Thu. Sep 19th, 2024

தகிக்கும் தீயே குளிர்காயவா – இறுதி அதிகாரங்கள்

(50)

 

அவன் சென்று மறைவதையே இதயம் வலிக்க வலிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் சிவார்ப்பணா. யாரோ அவளுடைய இதயத்தைப் பறித்து இழுத்துக்கொண்டு போவதுபோன்ற வேதனையில் அவள் தவித்துப் போனாள். எங்கே அவன் வைக்கும் ஒவ்வொரு அடியும், தன் இதயத்தின் துடிப்பைக் குறைத்துக்கொண்டு போகிறதோ என்று பரிதவித்துப்போனாள் அந்தப் பேதை.

 

அவனுடன் அவள் இணைந்த காலங்கள் மிக மிகச் சொற்பமே. ஆனாலும், அந்தச் சொற்ப நாட்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அவனோடு இணைந்து வாழ்ந்ததுபோன்ற ஒரு உணர்வை அவருக்கு ஏற்படுத்தியது. இனியும் அவனைப் பார்க்க முடியாது என்கிற வலி, அவளைச் செயலிழக்கச் செய்தது.

 

அவளுக்கே அவள் மீது கோபம் கோபமாக வந்தது. ஏதோ பெரிய தியாகிபோல நாட்டுக்கு அவனை விட்டுக் கொடுத்தாகிவிட்டது. அதாவது சொந்த செலவிலேயே சூனியம் வைத்துவிட்டு, இப்போது அதை எண்ணி அழுவதால் என்ன பயன்?

 

அந்த நேரம், சுற்றியிருந்த படைவீரர்கள் அவனுக்குக் கொடுத்த மரியாதையும், பெரிய பெரிய அதிகாரிகள் அவனுக்குக் கொடுத்த மதிப்பும் அவனை நெருங்க விடாமல் தடுத்துவிட்டன… அந்த நேரத்தில், அவன் ஏதோ உயர்ந்த இடத்தில் இருப்பது போலவும், அவள் தாழ்ந்துவிட்டது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தியிருந்தது. அது அவளுடைய புத்தியை மட்டுமல்ல, அவளுடைய வாழ்க்கையையும் மழுங்கடித்துவிட்டதே.

 

பாவம் அவனும்தான் என்ன செய்வான்? அவனுக்குத் தன் வேலையிலும், தன் நாட்டின் மீதும் உள்ள அளப்பரிய காதல் பற்றி அவள் அறியாததா? எதை விட்டுக்கொடுத்தாலும், சொல்லப்போனால், தன் உயிரை விட்டுக்கொடுத்தாலும் கொடுப்பானே தவிர, தன் நாட்டையும், தன் தொழிலையும் விட்டுக்கொடுக்கமாட்டானே. அப்படிப் பட்டவனிடம் வெறும் காதல் என்ன செய்துவிடும்? அவன் உயிரென எண்ணும் தொழிலுக்கு எப்படி இழுக்கைத் தேடிக்கொடுப்பாள்?

 

ஐயோ… இனி அவன் சுவாசித்த மூச்சுக்காற்றை அவள் சுவாசிக்க மாட்டாளா? அவன் அருகேயிருந்தாலே ஆயிரம் யானையின் பலம் கிடைத்ததுபோல இருக்குமே. அதை இனி அவள் உணரமாட்டாளா. அந்த மலைபோன்ற அவனுடைய ஆளுமை நிறைந்த உருவம் இனி அவளை அணைக்காதா? அந்தப் பரந்த விரிந்த மார்பில் அடைக்கலமாகும் போது, உடலின் உள்ளே உற்பத்தியாகுமே ஒரு வித கிளுகிளுப்பு… இனி அதை அவள் ஒருபோதும் உணரமாட்டாளா… உடல் தளர, உள்ளம் நடுங்க, உடல் முழுவதும் அவன் பிரிவால் சூடேறத் தவித்துப்போனாள் அந்த நங்கை.

 

போகிறானே… அவளுடைய கிங்காங் அவளை விட்டுப் போகிறானே… ஒரேயடியாகப் போகிறானே… ஐந்து மாதங்களோ, ஆறு மாதங்களோ… அவளை மறந்துவிடுவானோ…” அந்த நினைப்பே அதுவரையிருந்த கலக்கத்தை விரட்டியடிக்க, இப்போது அந்த இடத்தில் மெல்லிய கோபம் முளை விட்டது.

 

“நோ… அது எப்படி மறப்பான்… எப்படி என்னை மறக்க முடியும்… மறக்கும்படியாகவா கடந்த சில நாட்கள் சென்றன… முடியாது… முடியாது… தீரன் எனக்கு மட்டுமே சொந்தம்… அவன் எனக்காகப் பிறந்தவன், என்னை விட்டு அவனால் எங்கும் போக முடியாது. போகவும் கூடாது… அது எப்படி ஒன்றுமேயில்லை என்பது போலப் பிரிந்து போவான்?” அதற்கு மேல் அவளால் தாமதிக்கமுடியவில்லை.

 

புயலெனப் பாய்ந்தவள், அந்தப் படைவீரர்களுக்குள் சீறிக்கொண்டு ஓடினாள்.

 

‘கிங்காங்… சீ… தீரன்… ஸ்டாப்…” என்ற கத்த, அதே நேரம், அவள் அழைத்தாலும், கேட்காத அதிக தொலைவில் நின்றவனுக்கும், அவள் அழைப்பதுபோன்ற உணர்வு தோன்ற, திரும்பிப் பார்த்தான்.

 

சிவார்ப்பணா… புயல் வேகத்தில் ஓடி வந்துகொண்டிருந்தாள். பதறியவனாகப் பின்னால் யாராவது துரத்துகிறார்களா என்று பார்த்தான்.

 

அவளோ எதையும் யோசிக்காமல், அத்தனை படைவீரர்களையும் தள்ளிக்கொண்டு ஓடி வர, இவனும் பதறிக்கொண்டு இவளை நோக்கி ஓடினான்.

 

இதையே, எம்ஜென்னும், பிஜென்னும் பார்த்துக்கொண்டிருக்க, அவனோ அதைக் கவனிக்கும் நிலையில் இருக்கவில்லை.

 

பாய்ந்தவன், சிவார்ப்பணாவை நெருங்கி,

 

“என்னம்மா… என்ன ஆச்சு…” என்றவாறு சுற்றிவரப் பார்க்க,

 

“என்னை… என்னை…”

 

“உன்னை….” என்று இவன் பதற,

 

“என்னை… யாராவது கடத்த முயன்றால் என்ன செய்யட்டும்?” என்றாள் கண்களை விரித்து, அப்பாவியாக.

 

“வட்…”

 

“இல்லை… ஒரு பேச்சுக்குக் கேட்டேன்… பிறகும் என்னை யாராவது கடத்திக்கொண்டு சென்றால் நான் என்ன செய்வது?” என்று கேட்க இவனுக்கு முறைப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

 

“ஸ்டாப் இட் அர்ப்பணா… யு ஆர் ஃபைன்… நவ். உனக்கென்றும் ஆகாது…” என்று அவன் உறுதியுடன் கூற,

 

“அது எப்படி அத்தனை உறுதியுடன் கூறுவீர்கள்… அது… அது… ஆ… நான் படிக்கிற காலத்தில், ஒருவன் என்னை விரும்பினான். நான் மறுத்துவிட்டேன். ஒரு வேளை அவன் என்னைக் கடத்த முயன்றால்…” என்று அவள் கேட்க, இவனோ அவளை எரிச்சலுடன் ஏறிட்டான்.

