Thu. Nov 21st, 2024

நிலவே என்னிடம் நெருங்காதே 21/25

நிலவு 21

முகம் முழுவதும் ஆர்வத்துடன், தன் விருப்பத்தை சர்வமகி கேட்கப்போகிறாள் என்று காத்துக்கொண்டிருந்தவனைத் தயக்கமாக ஏறிட்டு,

“அநேகாத்மன்… நீங்கள்… வந்து…”

“கமோன் சர்வமகி… என்ன வேண்டும்… கேள்… எதுவாக இருந்தாலும், நான் செய்யக் காத்திருக்கிறேன்… சொல்…” என்றான் ஆர்வம் மின்ன.

‘கேட்கலாமா? வேறு வழி…’ தயங்கியவள், பின் கேட்பதற்காக வாயைத் திறக்க, ஆநேகாத்மன் அன்று அலுவலகத்தில் வைத்து எறிந்த தந்தையின் குறிப்பேடு நினைவுக்கு வர தன் வாயை பக் என்று மூடிக்கொண்டாள்.

‘என்ன காரியம் செய்யத் துணிந்தாள்… யாரிடம் உதவி கேட்க நினைத்தாள். எந்த தைரியத்தில் அவனிடம் கேட்பாள்… தன் தந்தைக்கு ஒரு நியாயம் கிடைக்காமல், அவனிடம் போய் எப்படி… எங்கே போனது என் தன்மானம்…  நோ அது அவளால் முடியாது… நிச்சயம் முடியாது… அது அவளை மட்டுமல்ல, அவள் தந்தையையும் அசிங்கப்படுத்தியதாகவிடும்.

அவள் மீண்டும் வாய் மூடி அமைதி காக்க,

“சொல்லு மகி… நான்… என்ன செய்யட்டும்…” என்று முகம் முழுவதும் மகிழ்ச்சி  போங்க   அவன் கேட்டான்.

“அநேகாத்மன்… நீங்கள்…?”

“ம்… நான்…”

“நீங்கள்… சாப்பிட்டீர்களா?” என்றாள் மெல்லிய குரலில்.

முதலில் அநேகாத்மனுக்கு அவள் என்ன கேட்கிறாள் என்றே புரியவில்லை.

“வட்… என்ன கேட்டாய்?” என்றான் அவன் தன்னிடம் தோன்றிய அதிர்ச்சியை வெளிக்காட்டாது.

“நீங்கள் சாப்பிட்டீர்களா என்று கேட்டேன்…” இப்போது சர்வமகியின் குரலிலும் விழிகளிலும் சற்று அழுத்தம் கூடியிருந்தது. அநேகாத்மன் ஒரு கணம் அவளை வெறித்துப் பார்த்தான்.

‘அவன் என்ன கேட்கிறான் இவள் என்ன சொல்கிறாள்?’ எரிச்சல் கட்டுக்கடங்காமல் வந்தது. மனம் முழுவதும் நிறைந்திருந்த எதிர்பார்ப்பு, ஊசிபட்ட பலூனாக உடைந்து போனது.

“வட் த ஹெல் டாக்கிங் எபவுடன்…. நான் என்ன கேட்கிறேன் நீ என்ன சொல்கிறாய்? நான் சாப்பிட்டேனா, இல்லையா என்பதுதானா இப்போது பிரச்சனை…” என்று எரிந்து விழுந்தவன், ஒரு வாறு நெடிய நீண்ட மூச்சை எடுத்துத் தன்னைத் திடப்படுத்தியவனாக,

“மகி… இதோ பார்… உன்னுடையதான அத்தனை பிரச்சனைகளையும் என்னால் தீர்த்து வைக்க முடியும்… இந்த வீட்டை விற்கவேண்டுமா? அது என் பொறுப்பு. உன் சகோதரர்களுக்கு நல்ல கல்வி வேண்டுமா… ஐ வில் ஹெல்ப் யு… பட்.. நான் கேட்பதெல்லாம்… உனக்கே உனக்காக என்ன வேண்டும்… சொல்…?” என்றவனின் விழிகளில் எதுவோ மின்னி மறைந்தது.

“இ… இல்லை ஆத்மன்… எனக்கு உங்கள் உதவி எதுவும் வேண்டாம்… யாருடைய உதவியும் இல்லாமல் என்னால் சமாளிக்க முடியும்….” என்றாள் அவனை ஏறிட்டுப் பார்க்காமல்.

“கிழித்தாய்… அதைத்தான் பார்த்தேனே…” என்று சுள் என்று அவன் விழ,

“இல்லை ஆத்மன்… உங்களிடம் உதவி கேட்கும் தகுதி எனக்குக் கிடையாது…” என்றாள் விழிகளைத் தரையில் பதித்தவாறு. அவள் முகத்தைத் தன் வலக்கரத்தால் பற்றி, நிமிர்த்தியவன்,

“ஏன்… அப்படி எந்த வகையில் நீ தகுதி குறைந்துவிட்டாய்…?” என்றவன் அவள் விழிகளைத் தன் விழிகளால் ஊடுருவிப் பார்த்தான். அவள் விழிகள் வெறுமையை மட்டுமே பதிலாகக் கொடுக்க,

“என்னிடம் கேட்க ஒன்றுமே இல்லையா மகி…” என்றவனின் குரலில் என்ன இருந்தது? தவிப்பு, எதிர்பார்ப்பு, ஆவல்… ஏதோ ஒன்று அவள் விழிகளைக் கலங்கவைத்தது.

“எதுவாக இருந்தாலும் மகி… எதுவாக இருந்தாலும், நீ என்னிடம் கேட்கலாம்…” என்றான் அவன் ஒரு அவசரத்துடன். என்ன உதவியை அவனிடம் கேட்பது? எதைக் கேட்டாலும், அவன் செய்வான்தான். ஆனால், அவளால் அது முடியுமா? தன் தந்தை நிரபராதி என்பதைக் குறைந்தது, அவனுக்காவது தெளிவு படுத்தும் வரை, அவனிடம் சிறு உதவியை தன்னும் அவளால் கேட்க முடியாதே.

அவள் மௌனமாகத் தலை குனிய. பொறுமையற்ற மூச்சுடன், தன்னை சமப்படுத்த முயன்றவன், அவள் முகத்தில் பதிந்திருந்த தன் கரத்தை விலக்கித் தன் தலையைக் கோதிக்கொண்டான்.

“டாமிட்… மகி… நீ அனைத்தையும் கடுமையாக்குகிறாய்… நான் என்ன செய்யட்டும்…” என்று கோபத்துடன் கேட்டவாறு தரையைவிட்டு எழுந்து நின்றான். பின் உறுதி கொண்டவனாகத் தன் பான்ட் பாக்கட்டில் கரங்களைப் புகுத்திச் சற்றுக் காலை அகட்டிவைத்து நின்றவாறு,

“ஒக்கே… நான் நேரடியாகவே கேட்கிறேன்… உன் தந்தை இறக்கும் தறுவாயில், அவரை சமாதானப் படுத்துவதற்காக, நான் ஒன்று கூறியிருந்தேன் நினைவிருக்கா…” என்றவனை சர்வமகி வலியுடன் பார்த்தாள். அந்த வலிக்கான காரணத்தைப் புரிந்துகொண்டவனின், பாக்கட்டில் தஞ்சம் புகுந்திருந்த அவனுடைய கைமுஷ்டிகள் இறுகின. ஒரு கணம் தன் கீழ் உதட்டைக் கடித்துத் தலையைச் சரித்து ஆட்டியவன்,

“ஒஃப் கோர்ஸ்… ஐ ஹேட் ஹிம்… உன் தந்தையை வெறுக்கும் அளவுக்கு நான் உலகில் யாரையும் வெறுத்ததில்லை. பட்… அவர் இறக்கப்போகிறார் என்று தெரிந்த பிற்பாடு கையைக் கட்டிப் பார்த்துக்கொண்டு இருக்கமுடியவில்லை. தூதுக்கான காரணமும் புரியவில்லை. ஒரு வேளை, நீயாகக் கூட இருக்கலாம்… இல்லை ஒரு உயிர் அல்லல் படுகிறதே என்கிற இரக்கமாக இருக்கலாம்…  ஐ டோன்ட் நோ. ஆனால் உனக்கொன்று தெரியுமா, இது வரை நான் யாருக்காகவும் இரக்கபட்படதில்லை. இறங்கி வந்ததுமில்லை… அந்தத் தேவையும் எனக்கிருந்ததில்லை. பட் ஃபஸ்ட் டைம்… உன் தந்தையின் விஷயத்தில் நான் முழுவதுமாகத் தடுமாறிவிட்டேன்… பிகாஸ் ஒஃப் யு…” என்றவன் சற்று அமைதி காத்தான். பின் தன் கரங்களை வெளியே எடுத்து, மார்புக்குக் குறுக்காகக் கட்டியவாறு,

“பட்… நீ அந்த ஆளின் மகளாக இல்லாதிருந்தால், நிச்சயமாக என் நடவடிக்கையே வேறாக இருந்திருக்கும்… அந்த இடத்தில் வேறு ஒருத்தி இருந்திருந்தால்… என் கால் தூசி கூட, அந்த ஆளின் மருத்துவனைப் பக்கம் போயிருக்காது… அது எதனால் என்று சத்தியமாக எனக்குப் புரியவில்லை. நான் இப்படி ஒருபோதும் தெளிவில்லாது இருந்ததில்லை. வாழ்வின் முதன் முறையாக, நான் விரும்பாததை, எண்ணாததைச் செய்திருக்கிறேன்…”

“அதை எண்ணி வருந்துகிறீர்களா ஆத்மன்…” என்று தரையிலிருந்தவாறு தன் தலையை உயர்த்தி அவனைப் பார்த்துக் கேட்டவளின் குரலில் அளப்பரிய வலி தெரிய, தன்னை அண்ணாந்து பார்த்தால், அவள் கழுத்து வலிக்குமே என்று எண்ணியவனாக, வேகமாகக் கட்டியிருந்த தன் கரத்தை விலக்கியவன், அவளை நெருங்கி, வலது முட்டுக்கால் தரையில் பட, இடது கால் மடிந்து உயர்ந்திருக்கக் குனிந்து, அவள் தோள்களில் தன் கரத்தைப் பதித்து,

“நோ… நோ… இந்தக் கணம் வரை நான் அதற்காக வருந்தவில்லை. சொல்லப்போனால், அங்கே நீ தனியாக இருந்து துன்பப்படாமல்… உன் கூடவே இருந்து, உன் வேதனையில் பங்குகொண்டேன் என்கிற மனத்திருப்திதான் எனக்கு.” என்றவன், சற்று நேரம், அவள் முகத்தையே உற்றுப் பார்த்தான்.

இறுகிப்போய், கலங்கியிருக்கும் அவளிடம் எப்படி உடைத்துக் கூறுவது என்றும் புரியவில்லை.

இந்த அவஸ்தையெல்லாம் அவனுக்குப் புதிது. அனைத்திலும், வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுபவனுக்கு, சர்வமகியிடம் மட்டும் ஏன் அப்படிக் கடுமையாக நடக்கமுடியவில்லை. ‘ஓ காட்… ஐ ஹேட் திஸ் டாம் ஃபீலிங்…’ என்று தனக்குள் முனங்கியவன், ஒரு வாறு தனக்குள்ளேயே ஒத்திகை பார்த்தான். எப்படியும் அவள் வாய் விட்டுக் கேட்கமாட்டாள் என்பதைப் புரிந்துகொண்டான். இருவரில் ஒருவர் இறங்கிவரத்தானே வேண்டும்… அநேகாத்மன் உறுதியுடன் நிமிர்ந்தான்.

அவன், வாழ்வில் இரண்டாம் முறையாகச் சறுக்கினான்.

“மகி…”  என்று அழைத்து, அவள் முகத்தையே உற்றுப் பார்த்தவன், “அன்று சொன்னதை உண்மையாக்கவேண்டும் என்று விரும்புகிறேன்… உன்னுடன் இணைந்து உன் சகோதரர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வர நான் முடிவு செய்துவிட்டேன்.” என்றான் அதுதான் இறுதித் தீர்ப்பு என்பது போல.

அவளும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஆத்மன்…” என்றாள் சர்வமகி வேதனையுடன். அடுத்து அவன் என்ன கேட்கப்போகிறான் என்பதை அவள் ஓரளவுக்கு ஊகித்தாள்.

“யெஸ்… ஐ வில் டூ இட்.. பட்… அதற்கு நீ என் அருகில் இருக்கவேண்டும்…”  என்றான் கரகரத்த குரலில்.

