Thu. Sep 19th, 2024

நிலவே என்னிடம் நெருங்காதே 46/50

நிலவு 46

அவன் அதைக் காதில் வாங்காமல், மேலும் தன் மனைவியை நோக்கிக் குனிந்து தன் காரியத்தை நிறைவேற்றத் துடித்துக்கொண்டிருந்தான்.

அந்தோ பாவம், அவன் உணர்வை வெளியே இருந்தவர்கள் சற்றும் அறிந்துகொள்ளவில்லை போலும், மேலும் தட்ட,

“டாமிட்…” என்று முனகியவன், “யெஸ்…” என்றான் எரிச்சலுடன்.

“சாரி அத்தான்… இது நான்தான்…” என்றாள் தேவகி வெளியே நின்றவாறு தயக்கமாக.

“வட் இஸ் இட் தேவகி…” என்றவனின் குரலில் நிச்சயம் எரிச்சல் தாண்டவமாடியது. ஒரு கணம் அவன் குரலில் தயங்கிநின்ற தேவகி,

“சாரி அத்தான்… நேரம் போய்க்கொண்டிருக்கிறதே… சரியாக ஆறு மணிக்கு அங்கே நிற்கவேண்டும் என்று சொன்னீர்களே…” என்று நினைவு படுத்தினாள் தேவகி. அவள் கூறியபின்தான் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் கொஞ்சமாக அல்ல.. அதிகமாகவே போய்விட்டிருந்தது.

“ஷிட்…” என்று முனங்கியவன்.

“லெட்ஸ் கோ… ஸ்வீட் ஹார்ட்… நேரம் போய்க்கொண்டிருக்கிறது…” என்று கிரக்கமாகக் கூறியவன், மீண்டும் அவளைத் தலை முதல் கால்வரை அளவிட்டான்.

அவன் பார்வையைச் சேலைக்கு இடையில் தெரிந்த வெண்ணிற இடை அவனைப் பித்தம் கொள்ளச் செய்ய, தன் கரம் கொண்டு, அவ் இடையை வருட எண்ணியவனாகத் தன் கரத்தை உயர்த்த, மீண்டும் தேவகி கதவைத் தட்ட,

“ஓ காட்…” என்று சினந்தவன்,

“நான் வெளியே நிற்கிறேன் மகிம்மா… நீ, மிச்ச டச்சப்பை செய்துகொண்டு வா…” என்றவாறு வெளியே வந்தான். அங்கே தேவகி இவனைப் பார்த்துக் கிண்டலாகச் சிரிக்க, இவனும் அந்தக் கிண்டலைத் தைரியமாக எதிர்கொண்டவனாக,

“வட்…” என்றான் அழுத்தமாக.

“ஐயோ… நான் ஒன்றும் கூறவில்லையப்பா…” என்று அவள் தோளைக் குலுக்க, இவன் உதட்டில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

“நீ பூஜை வேளைக் கரடி கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்றான் கிண்டலாக.

“ஓ… அடிக்கடி நாங்கள் பார்த்தும் இருக்கிறோமே…” என்றாள் இவள் பதிலுக்கு. எப்போதும் சகோதரியுடன் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, பொறாமையில் இடையில் வந்து மூக்கை நுழைக்கும் அவனைப் பற்றிக் கூறுகிறாளாம்.

அவனுக்குரியவளான அவன் மனைவியை ஆளுக்காள் உரிமைகொண்டாடினால், அவன் தான் என்ன செய்வது?

அதற்காக அவனைக் கரடி என்பதா? என்ன தைரியம்…’ என்று எண்ணியவனுக்கு, ஏனோ முதன் முறையாகக் கோபம் வர மறுத்தது.

இதையே வேறு யாருமாக இருந்திருந்தால், அவர்களின் அத்தியாயமே கேள்விக்குறியாக மாறியிருக்கும். ஆனால் தேவகி கூறியதைக் கேட்டதும், அவனை அறியாமல் அவன் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தன.

“இன்று இல்லாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் உன் வால் அறுபடத்தான் போகிறது…” என்றான் அவன் நகைக்காமல்.

அவன் தன்னைக் குரங்கு என்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட தேவகி, க்ளுக் என்று சிரிக்க, அதில் கொஞ்சமே, கொஞ்சமாக அவன் சர்வமகியைக் கண்டானோ, அவனுள் இருந்த, மெல்லிய கோபமும், அப்படியே காணாமல் மாயமாய் மறைந்து போக,

“சரி சரி அக்காவுக்குப் போய் ஹெல்ப் பண்ணு…” என்று விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினான் அநேகாத்மன்.

அலங்காரமெல்லாம் முடித்து வெளியே வந்த சர்வமகி உள்ளத்தைக் கொள்ளைகொண்டாள். தேவகியும் சிறு டச்சப் செய்தாள் போலும், சர்வமகியின் அழகு மேலும் மெருகேற்றியிருந்தது.

தேவகிக்கே சர்வமகியைப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை.

“வா…வ். லுக் அட் யு அக்கா… என் கண்ணே பட்டுவிடும் போல எத்தனை அழகாக இருக்கிறாய் தெரியுமா?” என்றாள் தேவகி பெருமையுடன்.

‘எத்தனை அழகு இருந்துதான் என்ன? இன்னும் கொஞ்சக் காலங்களில் போகப்போபவள்தானே…’ என்கிற எண்ணம் அழையாமலே வர, அவள் புன்னகை அப்படியே வாடிப்போனது.

“அக்கா…” என்று வலியுடன் தேவகி அழைக்க, உடனேயே தன் முகத்தில் தோன்றிய மாற்றத்தினை மறைத்தவள், உதட்டை இழுத்துச் சிரிப்பதுபோல நடித்தாள்.

அதே நேரம் அவளை அழைத்துச் செல்ல வந்த அநேகாத்மன் சர்வமகியைக் கண்டதும் விழி மூட மறந்தவனாக அவளையே வெறித்துப் பார்த்தான். தேவகியும், ஏதோ செய்திருக்கிறாள் போலும், சர்வமகியின் முகம் இன்னும் பொழிவாக மலர்ந்திருந்தது.

“வாவ்… இத்தனை அழகையும் இத்தனை நாட்களாக எங்கே ஒளித்துவைத்திருந்தாய் மகிம்மா…?” என்று கேட்டவன், தன் வலது கரத்தை நீட்டி தலைகுனிந்தவாறு,

“இளவரசியாரே… தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், என் கரத்தைப் பற்றியவாறு வரலாம்…” என்றான்.

“அது சரி… இளவரசியர் எல்லோரும் இப்படி சேலைதான் கட்டிக்கொண்டு நின்றார்களாக்கும்…” என்றாள் தேவகி கிண்டலுடன்.

“அந்தக் காலத்து இளவரசியர் போலவா? வேண்டாம் தாயே… இந்த சேலையிலேயே உன் அக்காவை விட்டுக் கண்ணை எடுக்கமுடியவில்லை. அந்தக் காலத்து இளவரசியரின் ஆடையில் என்றால்… ம்ஹூ ம்… அதற்குப் பிறகு வேலையும் வேண்டாம் வெட்டியும் வேண்டாம் என்று உன் அக்காவின் அருகிலேயே இருந்துவிடுவேன்…” என்று நகைப்புடன் கூறியவன், அவளுடைய கரத்தைப் பற்றிக்கொண்டான்.

ஏனோ அந்தக் கரத்தின் அழுத்தம் இனி அவளை எங்கும் விடப்போவதில்லை என்பதைக் கூறுவது போலிருந்தது.

“வேலை… அது புரிகிறது… அது என்னத்தான் வெட்டி…?” என்றவாறு வந்தாள் மாதவி கிண்டலுடன்.

“நீதான் இல்லையே என்று நினைத்தேன். நீயும் வந்துவிட்டாயா?” என்றவன் சர்வமகியைப் பார்த்தான். நாணத்தால் சிவந்திருந்த அவள் விழிகள் அவன் இத்தோட்டத்தை அதிகரிக்கச் செய்தது.

“அத்தான்… கேள்வியை நான்தான் கேட்டேன்… என் கேள்விக்குப் பதில் கூறாமல் அக்காவைப் பார்த்தால் என்ன நியாயம்?” என்றாள் மாதவி கோபத்துடன்.

“ம்… என்ன கேள்விகேட்டாய்?” என்று நிமிர்ந்தான் அநேகாத்மன்.

“இல்லை… வேலை வெட்டி என்றீர்களே… வேலைக்கு அர்த்தம் தெரியும்… வெட்டிக்குத்தான் தெரியாது…” என்றாள் விடாமல்.

“ம்… உன் அக்காவுடன் பேசிக்கொண்டிருந்தால் அது வேலை… உங்களோடு மட்டும் பேசிக்கொண்டிருந்தால்… அது வெட்டி… இப்போது போதுமா விளக்கம்…” என்று அவன் நகைப்புடன் கேட்க,

“பார்ரா… இது தேவையா நமக்கு… தேவகி… நாம் ஏன் வெட்டியா மற்றவர்களுடன் பேசவேண்டும். நமக்கு ஆ…யிரம் வேலை இருக்கிறது… அத்தானே… நீங்கள் அக்காவுடன் வெட்டியாக… நோ நோ… வேலையாகப் போய் வாருங்கள் நாங்கள் வெட்டியாக எங்கள் வேலையைச் செய்கிறோம்…” என்றவள் கலகலவென்று நகைத்தாள்.

“ஓக்கே கேர்ள்ஸ்… டைம் போகிறது… விவாதத்தைப் பிறகு வந்து வைத்துக்கொள்ளலாம்… நீங்கள் உங்கள் வெட்டி… சாரி… வேலையைப் பாருங்கள்…” என்றவன் சர்வமகியின் இடையில் தன் கரத்தைப் போட்டு அவளைக் காருக்கு இழுத்துச் சென்றான். .

கிடைத்த அந்த சந்தர்ப்பத்தில், தான் நினைத்ததைச் சாதித்துக்கொண்டிருந்தான் அநேகாத்மன்.

ஆமாம், அவள் வெற்றிடையில் தன் கரத்தைப் பதித்தவன், அவ் இடையின் மென்மையை, கன கச்சிதமாக, பட்டுக்கும், பஞ்சுக்குமாக ஒப்பிட்டுக்கொண்டிருந்தான்.

அவனுடைய இடை வருடலில், கூசிச் சிலிர்த்தவள்,

“ஆத்மன்…” என்றாள் நெளிந்தவாறு.

ஒரு வாறு சுய நினைவு பெற்றவன், தான் செய்துகொண்டிருந்த காரியம் நினைவுக்கு வர, அவளைப் பார்த்து தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி,

“உன்னுடைய தோல் எப்படி இத்தனை சாஃப்டா இருக்கிறது மகிமா…” என்று அதி முக்கிய கேள்வியைக் கேட்க, அவள் முறைப்பையும் கருத்தில் கொள்ளாது, அவளை முன்னுக்கு அமர்த்திவிட்டு, ஓட்டுநர் இருக்கையில் வந்தமர்ந்தவனின் இதழ்கள் புன்னகையைத் தத்தெடுத்திருந்தன.

கொஞ்சத் தூரம் சென்றதும், காற்றிற்கு அவளுடைய கூந்தல் கற்றை ஒன்று அவளுடைய கழுத்தடியில் பட்டுப் பட்டு விளையாட, வலது கரத்தை ஸ்டியரிங் வீலில் வைத்துக்கொண்டு, இடது கரத்தைத் தூக்கி அந்தக் கூந்தலை ஒதுக்கி விட்டவன், அக் கரத்தை விலக்க முடியாதவனாக, அவள் கழுத்து வளைவைப் புறங்கையால் வருடிக் கொடுக்க, அவனுடைய திடீர் வருடலில் உடல் கூசி, முகம் நாணி இதழ் கடித்தவளைக் கண்டவன், அதற்கு மேல் முடியாது என்பது போல, சடன் பிரேக் போட்டு ஓரமாகத் தன் காரை நிறுத்தினான்.

சர்வமகி வியப்புடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“எ… என்ன ஆகிவிட்டது? எனிதிங் ராங்?” என்று அவள் கேட்க, வேகமாக அவள் புறம் திரும்பியவன்,

“யெஸ்… எவ்ரிதிங் இஸ் ராங்…” என்றவன் அவள் முகத்தைத் தன் கரங்களால் பற்றித் தன்னை நோக்கி இழுத்தான்.

அவள் என்ன என்று உணர்வதற்குள்ளாகவே அவளுடைய உதட்டில் தன் உதட்டைப் பொருத்தினான்.

எத்தனை நேரமாக அப்படியே நின்றார்களோ… எங்கோ ஒரு வாகனத்தின் ஹோர்ன் சத்தம் கேட்க, சுயநினைவு பெற்று மெதுவாக அவளை விடுவித்தான் அநேகாத்மன்.

“சாரிடா… உன்னை இப்படிப் பார்த்ததும், என்னால்… அமைதியாக இருக்கமுடியவில்லை… உனக்கு… உனக்கு இதில் ஒன்றும் வெறுப்பில்லையல்லவா?” என்றான் சிறு பயத்துடன்.

சர்வமகி தன் தலையைக் குனிந்து, தன் வெட்கத்தை மறைக்கப் பெரும் பாடு படுவதைக் கண்டதும் இவனுக்கு உற்சாகம் பீறிக்கொண்டு வந்தது.

அவளுடைய முகத்தைத் தன் ஒற்றை விரலால் பற்றித் தூக்கியவன் சிவந்த அவள் கன்னங்களை ரசனையுடன் பார்த்தான்.

“சர்வமகி… இந்த உலகத்திலேயே பெரிதும் அதிர்ஷ்டம் செய்தவன் நான்தான் தெரியுமா? நான் விரும்பியது எல்லாமே எனக்குக் கிடைத்துவிட்டது… உனக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்…” என்றவன் மீண்டும் குனிந்து அவள் உதட்டில் முத்தமிட்டுவிட்டுக் காரை எடுத்தான். அவனுடைய வலது கரம், அவளுடைய இடது தொடையை ஆசையுடன் பற்றிக்கொண்டது.

“வந்து… உங்களுடைய பார்ட்டிக்கு இந்த சேலை ஒருமாதிரி இருக்குமோ என்று கொஞ்சம் பயமாக இருக்கிறது…” என்று சற்றுத் தயங்கியவாறு கூறினாள் சர்வமகி.

“நோ… திஸ் இஸ் பேர்ஃபக்ட்… வேண்டுமானால் பார்… எல்லோருடைய பார்வையும் உன் மீதுதான் இருக்கப்போகிறது…” என்றான் அநேகாத்மன் உல்லாசமாக.

“யாருடைய பார்வையும் என் மீது விழவேண்டாம் ஆத்மன்… உங்களுடைய பார்வை மட்டுமே என் மீது விழுந்தால் போதும்… வேறு எதுவுமே வேண்டாம்…” என்று மனதிற்குள் கூறியவள் உரிமையுடன் அவனுடைய தோளிலே தன் தலையைச் சரித்தாள்.

அவனுடைய கரம் அவளை வளைத்துப் பிடித்து தன்னுடன் இறுக்கியது.

“ஆத்மன்… நான் இந்த உலகத்தில் வாழப்போவது கொஞ்சக்காலமாக இருந்தாலும், சந்தோஷமாகவே இருந்துவிட்டேன்… அது போதும் எனக்கு… இனி இப்போது வேண்டுமானாலும் நான் இறக்கத் தயார்…” அவள் முடிப்பதற்குள்ளாக, கார் கிறீச் என்ற சத்தத்துடன் ஒரு இடத்தில் நின்றது.

சிறு அச்சத்துடன் அவனை விட்டு விலகியவள், என்ன நடந்தது என்று தெருவைப் பார்த்தாள். தெரு வெறுமையாக இருந்தது.

“எ… என்ன அனேகாதமன்… ஏன் காரை நிறுத்தினீர்கள்…” என்றாள் புரியாமல்.

திரும்பி சர்வமகியை வெறித்துப் பார்த்தவன், நீண்ட மூச்சுக்களாக எடுத்துத் தன்னைச் சமப்படுத்த முயன்றான். முடியாமல், குரலில் கோபம் கொந்தளிக்க, அதை அவளிடம் மறைக்க முயன்று தோற்றவனாக,

“சர்வமகி… இனி ஒரு முறை ஒரு முறை தன்னும் உன் ஆயுளைப் பற்றிப் பேசாதே… உன்னுடைய விதி என் முடிவுக் காலத்தில்தான். அது எப்பவோ எனக்குத் தெரியாது. நீ இல்லாத உலகத்தில் என்னால் எதையும்… எதையுமே சிந்திக்க முடியவில்லை… ஒ காட்…” என்றவன் தன் தலைமுடிக் கற்றைகளை ஒற்றைக் கரத்தால் இழுத்துவிட்டவன், அதற்கு மேல் பேசப் பிடிக்காதவனாகக் காரை எடுத்தான். அவன் முகம் சிரிப்பைத் தொலைத்து இறுகியிருந்தது.

சர்வமகிக்குத் தன் மீதே கோபம் வந்தது. கொஞ்சம் இளகி வந்தவனை மீண்டும் இறுகவைத்துவிட்டோம் என்கிற எரிச்சலும் வந்தது.

அவளும் அமைதியாகத் தெருவை வெறித்துப் பார்த்தாள்.

நிலவு 47

அவர்களைக் கண்டதும், விழா நடத்துபவர்களின் வரவேற்புப் பெரும் ஆரவாரமாக இருந்தது. உடனேயே  அனைவரும் அநேகாத்மனையும் சர்வமகியையும் சூழ்ந்து கொண்டனர்.

“வாவ்… இத்தனை நாட்களாகத் திருமணம் வேண்டாம் என்றிருந்தவன், ஏன் உங்களை மணந்தான் என்று இப்போதல்லவா தெரிகிறது… அநேகாத்மன்… யு ஆர் லக்கி மான்…” என்று பல ஆண்கள் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தனர்.