 

“போ… போய் பழைய நினைவுகளைத் தலை முழுகி எல்லா நினைவுகளையும் அழித்துவிட்டுப் புதிய பெண்ணாக மாறு…” என்று இவன் கறாராகக் கூற,

 

“அது எப்படி… எல்லா நினைவையும் அழிப்பது… எனக்குப் பயமாக இருக்கிறது… நான் உங்கள் கூடவே வருகிறேன்…” என்று சலுகையுடன் அத்தனை பேர் முன்னாலும் அவன் மார்பில் சரிய, அவனைச் சுற்றியிருந்த படைவீரர்கள் நம்ப முடியாது திகைத்துப் பின் அவர்களையும் மீறிப் புன்னகைக்க, அந்தப் புன்னகையை அடக்க அவர்கள் பெரும் பாடு பட்டுக்கொண்டிருந்தனர்.

 

அதைக் கண்டவனுக்குப் பெரும் சங்கடமாக இருந்தது. இருக்காதா, இன்று வரை குறை கூறும் அளவுக்கு அவன்  நடந்துகொண்டதில்லை. இப்போது அத்தனை பெரு முன்னாலும் இப்படி மானத்தை வாங்கிவிட்டாளே…  சிரித்த வீரர்களைப் பார்த்து முறைத்துவிட்டு, அவளை எரிப்பதுபோலக் குனிந்து பார்த்தான்.

 

அவளோ, அவனுடைய எரிக்கும் பார்வையைக் குளிர்காயும் நெருப்பாக எண்ணியவள், வாகாகத் தன் இரு கரங்களையும் அவன் கழுத்தில் போட்டு,

 

“ப்ளீஸ்… கிங்காங்… என்னையும் உங்கள் கூடவே அழைத்துச் செல்லுங்களேன்…” என்றாள் தவிப்புடன்.

 

அவனோ, அவளைத் தன்னிடமிருந்து விலக்க முயன்றவாறு,

 

“அர்ப்பணா… என்ன இது… எல்லோரும் பார்க்கிறார்கள்… நான் இப்போது டியூட்டியில் இருக்கிறேன்..” என்று கூற, இவளோ

 

“சோ வட்…” என்றவாறு தன் உடல் முழுவதும் அவன் மீது பதியுமாறு சரிந்து நிற்க, இந்தக் காட்சியைக் கண்ட, எம் ஜென் அநபாயதீரனுக்குப் பின்னால் வந்து அவன் தோளைத் தொட்டார்.

 

“தன் பின்னால் நிற்பது யார் என்பதைப் புரிந்துகொண்டவன், அவசரமாக, சிவார்ப்பணாவைத் தன்னிடமிருந்து பிரித்துத் தள்ளிவிட்டு நிமிர்ந்து நின்றான்.

 

சிவார்ப்பணாவோ, மீண்டும் அவனோடு ஒட்டி நின்றவாறு, இன்னும் அவனுடைய மேல்க்கரத்தை இறுக அணைத்துப் பிடித்துக்கொண்டு, எம்ஜென்னையும், அவருக்குப் பின்னால் நின்றிருந்த பிஜென்னையும் பார்த்து,

 

“இதோ பாருங்கள் சார்… நான் இவரைக் காதலிக்கிறேன்… இவரும்தான்… அதனால்…” என்று அவள் கூறி முடிக்க முதல், அவனோ முதன் முதலாகத் தன் பதட்டத்தைக் காட்டி, அர்ப்பணாவைப் பார்த்து,

 

“திஸ் இஸ் டூ மச்… அர்ப்பணா… ஸ்டாப் இட்…” என்று கத்தினான். இவளோ முகத்தைச் சுருக்கி, மேலும் அவனைத் தன்னோடு இறுக்கி,

 

“ப்ராமிஸ் சார்… என்னைக் காப்பாற்றுகிறேன் என்கிற பேரில்… அதை விட, என்னை டாவடித்ததுதான் அதிகம் சார்…” என்றாள் அவள் அப்பாவியாக.

 

அநபாயதீரனுக்கோ உடல் பற்றி எரிந்தது. சினத்துடன் அவளைப் பார்த்துவிட்டு, எம் ஜென்னிடம் ,

 

“எம் ஜென்… ப்ளீஸ்… டோன்ட் பிலீவ் ஹெர்… அவள் பொய் சொல்கிறாள்.. நான்…” என்று அவன் முடிக்கவில்லை, அவனுக்கு முன்பாகத் தன் கரத்தை நீட்டி அவன் பேச்சைத் தடுத்தவர், பெரும் சீற்றத்துடன்,

 

“கேர்னல்… டியூட்டியில் இருக்கும்போது, எப்படி பிகேவ் பண்ணவேண்டும் என்று உனக்குத் தெரியாது… ஐ டிடின்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ஃப்ரம் யு…” என்றார் அவர் கடுமையாக.

 

அவனுக்கோ தலையைப் பிய்க்கவேண்டும் போன்ற வெறி எழ,

 

“எம் ஜென்… யு நோ மீ… நான் அப்படிப் பட்டவன் அல்…” என்று அவன் முடிக்கவில்லை,

 

“ஐ டோன்ட் நீட் எனி எக்ஸ்ப்ளநேஷன் கேர்னல்… ஐ டிஸ் மிஸ் யு ஃபோர் எ சிக்ஸ் மத்ஸ்…” என்றதும் இவன் அதிர்ந்தான்.

 

“நோ… எம் ஜென்… நான் எந்தத் தப்பும் செய்யவில்லை… செய்யாத எந்தத் தப்புக்கும்…” என்று இவன் ஏதோ கூற வர,

 

“திஸ் இஸ் மை ஃபைனல் டிசிஷன் கேர்னல்… யு ஆர் டிஸ்மிஸ்… ஆறு மாதங்களுக்கு நீ, இராணுவத்திலிருந்து விலக்கப்படுகிறாய்… திஸ் இஸ் மை ஆர்டர்… புரிந்ததா” என்று அதீத முறைப்புடன் பார்த்துக் கூறிவிட்டுத் திரும்பியவர், பி ஜென்னைப் பார்த்துக் கண்ணடித்து மெதுவாகச் சிரிக்க நல்லவேளை அதை அவன் கவனிக்கவில்லை.

