமிடாவிட்டால் சுனாமியே தாக்கிவிடுமோ… அப்பப்பா என்ன வேகம், என்ன ஆவேசம்… எதுவும் புத்திக்குள் உறைப்பதாயில்லை. அங்கே அவள் மட்டுமே விழிகளுக்குத் தெரியக் கரங்களால் அவளை அளந்துவிடும் வேகத்தில் அங்கும் இங்கும் கொண்டு சென்றான்.

ஐயோ எதற்குக் கரங்கள் நடுங்குகின்றன? இதுவரை இப்படிக் கரங்கள் நடுங்கியது கிடையாதே…! எதற்கு இதயம் வெடித்துவிடும் போல இத்தனை வேகமாகத் துடிக்கிறது…? எதற்கு வியர்த்துக் கொட்டுகிறது…? வேண்டாம்… எதையும் சிந்தியாதே மனமே…! இதோ உனக்குரியவள், முன்னால் இருக்கிறாள்…! மேலும் முன்னேறு… என்று மனம் அவனை ஆற்றுப்படுத்த, அவசரமாக அவள் மீது படரத் தொடங்கினான் அவ்வியக்தன்.

அவனுடைய அவசர ஆவேசத்தில் மந்தப்பட்ட அவளுடைய புத்தியும் செயலிழந்து அவனுடைய அணைப்பை முழுதாக ஏற்கத் தொடங்கியது.

சுகம் சுகம் சுகம்… தெவிட்டாத சுகம்… அவன் கரங்கள் தீண்டினால் உடல் இப்படியா குழைய வேண்டும்? அவன் உதடுகள் உரசினால் இப்படியா சிலிர்க்க வேண்டும்…? அம்மம்மா…! பெண்ணாய் பூத்தததே இவன் வருடலுக்காகத்தானோ…? பெண் பிறவி எடுத்ததே இவன் அணைப்புக்காகத்தானா…? இது போதும் அவளுக்கு…! இம்மைக்கும் மறுமைக்கும் இது போதும்…! அடடா…! இது என்ன என் நெஞ்சம் இப்படி விம்மித் தொலைக்கிறதே…? ஐயோ… என் தேகம் இப்படி உருகி அவனோடு கலந்துவிடும் போலத் தோன்றுகிறதே…? இளமை எத்தனை இன்பமானது…! அதை ரசித்தவளாய் அவனை உருசிக்கத் தொடங்க, அவனோ அவளை அறிந்து விடும் வேகத்தோடு மேலும் முன்னேறத் தொடங்கினான்.

காமம் சரியும் பார்க்காது தவறும் பார்க்காது. அந்த நேரத்து இன்பத்தை மட்டும் எண்ணிக் கொள்ளும். அதனால் வரும் பின் விளைவுகள் எதையும் அது சிந்திக்காது. விதற்பரையும் இப்போது அந்த நிலையில்தான் இருந்தாள்.

அவனுக்கோ அந்த வருடல் மட்டும் போதும் போலில்லை. தன் ஷேர்ட்டின் பொத்தனர்களைக் கழற்றிக்கொண்டே, அடக்க முடியா ஆர்வத்துடன், எதையோ தேடும் தேடலுடன் அவளுடைய தேகம் எங்கும் முத்தமிட்டான்.

அப்பப்பா… அவன் கரங்கள் என்ன மய மந்திரங்களைக் கற்றிருக்கிறதா என்ன? இப்படி மதிமயங்கச் செய்கின்றனவே. அவனுடைய உதடுகள் என்ன மந்திர தந்திரங்களைக் கற்றிருக்கின்றன. இவளை செயலிழக்க அல்லவா வைக்கின்றன. தண்ணீரும் தீயும் கலப்பது காமம் ஒன்றில் மட்டும்தான் சாத்தியம்போலும். அவள் குளிர்ந்தாள், அவன் எரிந்தான், இரண்டுக்கும் மத்தியில் உடல் காமம் தன்னிலை கெட்டுப் பொங்கியது.

மெல்ல மெல்ல மொத்தமாய்த் தொலைந்தவள், அடுத்து நடக்க இருப்பதை உணர்ந்தவளாய், ரசனையுடனும், பெரும் எதிர்பார்ப்புடன் விழிகளை மூடிக் காத்திருக்க,

“விது…” என்கிற அன்னையின் சீற்ற முகம் அவளுடைய மனக்கண்ணில் வந்து நின்றது.

‘அம்மா… அம்மா இங்கே என்ன செய்கிறார்கள்?” குழம்பியவளுக்கு அதுவரையிருந்த மாயவலை, காமவலை சட்டென்று அறுந்து போனது.

ஐயோ…! இவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள்? பதறியவளாய் படக்கென்று விழிகளைத் திறந்தாள் விதற்பரை.

அதுவரை இன்பத்தில் துடித்த உதடுகள் பயத்தில் தாறுமாறாக எகிறத் தொடங்கியது. மெது மெதுவாகச் சுரனை வரப்பெற்றவளாகத் தான் செய்துகொண்டிருக்கும் காரியத்தின் வீரியம் புரிய அதிர்ந்து போனாள்.

அவ்வியக்தனோ, ஆர்ப்பணிக்கும் பேரலையாய் அவளை ஆண்டு முடிக்கும் அவசரத்தில் இருந்தான்.