‘நோ… தயவு செய்து நான் மறுக்கும் எதையும் கேட்டுவிடாதே…’ என்று அவள் உள் மனது அலறியது. ஆனால் அவனோ,

“மகி… ஐ வில் ப்ராமிஸ் யு… எப்போதும் உன் அருகேயிருந்து உன்னையும், உன் சகோதரர்களையும் காத்துக்கொள்வேன்… எந்த சந்தர்ப்பத்திலும், நீங்கள் தாழ்ந்துபோக நான் விடமாட்டேன்… சோ வில் யு மரி மீ?” என்றான் அவளை விட்டுத் தன் பார்வையை விலக்காது.

‘கேட்டு விட்டான்… கேட்டே விட்டான்… எதை அவன் கேட்கக் கூடாது என்று அவள் எண்ணினாளோ, அதைக் கேட்டே விட்டான். அதுவும் எப்படி? கடையில் காய்கறி வாங்குபவன் விலை என்ன? என்று சாதாரணமாகக் கேட்பதுபோல, எந்தத் தயக்கமும் இன்றி, பந்தா இன்றி, தடுமாற்றமின்றிக் கேட்டுவிட்டான்…” சர்வமகிக்குத் தொண்டை அடைத்தது.

“இவன் என்ன கேட்கிறோம் என்பதைப் புரிந்துதான் கேட்கிறானா, இல்லை புரியாமல் கேட்கிறானா? திருமணம் என்பது சந்தையில் வாங்கும் பொருளா, தேவைக்கேற்ப மணம் செய்து கொள்வதற்கு. இது வாழ்க்கை. ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்களே… அது புரியவில்லையா இவனுக்கு…

அதுவும் எந்த நிலையில் வைத்துக் கேட்கிறான்… சந்தர்ப்ப சூழ்நிலை பற்றி யோசிக்கமாட்டானா…

அன்று என்னவென்றால், தந்தையின் குறிப்பேட்டை எடுத்துச் சென்றதே கொலைக்குற்றம் என்பது போல வீசி எறிந்தான். இப்போது என்னவென்றால், அவர் மகளையே மணம் புரியக் கேட்கிறானே… ஆடு பகை, குட்டி உறவு என்பது போலல்லவா நடந்துகொள்கிறோன்.

அவனுக்கு அந்தப் பேதைமை புரியவில்லையா? இல்லை அவன் கேட்ட உடனே, தான் சம்மதித்துவிடுவேன் என்று நினைத்தானா? இவ்வளவும்தானா என்னைப் புரிந்துகொண்ட அளவு?’ என்று எண்ணிய அவளுக்குச் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.

இப்படி திடீர் என்று எந்த ஆலாபனையும் இல்லாமல் கேட்ட விதம், அவள் தடுமாற்றத்தை அதிகரித்ததால், அவளுக்கு எப்படி செயற்படுவது என்றே தெரியவில்லை. அழுவதா, கோபப்படுவதா, கலங்குவதா, இல்லை புலம்புவதா என்று எதுவும் புரியவில்லை.

எதிலிருந்தோ தப்புபவளாக, தன் தோளைப் பற்றியிருந்தவனின் கரங்களை விலக்கிவிட்டு எழுந்தவள், விரைந்து சமையலறையை நோக்கிச் சென்று தன் கரங்களைக் கழுவினாள்.

மனம் வேறு அவன் கேட்டதை ஜீரணிக்க முடியாது தவித்தது. அவள் எழுந்ததும், தானும் எழுந்து, அவள் பின்னாலேயே வந்தவன்,

“இன்னும்… பதில் வரவில்லையே… மகி…” என்றான் சற்று எரிச்சலுடன். அவன் அருகாமை மூச்சு முட்ட,

வேகமாக அவனை விட்டுத் தள்ளிச் சென்றுவிடவேண்டும் என்று முன்னறைக்கு அவள் வர முயல, அவள் கரத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவன்,

“ஐ நீட் த ஆன்சர்…” என்றான் அழுத்தத்துடன்.

“என்ன… என்ன… சொல்…” அதற்கு மேல் அவளுக்குப் பேச்சு வரவில்லை. காற்றுதான் வந்தது.  அவள் தடுமாற்றத்தைப் பார்த்து,

“நான் கூறியது கேட்கவில்லையா? சத்தமாகத்தானே சொன்னேன்…” என்று மெல்லியதாகப் புன்னகைத்தவனை பெரும் அதிர்ச்சியுடனும் வியப்புடனும், பார்த்தாள் சர்வமகி.

இவனுக்கும் சிரிக்கத்தெரியுமா…? அதுவும் இத்தனை அழகாக… அவளுக்குத் தெரிந்து, இப்போதுதான் முதன் முறையாக அவன் புன்னகையைப் பார்க்கிறாள். அதுவும் எதிராளியைக் கவரும் வகையில் சிரிக்கும் கலையை எங்கேயிருந்து கற்றுக்கொண்டான்.

அடர்ந்த சீராக வெட்டப் பட்டிருந்த அந்த மீசைக்கு இடையாகச் சீராக அமைந்திருந்த வெண்ணிறப் பற்கள் மெல்லியதாய் வெளிப்பட, மின்னலெனத் தோன்றி மறைந்தது அந்தப் புன்னகை.

அந்தப் புன்னகை அவனுடைய முகத்திற்கு எத்தனை அழகாக. கம்பீரமாக, எடுப்பாக இருந்தது.  கூடவே, அவன் ஆளுமையையும் அந்தப் புன்னகை கூட்டிக்காட்டியதே அன்றி, சிறிதும் குறைத்துக் காட்டவில்லையே.

‘இன்னும் ஒரு முறை அவ்வாறு சிரிக்கமாட்டானா’ என்று எண்ணி ஏங்கியவளுக்கு, அந்தப் புன்னகையைப் பார்த்தபின் அவளே அறியாமல், அவன் மேலிருந்த சிறிய மனத்தாங்கலும், கரைந்து செல்வதை ஒரு வியப்புடன் உணர்ந்துகொண்டாள்.

எதிராளியை வீழ்த்துவதற்கு, இவனுடைய மெல்லிய புன்னகையே போதும் என்பதைத் தள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டாள் சர்வமகி. அவன் கோபத்தை விட, அவன் ஆக்ரோஷத்தை விட, அந்தப் புன்னகைக்கு அதிக சக்தியிருக்கிறது என்பதை சந்தேகமறப் புரிந்துகொண்டாள் அவள்.

அந்த மென்னகையில், தன் சூழ்நிலையைக் கூட மறந்தவளாக, தன் விழி மூட மறந்து அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு மீண்டும் ஒரு முறை அவனுடைய புன்னகையைப் பார்க்கவேண்டும் என்று மனம் ஏங்கியது.

அவள் வியந்த பார்வைக்குப் பொருள் புரியாதவனாகத் தன் அடர்ந்த புருவத்தை மேலேற்றி கூரிய விழிகளால், துளைத்து, என்ன என்பதுபோல சிறியதாகத் தலையை மேலும் கீழுமாக ஆட்டிக் கேட்க, அதிர்ந்தாள் சர்வமகி.

அவளா அவனை அப்படிப் பார்த்தாள். அவளால் தன்னையே நம்பமுடிவில்லை. அந்த ஒற்றைப் புன்னகைக்கு அத்தனை சக்தியிருக்கிறதா? என்று வியந்தவள், பிடிவாதமாகத் தன்னை நிகழ் காலத்திற்கு இழுத்துவந்தவளாக, ஒன்றுமில்லை என்பது பேல, மறுப்பாகத் தலையை ஆட்டினாள்.

அவள் ஆட்டிய வேகத்தைக் கண்டு, மேலும் அவன் நகைக்க, மீண்டும் சுய நினைவு தப்பினாள் அக்கோதை.

அவளுடைய அதிர்வைச் சற்றும் பொருட்படுத்தாதவன், அவளை மேலும் தன்னை நோக்கி இழுக்க, எதிர்பாராத அந்த இழுப்பில் அவள் சற்றுத் தடுமாற, அவள் இடைகொண்டு தாங்கிக் கொண்டவன், அப்படியே அவளைச் சுழற்றி சுவரோடு சாய்த்து நிறுத்தியிருந்தான் அந்தக் கள்வன். இது விழி மூடித் திறப்பதற்குள் அரங்கேறியிருந்தது.

அவளுடைய அதிர்ந்த பார்வையைத் தன் வழிகளால் மேய்ந்தவாறே, அவள் உடலுடன் உரசி நிற்குமாறு மிகவும் நெருங்கி நின்றுகொண்டான் அநேகாத்மன்.

அவள் முகத்தையே தன் விழிகளால் சற்று அளந்தவன், அந்தப் பட்டுப்போன்ற, பூரண நிலவையொத்த அவள் வதனத்தைக் கண்டு கிறங்கியவனாக, உடனேயே அந்த மென்மையை நுகரவேண்டும் என்கிற வேகம் பிறக்க, புறங்கையால், அவளுடைய கன்னத்தை மெதுவாக வருடிக்கொடுத்தான். ஒரு கணம், அந்த மென்மையில் தன்னை மறந்தவனாகத் தன் விழிகளை மூடி, அதை உணர்ந்து, அதைத் தன் உயிரினுள் கலக்க முயன்றான்.

“மகி… உன்னை விட்டு என்னால் விலகவே முடியவில்லையே… நான் என்ன செய்யட்டும்…” என்று மெல்லியதாக முனங்கியவன், பின் தன் விழிகளைத் திறந்து தன்னவளை ஏறிட்டான்.

பின் தன் இரு கரங்களையும் அவளுடைய கழுத்து வளைவில் பதித்துக் கழுத்தின் இருபக்கமும் தன் பெரும் விரல்களால், வருடிக்கொடுத்தவாறு,

“மகி… இனியும் என்னால், கற்பனையில், உன்னுடன் வாழ முடியாது… என் அருகில் நீ வேண்டும்… எப்போதும் வேண்டும்… இந்த ஐந்தடி மூன்றங்குல உடலும் எனக்கே எனக்காக, எனக்கு மட்டுமே உரியதாக மாறவேண்டும்…” என்று கூறியவன், பின், அவள் எழில் முகத்தில், தன் விழிகளால், கோலம் வரைந்தவாறு,

“அதிகாலையில் எழும் போது… இதோ… இந்த அழகான முகத்திலே நான் விழிக்கவேண்டும்…” என்றவன், ஒரு கரத்தைத் தூக்கித் தன் உள்ளங்கையால் அவள் கன்னத்தை வருடிக்கொடுத்தான்.

“சே யெஸ் டு மரி மீ… வில் யு” என்றான் கிசுகிசுத்த குரலில்.

அவளுடைய பூ முகத்தைப் பார்க்கப் பார்க்க அவனுக்குத் தெவிட்டவில்லை. இப்போதே உதடுகள் கொண்டு, அவள் முகத்தில் கோலம் வரையும் வெறி பூத்தது. ஆனால், அவளிடமிருந்து தகுந்த பதில் வராமல், எந்த உரிமையில், அவள் மீது உதடுகொண்டு வருடுவது?

தாபத்துடன், உதடுகள் செய்யத் துடித்ததை, விழிகளால் செய்ய முயன்றான். இறுதியில் உதடுகளில் அவை நிலைகொள்ள, இவனுக்குள் பூகம்பம் மையம் கொண்டது.

‘எப்படிடி உன்னால் மட்டும் என்னைத் தொடாமல், ஆட்கொள்ள முடிகிறது… விழிகளால் வருடும்போதே, என்னால் என்னைக் கட்டுப்படுத்தமுடியவில்லையே… உன்னைத் தொட்டால் என் நிலை என்ன? என்று மனதோடு பேசியவன், அதற்கு மேலும் முடியாதவனாக, எச்சில் கூட்டி விழுங்கினான்.

“என் கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவில்லையே…” என்றவாறு இன்னும் அவளை நோக்கிக் குனிந்து நெருங்கி நிற்க, இப்போது அவனுடைய சூடான சீற்றம் மிகுந்த மூச்சுக் காற்று அவளுடைய நெற்றியில் பட்டுத் தெறித்தது.

அவளோ, மின்னாமல், முழங்காமல் அவன் போட்ட குண்டை ஜீரணிக்க முடியாமல், இன்னும் அச்சம் நீங்காதவளாக, அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அநேகாத்மனின் விழிகள் வெறித்த அவள் பார்வையில் நிலைத்து நின்றன.