 

பெரும் கோபத்துடன், சிவார்ப்பணாவைத் தன்னிடமிருந்து பிரித்தவன்,

 

“வட் இஸ் திஸ் அர்ப்பணா… முதன் முறையாக என்னை வேலையிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இது எத்தனை பெரிய அவமானம் தெரியுமா?” என்று அவன் கேட்க, சிவார்ப்பணாவிற்கோ, அவனுடைய கோபம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

 

அவளோ பெரும் குதூகலத்துடன், நினைத்ததை நடத்திவிட்ட திருப்தியில்,

“அது எப்படி நான் போகச் சொன்னதும் சந்தோஷமாகப் போனீர்கள்… நீங்கள் விலகிச் செல்லும்போது, எனக்கு எப்படி வலித்தது தெரியுமா? இனி ஒரு கணமும் உங்களை விட்டுப் பிரிய முடியாது என்று எனக்குத் தெரிந்து விட்டது… நான் என்ன செய்வது? இத்தனை காலம் பொய்யான வாழ்க்கை வாழ்ந்து விட்டேன்… இனியாவது உண்மையான வாழ்க்கை வாழவேண்டும் என்று ஆவலாக இருக்கிறது தீரன்… இந்தக் கணத்திலிருந்து எனக்கு யாருமில்லை… நான் யாரிடம் போவேன்… உங்களை விட்டால்… நான் தனிமரம்…” என்று அவள் ஏக்கமாகக் கூற, அவனுடைய கோபம் சூரியனைக் கண்ட பனியாக உடனே விலகிச் சென்றது.

 

“அதற்காக இப்படியா… அனைவரின் முன்னாலும்…” என்று அவன் குறைபட,

 

“வேறு வழி… உங்களுக்கு அதிரடிதான் சரிவரும்…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே, கால் இடற இல்லை இடறுவதுபோல அவள் நடிக்க, பதற்றத்துடன், அவளைப் பற்றியவன்,

 

“ஆர் யு ஓக்கே…” என்றான் ஏதோ தான் இடறிய வலியுடன்.

 

“அவுச்… கால் வலிக்கிறது தீரன்…” என்று மேலும் தடுமாற, உடனே பதற்றத்துடன் தன் கரங்களில் அவளை ஏந்திக்கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினான் அந்தத் தீரன்.

 

“நவ் ஐ ஆம்… ஓக்கே…” என்றவாறு வாகாக அவன் கழுத்தைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டவள்,  சற்றுத் தள்ளி சிரித்துக்கொண்டிருந்தவனைக் கண்டு அதிர்ந்து,

 

“தீரா.. அது டானியல்… அன்று பேருந்தில் நம்மோடு பயணம் செய்தார் அல்லவா?” என்று கேட்கத் திரும்பிப் பார்த்தவன், இவனைக் கிண்டலுடன் பார்த்து சிரித்தவனை முறைத்துவிட்டு,

 

“ஆமாம் எனக்கு கீழ் பனி புரிகிறான். என்னுடைய வலது கை… உன்னை வேவுபாக்க நாங்கள் இருவரும்தான் சேர்ந்து செயல்பட்டோம்…” என்று விளக்கம் கூற,

 

“ஓ” என்று வாயைப் பிளந்துவிட்டு

 

“ஆமாம்… ரகுவுக்கு என்னவாகி விட்டது தீரன்?” என்றாள் அறியவேண்டும் என்கிற ஆவலுடன்.

 

“ஹி இஸ் ஓக்கே நவ் அர்ப்பணா… சட்டவிரோத செயலுக்கு உடந்தையாகப் போனதால், நிச்சயம் பத்துவருட சிறைத்தண்டனை கிடைக்கும்…” என்றதும்,

 

“அவனை நான் பார்க்கலாமா தீரா?” என்றாள் ஆவலாக.

 

“இல்லை அர்ப்பணா… இராணுவத்தின் சிறைக்காவலில் இருப்பவர்களை யாரும் பார்க்க முடியாது. அதுக்கு அனுமதியில்லை. எப்படியும் தீர்ப்பு எதிராகத்தான் இருக்கும். சோ… நோ சான்ஸ்…” என்று உறுதியாகக் கூற,

 

“பாவம் பானும்மா… எப்படித் தாங்கப்போகிறார்களோ தெரியாது… ” என்ற வேதனையுடன் கூறியவள், தன் கால்களை ஆட்டியவாறே,

 

“எப்போது கல்யாணம் பண்ணிக்கலாம்?” என்று ஆவலுடன் பெரிய குண்டொன்றைப் போட, இவன் அதிர்ந்து பார்த்தவன், வேகமாகத் தன் தலையை மறுப்பாக ஆட்டி,

 

“கல்யாணமா… நாமா… நோ வே… என் வேலைக்குத் திருமணம் இடையூறாக இருக்கும்…” என்று அவன் கூறத் தன் ஒரு கரத்தை விலக்கியவள், ஓங்கி அவன் கன்னத்தில் ஒன்று கொடுக்க, அவனோ கொசு கடித்த உணர்வில் அவளைப் பார்த்து முறைத்து,

 

“என்னை இதுவரை யாரும் அடித்ததில்லை தெரியுமா?” என்று சீறினான். இருந்தும், அவளைக் கீழே விடும் எண்ணம் அவனுக்கு இருக்கவேயில்லை.

 

“இனி அடிக்கடி வாங்குவீர்கள் என்னிடம்… சரி சொல்லுங்கள் எப்போது திருமணம் முடிக்கலாம்…” என்றவள் மீண்டும் அவன் கழுத்தைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டாள்.

 

“நாட் நவ்… இப்….ப்….” அவன் முடிக்கவில்லை, வார்த்தைகள் வெளியே வரமுடியாத அளவு, அவளுடைய இதழ்கள், அவனுடைய இதழ்களை அழுந்தப் பற்றிக்கொண்டன.

 

அவளுடைய இதழ்கள் அவன் இதழ்களில் பட்டதுதான் தாமதம், வீறாப்பாகப் பேசியவனின் உதடுகள், அவளுடைய உதடுகள் செய்யவேண்டிய வேலையை அவசரமாகத் தனதாக்கிக்கொண்டன. இப்போது, அவன் உதடுகளிலிருந்து தன் உதடுகளைப் பிரிக்க அவள் முயற்சிக்க, அந்த விடாக்கண்டனோ, அவளைப் பிரிந்து செல்ல விடாது, மேலும் தன்னை நோக்கித் தூக்கி வாகாக அவள் இதழ்களை மேலும் சுவைக்கத் தொடங்க, ஒருவாறு அவன் வேகத்திடமிருந்து தன்னை விடுவித்தவள், பெருமூச்சு வாங்க,

 

“இப்போது சொல்லுங்கள் எப்போது திருமணம் முடிக்கலாம்…” என்றாள் ஆவலாக.

 

“சூன்… மேபி ரைட் நவ்…” என்றவன் மேலும் அவளுடைய உதடுகளை நோக்கி வேகமாகக் குனியத் தொடங்க இவள் கிளுகிளுத்தவாறே அந்த முத்தத்தை ஏற்றுக்கொண்டாள்.

 

(51)

 

ஐந்து வருடங்களுக்குப் பிறகு

 

அர்ப்பணா தன் வசந்த மாளிகையில் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடித் திரிய, நான்கு மூன்று ஒன்று என்கிற வயதில் மூன்று ஆண்குழந்தைகள் கை கால்களுக்குள் இடறுப்பட, ஏதோ உலகத்தையே தன் தலையில் சுமப்பதுபோன்ற நினைவில், சமையலறையில், மரக்கறிகளை வெட்டிக்கொண்டிருந்த மாமனாரிடம்,

 

“மாமா… உங்கள் பேரன்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை… கொஞ்சம் அவர்களைக் கவனியுங்கள்…” என்று கத்தியவாறு, தன் படுக்கையறையை நோக்கி அவசரமான வேலையாக ஓடினாள் சிவார்ப்பணா.