என்ன காரியம் செய்யத் துணிந்தாள்…? எந்த எல்லை வரை செல்ல முயல்கிறாள்… இதை அன்னை அறிந்தால்…? கடவுளே…! பதறித் துடித்தவளாகச் சற்றும் யோசிக்காமல் அவனைப் பலம்கொண்ட மட்டும் தள்ளிவிட்டு, எழுந்தமர்ந்தவளுக்கு மயக்கமே வரும்போலத் தோன்றியது. அந்தக் குளிரிலும் பயங்கரமாக வியர்த்துக் கொட்டியது. தேகம் நடுங்கத் தொடங்கியது.

எத்தனை சுலபத்தில் காம இச்சைக்கு மசிந்து போனாள். திருமணத்திற்கு முன்பே படுக்கையைப் பகிர நினைத்துவிட்டாளே. அது காதலால் விளைந்த தடுமாற்றமேயானாலும், அதற்கென்று ஒரு வரைமுறை இருக்க வேண்டாமா? கடவுளே…! கொஞ்சம் தாமதித்தாலும், என்னவாகியிருக்கும்? அவள் மீது நம்பிக்கை வைத்து இத்தனை தூரம் அனுப்பி வைத்த அன்னைக்கும் தந்தைக்கும் அவள் கொடுக்கும் பரிசு இதுதானா? தன்மீதே ஆத்திரமும் அருவெறுப்பும் தோன்றத் தவிப்புடன் எதிலிருந்தோ தப்பிப்பது போலத் தன் கரங்களுக்குள் முகத்தை மறைத்துக் கொள்ள, அதுவரை, கிடைத்த அறுசுவை விருந்து தட்டிப்போன ஆத்திரத்துடன் எழுந்தமர்ந்தான் அவ்வியக்தன்.

அவளுடைய திடீர் விலகள் சீற்றத்தைக் கொடுக்க, உள்ளே எழுந்த உணர்ச்சியை அடக்கும் சக்தியற்றவனாய்,

“ஏன்…?” என்றான் அடங்கிய ஆத்திரத்தோடு.

முதன் முறை, வாழ்வில் முதன் முறையாக ஒரு பெண்ணை எந்தப் போதையின் துணையுமின்றி உணர்ந்து ரசித்துத் தொட விளைந்தான். ஆனால் அதுவும் கண்ணிமைக்கும் நொடியில் நழுவிப் போவதென்றால். அதை அவனால் தாளவே முடியவில்லை. எங்கே தவறு நடந்தது? நன்றாகத்தானே போனது?

“ஏன்…? என்னாச்சு…?” இன்னும் அவனால் தன் உணற்சியை ஒரு கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அவளை அடையாவிட்டால், செத்துவிடுவோமோ என்று கூடப் பயமாக இருந்தது. ஆனாலும் விலகியவளிடம் சென்று தன் காம சுகத்தை அனுபவிக்கவும் அவன் விரும்பவில்லை.

“உன்னைத்தான் கேட்கிறேன்…! ஏன்? இதுவரை நன்றாகத்தானே போனது?” இப்போது சீற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது.

அவளோ, அவனைப் பார்க்கும் சக்தியற்றவளாகத் தலையை மறுப்பாக அசைத்து,

“ஐ ஆம் சாரி… ஐ கான்ட்…” என்றாள்.

“வை நாட்…? உனக்கும் இது பிடித்துத்தானே இருக்கிறது? பிறகென்ன?” என்று பற்களைக் கடித்தவாறும் கேட்க, விதற்பரைக்குத் தன் தலையை எங்கே கொண்டு சென்று வைப்பதென்றுதான் தெரியவில்லை.

புத்தியைப் பேதலிக்கச் செய்யும் சக்தி இந்தக் காதலுக்கு மட்டும்தான் உண்டு என்று அப்போது தெரியாமல் போய்விட்டதே. எப்படி மயக்கச் செய்துவிட்டது அவளை. விழிகளில் கண்ணீர் கோர்க்க,

“இல்லை அயன்…! திருமணத்திற்கு முன்பு இப்படி உங்களோடு நடந்து கொள்ள என்னால் முடியாது. இது தப்பு.” என்றாள் பெரும் குற்ற உணர்ச்சியுடன்.

அதுவரை ஒரு வித இறுக்கத்துடன் இருந்த அவ்வியக்தன், கடும் அதிர்ச்சியுடன் விதற்பரையைப் பார்த்து விழிகளைச் சுருக்கி,

“என்ன… சொன்னாய்? திருமணமா?” என்றான்.

இவளோ அவசரமாகக் கழற்றப்பட்ட தன் ஆடைகளின் பொத்தான்களை நடுங்கிய கரங்களால் போட்டவாறு, அவனைப் பார்த்து,

“ஆமாம் அயன்…! திருமணம்தான்…! விரைவாக அம்மா அப்பாவிடம் வந்து பேசுங்கள்… நாம் திருமணம் முடித்துக் கொள்ளலாம்…” என்று அன்றைய தவிப்புக்கு ஒரு தீர்வு சொல்ல அவ்வியக்தனோ அவளை நம்ப மாட்டாதவன் போல வெறித்துப் பார்த்தான்.

சற்று நேரம் அவனுக்குப் பேச்சே எழவில்லை.