தனது கரங்களை அப்படியே வருடியவாறு கீழிறக்கி அவளுடைய உள்ளங்கைகளைப் பற்றிக்கொண்டவன், மெதுவாக அவளுடைய தலைக்கு மேலாகத் தூக்கி சுவரோடு அழுத்தினான். சர்வமகியோ. அவனுடைய விழிகளின் வீச்சில் தன் அதிர்ச்சி மறைந்து, தன் நிலை மறந்து, உருகிக் குழையத் தயாராகிக்கொண்டிருந்தாள்.

“இன்னும் பதில் வரவில்லையே…” என்றான.

பேசியது என்னவோ அவனுடைய வாய்தான். ஆனால் அவளுடைய நீண்ட நயனங்களில், மையம் கொண்ட அவனுடைய விழிகளோ, மெதுவாகக் கீழிறங்கி, அவளுடைய செவ்விதழ்களில் அழகிய தாஜ்மகால் கட்ட முயன்றுகொண்டிருந்தன.

அன்று அவள் தன்நிலையற்று இருந்தபோது, அவளை நினைவுலகிற்குக் கொண்டுவரவேண்டி, அந்த உதடுகளை முத்தமிட்டிருந்தான்தான்.

ஆனால், அதில் காமமோ, காதலோ எள் அளவும் இருக்கவில்லை. ஆனால் இப்போது, உதடுகள் உரசாமலே, அவன் சொர்க்க வாசலில் நுழையத் தயாராக இருந்தான்.

இனியும் முடியாது என்பது போல, இன்னும் நெருங்கி அப்படியே அவளுடைய மூக்குடன் தன் மூக்கை இடம் வலமாக உரசியவன்,

“சர்வமகி… எனக்கு இப்போதே பதில் வேண்டும்…” என்றவனுடைய குரலில் அதீத தாபம் தெரிந்தது.

பொறுக்க மாட்டாதவனாக, மெதுவாக அவள் விழிகள் என்னும் தாளில், உதடுகொண்டு அச்சுப்பதித்தவன்,

“மகிம்மா… அதிகாலையில் தூங்கியெழுந்ததும், இதோ இந்த பெரிய நீண்ட நயனங்கள், தூக்கக் கலக்கத்துடன், முதன் முதலில் என்னை மட்டும் தரிசிக்கவேண்டும். அப்போது, என்னைக் கண்டதும், மகிழ்ச்சியில், இவ் இரு விழிகளும் மலருமே… ஷ்ஷ்ஷ்… அந்த அழகை ஒவ்வொரு நாளும் நான் பருகவேண்டும்…” என்றவன் தன் கண்களை மூடி, அதனை கற்பனையில் கண்டு கரைந்தவனாக, தன் முகத்தை அவளுடைய கழுத்து வளைவில் வேகமாகப் புதைத்தான்.

இதோ, இப்படி நான் உன் கழுத்து வளைவில் புதைந்து, குழைந்து, உன்னை நுகர்ந்து, நுகர்ந்து என்னை உன்னில் தொலைக்கவேண்டும்…” என்றவனின் உதடுகள் அவள் கழுத்து வளைவில் ஆழமாகப் பதிந்தன.

அந்த முத்தத்தில், தன்னிலை இழந்தாள் அந்தக் குற்றமற்ற கவிதை.

அதுமட்டுமன்றி, வாழ்க்கையில் முதன் முதலாகச் சிலிர்த்தாள். முதன் முதலாகத் தான் ஒரு பெண் எண்பதை உணர்ந்தாள். முதன் முதலாக ஒரு ஆண் மகனால் தன் பெண்மையைத் தட்டி எழுப்ப முடியும் என்பதை அறிந்தாள்.

அவனோ, சர்வமகியின் நிலையைச் சற்றும் கருத்தில் கொண்டானில்லை.

கழுத்து வளைவில் புதைந்திருந்த அவன் உதடுகள், அப்படியே கன்னம் வழியாக உரசிக்கொண்டு, மெதுவாக உதட்டின் அருகே பயணித்து சற்றுத் தாமதித்து நின்றன.

“இதோ இந்த சிவந்த அழகிய தேன்சிந்தும் உதடுகள், நீ எழும்பும் வரை உனக்காகக் காத்திருந்து நீ எழுந்ததும், தூங்குவதுபோல் நடிக்கும் என்னைக் கண்டு எழுப்புவதற்காக, மென்னகையுடன், பிரியுமே, அப்போது, உன்னுடைய வரிசையான முத்துப் பற்களும், இளஞ்சிவப்பு நாவும் என்னைத் தம் அருகே அழைக்கும். அப்போது… நான்…” என்று கிசுகிசுத்தவன், அந்தப் பலாச்சுளை உதடுகளைச் சுவைத்திட வேகமாக முன்னேற,

சிறிது நேரம் அவன் நெருக்கத்தில், கண் மூடி தன்னை முழுவதுமாகத் தொலைத்தவள், அவனுயை உதடுகள், தன் உதடுகளை நெருங்கும் தறுவாயில், விழித்துக்கொண்டாள்.

அப்போதுதான் தன் நிலை நினைவு வந்தவளாக அதிர்ச்சியுடன் அவன் பிடியில் சிக்கியிருந்த தன் கரங்களை வேகமாக விடுவித்து, அவளுடைய உதடுகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தவனின் மார்பில் தன் கரத்தைப் பதித்துப் பலம்கொண்ட மட்டும் தள்ளிவிட்டாள்.

நிலவு 22

மகிழ்ச்சி என்னும் வானில் சுதந்திரமாகத் தங்குதடையின்றிப் பறந்து திரிந்த அநேகாத்மன், அவள் செயலால் குண்டடிபட்ட பறவையாகத் தொப் என்று தரையில் வந்து விழுந்தான்.

அவனுக்குத் தன்னிலை பெறவே சற்று நேரம் பிடித்தது. தான் செய்துகொண்டிருந்த செயல் நினைவுக்கு வர அதிர்ந்து போனான். அவனுக்குத் தன்னை நினைக்கவே அவமானமாக இருந்தது.

ஒரு போதும் அவன் பெண்களைக் கண்டு தன்னை மறக்கும் அளவுக்கு, இப்படி சுய உணர்வு இழந்ததில்லை. அவன் பெண்களை அறியாதவன் அல்ல. எத்தனையோ பெண்களை இப்படித்தான் என்று கணித்திருக்கிறான். அவனை நாடி வரும் பெண்களை அவன் ஏமாற்றியது கிடையாது. ஆனால் எல்லாமே ஒரு தொழில் போலத்தான். ஒரு வரைமுறையோடு மட்டுமே. அவனுக்கும் இன்பம், வந்தவளுக்கும் இன்பம். அத்தோடு சரி. உன் எல்லை இதுதான் என்பதை அவள் தெளிவாக அந்தப் பெண்களுக்குப் புரியவைத்து விடுவான். தவிர, எந்தப் பெண்ண்pலும் தன்நிலை மறந்து புதைய நினைத்ததில்லை. உடலால் நெருங்கினான் அன்றி, ஒருபோதும் உணர்வால் எந்தப் பெண்ணையும் அவன் நெருங்கியது கிடையாது. உணர்ந்து பேசியது கிடையாது. உணர்ந்து தவித்தது கிடையாது. இதுதான் முதன் முறை, அவன் ஒரு பெண்ணிடம் தன்னிலை இழந்தது.

அவனாலே அவனை நம்பமுடியவில்லை. கோபத்துடன் தன் தலைமுடியை கரத்தினால் வாரியவன்,

சர்வமகியைப் பார்த்தான். மீண்டும் அவளை அணைத்த நிலை மனக் கண்ணின் முன்னால் வந்து நின்றது. இன்னும் அவனுடைய நாசி அவளுடைய பிரத்தியேக நறுமணத்தைச் சுவாசித்தவாறே இருந்தது. இனியும் அவளை நெருங்கினால் தன்னைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியமாகப் போய் விடும் என்பதும் புரிய, வேகமாக இரண்டடி தள்ளி நின்றான்.

“டாமிட்…” என்றவன், “ஐ… ஐ ஆம் சாரி… நான்…” என்றவன் உதட்டைக் கடித்தான். தன்மீதிருந்த கோபத்தை அவனால் தணிக்க முடியவில்லை.

மெதுவாகப் பறிக்க வேண்டிய கனி அவள். இப்படித் தடியால் அடித்துப் பறித்தால், சேதாரம் என்னவோ தனக்குத்தானே. அது புரியாமல், தன் நிலை இழந்து அவளை மேலும் காயப்படுத்த முனைந்துவிட்டானே.

ஆனாலும், பொறுமையாக அவளுக்குப் புரியவைக்கவும் அவனால் முடியவில்லை. முடியவில்லை என்பதை விட, அவனுக்குத் தெரியவில்லை என்பதே சரியானதாகும். எதையும் ஒரு சொல்லில் புரியவைத்துப் பழகியவனுக்கு, இந்த வழவழ கொழகொழ எல்லாம் வராத விஷயம். அதனால்,

“ஓக்கே ஐம் சாரி சர்வமகி… என்னால் உன்னை வைத்துக்கொண்டு… இப்படித் தள்ளி நின்று கைக்கட்டிப் பேசிக்கொண்டிருக்க முடியவில்லை… அதனால் நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன்… ஐ நீட் யு… நான் உன்னை மணக்க விரும்புகிறேன்… உன் பதிலைச் சொல்…” என்றான் கறாராக. அவனால் இன்னும் வெளியே வரமுடியவில்லை. மனம் வேறு மேலும் மேலும் அவள் மென்மையை நுகரவேண்டும் என்று சண்டித்தனம் செய்துகொண்டிருந்தது.

அவளுக்கோ எங்கே தான் மயங்கி விழுந்துவிடுவோமோ என்று அச்சமாக வேறு   இருந்தது. எங்கிருந்தோ தலைவலி அவளைப் பார்த்து, வரவா விடவா என்று கேள்வி எழுப்புவதுபோல, முணுமுணுக்கத் தொடங்கியது. அதை ஓரம்கட்டியவள், அவனையே வெறித்துப் பார்த்தாள்.

அவனுடைய விழி வீச்சைக் கண்டதும், தன்னை நிலைப் படுத்த முடியாதவளாகத் திணறினாள்.

அவளுடைய தயக்கத்தைக் கண்டவனுக்குப் பொறுமை காற்று வேகத்தில் போகத் தயாராக இருந்தது.

தான் கேட்டதும், ஆம் என்று சொல்வதற்கு என்ன? என்று எண்ணியவனுக்கு, அவள் தன்னை மறுத்துவிடுவாளோ என்கிற சிறிய ஐயம் கூடத் தோன்றவில்லை.

அவனை மறுப்பதற்கு என்ன இருக்கிறது? பணமில்லையா, அறிவில்லையா, அழகில்லையா… ஆண்மையில்லையா, ஏன் புகழ்தான் இல்லையா… எல்லாம் நிறைந்த ஆண்மகன் அவன். அவனை மறுப்பதற்கு காரணமே கிடையாதே…’ என்று எண்ணியவனுக்கு, ஏனோ அடிப்படைத் தவறு புரியாமல் போனதுதான் ஆச்சரியமே.

“இதில் யோசிக்க என்ன இருக்கிறது… கமான் சர்வமகி… சே… யெஸ்…” என்றான் அவன் அதிகாரமாக.

அவன் கேள்விக்கு வாய் மூலம் பதில் கொடுக்க முடியாது என்பது அவளுக்குப் புரிந்தது. எங்கே வாயைத் திறந்தால் குரல் தந்தியடித்து, குழறவேண்டி வருமோ என்கிற பயத்தில், தலையை மறுப்பாக இரு பக்கமும் வேகமாக ஆட்டினாள்.

“வாட்… டிட் யு செட்… யூ செட்… நோ…” என்றான் அவன் நம்பமாட்டாத, மிதமிஞ்சிய கோபத்தில்.

அவள் மீண்டும் ஆம் என்பதுபோலத் தலையாட்ட அவனால் நம்பவே முடியவில்லை.

“ஏன்? ஏன் என்னை மணக்க மறுக்கிறாய்?” இப்போது அவனுடைய குரலில் ஆத்திரம் கொழுந்துவிட்டெரிந்தது.

“நான்… நான்…” அதற்கு மேல் சொல்ல முடியாமல் தவித்தாள். எப்படிச் சொல்வது என்று அவளுக்குப் புரியவில்லை.