 

அங்கே கபேர்டில் இருந்த படுக்கை விரிப்புக்களை இழுத்து எடுத்தவள், அதில் இரண்டு மூன்றைத் தேர்ந்தெடுத்துக் கட்டிலில் போட்டு, அதில் எதைக் கட்டிலுக்கு விரிப்பது என்கிற முக்கிய பிரச்சனையான தலைப்பில் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தாள்.

 

ஓய்வுபெற்ற பிஜென் விஷ்வானந்த், இது வரை அவருக்குக் கீழிருந்த வேலையாட்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த மனிதர், தன் மருமகளின் கட்டளைக்கேற்ப, அவசரமாகத் தன் வேலையை விட்டு விட்டுப் பேரக்குழந்தைகளைச் சமாளிப்பதற்காக முன்னறையை நோக்கி ஓடினார்.

 

அவருக்கு யாரிடமும் இல்லாத பயம் தன் மருமகளிடம் அதிகமாகவே இருந்தது. இருக்காதா, இத்தனை வீரமான, திறமையான விவேகமான தன் மகனையே சுண்டுவிரலில் வைத்துப் பந்தாடும், மருமகளிடம் அவருக்குப் பயமிருக்காது போகுமா என்ன? யாருக்கும் அடங்காத தன் மகன், மருமகளிடம் மட்டும் பெட்டிப் பாம்பாக அடங்கிப்போகும் வரலாற்றுத் திருப்பத்தை அவர் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார். வெளியே புலியாக இருப்பவன், சிங்கமாகக் கர்ச்சிப்பவன், தன்னவளின் கரத்தில் மட்டும் பூனையாகி முயலாகி அடங்கியிருப்பதை எண்ணி நகைப்பவராயிற்றே அவர்.

 

திடீர் என்று “டேய் விஷ்வா…” என்று அலறியவள், பின் தன் நாக்கைக் கடித்து, ஆனந்த் என்று தன் மூத்த மகனை அழைக்க, எப்போதும் போல அதிர்ந்து நிமிர்ந்த பிஜென் விஷ்வானந்த், மருமகள் தன்னைத் திருத்தி, ஆனந்த் என்று மாற்றிக்கொண்டதும், ஆசுவாசப் படுத்திக்கொண்டு, மூத்த பேரனை அனுப்பி வைத்தார்.

 

மூத்தவன், தன் தாத்தாவின் பெயரான விஷ்வானந்த் என்கிற பெயரைக் கொண்டவன், அன்னையின் அழைப்பில் விழுந்தடித்துக்கொண்டு ஓடி,

 

“யெஸ் மா…” என்றவாறு பவ்யமாக நின்றான். இருக்காதா, மாமனாரும், தந்தையும் அடங்கிப்போகும் தன் அன்னையிடம், இவன் மட்டும் வீறாப்புக் காட்ட முடியுமா என்ன?

 

“டேய் ஆனந்த்… இதில் எதுடா நன்றாக இருக்கும்?” என்ற படுக்கை விரிப்பைக் காட்டிக் கேட்க, அந்த நான்கு வயது வாண்டு, தாயோடு சேர்ந்து எதைத் தேர்ந்தெடுப்பது என்று யோசித்து, ஒன்றை எடுத்துக் கொடுக்க,

 

“இல்லைடா… இது நன்றாக இருக்காது… இது எப்படி?” என்றவாறு அருகேயிருந்ததை எடுத்துக் காட்டிக் கேட்க, அந்த மகனோ , ‘அப்போ எதற்கு என்னைக் கேட்டாய்?’ என்பது போலத் தந்தையின் பாவனையுடன் கேட்க, தன் மகன் பதில்சொல்லாது இருக்க,

 

“என்னடா… பதில்…” என்றவாறு திரும்பிப் பார்த்தவள், தன் மகனில் தன்னவனைக் காண, அப்போதூன் தன் தவறு புரிந்தவளாக,

 

“ஹி ஹி … அதில்லைடா… மூன்றுமே நன்றாக இருக்கிறதே… எதை எடுப்பது என்று… சின்னத் தடுமாற்றம்… சரி சரி… இதையே கட்டிலுக்கு விரிக்கிறேன்…” என்று மகனைச் சமாதானம் செய்து அதையே தேர்ந்தெடுத்து விரித்தவளுக்கு இப்போது திருப்தியாக இருந்தது.

 

“இப்போது எப்படிடா இருக்கிறது?” என்று கேட்ட அன்னையிடம்,

 

“சூப்பர்மா…” என்ற ஆனந்த் விட்டால் போதும் என்று தாத்தாவை நோக்கி ஓட்டம்  எடுத்தான். இருக்காதா?

 

நன்றாக  இல்லையென்றால், மீண்டும் அன்னை அறையை மாற்றி அமைக்க முயற்சிசெய்வாளே… மீண்டும் அபிப்ராயம் சொல்ல இவன்தான் ஓடி வரவேண்டும் . ஒரு முறை என்றால் பரவாயில்லை. சின்ன சின்ன மாற்றத்திற்கும் அன்னை அவனைத்தானே தேடுவாள்.

 

அநபாயதீரன் இருந்திருந்தால், மகன் இருந்த இடத்தில் அவன்தான் இருந்திருப்பான். ஒவ்வொரு சின்ன அழைப்புக்கும் “தீரன்..” என்று வீரிடும் மனைவியிடம் பதறி அடித்துக்கொண்டு ஓடுவான். பார்த்தால், இந்தக் கேர்டின் ஓக்கேவா… அந்த மேசை அங்கே இருந்தால் ஓக்கேவா…” என்று தேவையில்லாததிற்கெல்லாம் கணவனை இழுத்துக்கொண்டிருப்பான்…  அவனும் சலிக்காமல் பதில் சொல்லுவான்.

 

“தன் அறையை இன்னொரு முறை ரசனையோடு பார்த்தவளுக்குத் திருப்தி வர, இராணுவ உடையில் அங்கே மாட்டியிருந்த தன் கணவனின் ஆளுயரப் படத்தினருகே சென்றவள், அருகே வைத்திருந்த ஸ்டூலை அருகே இழுத்து அதன் மீது ஏறி நின்று, அவன் முகத்தைத் தன் கரத்தால் வருடிக் கொடுத்தவன்,

 

“ ஐ மிஸ் யு தீரன்…” என்றவளின் விழிகள் மேலும் குளமாக, அவன் கன்னத்தில் முத்திட்டுவிட்டு,

 

“இன்னும் அரை மணி நேரத்தில் தயாராகிவிடுவேன் ஓக்கேவா?” என்று படத்திடமே கூறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள் சிவார்பப்ணா.

