சேதி 24
*********
பூங்காவனத்தின் வீட்டின் உள்ளே தயங்கியவாறு நுழைந்த வேல்ராஜனிற்கு , அவர்களின் உற்சாகமும் அன்புமான வரவேற்பு, இன்னமும் தர்மசங்கடமான நிலையில் ஆழ்த்தியது.
தன் அறையில், தன் மனம் கவர்ந்த செல்லக்கிளிக்காக தான் வாங்கியிருந்த இரு இதயங்கள் இணைந்த மாதிரி இருந்த மோதிரத்தை ரசித்துக் கொண்டிருந்த பூங்காவனம் , அவளின் செங்காந்தள் விரலில் இதை அணிவிக்கும் தருணம் எப்படி இருக்கும், பயமும் பதட்டமுமாய் அவன் பார்த்திருந்த விழிகள்..அப்போதாவது வெட்கமும் காதலுமாய் தன்னைப் பார்க்குமா என்று புன்முறுவலோடு எண்ணிக் கொண்டான்.
வெளியில் யாரையோ ஆரவாரமாக வரவேற்கும் சத்தத்தில் எட்டிப் பார்த்தவனுக்கு சங்கடமான முகத்துடன் அமர்ந்திருந்த வேலராஜனைப் பார்த்து, ஏதோ சரியில்லை என்று தோன்றியது.
வேகமாக வெளியே வந்தவன், வாங்க என்று வரவேற்று விட்டு அவருக்கு எதிரே , நாற்காலியை ப் போட்டு அமர்ந்தான்.
சற்றுநேரம் அமைதியில் கழிய, பூங்காவத்தின் தந்தையான பாலமுருகனைப் பார்த்து,”சார், மன்னிக்கனும்…செல்லக்கிளி ய எங்க அக்கா பையனுக்கே கேக்குறாக…பலவருசமா பெரிசா போக்குவரத்து இல்ல..இப்போ ரெண்டு குடும்பமும் இணையுற மாதிரி இந்த கல்யாணம் நடந்தா எல்லாருக்கும் நல்லது…நீங்க பெரிய மனசு பண்ணி…..இந்த நிச்சயத்தை நிறுத்தனும்..
கடைசி நேரத்துல வந்து இப்படி சொல்றது…சங்கடமா இருக்கு …வேற வழியில்லை எனக்கு..தப்பா எடுக்க கூடாது…”,
எனவும் அங்கே, பேரமைதி சூழ்ந்தது..
ஐந்து நொடிகள் கழித்து எழும்பியது பூங்காவனத்தின் குரல்.,” அந்த சம்பந்தத்தில் உங்க பொண்ணுக்கு சம்மதமா!!!”
எனவும் திடுக்கிட்டு ,அவனை திரும்பி பார்த்தார் வேலராஜன்.
யோசனையில் ஆழ்ந்தவராய்,” அது சின்ன பொண்ணு அதுக்கு என்ன தெரியும்..பெரியவுங்க பார்த்து சொன்ன கேட்கும்..அப்படி தான் நாங்க வளர்த்துருக்கோம்..இப்போ இந்த நிச்சயத்துக்கு கூட மாப்பிள்ளை இவர் ….சரியானு கேட்டதும் ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாம என் பொண்ணு கிளம்பி வந்துட்டா….”
எனவும்,” அப்போ அதுக்கும் அவகிட்ட சம்மதம் நீங்க கேட்கலையா????” என்றான் குற்றம் சாட்டும் குரலில்..
அவனின் குரலில் அதிர்ந்த வேல்ராஜன், திகைத்து, பின் தெளிந்தவராய்,” தம்பி , என் பொண்ணு ட்ட போன்ல கேட்டு தான் செய்தேன்..நீங்க அறியாத தெரியாதவரா…அவ உயிர் தோழியோட அண்ணே தானே……அவ சரின்னு தான் கிளம்பி வந்தா….இப்போவும் போய் , இந்த மாதிரி ..னு சொல்லி.. சம்மதமா னு நல்லா கேட்டே செய்றேன்..சரிதானே..” என்றவர் எழுந்து கரம்குவித்தார்.
“ நான் கிளம்புறேன்…”
செல்லும் அவரையே யோசனையாக பார்த்துக்கொண்டே இருந்தான் பூங்காவனம்.
அடுத்த அறை யில் இருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரி, மெதுவாக வந்து தன் தமையனின் தோளில் கைவைத்தாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் தெரிந்த யோசனையிலும், முகத்தில் தெரிந்த தீவிரத்திலும், ஏனோ ஈஸ்வரி மனதில் குளிர் ஏறியது.
“ அண்ணே!! நான் தான் முன்னமே சொன்னேனே…அவுக அத்த பையன் அவ மேல உரிமையா இருக்காகனு….இப்போ அம்மாக்கு ட்ரேட்டமெண்ட் வந்தபோது கூட சடை மடையா உன்னை பத்தி பேசிப்பார்த்தேன்.. அவ பெருசாவே எடுத்துக்கலை… விடுண்ணே….உனக்குன்னு ஒரு பொண்ணு இருப்பா…அவ உன்னை தேடி வருவா!!!!” என்றாள் சமாதானமாய்…
அவளின் கையை எடுத்துவிட்டவன், தன அறைக்குள் நுழைந்து தாளிட்டு க் கொண்டான்…
***************
வீட்டினுள் நுழைந்த வேல்ராஜன், வரவேற்பு அறையில் குழுமி இருந்த தன் மனைவி வழி சொந்தங்களைக் கண்டு, மணிகட்டைத் திருப்பி பார்த்தார். இரவு ஏழு மணிக்கு நிச்சயம் என்று சொல்லி இருந்ததால், அனைவரும் மதியம் வந்து சேர்ந்து இருந்தனர்.
கோபத்துடன் சென்ற மகன் சந்தோஷத்துடனும் யோசனையுடனும் திரும்புவதை பார்த்தவாறு இருந்தனர் .. அவரின் பெற்றோரான மயில்வாகனமும் முத்துநாச்சியாரும்..
தன் மனைவி, அன்னை தந்தையை அறைக்கு அழைத்தவர், விவரம் சொல்ல, முத்துநாச்சியார், மயில்வாகனமும் மிகவும் மகிழ்ந்தார்கள் என்றால், கற்பகவள்ளி முகம் குழப்பத்தைக் காட்டியது.
“என்ன திடீர்னு பொண்ணு கேக்குறாகனு சொல்லுறீங்க…..சித்தி…சௌந்தரண்ணனா கேட்டாக…நம்பவே முடியலையே….” என்று கேட்டார்.
“ ஆமா.. உன் அண்ணே தம்பிட்ட விவரத்தை சொல்லு..” என்று அவரை அனுப்பியவர்..
தன் அன்னை தந்தையிடம்..கௌரி பற்றிய விவரம் சுருக்கமாக சொன்னதும் ..முத்துநாச்சியார்க் கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
“அந்த பெத்தநாச்சி இம்புட்டு வருசம் கழிச்சு கண்ணு தொறந்து பார்த்துட்டா…எம் பொண்ணு வருசா வருசம் பால்கொடமெடுத்ததுக்கு…இப்போ அவ வயித்துல பால வாத்து ட்டா….” என்று மகிழந்தவர், அதைவிட மகிழ்ச்சியாய்,” நம்ம ராசனுக்கு, நம்ம ராசாத்திய கேக்குறாகளா…நிசமாதான் சொல்லுரியா வேலு..சம்பந்தியம்மா வா கேட்டாக…”
எனவும்,” இல்லமா…மச்சான் கேட்டாக…அந்த அத்த சும்மா தான் இருந்தாக…”
“ இதென்ன… சூரியன் மேக்காலே உதிக்க மாதிரி ஆச்சரியமா இருக்கு…அம்மை இருக்கையிலேயே மரும்கபுள்ள வாயதிறந்து பொண்ணு கேட்டுட்டாரா….சரி இப்போ சாயங்காலம் விசேசம் வச்சுருக்கு…எல்லோரும் சித்த நேரத்துல வந்துருவாக..அவுக வீட்டுக்கு சொல்லிட்டியா..ஏதும் பிரச்னையில்லயே…” என்று கேட்டு அவர் இல்லையென்பது போல் தலை அசைத்ததும்….
.”இப்போவே..வந்து பூ வைக்குறேனாலா அக்கா..”
“இப்போவே என்ன அவசரம் மா…நம்ம வீடு தானே…எப்போவேணா வரட்டும்..இந்த குழப்பமெல்லாம் தீரட்டும்…
”
“ ராசன்…பத்துநாள் லீவு ல தான் வந்துருக்கான். அவனிருக்கையிலேயே செஞ்சுபுட்டா என்னா…”
“எம்மா….அவசர படாதீங்க..இதெல்லாம் மாப்பிளை வீடு முடிவு பண்ண வேண்டியது…அவுங்க பொறுமையா யோசிச்சுட்டு சொல்லட்டும்…” எனவும்
ஏனோ முத்துநாச்சியருக்கு… இன்றே நடத்திவிட்டால் நல்லது போல் தோன்றியது..