அவளை மணப்பதால், அவன் எந்த சுகத்தையும் அனுபவிக்கப் போவதில்லை. கூடவே அவனுடைய வாழ்க்கையை அவள் கேள்விக்குறியாக்குவாளே தவிர, அவன் நினைப்பதுபோல அவளால், மகிழ்ச்சியாக மாற்ற முடியாது… நிச்சயமாக அவளால் அது முடியாது. அவன் வாழ வேண்டும். நீண்டகாலம் மகிழ்ச்சியாக வாழவேண்டும். அவளை மணந்தால், அந்த மகிழ்ச்சி அவனை விட்டுத் தொலைந்து போகும்.

“சொல்லு… என்னை மணக்க ஏன் மறுக்கிறாய்? என்னிடம் அப்படி என்ன குறை கண்டாய்… பார்க்கப் போனால் அந்த லாயர்… இதோ இப்போது வந்து உன்னுடன் உரசிவிட்டுப் போனார்களே… அந்த பிளடி பாஸ்டர்ஸ்… அந்த ஜஸ்டின்… அவர்களைவிட எந்த விதத்தில் உனக்கு நான் குறைந்தவனாகிப் போனேன்…” என்று கடுமையாகச் சீறினான் அவன்.

‘ஜஸ்டினா… அவனைப் பற்றி இவனுக்கு எப்படித் தெரியும்?’ என்று திகைத்தவள், தற்போதைக்கு அதை ஒதுக்கிவிட்டு,

 “நான் உங்கள் தந்தையைக் கொன்றவர் என்று உங்களால் எண்ணப்படுபவரின் மகள்… நான் எப்படி உங்களை மணப்பேன்…” என்றாள் குரல் கம்ம.

அப்போதுதான் அவனுக்கு உலகமே நினைவுக்கு வந்தது. சர்வமகி யார் என்பதும் புரிந்தது. மறுப்புக்கான அடிப்படைப் பிரச்சனையின் காரணம் தெரிந்தது.

அதற்காக அவளை இழக்க முடியுமா? அதுவும் அந்த இருவரும் அவளை உரசி நின்றதைக் கண்களால் பார்த்த பிறகு. போதாததற்கு கொசுறாக அந்த ஜஸ்டின் வேறு. விட்டால் தாலியுடனே அவளைத் தேடி வந்துவிடுவான்.

“என் தந்தையைக் கொன்றது உன் தந்தைதான் தவிர நீ அல்லவே…”” என்றான் எரிச்சலுடன்.

“என் தந்தை உங்கள் தந்தையைக் கொல்லவில்லை… அவர் கொலைகாரன் அல்ல…” என்றாள் தவிப்புடன்.

“ஸ்டாப் இட் சர்வமகி… இப்போ உன் தந்தையைப் பற்றிய பேச்சு நமக்கெதற்கு. இப்போது நம்முடைய பிரச்சனையே, நீ என்னை மணமுடிக்கச் சம்மதிக்கிறாயா இல்லையா என்பதுதான்” என்றான் எரிச்சல் மாறாதவனாக.

“நோ அநேகாத்மன்… உங்களை மணக்க என்னால் முடியாது. நிச்சயமாக முடியாது. என் தந்தையை நிரபராதி என்று நிரூபிக்கும் வரைக்கும் என்னால் யாரையுமே மணக்க முடியாது. தவிர… என் தந்தை தப்பு செய்தவரல்ல என்பதைப் புரிந்துகொண்ட ஒருவர்தான் என்னை மணக்க மடியும் அநேகாத்மன்…” என்றாள், அநேகாத்மனைப் பார்த்தவாறு.

“மை ஃபுட்… உன் தந்தை உனக்கு நல்லவராக இருக்கலாம்… பட் எனக்கில்லை… லிசின் சரிவமகி… உன் தந்தை நமக்கிடையில் வருவதை நான் அறவே வெறுக்கிறேன்… அதையேன் நீ புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாய்…” என்றான் அநேகாத்மன் சலிப்புடன்.

“இல்லை ஆத்மன்… நான் என்றால் நான் மட்டுமல்ல… என்னோடு என் தந்தையின் வரலாறு இருக்கிறது… என் சகோதரர்களின் வரலாறு இருக்கிறது… இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் நான்… இவற்றையெல்லாம் உதறிவிட்டு நான் மட்டும் உங்களுடன் வரமுடியாது ஆத்மன்… அது முடியவும் முடியாது…” என்றவளுக்குத் தொண்டை வறண்டது.

உடனே அதைப் புரிந்துகொண்டவன், விரைந்து சமையலறைக்குள் நுழைந்து, ஒரு கிளாசில் தண்ணீர் எடுத்து வந்து அவளிடம் நீட்ட, அவனுடைய கரிசனையில் விழிகள் கலங்க,

“தாங்க்ஸ்…” என்றவாறு அதை ஒரே மூச்சில் குடித்தவள், உள்ளே சென்று சமையலறையில் கிளாசை வைத்துவிட்டுத் திரும்ப, அநேகாத்மனும், அவளைத் தொடர்ந்து சமையலறை வரை வந்துவிட்டிருந்தான். அதனால், அங்கிருந்த மேசையில் சாய்ந்தவாறு,

“என் சகோதரர்கள் என்னை நம்பித்தான் இருக்கிறார்கள் ஆத்மன். அவர்களுக்கு ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்காமல் என்னால் ஒரு புது வாழ்க்கைக்குள் நுழைய முடியாது. என்னை மணமுடிப்பவன் என் தந்தையின் நிலையை முழு மனதாகப் புரிந்துகொண்டு, என் சகோதரர்களையும் ஏற்றுக்கொள்பவனாக இருக்கவேண்டும். அப்படி வருவதற்கு யார் இருக்கிறார்கள்?” என்றவளின் குரலில் வேதனை மிதமிஞ்சித் தெரிந்தது.

“உன் சகோதரர்களைப் பார்த்துக்கொள்ள நான் இருக்கிறேன் என்கிறேனே… பிறகு என்ன?” என்று அவன் அவசரமாகக் கூற, அந்த நிலையிலும், அவன் தன் தன்தையைத் தவிர்ப்பதைக் கண்டு, அவள் உதடுகளில் மெல்லிய விரக்திப் புன்னகை மலர்ந்தது.

அதைக் கண்டவன், அந்தப் புன்னகைக்கான காரணத்தைப் புரிந்துகொண்டவனாக,

“சாரி மகி… என்னால் இன்னும் அந்தாளை நல்லவன் என்று ஏற்றுக்கொள்ள முடியிவில்லை.” என்றான் இறுக்கமாக.

அவன் நிலை அவளுக்குப் புரியாதா என்ன. புரிந்துகொண்டவள் போலத் தலையை ஆட்ட,

“பட் சர்வமகி… என் நிலைமையும் உனக்குத் தெரியும். பணத்தைப் பொறுத்தவரை உலகத்தில் உள்ள பணக்காரர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் நிற்பவன் நான். விரைவில் முதல் மூன்றைத் தொட்டுவிடுவேன். எனக்கு உன் சகோதரர்கள் நிச்சயமாகப் பாரமாக இருக்கமாட்டார்கள்? அவர்களுக்குரிய வளமான எதிர்காலத்தை என்னால் உருவாக்கிக் கொடுக்க முடியும்… இதோ பார் இறந்துபோன ஒருவருக்காக, நீ உன் வளமான வாழ்க்கையைத் தொலைக்கப்போகிறாயா” என்றான் அவன் அழுத்தமாக.

“பணம் மட்டும்தான் வாழ்க்கையா அநேகாத்மன்… அப்படியென்றால், பணம் படைத்தவர்களைவிட யாருமே மகிழ்ச்சியாக இருக்கமுடியாது…” என்றாள் சர்வமகி அறிவுறுத்துவது போல.

“நான் அப்படிச் சொல்லவரவில்லை மகிம்மா… என்னை மணந்தால், உனக்குப் பொருளாதாரப் பிரச்சனை பற்றிய கவலையே இருக்காது என்றுதான் சொல்கிறேன்…” என்றான் அவன் தன்நிலை விளக்கமாக.

“என்னால் முடியாது… அநேகாத்மன்… நமக்கிடையில் மனக்கசப்பு வரும்போதெல்லாம் என் தந்தைதான் உங்களுக்கு நினைவுக்கு வருவார்… வேண்டாம்… நீண்ட நாள் வாழ்க்கைக்கு இது சரிவராது… நீங்கள் வேறு ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து மணம் முடியுங்கள்…”

“வேறு பெண்ணை மணமுடிப்பதாக இருந்தால் உன்னை ஏன் கேட்கிறேன்…” என்று சினந்தவன் அவளை நெருங்கினான்.

“சர்வமகி… என் மனைவியாக நீ வரவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்… உன் தந்தையின் பிரச்சனை முடிந்துபோன அத்தியாயம். அதைக் கிண்டிப் பார்ப்பதில் எந்தப் பயனும் கிடையாது. இறந்துபோன குழந்தைக்கு ஜாதகம் பார்ப்பது மடத்தனம். கொஞ்சம் யோசித்தால் உனக்கே தெரியும்…”

“இல்லை என்னுடைய தந்தையின் மரணம் கறுப்புச் சாயம் பூசப்பட்ட மரணம். அதை நான் மாற்ற வேண்டும்…” என்றாள் உறுதியுடன்.

“கிழிப்பாய்… எப்படி… எப்படி மாற்றுவாய்? உன் தந்தை கொலை செய்ததற்குண்டான ஆதாரம் அத்தனையும் என்னிடம் இருக்கிறது. எப்படி அதை எதிர்த்து நீ போரிடுவாய்?”

எப்படிப் போரிடுவாள்? ஒவ்வொரு நாளும் உணவிற்கு அல்லாடும் சர்வமகிக்கு அவனை எதிர்த்து ஒரு துரும்பைத் தன்னும் அசைக்க முடியுமா? முடியாதே. இயலாமைதான் அதிகரித்தது.

“இல்லை அநேகாத்மன்… நீங்கள் கேட்பது நடக்காது… வேறு யாரையும்…” அவள் பேச்சை முடிக்கவில்லை அவன் தன் கரத்தைத் தூக்கிக் காட்டி அவளது பேச்சை நிறுத்தினான்.

“ப்ளீஸ்மா… உன் வாயால் இப்படிக் கூறாதே… எனக்கு நீ… நீ மட்டும்தான் வேண்டும்…” என்றான் அவன் தவிப்புடன். அவனுடைய தவிப்பை ஒரு கணம் உற்றுப் பார்த்தவள்,

“டூ யு லவ் மீ?” என்றாள் சர்வமகி தன் விழிகளை அகற்றாமல்.

“வட்…லவ்… நோ… ஒஃப் கோர்ஸ் நாட்… எனக்கு இந்த காதல், கத்தரிகாயில் எல்லாம் நம்பிக்கையில்லை. பட் மணம் முடித்தால், வாழ்க்கை முழுவதும் ஒருத்திதான் எனக்கு. அதில் முழு நம்பிக்கை வைத்திருப்பவன் நான். என் அப்பா கூட, என் அம்மா இறந்த பின், வேறு மணம் புரியவில்லை. அவர்கள் நினைவாகவே வாழ்ந்தவர்கள். நானும் அப்படித்தான்… திருமணம் என்பது வாழ்க்கை முழுவதும் தொடர்வது… அது மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும் மகி. அதற்கு வருகிற மனைவியும், புரிந்து நடப்பவளாக இருக்கவேண்டும். நானும் அப்படியே… அதனால், மணம் முடித்தால், உன்னைத்தான் மணம் முடிப்பது என்று தீர்மாணித்துவிட்டேன்… உன்னை மணந்தால், என் வாழ்வு சிறக்கும் மகி…சே யெஸ்…” என்றான் அவன்

“என்னை விட நல்ல பெண்கள் கிடைப்பார்கள்… அநேகாத்மன்” என்றாள் அவள் மென்மையுடன்.