அதில் சில ஆண்களின் பார்வை அவர்களையும் மீறி, அவளுடைய உடல் அழகை எடைபோட்டது மட்டுமல்லாது, அவளை நோக்கித் தம் கரத்தையும் நீட்டினர்.

அவளும் விகல்ப்பம் இல்லாமல் தன் கரத்தை நீட்ட, அந்த ஆண்களின் பார்வையின் பொருளை உணர்ந்துகொண்ட அநேகாத்மன், சர்வமகியின் கரம் பிற ஆண்களைத் தொடுவதற்கு முன்பாக, அவளைத் தன் கரத்தின் வளைவிற்குள் நிறுத்தி, அவர்களைப் பார்வையால் எரித்தான்.

“ஹே… காய்ஸ்… ஷீ இஸ் மைன்… டோன்ட் மெஸ் வித் ஹர்…”  என்றான் அழுத்தமாக.

அந்தக் குரலில் சர்வமகி அதிர்ந்தாளோ, இல்லையோ, மற்றையவர்கள் அதிர்ந்து இரண்டடி பின் வைத்தனர். அதே நேரம்,

“வாவ்… நீங்கள் மிக மிக அழகாக இருக்கிறீர்கள்… மிஸ்டர் அநேகாத்மன் உங்கள் மீது மயங்கியதில் ஆச்சரியமில்லை…” என்றனர் சில பெண்கள்.

அதிலிருந்த ஒரு சிலர் இவளை எரிச்சலுடன் பார்த்துவிட்டு விலகிக்கொண்டனர். அதில் ஒரு வெள்ளையினத்துப் பெண்மணி மட்டும் சர்வமகியை விழி எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் பொறாமை அப்பட்டமாகத் தெரிந்தது. சும்மா என்றால் விட்டிருப்பாளோ என்னவோ, ஆனால் அவள் அணிந்திருந்த ஆரம்… அதைப் பார்க்கப் பார்க்க அந்தப் பெண்ணிற்கு கடும் கோபம் ஏறிக்கொண்டிருந்தது. அந்த ஆரத்தின் பெறுமதி அவளுக்குத் தெரியாதா என்ன? எத்தனை முறை, அந்த நகைகளைத் தீண்ட வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள் ஒரு போதும் அது நிறைவேறவில்லை.

ஒரே ஒரு முறை, அதைப் பார்த்துவிட்டுக் கொடுப்பதாகக் கேட்டபோது, கடுமையாக மறுத்துவிட்டானே. இப்போது அதே ஆரம், அந்தப் பெண்ணின் கழுத்தை அல்லவா அலங்கரிக்கிறது. நினைக்க நினைக்க அந்த வெள்ளையினப் பெண்ணிற்குத் தாங்க முடியவில்லை.

அதே நேரம், பெண்கள் கூட்டம் அநேகாத்மனை சுற்றி வளைத்தது. அவள் இன்னும் அநேகாத்மனின் கைவளைவில் இருப்பதைக் கண்டதும், அவளைத் தம்முடன் அழைத்துச் செல்ல முயன்றனர்.

அநேகாத்மனோ தன் கைவளைவில் நிற்வளை விடுவதா இல்லையா என்று தயங்க, அவனைப் பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றைச் சிந்தினாள் சர்வமகி.

அவனுக்கும் அவளைத் தன்னோடு வைத்திருக்க முடியாது. பலர் அவளை நாகரீகமாகக் கையாண்டாலும், விழிகளால் கூட அநாகரிகமாகக் கையாளும் ஆண்களை என்ன செய்வது. அவர்களுக்கு அத்தகைய வாய்ப்பைக் கொடுப்பதே தவறு. அதனால் அவள் தன்னோடு இல்லாமல் இருப்பதே மேல் என்று எண்ணியவன், சம்மதம் தெரிவித்து அவளை விடுவிக்க,

“லேடீஸ்… டேக் கெயர் ஒஃப் ஹர்….” என்றான்  கட்டளையாக.

“அடேங்கப்பா… உங்கள் மனைவியை நாங்கள் பத்திரமாகவே பார்த்துக்கொள்வோம்… கவலைப்படாதீர்கள்…” என்று கிண்டலாகக் கூறிய பெண்கள் அவளையும் அழைத்துக்கொண்டு தங்கள் இடத்திற்குச் சென்றனர்.

அவளிடம் பல கேள்விகளைக் கேட்டுத் துளைத்துவிட்டனர் பெண்கள் கூட்டம். சர்வமகி பதில் கூறியே களைத்துவிட்டாள்.

அதுவும் அவர்கள் அநேகாத்மனைப் பார்த்துக்கொண்டே கேள்விகள் விதம், இவளுக்குக் காந்தியது. கேள்வியென்னவோ அவள் மீது தொடுத்தாலும், அவர்களின் விழிக் கணைகள் அநேகாத்மனை நோக்கியே பாய்ந்துகொண்டிருந்தன.

“அநேகாத்மனை எங்கே பார்த்தீர்கள்…”

‘அது சரி…  அந்தக் கதையைக் கேட்டால், பிடரியில் கல்முட்ட ஓடிவிடுவீர்கள்’

“உங்களோடு நேகன் எப்படி நடந்துகொள்கிறார்…”

‘அதைத் தெரிந்து என்ன செய்யப்போகிறாய்? பல்லி முட்டாய் வாங்கித் தரப்போகிறாயா?

“உடனேயே பிள்ளை பெறப் போகிறீர்களா இல்லை… வாழக்கையை அனுபவித்துவிட்டுப் பெறப்போகிறீர்களா?’

‘வாழ்க்கையை அனுபவிக்கிறதா? வாழ்க்கையே இல்லை என்று கடவுள் முடிவுசெய்துவிட்டான். இதில் எங்கிருந்து வாழ்க்கையை அனுபவிப்பது?’

“யார் முதலில் தங்கள் காதலைச் சொன்னது? நீங்களா, மிஸ்டர் அநேகாத்மனா?”

‘மக்கும்… லவ் ஒன்றுதான் இல்லாத குறைச்சல்…” என்று எல்லா கேள்விக்கும் மனதிற்குள்ளேயே கடுப்புடன் பதில் கூறியவளுக்கு அவர்களின் பார்வை அநேகாத்மனை விட்டு விலகவில்லை என்றதும், உடல் முழுவதும் எரிந்தது. ஆனாலும் மாறா புன்னகையை மட்டும் சிந்திக்கொண்டிருந்தாள் சர்வமகி.

அதே நேரம், ஆடலுக்கான நேரம் என்று டிஜே அறிவிக்க, பாடல் ஒலிபரப்பானது. அது வரை அமைதி காத்திருந்த சில கனவான்கள், சர்வமகியை நெருங்கித் தமது கரத்தை நீட்ட, திகைத்துப்போனாள் சர்வமகி.

அவள் சங்கடத்துடன் விழித்து அனோகத்மனைத் தேட, தூரத்திலிருந்து சர்வமகியை நெருங்கும் ஆடவர்களைக் கண்டதும், பேசிக்கொண்டிருந்தவர்களிடம் மன்னிப்பு வேண்டி, தன் மனையாளிடம் விரைந்து வந்தான் அநேகாத்மன்.

தன் கரத்தை நீட்டியவன், “கம் டான்ஸ் வித் மி…” என்றான்.

“இ… இல்லை ஆத்மன்… எனக்கு ஆட வராது…” என்று இவள் தடுமாற,

“இட்ஸ் ஓக்கே… நான் உனக்கு சொல்லித் தருகிறேன்…” என்றவன், அவளின் அனுமதியையும் பெறாது, அவள் வலது கரத்தைப் பற்றி, நடுக் கூடத்திற்கு அழைத்து வந்தான்.

தனக்கு ஆடத் தெரியாது என்றால், அநேகாத்மன் விட்டுவிடுவான் என்று எண்ணியிருந்தவளுக்கு, அவன் பிடிவாதமாக அழைத்து வந்தது, சற்றுப் கோபத்தை ஏற்படுத்தியது.

“ஆத்மன்… ப்ளீஸ்… இத்தனை பேரிட்கு முன்னால்… வேண்டாமே…” என்று இவள் தடுமாற, அவனுக்கோ, இவள் என்னவள் என்பதை அனைவருக்கும் பறைசாற்றவேண்டும் என்கிற வெறி.

“ஸ்டாப் இட் மகி… என் கூடத்தானே ஆடப்போகிறாய்… இதில் என்ன தயக்கம்..” என்றவன் தானாகவே, அவள் இடக் கரத்தைப் பற்றித் தன் தோளில் வைத்து, தன் வலக் கரத்தை அவள் இடையினூடாகக் கொண்டு சென்று, முதுகின் முள்ளந்தண்டு முடியும் பகுதியில் பதித்து, மறு கரத்தால், அவள் கரத்தைப் பற்ற, அவனோடு இணைந்து அவளும் இரண்டு ஸ்டெப் வைக்க, இவனுடைய ஒற்றைப் புருவம் வியப்பில் மேலேறி இறங்கியது.

“ஆடத் தெரியாது என்று சொன்னாய்… இப்போது நான் சொல்லித்தராமலே, ஸ்டெப் வைக்கிறாய்…” என்றவன், அவளைத் தள்ளிப் பின் கரம்கொண்டு சுண்டி இழுக்க, அவள் சுழன்றவாறு, அவன் கையணைப்பில் பின்புறம் மோதுமாறு வந்து விழுந்தாள். அவள் சுழன்று வந்து விழுந்த வேகத்தில், நிச்சயமாக அவளுக்கு ஆடத் தெரியும் என்பதைப் புரிந்துகொண்டவன், மேலும் கேள்வியாக அவளை நோக்கிக் குனிய,

“எனக்கும் ஆடத் தெரியும்…” என்றாள் இவள் தன் கோபத்தை மறைக்க முயன்றவளாக.

அவள் கோபத்தை உணர்ந்தவன், அதை வெளியே காட்டாமல், அவள் இரு கரங்களையும் பற்றி, அவள் வயிற்றோடு அழுத்தி இடமும் வலமுமாக இரண்டு இரண்டு ஸ்டெப் எடுத்து வைக்க, அவளும் அவன் போக்கிற்கேற்றவாறு கால்களை அசைக்க,

“அப்போ எதற்கு ஆடத்தயங்கினாய்… என்னோடு ஆடப் பிடிக்கவில்லையா?” என்றான் கடும் கோபத்துடன்.

அந்தக் குரலில் தெரிந்த கடுமையைப் புரிந்துகொண்டவள், தன் தiலையை உயர்த்தி பதற்றத்துடன் அவனை ஏறிட்டு,

“இ… இல்லை ஆத்மன்… இப்படி எல்லோர் முன்னிலையிலும் ஆடப் பிடிக்கவில்லை…” என்றாள் இவள் கலக்கமாக.

உடனே மலர்ந்தது அவன் முகம்.

“இட்ஸ் ஓக்கே மகிம்மா… என் கூடத்தானே நீ ஆடுகிறாய்?” என்றவன் மீண்டும் அவளைச் சுழற்றி தன்னைப் பார்க்குமாறு நிறுத்தியவன், அவளை இழுத்தவாறு பின்புறமாக நடக்க, அவளும் அவன் காலசைவுக்கு ஏற்றவாறு அவன் மார்பில் விழுந்தவாறு முன்நோக்கி நடக்கத் தொடங்கினாள்.   ஒரு நிலையில், நின்று சரிந்திருந்தவளை நிமிர்த்தி

கேளாயோ கேளாயோ

செம்பூவே கேளாயோ

மன்றாடும் என் உள்ளம்

பாராயோ…

என்றவனின் ஐந்து விரல்களும், கால்களின் அசைவுகளுக்கு ஏற்றவாறு, அவளுடைய கன்னத்தை வருடி, அப்படியே கீழிறங்கிக் கழுத்தில் நிலைகொள்ள, முகமோ, அவள் உயரத்திற்கேற்றவாறு குனிந்து அவள் கன்னத்தோடு உரசியவாறு நின்றது. அது போதாது என்பது போல, அப்படியே நழுவி அவள் உதடுகளின் கரையோரமாக அவன் உதடுகள் மிதக்க முயல, அவனோடு இணைந்து ஆடியவாறே, அவன் இதழ்கள் மீது தன் கரத்தைப் பதித்து, அவனைத் திரும்பிப் பார்த்து, நாணத்துடன் மறுப்பாகத் தலையை ஆட்டி இசைக்கேற்ப, அவன் பிடியை விட்டு விலகித் தள்ளிப்போக முயல,

உன்னை பிரிந்தால்

உன்னை பிரிந்தால்

உயிர் வாழா

அன்றில் பறவை நான்

அன்றில் பறவை

அவள் நோக்கப் புரிந்தவனாக, அவளை ஒரே இழுவையில் இழுக்க, மீண்டும் சுழன்று சுருண்டு அவன் மார்போடு அவள் பின்புறம் மோதி நிற்க, அந்த அருகாமை தந்த போதையில் தன் தலையைக் குனிந்து, உதடுகளை அவள் கழுத்து வளைவில் பதித்தவாறு,

நீ என்னை மறந்தால்

காற்று கதறும்

கடலின் மேலே

ஒட்டகம் நடக்கும்

தன் கரகங்களை அப்படியே கீழிறக்கி, இடையில் பற்ற, அக் கரங்கள் கொடுத்த வெம்மையில், உடல் சிலிர்த்தவள், அவனுடைய நடனத்திற்கு ஏற்ப தன் கால்களையும் கொண்டு சென்றவாறு, அக் கரத்தின் மீது தன் கரங்களைப் பதித்து, விலக்க முயல, விலக்க முயன்ற அவள் கரங்களைப் பற்றித் தூக்கித் தன் இரு கன்னங்களிலும் பதித்து விழிகளை மூடி அந்த மென்மையில் மெய்மறந்து நின்றான் அந்தக் காதலன்.

ஓ… நீ என்னை மறந்தால்

காற்று கதறும்

கடலின் மேலே

ஒட்டகம் நடக்கும்

அது போதாது என்பது போல, அவளுடைய இடது கரத்தைப் பற்றித் தன் உதட்டில் பொருத்தி, மெல்லிய முத்தமொன்றை வைக்க, அவளோ பெரும் வெட்கத்துடன் தன் கரத்தை அவன் பிடியிலிருந்து விலக்கித் திரும்ப முயல, அதை இலகுவாகத் தடுத்து,

ஓ.. நீ என்னைப் பிரியாய்

ஓ.. நீ என்னை மறவாய்

விட்டு போனால் எட்டி போகும்

விண்மீன் எல்லாம் கொட்டி போகும்..

தன் இரு கரங்களையும், அப்படியே அவள் வயிற்றோடு வருடிச் சென்று மேலும் தன்னோடு அழுத்தினான். இப்போது அவள் பின்னுடல், மேலும் அழுத்தமாக அவள் மன்னவனின் முன்புறத்தோடு, மோதி நின்றது. மீண்டும் அவனுடைய உதடுகள் அவள் கன்னம் நோக்கிப் பயணப்பட,

கேளாயோ கேளாயோ

செம்பூவே கேளாயோ

மன்றாடும் என் உள்ளம்

பாராயோ..

வெட்டிய மீசை, அவள் கன்னத்துடன் ரகசியம் பேசி குறுகுறுப்பூட்ட, அதைத் தாங்க முடியாது,  சுழன்று தன் பொன்னுடல் அவன் முன்னுடலுடன் பொருந்தி நிற்க, தன் இரு கரங்களையும் தன்னவனின் கழுத்தில் மாலையாகப் போட்டவாறு அண்ணாந்து அவன் முகத்தைப் பார்த்தாள் தாமரைவிழியாள்.

உன்னைப் பிரிந்தால்

உன்னைப் பிரிந்தால்

உயிர் வாழா

அன்றில் பறவை நான்

அன்றில் பறவை

அந்த மாயக் கள்வனோ, தன் சுண்டு விரலை, இசைக்கேற்ப, அவள் நெற்றியில் பதித்து, மூக்கினூடாகக் கோடு கிழித்து, முன் கழுத்தில் வருடியவன் அப்படியே தன் கரங்களை இறக்கி, அவளுடைய கொடியிடையில் கரம் பதித்து, அப்படியே மேலே தூக்கித் தன் உயரத்திற்கேற்றாட்போலத் தாங்கியவன், பின் வேகமாக மூன்று முறை சுழன்றான்.

என் குறைகள் ஏது கண்டாய்

பேசுவது காதலோ

பேணுவது காமமோ.

பிரியம் என்ன போலியோ

ஏன் பெண்ணே இடைவெளி

அப்படியே அவளை இறக்காது, கொஞ்ச நேரம் தாங்கியிருந்தவன் தன்னையே திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்த  பூங்கொடியாளின் விழி வீச்சில் மயங்கிக் கிறங்கி, மெதுவாக அவளைக் கீழிறக்க,

எதனால் பிரிந்தாய்

பிரிந்தாய் எதனால்

மறந்தாய் மறந்தாய்

கேளாயோ…

அவளுடைய அங்கங்கள் அவன் முகத்தின் மீது படிந்து இறங்க, அந்த மயக்கத்திலிருந்து சிறிதும் விலக மனமில்லாதவனாக, மெது மெதுவாகக் கீழிறக்கி, இறுதியில், அவள் பின் இடையில் கை பதித்து அவளைச் சரிக்க, அவன் கைப்பிடியின் பலத்தில் பின் புறமாகச் சரிந்து நின்றாள்… இதுவே நடனத்தின் இறுதி என்பது போல.

ஆனால் அநேகாத்மனோ நடனம் முடிந்தது என்பதே உணராதவன் போலத் தன் மனையாளை இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான்.

உனையே உனையே பிரிந்தால்

உயிர் வாழா

அன்றில் பறவை பறவை

பறவை நான்

பலத்த கரகோஷம் கேட்க, அப்போதுதான் இருவரும் தம் சுயத்திற்கு வந்தனர். அது வரை தாம் இருவர் மட்டுமே உலகில் தனித்திருப்பது போன்ற நினைவில், நடனமாடிக்கொண்டிருந்தவர்களுக்குச் சுயநினைவு வந்தது.