தன் மகளுக்கு அலைபேசியில் அழைத்தார்.
அதே நேரம் வேல்ராஜன் செல்லகிளியை தன் அறைக்கு வருமாறு அழைக்க, சற்றே உதறலோடு வந்தாள் செல்லக்கிளி.
தந்தை முகத்தில் இருந்த அமைதி, அவளையும் அமைதி படுத்த, அங்கிருந்த ஐயாம்மா அய்யபவை பார்த்து,”’ அடடா…அவுக ஆச்சிட்ட.சொல்லிட்டாகளோ…என்ன சொன்னாக னு தெரியலையே..என்னய பதறவிடுறதே வேலையா வச்சுருக்காக…’ என்று வனராஜனுக்கு மனதிற்குள்,மண்டகாப்படி (அதாங்க திட்டுறது) நடத்தினாள்.
“செல்லம்…..உன்ன உன் சொர்ணத்தை வீட்டுல பொண்ணு கேக்குறாக…எனக்கும் சம்மதந்தான்…உனக்கு இஷ்டமா…ஈஸ்வரி அண்ணனோட நிச்சயம்னு வர சொல்லிட்டு, இப்போ அத்தனோடனு சொல்றோமினு பதறாத…உன் விருப்பம் தான் ..”
எனவும் நிம்மதி பெருமூச்சு விட்டவளாய், “ உங்க விருப்பம் தா அய்யா…”
“அப்போ ஈஸ்வரி அண்ணனுக்கு பேசி முடிக்கவா?” எனவும் சரேலென்று நிமிர்ந்தவள் கண்களில் கலக்கம் தெரியவும், சிரித்தார் வேலராஜன்.
“ சின்னக் கழுதை… ரெண்டு பேரும் காலைல ஒண்ணா வந்து இறங்கும் போதே…எனக்கு மனசு ல ஏதோ பட்டுச்சு…உன் அத்தானால… நம்ம குடும்பங்களும் ஒன்னாகுது..ஐய்யாட்ட கூட… சொல்லல உன் மனசுல இருக்குறத…”எனவும்
செல்லக்கிளி யின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன..” அப்படி எல்லாம் இல்ல… நீங்க இஷ்டப்பட்டு யாரை சொல்றீங்களா அவுங்களோட தான் எனக்கு கல்யாணம்…ஆனா ….எப்போ எப்படின்னு தெரிலை…இனி எனக்கு கல்யாணம் நா அது அத்தானோட தான்…அது….உங்களுக்கு அம்மாக்கு சம்மதமின்னாதான்…இல்லாட்டி வேணாம்…”எனவும்,
புன்னகையுடனும் மகளின் தலையை வருட, அலைபேசியில் பேசிவிட்டு வந்த முத்துநாச்சியார்,” என்ன சொன்ன… புள்ளைய அழ வச்சுருக்கே….”என்று கடிந்தவரிடம்,
வேலராஜன்,” உங்க பேத்தி நான் சொல்றவன தான் கல்யாணம் பண்ணுவாளாம்…ஆனா நான் உங்க பேரனை தா சொல்லனுமாம்” என்று சொல்லி சிரிக்க,
தன் பேத்தி மனம் புரிந்து மகிழ்ந்தவராய், “இனி யார் என்ன சொல்லுறது..என் பேத்தி .. என் பேரனுக்கு தான்…நீ சந்தோசமா இரு ராசாத்தி..” என அவர் இடுப்பைப் கட்டி கொண்டு தோளில் சாய்ந்து கொண்டாள் செல்லக்கிளி.
“இன்னிக்கு நிலம் ரெஜிஸ்டர் பண்ண மூணு மணிக்கு போறாகலாம்.. முடிச்சுட்டு இங்கன வரேன்னு சொன்னாக வேலு…இன்னும் சம்பந்தி அம்மா என்ன சொல்ராங்க தெரியலை…”, என்றார் மெதுவாக,
“ அய்யா..நான் ஊருக்கு போகட்டுமா.. எனக்கு ஏற்கனவே ரெண்டு நாள் லீவு ஆகி போச்சுது..அசைன்மெண்ட் அடுக்கி வைக்கணும்..போகட்டி மார்க் கொரஞ்சுரும்..”
எனவும் யோசனையாக,”சரி தான் .. அவசரமா ஏதும் வேணாம்..உனக்கு…இன்னிக்கி டிக்கெட் இருக்கான்னு கேக்குறேன்” என்றார்..
“ ஐயாம்மா…வரீங்களா…கோவிலுக்கு போய்ட்டு வருவோம்..”
“எங்கடா… இந்நேரத்துக்கு…”
திணறினாள்…”அதான்…இங்க தெருவுல இருக்குற… நம்ம சாமி கோவில்…” எனவும்..
“வனராசன் கோவிலுக்கா…” எனவும் முகம் சிவந்தது செல்லக்கிளிக்கு..
அதை பார்த்த முத்துநாச்சியார்க் கு சிரிப்பு வந்தது.
“..இப்போ உச்சி மத்தியானம் போக கூடாது..சாமி துடியா இருக்கும்… சாயங்காலம் அத்த வீட்டுல இருந்து வந்துட்டு போனதும் போலாம் ராசாத்தி.” எனவும்
‘ சரி ‘ என்று தலை அசைத்தவள், வெளியேற,
வெளியேறியவளை சூழ்ந்து கொண்ட மாமன் மக்கள், “ அத்தாச்சி….கடைசில…நீ உன் அத்தானையே கட்டிக்கிற போறியா….அதான் காலைல இருந்து உம்முன்னு இருந்தியா…” என காலை வாரிவிட, உதடு கடித்தவள், ஏதும் பேச வழியின்றி, யாரையுமே நிமிர்ந்து பார்க்க, வெட்கம் அணையிட…ஓடிச்சென்று தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
பின்னொடுவந்த தம்பி சரவணன்,” அக்கா…இவ்ளோ வருஷத்துல….நீ செஞ்சதில உருப்படியான காரியம்…அத்தானைக் கட்டிக்க சம்மதிச்சது..தான்…ஹைய்யா…எனக்கு மச்சானும்…அத்தானும் ஒருத்தரே…” என்றவிட்டு ‘ ஹே ஹே ‘ என்றவாறு கை உயர்த்தி இடுப்புவரை இறக்கி என ஆட்டம் போட..நண்டு சிண்டு எல்லோரும் ஓடி வந்து…தங்கு தக்கென்று குதித்தன…
அவர்களின் உற்சாகத்தில் மனம் துள்ள , சிரிப்பை, வெட்கத்தைக் காட்ட இயலாமல் கட்டிலில் குத்தங்காலிட்டு அமர்ந்து கொண்டு மடியில் முகம் புதைத்துக் கொண்டாள்.
உள்ளே வந்த சின்ன மாமா, அவளின் நிலை கண்டு சிரித்தவாறு, பிள்ளைகளை, வரவேற்பறைக்கு ஓட்டிச் சென்றார்..”வாங்க வாங்க டீ வீ ல எந்திரன் படம் போடுறாங்க…” என்றவாறு..
ஐந்து மணி ஆன பிறகும் , அழைப்பு ஏதும் வரவில்லை.
சொர்ணகிளிக்கும் ,ரெஜிஸ்திரேஷன்காக சிவகாசி போனவர்கள் இன்னமும் திரும்பவில்லை என்ற செயதி மட்டுமே தெரிந்திருந்தது.
‘ஊருக்கு கிளம்புவதாக ‘ செல்லக்கிளி செய்தி அனுப்ப,
‘இப்போது தான் வேலை முடிந்ததாகவும், சிவகாசியில் இருந்து வந்து கொண்டிருப்பதாகவும் ‘ பதில் வந்தது.
அப்படி என்றால் வீட்டுக்கு போய் திரும்ப ஒரு மணி நேரம் ஆகிவிடும் என்று கணக்கிட்டவள், தன் ஐயாம்மா விடம் கோவிலுக்கு போகலாம் என ,மகள் வீட்டில் இருந்து வருவார்கள் என்ற யோசனையில் இருந்தவர், “ நீ சரவணனை கூட்டிட்டு போய்ட்டு வந்துரு ராசாத்தி..இங்கன விருந்தாடிக இருக்காங்க இல்ல..அம்மைக்கு உதவி பண்ணனும்.. “ என்
சரியென்றவளாய் வெளியே வந்தவள், அனைவரும் ஒன்றாக விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்து, அதை கலைக்க மனம் வரதவளாய் , தனியே கிளம்பினாள், வனராஜனின் கோவிலுக்கு.
கல்லூரி சென்ற பிறகு, மிகவும் இழந்ததாக உணர்ந்த தன் இஷ்ட தெய்வத்தின் கோவிலுக்குள் ,மிகுந்த துள்ளலுடன் நுழைந்தன அவள் கால்கள்.