“உன்னைப் போல… ஒருத்தியா… மே… பி… மே பி நாட் ஆனால் நோன் டெவில் பெட்டர்தான் அன்நோன் ஏன்ஜல்… கேள்விப்பட்டதில்லை…” என்றான் அவன் தன் பலமான ஆயுதமான புன்னகையைச் சிந்தியபடி. அந்த  மெல்லிய நகைப்பில் கரையாதிருக்கப் பெரும் பாடு பட்டவளாக,

“அநேகாத்மன்…” என்று அவள் எதையோ சொல்ல வர, அவள் உதட்டில் தன் கரத்தைப் பதித்த, அவள் பேச்சை நிறுத்தியவன்,

“ஆத்மன்… ஜெஸ்ட் ஆத்மன்… உனக்கு மட்டும் நான் ஆத்மன்” என்றவன், உதட்டில் பதிந்த கரம் கொண்டு, அந்த உதட்டையே மெதுவாக வருடிக்கொடுக்க,

அவன் கரத்தைத் தடுக்கத் தன் கரம் கொண்டு பற்ற, அந்தக கரத்தைத் தன் கரத்தில் ஏந்தியவன், தன் உதட்டில் பதித்து, அழுத்தமாக முத்தமிட்டவாறு,

“சே… யெஸ் மகி… ஐ வில் டேக் கெயர் ஒஃப் யூ…” என்றவாறு, அவள் நெற்றியில் உதட்டைப் பதித்தான். அப்படியே சற்றுக் கீழ் இறக்கி, மூக்கில் மெல்லியதாக முத்தமிட்டான். மெதுவாக இறங்கிய அவனுடைய உதடுகள், அவளுடைய மேல் உதட்டில் பதிந்து இரகசியம் பேச முயல, சிரமப் பட்டுத் தன்னை ஒரு நிலைப்படுத்திய சர்வமகி,

“உ… உங்களுக்கும்… அ… அவர்களுக்கும் என்ன வித்தியாசம்…” என்று திக்கித் திணறிக் கேட்டாள்.

முதலில் அநேகாத்மனுக்கு அவள் கூறியது புரியவில்லை.

வேகமாக அவளிடமிருந்து பிரிந்தவன்,

“வட்… வட் டிட் யு சே…” என்றான் அடக்கிவைத்த சீற்றத்துடன்.

சிரமப்பட்டுத் தன்னைத் திடப்படுத்தியவள், அந்த லாயருக்கும், அந்த பொறுக்கிகளுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்?” என்றாள் முடிந்த அளவு தெளிவுடன்.

வேகமாக இரண்டடி பின்னோக்கி வைத்தவன், தன் கரங்களை மார்புக்குக் குறுக்காகக் கட்டியவாறு, விழிகளில் நெருப்புப் பொறி மறக்க, அழுந்த மூடிய உதடுகளுடன் அவளை வெறித்துப் பார்த்தான்.

“ஸ்டில் ஐ டோன்ட் அன்டர்ஸ்டான்ட்” என்றான். அவனுடைய குரல், இதற்கு மேல் தவறாகப் பேசாதே என்று எச்சரித்தது. சர்வமகியோ, அவன் குரலை அலட்சியப் படுத்தியவளாக,

“அந்த லாயர், எனக்கு உதவுவதாகக் கூறித் தப்பாக நடக்க முயன்றான்… கொ… கொஞ்சத்திற்கு முன்பு வந்தவர்களும், வீடு வாங்க வந்திருப்பதாகக் கூறி… தப்பான எண்ணத்துடன் நெ… நெருங்கினார்கள்… நீ… நீங்களும்…” அவள் முடிக்கவில்லை, சலீர் என்கிற பெரும் ஓசையுடன், அநேகாத்மனுக்கு அருகே சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு படத்தின் கண்ணாடி தூள் தூளாக உடைந்து தரையில் விழுந்துகொண்டிருந்தன.

சர்வமகி ஒரு கணம் ஆடிப்போனாள். அதிர்ச்சியுடன் அநேகாத்மனைப் பார்க்க, விழிகள் சிவக்க, முகம் கறுத்துத் துடிக்க, உடல் ஆத்திரத்தில் நடுங்க நின்றிருந்தவன், சிவனின் ருத்திர அவதாரத்தை எடுத்திருந்தான். அவனுடைய உள்ளங்கையிலிருந்து இரத்தம் வழிவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. அதைக் கண்டதும், அவனுடைய கோபம் மறந்து போகப் பதறிப்போனாள் சர்வமகி.

“ஆத்மன்…” என்று துடித்தவாறு, அவளை நெருக்க முயல காயம் பட்ட தன் வலக் கரத்தைத் தூக்கி அவள் பேச்சைத் தடுத்தான் அநேகாத்மன். இப்போது, அதிக இரத்தம் வரத்தொடங்கியிருந்தது.

“ஆத்மன்… இரத்தம் வருகிறது… ப்ளீஸ்…” என்று மீண்டும் நெருங்கிவர, அவன் வேகமாக ஓரடி பின்னுக்கு வைத்து நம்பமுடியாதவனாக, அவளையே வெறித்துப் பார்த்தான்.

அவனுக்குத் தன்னைச் சமப்படுத்துவதற்கே, சற்று நேரம் தேவைப்பட்டது.

“ஹெள டெயர் யு… ஹெள யெடர் யு ஜஜ்ஜிங் மீ லைக் தட்… டூ யு நோ… ஹூ  ஆம் ஐ? என்னுடைய தராதரம் எது என்று உனக்குத் தெரியுமா?” என்று கோபத்தில் வார்த்தைகள் வராது தடுமாறினான்.

“ப்ளீஸ் ஆத்மன்… நான் கெஞ்சிக் கேட்கிறேன்… முதலில் காயத்திற்கு மருந்துபோடலாம்… கையில் கண்ணாடி வேறு குத்தியிருக்கிறது…” என்று தரையில் சிந்தும் இரத்தத்தைக் கண்டு பதறியவளாக, அவள் கெஞ்ச, அவளை அவன் சிறிதும் கவனித்தான் இல்லை.

“என் தகுதி தெரிந்தும் நீ… டூ யு நோ வட்… ஜெஸ்ட் லைக் தட்…” என்றவன், தன் விரல்களைச் சுண்டிக் காட்டி, “இப்படி என்பதற்குள் என்னால், எத்தனையோ பெண்களைக் கவர முடியும்… பட்… நான்… சே…” என்றவனுடைய முகம் கோபத்தாலும், அவமானத்தாலும் கறுத்துப்போயிருந்தது. கேவலம் ஒரு பெண்ணால் மறுக்கப்பட்டுவிட்டோம் என்பதையும் தாண்டி, அந்தக் கயவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசிவிட்டாளே என்கிற ஆக்ரோஷம் அவனைப் பலமாகத் தாக்கியது.

சர்வமகியோ, அவனுடைய கோபத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. விரைந்து சென்று முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்தவள், அவனை நெருங்கி, அவன் கரத்தைப் பற்ற, ஒரு உதறலில், அவள் கரத்திலிருந்த முதலுதவிப் பெட்டி சிதறி மறுபக்கம் போய் விழுந்தது.

“டோன்ட்… டோன்ட் டச் மி… அந்தத் தகுதியை நீ இழந்துவிட்டாய்…” என்றவன் “திருமணம் முடிக்கக் கேட்டதற்குச் சிறந்த பரிசாகக் கொடுத்துவிட்டாய் சர்வமகி. தாங்க் யூ தாங்க் யூ வெரி மச்…” என்றவன், வேதனையுடனும், ஏளனத்துடனும் நகைத்தான்.

“யெஸ்… இட்ஸ் மை ஃபோல்ட்… உன்னைப் போய் மணக்க ஆசைப்பட்டேனே… எனக்கு இது தேவைதான்… ஐ ஆம் டிசேர்வ் இட்… டூ யு நோ வட்…” என்றவன், ஆக்ரோஷத்துடன் அவளைப் பார்த்து, “ஒரு வேளை… மனைவியாக வா என்று கேட்பதற்குப் பதிலாக ஆசைநாயகியாக வா என்று கேட்டிருந்தால் வந்திருப்பாயா…” என்றான் அகங்காரமாக.

இன்னும் அவன் அவளுடைய குற்றச்சாட்டிலிருந்து வெளிவரவில்லை. நினைக்கும்போதே உடல் திகு திகு என்று பற்றி எரிந்தது. இது அவனுக்குப் புதியது.

ஒரு போதும் அவன் யாராலும் நிராகரிக்கப்பட்டதில்லை. அவன் காலடியில் எத்தனையோ பெண்கள் விழுந்து கிடக்கும் வேளையில், இந்த ஒப்பீடு, அவன் தன்மானத்திற்குப் பெரும் அடியாக இருந்தது. அதுவும் யாரோடு சேர்த்து ஒப்பிட்டாள்… அந்த லாயருடனும், அந்த இரு பொறுக்கிகளுடனும்…

ஒரு போதும் தோல்வியைச் சந்திக்காதவன், முதன் முதலாக… அதுவும் ஒரு பெண்ணிடம் தோற்றுப்போய் நின்றான். தாங்கமுடியாத கோபத்தில் உள்ளம் கொந்தளித்தது.

“உன்னை மணக்கக் கேட்டேன். ஆனால் நீ… சே… எதை மன்னித்தாலும், நீ சொன்னதை நான் மன்னிக்கவே மாட்டேன். ஐ ஹேட் யு மிஸ் சர்வமகி வாசுதேவன்… ஐ கேட் யு ஃப்ரம் பொட்டம் ஒஃப் மை ஹார்ட்… அத்தனை கேவலமாகவா என்னை எண்ணிவிட்டாய்… அது உன் தப்பு கிடையாது… அது என் தப்பு… நான்தான் தராதரம் பார்க்காமல், உன் காலடியில் மண்டியிட நினைத்தேன்… எனக்கும் இது தேவைதான்… ஆனால் நீ நல்ல தெளிவாகத்தான் இருக்கிறாய்… பின்னே… ஒரு கொலைகாரனின் மகள்தானே… எப்படி இருப்பாய்…” என்று தாளமுடியாத வலியில் நஞ்சைக் கக்கியவன், தன்னைச் சமப்படுத்தப் பெரிய மூச்சொன்றை எடுத்து விட்டான்.

“சரி… இத்தோடு இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கலாம்… அஸ் யு விஷ்… ஐ ட்ராப் த சப்ஜெக்ட்” என்றவன், அதற்கு மேல் கூற ஒன்றுமில்லை என்பது போல வெளியேற நினைத்தவன், ஏதோ நினைத்தவனாக, நின்று திரும்பினான்.

“எதற்குமே கலங்காத என்னைக் கலங்க வைத்துவிட்டாய் அல்லவா… ஐ வில் நெவர் ஃபொர்கிவ் யு… ஆனால் எப்போதாவது உனக்கு என் உதவி தேவைப்படலாம்… அப்போது என் நினைவு உனக்கு வந்தால், அங்கு வா… உனக்கு என் வீட்டு விலாசம் தெரியும் அல்லவா. எப்போதும் உனக்காக என் வீடு திறந்தே இருக்கும்… பட் மனைவியாக வருவதற்கல்ல… ஆசைநாயகியாக வருவதற்கு…” என்றவன் ஒரு விசிட்டிங் கார்ட்டை எடுத்து அவள் முகத்தில் விட்டெறிந்துவிட்டு கடகடவென்று வெளியேறினான்.

அவனுடைய குரலிலும் நடையிலும் ஒரு பெண்ணால் மறுக்கப்பட்டு விட்டோம் என்கிற ஆத்திரமும், அவமானமும் அதிகமாகத் தெரிந்தது. சர்வமகி சிலைபோல அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவன் சென்று மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தவள், அதற்கு மேல் தாங்க முடியாதவளாக ஓடிச் சென்று தன் அறைக்குள் நுழைந்தவள், வேகமாகக் க்ளோசட்டைத் திறந்து அதில் தொங்கிக்கொண்டிருந்த அநேகாத்மனின் அந்தப் பெரிய ஜக்கட்டை விரல் நடுங்க வெளியே இழுத்து எடுத்தாள்.

உதடுகள் துடிக்க, கண்ணீர் பொங்க நடுக்கத்தால், நுழையாத கரங்களைச் சிரமப்பட்டு நுழைத்து, தன்னோடு இழுத்து இறுக்கிக்கொண்டவளுக்கு, அழுகை கட்டுக்கடங்காமல் வந்தது.

“ஐ ஆம் சாரி ஆத்மன்… ஐ ஆம் ரியலி ரியலி சாரி… என்னை மன்னித்துவிடுங்கள்… ப்ளீஸ்…” என்று சத்தம் வெளியே வராதவாறு கதறியவள், அவன் பெரிய ஜாக்கட்டின் கழுத்துப் புரத்தை இரு கரங்களாலும், இழுத்து முகத்தில் புதைக்க, எப்போதும் போல, அந்த ஜாக்கெட் அவளுக்குக் கொடுக்கும் தைரியத்தை அப்போதும் கொடுக்க, இழந்த தைரியம், மெது மெதுவாக அவளிடம் திரும்பி வரத் தொடங்கியது.