சர்வமகிக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது. அங்கிருந்தவர்களை மறந்து தன் மன்னவனின் இழுவிசைக்கேற்ப ஆடியிருக்கிறோம் என்பது புரிய, மற்றவர்களைப் பார்க்க வெட்டகப்பட்டவளாகத் தன் கணவனின் மார்பில் முகம் புதைத்தாள் அந்தக் கோதை.

நாணத்துடன் தன் மார்பில் தஞ்சம் புக, என்றுமில்லா பெருமையில் நெஞ்சம் விம்மத் தன் மனைவியை இறுக அணைத்துக்கொண்டவன், “ஹே.. இட்ஸ் ஓக்கேம்மா…” என்று பெரும் மகிழ்வுடன் சமாதானப் படுத்தினாலும், அவன் மார்பைவிட்டுத் தன் முகத்தைப் பிரித்தாள் இல்லை. அவனுக்கும் அவளை விலத்தும் எண்ணம் எள் அளவும் இருக்கவில்லை.

அவள் நிலையை எண்ணி நகைத்தவன், நடனம் முடிய, அனைவரின் கரகோஷத்தைச் சிறு தலையசைப்புடன் ஏற்றுக்கொண்டு, ஒரு ஓரமாகத் தன் மனைவியை அழைத்து வந்தான்.

அது வரை அவர்களின் நடனத்தை ஒரு வித வக்கிரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த வெள்ளையினத்துப் பெண்மணி. இத்தனை நேரமாக, அநேகாத்மன், அந்த சர்வமகியுடன் காதல் பாஷை பேசியதைப் பார்த்துக்கொண்டுதானே இருந்தாள். நடனம் முடிந்ததும், இருவரும் ஒரு ஓரமாகப் போவதைக் கண்டவள், ‘அன்று என்னை செக்யூரிட்டி வைத்தல்லவா வெளியேற்றினாய்?’ என்று ஒரு வித ஏளன நகைப்புடன் எண்ணியவள் அவர்களை நோக்கிச் சென்றாள்.

“ஹலோ… நேகன்… ஹெள ஆர் யு… லோங் டைம்… நோ… சீ…” என்றவாறு அவனை நெருங்கி நின்றுகொண்டாள்.

ஒரு கணம் அவளைக் கண்டதும், அநேகாத்மனின் விழிகள் மெல்லியதாய் சுருங்கி, பின் அவளை எச்சரிப்பது போலப் பார்க்க, அந்த பார்வையை அலட்சியம் செய்த அந்தப் பெண், சர்வமகியை ஏறிட்டாள்.

ஏனோ சர்வமகிக்கு அது சிறிதும் பிடிக்கவில்லை. சிறு எரிச்சலுடன் அநேகாத்மனையும், அந்த வெள்ளைக்காரியையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“சர்வமகி… திஸ் இஸ் ரோஸ்லின்… என்னுடைய நண்பி…” என்று அவன் வேறு வழியில்லாமல் அறிமுகப் படுத்த, இவள் முகம் தெளிந்தது.

“ஹாய்.” என்றவாறு தன் கரத்தை நீட்ட அதை அலட்சியமாகப் பற்றிக் குலுக்கியவளை ஏறிட்டான் அநேகாத்மன்.

“ரோஸலின் திஸ் இஸ் மை வைஃப்…” என்றான் முகத்திலும் குரலிலும் பெருமை பொங்க.

அவளைப் புன்னகையுடன் பார்த்தவள் திரும்பி அநேகாத்மனை ஏறிட்டாள்.

“எனக்குத் தெரியும்… ஹனி… நீ மணம் முடித்துவிட்டாய் என்று கேள்விப்பட்டேன்… உன்னுடைய மனைவி மிகவும் அழகானவள் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்போதுதான் பார்க்கிறேன்…” என்று ஆங்கிலத்தில் கூறியவள், திரும்பி கொஞ்ச நேரம் அவளுடன் உரையாடிக்கொண்டிருந்தாள்.

அந்த நேரம் அநேகாத்மனின் நண்பன் அவனை ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல, அநேகாத்மன் தயங்கியவாறு சர்வமகியைப் பார்த்தான்.

அவள் என்ன என்பதுபோலத் தலையை ஆட்டிக் கேட்க,

அவளருகே நெருங்கி நின்றவன் அவளுக்கு மட்டும் புரியும் தமிழில்,

“நண்பன் கூப்பிடுகிறான்… போகாமலும் இருக்க முடியாது… எதற்கு என்று உனக்கு விளங்குகிறது அல்லவா? அதிகமாக அல்லாமல் ஓனலி வன் பெக்… எடுக்கலாமா?” என்று அவளிடம் அனுமதி கேட்டு நின்றான் அநேகாதமன்.

அவள் முகத்தில் கலவரத்தைக் காணவும்,

“பயப்படவேண்டாம் சர்வமகி… எவ்வளவு குடித்தாலும் நான் தடுமாறுவது கிடையாது… உனக்கு ஓக்கே என்றால்தான்… இல்லாவிட்டால்… ஐ கான் மனேஜ்…

“இ… இல்லை பரவாயில்லை… உங்கள் நண்பர் அழைத்துத் தரும்போது மறுக்கமுடியாது… ஆனால் அதிகம் எடுக்காதீர்கள்…” என்றாள் வருந்துபவளாக.

“மை ஏஞ்சல்… தாங்க்ஸ்டா…” என்றவன் அங்கிருப்பவர்களையும் கவனிக்காமல் அவள் கன்னத்தில் மெல்லியதாக உதட்டைப் பொருத்திவிட்டு ரோசலினை ஏறிட்டவனின் விழிகள் சொன்ன செய்தியை அவள் ஒருவித நக்கலுடன் பார்த்துவிட்டுத் தன் தோளைக் குலுக்கினாள்.

சர்வமகி யோசனையுடன் பார்க்க, “பார்த்து…” என்று எச்சரித்துவிட்டுத் தன் நண்பனுடன் சென்றான்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ரோசலினுக்கு மேலும் தீக்கு எண்ணை வார்த்தது போலாயிற்று.

அடேங்கப்பா… அநேகாத்மன் ஒரு பெண்ணிடம் அனுமதி கேட்டு நிற்கிறானா? அதுவும் காதலுடன்… உலகம் தலைகீழாக மாறிவிட்டதா என்ன? திரும்பி சர்வமகியை ஏறிட்டாள்.

கணவன் போவதையே முகம் சிவக்கக் காதலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். இவளுக்குக் காந்தியது.

அநேகாத்மன் கண்ணுக்கு மறைந்ததும், சர்வமகி திரும்பத் தன் முகத்தைச் சீர்படுத்தினாற் போல வைத்தாள் அந்த ரோசலின்..

அவன் போவதையே முகம் சிவக்கப் பார்த்துக்கொண்டிருந்தவள், அவன் கண்ணுக்கு மறைந்ததும், திரும்பி அருகே நின்ற ரோசலினை ஏறிட்டாள்.

“சாரி மன்னித்துவிடுங்கள்…” என்று மன்னிப்புக் கேட்டவள், “இப்போது சொல்லுங்கள்… உங்களுக்கும், என் கணவருக்கும் எப்படிப் பழக்கம்? சிறுவயதிலிருந்தா, இல்லை…” என்று பேச்சைத் தொடர்ந்தாள்.

“ம்… உன் கணவருக்கும் எனக்கும் நீண்ட காலமாகப் பழக்கம் இருக்கிறது…” என்று சொன்னவள் அருகே ஒரு வெய்ட்டர் பொன் நிறத் திரவத்தை எடுத்துவர அவனுக்குக் கைகாட்டி அழைத்து ஒன்றைத் தன் கரத்திலும் மற்றதை சர்வமகியிடமும் நீட்டினாள்.

“இல்லை வேண்டாம்… எனக்குப் பழக்கமில்லை…” என்றாள் சர்வமகி சிறு புன்னகையுடன்.

“வட்… பழக்கமில்லையா? அநேகாத்மன் பார்ட்டி என்று வந்தால் வெளுத்துக்கட்டுவான்… பட் ஆள் ஸ்டெடியாக நிற்பான்…” என்றவள் தன்னுடையதை ஒரே இழுவையில் குடித்து முடித்துவிட்டு சர்வமகிக்காக வாங்கியதையும் ஒரு இழுவை இழுத்து வெறும் கோப்பையை மேசையில் வைத்தாள்.

மீண்டும் வெய்ட்டரை அழைத்து இரண்டு பெக் வாங்கி வாயில் ஊற்றிக்கொண்டாள். அவளையே வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் சர்வமகி.

“டூ யு நோ வட்…” என்றவள் இன்னொன்றை வாயில் ஊற்றிவிட்டுச் சர்வமகியைப் பார்த்தாள்.

“அநேகாத்மன்… ரம் அடித்தால் அவனுடைய தேவைகள் அதிகமாகிவிடும்… அதற்கு எத்தனையோ முறை நான் கம்பனி கொடுத்திருக்கிறேன்…” என்று நகைத்தவள் இன்னொன்றை எடுத்து மீண்டும் வாயில் ஊற்றினாள்.

“வட் டூ யு மீன்…?” என்றாள் சர்வமகி கலவரமாக.

“புரியவில்லை… அவன் காதலில் கைதேர்ந்தவன்… நீ தான் அனுபவித்திருப்பாயே… அதுவும் பெக்கை வாயில் ஊற்றினால்… வேகம்… வேகம்… வேகம்… அவனுடன் ஒரு நாள் தங்குவதற்கே நான் நீ என்று பலர் போட்டி போடுவார்கள்… பட்… நான் ஒருத்திதான் தேர்வு செய்யப்பட்டவள்… ஹா…ஹா… ஹா…” என்றதும் சர்வமகி கோபத்துடன் ரோசலினைப் பார்த்தாள்.

“நோ… நான் நம்பமாட்டேன்… என் ஆத்மன் அப்படிப்பட்டவர் அல்ல… அவர் ஒரு போதும் தவறான பாதையில் போகமாட்டார்…” என்றாள் சர்வமகி அழுத்தமாக.

“வட்… உன் ஆத்மனா… நைஸ் ஜோக்….” என்று நகைத்தவள் தன் கரத்திலிருந்த கிளாசை உருட்டியவாறு தலையை ஒரு பக்கம் சரித்து,

“என்ன சொன்னாய்.. தவறான பாதையிலா? செக்ஸ் என்பது தவறா? என்ன சொல்கிறாய் நீ? ஒவ்வொரு உயிரினத்திற்கும் அது தேவையானது. ஆரோக்கியமானது. அத்தியாவசியமானது.  அது தவறு என்றால் எல்லாமே தவறு…” என்றவள் மீண்டும் வாயில் ஊற்றிக்கொண்டாள்.

“உங்கள் இனத்தைப் பொறுத்தவரையில் அது தவறில்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில், திருமணத்திற்கு முன்னால்… இப்படி அசிங்கமாக நடப்பது பெரும் குற்றம். எப்படி ஒரு பெண் கன்னியாக இருக்கிறாளோ, அதே போல அவளுக்கு வரப்போகிற ஆணும் ஒழுக்கமுடையவனாக இருக்கவேண்டும்…” என்றாள் சர்வமகி படபடப்புடன்.

“கமோன்… உங்கள் கல்ச்சரைப் பற்றி எனக்குத் தெரியாது… பட் அநேகாத்மன் இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்தவன், அவன் நம் இனத்தினர் போலத்தான்…”

“சோ… வட் அவர் எந்த நாட்டிலும் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்… தமிழ் என்கிற இனத்தை அவரால் அழிக்கமுடியுமா? இல்லை தமிழனின் பண்பாட்டுக் கலாச்சாரத்தைத்தான் விட்டுவிட முடியுமா? சரி… அதிகம் தேவையில்லை… ஒரு வேளை நான்… வேறு யாருடனும்… தவறாக நடந்திருந்தால்… என் கணவர் என்னை மணமுடித்திருப்பாரா… நிச்சயமாக இல்லை…” என்றாள் சர்வமகி படபடப்புடன்.

“நிச்சயமாக மணந்திருப்பான்… அது உன் ஆயுளைப் பொறுத்தது…” என்றாள் ரோசலின் சம்பந்தமில்லாமல்.

“என்ன சொல்கிறாய்…” என்றாள் சர்வமகி புரியாமல்.

“யெஸ் பேபி… நேகன் யாரையும் மணந்திருப்பான்… மணக்கப் போகும் பெண்ணுக்கு ஆயுள் குறைவானதாக இருந்திருந்தால் யாரையுமே மணந்திருப்பான்…” என்றாள் நகைப்புடன். அவள் விழிகளில் அப்பட்டமாகக் குரோதம் வழிந்தாலும், இருந்த அதிர்ச்சியில் சர்வமகி அதைக் கவனிக்கவில்லை.

சர்வமகிக்கு வயிற்றில் புளியைக் கரைக்க, “எ… என்ன சொல்கிறாய் ரோசலின்…” என்றாள் அச்சத்துடன்.

“யெஸ் பேபி… ஐ ஆம் டெலிங் த ட்ருத்… நேகனுடைய தந்தையின் உயிலின் படி நேகன் முப்பது வயதிற்குள் திருமணம் முடிக்கவேண்டும். அப்படி முப்பது வயது வரையும் அவன்  திருமணம் முடிக்கவில்லை என்றால், அத்தனை சொத்துக்களும் சரிட்டிக்குப் போய்விடும்… ஆனால் அநேகாத்மனுக்கு இந்த திருமணம், அதனால் வருகிற கட்டுப்பாடு எதிலும் விருப்பமும் இல்லை, இன்டரஸ்டும் இல்லை… என்னை மணமுடிக்குமாறு அவனிடம் கேட்டேன். மறுத்துவிட்டான். சொத்துக்கள் போய்விடுமே என்றேன்… அதற்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? யாராவது ஆயுள் குறைந்தவளாக, இதோ இன்றோ, நாளையோ மண்டையைப் போடுபவளாகப் பார்த்துக் கட்டினால் பிரச்சனை முடிந்தது என்றான்…” என்றாள் ரோசலினின் ஏளன நகைப்புடன்.

“நோ… நான் நம்ப மாட்டேன்… அநேகாத்மன்… சொத்துக்காக என்னை… என்னை மணந்திருக்க மாட்டார்…” என்றாள் சர்வமகி அதிர்ச்சியுடன்.

“அப்போ நீ விரைவாக சாகப்போகிறாயா?” என்றவளின் குரலில் குரூரம் அப்பட்டமாக வெளிப்பட்டது. அவள் அடிபட்ட பாவனையில் அந்த ரோசலினைப் பார்க்க,

“வேண்டுமானால் நீயே அவனிடம் கேள்… உனக்குச் சந்தேகமிருந்தால்… அதோ பார்… உன் கணவர் உள்ளே போகிறார்… என் பின்னாலேயே வா… நிரூபிக்கிறேன்…” என்றவள் தள்ளாட்டத்துடன் எழுந்தாள்.

அநேகாத்மன் செல்லும் திசைக்கு அவள் செல்ல, வேகமாக அவள் பின்னே சென்றாள் சர்வமகி. அநேகாத்மனின் பார்வையில் விழாதவாறு ஒரு ஓரமாக அவள் நின்றவள், அங்கே நடப்பதை ஒரு வலியுடன் பார்க்கத் தொடங்கினாள்.

“ஹாய்… நேகன்…” என்ற ரோசலின், அவனைக் கட்டிப்பிடித்தாள். அதை எதிர்பாராத அநேகாத்மன்,

“வட் ஆர் யு டூயிங்…” என்றவாறு அவளுடைய கரங்களை வேகமாகப் பிரித்தெடுத்தான்.

“இதென்ன அசட்டுத்தனம்… ஆட்கள் வருமிடத்தில்…” என்றான் அவன் சினத்துடன்.

“அப்படியானால் தனிமையில் போகலாமா… எத்தனை நாடகளாகிவிட்டன நானும் நீயும் தனித்திருந்து மகிழ்ச்சியாக இருந்து…” என்றாள் அவள் தாபத்துடன்.

“அதற்காக இப்படியா? பப்ளிக் ப்ளேசில்…” என்று சினக்க, இங்கே சர்வமகி சுக்குநூறாக உடையத் தொடங்கினாள்.

அநேகாத்மனின் கோபத்தை லட்சியம் செய்யாத ரோசலின்,

“நாட் பேட் நேகன்… நீ சொன்னது போல செய்துவிட்டாயே…” என்று விஷயத்திற்குத் தாவினாள்.

“என்ன அது…?”

“அதுதான்… நாளைக்கே மண்டையைப் போடுபவளை மணமுடித்து, உன் தந்தையின் சொத்துக்கள் அத்தனையையும் உன்னுடையதாக்குவது என்பதை…” என்றதும் அவளை உற்றுப் பார்த்தான் அநேகாத்மன்.

“சர்வமகி உயிருக்குப் போராடுகிறாள் என்று உனக்கு யார் சொன்னது…” என்றான் அநேகாத்மன் பெரும் கோபத்துடன்.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த சர்வமகிக்கு எங்கோ இதயத்தில் ஒரு நரம்பு அறுந்ததுபோல வேதனையில் துடித்துப் போனாள்.

அவன் மறுக்கவில்லை. தவிர ரோசலின் சொல்வது உண்மை என்பதைக் காட்டுவது போல, டப் என்று விஷயத்திற்குத் தாவியும் விட்டான். அப்படியானால் அவன் அவளை மணந்தது அவள் மீது கொண்ட காதலால் அல்ல. அவள் மீது பரிதாபப் பட்டோ, இல்லை சகோதரர்களுக்காகப் பார்த்தோ அவன் மணக்கவில்லை. எல்லாம் அவனுடைய தந்தையின் உயிலுக்காகத்தான் அவளை மணந்திருக்கிறான்.

அதைப் புரிந்துகொள்ளாமல், அவன் அவளை விரும்புகிறான் என்று தவறாக நினைத்து… சே… அப்போது புரியாததெல்லாம் இப்போது புரிந்தது. அவளை அவளுடைய உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்ததும் உடனேயே அவன் மணக்கக் கேட்டதின் அர்த்தம் புரிந்தது.