 

தன் மருமகள் குளிக்கப்போய்விட்டாள் என்பதைப் புரிந்துகொண்ட விஷ்வானத்திற்கு உதட்டில் மெல்லிய புன்னகை வந்து அமர்ந்து கொண்டது.

 

இன்று அவளுடைய உயிரானவன், தன் முக்கிய கடமை ஒன்றை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டுத் தன் குடும்பத்துடன் இணைய, ஒரு வருடத்திற்குப் பிறகு வருகிறான்… அதுவும் தந்தையின் பதவியான பி ஜென் என்கிற உயர் பதவியையும் பெற்றுக்கொண்டு வீடு நோக்கி வருகிறான்.

 

தன்னவன் வரும் நேரம் எப்போதும் போல வீட்டை இரண்டு படுத்தும் மருமகளை எண்ணி நகைத்தவாறு, தன் மூன்று பேரக்குழந்தைகளையும் அரவணைத்துத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்ற விஷ்வநாதனுக்கு மனம் முழுவதும் நிறைந்திருந்தது.

 

தன் மகன் திருமணம் முடித்ததும், தன் வேலையிலிருந்த உடனேயே ஓய்வுபெற்றவர், அவர்கள் கூடவே வந்து சேர்ந்துவிட்டிருந்தார்.

 

அநபாயதீரன் இராணுவத்தை விடாத காரணத்தால், அடிக்கடி அவன் ஒரு வருடமோ, ஆறு மாதங்களோ, என்று செல்லவேண்டிய நிலை ஏற்படும். அந்த நேரமெல்லாம், தன்னவன் தன்னிடம் வந்து சேரும் வரைக்கும் தன் உயிரைக் கையில் பிடித்தவாறு காத்திருப்பாள் சிவார்பப்ணா.

 

தான் வருகிறேன் என்கிற செய்தியை அவனிடமிருந்து பெற்ற பின்புதான் இவளுக்கு உயிரே திரும்ப வரும். கூடவே உணர்வும் வரும். மந்த கதியில் அலைந்து திரிபவள், சுறுசுறுப்புடன், அத்தனை காலமாக மழுங்கியிருந்த உற்சாகத்தை மீட்டெடுத்து பழைய சிவார்ப்பணாவாக மாறுவாள்.

 

தன் மகன் மருமகள் நினைவிலிருந்தவரிடம் விரைந்து வந்த சிவார்ப்பணா,

 

“மாமா… நான் தயாராகிவிட்டேன் நேரம் போய்விட்டது… கிளம்பலாமா என்ற மருமகளைப் புரியாமல் பார்த்தவர், தன் கைக்கடிகாரத்தை ஒரு முறை பார்த்தார்.

 

“இப்பவேயா… நேரத்தைப் பார்த்தாயா? இப்போதுதான் ஒன்பது மணி, அநபாயன் வந்திறங்க இன்னும் ஐந்து மணி நேரம் இருக்கிறது… அநா” என்றவரிடம்,

 

“இல்லையே… அப்போது கூட ஒன்பது மணி என்றுதானே இருந்தது…” என்றவாறு நம்பமாட்டாமல் தன் கடிகாரத்தைப் பார்க்க, அதுவும் விஷ்வானத் கூறியதையே மெய்ப்பித்தது. என்ன மாமா… இந்த நேரமே போகமாட்டேன் என்கிறது…” என்று சலித்தவள், எரிச்சலுடன் சோஃபாவில் தொப் என்று அமர்ந்து, தன் நகத்தைக் கடித்துக் கடித்துத் துப்பத் தொடங்கினாள். ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு முறை, விழிகள் கடிகாரத்தையே பரிசோதித்துக்கொண்டிருந்தன.

 

எப்படியோ நேரத்தைப் போக்காட்டியவள், எப்படியோ நேரம் இரண்டு மணியைக் கடக்க, பரபரப்புடன் கிழம்பிவிட்டாள்.

 

ஏயர்போர்ட் வந்ததும், மாமனாரிடமே காரையும், குழந்தைகளையும் பொறுப்புக் கொடுத்தவள், அவர் பதிலைக் கூட எதிர்பாராமல், எயர்போர்ட்டின் உள்ளே பாய்ந்தாள் சிவார்ப்பணா.

 

பியர்சன் எயர்பொர்ட்டின் உள்ளே தன் கணவனின் வரவிற்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்க, இரண்டு மணிக்குத் தரையிறங்கவேண்டிய விமானம், இரண்டு பதினைந்துக்கு இறங்கி அவளுடைய சாபத்தைத் தாராளமாக வாங்கிக்கொண்டது. எப்படியோ பிரத்தியேக வேலைகள் முடிந்து பயணிகள் வெளியேற மணி மூன்றாகிவிட்டது.

 

தரையிறங்கிய விமானத்திலிருந்து பயணிகள் வெளியேறத் தன்னவன் எங்கே எங்கே என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கத் தன் இரண்டு லக்கேஜை இழுத்துக்கொண்டு, அந்த எயர்போர்ட்டையே சிறிதாக்கியவாறு, இராணுவ உடையில், எண்ணுக்கணக்கில்லா பதக்கங்கள் ஆடை முழுவதும் குத்தியிருக்க, கம்பீரமாக பிரிகேடியர் ஜெனரல் பட்டத்துடன் வெளியே வந்துகொண்டிருந்தான் அநபாயதீரன்.

 

அவனைக் கண்டதும், அடக்கிவைத்திருந்த நிம்மதி வெளியேற, உள்ளம் படபடக்க, விழிகளில் கண்ணீர் பொங்க, உதடுகள் நடுங்கத் தன்னவனை ஒரு வருடத்திற்குப் பிறகு கண்ட பரபரப்பில் என்ன செய்கிறோம் என்பது கூடப் புரியாமல், பாதுகாப்பிற்காகப் போட்டிருந்த வேலியைத் தாண்டிக் காவலர்கள் தடுப்பதற்குள்ளாக, தன்னவனை நோக்கிப் பாய்ந்தாள் சிவார்ப்பணா.

 

தூரத்திலிருந்து வரும்போதே தன்னவளின் கசங்கிய முகத்தைக் கண்டுகொண்டான் யாதுமாகியவன். அவளைப் பற்றி அறியாதவனா அவன். அடுத்து அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதை உடனே ஊகித்தவன், அவளை நோக்கிப் பாய்ந்து வரத்தொடங்கினான்.

 

தன் மனைவியின் வேகத்தைக் கண்டு எப்போதும் போல நகைத்த அநபாய தீரன், தன் கரத்திலிருந்த பையை உடனே கீழே போட்டுவிட்டுக் கரத்தை விரிக்க, ஓடியவள் பாய்ந்து அவன் இடையில் தன் கால்களைப் போட்டுப் பிணைத்து, அவன் கழுத்து வளைவில் தன் தலையைப் புதைத்து, கரங்களால், அவனை இறுக வளைத்துப் பிடித்தவளின் கண்ணீர் அவன் கழுத்தை நனைக்கத் தொடங்க, அவனோ அவளை அணைத்தவாறு, புன்னகை சிந்தி அவளுடைய முதுகை வருடிக்கொடுத்தான்.