திருமணம் அவன் வாழ்வில் வெறுத்து ஒதுக்கும் சம்பவங்களில் ஒன்று. ஆனால் இவள் என்னவென்றால், எதை அவன் வெறுத்து ஒதுக்குகிறானோ, அதையே செய்யச் சொல்கிறாளே… சடுதியில் அவள் மீதான தேடல் தொலைந்து அங்கே எரிச்சல் வந்து உட்கார்ந்து கொண்டது. கூடவே ஆத்திரமும் வந்தது.

இவள் என்ன நினைத்துக் கொண்டாள். ஆசை காட்டி மோசம் செய்கிறாளா. இந்த உடலை வைத்து அவனைத் திருமண வாழ்க்கைக்குள் விழ வைக்க முயல்கிறாளா? உதடுகளை அழுந்த மூடி நின்றவன், இப்போது அவளைத் திரும்பிப் பார்த்து,

“எனக்குத் திருமணத்தின் மீது நம்பிக்கையில்லை என்று உனக்குத் தெரியும்…” என்றான் கடித்த பற்களுக்கிடையில்.

இவளோ தன் காதுகளையே நம்ப முடியாதவளாக அவனை வெறித்தாள்.

“நம்பிக்கையில்லையா…?” என்றவளுக்கு இப்போது அதிர்ச்சி நீங்கி அங்கே கடும் ஆத்திரம் பிறந்தது.

“நம்பிக்கை இல்லாமலா என்னை அணைத்தீர்கள்…? முத்தமிட்டீர்கள்…? எதற்கு என்னோடு…” என்றவள் அதற்கு மேல் வார்த்தைகளை முடிக்க முடியாமல் கீழ் உதட்டை மேல் பற்களால் கடிக்க, அவனோ,

“கமான்… தற்பரை… இது என்ன கேள்வி…? ஏன் என்று உனக்குத் தெரியாது?” என்றவன், தலையை அசைத்து, “ஐ லைக் யு தற்பரை… அன்ட் யு லைக் மீ டு… ஒரு ஆணும் பெண்ணும் இணைய இதை விட வேறு என்ன வேண்டும்..?.” என்றான் பொறுமை அற்ற குரலில்.

அதைக் கேட்ட விதற்பரைக்கு எதுவோ பொறித் தட்டியது. அவனை உறுத்துப் பார்த்தவள்,

“ஜெஸ்ட் லைக்… நாட் லவ்…” என்றாள் கூர்மையாய். அதைக் கேட்டவனின் முகம் மேலும் கசங்கிப் போனது. ஏதோ கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டதுபோல முகத்தை வைத்து,

“லவ்…?” என்று முகத்தைச் சுளுக்கியவன், “ஐ கான்ட் பிலீவ் திஸ்…” என்றவாறு வாகனத்தின் கதவைத் திறந்து வெளியே குதித்து இறங்க விதற்பரையும் ஆத்திரத்துடன் கீழே இறங்கினாள்.

அவனுக்கு இந்தத் திடீர் திருப்பத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. அவன் நினைத்தது என்ன நடப்பது என்ன? பொறுமையற்று அங்கும் இங்கும் நடந்தான். பின் அவளைத் திரும்பிப் பார்த்து,

“கமான் தற்பரை… எப்போது இந்தக் கற்பனை உலகத்திற்குள் நுழைந்தாய்? நீ ஒரு எதார்த்த வாதி என்று நினைத்தேனே…?” என்று கூற விதற்பரைக்கோ தன்னைச் சுற்றி ஏதோ மாய வலையே பின்னப்பட்டிருப்பது போலத் தோன்றியது.

கண்ணிமைக்கும் நொடியில் ஒரு அழகிய தருணம் இப்படிக் கசப்பைக் கொடுக்கும் தருணமாக மாறிவிடுமா என்ன? அவளைச் சுற்றியிருந்த ஏதோ ஒரு இன்ப அலை அறுபட்டவளாய், கசப்புடன் அவனைப் பார்த்தவள்,

“என்ன சொன்னீர்கள்? காதல் என்பது கற்பனை உலகமா?” என்றாள் நம்பாத பாவனையுடன்.

அவனோ இவளை உனக்கு என்ன பைத்தியமா என்பது போலப் பார்த்தான். ஆனால் அவள் விழிகளில் தெரிந்த வலியையும் தவிப்பையும் கண்டவனுக்குப் பெரும் குழப்பம் உண்டானது. நிஜமாகவே நம்புகிறாளா? என்று எண்ணியவனுக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டது.

‘காதல்… டாமிட்…” என்று முணுமுணுத்தவன்னுக்கு, இவள் என்ன குழந்தையா இதையெல்லாம் நம்புவதற்கு? என்கிற எரிச்சலும் தோன்றியது. அதையே வெளிக்காட்டுபவனாக,

“டு யு ரியலி பிலீவ் இன் திஸ் ஃபன்டசி… காட்… தற்பரை… ஏன் உன் புத்தி இப்படி யோசிக்கிறது…? க…மான்…” என்றவாறு தன் முடியை மேவி இழுத்து, விட்டவாறே அங்கும் இங்கும் நடந்தவன், பின் நின்று தன் பொறுமையை இழுத்துப் பிடித்தவாறு அவளை நெருங்கி,

“தற்பரை… காதல் என்று ஒன்று இந்த உலகத்தில் இல்லவே இல்லை. அது பொய்… ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொள்ள வைத்திருக்கும் பெயர்தான் இந்தக் காதல். அதைப் போய் உண்மை என்று நினைத்து உளறுகிறாய்…” என்று அடப் பாவமே என்பதுபோல அவளைப் பரிதாபமாகப் பார்க்க, அவன் சொன்னதைக் கேட்டவளுக்கோ, உள்ளே எதுவோ சுக்கு நூறாக உடைந்து போன உணர்வு.