ஏன் சற்றைக்கு முன்பு காரில் வரும்போது கூட அவன் விரும்பியவை எல்லாம் கிடைத்ததற்குக் காரணம் அவள் தான் என்பது போலக் கூறி நன்றி வேறு கூறினான் அல்லவா… எத்தனை பெரிய மக்காக அவள் இருந்திருக்கிறாள்.’ என்றெண்ணியவளுக்கு அழுகை கட்டுக்கடங்காமல் வந்தது.

‘ஆனால்… அவனுடைய பரிதவிப்பு, கரிசனை அனைத்தும் பொய்யா… இல்லையே… அவனுடைய விழிகளில் உன்மையான தவிப்பைக் கண்டாளே, கரிசனை இருந்ததே… அதெல்லாம் எப்படிப் பொய்யாக இருக்கமுடியும்… அத்தனையும் நடிப்பா…’

என்று எண்ணியவளுக்கு இப்போதே இந்த நிமிடமே இறந்துவிடவேண்டும் போல உள்ளம் கனத்தது.

அதே நேரம் உள்ளே பேச்சுக்குரல் தொடர்ந்து ஒலித்தது.

“யாரும் சொல்லவில்லை நேகன்… எனக்குத் தெரியாதா என்ன? அவள் இன்னும் கொஞ்ச நாட்களில் சாகப் போகிறாள் என்பது தெரியாமல் இருந்திருந்தால் நீ அவளைத் திருமணம் முடித்திருப்பாயா என்ன?” என்று ரோசலின் கூற, அவன் மௌனம் சாதித்தான்.

சர்வமகிக்குப் புரிந்தது. உண்மைதானே. அவள் ஆரோக்கியமாக இருந்திருந்தால், இப்போது அவன் பிரதீபனை சிறையில் அல்லவா போட்டிருப்பான். அவளுடைய பிரச்சனை தெரிந்த பிறகுதானே, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவளை மணக்கப்போவதாகக் கூறினான்.

அவளால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கவே முடியவில்லை. மெதுவாக மறைவிடத்தை விட்டு வெளியே வந்தாள்.

சர்வமகியைக் கண்டதும் ஆநேகாத்மனின் முகத்தில் சிறு அதிர்ச்சி தோன்றி விலகியது.

“மகிம்மா…” என்றான் அவன்.

“நீங்கள்… நீங்கள் முதலிலேயே இதைக் கூறியிருந்தாலும் நான் உங்களை மணந்திருப்பேன்… என்னால் உங்களுக்கு ஏதாவது பயன் கிடைத்திருக்கும் என்று நிம்மதியடைந்திருப்பேன்… இப்படி பொய் சொல்லி என்னை நீங்கள் மணந்திருக்கவேண்டிய அவசியமே இல்லை அநேகாத்மன்… தவிர… உங்கள் காதலி…” என்று அவள் முடிக்கவில்லை,

“அவள் என்னுடைய காதலி அல்ல…” என்றான் அநேகாத்மன் இறுகிய குரலில்.

அவன் அப்படிக் கூறியதும், அவளுடைய உதட்டில் ஒரு விரக்திப் புன்னகை நெளிந்தது. அவளுடைய விழிகள், அவனுடைய இடையைச் சுற்றியிருந்த அந்த வெண் கரங்களின் மீது  சென்று மீண்டது.

தீ சுட்டாற் போல வேகமாக ரோசலினின் கரத்திலிருந்து விலகியவன்,

“கண்ணம்மா நான்… உண்மையைத்தான் சொல்கிறேன்…” என்று அவன் முடிப்பதற்கு முன்னால்,

“வேண்டாம் அநேகாத்மன்… எனக்கு எதுவுமே தெரியவேண்டாம். தெரிய வேண்டிய அளவு தெரிந்துகொண்டேன். இனிப் புதிதாகத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது… நான் போகிறேன்… நீங்கள்… நீங்கள்… சந்தோஷமாக இருந்துவிட்டு வாருங்கள்…” என்றவள் பெரும் வலியுடன் அந்த ரோசலினையும், அநேகாத்மனையும் பார்த்துவிட்டு அவள் திரும்ப,

“நில் சர்வமகி… நானும் வருகிறேன்…” என்று கிளம்பினான்.

“வேண்டாம்… என்னால் உங்கள் மகிழ்ச்சி தடைப்பட வேண்டாம்…” என்ற சர்வமகி விறுவிறு என்று நடக்கத் தொடங்கினாள்.

அதே நேரம் அவனும் அவளுக்குப் பின்னால் போகத் தொடங்க ரோசலின் பற்றி இழுத்தாள்.

“அவளே போகிறேன் என்கிறாள், ஏன் அவளைத் தடை செய்கிறீர்கள்… போகட்டும் விடுங்கள்… நாம் என்னுடைய வீட்டிற்குப் போகலாமா…” என்றவள் அவனை இன்னும் நெருங்கி நின்று கொண்டாள்.

“ஏய்…” என்றவாறு பெரும் ஆக்ரோஷத்துடன், அவளை நோக்கித் தன் கரத்தை ஓங்கினான் அநேகாத்மன். அவனுடைய அந்த ஒரு பார்வையில் அனைத்துப் போதையும் இறங்கியவளாக, அச்சத்துடன் இரண்டடி பின் நோக்கி வைக்க அவைள வெறித்துப் பார்த்தான் அநேகாத்மன்.

“இனி ஒரு முறை… ஒரு தரம் தன்னும் என் மீது நீ கை வைத்தாய் என்றாலோ… இல்லை, என் மனைவியின் நிழலை நீ நெருங்குகிறாய் என்பதை நான் அறிந்தாலோ, அதன் பின் உன் வாழ்வில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு நான் பொறுப்பல்ல… இனி நீ என் கண் முன்னே படக் கூடாது. மீறிப் பட்டாய்… உனக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும் என்று நினைக்கிறேன்…” என்றவன் இனியும் என்ன பேச்சு என்பதுபோல, சர்வமகியை நோக்கி ஓட,

ரோசலினோ, ஏளனச் சிரிப்புடன், அடுத்த கிளாசை நோக்கித் தள்ளாட்டத்துடன் நடக்கத் தொடங்கினாள்.

நிலவு – 48

ஏற்கெனவே சர்வமகி கொஞ்சத் தூரம் நடக்கத்தொடங்கியிருந்தாள். அந்த குளிரிலும், ஜாக்கட்டைப் போடாது, கோபம் கண்களை மறைக்க நடந்துகொண்டிருந்தவளைக் கண்டதும், இவனுக்கு வலித்தது.

காரை சீறிப்பாய விட்டவன், அவள் முன்னால் காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான். அது பெரும் சத்தத்துடன் நிற்க, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் சர்வமகி. வேகமாகக் கார்க்கதவைத் திறந்து வெளியேறியவன், வெளியேறிய வேகத்திலேயே தன் கோட்டைக் கழற்றியவாறு சர்வமகியின் அருகே வந்தான். தன் கரத்திலிருந்த கோட்டை அவசரமாக அவளுக்குப் போர்த்திவிட்டவன், கார்க் கதவைத் திறந்து

“ஏறு மகி…” என்றான் சற்று அழுத்தமாக.

“இல்லை… வேண்டாம்… நானே போய்க்கொள்வேன்…” என்றவள் அந்தக் குளிரையும் பொருட்படுத்தாமல் விடு விடு என்று நடக்கத் தொடங்க,

“ஐ செட் கெட் இன் த கார்…” என்றான் அழுத்தமாக.

“முடியாது அநேகாத்மன்… நான் உங்கள் காரில் ஏற மாட்டேன்… ப்ளீஸ்… லீவ் மீ எலோன்…” என்றவளின் குரல் கம்மியிருக்க, அதைப் பார்க்கப் பிடிக்காதவன்,

“சர்வமகி… இட்ஸ் இனஃப்… கெட் இன் த கார்… ரைட் நவ்” என்றான் தன் பற்களுக்கிடையில் வார்த்தைகளைத் துப்பி.

அந்தக் குரலில் ஒரு கணம் ஆடிப்போனாள் சர்வமகி. தவறு செய்தவன் அவன். ஆனால், குற்றம் செய்த உணர்வு அவளுக்கு. அவள் வெறுப்புடன்  அவனைப் பார்க்க,

“கெட் இன் சர்வமகி. எதுவாக இருந்தாலும், வீட்டிற்குப் போய் பேசலாம்…” என்றான் அவன் கடுமையாக.

அவன் விடப்போவதில்லை என்பது புரிந்தவளாக, காரின் முன்னிருக்கையில் ஏறி அமர. அவளுடைய உள்ளங்கையைப் பற்றிப் பார்த்தவன், அது சில்லிட்டிருந்தது. என்ன மகிமா… இப்படிக் குளிரில்…’’ என்றவன் அந்தக் கரத்தைத் தேய்த்து விடப் போக, அவள் வேகமாகத் தன் கரத்தை இழுத்துக்கொண்டாள்.

என் மீது இருக்கும் கோபத்திற்கு இப்படித்தான் ஜாக்ட்கடை மறந்துவிட்டு வருவார்களா?” என்ற சாடியவன், வேகமாக ஹீட்டரை உயிர்ப்பித்து, அதை உச்சத்தில் விட்டான்.

அடுத்து கார் வேகமாக வீட்டை நோக்கிப் பாய்ந்தது. சர்வமகி வீட்டிற்குச் செல்லும்வரை அநேகாத்மனை ஏறிட்டும் பார்க்கவில்லை.

அது வரை இருவரும் எந்தப் பேச்சுவார்த்தையும் வைக்கவில்லை.

வீடு வந்ததும் சர்வமகி விறுவிறு என்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தாள். நல்ல வேளை அனைவரும் உறங்கச் சென்றிருந்தனர். அதனால் இருவரையும் யாரும் பார்க்கும் தர்மசங்கட நிலை வரவில்லை.

அவசரஅவசரமாகத் தன் கழுத்தை இறுக்கிக்கொண்டிருந்த ஆரத்தையும், மற்றைய நகைகளையும் கழற்றிக் கண்ணாடி மேசையில் வைத்தவளுக்கு மனம் முழுவதும் வலித்தது. இவற்றை அணியும் தகுதி அவளுக்கில்லையே. அவள் வெறும் கறிவேப்பிலை மட்டுமே. பாவித்து முடிந்ததும், தூக்கியெறியப்பட்டு விடுவாள். அவளுக்கு எதற்கு இவையெல்லாம்.

“மகிம்மா… நான் சொல்வதை…” என்றவாறு வந்த கணவனை அவள் கருத்திலே எடுக்கவில்லை. வேகமாகத் துவாய் ஒன்றை எடுத்தவள், குளியலறைக்குள் நுழைந்து இறுகச் சாத்திக்கொண்டாள்.

அவள் கதவை சாற்றிய வேகத்தில், அது தன் முகத்தில் அறைந்ததுபோல உணர்ந்தான் அநேகாத்மன். அவனுக்குக் கோபத்தில் முஷ்டிகள் இறுகின.

எரிச்சலுடன் தன் கோட்டைக் கழற்றி இருக்கையில் வீசினான். அருகேயிருந்த சோபாவில் அமர்ந்து காலின் மீது காலைப் போட்டவன் , சினத்துடன் டையைக் கழற்றி அதையும் விசிறி அடித்தான்.

கரங்களால் தலைமுடியை அழுந்த வாரியவன், இரு கரங்களையும் சோஃபாவின் பின் இருக்கையில் விரித்துப் போட்டவாறு, தலையைச் சாய்த்து விழியை அழுந்த மூடினான்.

எங்கே பிழை நடந்தது. எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டு இருப்பதாகத்தானே அவன் நினைத்தான். இந்த ரோசலின் எங்கேயிருந்து முளைத்தாள். சே…’ என்று எண்ணியவன் கொஞ்ச நேரம் அப்படியே இருந்தான்.

அதே நேரம் சர்வமகியும் சேலையைக் களைந்து இரவாடையுடன் வெளியே வந்தாள். தலை நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

அவளுடைய முகம் சிவந்துபோய் இருந்தது. அவள் அழுதிருக்கிறாள் என்று புரிந்தது.

“ஓ… மகிம்மா…” என்றவன் வேகமாக எழுந்து அவளை நெருங்கினான். அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டவன்,

“ஏன்டா உன்னை வருத்திக் கொள்கிறாய்…” என்றவாறு அவள் உச்சியில் தன் உதட்டைப் பொருத்தினான்.

அவளும் கொஞ்ச நேரம் அவன் மார்பில் தன் முகத்தைப் பதித்து அழுதாள்.

“ஏன்… என்னிடம் பொய் சொன்னீர்கள்…”

அவன் உதடுகளை விலக்காமலே, மறுப்பாகத் தலையை வேகமாக ஆட்டியவன், “நான் பொய் சொல்லவில்லை மகிம்மா…” என்று கூறியவனை நம்ப மாட்டாமல் அண்ணாந்து பார்த்தாள் சர்வமகி.

“என்னை நம்பச் சொல்கிறீர்களா?” என்று கலங்கியவளின் உதட்டில் தன் விரலை வைத்து அழுத்தித் தடுத்தவன்.

“நீ நம்பவேண்டும்… எனக்கும் அவளுக்கும் இப்போது எந்த சம்பந்தமும் கிடையாது… என்று உன்னைக் கண்டேனோ, அதன் பிறகு அவளை நான் பார்க்கவேயில்லை…” என்றான் அவன் தவிப்புடன்.

“அப்போ… அவளை பார்த்திருக்கிறீர்கள்…” என்றாள் அவள் அவன் விழிகளை உற்றுப் பார்த்தவாறு.

அவன் பதில் கூறாது அமைதி காக்க, அந்த அமைதியிலேயே அவன் பதிலை உணர்ந்தவள், உள்ளுக்குள் உடைந்து போனாள்.

அவன் இறுகிய பிடியிலிருந்து தன்னை விலக்க முயன்றவள், முடியாமல்,

“வி… விடுங்கள்… நான்… போகவேண்டும்…” என்றாள் கலங்கிய குரலில்.

“நோ… நான் விடமாட்டேன்… நான் விடமாட்டேன்… நீ என்னை விட்டு எங்கும் போக முடியாது…” என்றான் அவன் தவிப்புடன்.

“அது நம் கையில் இல்லை அநேகாத்மன்…” என்று விரக்தியில் கூற, வேகமாக அவளை விடுவித்தவன்,

“அப்படியென்றால்…” என்றான் தவிப்புடன்.

“இன்னும் கொஞ்சக்காலத்தில் ஒரேயடியாகப் போகப்….” அதற்கு மேல், அவள் பேச முடியாதவாறு அவனுடைய அழுத்தமான உதடுகள், அவள் உதடுகளை அழுந்தப் பூட்டிக்கொண்டன.

வேகமாக அவனிடமிருந்து விடுபட அவள் போராடினாள். ஆனால், சுலபமாக அவளுடைய போராட்டத்தை அடக்கினான் அவன்.

கொஞ்ச நேரத்தில் தன் உதடுகளைப் பிரித்து எடுத்தவன், அவள் முகத்தைத் தன் கரங்களில் பற்றித் தூக்கினான். கண்கள் முழுவதும் கண்ணீரால் குளம் கட்டியிருக்க, அதை ஒற்றைக் கரத்தால், துடைத்து எடுத்தவன்,

“என் அனுமதியின்றி நீ எங்கும் போகமுடியாது சர்வமகி. உன் மூச்சுக்காற்றை சுவாசிக்கப் பிறந்தவன் நான்… என்னை விட்டு உன்னால் எங்கும் போக முடியாது… போகவும் விடமாட்டேன்” என்றான் பெரும் வலியுடன்.

“ப்ளீஸ் ஆத்மன்… நாடகம் முடிந்து விட்டது… கொட்டகையெல்லாம் பிரித்தாகிவிட்டது… இன்னும் எதற்காக நீங்கள்…” என்றவள் தன் உதட்டைக் கடிக்க, இவன் அடிபட்ட பாவனையுடன் அவளைப் பார்த்தான்.

“நான் நடிப்பதுபோலவா உனக்கு இருக்கிறது… நீ மருத்துவமனையில் துடித்தபோது, நான் தவித்த தவிப்பெல்லாம் உனக்கு நடிப்புப் போலவா இருக்கிறது?” என்றபோது, அவன் குரலில் மிதமிஞ்சிய ஏமாற்றம்தான் வெளிப்பட்டது.

அவனுடைய அந்த ஏமாற்றத்தையும் தாங்கும் சக்தி சர்வமகிக்கு இருக்கவில்லை. அவன் பிடியிலிருந்து விலக எத்தனிக்க, அவனுடைய பிடி மேலும் இறுகியது.

அந்த இறுகிய பிடியில், அவளுடைய கரங்கள் கூட வலித்தன.

“விடுங்கள் ஆத்மன்…” என்று இவள் அவனிடமிருந்து திமிற,

விலக முயன்றவளை இலகில் செயல் இழக்க வைத்தான் அநேகாத்மன்.

“சாரி மகிம்மா… என் அன்பை உனக்கு எப்படிப் புரியவைப்பது என்று எனக்குத் தெரியவில்லை…” என்றவன் மீண்டும் அவள் இதழ்கள் நோக்கிக் குனிந்தான்.

அவனுக்கு அவள் தேவையாக இருந்தாள். இத்தனை நாட்களாக, மனதிலே வேரூன்றியிருந்த அவள் மீதான காதலும், அதனூடே கலந்திருந்த காமமும் அவனுடைய தன்னிலையை இழக்கச் செய்ய, எங்கே அவள் தன்னை விட்டு விலகிவிடுவாளோ என்கிற பேரச்சமும் அவன் புத்தியைப் பேதலிக்கச் செய்ய, அது வரை காலமும், அவள் நலத்துடன் தன்னிடம் வந்துவிடவேண்டும் என்கிற வேண்டுதலுடன் தள்ளியிருந்தவன், அந்த வேண்டுதலை மறந்து, புறந்தள்ளி, அவளைத் தன்னோடு புதைத்து, முழுதாக அவளை உடலாலும்  தன்னவளாக்க முயலத்தொடங்கினான்.