 

“ஹே… அதுதான் வந்துவிட்டேனே.. பிறகு என்ன… கன்ட்ரோல் யுவர் செல்ஃப் கண்ணம்மா… “ என்று அவன் அவளைச் சமாதானப் படுத்தினாலும், அவனுடைய விழிகளிலும் கண்ணீர் பெருக்கெடுக்கத்தான் செய்தது.

 

அந்தக் காட்சியை அங்கிருந்த சக மனிதர்கள் கண்டு, அவர்களும் தம்நிலை கரைந்து போய் நின்றனர். உடனே அவர்கள் நிலையைக் கண்ட மற்றவர்கள் தமது கண்களில் கண்ணீர் பொங்கினாலும், உதடுகள் புன்னகைக்கத் தமது கைப்பேசியில் அவர்களின் நிலையைப் படம் பிடிக்கத் தொடங்கினர். இதைக் கவனிக்கும் நிலையில் அவர்கள் இருவருமே இருக்கவில்லை. இதில் ஒருவர் உடனேயே முகப் புத்தகத்தில், அவர்களின் நிலையை விடியோ எடுத்துப் பதிவிட, அடுத்த ஒரு மணி நேரத்தில் அது வைரலாகியது என்பது வேறு கதை.

 

தன் அணைப்பிலிருந்த மனைவியைத் தூக்கியவாறே, சென்றவன், தரையில் முழங்கால் மடிய அமர்ந்து அங்கிருந்த இருக்கையில் அவளை மெதுவாக அமர்த்தியவாறிருக்க, அவள் மேலும் அவனை வாகாக இறுக அணைத்துக்கொண்டாலும், கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை. கூடவே அவளிடமிருந்து பலத்த கேவலும் வர, அவளை விட்டு விலகாமலே, அவள் தலைமுடியைப் பற்றியும் கலைத்தும், அழுந்த வருடியும் கொடுத்து, ஆசுவாசப் படுத்திக்கொண்டிருந்தாலும், அவனும் தன் அழுகையை அடக்கத் தன் தொண்டையை செருமவேண்டித்தான் இருந்தது.

 

அதே நேரம், விஷ்வநாதன், தன் மூன்று பேரக் குழந்தைகளுடனும் அவர்களை நோக்கி வந்துவிட்டிருந்தார்.

 

தன் கலங்கிய விழிகளாலேயே தந்தைக்கு ஹாய் சொன்னவன், தன் குழந்தைகளைப் பார்த்துக் கண்ணடித்து ஒரு கரத்தை விரிக்க, தம் தந்தையைக் கண்ட பெரும் மகிழ்வில், “ அப்பா… “ என்றவாறு, கோழிக் குஞ்சுகளாக, மூவரும் ஆளுமை மிக்க தம் தந்தையின் பெரிய கரங்களுக்குள் தாயுடன் சேர்ந்து அடைக்கலமாகியிருந்தனர்.

 

மனைவியின் அணைப்பை விடாமலே, மூவரின் நெற்றியிலும் முத்தமிட்டவன், பின் தன் மனைவிமீது கவனத்தைச் செலுத்தினான்.

 

“இட்ஸ் ஓக்கேமா… கொன்ட்ரோல் யுவர் செல்ஃப்… அதுதான் வந்துவிட்டேன் அல்லவா…” என்று கூறி அவளை அசுவாசப் படுத்த முயல, அவளோ அவனை விட்டு விலகும் எண்ணம் எதுவுமே இல்லாமல் தன் கேவலைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

 

உடனே விஷ்வநாதன் தன் மகனிடம்,

 

“நாங்கள் வீட்டிற்குப் போகிறோம்… நீ அழைத்து வாப்பா…” என்று கூறிவிட்டுத் தன் மகனின் தோளில் தட்டிக்கொடுத்தவாறு விலக முயல, அவசரமாகத் தன் கணவனின் ஆடையை ஈரமாக்கிய பெருமையுடன் நிமிர்ந்து வீங்கிய தன் விழிகளைத் துடைத்து,

 

“இல்லை மா…மா… சே… சேர்ந்தே… போ… போகலாம்…” என்று விக்கி விக்கிக் கூற, அநபாயதீரன், அப்படியே கரைந்து போனான்.

 

தன் மனைவியை அணைத்துப் பிடித்தவாறு அவளை வாகனத்தின் அருகே சென்றவன் இருக்கையில் அமர்த்திவிட்டு , தன் குழந்தைகளை அளப்பரிய காதலுடன் தூக்கி அவர்களை வாகனத்தில் அமர்த்தி மீண்டும் கரைபுரண்டோடிய அன்புடன் அவர்களின் தலையில் முத்தமிட்டவன், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த தந்தைக்கு அருகே அமர்ந்துகொண்டான்.

 

தன் மகனைப் பெருமையுடன் பார்த்த விஷ்வானந்த் “ஹெள ஆர் யு மை சன்…” என்றார்.

 

“ஐ ஆம் குட் பா…” என்று அவன் தந்தையின் முகம் பார்த்து மெல்லிய புன்னகையைச் சிந்த, திருப்திப் பட்டவராக வாகனத்தை ஓட்டினார் அவர்.

 

கடந்த ஐந்து வருடங்களாகப் பார்க்காத காட்சியா அது? ஒவ்வொரு முறையும் தன் கணவனின் தொலைபேசி அழைப்புக்காகத் துடிப்பதும், அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை என்றால் தவிப்பதும் என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்ப்பவர்தானே அவர்.

 

அவர் பிரியத்துக்குரிய மருமகள் படும் துன்பம் பார்க்க முடியாமல்தான் போன முறை அவன் வந்தபோது, பேசாமல் வேலையை விடும்படி கூறலாமா என்று கூட யோசித்தார். ஆனால், அவரால் அது முடியவில்லை. தன் மகன் இந்த வேலையை எந்தளவு உயிராக நினைக்கிறான் என்பதை அவர் அறியாதவரா என்ன? ஆனாலும் தன் மருமகள் படும் அவஸ்தையைப் பார்க்கும் போது அவரால் தாங்கமுடிவதில்லை.

 

வீடு வந்ததும், அனைவரும் இறங்க, சிவார்ப்பணா, விரைந்து சென்று தன் கணவனின் கை வளைவில் புகுந்து கொண்டவளுக்கு, அந்த இடத்தில் தான் பெற்ற குழந்தைகளோ, தன் மாமனாரோ, இல்லை அந்த உலகமோ நினைவுக்கு வரவில்லை.

 

தன் தீரன் தன் கைப்பிடியில் உயிரோடு, முழுதாக எந்தக் காயமும் இல்லாமல் இருக்கிறான் என்கிற திருப்தியும் நிம்மதியும் வேறு எதையும் யோசிக்கவிடவில்லை.

 

மெதுவாக நகைத்தவன், தன்னவளைத் தன் கரங்களில் ஏந்தித் தன் தந்தையைப் பார்க்க, அவரும் தன் விழிகளை மூடித் திறந்து அனுமதி கொடுக்க, தன் மனைவியுடன் அவர்களுக்கே உரித்தான அறைக்குள் நுழைந்தான் அந்தக் காதல் கணவன்.