அவளையும் மீறிக் கண்கள் கலங்கி விழிகளை நிறைத்துப் பார்வையைத் தடுக்க, அதைக் கண்டவனுக்கு அந்தக் கண்ணீரையும் தாங்கும் சக்தி இருக்கவில்லை.

உள்ளம் ஏன் என்று தெரியாமலே வலிக்க, ஓரெட்டில் அவளை நெருங்கி, அவளுடைய கரத்தைப் பற்றப் போனான்.

இவளோ பதறியவாறு இரண்டடி பின்னால் சென்று நிற்க,

“கமான் தற்பரை. டோன்ட் பி சைல்டிஷ்… காதல்… காட்… அது திரைப்படங்களுக்கும், காதல் கதைகளுக்கும் மட்டும்தான் சரியாக இருக்குமே தவிர நிஜ வாழ்க்கைக்குச் சத்தியமாகப் பொருந்தாது…” என்றான் அழுத்தமாக.

இப்போது கண்ணீர் கன்னத்தில் வழிந்து ஓடியது.

அவள் எத்தனை பெரிய முட்டாள்…! அவன் அக்கறையாக இருப்பதைக் கண்டு அதைக் காதல் என்று நினைத்து விட்டாளே… எத்தனை பெரிய பைத்திய காரி… சே.. இதை விட ஒரு அவமானம் எந்தப் பெண்ணிற்கும் வந்துவிடப் போவதில்லையே… எதை வைத்து இவனை நம்பினாள்? தாங்க முடியாத வலியுடன்,

“அப்படியானால்… நீங்கள் என் மீது வைத்த அன்பு… அதற்கு… என்ன அர்த்தம்…” என்று தன் உயிரைக் கையில் பிடித்தவாறு கேட்டாள்.

தன் தலையை மறுப்பாக ஆட்டியவன்,

“ஐ லைக் யு தற்பரை… ரியலி ஐ லைக் யு… உன்னோடு முடிந்த வரை என்னுடைய வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்… ஐ நீட் யு… உனக்கு ஒன்று தெரியுமா எந்தப் பெண்ணோடும் இதுவரை இந்தளவுக்குப் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை… முதன் முறையாக உன்னை, உன்னோடு என் சுய நினைவோடு படுக்கையைப் பகிர ஆசைப்படுகிறேன்… இதில் என்ன தப்பு இருக்கிறது…” என்று அவன் கேட்க விதற்பரையோ அவனை ஒரு கணம் வெறித்துப் பார்த்தாள்.

அவ்வளவுதானா…? எத்தனை சுலபமாகச் சொல்லிவிட்டான்…? காதல் இல்லை என்றால் எந்தத் தைரியத்தில் அவளோடு பழகினான்…? ஆனால் அவன் ஒரு போதும் அவளைக் காதலிப்பதாகச் சொன்னதில்லையே…? நான்தான் தவறாகப் புரிந்து கொண்டேனா…? இல்லையே அவளுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்தானே…? அவள் துடித்தால் இவனும் துடித்தானே…? அது எல்லாம் வெறும் விருப்பம் மட்டும்தானா…? அவனுக்கு வேண்டியது அவளுடைய உள்ளம் இல்லையா…? வெறும் மண்ணுக்குள் போகும் இந்த உடல் மட்டும்தானா? வேதனையுடன் அவனைப் பார்த்தாள்.

“உங்களுக்கு வேண்டியது இந்த விதற்பரையின் உடல்தான் இல்லையா… இவளுடைய மனம், இவளுடனான திருமண வாழ்க்கை எதுவும் தேவையில்லை அப்படித்தானே…” என்று குரல் கம்மக் கேட்க இவனோ ஒரு பெருமூச்சுடன்,

“கமான்… ஒரு ஆணும் பெண்ணும் அதற்காகத்தானே இந்த உலகத்தில் ஜனிக்கிறார்கள்… அது தவறென்றால் எல்லாமே தவறு விதற்பரை..” என்றவன் அதிர்ந்து கசங்கிய அவளுடைய முகத்தைப் பார்த்து, அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்பது போலக் குழம்பினான். பின் அவளை நோக்கிச் சென்று,

“தற்பரை… திருமணம் கூடக் காதலைப் போலப் பொய்யானதுதான். அது நம்முடைய அன்பைக் குலைத்து விடும்… உனக்காக நானும் எனக்காக நீயும் மாறவேண்டும். நான் என் நிலை இழக்க வேண்டி வரும். நீ உன் சுயத்தை இழக்க வேண்டி வரும். அது ஒரு கட்டத்தில் நமக்குச் சுமையாகிப்போய்விடும் தற்பரை… அந்தச் சுமை நாளடைவில் நமக்கிடையில் வெறுப்பை ஏற்படுத்தும்… அந்த வெறுப்ப நம் நிம்மதியை அழிக்கும். திருமணம் என்கிறதே எதிர்பார்ப்பு நிறைந்தது. அந்த எதிர்பார்ப்புத் தவறும்போது அது ஏமாற்றத்தைத்தான் கொடுக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. நம் மகிழ்ச்சி பிறழ்ந்தால் அது நம்மைப் பிரித்துவிடும்… அப்படியான அவல வாழ்க்கை நமக்கு வேண்டாம் தற்பரை… நாம் வாழும் வரை மகிழ்ச்சியாக ஒரே வீட்டில் அவர் அவர் சுதந்திரத்தோடு இருக்கலாம்…” என்று கூற உள்ளே எழுந்த ஆத்திரத்தை அடக்க முயன்று தோற்றவளாக,

“யு மீன்… லிவிங் டு கதர்…” என்றாள் பற்களைக் கடித்தவாறு. அவனோ முகம் மலர,

“யெஸ்… ஐ ஆம்…” என்றான். இதற்கு மேல் எதையும் கேட்க சக்தியற்றவளாக, மலங்க மலங்க விழித்தாள் விதற்பரை.