முதலில் அவன் வேகத்திற்கு அஞ்சி, அவனிடமிருந்த விடுபடப் போராடியவள், என்ன நினைத்தாளோ, ஒரு கட்டத்தில், அந்தப் போராட்டத்தை விடுத்து, அவனுடன் இழையத் தொடங்கினாள்.

இருவருக்குமே உள்ளம் முழுவதும் வியாபித்திருந்த வேதனைக்கு ஒரு வடிகால் தேவைப் பட்டது. அது அவளுக்கு அவனாகிப் போனான். அவனுக்கு அவளாகிப் போனாள்.

தோய்ந்து சரிந்தவளை, இதழ் பிரியாமலே, கரத்தில் தாங்கியவன், அவளைப் படுக்கையில் கிடத்தினான். அவளுடலோடு நெருங்கும் வரை, அவளை அவன் பேசவே விடவில்லை.

வேதனை ஒரு பக்கமிருந்தாலும், அவள் கணவனால் மட்டுமே தட்டியெழுப்பப்படும் பெண்மை விழித்துக்கொள்ள, மெது மெதுவாக அவன் அணைப்பிற்குள் அடங்கிப்போனாள்.

அவனோ, அவன் விரல்களின் தொடுகையால், நாணம்கொண்டு சிவந்துபோனவளின் அழகை அணு அணுவாகப் பருகித் தன் நீண்டநாள் ஏக்கத்தைத் தீர்க்கத்தொடங்கினான். அந்த நிலையிலும், தன் மன்னவனின் தொடுகையில் கூசிச் சிலிர்த்தவளை அவன் மெல்ல மெல்ல ஆட்கொள்ள, அன்று அவன் கண்ட கனவை நிறைவேற்றுபவனாக, தன் விரல்கொண்டு தலை முதல் பாதம் வரை, அவளை வீணை மீட்டத் தொடங்கினான். அந்த மீட்டலில் விளைந்த இசையில் தன்னைத் தொலைத்தான் அவன். அந்த இசையில் உலகம் மறந்தவன், மீண்டும் மீண்டும் இசை மீட்ட, அங்கே காமத்தை மீறிய காதலும், காதலை மீறிய காமமும் புதிய அத்தியாயங்களை எழுதத் தொடங்கின. அந்தக் காவியம் எழுதி முடிய, பலமணி நேரங்கள் கடந்துவிட்டிருந்தன.

காவியம் படைத்த களைப்பில் அநேகாத்மன் உறங்கிவிட, சர்வமகி நீண்ட நேரத்திற்குப் பின்பு சுயநினைவுக்கு வந்தாள்.

பழக்கமில்லாத, பாரம் இடையைச் சுற்றியிருக்கத் தன் கரத்தை அவ் இடத்தில் பதித்தாள். அவள் உயிரானவனின் கரம். அதன் பின்புதான் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்தது. முதன் முதலாக அவளுடைய கணவனின் கையணைப்பில் இருந்திருக்கிறாள். அதுவும் எந்த ஒரு நிலையில். நினைத்ததுமே மீண்டும் அழுகை பொத்துக்கொண்டு வந்தது. மெதுவாக அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துப் படுக்கையை விட்டு எழுந்தாள்.

இனியும் அந்த வீட்டில் இருக்கமுடியும் போலத் தோன்றவில்லை. குளியலறைக்குள் நுழைந்தவள், கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தாள்.

அந்த நிலையிலும், தனக்கு வலித்துவிடாமல் பார்த்துப் பார்த்து நடந்துகொண்ட அநேகாத்மனின் மீதிருந்த காதல் கூடியதேயன்றி சிறிதும் அவளுக்குக் குறையவில்லை. பெருமூச்சுடன் ஷவரில் கொஞ்ச நேரம் நின்றாள். மீண்டும் மீண்டும் தன்னவனின் கூடலே நினைவிற்கு வந்தது. விழிகளை மூடி அதை அனுபவித்தவள், நேரம் விரைந்து செல்வதை உணர்ந்து ஷவரை நிறுத்தி, ஏனோ தானோ என்று தன்னைத் துடைத்து, துவைத்த ஆடையணிந்து வெளியே வந்தாள்.

இன்னும் அநேகாதமன் நிறைவான புன்னகையைச் சிந்தியவாறு உறங்கிக்கொண்டிருந்தான். அவன் அழகில் தன்னிலை மறந்தாள் சர்வமகி.

அவனை நெருங்கியவள், அவன் தலை முடியை வருடுவதற்காகத் தன் கரத்தைக் கொண்டு சென்றவள், அப்படியே நின்றாள்.

வேண்டாம், அவனைத் தொட்ட கணம் அவன் விழித்துக்கொள்வான். தன் கரத்தை விலக்கியவளுக்கு ஏனோ மெல்லிய புன்னகை வந்து அமர்ந்து கொண்டது.

இந்த ஒரு நாள் போதும். அவள் இருக்கப் போகின்ற கொஞ்ச நாட்களுக்கும், அதை எண்ணியே கழித்துவிடுவாள். தன் விரல்களை உதட்டில் பொருத்தி முத்தமிட்டவள், அதனை அவன் கன்னத்தில் பட்டும் படாமலும் வைத்துவிட்டு எழுந்தாள்.

ஒரு காகிதத்தையும், பேனாவையும் எடுத்து, எதையோ எழுதத் தொடங்கினாள். எழுதும் போது, ஏனோ மனமும் விழிகளும் கசங்கிப்போனது. சிரமப்பட்டுத் தன் அழுகையை அடக்கியவள், அதை அவன் பார்வையில் படுவதுபோல வைத்தாள். மீண்டும் ஒரு முறை இதுதான் கடைசி என்பது போல ஏக்கத்துடன் அநேகாத்மனைப் பார்த்தவள்,

“போய் வருகிறேன் ஆத்மன்… டேக் கெயர் ஒஃப் யுவர் செல்ஃப்…” என்று முணுமுணுத்து விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

நிலவு 49

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அநேகாத்மன், நெஞ்சில் ஏதோ ஒரு இனம்புரியாத படபடப்புத் தோன்ற, மெதுவாகத் தன் விழிகளைத் திறந்தான். அவனுக்கு முன்தினம் நடந்தது நினைவிற்கு வந்தது. அவன் உதட்டில் இளம் மந்தகாசப் புன்னகையும் மலர்ந்தது. இனி எல்லாமே சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை உதிக்க, விழிகளை மீண்டும் மூடியவாறே தனக்கு மறுபக்கம் படுக்கையைத் தடவிப் பார்த்தான்.

மறுபக்கம் வெறுமையாக இருந்தது. அவள் எழுந்து சென்று அதிக நேரமாகிவிட்டது என்பதை எடுத்துக் காட்டுவது போலப் படுக்கை குளிர்ந்தது. அருகேயிருந்த நைட் ஸ்டான்டில் ஒளிர்ந்துகொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். ஐந்து முப்பது என்றது கடிகாரம். ‘சீக்கிரமாக எழுந்துவிட்டாளே… எங்கே போயிருப்பாள் குளிக்கச் சென்றுவிட்டாளோ. இருவரும் உறங்கும் போது, மூன்று மணியாகியிருந்தது. அதன் பின் அவள் தூங்கினாளா இல்லையா…’ என்று எண்ணியவன் மெதுவாகப் புரண்டு அவள் பக்கமாக வந்து படுத்தான். அவளுடைய வாசனை இன்னும் தலையணியில் இருக்க, ஆழ மூச்செடுத்து அதை அனுபவித்தான்.

“ம்… கொல்லுகிறாயே மகிம்மா… இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திருக்கலாமே…” என்று காற்றோடு பேசியவனுக்கு, மீண்டும் அவள் அருகாமை தேவைப்பட, மெதுவாகத் தன் விழிகளை விரித்தான்.

அவனுடைய விழிகளில் மேசையில் இரவு வெளிச்சத்திலும், வெண்மையான தாள் ஒன்று படபடக்க, ஏனோ நெஞ்சைப் பிசையை ஒரு சுற்றலில் மறு பக்கம் வந்தவன், அந்தக் காகிதத்தை எடுத்துப் பார்த்தான். “லைட்…” என்ற அவன் கட்டளைக்கு உடனே அந்த அறை வெளிச்சமாக, அந்தக் கடிதத்தை மேலோட்டமாகப் பார்த்தான்.

“அன்புள்ள ஆத்மனுக்கு…” என்று தொடங்கியிருந்தது கடிதம். அது சர்வமகியின் எழுத்து.

ஏதோ நெஞ்சை அடைக்க விறுக் என்று படுக்கையை விட்டு எழுந்தமர்ந்தான். கடிதத்தில் விழிகளை ஓடவிட்டான்.

அன்புள்ள ஆத்மனுக்கு. இந்தக் கடிதத்தை எப்படித் தொடங்குவது என்றும் புரியவில்லை. எப்படி முடிப்பது என்றும் புரியவில்லை. என்னால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு இல்லை என்பதை நேற்றே புரிந்துகொண்டேன். அந்த ரோசலின் மீது நீங்கள் வைத்திருந்த காதலையும் அறிந்துகொண்டேன். நீங்கள் என்னை உங்கள் தந்தையின் சொத்துக்காகத்தான் மணந்துகொண்டீர்கள் என்பதைத் தெரிந்தபோது கொஞ்சம் தடுமாறிவிட்டேன். ஆனால் நினைத்துப் பார்க்கும்போது, நீங்கள் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்பது இப்போது புரிகிறது. பார்க்கப்போனால், என்னால் உங்களுக்கு இதையாவது செய்யமுடிந்ததே என்பதில் மகிழ்ச்சிதான். எப்படியோ சாகப் போபவள்தானே. என்ன இழுத்தடிக்காமல் எவ்வளவு சீக்கிரம் போகமுடியுமோ, அத்தனை சீக்கிரம் போகவேண்டும்.

நான் ஒரு மடச்சி… தப்பிப் பிழைக்கமாட்டேன் என்பது நிச்சயமாகத் தெரிந்தும் இப்போது கொஞ்ச நாட்களாகத்தான் நீங்கள் என்னைக் காதலிப்பதாகத் தவறாக நினைத்துக் கடவுளிடம் உயிரோடு இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்… ஆனால் எத்தனை பெரிய தவறான வேண்டுதல். உங்களுக்கு நான் விரைவாகப் போய்ச் சேரவேண்டுமல்லவா? அப்போதுதானே நீங்கள் சுதந்திரமாக நடமாட முடியும்.

அதற்காக நான் தற்கொலையா செய்ய முடியும்…? அதனால் நான் வெளியேறுகிறேன். இனி உங்கள் விருப்பம் போல நிம்மதியாக இருக்கலாம். சுதந்திரமாக இருக்கலாம். பழைய அநேகாத்மன் போல, விரும்பிய பெண்களுடன்.

எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அதுதான் என் வேண்டுதல், ஆசை, எல்லாமே… உங்கள் அகராதியிலிருந்து சர்வமகி என்பவளை அழித்துவிடுங்கள். நான் உடனேயே இறந்தால், உங்களுக்கு விடுதலை… இல்லை என்றாலும் நான் திரும்பி வரமாட்டேன்….

தயவு செய்து என்னைத் தேடவேண்டாம். ஆனால், விரைவாக மரணிக்கவேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திப்பேன். உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் எப்போதும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

சர்வமகி.

சர்வமகியின் கடிதத்தைப் படித்தவன் வெறி கொண்டவன் போலத் தன் தலையைப் பற்றினான்.

“நோ… நோ… இது நிஜமல்ல… என் மகி எங்கும் போயிருக்கமாட்டாள்… தட் இஸ் நாட் பாசிபிள்…” என்று தன்னை மறந்து முணுமுணுத்தவன் கையில் கிடைத்த ஆடைகளை அணிந்துகொண்டு மேசையிலிருந்த தன் கைப்பேசியை எடுத்து அதில் வேகமாக ஏதோ ஒரு இலக்கத்தைத் தட்டியவாறு, ஜெட் வேகத்தில் வெளியே வந்தான்.

அநேகாத்மனின் இத்தகைய தோற்றத்தை இது வரை யாருமே பார்த்திருக்கமாட்டார்கள். தலை கலைந்து, விழிகள் சிவந்து, சவரம் செய்யாத முகத்துடன், பைத்தியக்காரனைப் போல ஆவேசமாக வெளியே வந்தவனை யாரும் கண்டால், இவன்தான் அநேகாத்மன் என்று சத்தியம் பண்ணினாலும் நம்பமாட்டார்கள்.

இதயம் முழுவதும் வலியுடன், தன் மனைவியைத் தேடி ஆவேசமாகக் கிளம்பியவன், வீட்டு வாசலை வந்தடைந்த போது, அதிர்ந்து போய் நின்றான்.

அங்கே கண்ட காட்சியால் விழிகள் பளபளக்க அப்படியே சோர்வுடன் தன் இரு முழங்கால்களிலும், இரு கரங்களையும் பதித்துக் குனிந்தவாறு சற்று நேரம் நின்றான் அநேகாத்மன்.

அவன் முகத்தில் முதலில் பெரும் வேதனை அப்பிக்கிடக்க, பின் மெதுவாக வடிந்து , அந்த இடத்தில் மெல்லிய நிம்மதியுடனான புன்னகை தவழ்ந்தது. அது வரை குனிந்து தன் முழங்கால்களில் கரங்கள் பதித்திருந்த அநேகாத்மன், நிம்மதி மூச்சுடன் தன் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.

சர்வமகிதான். கன்னத்தில் கையைப் பதித்து எங்கோ வெறித்துக்கொண்டு படியில் அமர்ந்திருந்தாள்.

அவள் நின்ற கோலம், இவன் இதயத்தைப் பிசைய, எழுந்தவன், விரைந்து சென்று அவளை நெருங்கி அப்படியே அவளைத் தூக்கித் தன் கரங்களில் ஏந்திக்கொண்டான்.

முதலில் திகைத்தவள், பின் அவன் தூக்கியதும், எந்த மறுப்பும் கூறாமல், அவன் மார்பில் தன் முகத்தைப் பதித்து, அவன் அணைப்பில் அடங்கிப்போய் நின்றாள் அவள்.

அவளை ஏந்தியவாறு தன் அறைக்குள் நுழைந்தவன் புறங்காலால் கதவைச் சாத்திவிட்டு, சர்வமகியை இறுக அணைத்தவாறே படுக்கையில் அவளைத் தன் மடியில் தாங்கியவாறு அமர்ந்தான்.

அவனுடைய கரங்கள் அவள் உடல் முழுவதும், பயணம் செய்து அவள் இன்னும் அவன் கையணைப்பில் இருக்கிறாள் என்பதை உறுதி செய்ய முயன்றுகொண்டிருந்தன.

“மகிம்மா… மகிம்மா… என் மகிம்மா…” என்று மீண்டும், மீண்டும் அழைத்தவன்,

“என்ன காரியம் செய்ய நினைத்தாய்? ஓ காட்…” என்றவன் பதட்டத்துடன் மீண்டும் அவளை தன்னோடு இறுக அணைத்தான். அவனுடைய முகம் அவளுடைய உச்சந் தலையில் அழுத்தமாகப் பதிந்தது.

“எனக்குச் சத்தியம் செய்து கொடு சர்வமகி… எப்போதும் நீ என்னை விட்டுப் போகமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடு…” என்றவாறு தன் கரத்தை அவள் முன்னால் நீட்டினான். அவனுடைய கரம் நடுங்கியது.

அவன் மார்பில் சாய்ந்திருந்தவள் மெதுவாக விழிகளைத் திறந்தாள்.

“போகவேண்டும் என்றுதான் நினைத்தேன்… ஆனால்… என் சகோதரர்களின் நிலையை நினைத்ததும் போகமுடியவில்லை. அவர்களுக்கு ஒரு வழி செய்யாமல் என்னால் எப்படி…” என்றவளின் விழிகளில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

உடனேயே அவனுடைய உடல் விறைத்தது. அவள் எனக்காக நிற்கவில்லையா? அவளுடைய சகோதரர்களுக்காகவா நின்றாள். அந்த அளவுக்கா என் மீது அவளுக்கு வெறுப்பு வந்துவிட்டது?” என்று எண்ணியவன், அவளுடைய முகத்தைப் பற்றித் தூக்க முயன்றான். அவளோ நிமிரும் எண்ணம் இல்லாமல் பிடிவாதமாகத் தன் தலையைக் குனிந்துகொண்டே இருக்க.

“கண்ணம்மா…” என்றான் தவிப்புடன்.

“அவர்களை… ஏதாவது ஹஸ்டலில் சேர்த்துவிடுவீர்களா? அவர்களால் உங்களுக்கு எந்த உபத்திரவமும் இருக்கக் கூடாது அல்லவா…” என்றாள் களைப்புடன்.

“மகி… டோன்ட் சே எனிதிங்… நீ மட்டுமல்ல, உன் சகோதரர்களும் எங்கும் போக முடியாது… போகவும் கூடாது. உன்னைப் போக நான் விடவும் மாட்டேன்… ஓ காட்… கொஞ்ச நேரம் நான் எப்படியெல்லாம் பதறிப்போனேன்… ஒரு வேளை உனக்கு ஏதாவது…” என்றவன் முடிக்காமல் விழிகளை அழுந்த மூடித் திறந்தான்.

அவளுடைய முகத்தை வருடியவன், ஏதோ பிசுபிசுக்க கையைத் தூக்கிப் பார்த்தான்.

“வட் த… ஹெல்… இஸ் திஸ்…” என்று கிட்டத்தட்டக் கதறியவன், அவசரமாகப் பிடிவாதமாக அவள் முகத்தைப் பற்றித் தூக்கினான். தூக்கியவன் அதிர்ந்தான்.