 

காலால் அறைக் கதவை மூடிவிட்டு நிமிர்ந்தவனுக்கு, ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் போல, அவனுடைய வரவுக்காக அறை அலங்கரிக்கப்பட்டிருந்தது. என்ன வித்தியாசம் என்றால், அவனுக்கு நீலம் பிடிக்கும் என்பதற்காக, ஒவ்வொரு முறையும் அறையை நீல நிறத்தில் அலங்கரித்து அசத்தியிருப்பாள். ஆனால் இந்த முறை, இளஞ்சிவப்பில் அலங்கரிக்கப்பட்டிருக்க, இவன் நகைப்புடன்,

 

“என்ன… ஒரே இளஞ்சிவப்பாக இருக்கிறதே… இப்போதும் எனக்கு நீலம்தான் பிடிக்கும் அர்ப்பணா…” என்று கேட்ட தன் கணவனின் கழுத்தில் தன் கரத்தைப் போட்டவள்,

 

“நீலம் நமக்கு ராசியே இல்லை தீரன், அதுதான் இளஞ்சிவப்பு…” என்று பொங்கிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, மூக்கை இழுத்து இழுத்து அவள் கூற, இவனோ புரியாமல்,

 

“ராசியில்லையா… ஏன்மா?” என்றவாறு அவளைக் கட்டிலில் கிடத்திவிட்டு, அங்கேயிருந்த தண்ணீர் போத்தலின் மூடியைத் திறந்து அவளுடைய வாயில் வைக்க, அதைக் குடித்து ஓரளவு ஆசுவாசப் படுத்தியவள்,

 

“பின்னே… ஒவ்வொரு முறையும் உங்கள் இனமாகவே பெற்றுவிட்டேன்… எங்கே எனக்காக ஒரு பெண் குழந்தை வேண்டாமா… அதுதான்…” என்று அவள் மூக்கை உரிஞ்சியவாறு கேட்க, இவனுக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

 

“நமக்கு மூன்று போதும் கண்ணம்மா…” என்று இவன் கூற, இப்போது அழுகை போய், அவனைப் பார்த்து முறைத்தாள் சிவார்ப்பணா.

 

“அது எப்படி மூன்று போதும்… இது என்ன இராணுவக் கூடமா… ஆண் குழந்தைகளை மட்டும் வைத்திருக்க… எனக்குப் பெண் குழந்தை வேண்டும், வேண்டும், வேண்டும்…” என்று இவள் தன் குரலை உயர்த்த, வேகமாக அவளுடைய வாயை மூடியவன்,

 

“அம்மா தாயே… நான் எல்லோரையும் என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன்… உன்னை மட்டும் ம்கூம்… முடியவில்லை… உன்னை என்ன செய்யலாம்?” என்று இவள் மூக்கைப் பற்றியவாறு இவன் கேட்க,

 

“இங்கே வந்தால் நான்தான் எம் ஜென்… நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்கவேண்டும்…” என்றவாறு எழுந்தவள், பொத் என்று அவன் மேல் விழ, அவன் படுக்கையில் மல்லாக்காகச் சரிந்தான். அவன் மார்பில் தலை வைத்துப் படுத்து, அவனுடைய இராணுவ உடையின் பொத்தானைத் திருகியவாறு, குரல் அடைக்க,

 

“நீங்கள்… முழுதாக என்னிடம் வரும் வரைக்கும் என் உயிர் என் கையில் இல்லை தெரியுமா? உங்களுக்கு ஏதாவது நடந்தால்… நானும்… நானும்…” என்று அவள் துடிக்க, வேகமாக எழுந்து, அவளைப் பிரட்டிக் கட்டிலில் விழுத்தியவன், அவளை முறைத்துப் பார்த்து,

 

“எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன்… இப்படி முட்டாள் தனமாகப் பேசாதே என்று… திரும்பத் திரும்ப… அதையே பேசுகிறாயே…” என்று சீறியவனை ஏக்கத்துடன் பார்த்தவள்,

 

“நீங்கள் என் கூடவே இருக்கவேண்டும் என்று ஆவலாக இருக்கிறது தீரன்… நீங்கள் என்னை விட்டுப் பிரியும் போது… என்னால்…” என்றவள் முடிக்கமுடியாமல் உதடுகள் நடுங்கித் தவிக்க, வேகமாக அவளுடைய உதடுகளைத் தன் உதடுகளால் பற்றிக்கொண்டவன், அடுத்துக் காட்டாற்று வெள்ளமானான்.

 

ஒரு வருடங்களாகத் தன் மனைவியின் நினைவில் மட்டும் வாழ்ந்தவனுக்கு, நினைவில் நிலைத்தவள் நிஜமாகக் கரங்களில் கிடைக்க, அதற்கு மேல் அவளுடன் பேசிக்கொண்டிருக்க அவனால் முடியவில்லை.

 

அவனுடைய கரங்களின் மீட்டலுக்கு எப்போதும் போல அப்போதும் குழைந்து உருகிக் கரையத் தொடங்கியவளை முழுவதுமாக சொர்க்கம் அழைத்துச் சென்று அங்கேயே நீண்ட நேரம் தங்கவைத்து ஒருவாறு பூலோகம் அழைத்து வந்தவன், அவளை விட்டுப் பிரிய முடியாதவனாகத் தன் கைவளைவில் வைத்திருந்தவாறு,

 

“எனக்கு மட்டும் உன்னைப் பிரிந்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நினைத்தாயா கண்ணம்மா… ஒவ்வொரு ஆபத்தும் என்னைத் தேடி வரும் போது, என் கண்முன்னால் நிலைத்திருக்கும் உருவம் உன்னுடையது மட்டும்தான்… உன்னை நினைத்த உடன், எந்தத் துன்பம் வந்தாலும், உன்னிடம் மீண்டு வந்துவிட வேண்டும் என்கிற வெறியே என்னிடம் எழும். என் உயிரின் மீது பற்றில்லாத போதே, என்னைக் காக்க முடிந்த என்னால், இப்போது உனக்காகவே வாழும் என்னைக் காத்துக்கொள்ள மாட்டேனா ம்…?” என்றவன் அவளுடைய தலையை வருடி, அவள் தலையில் மெல்லிய முத்தத்தைப் பதித்த, அவள் கழுத்து வளைவில் தன் உதட்டைப் பொருத்தி நீண்ட நேரமாக நிலைத்திருக்கச் செய்தவன்,

 

“வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த சொர்க்கம் நீ… உன்னை வருத்த நான் விடுவேனா…” என்றவன், இப்போது அவள் பக்கமாக எழுந்து சரிந்து படுத்தவன், அவள் முகத்தைவிட்டுத் தன் விழிகளை விலக்காது, காதல் பொங்க, அவனுடைய முத்தத்தால், சற்றுச் சிவந்து வீங்கிய உதடுகளைத் தன் இடக்கரத்தின் பெருவிரலால் வருடிக்கொடுத்து, அது போதாது என்பது போல, மெல்லிய முத்தம் பதித்து விலகியவன், அவளுடைய தலைமுடியை வருடிக் கொடுத்தவாறு,

 