“ஓ” என்றவளுக்கு அடுத்து என்ன சொல்வது என்று தெரியவில்லை. மூளையே மந்தமாகிவிட்டது போன்ற உணர்வில் குழம்பிப் போனாள்.

‘எத்தனை சுலபமாகச் சொல்லிவிட்டான்… சேர்ந்து வாழ்வோம் என்று… அவ்வளவும்தானா? தவிப்புடன் எதையோ சொல்ல வாய் எடுத்தவளுக்கு வார்த்தைகள் வெளிவரத் தடுமாறின.

“அப்படியானால்… நம் காலம் முழுவதும் அதாவது நீங்களோ நானோ பாடையில் போகும் வரைக்கும் சேர்ந்து வாழலாம் என்கிறீர்கள்…” என்றதும் பளிச்சென்று முகம் மலர்ந்தவன்,

“அப்படியில்லை தற்பரை… நம் இருவருக்கும் மனக் கசப்புகள் ஏற்படும் வரைக்கும் சேர்ந்து வாழலாம்…”

“ஓ… அதற்குப் பிறகு…”

“நண்பர்களாகவே பிரிந்து விடலாம்…” என்றவனை அதீத வெறுப்புடன் பார்த்தவளுக்கு ஒரு பக்கம் தன்னை எண்ணிச் சிரிப்பாகவும் இருந்தது இன்னொரு பக்கம் வேதனையில் நெஞ்சும் பிளந்தது.

அவளைப் பற்றி அவன் என்ன நினைத்திருக்கிறான்? படுக்கைக்கு வா என்றதும் இதோ என்று வந்துவிடுவேன் என்று நினைத்தானா… இல்லை… வாழ்ந்தது போதும் போ என்றால், சரி என்று விலகிச் செல்வேன் என்று நினைத்தானா…?

‘கடவுளே எத்தனை பொய்யான இடத்தில் காதலை வைத்துத் தொலைத்து விட்டாள். எத்தனை முறை அம்மா சொன்னார்கள், யாரோடும் பழகும்போது அளவாய் பழகு என்று… தனிமை கொடுத்த சுதந்திரம் இப்படி அவளை நிலை குலைய வைத்து விட்டதே… அவன் சொல்வதைப் பார்த்தால், அவள் மீது அவன் வைத்த அன்பு, காதல், அக்கறை… பாசம்… எல்லாம் எல்லாம் பொய்தானா…? இல்லை… இல்லை… அவன் காதல் ஒரு போதும் பொய்க்காது… நிச்சயமாக்ப பொய்க்காது…! அவன்தான் தவறாக எதையோ புரிந்து வைத்திருக்கிறான்… தெளிவாகச் சொன்னால் புரிந்து கொள்வான்… அவசரமாகத் தன் விழிகளைத் துடைத்தவள், அவனைப் பரிதவிப்போடு பார்த்து,

“இல்லை அயன்… நீங்கள்… நீங்கள் தான் காதலைப் பற்றித் தப்பாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்… உங்கள் விழிகளில் காதலைக் கண்டிருக்கிறேன்… எனக்கான துடிப்பைப் பார்த்திருக்கிறேன்… அன்று விக்டர் வந்த போது… உங்கள் முகத்தில் தெரிந்த ஆத்திரம், அது பொய்யில்லை… நீங்கள்தான் உங்களைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்…” என்று அவனுக்கு அவனை உணர்த்த வர, அவனோ அவளுடைய கரங்களைப் பற்றி,

“ஹே… ஹே… லிசின் பேபி… லிசின்…” என்றவன் அவளுடைய முகத்தை உற்றுப் பார்த்தான். பின் தன் கரங்களிலிருந்த அவளுடைய தளிர் விரல்களைச் சற்று நேரம் பார்த்தான். பின் நிமிர்ந்து அவளைப் பார்த்து,

“என்னால் காதலிக்க முடியாது தற்பரை… உன்னை மட்டுமல்ல… யாரையும் என்னால் காதலிக்க முடியாது… காதலிப்பது மட்டுமல்ல… யாரையும் திருமணம் முடிக்கவும் முடியாது…” என்றான் ஒரு வித அவஸ்தையோடு. பின், அவளுடைய கரங்களை ஏந்தி,

“பட் ஐ லைக் யு… உன்னோடு இருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது… உன்னோடு பேசும்போது, நீ செய்யும் செயல்களைப் பார்க்கும்போது இதமாக இருக்கிறது. தவிர… எனக்கு நீ வேண்டும்… ” என்றான் மென்மையாய்.

அதைக் கேட்டதும் சற்று ஒட்டிக்கொண்டிருந்த நம்பிக்கையும் மொத்தமாய் நொருங்கிப் போனது விதற்பரைக்கு.