“மகிம்மா…” என்றான் பெரும் அதிர்ச்சியுடன். அவள் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அவன் சட்டை முழுவதும் இரத்தக்கறை. வழிந்துகொண்டிருந்த இரத்தத்தைத் தன் கரத்தால் துடைத்தான். துடைக்கத் துடைக்க வழிந்தது இரத்தம். அவனுடைய கரங்களும் உடலும் அச்சத்தில் நடுங்கின.

“மகி… ஓ காட்… ஓ காட்..” என்று பதறியவன்,

“நான்… என்ன செய்வேன்… நான் என்ன செய்யட்டும்…” என்று பதறித் துடித்தவனை அரை மயக்கத்திலேயே கண்டு கொண்டவள்,

“ஆத்மன்… ஐ ஆம் ஓக்கே… ஜெஸ்ட் எ பிளட்… ப்ளீஸ்… கொன்…கொன்ட்ரோல் யுவர் செல்ஃப்…” என்று அவனைச் சமாதானப் படுத்த முயல,

மறு பேச்சுப் பேசாமல் அவளைத் தூக்கியவாறு வேகமாகப் படிகளிலிருந்து இறங்கத் தொடங்கினான்.

“நத்திங்… எனக்கு ஒன்றுமில்லை… ஜஸ்ட் பிளட்…” என்றவள் இயலாமையால் அவன் தோளில் தன் முகத்தைப் பதித்தாள்.

“எப்போதிருந்தது ப்ளீட் பண்ணுகிறது…” என்றான் அவன் கலக்கத்துடன்.

“கொஞ்ச நேரமாக…” என்றவள் சோர்வுடன் விழிகளை மூடினாள். அவளுடைய முகம் இரத்தப் பசையை இழந்து வெளுத்துப்போனது.

“தேவகி…” என்று பலம் கொண்ட மட்டும் கத்தினான் அநேகாத்மன். இப்போது அவன் எதையும் நினைக்கும் நிலையில் இல்லை. அவனுடைய சர்வமகிக்கு ஆபத்து. அதுமட்டும்தான் நினைவில் நின்றது.

அவனுடைய ஒரு குரலில் விழுந்தடித்துக்கொண்டு வெளியே வந்தாள் தேவகி.

“எ… என்ன அத்தான்… அக்கா… வட் ஹப்பன்ட்…” என்று பதறியவாறு வெளியே வந்தாள் தேவகி.

“தேவகி… நான் அக்காவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் போகிறேன்… நீ வீட்டைப் பார்த்துக்கொள்… இல்லை… நீ என்னுடன் வா… அக்காவின் ஆடைகளை எடுத்துக்கொண்டு வா… மாதவியை வீட்டைப் பார்த்துக்கொள்ளச் சொல்லு…” என்றவன் வேகமாக சர்வமகியைக் கிடைத்த காருக்குள் கிடத்தினான்.

தன் கைத் தொலைப்பேசியை எடுத்தவன், “வசந்தா… இட் இஸ் மி…

என்னுடைய மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். நீ என் வீட்டில் வந்து நிற்கவேண்டும்… யெஸ்… தாங்ஸ் பாய்…” என்றவன் தேவகியை சர்வமகியின் அருகே இருக்கச் சொல்லிவிட்டுக் காரை வேகமாகக் கிளப்பினான்.

இதற்கிடையில் சர்வமகியின் உடல் துடிக்கத் தொடங்கியது. தலையை அழுந்தப் பற்றியவள்,

“தேவிம்மா… தலை வலிக்கிறது…” என்று முணுமுணுத்தாள். தேவகியின் விழியில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

“அக்கா… யு ஆர் ஓக்கே… உனக்கு ஒன்றுமில்லை…” என்றவள் கையில் வைத்திருந்த பையிலிருந்து ஏதோ ஒரு மாத்திரையை வெளியே எடுத்து சர்வமகியின் வாயின் அருகே கொண்டு சென்றாள்.

“அக்கா… இந்தா… மருந்தைக் குடி…” என்றாள். சர்வமகி சிரமப்பட்டு வாயைத் திறக்க முயன்றாள்.

அதே நேரம், அவனுடைய காரின் வேகம் நூற்று அறுபதையும் தாண்ட, அவன் வேகத்தை அறிந்து, பொலிஸ் வேறு அவனைத் துரத்தத் தொடங்கியது. அநேகாத்மனுக்கு, அது எதுவும் புலனுக்கு எட்டவில்லை. அவன் இன்னும் தன் வேகத்தைக் கூட்டினான்.

மறு கணம், காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட, கார் பெரும் சத்தத்துடன், கிறீச்சிட்டு நின்றது.

அவனுடைய காரைச் சுற்றிப் பல பொலிஸ் வீரர்கள் துப்பாக்கியுடன் நின்றிருந்தனர்.

“டாமிட்…” என்று சீறியவன், வேகமாகக் கதவைத் திறந்து இறங்கத் தொடங்கினான். உடனே அத்தனை பொலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கியும் அவனை நோக்கி நீண்டிருக்க, வெளியே வந்தவனின் தோற்றத்தைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.

சட்டை முழுவதும் இரத்தம் அப்பியிருக்க, கலைந்த தலையும் கலங்கிய கண்களுடனும் நின்றிருந்தவன், அநேகாத்மன் என்று யாருக்கும் தெரியாது. அவனுக்கு விலங்கு மாட்ட ஒரு அதிகாரி நெருங்க,

“லிசின்… ஐ ஹாவ் டு கோ… மை வைஃப் இஸ் நாட் இன் த குட் கென்டிஷன்… லெட் மி கோ…” என்று அவன் கத்த, சந்தேகம் கொண்ட அதிகாரி, அவன் காருக்குள் எட்டிப் பார்த்தான்.

“எதற்காக நீ கொண்டு செல்கிறாய்… அம்புலன்ஸை அழைத்திருக்கலாமே…” என்றார் அதிகாரி சந்தேகமாக.

“லிசின்… எதைப் பற்றியும் யோசிக்கும் நிலையில் நானில்லை. நான் இப்போது மருத்துவமனைக்குப் போகவேண்டும்… என் மனைவி ஆபத்தான நிலையில் இருக்கிறாள்… இஃப் எனிதிங் ஹப்பன் டு ஹெர்.. ஐ வில் நெவர் ஃபொரிகிவ் யு…” என்று கடித்த பற்களுக்கிடையில் வார்த்தைகளைத் துப்ப,

“யு சாலஞ்சிங் மீ…” என்று அதிகாரி எகிறத் தொடங்க,

“நோ… ஐ ஆம் வோர்னிங் யு… லிசின்… ஐ டோன்ட் ஹாவ் டைம்… லெட் மி கோ…” என்றவனின் குரலில் ஒரு கணம் அசந்துதான் போனார் அந்த அதிகாரி. பின் அங்கே துடித்துக்கொண்டிருந்தவளைக் கண்டதும், ஓரளவு நிலைமை புரிய, உடனே தன் சகாக்களுக்கு ஏதோ கூறிவிட்டு,

“லிசின் மிஸ்டர்… ஐ வில் டேக் யு டு த ஹாஸ்பிடல்… ஜெஸ்ட் ஃபொலோமி…” என்று கூறிவிட்டு சய்ரனைப் போட்டுவிட்டுத் தன் காரை வேகமாக எடுக்க, அநேகாத்மனும் தன் காரை எடுத்து அந்த பொலிசின் காரை மிக வேகமாகப் பின்பற்றத் தொடங்கினான்.

அநேகாத்மன் எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை. அவனுக்கு இப்போது தேவை சர்வமகியை மருத்துவமனையில் சேர்ப்பது.

ஏற்கெனவே அந்த பொலிஸ் அதிகாரி, மருத்துவமனைக்கு அறிவித்து இருந்ததால், வாசலிலேயே அவளை அழைத்துச் செல்ல, மருத்துவர்களும், தாதிகளும் நின்றிருந்தனர்.

சர்வமகி தாமதமின்றி உள்ளே அழைத்துச் செல்லப்பட்டாள். அவள் தலைவலியால் துடிப்பதைப் பார்க்க முடியாமல் ஒரு இருக்கையில் அமர்ந்தான் அநேகாத்மன். இரண்டு கரங்களிலும் தன் தலையைத் தாங்கிக்கொண்டவனின் விழிகளில் இரண்டு கண்ணீர்த் துளிகள் வழிந்து நிலத்தில் விழுந்தன.

அவனருகே அமர்ந்த தேவகி, அவன் தோளில் தன் கரத்தைப் போட்டாள்.

“அத்தான்… அக்காவிற்கு ஒன்றுமாகாது…” என்றாள் தவிப்புடன்.

“தேவகி…” என்றவன் அவள் கரத்தைத் தன் கரத்தில் பற்றிக்கொண்டான்.

“தேவகி… எனக்கு உன் அக்கா வேண்டும். முழுதாக.. அவள் இல்லாத வாழ்வில் எனக்கு எதுவுமே இல்லை… ஓ காட்… அவள் இல்லாத எதிர்காலத்தை என்னால் சிந்தித்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவள் இல்லாத வீடு வெறும் சுடுகாடு தேவகி… ஐ லவ் ஹர்… என் இதயம் முழுவதும் அவள்தான் நிறைந்திருக்கிறாள்…” என்றவன் தேவகியின் கரத்தை அழுந்தப் பற்றினான். அவன் கரங்கள் நடுங்குவதை தேவகி வேதனையுடன் பார்த்தாள். எத்தனை கம்பீரமான மனிதன். அக்காவிற்கு ஒன்றென்றதும் எப்படிப் பதறிப்போகிறான். இதுதானே உண்மையான காதல்.

அதே நேரம், அவன் அருகே அந்த காவல்துறை அதிகாரி வந்தார். அநேகாத்மனின் நிலை அவருக்கு நன்கு புரிந்தாலும், அவருக்கென்றொரு கடமையிருக்கிறதே.

“ஐ ஆம் சாரி… ஐ ஹாவ் டு டூ மை டியூட்டி என்று கூற,” அவர் எதைக் கேட்கிறார் என்பதைப் புரிந்த அநேகாத்மன் தன் பேர்சை வெளியே எடுத்துத் தன் விசிடிங் கார்ட், சாரதிப்பத்திரம் , கார் உரிமைப் பத்திரம், அனைத்தையும் கொடுத்தான்.

அவன் பெயரையும், அடையாளத்தையும் புரிந்துகொண்ட காவலதிகாரி, பெரும் வியப்புக் கொண்டவராக,

“மிஸ்டர், அநேகாத்மன்… இட்ஸ் யு…” என்றார் இன்னும் சந்தேகம் தெளியாதவராக.

அவனோ அமைதியாகப் பார்த்துத் தலையை ஆட்ட,

“ஐ கான்ட் பிலீவ் திஸ்… உங்களை இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்கவேண்டி இருக்கிறதே என்று எண்ணி வருந்துகிறேன்… உங்கள் மனைவிக்கு ஒன்றுமாகாது… அவர்கள் நலமுடன் உங்களிடம் வருவார்…” என்று உறுதி கூறிவிட்டு, அனைத்து டாக்யுமன்டையும் கூடவே அவன் செய்த குற்றத்திற்கான டிக்கெட், அது சார்ந்த டாக்யுமன்ட் அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு விடை பெற, இது எதையும் உணரும் நிலையில் அநேகாத்மன் இருக்கவில்லை.

அவன் சிந்தனை முழுவதும் சர்வமகியிடமே நிலைத்திருந்தது. சிறிது நேரத்தின் பின் வைத்தியர் ஒருவர் வெளியே வந்தார்.

“மிஸ்டர் அநேகாத்மன்…” என்று அழைக்க இவன் விறுக் என்று எழுந்து நின்றான்.

“வ… வட் ஹப்பன்… ஹெள இஸ் ஷி?” என்றான் தன் உயிரைக் கரத்தில் பிடித்தவாறு.

“உடனடியாக அவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்யவேண்டும். கட்டி மூளைக்குப் போகும் இரத்தத்தைத் தடைப்படுத்தத் தொடங்கிவிட்டது. இப்போது, சத்திர சிகிச்சை செய்யவில்லை என்றால் அதற்குப் பிறகு நீங்கள் விரும்பினாலும் எங்களால் எதுவும் செய்யமுடியாது. சொல்லப் போனால், சத்திர சிகிச்சையின் மூலம் கிடைக்கும் இருபது சதவிகிதம் பிழைக்கும் சந்தர்ப்பம் கூட இதில் கிடைக்காமல் போகலாம். யோசித்து முடிவு எடுங்கள்…” என்றார் அவர்.

அநேகாத்மனின் முகம் இரத்தப் பசையை இழந்தது உடல் ஆடியது. காதுகள் மங்கின.

“மிஸ்டர் அநேகாத்மன்… அநேகாத்மன்…” என்று இரு முறை அழைத்த வைத்தியர், அவன் நிலை உணர்ந்து, அவனை அருகேயிருந்த இருக்கையில் இருத்தினார். உடனே அவருக்கு அருகேயிருந்த தாதியொருவர், நீர் கொண்டு வந்து கொடுக்க, அதனை அநேகாத்மனிடம் நீட்ட, ஓரளவு சுயநினைவு பெற்ற அநேகாத்மன், வைத்தியரை வெறித்துப் பார்த்தான்.

“ஐ வோன்ட் டு சீ ஹர்…” என்றான் நடுங்கும் குரலில்

“சூர்…” என்ற வைத்தியர், அநேகாத்மனை தன்னோடு அழைத்துச் சென்றார்.

சர்வமகிக்கு ஆடை மாற்றப்பட்டிருந்தது. ஏதேதோ டியூப் உள்ளேயும் வெளியேயும் போய்க்கொண்டிருந்தது. ட்டிரிப் ஏற்றப்பட்டிருந்தது.

அவனுக்குக் கண்களைக் கரித்தது. இது பார்க்கவா அவன் இன்னும் உயிரோடு இருக்கிறான் என்று எண்ணத் தோன்றியது.

அவளை நெருங்கியவன் அவளுடைய கரத்தைப் பற்றினான். சர்வமகியின் விழிகள் மெதுவாக அசைந்தது.

“மகிம்மா…” என்றான் மென்மையாக.

மெதுவாக விழிகளைத் திறந்தாள் சர்வமகி. புன்னகைக்க முயன்று தோற்றவளாகச் சோர்வுடன் விழிகளை மூடினாள். பின்பு மெதுவாகத் திறந்தவள், அவனையே பார்த்தாள்.

“வந்துவிட்டீர்களா? இ.. இத்தனை நே… நேரம் எங்கே தான் இ… இருந்தீர்கள்?” என்றாள் அவனைக் காணாத தவிப்புடன்.

“கண்ணம்மா… நான் எங்கும் போகலைடா… இங்கே… பக்கத்திலேதான் நின்றேன்… இப்போ… இப்போ… எப்படிம்மா இருக்கு?” என்று குரல் நடுங்கக் கேட்டான் அநேகாத்மன்.

“அதிகமா… இங்கே… வலிக்கிறது…” என்று தலையைத் தொட்டுக் கூறியவள், பின்பு எதையோ நினைத்தவளாக,

“நீ… நீங்கள்… யார்…” என்றாள் திடீர் என்று.

“மகிமா…” என்றான் இவன் அதிர்வுடன்…

“நீங்கள்… வந்து அதிக நேரமாகிவிட்டதா?” என்றாள் பின்பு குழப்பத்துடன். தொடர்ந்து

“நா…ன் எங்கே… இருக்கிறேன்… எதற்கு இங்கே இருக்கிறேன்…”

“அபிதன் சாப்பிட்டானா?”

“அப்பா… என்னைத் தேடுவாரே… நான் போகவேண்டும்…” என்று ஏதோ குழப்பத்துடன் அவள் கூற, அநேகாத்மனின் தன்னம்பிக்கை, தைரியம், திடம் அனைத்தும் வடிந்தவனாக வைத்தியரைப் பார்த்தான்.

“அது அந்தக் கட்டியால் வந்தது மிஸ்டர் அநேகாத்மன்… இப்போது முக்கிய நரம்புகளை அந்தக் கட்டி அழுத்துவதால், நினைவுகளும் தடுமாறுகின்றன…” என்றார் வருத்தத்துடன்.

“மகிமா…” என்று குரல் உடையக் கூறியவன், அவள் முன்னால் தான் உடைந்து, அவள் நம்பிக்கையைச் சிதைக்கக் கூடாது என்று எண்ணியவனாகத் தன்னைத் திடப்படுத்தியவன்,

“மகிம்மா… இங்கே என்னைப் பார்…” என்றான் அவசரமாக. அவளோ வேறு எங்கோ பார்க்க, சிரமப்பட்டு, அவளுடைய முகத்தைத் தன்பக்கமாகத் திருப்ப, அவள் விழிகளுடன் தன் விழிகளைக் கலக்க முயன்றான் அநேகாத்மன்.

“கண்ணம்மா… லுக் அட் மை ஐஸ்… மகிம்மா… லுக்… லுக்… என் கண்களைப் பார்… ஐ வோன்ட் டு டெல் யு சம்திங்…” என்றவாறு தவிப்புடன் கூறியவன், இறுதியாக அவள் விழிகளுடன் தன் விழிகளைக் கலக்கவிட்டான்.

“ஆத்மன்…” என்றாள் இறுதியாகக் கரைந்து விட்ட குரலில் .

“யேஸ் பேபி… இட்ஸ் மி… யுவர் ஆத்மன்… ஓன்லி யுவர்ஸ்…” என்றான் விழிகளும், குரலும் விம்ம. அவளோ, அவனை வெறித்துப் பார்த்தவளாக,

“இனி… இனி என்னால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் கிடையாது… கொஞ்ச… கொஞ்சக் காலமாக இருந்தாலும்… என்… என் மீது பாசம் வைத்திருந்ததற்கு… அது நடிப்பே என்றாலும்… தாங்க்ஸ்… நான்… நான் சொன்னதுபோல… என்… என் சகோதரர்களை… எங்காவது… பாதுகாப்பான இடத்தில்… விட்டுவிடுங்கள்… உங்களுக்கு அவர்களால் எந்தத் தொ… தொந்தரவும் வரக் கூடாது…” என்று சிரமப்பட்டுப் பேசியவளின் கரத்தைத் தன் கரத்தில் எடுத்து அழுத்தியவன், மறு கரத்தை அவள் உதட்டில் வைத்து அவள் பேச்சைத் தடுத்தான்..