மூன்று வருடங்களுக்கு முன்பு நாம் பார்த்ததில் நிறைய மாற்றம். நுழைவு வாயில் மதில் சுவர் எழுப்ப பட்டு, கதவுகளுடன் கம்பீரமாய் இருந்தது. கம்பி கதவுகள், வலையடிக்கப்பட்டு ,சிறு விலங்குகள் உள்ளே நுழைய முடியாவண்ணம் சாற்றி வைக்கப்பட்டு இருந்தன. உள்ளே நிறைய பழமரங்கள், பூச்செடிகள் வளர்க்கப்பட்டு , நந்தவனம், சோலைவனம் போல் அடர்ந்து நின்றது. குளுமையான அந்த சூழலில் இருந்து சற்று தள்ளி மரத்தினடியில் இருந்த வனராஜனின் சந்நிதியில் எந்த மாற்றமும் இல்லை.
பலநாட்களுக்கு பிறகு தனக்கு பிரியமான ஒருவரை பார்க்க போகும் பாவனையில், மணியை ஒலிக்க செய்துவிட்டு, கடவுளின் அருகில் சென்றவள், வாளும் கேடயமும் தாங்கி நிற்கும் அழகை ரசித்தவளாய், கன்னத்தில் தப்பி கொண்டாள். எப்போதும் பூ, கல்கண்டு எடுத்து வருபவள், இன்று ஏதும் எடுத்துவரவில்லை. தலையில் கொட்டிக் கொண்டவள் சுற்றிப் பார்க்க,
நீண்ட நாட்களுக்கு பிறகுவந்ததால், அந்த இடமே ஏதோ புதுமையாக இருப்பது போல் அவளுக்குத் தோன்றியது. நந்தவனத்தில் சிறு பழமரங்களில் பறவைகளின் உற்சாக கூச்சல் கவனத்தை ஈர்க்க, அங்கே மலர்ந்திருந்த மலர்களைக் கண்டவள் , அதிலிருந்து இரு செம்பருத்திப்பூக்களை பறித்துக்கொண்டு திரும்ப, அவள் எதிரே கேள்விகள் பல கேட்கும் விழிகளுடன் நின்றுகொண்டு இருந்தது….வேறு யார்..பூங்காவனமே தான்.
அவள் வீட்டில் இருந்து கிளம்புவதைப் பார்த்தவன், யோசித்துவிட்டு அவளின் பின்னே வந்திருந்தான். அவனுக்கு அவளிடம் கேட்டேயாக வேண்டிய சில கேள்விகள் இருந்தன.
எப்போதும் அவனை பார்த்ததும் தோன்றும் பதட்டம் உருவாக மிரண்டு விழித்தாள். அந்த பார்வையிலே, பூங்காவனத்தின் காதல் மனம் அடிவாங்கியது.
எப்போதும் அவனைப் பார்த்தவுடன் ஓடுபவள், இப்போதும் ஓட சொல்லி கால்கள் சொல்ல, இல்லை பேசு.. என்று புத்தி சொல்லியது..கடைசி கடைசியாக பேசிவிடுவது நல்லது என்று அவளுக்கும் தோன்றியிருந்தது.
மிரண்ட பார்வை, கவனபார்வையாக மாற, விழி தட்டாது பார்ப்பவளை, பார்த்து பெருமூச்சு விட்டவன்.
“அப்போ உனக்கு ஒன்பது வயசு..நீயும் ஈஸ்வரியும் கோயிலுக்கு போயிருந்தீங்க, திடீர்னு மழை வந்திட, குடை எடுத்துட்டு போய் உங்களை கூட்டிட்டு வர சொல்லி எங்க ஆச்சி தொரத்தி விட்டதால்,மனசுக்குள்ள திட்டிக்கிட்டே உங்க ரெண்டு பேரை தேடி வந்தேன். அங்கே, கோவிலுக்குள் நின்னுட்டு இருந்த நீ, மழைல நனைஞ்சுட்டு வந்த ரெண்டு சின்ன பசங்களுக்கு ,நீ போட்டிருந்த, ஸ்கர்ட்ட கழட்டி துடைச்சு விட்டுட்டு இருந்த..பார்த்து சிரிப்பு வந்துச்சு..இந்தம்மா பெரிய அன்னை தெரேசா மாதிரி பண்றாளே னு…ஆனா அது என் மனசுல பதிஞ்சு போச்சுது போல…
அடுத்து உன்னை பார்க்க பார்க்க ஏனோ பிடிக்க ஆரம்பிச்சது…நீ என் தங்கைட்ட காட்டுற நட்பு, அவளுக்கு புரியாதது சொல்லி தர்ற உன் பொறுமை எல்லாமே பிடிக்க ஆரம்பிச்சது..அது தான் காதலா..அப்படி ன்னா… ஆமா.. நீ பத்து வயசா இருக்கும் போது எனக்கு பதினாலு வயசு..நான் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். நீ வளர வளர உன் மேலான என் பிரியமும் வளர ஆரம்பிச்சது..உன் அமைதி, யாரையும் நிமிர்ந்து பார்க்காத உன் பார்வை, உன் குடும்பத்து மேல நீ வச்சுருக்குற பாசம் எல்லாமே…எல்லாமே நீ என் வாழ்க்கை துணையா வந்தா நல்லருக்கும் னு தோண வச்சது..அதைத்தான் உன்கிட்ட நான் வெளிப்படுத்துனேன்.. ..
இப்போ சென்னைக்கு அம்மா சிகிச்சைக்கு வந்து இருந்த போது நீ எங்க அம்மா மேல காட்டுன அக்கறையும் பாசமும் பார்த்து, என்னை பிடிச்சதால தான் அவுங்ககிட்ட்யும் பாசமா இருக்க னு நினைச்சேன்..அதுனால தான் கல்யாணம் பண்ணியே தீரனும் னு எங்க வீட்ல பேச ஆரம்பிச்சதும், உன் பேரை சொன்னேன்.
உங்க வீட்டிலையும் சம்மதிச்சதும், உனக்கு பிடிச்சு தான் நமக்கான கல்யாண ஏற்பாடு நடந்துச்சா.இந்த நிச்சயம் உனக்கு சம்மதம் தானா னு…அதை தெளிவா கேக்கலாம்னு உன் ஹாஸ்டல் கு வந்தேன். நீ ப்ரொஜெக்ட்க்கு சாமான் வாங்க போயிருக்குறதா உன் பிரின்ட் திவ்யா சொன்னாங்க.. கால் பண்ணேன்….உன் போன் சுவிட்ச் ஆப் னே வந்தது….ரொம்ப நேரம் வெய்ட் பண்ணிட்டு, ஊருக்கு கிளம்பி வரவேண்டியதால அங்கே இருந்து வந்துட்டேன்.
இப்போ இந்த நிச்சயத்தை நிறுத்திட்டு, உங்க அத்தை வீட்டுல உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்க போறதா சொல்ராங்க..உனக்கு அதுல சம்மதமா..அவுங்க வீட்டு ஆளுங்களை பார்த்தாலே நீ பயப்படுவனு ஈஸ்வரி சொல்லிருக்கா..உன் அத்தான் அத்தை மட்டும் தான் பேசுவங்கன்னு சொல்லிருக்கா..
வேதநாயகி அம்மா..சௌந்தரராஜன் பத்தி ஊருக்கே தெரியும்…அங்க போனா நீ சந்தோஷமா இருப்பியா..
உன்னை இன்னொரு சொர்ணகிளியாக்கி வைக்க மட்டாங்கன்னு என்ன நிச்சயம்…அந்த வீட்டு ஆளுங்களோட ஒப்பிட்டா என் குடும்பம்..நூறு மடங்கு உன்னை நல்லா பார்த்துப்போம்..என்னை பத்தி உனக்கு தெரியும்..
உன் பார்வை பார்த்து குணம் பார்த்து நடக்குறவன் நான்..
சொல்லு …உனக்கு இந்த நிச்சயம் நிறுத்துனது, உடன்பாடு தானா….
உனக்கு பிடிச்சு தான் உன் அத்தை வீட்டு ஆளுங்க பேசுணங்களா..”…என் பலவாறு கேட்க, செல்லகிளியின் வாயிலிருந்து வார்த்தை வெளிவர தகராறு செய்தது.
வாயிலுக்கு முதுகு கட்டி நின்று இருந்தவன், ஒரு அடி முன்னே வைத்து அவளை நெருங்கி, “அப்படி இல்லைனா சொல்லு, யாரை எதிர்த்துனாலும் நிச்சயம் என்ன கல்யாணமே நான் நடத்தி காட்டுறேன்.
எனக்கு யாரை பார்த்தும் பயம் கிடையாது..