நிலவு 23

காலம் பறப்பதற்குப் பறவையிடம்தான் கற்றுக்கொண்டதோ, அது தன் போக்கில் வேகமாகச் செல்லத் தொடங்கியது. சர்வமகியை விட்டு விலகி ஒருமாதத்திற்கும்மேல் ஆகிவிட்டிருந்தது. அந்த ஒரு மாதமும், அநேகாத்மன் மனித அவதாரத்தை விடுத்து நரசிம்ம அவதாரம் எடுத்திருந்தான். இந்த ஒரு மாதத்தில் அவனுடைய வேலைத்தளத்திலிருந்து, கிட்டத்தட்ட எழுபத்தைந்து பேர், அவனுடன் இணைந்து பணியாற்றமுடியாமல் விலகிச் சென்றனர். மற்றவர்கள் அவனுடன் பேசப் பயந்து ஒதுங்கிக்கொண்டனர்.

அநேகாத்மனுக்கோ, தன்னைக் கட்டுப்படுத்துவது பெரும் சிரமமாக இருந்தது. சர்வமகி தன்தை அத்தனை கீழ்த்தரமாக எண்ணியதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. என்னதான் தன் நேரத்தை வேலையில் மூழ்கடிக்க முயன்றாலும், அவனையும் மீறி, மனம் அவளிடமே செல்லத் துடித்துக்கொண்டிருந்தது. இருந்தும், இரங்கிச் சென்று அவளைக் காண அவன் தன்மானம் விடவில்லை.

‘ஐ ஹேட் திஸ் ஃபீலிங் டாமிட்…’ என்று தவித்தவன், வேலையில்லா நேரம் முழுவதும் ஜிம்மிலேயே கழித்தான். என்னதான் உடலை வருத்தி மனதைத் தெளிவுபடுத்த முயன்றும், மீண்டும் மீண்டும் மனம் மெல்லிடையாளிடமே தஞ்சம் புகுந்தது. கூடவே, அவளுடைய கசப்பான பேச்சும் நினைவில் வந்து, அவனைத் தவிக்க வைத்தது. ஆனாலும், அவளைச் சென்று பார்ப்பதில்லை என்கிற உறுதியை மட்டும் அவன் கைவிடவில்லை.

அன்று, வேலை முடித்துவிட்டு, தன் பிரத்தியேக உடற்பயிற்சி அறையில் கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் பயிற்சி செய்தவன், உடல் களைப்புற, நன்கு குளிர் நீரில் குளித்துவிட்டுவந்து படுக்கையில் விழுந்தான். விழுந்தவனின் மனக்கண்ணில் மீண்டும் சர்வமகியே அவனைக் கலங்கும் விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஏன்டி… ஏன் இப்படி சித்திரவதைப் படுத்துகிறாய்… அதுதான் நான் வேண்டாம் என்றுவிட்டாயே… பிறகு எதற்கு என் நினைவில் வந்து தொல்லை தருகிறாய்… கெட் லாஸ்ட்… மகி… ப்ளீஸ்… கெட் அவுட் ஃப்ரம் மை தோட்ஸ்…” என்று முனகியவன் மெதுவாகத் தன் விழிகளை மூடினான். மெது மெதுவாக தூக்கம் அவனை ஆட்கொண்டது.

அண்ட வெளி… கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எந்த மரங்களும் கிடையாது. ஆனால் மஞ்சள் நிறத்தில் புதர்கள் அடர்ந்து அங்கும் இங்குமாக முளைத்திருந்தது… அந்த வறண்ட சூழ்நிலையில், புத்துணர்ச்சி ஊட்டுவதுபோல, எங்கோ மெல்லிய சிரிப்பொலி கேட்க, அந்த வறண்ட பூமியின் நடுவில் நின்றிருந்த அநேகாத்மன் ஆவலுடன் அந்த சிரிப்பொலி வந்த திசையை நோக்கிப் போகிறான்.

 சற்றுத் தொலைவில், வெண்ணிறத்தில் நீண்ட பாவாடையும், அதே வெண்ணிறத்தில், மஞ்சள் நிறப் பூக்கள் தெறித்த நீண்ட கைகொண்ட மேல் சட்டையும் அணிந்தவாறு ஒரு பெண் போய்க்கொண்டிருக்கிறாள். அவளுடைய நீண்ட பின்னிய கூந்தல், அந்த நடைக்கேற்ப அசைந்தாட, அந்த அசைவுக்கு ஏற்ப, கைநிறைய வெள்ளைக் கண்ணாடிக் காப்புகள் சலலசக்க, அந்த சலசலப்புக்குப் போட்டியாக, கலகலத்துச் சிரித்தவாறு நடந்துகொண்டிருந்தாள்… அவள்

‘யாராக இருக்கும், என்னைப்போலவே இங்கே தனித்துச் சிக்கிக்கொண்டாளோ?’ என்று எண்ணியவன், அவள் பின்னழகில் மயங்கி, அவள் முகத்தைப் பார்க்கும் ஆவலுடன் அவளை நெருங்கினான்… இவன் நெருங்க நெருங்க, அந்தப் பெண்ணின் தூரமும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில்,

“ஹேய்… உன்னைத்தான்….” என்று அழைத்தான். அவளோ திரும்பிப் பார்க்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைக்கிறான்… அவளோ நடந்து செல்கிறாள். இனியும் முடியாது என்கிற வேகத்தில் ஓடிச்சென்று அவளுடைய கரத்தைப் பற்றித் தன் புறம் திருப்பினான். புன்னகை மாறாமல் திரும்பிப் பார்க்கிறாள் அவள்.

“மகி…” வியந்துபோனான் அநேகாத்மன்.

“மகி… நீ எங்கே இங்கே… இங்கே என்ன செய்கிறாய்?” என்று அதிர்ச்சியுடன் கேடடான் அநேகாத்மன்.

சர்வமகியோ, அவன் கரத்திலிருந்த தன் கரத்தை விடுவித்தவாறு.

“நான்… போகவேண்டும்… விடுங்கள்…” என்றாள்.

“வட்…. நோ… யு கான்ட்.. எங்கே போகப்போகிறாய்… அதுவும் என்னைத் தனியாக இங்கே விட்டு உன்னால் எங்கும் போகமுடியாது… அதற்கு நான் விடமாட்டேன்.. வா என்கூட” என்றவாறு அவளைத் தன் பக்கமாக இழுத்தான் அநேகாத்மன். அதற்கு நகைத்தவள்  ,

“என்னைத் தடுக்க உங்களால் முடியாது ஆத்மன்…” என்றவாறு தன் புன்னகை மாறாமலே, இரு கரங்களையும் வானை நோக்கி நீட்டுகிறாள்.

திடீர் என்று இரண்டு பெரிய அழகிய வெண்ணிற பறவைகள் அவளை நோக்கிப் பறந்து வரத்தொடங்கின.

“ஏய் என்னசெய்கிறாய் மகி…” என்று பதறினான் அநேகாத்மன். சர்வமகியின் முகத்தில், அதே மலர்ச்சி, அதே கனிவு, அதே இனிமை… ஆனால் சிறிதும் அநேகாத்மனைக் கண்டுகொண்டாளில்லை.

“போய் வருகிறேன் ஆத்மன்…” என்கிறாள் மென்குரலில்.

“வாட்… நோ.. நோ.. நீ போக முடியாது… நான் விடமாட்டேன்…” என்று அவன் கூறி முடிக்கவில்லை, அந்த பறவைகள், தங்கள் கால்களால், சர்வமகியின் இரு கரங்களையும் பற்றிக்கொள்கின்றன.

“மகிம்மா… ஸ்டாப்… நில்… என்னைத் தனியாக விட்டுவிட்டு நீ மட்டும் போகமுடியாது… என்னிடம் வா…” என்று கத்துகிறான் அநேகாத்மன். அந்தப் பறவைகளோ, இவனை லட்சியமே செய்யவில்லை, சர்வமியைத் தூக்கத் தொடங்க, அநேகாத்மன் பாய்ந்து அவளுடைய கால்கள் இரண்டையும் இறுகப்பற்றினான்.

“நோ… யு கான்ட் கோ வித்தவுட் மீ… கெட் டவுன் சர்வமகி… என்னிடம் வந்துவிடு… இந்த உலகத்தில் உன்னால் தனியாக இயங்க முடியாது… உனக்குப் பலகமாக நான் இல்லை இல்லை எனக்குப் பலமாக நீ இருக்கவேண்டும்.. வந்துவிடு…” என்று கத்தினான் அநேகாத்மன்.

“இல்லை ஆத்மன்… என்னை மறந்துவிடுங்கள்…. நான் போகவேண்டும்…” என்கிறாள் அதே மென்மையுடன்.

அவனோ அவள் இரு பாதங்களையும் இறுகப் பற்றுகிறான். அந்தப் பறவைகளின் பலத்திற்கு மத்தியில் அநேகாத்மனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. முடிந்தவரை சர்வமகியயைத் தன்னை நோக்கி இழுக்க முயல்கிறான். இறுதியாக. அந்தப் பெரிய பறவை ஒன்றின்  இறக்கையின் நுனிப்பாகம், அநேகாத்மனின் ஒற்றைக் கண்ணைக் குத்த, மகிம்மா… என்றவாறே தரையில் விழுகிறான்.

தன் கரத்தை உயர்த்தி அவளை மீண்டும் பற்றப் பார்க்கிறான். ஆனால், சர்வமகியோ, அவன் கண்கெட்டா தூரத்திற்குப் போய்க்கொண்டிருந்தாள். தாள முடியாது, “மகிம்மா…” என்கிற அலறலுடன் விழிகளைத் திறந்தான் அநேகாத்மன்.

எங்கும் இருட்டு… “லைட்ஸ் ஆன்…” என்று இவன் கத்த, அந்த அறையின் மின்விளக்கு எரிந்தது.

இதயம் ஜெட் வேகத்தில் அடித்தது. உடல் முழுவதும் நடுங்கி வியர்வை ஆறாகப் பெருகியது…

‘கனவா… தான் கண்டது வெறும் கனவா…’ அது கனவென்று அவனால் சிறிதும் நம்பமுடியவில்லை. கட்டிலில் எழுந்து அமர்ந்தவன், தன் கரங்களைத் தூக்கிப் பார்த்தான். இரு கரங்களும் சாதுவாக நடுங்கின. நடுங்கிய கரங்கள் கொண்டு, தலையைப் பற்றிக்கொண்டு குனிந்தவனுக்கு அனைத்தும் மாயமான, வெறுமையான ஒரு உணர்வில் தவித்துப்போனான். ஓரளவு தன்னைச் சமப்படுத்தியவன், வியர்வையால் நனைந்த தலையைக் கோதியவாறு, நேரத்தைப் பார்த்தான். இரண்டுமணி என்றது கடிகாரம்.

கொஞ்சநேரம் தன் கால்களைக் கட்டி அப்படியே இருந்தவனுக்கு இன்னும் இதயத்தின் வேகம் குறைந்தபாடில்லை.

“எதற்கு இப்படிக் கனவு வந்தது? மகிக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமா? புல் ஷிட்… அவளுக்கு ஒன்றுமாகியிருக்காது… நான் இருக்கும் வரை அவளுக்கு எதுவும் ஆகாது… மகி… என்னை விட்டு நீ எங்கும் போக முடியாது… போகவும் கூடாது… அதற்கு நான் விடமாட்டேன்…” என்று பல்லைக் கடித்துக் கூறியவன், இப்போதே சென்று சர்வமகியைப் பார்க்கவேண்டும் என்று உள்ளமும், புத்தியும் அவனுக்குக் கட்டளையிட்டன.

ஆனால் இந்த நேரத்தில் போவது உசிதமல்ல என்பதால் அமைதிகாத்தான். எப்படியும் முதல் வேலையாக சர்வமகியை, அருகே நின்று பார்க்காவிட்டாலும், தள்ளிநின்றாவது பார்த்துவிடவேண்டும் என்று மனம் முடிவு செய்தது.

மறுநாள் முடிவு செய்ததுபோல, அவளைப் பார்ப்பதற்காகக் கிளம்பியவனின் கைப்பேசி அழைக்க, எடுத்துப் பார்த்தான். கேர்வின்தான் அழைத்திருந்தான். இன்று முக்கிய கூட்டம். அதை நிறுத்த இயலாது… சரி அதை முடித்துவிட்டுப் போகலாம், என்று எண்ணியவன், அலுவலகத்திற்குச் சென்றான்.

கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்தவனிடம், கொரியரில் ஒரு கடிதம் நீட்டப்பட, அது எங்கிருந்து வந்தது என்று பார்த்தான். அது சர்வமகியிடமிருந்து வந்தது என்பதை அறிந்ததும், பரபரப்புடன் அதைக் கவனமாக உடைத்துப் பார்க்கும் பொறுமையில்லாதவனாக, கிழித்து உள்ளே இருந்ததை எடுத்துப் பார்த்தான்.