“ப்ளீஸ்… டோன்ட் கில்மி மகிமா… நான் சொல்வதை நீ நம்பவேண்டும்… நான் உன்னை விரும்புவதுபோல நடிக்கவில்லை… ப்ளீஸ் பிலீவ் மி… நான் நான் உன்மையாகவே உன்னை என் உயிருக்கும் மேலாக விரும்புகிறேன்… ஐ லவ் யு… ஐ நீட் யு…

உன்னைப் பார்த்த அந்தக் கணமே நான் உன்னை விரும்பத் தொடங்கிவிட்டேன்… அதனால்தான் மூன்று வருடங்களுக்கு முன்பே உன்னை மணக்கக் கேட்டேன்… ஆனால் நீ மறுத்துவிட்டாய்… என்று உன்னை விரும்ப ஆரம்பித்தேனோ… அதற்குப் பிறகு நீ என்னை மறுத்தாலும்… இங்கே இருப்பது நீ … நீ மட்டும்தான்…” என்று தன் இடது மார்பைத் தொட்டுக் காட்டியவன்,

“கண்ணம்மா… உன்னைப் பார்த்த அந்தக் கணமே, எனக்கு எல்லாமே நீதான் என்பதை நான் உறுதியாகத் தெரிந்துகொண்டேன். அதற்குப் பிறகு நான் வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை… கனவில் கூட அவர்கள் வந்ததில்லைம்மா… நீ… நீ மட்டும்தான் எப்போதும் என் நனவிலும், கனவிலும் வந்தவள். எப்போதுமே நீ மட்டும்தான் எனக்கு…

இதோ பார்… நான் எத்தனையோ பெண்களுடன் பழகியிருக்கிறேன்… பட் யாருமே என் இதயத்தைத் தொட்டதில்லை. ஏன் என் இதயத்தை நெருங்கக் கூட அவர்களால் முடிந்ததில்லை. முதன் முதல் என் உள்ளத்தைத் தொட்டது, என் உணர்வைத் தொட்டது ஏன் என் ஆத்மாவைத் தொட்டது ஏன் என் புத்தியைத் தொட்டது கூட நீதான்… நீ… நீ மட்டும்தான்… என்னை நம்புமா… தயவு செய்து உன் நம்பிக்கையை விட்டுவிடாதே… எனக்கு நீ வேண்டும்… இம்மைக்கும் மறுமைக்கும் நீ வேண்டும்… இனி இந்த ஜென்மத்தில் என் விரல் நுணி உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் தவறான நோக்கத்தில் தீண்டாது கண்ணம்மா… ஐ பிராமிஸ் யு… ப்ளீஸ் பேபி… ஐ பெக் யு… பிலீவ் மி… என்னிடம் எனக்காய் திரும்பி வந்துவிடு…” என்றவனின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க, சர்வமகியின் விழிகள் வியப்பால் விரிந்தன.

ஆத்மன் அழுகிறானா? அவனுக்கும் அழத் தெரியுமா? முதலில் வியந்தவள், அவன் கரைவது அவள் வேதனையை மேலும் கூட்டியதோ, மீண்டும் அவள் மூக்கிலிருந்து இரத்தம் கசிய அநேகாத்மன் பதட்டமானான். வழிந்த இரத்தத்தைத் துடைத்துவிட்டவாறு.

“இட்ஸ் ஓக்கே… இட்ஸ் ஓக்கே… யு வில் பி ஆல் ரைட்…” என்று அவளுக்குச் சொன்னானா, இல்லை அவனுக்கே சமாதானம் சொன்னானா தெரியவில்லை,

“கண்ணம்மா… நீ என்னை நம்புகிறாய் அல்லவா…? உன் தந்தை குற்றமற்றவர் என்று நம்பினாய், பிரதீபன் குற்றமற்றவன் என்று நம்பினாய்… அதே போல என்னையும் நம்புமா… நான் தவறு செய்தவன்தான்… ஆனா… உன் மீது நான் கொண்ட காதல் பொய்யில்லை… அது நடிப்பில்லை… ப்ளீஸ்… பிலீவ் மீ….” என்றான் பெரும் தவிப்பும் தடுமாற்றமுமாக

“நம்பத்தான் முயற்சி செய்கிறேன்… ஆனால்…” என்றவளின் உடல் உதறியது. அதே நேரம் இரண்டு வைத்தியர்களும், நான்கு தாதிகளுமாகப் பரபரப்புடன் அவர்களுடைய அறைக்குள் நுழைந்தனர்.

“மிஸ்டர் அநேகாத்மன்… இனியும் தாமதிக்க முடியாது…” என்றனர் அவசரமாக.

“ஓக்கே என்ன வேண்டுமானாலும் செய்து என் மனைவியைப் பிழைக்க வைத்துவிடுங்கள் டாக்டர்… ஐ நீட் ஹர்…” என்றான் குரல் முழுவதும் வலியைத் தேக்கி.

“மிஸ்டர் அநேகாத்மன்… அதுதான் எங்கள் வேலையே… நீங்கள் எதற்கும் வருத்தப்படாதீர்கள்… கடவுள் இருக்கிறார்…” என்றவாறு சர்வமகியை அழைத்துச் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார்.

“கடவுள் இருக்கிறார்…” என்கிற சொல் அவனுக்குத் திரும்பத் திரும்பக் காதில் விழ

‘உன்மையாகக் கடவுள் இருக்கிறாரா?’ என்று குழம்பியவன், வாழ்வில் முதன் முறையாக, இது வரை செய்யாத ஒன்றைச் செய்தான். ஆம் கால் மடித்து மண்டியிட்டுத் தரையில் அமர்ந்தவன், கெஞ்சினான்… அதுவும் கடவுளிடம்.

முதலில் எந்தக் கடவுளிடம் கெஞ்சுவது என்று அவனுக்குப் புரியவில்லை. சிவனிடமா, இயேசுவிடமா, அல்லாவிடமா… இல்லை புத்தரிடமா? இல்லை இவை அனைத்தையும் இணைக்கும் ஏதோ ஒரு சக்தியிடமா தெரியவில்லை… ஆனாலும் வேண்டினான்…

“கடவுளே… ப்ளீஸ் சேவ் ஹர்… ஐ பெக் யு… சேவ் ஹர்… அவளை என்னிடமிருந்து பிரித்துவிடாதே… ஐ நீட் ஹர்… ஐ ஆம் நத்திங் வித்தவுட் ஹர்… அவள் இல்லாத வாழ்வில் எனக்கு எதுவும் இல்லை… ப்ளீஸ் என்னவளைக் காப்பாற்று. என்னிடமிருந்து எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்… என் பணம், பதவி, அந்தஸ்து… எல்லாத்தையும் நான் இழக்கத் தயார்… ஆனால் என் தேவதையை… என் ஆத்மாவுடன் கலந்தவளை என்னிடமிருந்து பிரித்துவிடாதே..” என்று தன்னை மறந்து கெஞ்ச, அவன் அருகே வந்த தாதி,

“மிஸ்டர் அநேகாத்மன், உங்கள் நிலை எங்களுக்குப் புரிகிறது. உங்கள் மனைவியை உள்ளே அழைத்துச் செல்லப்போகிறோம். சோ… நீங்கள் விருந்தினர் அறையில் உட்காருங்கள்…” என்றார் அவன் வலி புரிந்தவராக.

தள்ளாட்டத்துடன் எழுந்தவன், “ஒன் செக் டாக்டர்…” என்றவாறு, சர்வமகியின் அருகே வந்தான்.

“மகிம்மா…” என்றான் தளர்வாய்.

அவள் மெதுவாய் தன் விழிகளை விரித்துப் பார்க்க,

“நான் உனக்காக் காத்திருப்பேன்… நீ கட்டாயம் திரும்பி வரவேண்டும்… எனக்குச் சத்தியம் செய்து கொடு… ப்ளீஸ்… எனக்காக இல்லாவிட்டாலும், உன் சகோதரர்களுக்காக… கமோன்… பிராமிஸ் மி…” என்று தன் கரத்தை நீட்ட சர்வமகி அவனை வெறித்துப் பார்த்தாள்.

“கமோன் டாமிட்… பிராமிஸ் மி… சத்தியம் செய் சர்வமகி… கமோன்…” என்று பரபரப்புடன் வேண்டினான். சர்வமகி சிரமப்பட்டுத் தன் கரத்தை நீட்ட அநேகாத்மன் அதை அழுந்தப் பற்றிக்கொண்டான்.

“நீ சத்தியம் செய்திருக்கிறாய் மகிம்மா… எக்காரணம் கொண்டும் உன் நம்பிக்கையை விட்டுவிடாதே… உனக்காக நா… உனக்காக உன் சகோதரர்கள் காத்திருப்பார்கள்… அவர்களைத் தவிக்கவைத்துவிடாதே…” என்று பலமுறை அவள் மனதில் பதிய வைத்தான்.

பின்பு அவளை ஸ்ரெச்சரில் இழுத்துக்கொண்டு செல்ல தன் உயிரே தன்னைவிட்டுப் பிரிவதுபோலப் பார்த்துக்கொண்டிருந்தான் அநேகாத்மன்.

நிலவு 50

விருந்தினர் அறைக்குள் வந்த அநேகாத்மன் இருக்கையில் தொப் என்று அமர்ந்தான். அவனால் எதையும் தெளிவாகச் சிந்திக்கமுடியவில்லை. சிந்தனை மட்டும், சர்வமகியிலேயே நிலைத்திருக்க, விழிகளோ, எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன.

அநேகாத்மனின் நிலையைப் புரிந்துகொண்டவளாக, தேவகி அவனருகே வந்தமர்ந்தாள்.

அவனுடைய கரத்தில் தன் கரத்தை வைத்தவள்,

“அத்தான்…” என்றாள் மென்மையாக.

கனவில் பார்ப்பதுபோல அவளை ஏறிட்டான் அநேகாத்மன்.

“அக்கா… அக்காவுக்கு எப்படி…” என்று தவிப்புடன் கேட்டாள்.

“தெரியவில்லை தேவகி… எனக்கு… எனக்கு என்ன யோசிப்பதென்றே தெரியவில்லை. என்னால் எதையும் தெளிவாகச் சிந்திக்கமுடியவில்லை… கொஞ்ச நேரம் நான் அமைதியாகத் தனிமையில்  இருக்கவேண்டும்… ப்ளீஸ்… என்னைத் தொந்தரவு செய்யாதே…” என்றவன் தன் முகத்தைக் கரங்களால் தாங்கிக்கொண்டான்.

அதே நேரம் அவனுடைய செல் அடித்தது. வெறுப்புடன் செல்லைப் பார்த்தவன், எடுத்துக் காதில் பொருத்தினான்.

“வட்…” என்றான் சுள் என்று. மறுபக்கம் என்ன சொன்னதோ,

“உடனடியாக அந்த செய்தியை எல்லாப் காகிதத்திலும் போடு… எல்லா தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பச் சொல்லி உத்தரவிடு… எத்தனை பணம் தொலைந்தாலும் ஐ டோன்ட் கெயர்… எல்லா பத்திரிக்கை, டிவி… ரேடியோ இன்டர் நெட்… எல்லாவற்றிலும் இந்த நியூஸ் பப்ளிஷாகவேண்டும்…” என்றான்.

அடுத்து மறுபக்கம் சொன்னதைப் பொறுமை இழந்து கேட்டவன்,

“எனக்கு என் உயிரைப்பற்றிய கவலை இல்லை… என் உயிர் உள்ளே ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறபோது… என் உடலைப் பற்றி எனக்கென்ன கவலை… டு வட் ஐ சே… இந்த நியூஸ் நாளைக்கிடையில் இந்த உலகம் எங்கும் ஒலிபரப்பாகவேண்டும்…” என்றவன் தொலைப்பேசியை மீண்டும் சட்டைப் பையில் வைத்தான்.

இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டவன் மீண்டும் மனம் இறைவனிடமே நிலைத்திருந்தது.  அவன் உடல் பொருள் ஆவி அனைத்தும், எங்கோ தொலைவில் கண்ணுக்கெட்டா தூரத்தில், கடவுள் என்று மக்களால் நம்பப்படும், ஏதோ ஒரு சக்தியிடம், மன்றாடிக் கேட்டுக்கொண்டிருந்தன.

‘கடவுளே… என் மகியை மீட்டு என்னிடம் கொடுத்துவிடு’ என்று

கிட்டத்தட்ட ஏழு மணி நேர சத்திர சிகிச்சை. அநேகாத்மன் அது எதுவும் புரியாமல் விழிகளை மூடி ஏதோ ஒரு ஒளியிடம் சர்வமகி மீண்டும் வந்துவிடவேண்டும் என்று மட்டும் வேண்டிக்கொண்டே இருந்தான்.

தேவகிக்கு அவனைப் பார்க்கப் பார்க்கப் பயமாக இருந்தது. காதலைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருக்கிறாள் தான். ஆனால் அநேகாத்மனின் காதலைப் போன்று அவள் எதையும் கேள்விப்பட்டதும் இல்லை. பார்த்ததும் இல்லை.

உண்ணவில்லை, பச்சைத் தண்ணீர் கூட அவன் குடிக்கவில்லை. ஆனால், மூடிய விழிகளிலும் அசைவில்லை, நிமிர்ந்திருந்த உடலிலும் அசைவில்லை. வெறும் கல்லாக அமர்ந்திருந்தான் அவன்.

கடைசியாக விருந்தினர் அறைக்கு சத்திர சிகிச்சையை முடித்து வைத்தியர் வந்தார். அது எதுவும் தெரியாமல் அநேகாத்மன் விழிகளை மூடியவாறே இருந்தான்.

அருகே வந்த வைத்தியர் அவனுடைய தோளில் தன் கரத்தை வைத்தார்.

அப்போதும் அநேகாத்மன் விழிகளைத் திறக்கவில்லை.

“மிஸ்டர் அநேகாத்மன்…” என்றார் வைத்தியர்.

மெதுவாக விழிகளைத் திறந்தான். முன்னே நின்ற வைத்தியரைக் கண்டதும் பதட்டமானான்.

“டாக்டர்… என் மனைவிக்கு…” என்றவன் முடிக்காமல் அவரைப் பார்த்தான்.

அவருடைய முகத்தில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது.

“மிஸ்டர் அநேகாத்மன்… உங்கள் மனைவியின் மூளையிலிருந்த கட்டியை வெற்றிகரமாக நாங்கள் நீக்கிவிட்டோம்…” என்றதும் பெரும் நிம்மதியுடன் வைத்தியரைப் பார்த்து முதன் முறையாகப் புன்னகை சிந்தினான் அநேகாத்மன்.

“தாங்க் காட்… டாக்டர்… எனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை… என் உயிரையே என்னிடம் கொடுத்துவிட்டீர்கள்… நான் இந்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டேன்…” என்று அவருடைய கரத்தைப் பற்றிக் கூறியவனிடம் வருத்தமான ஒரு புன்னகையைச் சிந்தினார் டாக்டர்.

“மிஸ்டர் அநேகாத்மன்… சத்திர சிகிச்சைதான் வெற்றிகரமாக நடைபெற்றது என்று சொன்னேன்…” என்று கூறியதும்தான் அநேகாத்மன் அடிபட்ட பாவனையுடன் வைத்தியரைப் பார்த்தான்.

“அப்படியானால்… டாக்டர்… என் மனைவியின் உயிருக்கு…” அதற்கு மேல் அவனால் சிந்திக்கவும் முடியவில்லை… வாய் விட்டுக் கூறவும் முடியவில்லை.

“அது எங்கள் கையில் இல்லை…” என்று அவர் கூற அநேகாத்மன் வைத்தியரின் சட்டையை அழுந்தப் பற்றினான்.

“வட் த ஹெல் ஆர் யு டாக்கிங்…” என்று சீறினான் அவன்.

“மிஸ்டர் அநேகாத்மன்… கூல் டவுன்…” என்ற வைத்தியரைக் கோபத்துடன் பார்த்தான் அநேகாத்மன்.

“கூல் டவுனா… எப்படி… எப்படி? என் மனைவியைக் காப்பாற்றுவீர்கள் என்று நினைத்தால்… நீங்கள் இப்படி வந்து சொல்கிறீர்களே…” கோபம் எகிறியவனாக.

“மிஸ்டர் அநேகாத்மன்… கன்ரோல் யுவர் செலஃப்… உங்கள் மனைவியின் உயிருக்குத் தற்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை… அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்…” என்றதும் விறுக் என்று எழுந்தான் அநேகாத்மன்.

“அப்படியானால் அவள் பிழைத்துக் கொள்வாளா?” என்றான் பரபரப்பாக.

“மிஸ்டர் அநேகாத்மன்… தவறான நம்பிக்கையைத் தர நாங்கள் விரும்பவில்லை. உங்கள் மனைவிக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை. இன்னும் இரண்டு நாட்கள் கழிந்த பிறகுதான் அவருடைய உன்மையான நிலை தெரியவரும். தற்போதைக்கு அவரை லைஃப் சப்போர்ட்டில் போட்டிருக்கிறோம்… இனிக் கடவுளின் அருளும் பேஷன்டின் ஒத்துழைப்பும் இருந்தால்தான் பிழைத்து எழ முடியும்…” என்றதும் அநேகாத்மனுக்குத் தன்னை நிதானப் படுத்துவதே பெரும்பாடானது.

“லைஃப் சப்போர்ட்டா…” என்று அதிர்வுடன் கேட்டவன் மருத்துவரைப் பயத்துடன் பார்த்தான்.

“யெஸ்… மிஸ்டர் அநேகாத்மன்… லைஃப் சப்போர்ட்தான்… செயற்கையாகச் சுவாசிக்க வைத்திருக்கிறோம்…” என்றதும் அநேகாத்மன் இருக்கையில் தொப் என்று அமர்ந்தான்.