உனக்கு பிடிச்ச சாமி..இவர் முன்னாடி நான் இந்த நிச்சயதார்த்த மோதிரம் போடுறேன்..நான் நிச்சயம் பண்றேன் இப்போவே இங்கேயே..” என்றவன்..தன் பையிலிருந்து நகைப் பெட்டியை எடுத்தான்.
அதை பார்த்து செல்லக்கிளி அரண்டு போனாள்.
அவனுக்கு பின்னால் கைதட்டும் சத்தம் கேட்டது.
பூங்காவனம் திரும்பி பார்க்க, அவன் பாதையை விட்டு விலகியதில் பார்வைக்கு பிரசன்னமானான், வனராஜன்…
கடவுள் வனராஜன் இல்லைங்க… நம்ம கதைநாயகன் வனராஜன்.
“ ரொம்ப நல்ல பேசுனீங்க , என்ன!!! இவ்ளோ பேசுற நீங்க அவ் மனசுல நீங்க இல்லை னு இன்னும் புரிஞ்சுக்க மாட்டேங்குறியுங்கன்னு தான் வருத்தம்..”.என்றவாறு அவனைத் தாண்டி அவள் அருகில் சென்றான்.
தன் அருகில் வந்து நின்ற வனராஜனை பார்த்ததும் நிம்மதி பெருக கண்கள் லேசாய்க் கலங்க, மெதுவாக அவனின் இடது கரத்தை தன் இரு கரங்களால் வளைத்து பிடித்துக் கொண்டாள் செல்லக்கிளி. அதனை பார்த்து பூங்காவனத்தின் மனம் நம்ப இயலாமல் திகைத்தது.
“ இப்போ என்ன ப்ரதர்..செல்லக்கிளிக்கு யாரை பிடிச்சிருக்கு..அதானே உங்களுக்கு தெரியணும்.”.என்றவன், அவளை குனிந்து ஒரு பார்வை பார்த்தவன், தன் கழுத்தில் இருந்த VR என்ற எழுத்துக்கள் மின்னும் தன் சங்கிலியைக் கழட்டினான்.
சற்றே யோசித்தவன், அவளின் வலக்கரம் பற்றி பூங்காவணத்தை தாண்டி அழைத்து சென்றவன், சாமி சன்னதி முன் நின்று,
அவள் பக்கமாய் திரும்பி அவள் கழுத்தில் அணிவித்தான்.
தான் மோதிரம் எடுத்த போது பதறி பார்த்தவள் , இப்போது அந்த பொன்னகையை, புன்னகையோடு வாங்கி கொளவதை ப் பார்த்த பூங்காவனத்தின் காதல், அந்த இடத்திலேயே மடிந்து மரணித்தது..
கண்களில் வலி எழ, அவர்களைப் பார்த்தவன், சமாளித்தவனாய், புன்னகை சிந்தி, வனராஜன்..கடவுள் வனராஜனின் அருகே சென்று தன் கையில் இருந்த மோதிரத்தை அங்கிருந்த உண்டியலில் குனிந்து போட்டுவிட்டு..கைகளை தூசு தட்டுவது போல் தட்டிக் கொண்டான்.
“ வெல் ப்ரோ..கல்யாணம் பண்றதுல காட்டுற அக்கறை, செல்லகிளியை சந்தோஷமா வாழவைக்குறதுலயும் காட்டுவீங்கன்னு நினைக்குறேன்….நம்புறேன்…அவளை விரும்புறவனா இருந்தேன்..இனி நான் அவளுக்கு ஒரு நலம் விரும்பி…உங்க வீட்டு ஆளுங்களாள அவ கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் வேலராஜன் வருவரோ இல்லாயோ பூங்காவனம் வருவான்..” எனவும் சிரித்த வனராஜன்
“ ஞாபகம் வச்சுடுறேன் ப்ரோ ..” எனவும்….
இடது பக்கமாய் உதடுகள் வளைய புன்னகை சிந்தியவன், செல்லக்கிளியை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளி செல்லும் வழி நோக்கி திரும்பினான்..வேகமாக சென்று கதவு திறந்து வெளியேறினான்.
மாலை மயங்க தொடங்க, அவ்விடமே மஞ்சள் கலந்த ஆரஞ்சு ஒளியில் நிறைய த் தொடங்கியது..
சன்னதியை விட்டு வெளியேறி, வந்த வனராஜன், பூங்காவனம் வெளியேறி செல்வதை பார்த்துக்கொண்டிருந்தவன், “ நல்லவன் தான் போல இல்ல..” எனவும் ,ஆமாம் எனபது போல் தலை உருட்டினாள் செல்லக்கிளி.
நிமிர்ந்து பார்த்தவன், கண்களில் கோபம் குடியேறியது…அதைப் காட்டதவனாய்….சன்னதியை விட்டு வெளிய வந்தவன் , அங்கே கொய்யாமரத்தில் அமர்ந்து கொஞ்சிக்கொண்டிருந்த கிளிகளை ப் பார்த்தான்.
“ எல்லோரும் தேடுவங்க வாங்க வீட்டுக்கு போகலாம்.
என செல்லக்கிளி சொல்லவும் இடுப்பில் கை வைத்து திரும்பினான்.
“ஏண்டி அவன் அவ்ளோ கேக்குறான்.. ஆமா என் அத்தானை காதலிக்குறேன்..உன்னை கல்யாணம் பண்ண மாட்டேன்னு வாயை திறந்து சொல்லறதுக்கு என்ன.!! இப்போ தான் கிளிக்குஞ்சு மாதிரி வாயைத் திறந்து திறந்து மூடுற…”
எனவும் அவளுக்கு கோபம் வந்துவிட்டது.
“ ஆமா… ஒரு டமாரம் எடுத்து கொடுங்க… தட்டிக்கிட்டே ஊர் முழுக்க போய் சொல்லிட்டு வரேன்… நான் இவுங்களை காதலிக்குறேன்.. அப்படின்னு..”
என்று மூச்சு வாங்க சொல்ல..
“ அட இது கூட நல்லாருக்கே “ என்றவாறு அருகில் வர …..கோபத்தில் இருந்தவள், சட்டென்று திரும்பி நடக்க முயல, இருகைகளால் அவளின் மெல்லிடையை சுற்றி வளைத்தவன், தன்னை நோக்கி இழுக்க, அவனின் லீலைகள் வெளியே தெரியா வண்ணம் இருள் பரவ ஆரம்பித்தது..
அன்று போலவே முழங்கைகளால் வயிற்றில் குத்த முயல, முதுகை வளைத்து அதை முடியாதவாறு செய்த்வன், கைகளையும் சேர்த்துபிடித்து வளைத்து இறுக்கி அணைத்தான். தான் அணிவித்த சங்கிலி மார்பில் ஊஞ்சலாட நின்றவளின் மேல் உரிமையுணர்வு கரைகடக்க, குனிந்து சங்கிலி தொட்டு கொண்டிருந்த கழுத்தில் இதழ் பதித்தான். கூசியதில் அவள் தலையை அசைத்ததில், அவனின் இதழ்களுக்கு, அவளின் செவி மடல்கள் தட்டுப்பட..அங்கும் இதழ்குவித்து முத்தமிட்டான்..
மின்சாரம் தாக்கியவள் போல் அதிர்ந்த செல்லக்கிளி அசையாமல் இருக்க, செவி மடலில் இருந்து முன்னேறி, செழுமையான கன்னங்களை அடைந்தன அவனின் வெப்பமான உதடுகள்..அவனின்வெப்ப மூச்சு கன்னங்களை சூடேற செய்ததா…. முத்தம் சூடேற செய்கிறதா…வெட்க்கத்தினால் பாய்ந்த ரத்தத்தினாலா…. என விளங்காமல் மயங்கி நின்றாள், செல்லக்கிளி..
அருகிலிருந்த மரக்கிளையில் கீ கீ என கத்தியவாறு இருந்த கிள்ளைகள் இவர்களைக் கண்டோ என்னவோ, சப்தமிடுவதை நிறுத்தி, அலகோடு அலகுரசி கொஞ்சிக் கொண்டன…
திடுமென வீசிய குளிர் காற்றினால், சுய உணர்வு பெற்றவள், மெதுவாக கண் மலர்த்தி, தன்னவனைப் பார்க்க, அவனும் அவளைத் தான் பார்த்து கொண்டிருந்தான்..
அவன் கைகளை விலக்க முயன்றவளாய்,
“ கோயில்ல வச்சு, பொது இடத்துல வச்சு என்ன இதெல்லாம் …”என் கடிய,
“கோயில்ல எங்க இருக்குறோம்..நந்தவனத்தில் தானே..அந்த பறவைகள் செய்யுறது நாம பண்ண கூடாதா..” என வியாக்கியானம் பேச,
“போதும் விடுங்க , நான் யாருக்கிட்டயும் சொல்லாம வந்துட்டேன்.. தேடுவாங்க…”
“ அதெல்லாம் ஆச்சிக்கு தெரிஞ்சுதான் இருக்கு..இங்க தான் இருப்பேன்னு கூட்டிட்டு வர சொன்னதே அவுக தான்..நானும் சரவணனும் வந்தோம்..உன் மாமா பசங்களும் கூட வந்தாங்க.. எல்லோருக்கும் அங்கே இருக்க கடைல ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து உக்கார வச்சுட்டு தான் வந்தேன்..அதுனால..யாரும் வர மாட்டாங்களே… காவல் பலம்மா இருக்கு…..