இருபதினாயிரம் டாலர்ள் கொண்ட செக் ஒன்று அவனுக்கு எழுதப்பட்டிருந்தது. முகம் இறுக, ஏதாவது கடிதம் இருக்கிறதா என்று பார்த்தான். அவன் சந்தேகம் தவறவில்லை. ஒரு சிறு குறிப்படங்கிய தாள் ஒன்றும் அந்த கடித உரைக்குள் வைக்கப்பட்டிருந்தது.

சினம் மேலிட எடுத்துப் பார்த்தான்.

கனம் திரு அநேகாத்மன் வெங்கடேஷ் அவர்களுக்கு, இத்துடன், இதுவரை நீங்கள் எங்களுக்குச் செலவிட்ட, பணத்திற்குண்டான காசோலை அனுப்பியிருக்கிறேன். இது நீங்கள் செய்த உதவிகளுக்கு ஈடாகாது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், எங்கள் நிமிர்த்தம் நீங்கள் செலவு செய்வதை நான் விரும்பவில்லை. எங்களைப் புரிந்துகொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.

இப்படிக்கு

சர்வமகி வாசுதேவன்.

என்றிருந்தது அந்தக் குறிப்பு. அவனுடைய விழிகள் அநேகாத்மன் வெங்கடேஷிலும், வாசுதேவனிலுமே மாறி மாறிப் பாய்ந்தது. அதுவரை அவள் மேலிருந்த இரக்கமும், கவலையும் மாயமாக மறைந்துபோக, அந்த இடத்தில் பெரும் கடுமை குடிகொண்டது.

‘அன்று பணம் தேவையென்று அத்தனை பொருட்களையும் விற்றுவிட்டு, இருக்க இடமில்லாமல் தரையிலிருந்தபோது இல்லாத பணம் இப்போது எப்படி வந்தது. ஒரு வேளை வீட்டை விற்றுவிட்டாளோ…’ என்று எண்ணியவன்,

“ஹெள டெயர் ஷி இஸ்…” என்று கர்ஜித்தவனின் கரங்கள், மிதமிஞ்சிய சினத்தில் நடுங்கியது. விரைந்து சென்று தொலைப்பேசியில் ஒரு இலக்கத்தை அழுத்த, மறுகணம், அவனுடைய உதவியாளன், கேர்வின் அவன் முன்னால் வந்து நின்றான்.

“உன் காசோலைக்கு நன்றி, உன்னிடம் பிச்சைவாங்கும் அளவுக்கு நான் ஒன்றும் தாழ்ந்து போகவில்லை… இதை நீயே வைத்துக்கொள்…” என்கிற வாசகத்துடன், அவனுடைய அலுவலக முத்திரை பதித்த கடித உரையுள் திணித்துக் கேர்வினிடம் நீட்டியவன்,

“உனக்கு சர்வமகியைத் தெரியுமல்லவா… அவளிடம் கொடுத்துவிட்டு வா…” என்கிற கட்டளையுடன் அனுப்பிவைக்க, உடனே அவளைத் தேடிச்சென்ற கேர்வின், அடுத்த அரைமணி நேரத்தில், அடிபட்ட பந்தாகத் திரும்பி வந்தான்.

“வட் ஹப்பன்… ஹெள இஸ் ஷி… செக்கை வாங்கினாளா…” என்று கடுமையாகக் கேட்டவனுக்கு, அவள் எப்படியிருக்கிறாள் என்று அறியும் ஆவல் உந்தியதை அவனாhல் தடுக்கவே முடியவில்லை.

“அது சார்…” என்று கேர்வின் தயங்க,

“வட் ஹப்பன் கேர்வின்… இஸ் ஷி ஓக்கே…” என்றான் ஒரு வித பரபரப்புடன்.

:”ஐ… ஐ டோன்ட் நோ சார்…” என்றான் கேர்வின் பயத்துடன்.

“வட் ஐ டோன்ட் அண்டர்ஸ்டாண்ட்…” அவன் குரலிலிருந்த அடக்கப்பட்ட கோபத்தை உணர்ந்துகொண்ட கேர்வினுக்கு பயத்தில் உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது. தன்னைத் திடப்படுத்தியவன்,

“அது… அவர்கள் அங்கியில்லை…” என்றான் ஒருவாறு பெற்றுக்கொண்ட தைரியத்துடன்.

“வட்…” என்று சீறியவன், விரைந்து கேர்வினை நெருங்கினான். அவன் முகத்தில் தெரிந்த ஆக்ரோஷத்தைக் கண்ட கேர்வினுக்குப் பயத்தில் மயக்கம் வரும் போல இருந்தது.

“நான் அங்கே போனேன்… வீடு பூட்டியிருந்தது. எப்போது வருவார்கள் என்று கேட்கலாம் என்று, பக்கத்து வீட்டில் விசாரித்தேன். அப்போதுதான், அவர்கள் அந்த வீட்டை விற்றுவிட்டுச் சென்றது தெரியவந்தது… என்றான் கேர்வின் தயக்கமாக.

“வீட்டை விற்றுவிட்டாளா…” என்று அதிர்ந்தவன், அவன் யூகித்ததுபோல்தான் நடந்திருக்கிறது என்கிற எரிச்சலில் கேர்வின் கரத்திலிருந்த செக்கையே வெறித்துப் பார்த்தான். பின் நிமிர்ந்து,

“நீ போகலாம்…” என்று கேர்வினின் கரத்திலிருந்த செக்கை வாங்கிக்கொண்டு விடைகொடுத்தவனுக்கு, கோபம் கணுக்கால் முதல், தலைமுடிவரை பொங்கி வழிந்தது. அவள் மேலிருந்த பரிதாபம் முற்றும் முழுதாக அவனை விட்டு விலகிச் சென்றது.

“எத்தனை தைரியமிருந்தால் என்னிடம் சொல்லாமல் போயிருப்பாள்.” ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வர, சிகரட் ஒன்றைப் பற்றவைத்தவாறு ஜன்னலருகே வந்து நின்றான். அவன் சிகரட்டின் புகையை இழுத்த வேகத்தில், அவன் சீற்றம்  தௌளத்  தெளிவாகத் தெரிந்தது.

எங்கே போயிருப்பாள்… ஒரு வேளை, அந்த ஜஸ்டினிடம் சென்றிருப்பாளோ. அவன்தானே அவளை மணக்கக் கேட்டான்.” என்கிற சந்தேகம் எழ, உடல் முழுவதும் பொறாமைத் தீ கொழுந்துவிட்டெரிந்தது.

‘மீண்டும் மீண்டும் தப்பு செய்கிறாய் சர்வமகி. நீ பிடித்தது புலிவால் என்பதை மறந்துவிட்டாய். அத்தனை சுலபத்தில் நீ என்னை விட்டுப் போய்விட முடியாது… போகவும் விடமாட்டேன்… ஐ வில் நெவர் ஃபொகட் யூ, அன்ட் ஐ நெவர் ஃபொகிவ் யூ…” என்று முணுமுணுத்தவனின் கண்களில் வெறி குடிகொண்டிருந்தது. அவனுடைய உதடுகள், அலட்சியத்துடனும், வக்கிரத்துடனும் நகைத்தன.

நிலவு 24

சர்வமகி, தன் இறந்தகாலத்தை, ஒரு ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு, தன் சகோதரர்களுக்காகப் புதிதாகப் பிறவியெடுத்தாள். அதே இடத்தில் இருக்கப்பிடிக்காமல், அவளுடைய சகோதரர்களையும் அழைத்துக்கொண்டு ஒதுக்குப்புறமாக வினிபெக்கிற்கு வந்துவிட்டிருந்தாள். அவள் அங்கே நேற்றுத்தான் வந்ததுபோலிக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகின்றன.

அவள் தங்கியிருப்பது ஒரு கிராமப்புறம் என்பதால் அடிப்படை வசதிகள் சற்றுக் குறைவுதான். ஆனாலும் மனித நேயம் மிக்க மனிதர்களின் ஆதரவு அதிகமாகக் கிடைத்தது. கிடைத்த சம்பளத்தில் ஒரு சிறிய அப்பார்ட்மன்ட் ஒன்றில் தங்கினாள்.

தேவகியும் கடந்த ஒன்றரை வருடங்களாகப் பகுதிநேரமாக வேலைக்குப் போகத் தொடங்கியதால், சர்வமகியின் பாரம் சற்றுக் குறைந்தது.

ஆனாலும் பிரச்சனை அவளை விட்டுப் போவதாக இல்லை. இப்போது அவள் புதியதாக ஒரு பிரச்சனையைச் சந்திக்கவேண்டியிருந்தது. அந்தப் பிரச்சனைக்கு நாயகன் பிரதீபன். பதினைந்து வயது கடந்த பின், அவனிடம் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அவனுடைய நண்பர்களின் சேர்க்கை அவ்வளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை.

சர்வமகி அவனிடம் மறைமுகமாகவும் நேரடியாகவும் கூறிப் பார்த்தாள். அவனோ அவளைச் சிறிதும் லட்சியம் செய்தானில்லை.

“போக்கா… நீயும் உன்னுடைய அறிவுரையும். எனக்குப் பதினாறு வயதாகப்போகிறது. எனக்கும் எது சரி எது தவறு என்று தெரியும்…” என்ற ஒற்றைச் சொல்லில் கூறி அவளுடைய வாயை அடைத்துவிட்டான்.

அதற்குப் பிறகும் வாயைத் திறந்தால் உள்ள மரியாதையும் கெட்டுப்போகும் என்று அவள் அமைதியாக இருந்துவிட்டாள்.

ஆனால் இப்போது அது தவறு என்பதை மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருந்தாள் சர்வமகி.

ஒழுங்காகப் பாடசாலைக்கு வருவதில்லை என்று கடிதம் வீட்டிற்கு வந்திருந்தது. கூடவே முன்னேற்ற அறிக்கையில் அவன் எடுத்திருந்த மதிப்பெண்கள் மிகவும் குறைவாக இருந்தன. அவன் புத்தகமும் கையுமாக இருந்ததைப் பார்த்தே பல மாதங்களாகிவிட்டன. என்னென்னவோ காரணங்களைச் சொல்லி வெளியில் போபவன் வீட்டிற்கு வர இரவு நடுச்சாமத்திற்கும் மேலாகவிடும். போதாததற்கு அவனுக்கு அடிக்கடி பணம் தேவைப்படுகிறது. எதற்கு ஏன் என்று கேட்டால், கோபப்படுகிறான்.

இது தவறு, அப்படிச் செய்யாதே என்பதைச் சொன்னால் அதைக் கேட்கும் புத்தியும் அவனுக்கில்லை, அதைக் கேட்பதற்குப் பொறுமையும் அவனிடத்தில் இல்லை.

தேவகியோ, “அக்கா… எதற்காக வீணாக உன் சக்தியை வீணாக்குகிறாய்? கெடுகிறேன் பந்தயம் பிடி என்பவனிடம் உன்னுடைய புத்திமதிகள் எடுபடும் என்று நினைத்தாயா? விடுக்கா… எங்காவது முட்டிக்கொண்டால்தான் இவனுக்குப் புத்தி வரும்…” என்று எரிச்சலுடன் கூறிப் பார்த்தாள். ஆனால், சர்வமகியால்தான் அப்படி சும்மா விட்டுவிட முடியவில்லை.

அவர்களை நல்ல நிலைக்குக் கொண்டுவருவதாகத் தந்தைக்கு வாக்குக் கொடுத்திருக்கிறாளே. அதை எப்படியாவது நிறைவேற்றியே ஆகவேண்டுமே.

தவிர அவனுக்கு அடிபட்டால் அவளுக்கும்தானே வலிக்கும். இதைப்பற்றி அவனிடம் போய் பேச அவளுக்குச் சங்கடமாகவும் இருந்தது. தோளுக்கு மேல் வளந்தவனிடம் எதைப் பேசுவது? எப்படிப் பேசுவது. பேசினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் வயதோ, மனப்பக்குவமோ அவனுக்கில்லையே.

சர்வமகிக்கு முதன் முதலாக வாழ்க்கையில் பயம் பிடித்தது. எப்போதும் போலத் தன்னை அமைதிப்படுத்துவதற்காக, அநேகாத்மனின் கோர்ட்டை எடுத்துத் தன் மீது போட்டுக்கொண்டு, அதை இறுக அணைத்தவாறு குழம்பிய மனத்தைச் சமாதானப் படுத்த முயன்றவளுக்குத் தன்னவனின் நினைப்பு பூதாகரமாக வந்தது.