எத்தனை நம்பிக்கையோடு இருந்தாள்… மோதிரம் போட்டு நிச்சயிப்பான் என்று காத்திருக்க… அவனோ வெறும் படுக்கை சுகத்திற்கு வா என்கிறானே… அத்தனை எதிர்பார்ப்பும் கண்ணிமைக்கும் நொடியில் அறுந்து போயினவே… எத்தனை ஏமாற்றம்…? இதை விட ஒரு ஏமாற்றத்தை வாழ்வில் சந்திப்பாளா? அப்படி என்ன பெரிய தவறைச் செய்துவிட்டாள்? காதலித்தாள்… அது பெரிய குற்றமா…? அதற்காக இத்தனை பெரிய தண்டனையா…? ஐயோ இந்த வலியை எப்படி ஜீரணிக்கப் போகிறேன்…? இதை ஜீரணிக்கத்தான் என்னால் முடியுமா…?

எதுவும் பேச சக்தியற்றவளாகச் சற்று நேரம் அமைதியாக இருந்தவள், அடுத்து, வாகனத்தின் முன் கதவைத் திறந்து ஏறி உள்ளே அமர்ந்தவாறு,

“நான் வீட்டிற்குப் போகவேண்டும்…” என்றாள் வெறுமையாய். உள்ளே மிகப் பெரும் போர்க்களம். வெளியே எதையும் காட்டப் பிடிக்காத அமைதி. அதை உணர்ந்தவன் போல,

“டோன்ட் பி சைல்டிஷ் தற்பரை… நான் நம்முடைய நன்மைக்காகத்தான் சொல்கிறேன். எப்போதும் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன்… இதோ பார்… நம் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறது. அப்படியிருக்கையில் சேர்ந்து வாழ என்ன தடை? என்று அவன் கேட்க இப்போது ஆவேசத்துடன் அவனைப் பார்த்தவள்,

“என்ன தடையா? நான் என்ன தானா வளர்ந்த பயிரா, எவன் வேண்டுமானாலும் பிடுங்கிச் செல்ல…? பார்த்துப் பார்த்துப் பதனிட்டு வளர்த்த வெற்றிலைக் கொடி… எனக்கென்று ஒரு குடும்பம் சமுகம் எல்லாம் இருக்கிறது… அதை மீறி என்னால் நடக்க முடியாது…” என்று பொறுமை இழந்து குரலை உயர்த்த, அவனோ,

“குடும்பம் சமுகம்… xxxx புல் ஷிட்… அப்சலூட்லி xxxx புல் ஷிட்… யாருக்காகப் பயந்து உன்னுடைய மகிழ்ச்சியைத் தொலைக்கிறாயோ, அதே மனிதர்கள் உனக்கு ஒரு தேவை என்றதும், ஒரு பொருட்டாகக் கூட மதிக்கமாட்டார்கள்… நல்லது செய்தால் மட்டும் தூக்கிப் பிடிக்கும் இதே சமுகம் தவறு செய்து பார்… தூக்கி மிதிக்கும்.. தங்களுக்கான தேவையை நிவர்த்திச் செய்யும் மட்டும்தான் இந்த உறவுகளுக்கு நீ வேண்டும். உன்னால் பயனில்லை என்று தெரிந்த அடுத்த விநாடி, ஒரு ஈ காக்கா கூட உன்னை நாடி வராது… நிரந்தரமில்லா அந்த உறவுகளுக்காக உன்னுடைய வாழ்க்கையைத் தொலைப்பது மிகப் பெரிய முட்டாள்தனம்…” என்றதும் அவனைப் பெரும் வெறுப்போடு பார்த்தாள் விதற்பரை.

“நிரந்தரமில்லாத உறவா? எது அயன் நிரந்தரமில்லாத உறவு…? அந்த உறவுகள் இல்லை என்றால் நீங்கள் யாருமற்ற அநாதையாகிப் போவீர்கள்… எது மகிழ்ச்சி…? சொல்லுங்கள்… எது மகிழ்ச்சி…? இப்படிக் காட்டு வாசிகள் போலக் கிடைத்தவனோடு உடலைப் பகிர்ந்து கொள்வதா? அதை விட மனித குலத்துக்கான கேவலம் அவமானம் எதுவும் கிடையாது. மனதும் உடலும் சுத்தமாக இருந்தால்தான் அது கோவிலுக்குச் சமானம். இல்லை என்றால், காறித் துப்பிவிட்டுப் போகும் சாக்கடைக்கு ஒப்பாகும்…” என்றவள் அவனை ஏளனத்துடன் பார்த்து,

“என்ன சொன்னீர்கள்… நிரந்தரமில்லா உறவா?… ஹா.. தெரியாமல்தான் கேட்கிறேன் நீங்கள் மட்டும் என்ன? நிரந்தரமாகவா என் கூட வாழப்போகிறீர்கள்…? இந்த உடல் தாகம் தீரும் வரைக்கும் சேர்ந்திருப்பீர்கள்… அதற்குப் பிறகு…? இந்த விதற்பரைக்குப் பிறகு சொதப்பறை என்று ஒருத்தி வருவாள்… இதோ இப்போது என்னிடம் தோன்றிய அதே அன்பு பாசம் அவளிடமும் வரும்… அதற்குப் பிறகு… கைகழுவுவதுதான் உங்களுக்க எளிதாயிற்றே… சுலபமாக வாசல்கதவைத் திறந்து போய் வா என்று அனுப்பி வைப்பீர்கள்… அதன் பிறகு என் நிலை…?” என்றவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இன்னுமா அவள் இதயம் வெடித்துச் சாகவில்லை…? ஒரு வேளை அந்த வலி கூட இவன் சொன்னதைக் கேட்ட அதிர்ச்சியால் மரத்து விட்டதோ? உள்ளே துடித்திருக்க,