நான் கொடுத்ததெல்லாம் வாங்கிக்கிட்டு நீ ஒண்ணுமே கொடுக்கலயே.. கொடு.. உன்னை விட்டுடுறேன்.. போலாம் ..”
பட்டென்று ஒரு அடி கொடுத்தவள், “ படிக்குற வயசுல இதெல்லாம் தேவையா….”
“ நான் படிச்சு முடிச்சு மூணு வருஷம் ஆச்சு…”..
இவன் இப்படியே தான் பேசுவான் என்று புரிந்தவளாய், நறுக்கென்று கிள்ளினாள்.
ஆவ் என்று கை விலக்கியதும்,
விலகி ஓடியவள், திரும்பி
அவனைப் பார்த்து… ஒருவிரல் நீட்டி வக்களம் காட்டி விட்டு , சிரித்தவாறு ஓடினாள்…..
சிரித்தவாறே தானும் அவளை, தன்னவளை பின்தொடர்ந்தான் வனராஜன்.
குட்டிகளின் பட்டாளம் புடை சூழ இருவரும் வீட்டுக்குள் நுழைய, அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தந்தையைப் பார்த்துவிட்டு, கண்களால் தேட செல்லகிளியின் அத்தைகளோடு பேசிக்கொண்டு இருந்த அன்னை கண்ணில் பட்டார்..
வனராஜனின் கண்கள் யோசனையில் சுருங்கின.….
*********************
சேதி 25
*********
சொந்தங்கள் கூடி நிற்கும் வீட்டில், தன் வீட்டு மக்களின் முகம் தேடி அலைந்தன வனராஜனின் விழிகள்..
அப்போது வாயிலில் வாகனம் வந்து நின்று கதவு திறக்கும் ஒலி கேட்க, அனைவரும் திரும்பி பார்த்தனர்.
வேதநாயகியும் கோவிந்தராஜனும் முன்னே வர வனராஜனின் அக்கா வேதகௌரியும் அவளின் கணவர் சிவப்ரசாத் மற்றும் குழந்தைகள் இருவரும் பின்னே வந்தனர்.
அனைவரும் வரவேற்கும் விதமாக எழுந்துநின்று கரம்குவிக்க, மிதப்பாக அனைவரையும் பார்த்தவாறு வந்த வேதநாயகி, பேரனின் பார்வை தன்னைத் துளையிடுவதை உணர்ந்ததும், சற்றே புன்னகை பூசிக்கொண்டார்..
அவரின் முக மாறுதல் கண்ட வனராஜனின் முகத்தில் திருப்தி புன்னகை எட்டிப் பார்த்தது..
யார் சென்று கிளப்பினால், தன் க்ராண்ட்மா வருவார்கள் என்று ,தன் அக்காவிடம் அந்தபபொறுப்பை ஒப்படைத்தது வேலை செய்துவிட்டது என்ற வெற்றிக் புன்னகையும் அதில் சேர்ந்து கொண்டது..
வேகமாக ஓடி வந்த வேதகௌரியின் முதல் மகன், தன் மாமனின் கால்களை கட்டி கொள்ள, இரண்டு வயது கூடியிருந்ததால் , மாமனை அடையாளம் தெரிந்த இரண்டாவது மகனும் போட்டிக்கு வந்தான். அடிக்கடி அலைபேசியில் காணொளி அழைப்பின் மூலம் பழக்கமாகி இருந்த மாமனை இருவரும் ஆசையோடு நாடியதை பார்த்த வேதகௌரிக்கு தம் மக்களின் பாசம் கண்டு ,நெஞ்சம் சந்தோஷத்தில் பூரித்தது.
இருவரையும் ஆசையோடும் அன்போடும் கைகளில் ஏந்திக் கொண்டவன், தன் அக்கா கணவரான மச்சான் சிவபிரசாத்தை ப் பார்த்து புன்முறுவல் செய்து “வாங்க மச்சான்..” என்று அழைக்கத் தவற வில்லை..அக்காவை அழைக்கலைனாலும் மச்சானை அழைக்கணுமே..
தன் மகளைப் பார்த்ததும் வேகமாக வந்த சொர்ணக்கிளி , மாமியாரின் அருகில் சென்று நின்று கொள்ள, அவரை அழைத்து காரில் இருந்து பூ, பழ தட்டுகளை எடுத்து வர செய்தார் வேதநாயகி.
.தன் மருமக்களை தாங்கியவாறு இருந்த வனராஜன் தன் அக்காவை அருகழைத்து, தன் காரில் இருந்து ஒரு பையை எடுத்து வர செய்தான்..
அதில் இருந்தவற்றை வெளியே எடுத்த வேதகௌரி அசந்தே போனாள்..பொன்மஞ்சள் நிறத்தில் அவ்வளவு அழகான பட்டு புடவை, அதனோடு இருந்த நகைப் பெட்டிகளில் பொன்நகைகள். கழுத்தணி, காதணி ,மோதிரம், வளையல்கள் எல்லாம் அணியாக இணையாக இருந்தன..பார்த்த வேதநாயகியிலிருந்து அனைவருக்கும் வனராஜனுக்கு செல்லகிளியின் மீதிருந்த அன்பின் அளவு புரிவதாய் இருக்க, அனைவரும் அசந்தும் மகிழ்ந்தும் அவரவர் குண இயல்புக்கு ஏற்றவாறு அதனை எதிர் கொண்டனர்.
வேதநாயகியின் ஆணைப்படி அனைத்தையும் தட்டுகளில் வைத்து அடுக்கி வரவேற்பறையில் நடுவில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தின் மேல் வைத்தவர்கள், செல்லகிளியைப் பெண்கேட்பதை முறைப்படி செய்தனர். வனராஜனின் குடும்ப பெரியவரான கோவிந்தராஜன், செல்லகிளியின் குடும்ப பெரியவரான மயில்வாகனத்திடம் அவர்கள் பேத்தியை தருமாறு கேட்க, அவரும் சந்தோஷத்துடன் சம்மதிக்க, இருவரும் வெற்றிலை பாக்கு வைத்த தட்டுகளை மாற்றிக் கொண்டனர்.
செல்லகிளியை அழைத்து தட்டில் புதுசேலை வைத்து வேதநாயகியும்கோவிந்தராஜன் சொர்ணகிளி சௌந்தரராஜன் இணைந்து கொடுக்க, அதை பெற்றுக்கொண்ட செல்லக்கிளி, அதை மாற்றிக் கொண்டு வர அறைக்குள் செல்ல, நாத்தனார் சேலை கட்டவேண்டும் என்ற முறைக்கு வேதகௌரியும் உடன் சென்றாள்… செல்லக்கிளியின் அத்தைகள் உதவியுடன் வேதகௌரி செல்லக்கிளிக்கு புடவை அணிவித்து, தலை,முக அலங்காரம் செய்து வெளியே அழைத்து வந்தாள்.
பொன்னில் செய்த தேர் , மின்னொளி அலங்காரத்தில் அசைந்தாடி வருவது போல் வந்த செல்லகிளியை கண்டு வேதநாயகியே அசந்து போய் பார்த்தார் என்றால், வனராஜனின் நிலை என்ன ஆகும்…
எல்லோரும் தன்னை கவனிப்பார்கள் என்று புரிந்தாலும் பெருமைப் புன்னகை இதழ்களில் மின்ன, ஒரு கையை நாற்காலியின் கைப்பிடி யில் தாங்கியவாறு வைத்து, மற்றோரு கை முழங்கை ஊன்றி, மகராஜனின் கம்பீரத்தில் அமர்ந்திருந்தவனாய், கண்களால் அவளழகை கபளீகரம் செய்தவாறு, அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் வனராஜன்.
மனையில் அமர்த்தப்பட்ட அவளுக்கு வேதநாயகியில் ஆரம்பித்து வனராஜன் வீட்டு பெண்கள் பூ வைத்து விட,சொர்ணக்கிளி கழுத்தாரத்தையும், வளையல்களையும் அணிவித்தார்.
மோதிரம் அணிவிக்க வனராஜனை அழைக்க, அப்புறம் என்று சைகை செய்துவிட்டு அழுத்தமாய் அமர்ந்து கொண்டான்…’ ஆஹா ஏதோ பிளான் போடுறாக போலவே ‘ என செல்லக்கிளி மிரண்டுபோய் பார்த்து விட்டு, வெளியே தெரியாதவாறு, சட்டென்று குனிந்து கொண்டாள்.