அநேகாத்மன் சொன்னதுபோல அவனை மணந்திருந்தால், இவர்களை ஒரு நிலைக்குக்கொண்டு வந்திருக்கலாமோ… ஒரு ஆண்மகனின் துணையில்லாமல் இவர்களை வளர்க்க முடியாதோ… என்று எண்ணிக் கலங்கினாள்.

அநேகாத்மனின் நினைவு வரும்போதெல்லாம், அவளையும் அறியாமல், அவளுடைய உடல் சிலிர்க்கும். அவனுடைய ஆளுமையில் சுறுண்டு கலந்திட மனம் ஏங்கும். என்னதான் மனம் அலையுறும் போதெல்லாம் அவனுடைய கோட்  அணிந்தாலும், அவனுடைய அரவணைப்புக்கு ஈடாகாதே… இப்படி மனம் தவிக்கும்போதெல்லாம், அவனுடைய அருகாமைக்காக மனம் பெரிதும் தவித்துப்போகும். அவனுடைய அந்த சூடான மூச்சுக் காற்றிற்கும், வெம்மையான அவன் உடல் சூட்டிற்கும் மனம் பெரிதும் ஏங்கும்.

ஆனாலும் அநேகாத்மனின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்க அவளால் எப்படி முடியும்? அவளை மணந்தால், அவனுடைய வாழ்க்கை அந்தரத்தில் அல்லவா தொங்கும். அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியாதே…

எந்த வலியாக இருந்தாலும் அவள்தான் அதைத் தாங்க வேண்டும்… அநேகாத்மனின் நினைவுகளை தன்னிடமிருந்து ஒதுக்கியவளிடம் மீண்டும் பிரதீபனின் நினைவு வந்து உட்கார்ந்துகொண்டது.

இப்போது பிரதீபன் புதிய பிரச்சனை ஒன்றைக் கொண்டுவந்துவிட்டான். தன்னுடைய நண்பர்களுடன் ஒரு கிழமை சுற்றுலாவிற்கு கல்காரி போகப்போவதாகக் கூறியவன் உடனடியாக ஆயிரம் டாலர் தருமாறு அடம் பிடித்தான். உடனேயே ஆயிரம் டாலருக்கு எங்கே போவது? தவிர தம்பி யாருடனோ தனியே போவது அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் தர முடியாது என்று இதமாகவே மறுத்தாள்.

ஆனால் அவனோ பிடிவாதமாக அன்று முழுவதும் சாப்பிடாமல் பட்டினி கிடந்தான். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் அவன் நண்பர்களுடன் போவதற்குச் சம்மதித்த பின்பே சாப்பிட வந்தான்.

கடனட்டையில்  ஐநூறு டாலர்களைப் புரட்டி அவனிடம் கொடுத்து, இதுதான் தன்னால் இயன்றது என்று கூற. மறுக்காமல் அதை வாங்கியவன் முகம் முழுவதும் மகிழ்ச்சி பரவ கிளம்பிவிட்டான்.

நிலவு 25

அவன் போய் நான்கு நாட்களாகிவிட்டன. போனதற்கு ஒரு முறை தொலைப்பேசி எடுத்தவன்தான். அதற்குப் பிறகு எடுக்கவில்லை. ஒழுங்காகச் சாப்பிட்டானா, இல்லையா என்றும் தெரியாமல் சர்வமகியின் வேதனை இதயத்தை அரித்தது.

பெருமூச்சுடன் அன்றைக்கு வேலைக்குப் போனவள் வேலையில் ஆழ்ந்திருந்தபோது அவளுக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்தது.

யாராக இருக்கும் என்கிற யோசனையில் தொலைப்பேசியை எடுத்தால், அது தேவகி. அவள் குரலில் பெரும் பதட்டம் தெரிந்தது.

‘என்ன தேவகி’ என்று கேட்க உடனடியாக வீட்டிற்கு வருமாறு அழைத்தாள் அவள்.

பயப்பந்து தொண்டையை அடைக்க விழுந்தடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தாள். வீட்டிற்கு வந்தவள் தொடர் மாடிக் கட்டடத்தின் முன்பாக இரண்டு பொலிஸ் வண்டி நிற்பதைக் கண்டதும், பயத்தின் பரிமாணம் அதிகரிக்கத் தமக்குரிய குடியிருப்பிற்குச் சென்றாள்.

அங்கே பொலிஸ் இல்லாததைக் கண்டதும்தான் இவளுக்கு நிம்மதியாக இருந்தது. நல்ல வேளை பொலிஸ் அவர்களின் வீட்டிற்கு வரவில்லை. வேறு எங்கோ வந்திருக்கவேண்டும்.

ஆனாலும் அவர்களின் வீட்டிற்கு முன்னால் வாட்டசாட்டமாக நான்குபேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் நின்ற தோரணையே, எதுவோ சரியில்லை என்பதை அவளுக்குச் சொல்லாமல் சொல்ல, பதட்டத்துடன் அவள் குடியிருப்புப் பகுதிக்கு வந்தாள்.

சர்வமகிக்காக வாசலிலேயே பதட்டத்துடன் காத்திருந்த தேவகி, அவளைக் கண்டதும் பெரும் நிம்மதியுடன் ஓடிவந்து அவள் கரங்களைப் பற்றிக்கொண்டாள்.

“எ… என்ன தேவகி… யார் இவர்கள்? எதற்காக நம்முடைய வீட்டில் நிற்கிறார்கள்?” என்று பயத்துடன் கேட்டாள் சர்வமகி.

“நீயே வந்து கேளக்கா… நம்முடைய அருமைத் தம்பியின் கைங்கரியத்தை…” என்று எரிச்சலுடன் கூறிய தேவகியைப் புரியாமல் ஏறிட்டவள், பதட்டம் அதிகரிக்க, வேகமாக வீட்டை நோக்கிச் சென்றாள்.

அங்கே நின்றிருந்தவர்களில் ஒருவர், அவளின் பக்கமாகத் திரும்ப, அவர் முகத்திலிருந்த அந்நியத் தன்iமையைக் கண்டவள், இருந்த நம்பிக்கையும் உடைந்து போக,

“யா… யார் நீங்கள்…?” என்றாள் நடுக்கத்துடன்.

“நாங்கள் பிரைவட் டிடெக்டிவ்ஸ்…” என்றதும் சர்வமகி புரியாமல் அவர்களைப் பார்த்தாள்.

“எ… எனிதிங் ராங் சார்?” என்றாள் நடுங்கியவாறே.

“எவ்ரிதிங் இஸ் ராங் யங் லேடி…” என்றவர் சர்வமகியை மேலும் கீழுமாகப் பார்த்தார்.

முகம் வெளிற நின்றிருந்தவளைக் கண்டதும் அவருக்கும் பரிதாபமாக இருந்திருக்கவேண்டும்,

“பிரதீபன் உங்கள் தம்பியா?” என்றார் சற்று அழுத்தத்தைக் குரைத்து.

“யெ… யெஸ்… சார்…”

“அவர் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு வீட்டில் களவாட முயன்றிருக்கிறார்… வீட்டின் சொந்தக் காரர் பாதுகாப்புக் கலை தெரிந்தவர்… ஒரு தட்டில் உங்கள் தம்பியையும், அவருடைய நண்பர்களையும் விழுத்திவிட்டார். பட் அன்ஃபோர்ச்சுனேட்லி உங்கள் தம்பி தப்பித்து ஓடிவிட்hர். அவருடைய நண்பர்களை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டு எங்களுடன் தொடர்பு கொண்டார். தப்பி ஓடியது யார் என்று விசாரிக்கச் சொன்னார். பிடிபட்டிருந்தவர்களிடம் விசாரித்தபோது, உங்கள் தம்பிதான் தப்பித்து ஓடியிருக்கிறார் என்பது தெரிய வந்தது. அதுதான் அவரைத் தேடி வந்தோம். இப்போது அவர் எங்கே…?” என்றார் அவர் பெரும் அதிகாரமாக.

அவர் கூறியதும், சர்வமகியின் இரத்தம் வடிந்தது. உடல் நடுங்க, கால் தளர அச்சத்துடன் அந்த அதிகாரியைப் பார்த்தவள்.

“சா… சார் என் தம்பி அப்படி ஒரு தவற்றைச் செய்யக்கூடியவன் அல்ல சார்…” என்றாள் குரல் நடுங்க.

“அப்படித்தான் எல்லோரும் தங்கள் உறவினர்களுக்காக வக்காலத்து வாங்குவார்கள். அது கிடக்கட்டும். உங்கள் தம்பி களவாடிய வீட்டில் முக்கியமான ஒரு டைமன்ட் நெக்லசைக் காணவில்லையாம். அது அவர்களுடைய பரம்பரைச் சொத்தாம். கிட்டத்தட்டப் பல லட்சம் டாலர் பெறுமதியானதாம். உங்கள் தம்பி அதை வீட்டில் எங்காவது வைத்திருக்கிறாரா என்று நாங்கள் பரிசோதிக்கவேண்டும்… நீங்கள் மறுத்தால், நாங்கள் காவல்துறையின் உதவியை நாடவேண்டியிருக்கும்” என்றார் அவர் கம்பீரமாக.

காவல்துறை என்கிற வார்த்தையைக் கேட்டதுமே சர்வமகி அதிர்ந்து போனவளாக அந்த அதிகாரியைப் பார்த்தாள்.

“சார்… எங்கள் தம்பி தன் நண்பர்களுடன் சுற்றுலாவிற்குப் போய்விட்டான். நிச்சயமாக அவன் அக் களவைச் செய்திருக்கமாட்டான். நீங்கள் தவறுதலாக இங்கே வந்துவிட்டீர்கள்…” என்றாள் சர்வமகி படபடப்புடன்.

“உங்கள் தம்பி சுற்றுலா போகவில்லை… களவாடப் போயிருக்கிறார். அதுவும்… டொரன்டோவிற்கு…” என்றதும் அவள்அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தாள்.

“நோ… அவன்… கல்கேரிக்குப் போயிருக்கிறான் சார்… அவன் எப்படி டொரன்டோவிற்கு?” அவள் முடிக்காமல் திணறினாள்.

“உங்கள் தம்பி கல்காரிக்குப் போகவில்லை. அவர் போனது டொரன்டோவிற்கு. அதற்குரிய ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. உங்கள் தம்பியுடன் வந்த நண்பர்களிடம் விசாரித்தபோது அறிந்துகொண்டோம்…”

“நோ… நான் நம்பமாட்டேன்… என் தம்பி நிச்சயமாக இப்படி ஒரு தவற்றைச் செய்யமாட்டான்.

“உங்கள் தம்பியின் பெயர் பிரதீபன் தானே…”

“ஆ… ஆமாம்…” என்று திக்கினாள் சர்வமகி.

“உங்கள் தந்தையின் பெயர் வாசுதேவன்… அதுவும் சரிதானே…?” என்றார் அவர் அழுத்தமாக.

“அ… ஆமாம் சார்…” இப்போது அவளுடைய நம்பிக்கை அடியோடு தேய்ந்து போனது.

“உங்கள் தந்தை ஒரு கொலைக் குற்றவாளி…” என்றார் அந்த அதிகாரி அதே கம்பீரம் மாறாமல்.

“இல்லை… எங்களுடைய தந்தை கொலைக்குற்றவாளி அல்ல… தவறுதலாக அவர் மீது பழி சுமபத்தப்பட்டிருக்கிறது…” என்றாள் அவசரமாக.

“லுக் உங்களுடைய பேச்சைக் கேட்க நாங்கள் இங்கே வரவில்லை. அந்த நகையின் உரிமையாளரும் நம்முடன் வந்திருக்கிறார். அவரை வரச் சொல்லியிருக்கிறோம். அவர் இப்போது வந்துவிடுவார்…” என்றதும் எலிவேட்டர் ஒன்று அவர்களின் தளத்திலே வந்து நின்றது.

அதிலிருந்து ஒருவன் வெளியே வந்தான்.

“அதோ… அவரே வந்துவிட்டார்…” என்றவர் புன்னகையுடன் வந்துகொண்டிருந்தவரை நோக்கித் திரும்பினார்.

சர்வமகியும் திரும்பினாள். அப்படியே அதிர்ச்சியில் மூச்சடைக்க, அது வரை நேரமும் பிடித்திருந்த பலம் வடிந்துபோக, அவசரமாகக் கடும் இருட்டு அவளைச் சூழ்ந்துகொள்ள, அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

What’s your Reaction?
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!