“அ… அப்படியானால்… என்… மனைவி…”

“சாரி டு சே திஸ்… ஷி இஸ் இன் கோமா…”

“நோ… நோ… ஓ காட்… ஓகாட்…” என்று துடித்துப் பதறியவனிடம்

“நாங்கள் முடிந்த வரை முயற்சி செய்தோம் மிஸ்டர் அநேகாத்மன். இப்போது கோமாவில் இருப்பவர்கள் விழித்துக் கொள்வதற்குக் காத்திருக்கவேண்டியதுதான்…” என்றார் வைத்தியரும் வருத்தமாக.

“எப்போ… எவ்வளவு காலத்திற்கு…” என்றான் அனேகாத்மன் அடக்கிய ஆத்திரத்துடன்.

“அதற்கு பதில் கூறும் சக்தி என்னிடம் இல்லை… நாளையும் எழும்பலாம், ஒரு கிழமை கழித்தும் எழும்பலாம்… வருடங்கள் கழித்தும் எழும்பலாம்… இல்லை…. அவர்கள் எழும்பாமலே…” அவர் முடிக்க முதல் பாய்ந்து, அவருடைய கோட்டை இழுத்துப் பிடித்தான்.

“ஹெள டெயர் யு… ஹெள டெயர் யு சே லைக் திஸ்…”

“சாரி மிஸ்டர் அநேகாத்மன்… எதுவும் எங்கள் கையில் இல்லை…” என்றார் அவர் வருத்தத்துடன்.

“வட்… உன் கையில் இல்லை என்றால் யார் கையில் இருக்கிறது? என் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை என்றால் எதற்காக டாக்டருக்குப் படித்தீர்கள்…? உங்களை நம்பி என் மனைவியை ஒப்படைத்தால் இதுதானா… பதில்…” என்று ஆவேசம் கொண்டு கத்தியவனை அடக்குவதற்குப் பெரும் பாடாகிற்று.

“ப்ளீஸ் மிஸ்டர் அநேகாதமன்… உங்கள் வலி எங்களுக்குப் புரிகிறது. வி ட்ரை அவர் பெஸ்ட்… பட்… அந்தக் கட்டிகள் இருந்த இடம்… எங்களுக்கும் வேறு வழியில்லை…” என்று அவர் தம் பக்க நியாயத்தைக் கூற முயல, அநேகாதமன் அவரைப் பிடித்திருந்த கோட்டை விடுவித்தான்.

“ஏன்… ஏன் உங்களால் முடிந்திருக்கவில்லை…” என்றவன், தான் ஒரு ஆண்… அதுவும் பெரிய லீடிங் லாயர்… பெரும் பணக்காரன் என்பது எதுவும் நினைவில்லாமல் அப்படியே மடங்கிச் சரிந்து குலுங்கிக் குலுங்கி அழ, பதறிக்கொண்டு ஓடிவந்த தேவகி, அவனருகே அமர்ந்து அவன் தோளைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டாள். தன் சகோதரிக்காக அழுவதா, இல்லை, தன் அத்தானுக்காக அழுவதா என்று புரியாமல் அவளும் சேர்ந்து அழுத்தினாள் .

“ப்ளீஸ் அத்தான்… ப்ளீஸ்… அக்காவுக்கு ஒன்றுமாகாது… உங்களை விட்டு அவர்கள் எங்கும் போக மாட்டார்கள்… ப்ளீஸ் அத்தான்… அழாதீர்கள்…” என்று அவனுடைய முதுகைத் தட்டிக்கொடுக்க மட்டும்தான் அவளால் முடிந்தது. ஆனால் அவனோ,

“மகிம்மா… ஏம்மா இப்படி செய்தாய்… நீ வருவாய் என்று முழுதாக நம்பினேனே… நீ சத்தியம் வேறு செய்தாயே… நீ கூட பொய்த்துப்போவாயா… நீ இல்லாமல்… நான்… நான் என்னடி செய்வேன்… ஏன்டி இப்படிச் செய்தாய்…” என்று வாய் விட்டுக் கதறியவனைக் கொஞ்ச நேரம் அப்படியே விட்டனர்.

அழுது கரைந்தாலாவது மனதிலிருக்கும் பாரம் கரைந்து போகுமே. கொஞ்ச நேரம் அப்படியே இருந்தவன், அடுத்து என்ன சொல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் எழுந்தான். குறுக்கும் நெடுக்குமாக அந்த அறைக்குள் நடைபயின்றான். அவனுக்கு எப்படித் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்று புரியவில்லை.

மீண்டும் திரும்பி வைத்தியரைப் பார்த்தவன்,

“ஐ கான்ட் லிவ் வித்தவுட் ஹர்… லிசின் டு மி டாக்டர்… ஐ நீட் மை வைஃப். நீங்கள் என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது… என் மனைவி எனக்கு வேண்டும்… அவளுக்கு ஏதாவது ஒன்று நடந்தால்… ஐ கில் மை செல்ஃப்… யெஸ் ஐ வில் டு தட்…” என்று அவன் உறுதியாகக் கூற அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தனர்.

“அத்தான்… என்ன பேசுகிறீர்கள்…” என்றாள் தேவகி பதட்டத்துடன்.

“யெஸ்… ஐ வில் டு தட்… அவள் இல்லாத வாழ்க்கையும், ஆக்சிஜன் இல்லாத உலகமும் எனக்கு ஒன்றுதான். அவள் இல்லாது சித்திரவதையை அனுபவிப்பதை விட… இது எவ்வளவோ மேல்…” என்று கூறியவனை அங்கிருந்தவர்கள் பயத்துடன் பார்த்தனர்.

அவனுடைய உணர்வு புரிந்தது. அவன் இப்போது ஹைப்பர் டென்ஷனில் நிற்பதும் தெரிந்தது. இப்போது அவனுடைய உணர்வுகள் தளும்பி நிற்கிற வேளையில் எதையும் கூறி ஆறுதல் படுத்த முடியாது என்பதும் தெரிந்தது.

“லிசின் டு மி மிஸ்டர் அநேகாத்மன். இப்போதைக்கு உங்கள் மனைவிக்கு ஒன்றுமே இல்லை. அவர்கள் விழித்தெழுவதற்குச் சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கிறது. உங்கள் நம்பிக்கை அவர்களைக் கட்டாயம் மீட்டு வரும். அதனால் அவசரப்பட்டு எதையும் செய்துவிடாதீர்கள்…” என்றார் டாக்டர் பதட்டமாக.

அநேகாத்மனின் முகத்தில் இப்போது தெளிவு வந்திருந்தது. அமைதியாக வைத்தியரைப் பார்த்தவன்,

“பயப்படவேண்டியதில்லை டாக்டர்… என்னுடைய மனைவி உயிரோடு இருக்கும் வரைக்கும் என்னால் இருக்க முடியும்…” என்றவன் வலித்த இதயத்தை வருடிக் கொடுப்பவன் போன்று இடது மார்பைத் தடவிவிட்டான்.

“நான் என் மனைவியைப் பார்க்க முடியுமா டாக்டர்…”

“யெஸ்… பட் இப்போது நீங்கள் அதிக எமோஷனலாக இருக்கிறீர்கள்… அவர் நிலையைப் பார்த்தால், மீண்டும் நீங்கள் உங்கள் நிலையை இழக்க நேரிடும்… அது அவ்வளவு நல்லதில்லையே…” என்று வைத்தியர் தயங்க, இவன் மெல்லியதாக நகைத்தான்.

“ஐ ஆம் ஓக்கே நவ் டாக்டர்… ஐ வோன்ட் டு சீ ஹர்…” என்றான் அதுதான் முடிவு என்பதுபோல.

“ஓக்கே… பட் பிகேவ் யுவர் செல்ஃப்… ஒரு வேளை நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டை இழந்தால், உங்கள் அனுமதியின்றியே வெளியேற்றப்படுவீர்கள்…” என்கிற எச்சரிக்கையுடன் அவர் அனுமதி வழங்கத் தேவகியையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

சர்வமகிக்கு தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. தலையிலிருந்து எங்கே எங்கேயோவெல்லாம் அடி எது நுணி எது என்று தெரியாமல் சிறியதும், பெரியதுமாகப் பிளாஸ்டிக் குழாய்கள் போய்க்கொண்டிருந்தன. பார்க்கவே பயமாக இருந்தது.

இரண்டெட்டில், அவளை நெருங்கியவன் பெரிதும் துடித்துப்போனான். அடிபட்ட வலியுடன், தன்னவளின் தலை முதல் பாதம் வரை ஏக்கத்துடன் பார்த்தான்.

“ஓ மை ஏஞ்சல்… உன்னை இப்படி என்னால் பார்க்க முடியவில்லையே…” என்று தவித்தவன், அவளுடைய நெற்றியையும், முகத்தையும் மென்மையாக வருடிக்கொடுத்தான்.

அதே நேரம் ஒரு நார்ஸ் உள்ளே வந்து ஒருவர்தான் இருக்கமுடியும் என்று அறிவுறுத்த, தேவகி தானாகவே விடைபெற்றாள்.

கொஞ்சம் பொறுத்து அவனும் அங்கே நிற்கமுடியாது என்று தாதி அறிவுறுத்த அவன் மறுப்பாகத் தலையாட்டினான்.

“நோ… நான் எங்கும் போக மாட்டேன்… நான் இங்கே என் மனைவியின் அருகேதான் இருக்கப்போகிறேன்…” என்றான் பிடிவாதமாக.

“நோ மிஸ்டர் அநேகாத்மன்… நீங்கள் இங்கே தங்க முடியாது…” என்றார் தாதி அவனுக்குப் புரிய வைக்கும் முகமாக.

“அதற்கு உங்கள் அனுமதி தேவையில்லை… யாரை வேண்டுமானாலும் நீங்கள் அழைக்கலாம். யு கான் கால் ஆர்மி ஃபோஸ் இஃப் யு வோன்ட்… ஐ டோன்ட் கெயர்… என் மனைவி விழிகளைத் திறக்கும் வரை நான் எங்கும் போவதாக இல்லை…” என்றவன் அவளுடன் என்ன பேச்சு என்பது போலத் தன் மனைவியின் முகத்தை வெறித்துப் பார்த்தான்.

ஊசி ஏற்றப்பட்டிருந்த கரத்தைப் பற்றி எங்கே அவளுக்கு வலித்துவிடுமோ என்று அஞ்சியவன் போன்று மென்மையாகப் பற்றித் தன் கரத்தில் வைத்துக்கொண்டான்.

அவன் சொல்வதைக் கேட்கும் ரகம் போலில்லை என்பதை உணர்ந்த நார்ஸ் உடனே மருத்துவருக்கு இதைப் பற்றித் தெரிவிக்க, அவரும் அவனை அவன் போக்கிலேயே விடுமாறு கூறிவிட்டார்.

டாக்டரே சொன்ன பிறகு மறுப்பதற்கு அவள் யார். அவனுடன் விவாதித்துப் பயன் இல்லை என்பதை அவர் ஏற்கெனவே அறிந்துகொண்டாரோ! அல்லது அவள் இருக்கப்போவது இன்னும் சொற்ப நாட்களுக்குத்தான் என்று நினைத்தாரோ…?

அநேகாத்மன் சர்வமகியின் அருகேயே இரண்டு நாட்களும் தவம் கிடந்தான். அவன் சாப்பிட்டானா தண்ணீர் குடித்தானா என்று யாருக்குமே தெரியாது. இயற்கைத் தேவைகளுக்காக மட்டும் அவளை விட்டுப் பிரிந்தான் அன்றி, அவன் அந்த இடத்தைவிட்டு அசையவே இல்லை. அவனுடைய பார்வைகள் இரண்டும் சர்வமகியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. அவனுடைய கரங்கள் அவளுடைய கரங்களைப் பற்றிக்கொண்டே இருந்தன.

இரண்டு நாட்கள் கடந்தும் அவளிடம் மாற்றமில்லை என்பதும், வைத்தியர்கள் யோசிக்கத் தொடங்கினர். அவனிடம் சென்ற செய்தியைக் கூறவும் பயமாக இருந்தது. இரண்டு நாட்களாக எதுவும் உண்ணாமல், உறங்காமலிருந்த அநேகாத்மனைக் கண்டு வருந்தினர் அனைவரும்.

தன் அத்தானின் நிலை கண்டு தேவகி பெரிதும் துடித்துப் போனாள். அவனை எப்படியாவது சாப்பிட வைக்கவேண்டுமே, இலகுவாகச் சாப்பிடக் கூடியது போல, சூப் செய்துகொண்டு வந்தவள், அநேகாத்மனை உண்ணுமாறு வேண்ட அவன் மறுத்தான்.

“ப்ளீஸ் அத்தான்… அக்கா எழுந்ததும், நீங்கள் சாப்பிடவில்லை என்பதை அறிந்தால், இன்னும் துடித்துப்போவாள்… அவளுக்காகவாவது சாப்பிடுங்கள். என்று கூற,

“என் கண்ணம்மா எழுந்துவிடுவாள் அல்லவா?” என்றான் அவன் பெரும் ஏக்கத்துடன்.

தன் விம்மலை அடக்கியவளாக, சூப் கொண்டு வந்த சாப்பாட்டுப் பாத்திரத்தைத் திறந்து அதைக் கரைத்து கரண்டியில் எடுத்தவாறு,

“நிச்சயமாக அத்தான்… இன்னும் இரண்டு நாட்களில் அக்கா எழுந்துவிடுவாள்… வேண்டுமானால் பாருங்கள்… உங்கள் அன்பு அவளை மீட்டு வரும்…” என்று உறுதி கூற, விழிகள் நிறைந்த கண்ணீருடன் தேவகியை அவன் பார்க்க, அதில் துடித்துப் போனவளாக,

“ப்ளீஸ் அத்தான்… இதைக் குடியுங்கள் என்று அவள் ஊட்ட மறுக்காது வாங்கினான் அனேகாத்மன். இல்லை என்றால் சர்வமகி வருந்துவாளே.

இப்படி சகோதரியைச் சாட்டி, ஏதோ கொஞ்சத்தையாவது தேவகியால் அநேகாத்மனுக்கு உணவு கொடுக்க முடிந்தது. அது தவிர்த்து இரவு பகல் எந்த நேரமும் அவன் அவளை விட்டு விலகாமலே காவல் காத்தான். உள் மனது கடவுளிடம் மன்றாடிக்கொண்டே இருந்தது.

நான்காம் நாள்… இரவு அநேகாத்மன் சர்வமகியையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பிடியிலிருந்த அவள் இடது கரத்தின் விரல்களில் மெல்லிய அசைவு. ஆரம்பத்தில் அதை அநேகாத்மன் உணரவில்லை. இரண்டாம் முறை அசைந்தபோது, பதட்டத்துடன் சர்வமகியைப் பார்த்தான். அவள் முகத்தில் எந்த அசைவும் இருக்கவில்லை.

தன் பிரமையாக இருக்கும் என்று எண்ணியவன் அவள் புறம் குனிந்து தன் வலது கரத்தால் அவள் நெற்றியை மென்மையாக வருடினான்.

வழமைபோல, அவளிடம் மெல்லிய குரலில் மன்றாடினான். “மகிம்மா… உன்னுடைய அபிதன் உன்னைக் காணவில்லை என்று ஒரே அழுகை தெரியுமா? பிரதீபன்… அவன் இரண்டு நாட்களாகச் சாப்பிடவேயில்லை… நீ எழுந்து வந்தால்தான் சாப்பிடுவார்களாம்… மாதவி, தேவகி இரண்டு பேரும் உன்னையே எண்ணி உறங்காமல், உண்ணாமல் இருக்கிறார்கள்… அவர்களைக் கண்டிக்க நீ வந்தால்தான் முடியும்… எழுந்திரிடா…” என்று அவன் கூற, அவளிடம் அசைவில்லை.

“மகி… விழிகளைத் திறந்து பாரம்மா… நீ என்னிடம் திரும்பி வருவேன் என்று சத்தியம் செய்திருக்கிறாய்… என்னை ஏமாற்றிவிடாதே… நீ இல்லை என்றால் நானும் இல்லையடா… நான் வெறும் பிணம்… உன் சகோதரர்களுக்காக இந்த உலகத்தில் இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால்… நீயில்லாமல்… என்னால் முடியாது கண்ணம்மா… ஐ கான்ட்…” என்றவன் பெரும் மூச்சொன்றை எடுத்துவிட்டவாறு, தன் தலையை வேதனையுடன் சுவரில் சாய்த்தான். பின்  ஏங்கிய குரலில்,

“நான் பார்க்கிற காட்சிகள் யாவும் நீதான்டா நிறைந்திருக்கிறாய்… நீ அருகே இருக்கும்போது அழகாக இருந்தவையெல்லாம், இப்போ… வெறும் கல்லும் தூணுமாகத்தான் எனக்குத் தெரிகிறது… ப்ளீஸ் டா… என்னிடம் திரும்பி வந்துவிடு… இதற்கு மேல் என்னால் தாங்க முடியாதும்மா…” என்றவனின் குரல் கம்மிப்போயிருந்தது.

“இதோ பார்… நீ திரும்ப வரவில்லையென்றால் நானும் உன்னுடன் வந்துவிடுவேன்… சத்தியமாக வந்துவிடுவேன் கண்ணம்மா… அப்படியே துர் அதிர்ஷ்ட வசமாக நான் பிழைத்து உயிரோடு திரும்ப வந்தாலும்… என்னிடம் எந்த உணர்வும் இருக்காது… மகி… நீ இருந்தால் மட்டுமே என்னால் இந்த உலகத்தைப் பார்க்கமுடியும். இந்த உலகத்தை ரசிக்கமுடியும்… கண்ணம்மா… ப்ளீஸ்டா… என்னிடம் வந்துவிடம்மா… எனக்காக…” என்றவன் தொடர்ந்து, அவள் கரத்தைத் தூக்கித் தன் உதட்டில் அழுத்தி முத்தமிட்டான்

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
4
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!