பெரியவர்களால், நிச்சயதார்த்தம் உறுதி செய்து கொள்ளும் பத்தரிக்கை எழுதப்பட்டது, ஏற்கனவே விழாவிற்காக பக்கத்தில் இருந்த சிறுமண்டபத்தில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க அனைவரும் அங்கே செல்ல ஆரம்பித்தனர்.
வனராஜன், வேல்ராஜனிடம் சென்று,
“மாமா, செல்லம்மா இன்னிக்கு பஸ்லயே ஊருக்கு போறா தானே, எத்தனை மணிக்கு!!” என்று கேட்க, அப்போது தான் அது நினைவு வந்தவராய்,
“ஆமா ஒன்பதரைக்கு…” என்று விட்டு மணி பார்க்க எட்டை நெருங்கி கொண்டிருந்தது..
“ சாப்பிட்டு கிளம்ப சொல்லுங்க …நானே கொண்டு பஸ் ஏத்தி விட்டுருறேன்…” என்,யோசித்தவராய் ,சிரித்தவாறே, சரி என்று தலை அசைத்துவிட்டு மனைவியை கூப்பிட்டு விவரம் சொன்னார். கற்பகவள்ளி ,
“..நிச்சயம் பொண்ண பொண்ணை உடனே வா ஊருக்கு அனுப்ப….திருஷ்டி கழிக்கணும்… ரெண்டு நாள் லீவு போடட்டும்…” என
“அத்த…. அவ படிப்பு எதனாலும் பாதிக்க கூடாது,…”, என்று அழுத்தமான குரலில் சொன்னவன்,” கொஞ்சம் சீக்கிரம் கிளம்ப சொல்றீங்களா…” என
“.சரி …”என்றுவிட்டு வீட்டினுள் போனவர் கூடவே ,பின்னே சென்றான்.
அங்கே தன் பெரிய அத்தையின் காவலில் அமர்ந்திருந்தவளை ,வள்ளி சாப்பிட அழைத்ததும் புடவை, நகையோடு வெளியே வரமாட்டேன் என்று செல்லக்கிளி சிறுக்குழந்தையாய் அடம் செய்ய , “ வர வர உனக்கு செல்லம் சாஸ்தியா போச்சுது….என்னமோ பண்ணு…. அண்ணி ! இவளை கிளப்புங்க.. நான் பந்தில எங்க மதினி வீடு ஆளுகளை பார்க்கணும்..” என்று விட்டு விரைந்தார்.
“சரி நா போய் சாப்பாடு இங்க எடுத்து வரேன்..” என அத்தை கிளம்ப,
“சித்தி….” என பாசமாய் கூப்பிட்டு நிறுத்தியவன்,
“நீங்க இன்னும் சாப்பிடலையா” என் கேட்க “ பரவால்ல தம்பி..” என்,” நீங்க… அடுத்து ஊருக்கு கிளம்பனுமில்ல… சாப்பிட்டு…. எடுத்துட்டு வாங்க..”, என்,
புரிந்து கொண்டவராய் சிரித்தவாறே,”…பத்து நிமிஷத்துல வந்துருவேன் தம்பி….”, என்றுவிட்டு, செல்லத்தையும் பார்த்து சிரித்துவிட்டு கிளம்பினார்.
“ஊ ஃப்ப்ப்…”, இந்த சித்தி விவரம் தான்… என்று எண்ணியவன் ,சிரித்தவாறே, திரும்பி,
பின் மெதுவாக அறைக்குள் பார்க்க செல்லக்கிளி மாற்று உடை எடுத்து கொண்டிருப்பதை கவனித்து
அறைக்குள் நுழைந்தான்.
அவனை பார்த்து திடுக்கிட்டவள் அவனுக்கு பின்னே பார்க்க யாரையும் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
“அத்தை…. அத்தை…” என மெதுவாய் அழைக்க,
“அவுங்க சாப்பிட்டு… உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வருவாங்க..அது வரை நான் தான் உனக்கு துணைக்கு….” என அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தான்.
செல்லக்கிளியின் கைகால்கள் நடுங்க தொடங்க,”. வேணாம்… நீங்க போங்க… நான் ஊருக்கு கிளம்ப ட்ரெஸ் மாத்தனும்..பை அடுக்கணும்.. கிளம்புங்க..” என் அவனை துரத்துவதிலேயே இருக்க,
மயக்கும் புன்னகையுடன், அவளழகை தலைமுதல் கால் வரை பார்த்தவாறு இருந்தவன், தலை அசைத்து, ஒரு கையை நீட்டி,
“பக்கத்துல வா…”, என்
மிரண்டு மறுப்பாய் தலை அசைத்தாள்
“ரொம்ப கற்பனை பண்ணிக்காத…இங்க வா..இல்ல… கைய மட்டும் நீட்டு..” என
அவள் அதற்கும் அமைதியாய் நிற்க ….அவள் அருகில் சென்றவன் , தன் பேண்ட் பாக்கட்டில் இருந்து சிறிய நகைப்பெட்டியை எடுத்தவன் ,மெதுவாய் திறந்து அவளுக்கு கட்டினான்.
பெட்டி
உள்ளே பதிக்கப் பட்டிருந்த சிறு LED ஒளிரத் தொடங்க, அதன் உள்ளே ஒளிர்ந்தது,வைரங்கள் பதிக்கப் பெற்ற அழகிய மோதிரம்..அவள் அணிந்திருந்த பொன்மஞ்சள் நகைகள் போல் இல்லாது புதிய மாதிரியாக இருந்தது. ஆச்சரியமாய் அதைப் பார்த்தவளின் முன் இடக்கரத்தை நீட்ட புன்னகையுடன் தன் கரத்தனை அவன் கைகளில் ஒப்புவித்தாள்.
ஆண்மை மிளிரும் வலிய விரல்களால், அல்லி தண்டேன குளிர்ந்து கிடந்த மெல்லிய விரல்களைப் பற்றியவன் தன் கையில் இருந்த மோதிரத்தை அணிவித்தான்.
அவளின் விரல்களுக்கு, சற்று பெரிய அளவாக இருந்த அதை பார்த்து, அவனின் முகம் சற்றே வாட்டமுற்றது.
தன் கையைத் திருப்பி பார்த்தவள், அவன் முகத்தை கவனித்து,
“ கொஞ்ச நாள் ஆனா சரியாகிடும்..நான் இன்னும் வளருவேன்ல…”,என்று சிரித்தவாறு சொன்னாள்… முன்னும் பின்னும் நகர்த்தி அழகு பார்த்தவள்,..அப்போது தான் கவனித்தாள் அது முன்னாள் பார்க்க V எனும் எழுத்து மட்டும் தெரிய அதன் முன்னே C எனும் எழுத்தும்,அதனோடு ஒட்டி இணைந்து இருந்தது. கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன,
“ரொம்ப நல்லாருக்கு.. கண்ணத்தான்..” என தன்னை மறந்து சொன்னவளைப் பார்த்தவனின் பார்வையில் மையல் ஏற அவள் புறமாய் நெருங்கினான்.
அருகில் நெருங்கியவனை நிமிர்ந்து பார்த்தவளின் பார்வையில் மிரட்சி இல்லை…. காதலும் சொந்தமும் இருந்தது.
அவளை நெருங்கியவனை, இந்த பார்வையால் வசீகரிக்க, அவளின் நம்பிக்கை அவனை யோசிக்க வைக்க, அசையாமல் நின்றான்.
பின் ஏதோ ஞாபகம் வந்தவனாய் நகர்ந்து ,”நீ ட்ரெஸ் மாத்திட்டு வர்றியா , கொஞ்சம் பேசணும்..” என்றுவிட்டு
வெளியேற போனவனை ,”கண்ணத்தான்…..” எனும் குரல் நகரவிடாமல் செய்தது
“இந்த செயின்..” என்றதும் திரும்பி பார்த்தவன், அவள் காட்டிய இடத்தைக் கண்டு, திரும்ப அவஸ்தையுடன், கண்களை மூடிக்கொண்டு, “ அது உன்கிட்டயே இருக்கட்டும்..”
என்றுவிட்டு நகர போக, “ உங்க வீட்ல கேக்க மாட்டாங்களா..அதுமில்லாம எங்க வீட்ல யாராவது பார்த்த என்ன நினைப்பாங்க….” என்று அதி முக்கியசந்தேகத்தை கேட்க,
அவனின் கட்டுக்களை உடைக்க, காதல் தயாராக ஆரம்பிக்க, “வெளிய வா…சொல்றேன்….” என்று வார்த்தைகளை கடித்து துப்பியவனாய் ,வெளியேறி வரவேற்பறை சோபாவில் அமர்ந்து கொண்டவன்..