“அப்படியில்லை தற்பரை…” என்றவனை வெறுமையாகப் பார்த்தவள்,

“ஐ நீட் டு கோ ஹோம்…” என்றாள் தெளிவாய். அவனோ,

“தற்பரை ஏன் நீ புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய்…” என்று அவன் எதையோ சொல்ல வர, அவன் குரலே உள்ளே பெரும் பிரளயத்தை ஏற்படுத்த பற்களைக் கடித்தவள்,

“ஐ நீட் டு கோ ஹோம்….” என்றாள் மீண்டும். இவனோ சலிப்புடன் அதற்கு மேல் விவாதிக்காமல் இருக்கையில் வந்து அமர்ந்து வாகனத்தை உசுப்பியவன். அதை வேகமாகச் சீற விட, விதற்பரையோ விழிகளை அழுந்த மூடிக் கிடந்தாள். வெளியே பனிப்புயல் பயங்கரமாக உருவாக உள்ளேயும் பயங்கர வலி.

எத்தனை பெரிய முட்டாளாக இருந்திருக்கிறாள். அவனுடைய நோக்கம் புரியாமல் காதல் என்று நினைத்து, அவன் எப்படிப் பட்டவன் என்று தெரிந்தும், எல்லையைக் கடக்க முயன்றாளே.

கடவுளே பறிகொடுக்கக் கூடாத ஒன்றையல்லவா அவனிடம் பறி கொடுத்து விட்டாள். இந்த ஜென்மத்தில் அதைத் திரும்பப் பெற முடியாதே. சாகும் வரைக்கும் அவன் மீது வைத்த காதல் அழியாது அப்படியே இருக்குமே. இனி அவளுடைய இதயத்தைப் பழையது போல எப்படி மீளத் திருப்பி எடுக்கப் போகிறாள்… அவளையும் மீறி உதடுகள் நடுங்கத் தொடங்க, அதைப் பற்கள் கொண்டு கடித்து அடக்க முயன்றவளுக்கு அதையும் மீறிக் கண்ணீர் பொங்கி வழியத் தொடங்கியது. அதைக் கண்டவன், தானும் வலி கொண்டவன் போல,

“தற்பரை… தயவு செய்து அழாதே… நாம் மகிழ்ச்சியா இருக்க வேண்டும் என்றுதான்…” அவன் முடிக்கவில்லை, பெரும் வலியோடு அவனைப் பார்த்தவள்.

“எது மகிழ்ச்சி அயன்… இதுவா…? காதல் திருமணம் என்பது புனிதமானது என்று சொல்லிக் கொடுத்து வளர்க்கப்பட்டவள் நான் அயன்.” என்றவள் தாள முடியாத வலியுடன் இதயத்தை அழுத்திக் கொடுத்து,

“அந்தத் திருமணம் காதல் என்பது ஒரு முறைதான் வரும் என்கிற நம்பிக்கையில் இருந்தேன். அந்தக் காதலை உங்கள் மீது வைத்தேன்… ஆனால்…” என்றவள் முடிக்க முடியாது திணற, அவ்வியக்தனின் விழிகளும் அவனையும் மீறிக் கலங்க,

“ப்ளீஸ் தற்பரை… டோன்ட்…” என்று எதுவோ சொல்ல வர, அதை இடை நிறுத்தி, தாளமுடியா வேதனையுடன் அவனைப் பார்த்து,

“ஒன்று தெரியுமா திருமணம் என்கிறது இம்மைக்கும், மறுமைக்கும் தொடரும் பந்தம்… அது ஒருத்தனுக்கு ஒருத்தியும், ஒருத்திக்கு ஒருத்தனும் என்று சொல்லும் சத்தியம்… உறுதி… ஒருவரின் மீது மற்றவர்கள் வைக்கும் நம்பிக்கை… ஆனால் பாருங்கள்… ஆரம்பத்திலேயே எனக்கு அது பொய்த்துப் போய்விட்டதே…” என்று கலக்கத்துடன் கூற, இவனோ

“கார்பெஜ்” என்றான். பின் அவளை ஏளனத்துடன் பார்த்துச் சிரித்து,

“திருமணம் என்பது சத்தியமா…? குட் ஜோக்… இப்போது சத்தியம் என்றாயே… அந்தச் சத்தியத்தை எத்தனை பேர் காப்பாற்றுகிறார்கள்? சொல்லு தற்பரை… எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள். ஏன் என் அண்ணா, உன் அத்தை… அவர்களின் வாழ்வில் நடந்தது நமக்குத் தெரியாதா என்ன? இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்குத்தான் திருமணம் முடிக்கவேண்டும் என்றால் அந்தத் திருமணம்தான் எதற்கு…? இவ்வளவு ஏன்…? திருமணம் முடித்தவர்களின் வாழ்க்கையைப் பற்றிக் கேட்டுப் பார், காறித் துப்புவார்கள். கணவன் மீது மனைவிக்கு வெறுப்பு, மனைவி மீது கணவனுக்கு வெறுப்பு, இதில் யார் பெரிது யார் சிறிது என்கிற விவாதத்தோடு ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுக்காமல், பிடிக்காத வாழ்க்கையில் சிக்கிச் சின்னாபின்னப் பட்டு, நம்பிக்கையில்லாமல், சந்தோஷமில்லாமல்… வெளியே மட்டும் மகிழ்ச்சி போல வேடமிட்டு…” என்றவன் எங்கோ வெறித்தவாறு,