“அதனால், அனரபிள் டிஸ்சார்ஜ்… பெறுவதற்காக ஆயத்தங்களைச் செய்து விட்டு வந்திருக்கிறேன்…” என்றதும், நம்பமாட்டாமல் அதிர்ந்தவள் திகைத்துப் பின் உள்ளம் முழுவதும் பூரிக்க, பெரும் மகிழ்ச்சியுடன் அவனைத் தள்ளிவிட்டு எழுந்து அமர்ந்தவள்,

 

“எ… என்ன சொல்கிறீர்கள்…” என்றாள் இன்னும் நம்ப மாட்டாதவளாக. அவள் அதிர்ச்சியைக் கண்டு நகைத்தவன், எழுந்து கால் நீட்டி முதுகு கட்டில் சட்டத்தில் சாயுமாறு அமர்ந்தவன், தள்ளி நின்றவளை ஒரு சுண்டலில் தன்னருகே இழுத்துக் குழந்தையெனத் தூக்கித் தன் மீது இருக்க வைத்தவன், அவளை அணைத்தவாறே அவள் தலையில் தன் முகத்தைப் பொருத்தி,

 

“ஆமாம் கண்ணம்மா… நான் பதினொரு வருடங்கள் இந்த நாட்டுக்காகச் சேவை செய்துவிட்டேன். நான் விரும்பியது போல அல்லாவிட்டாலும், இந்த வயதில் பிரிகேடியர் ஜெனரல் என்கிற பதவியையும் பெற்று விட்டேன்… இனி என் மனைவி குழந்தைகளுக்காகவும் வாழவேண்டும் என்கிற ஆவல் வந்துவிட்டது அர்ப்பணா… இப்போது கூட நம்முடைய முதல் இரண்டு குழந்தைகளின் பிரசவத்திற்கு நான் இருக்கவில்லை என்கிற குற்ற உணர்வு என்னை அரித்துக்கொண்டுதான் இருக்கிறது கண்ணம்மா. தொலைத்த காலத்தை இனிப் பெற முடியாது. ஆனால், இனியாவது என் குடும்பத்துடன் நான் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று ஆசைப் படுகிறேன்… என்னைப் போல என் குழந்தைகளும் தந்தையின் அரவணைப்பு இல்லாமல் இருக்கக் கூடாது அர்ப்பணா,” என்றதும் இவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. விழிகள் கண்ணீரைச் சொரிய,

 

“நீங்கள் என்னருகே இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது உன்மை தீரன்… ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் உங்கள் நாட்டின் மீது வைத்த அளப்பரிய பற்றும், உங்கள் வேலையின் மீது நீங்கள் வைத்திருந்த மதிப்பும் நான் அறியாதது அல்ல… அதை விடுவது உங்களுக்கு எத்தனை பெரும் வலியைக் கொடுக்கும் என்று எனக்குத் தெரியும் தீரன்… அப்படி ஒரு வலி உங்களுக்கு வேண்டாம். நான் சமாளித்துக்கொள்வேன்…” என்று அவள் குரல் கம்மக் கூற,

 

“ஐ நோ பேபி… எனக்காக என் விருப்பத்திற்காக, நீ என்னையே விட்டுக்கொடுக்க முயன்றவள், இப்போது, இந்த நிமிடம் வரையும், நீ உயிர்போகும் அளவு தவித்தாலும், என்னை வேலையை விட்டு நிற்கும்படி நீ கூறியதேயில்லை… ஆனாலும்… உன்னைப் பிரிந்து ஒரு வருடம், இரண்டு வருடங்கள் என்று தள்ளியிருக்கக் கஷ்டமாக இருக்கிறதுடா… எப்போதும் நீ என் கூடவே இருக்கவேண்டும் என்று ஏக்கமாக இருக்கிறது… அதனால் இத்தனை காலமாக நான் செயத சேவை போதும் என்று எண்ணிவிட்டேன். இனி உனக்காக, நம் குழந்தைகளுக்காக நான் வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்… உன்னை வருத்தி… என்னால் முடியவில்லையடா…” என்று அவள் கரத்தைப் பற்றித் தன் உதட்டில் பொருத்தி அழுந்த முத்தமிட்டவனை, இன்னும் நம்ப மாட்டா தன்மையுடன் ஏறிட்டுப் பார்த்தவள்,

 

“நிஜமாக… நீங்கள்… நீங்கள் எனக்கே எனக்காக…” என்று தவித்தவள், பின் பெரும் பூரிப்புடன்,

 

“எனக்காகத்தானே… எனக்காகத்தானே இந்த வேலையிலிருந்து ஓய்வெடுக்கப் போகிறீர்கள்…” என்று பெரும் குதூகலத்துடன் அவனிடமிருந்து விடுபட்டு, அவன் மீதே துள்ளி விழுந்தவாறு அவள் கேட்க,

 

“இல்லைம்மா… பக்கத்து வீட்டில், அழகான ஒரு பெண் இருக்கிறாளே… அவளை டாவடிக்கலாம் என்று ஒரு ப்ளான்…” என்றவனின் கன்னத்தில் தன் கரத்தால் ஒன்று கொடுத்தவள், பின் தாள முடியாத மகிழ்ச்சியில், அவனை இறுக அணைத்து,

 

“நீங்கள் உண்மையாகத்தானே… ஓ மை காட்… ஐ கான்ட் பிலீவ் திஸ்…” என்று அவன் மார்பில் தன் முகத்தைப் பதித்து விம்ம, அவளை இறுக அணைத்தவன்,

 

“ஆனால்… என்னால் என் வேலையை முழுதாக விட முடியாது அர்ப்பணா… நீ எந்த அளவுக்கு முக்கியமோ, இந்த நாடும் எனக்கு முக்கியம். அவர்களுக்கும் என்னை இழப்பதில் விருப்பமில்லை. அதனால், அவர்கள் அழைக்கும் போது நான் போகவேண்டும்… ஆனால் அது அதிக நாட்களுக்காக இருக்காது.” என்று அவன் கூற,

 

“இது போதும்… எனக்கு… இது போதும்… ஓ தாங்க் காட்… தீரன்… என்னால் நம்ப முடியவில்லை… என்னால்… என்னால்…” என்றவள், தன் மகிழ்ச்சிக்கு அத்தாட்சியாக அவன் முகம் முழுவதும் தன் உதடுகளால் அபிஷேகம் செய்ய, அவன் நகைத்தவாறு,

 

“அப்பாடா…. இனி இந்த அழுகுணி பொண்டாட்டியைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை…” என்றவாறு, அவள் செய்துகொண்டிருந்த வேலையைத் தனதாக்கி, வேகமாக அவளைப் புரட்டிக் கட்டிலில் போட்டு, எப்போதும் போல அவளுக்கு வலித்துவிடுமோ என்று அஞ்சியவனாக, மென்மையாக பூங்கோதெனக் கையாண்டு, உயிரையும் மெய்யயும் கலந்து உயிர்மெய் ஆக்க முயன்றுகொண்டிருந்தான்  அந்த மா வீரன்.

 

 

(முற்றும்)

What’s your Reaction?
+1
2
+1
2
+1
2
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!