‘பூஊஊ…..என்ன பாடு படுத்துரா… ‘ என்று புலம்பிக் கொண்டவன், அங்கே மேஜையின் மேல் இருந்த குளிர்பானபாட்டிலை எடுத்து க் குடித்து , சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவள் அறை க் கதவு திறந்த ஒலி கேட்டு திரும்பி பார்க்க,
திரும்ப மூச்சு திணறல் ஆரம்பித்தது,
கல்லூரியில் பாடுவதற்கு என்று அவள் அணிய அவன் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பட்டு சுடிதார் அணிந்து, இளம்சிவப்பு மேல்துணியை தோளில் இட்டு சரி செய்த்தவாறே வந்தது அவனின் பட்டுக்கிளி….’இவை இன்னிக்கு நம்மை ஒரு வழி பண்ண போறாளா….நாம இவள ஒரு வழி பண்ண போறோமா ….தெரியலையே…..’ என்று எண்ணியவாறு,
இடுப்பில் ஒரு கை வைத்து, மற்றோரு கையால் நெற்றியை தடவியவன், “ஒரு நிமிஷம்” என்று விட்டு, அங்கே ஓரமாக வைத்திருந்த தன் மடிக்கணினி பையை எடுத்து, ஒரு வரை படத்தையும், மடிகணினியையும் வெளியே எடுத்தவன்,அங்கிருந்த சிறு மேசையில் வைத்துவிட்டு, கணினியை இயக்கினான்,
அவளை சோபாவில் அமர சொல்லிவிட்டு, வரைபடத்தை பிரித்து கட்டியவன், ஒரு இடத்தை சுட்டி காட்டி,”இங்கே தான்… நம்ம பேக்டரி கட்ட போறோம்…”, என், அதை எட்டி பார்த்தவள், பரிதாபமாய், சரி என்று தலை அசைத்தாள்.
பின் மடிகணினியை அவள் புறமாய் திருப்பி வைத்தவன்,
அதில் குறிப்பிட்ட போல்டர் ஐ த் திறந்துவிட்டு , இது தான் பேக்டரி ப்ளூ பிரிண்ட்…இதெல்லாம் நாம ஜெர்மன்ல ஆர்டர் பண்ண வேண்டிய மசினேரிஸ்…என் ம்ம்ம்ம் என்றவள், மெதுவாய் கொட்டாவி விட, தலையில் வலிக்காமல் கொட்டியவன், என்ன கொட்டாவி விடுற….நாளைக்கு வேலை நடக்கும் போது நீயேயும் தான் பார்க்கணும் இதை..
நம்ம பேக்டரி பேரு என்ன தெரியுமா V. C. பார்மாஸ்…. என, விழிகளை விருந்து, மலங்க மலங்க பார்த்தது அவனின் செல்லக்கிளி…
திரும்பவும் அவனிற்கு சோதனை ஆரம்பமாவதை உணர்ந்தவன், குளிர்பான பாட்டிலை த் தேட, அவனைக் காப்பாற்றவென்றே வந்தார் செல்லகிளியின் அத்தை,உணவுடன்..
வந்தவர், மீசையின் மேல் பரத்தப் பட்டிருந்த வரைப்படத்தையும் , மடிக்கணினி யில் தெரிந்த, இயந்திரங்களின் படங்களையும் பார்த்து,’ ம்க்கும்…இதுக்கு தான் என்னை ரொம்ப புத்திசாலிதனமா வெளிய அனுப்பிசீன்களா தம்பி….நான் உங்களை… என்ணவோ நினைச்சேன்…’ என்று பெருமூச்சு விட்டவராய், “ நீங்களும் சாப்பிடுறீங்களை தம்பி சேர்த்துதான் கொண்டு வந்திருக்கேன் …”என்
“ க்ராண்ட்மா…டாட்..அக்கா வீட்ல எல்லாரும் சாப்பிடுறாங்களா”..என்றவாறு கை கழுவ சென்றான்…
“சாப்பிட்டுட்டு இருக்காங்க தம்பி …”
என்றதும்,” சரி சித்தி, தேங்க்ஸ்…” என்றவன் தானும் செல்லக்கிளியுடன் இணைந்து அமர்ந்தாலும், வேகமாக சாப்பிட்டுவிட்டு தாய் தந்தை நோக்கி சென்றான்.
அவர்களும் சாப்பிட்டுவிட்டு இங்கே வீடு நோக்கி வர,விடை கொடுக்க வேலராஜன் கற்பக வள்ளியும் இணைந்து வந்து கொண்டிருந்தனர்.
வந்து மருமகளிடம், கன்னம் வழித்து ,நெற்றியில் முத்தமிட்டு விடை பெற்றி சொர்ணக்கிளிஇடம் மெதுவாக,தன் அவளை பஸ் ஏற்றிவிட்டுவிட்டு வருவதாக சொல்ல ,கணவரை திரும்பி பார்த்தவர், அவர் சிரித்தவாறு தலை அசைக்கவும், தானும் முறுவலித்துவிட்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
அனைவரையும் பார்த்து சிரிப்பவன் தன்னிடம் மட்டும் பாராமுகமாக இருப்பதைப் பார்த்து வேதநாயகி யின் முகம் சுருங்கியது.
வணக்கம் தெரிவித்து விடைகொடுத்த வேலராஜன், மயில்வாகனைத்தைப் பார்த்து, எப்போதும் அமர்த்தலாய் தலை அசைப்பவர், இன்று அவரும் கரம்குவிக்கவும், கற்பகவள்ளிக்கு தான் கனவு ஏதும் காண்கிறோமா என்று சந்தேகம் வர கண்களை அழுந்த தேய்த்து விட்டுக் கொண்டார்.
“சரி கிளம்பு நேரமாகுது…” என் விரட்டியவனைப் பார்த்து, “ எட்டே முக்கால் தான் ஆகுது…இது சென்னையில்ல… அஞ்சு நிமிஷம் கூட ஆகாது…அந்த இடத்துக்கு போக…” என் பல்லைக் கடித்தவாறு மெதுவாய் சொன்னவளிடம்,
“ கிளம்பு…..” என்று ஒற்றை வர்த்தையிலேயே நின்றான்..
சரிடா..நீயும் மாமா.. ஆச்சி, அயம்மாட்ட எல்லாம் சொல்லிட்டு கிளம்பு என் வேலராஜன் சொல்ல,
சரி என்று தலை அசைத்தவள்,அனைவரிடமும் விடை பெற்று, தன் பயணப்பையை எடுத்து வர அதை வாங்கி பின் இருக்கையில் வைத்தவன், முன்பக்க இருக்கையில் அவளை அமர பணித்து விட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.
அனைவரும் கூடி நின்று கை அசைத்து வழியனுப்ப,
ராஜனும் ராணியும் போல் கம்பீரமும் அழகுமாய் இணைத்து செல்லும் தன் பேரன் பேத்தியைக் கண்ட முத்துநாச்சியார, ,கைகளை அவர்களை பார்த்து சுழற்றி தன் நெற்றியின் இருமருங்கில் சொடக்கிட்டு,
‘என் கண்ணே பட்டிருக்கும் போலவே..
முதல்ல திருஷ்டி கழிக்கணும் எல்லோருக்கும்..’.என்று எண்ணியவராய் வீட்டினுள் சென்றார்.
“அரைமணி நேரம் முன்ன அங்க போய் என்ன செய்ய…. சும்மா அவசர படுத்துறீங்க…பஸ் ஸ்டாண்ட் கு இல்ல…அந்த மாரியம்மன் கோவில் பின்னாடி இருக்குற ரோடு ல தான் பஸ் வரும்…அங்கே போய் ஏறனும்..இந்நேரத்துக்கு ஈ காக்கா கூட இருக்காது…”..
“ நயிட் ஏண்டி காக்கா வருது..அது தூங்கிட்டு இருக்கும்…ஈ வேணா ரெண்டொன்னு சுத்துமா ருக்கும்..…”
எனவும் அவனை முறைத்தவள், “ எனக்கு டீ போட்டு பேசினா புடிக்காது…” என் போர்க்கொடி உயர்த்த,
“ நானும் இனி என் பொண்டாட்டி ய தவிர யாரையும் டீ போட்டு கூப்பிட கூடாதுன்னு மனசுல நினைச்சு வச்சுருக்கேன்…
“பொண்டாட்டி… ஆஆ…”
“ஆமா ,,உன் சாமி முன்னாடி செயின் போட்டு, அங்கனையே, உனக்கு அச்சாரம் கொடுத்து, ரெண்டு வீடு பெரியவர்களும் சம்பந்தம் கலக்கியாச்சு…கலியாணம் ஓவர்….” என்…..
“ஹாங்…….” என் திகைத்தவளிடம்..
“ஆமா…” என்று வேகமாக வளைத்து திருப்ப , தடுமாறி சாய்ந்த அவளின்தோள் தலை வந்து அவனின்கை மற்றும் தோளில் இடித்தன… சமாளித்து நிமிர்ந்தவள் தலையை தடவிக் கொணடு முறைத்தவாறு நேராக அமர்ந்தாள்.