“பல ஆயிரம் டாலர்களைச் செலவு செய்து, ஆயிரக்கணக்கான விருந்தினர்களைக் கூப்பிட்டுத் திருமணத்தை நடத்த வெண்டியது… திருமணத்தை நடத்திய புகைப்படங்களை எடுப்பதற்குள்ளாக ஜஸ்ட் லைக் தட்… பூம்… விவாகரத்து. இதில் காதல் திருமணம் அதை விடக் கேவலம்… ஐந்து வருடக் காதல் திருமணமான ஒரு வருடத்திலேயே முறிந்து போகிறதே…? அப்படி முறிகிற திருமணத்திற்காக எதற்குச் சடங்குகள் சம்பிரதாயங்கள்…? வெளியே வாழ்வது போலக் காட்டி, இன்னொருத்தனோடு இன்பத்தைப் பகிர்ந்து… சீ… இதுதான் சத்தியமா?” என்று அவன் ஆத்திரத்தோடு கேட்க, விதற்பரையின் முகம் சிவு சிவு என்று சிவந்தது.

அவன் சொல்வதில் உண்மை உண்டுதான். அதற்காக எல்லோரும் அப்படி என்று சொல்லவிட முடியுமா. ஒரு வருடத்தில் திருமண முறிவு ஏற்படுகிற அதே வேளையில் ஐம்பதாவது வருடத் திருமண வாழ்க்கையைக் கொண்டாடுவதில்லையா? அதையே அவள் கூற, அவனோ,

“அந்த ஐம்பது வருட வாழ்க்கையில் எத்தனை தியாகங்கள், எத்தனை ஏமாற்றங்கள், எத்தனை வலிகள். அதைக் கேட்டுப் பார் சரித்திரமே எழுதலாம்…”

“வாழ்க்கை என்றாலே விட்டுக் கொடுத்தலும், அந்த வலிகளை எதிர்நீச்சல் அடிப்பதும்தானே அயன்…”

“நாம் வாழ்வதே கொஞ்சக் காலங்கள் என்கிறபோது அந்தக் கொஞ்சக் காலங்களை நமக்குப் பிடித்தமானது போல வாழ்ந்துவிட்டுப் போவதில் என்ற தவறு இருக்கிறது?”

“திருமணம் என்பது சடங்கில்லை… அதான் வாழ்வின் உயிர் துடிப்பு… ஆலமரத்தின் வேர் போல… அது சமுகத்தின் பிணைப்பு… திருமணம் இல்லை என்றால், ஒரு சமுகமே இல்லை….”

“ஆணிவேர், பந்தம், பிணைப்பு கேட்க நன்றாகத்தான் இருக்கிறது… ஆனால் நிதர்சனம் அதுதான் சுலபமாகப் பணம் சம்பாதிக்கும் வழி முறை…” என்றவனை அதிர்வுடன் பார்த்தாள் விதற்பரை. இவனோ விரக்தியாக அவளைப் பார்த்துவிட்டு,

“புரியவில்லையா… வசதியானவனை வளைக்க வேண்டியது. திருமணம் முடித்த பின், விவாகரத்தென்று அவனுடைய சொத்தில் பாதியை எடுக்க வேண்டியது… அதிகமான திருமணங்கள் அதற்காகத்தானே நடக்கிறன…” என்றான் ஏளனத்துடன்.

அதைக் கேட்டதும் இவளுக்கு ஆத்திரம் மிதமிஞ்சிக் கிளம்பியது.

அவளைப் பற்றி இவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்… இவன் சொல்வதைப் பார்த்தால், அவனை மணமுடிக்க ஆசைப்படுவதே அவன் சொத்துக்காக என்பது போல அல்லவா இருக்கிறது

“ஹௌ டெயர் யு…” என்று சீறியவள், “ஸ்டாப் த கார்…” என்றாள் எரியும் ஆத்திரத்தோடு. அவனோ

“வை?” என்றவாறு திரும்பி விதற்பரையைப் பார்க்க அவள் முகத்தில் தெரிந்த அகோரமும், ஆத்திரமும் வெறுப்பும் கூடவே கசங்கிய முகத்தையும் கண்டு, குழம்பியவன்,

“தற்பரை… நான்…” என்று எதையோ சொல்ல வந்தான். மதிமிஞ்சிய சீற்றத்துடுன்,

“ஸ்டாப் த xxxx xxxxx கார்…” என்றவள் அதற்கு மேல் அடக்க முடியாத ஆத்திரத்துடன் அவன் பக்கமாகச் சாய்ந்து, வாகனத்தின் ஸ்டியரிங் வீலை ஒடித்துத் திருப்ப, அடுத்தக் கணம், அது திருப்பிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பக்கமாகக் கண் மண் தெரியாமல் இழுபட்டுச் செல்லத் தொடங்கியது.

What’s your Reaction?
+1
3
+1
0
+1
1
+1
0
+1
8
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!