சிரித்தவாறு,”ரோட பார்க்கமா அத்தானையே முறைச்சு பார்த்துட்டு இருந்தா அப்படி தான் ஆகும்….” என்று நக்கலடிதத்தான்.
வண்டியை ஓரமாக நிறுத்தியவன், விளக்குகளை அணைத்துவிட்டு, திரும்பி அவளை பார்க்க, இருளில் மிளிரும் நட்சத்திரமாக , முகத்தில் செல்லக் கோபம் மின்ன அமர்ந்திருந்த அவளை பார்க்க பார்க்க அவனுக்கு தெவிட்டவில்லை …
ஸ்டெரிங் மீது முழங்கை ஊன்றி, கன்னத்தில் கை வைத்து அவளையே பார்த்துக்க கொண்டு இருந்தான்..
அவனின் பார்வை உணர்ந்து, திரும்பி அவனை பார்த்தவளின் பூ முகம், கோபத்தை விடுத்து வெட்கத்தை பூசிக்கொள்ள இப்போது திணறுவது அவன் முறையாகிப் போனது..
பெருமூச்சு விட்டவன் மெதுவாக அவளின் கரம் பற்றி,
“செல்லம்மா..நீ…நீ ஆசைப்பட்ட படிப்பு …நல்ல படியா படிச்சு முடி…நானும் நான் ஆசை பட்ட என் கனவு தொழிற்சாலையை கட்டி முடிச்சு வெற்றிகரமா அதை நடத்தனும்.. உனக்கு என்ன மேற்படிப்பு படிக்க நினைக்குறியா..அதை மூணாவது வருஷம் படிக்கையில் முடிவு பண்ணிக்கோ..இலக்கு வைச்சு படி.. …பிஈ ஜீ கும் நீட் இருக்கும் அது என்ன ஏதுன்னு விசாரிச்சு தெரிஞ்சு வச்சுக்கோ…
நா இனி உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்…ஆனா என் நினைப்பும் அன்பும்……காதலும் எப்பவும் உன்னை சுத்திட்டு இருக்கும்….மம்ம்ம்ம்…இனி போன் கூட பண்ணலை…நீ படிப்புல கவனமா இரு சரிதானே..” எனவும், வெடுக்கென கைகளை இழுத்துப் கொண்டாள்..
“அந்த அளவுக்கு கட்டுப்பாடு இல்லாதவனு நினைக்குறீங்களோ…”
பரிதாபமாய், “ நான் உன்னை சொல்லலை..என்னை சொல்றேண்டி…முடியலை…என்னை கட்டு படுத்த என்னலையே முடியலை..”…என..சொன்னவன் தன் இருகைகைளை பிணைத்துக் கொண்டு ஸ்டெரிங் மீது வைத்து, நெற்றியை கைகள் மீது வைத்து கண்மூடிக் கொண்டான்.
முகம் வாட கதவைத் திறந்து இறங்கப் போனவள், சற்றே நிதானித்து, அவனை திரும்பி பார்த்தாள்..
‘ இவனின் தவிப்பை தன்னால் தீர்க்க இயலுமா…என்ன செய்வது’ என்று யோசிக்க…அவளின்….வயது கற்று கொடுக்கத்தை..அவன் மேல் வைத்த பாசம், காதல் கற்று கொடுக்க, மெதுவாக அவன் கரம் பற்றியவள்,இழுத்து புறங்கையில் தன் மெல்லிய இதழ்களைக் கொண்டு ஒற்றினாள்.
அவளாக தரும் முதல் முத்தத்தில், அசந்து போய் அவன் பார்க்க, நிமிர்ந்து அவனை பார்த்தவள், புன்னகையுடன், அவனின் சட்டை காலரை பற்றி இழுக்க அவளின் முகத்துக்கு மிக அருகில் வந்தது, அவனின் முகம்….
மலர்ந்து… சிரித்த, தேன்சிந்தும் இதழ்கள், வா என அழைப்பது போல் திறந்து கொள்ள, கண்களால், கலந்து, கருத்தும் ஒருமித்த தன்னவள், தன் வாட்டம் போக்க ,தன் தடை தாண்டி வந்தவளின் மலரினும் மெல்லிய இதழ்களை ஆவலுடன் பற்றிக்கொண்டன, அவனின் இதழ்கள்….
முதல் முத்தத்தின் இனிமையில் ,தங்களைத் தொலைத்த இருவரும், இடம் மறந்து, காலம் மறந்து, தங்களுக்குள் மூழ்கி கிடக்க….பளீரென தங்கள் மேல் படர்ந்த பெரு ஒளியில் சுய உணர்வுக்கு வந்தனர்..
தூரத்தில் வந்து கொண்டிருந்தது, செல்லகிளியின் கனவு, லட்சியம் நோக்கி அவளை இட்டு செல்ல போகும் பேருந்து…
மெதுவாய்ப் பிரிந்த இருவரும், ஒருவர் முகம் ஒருவர் பார்த்து , பார்த்தவிழி பூத்த படி இருக்க, அருகில் வந்து ,ஒளி எழுப்பி நின்றது, அந்த பேருந்து….
அமைதியாய்….விலகி… கதவு திறந்து அவள் இறங்க, தானும் இறங்கியவன், அவள் பயண பையை
எடுத்துக்கொண்டு வர…முன்னேறி சென்றவள், சில அடிகள் நகர்ந்து … பின் நின்று திரும்பி பையை வாங்க தலைப்பட, மறுத்து தலை அசைத்தவன், போகுமாறு சைகை செய்தான்.
ஏறி தன் படுக்கை இருக்கை இருக்கும் இடத்தை அடைந்தவள், அங்கிருந்த சிறு ஏணி மூலம், தன் படுக்கைக்கு சென்றாள். குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட பேருந்து, படுத்து இருப்பவர்கள் தெரியாவண்ணம் ,திரைகள் மூலம், தடுக்க பட்டு இருப்பதை பார்த்தவன், மேலும் கீழும் பார்த்து, அவளின் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ள தலைப்பட ,அவனிடமிருந்தது பையை வாங்கியவள், விலகமுயன்ற அவனின் கரத்தைப் பற்றிக்கொண்டாள்.. தன் மற்றோரு கையையும் அவள் கை மீது வைத்து ,இறுக பற்றி க் கொண்டு,
இதழில் மட்டும்
புன்னகையுடன் , சென்றுவா என்பது போல் தலைஅசைத்தவனின், பிரிவுதுயர் கண்களில் தெரிய, தலையசைத்த, அவளின் உதட்டில் அவனுக்காய் சிறு முறுவலும், கண்களில்,அவனுக்கே அவனுக்கான இருதுளி கண்ணீர்..பார்த்தவனின் கண்களும் கலங்கத் தொடங்க, தாங்க இயலாதவளாய்,
அவனின் தோள் உயரத்தில் இருந்த படுக்கையில் அமர்ந்து இருந்தவள், கையை பற்றியவாறு குனிந்து மெதுவாக, அவனின் நெற்றியில் இதழொற்றி சட்டென்று விலக, மிரண்டவனாய், சுற்றி பார்த்தான்..
அவனின் மிரட்சி கண்டு அவளுக்கு சிரிப்பு வந்தது..
சிரித்தவாறே, மெதுவாக கரம் விலக்கி, கையசைத்து விடை கொடுத்தாள்..
பெருமூச்சு விட்டவனாய் தானும் தலை அசைத்தவன், இறங்கி கீழே செல்ல, அவன் இறங்கிய அடுத்த நொடி, பேருந்து கிளம்பி தன் வழியே பயணப்பட்டது.
தன் லட்சியம் நோக்கி செல்லும் தன்னவளின், கனவுகளுக்கு கை கொடுக்கும் காதலனாய், தங்களுக்கான வாழ்வு பாதையை, நிர்மாணிக்க ,தனக்கென்று ஒரு பாதை வகுக்கும் தலைவனாய், நிமிர்ந்து நின்றவன், தன் வாகனம் நோக்கி திரும்பினான், வனராஜன்.
***********************
தன் இளையவனின் மனம்கவர்ந்தவளோடு நிச்சயதார்த்த விழாவை முடித்த மகிழ்ச்சியோடு ,வேதகௌரி, அடுத்து விடுமுறைக்கு வருவதாக சொல்லிவிட்டு அங்கிருந்தே தன் வீட்டு வாகனத்தில் கிளம்பி விட, தங்கள் வாகனத்தில் ,ஏறினர்,கோவிந்தராஜன் குடும்பத்தினர்.
வீட்டை அடைந்தும், உம்மென்று முகத்தை தூக்கி வைத்தவாறு தங்கள் அறைக்குள் நுழைந்த வேதநாயகியை யோசனையாய் பார்த்தார் கோவிந்தராஜன்…
அறுபது வருட தாம்பத்தியத்தில், அவரின் உள்ள உணர்வுகள் புரிந்தவராய், “ என்ன வேதா!!! இந்த சம்பந்தம் பிடிக்கலையா!!!” என் போட்டு வாங்க முயல,
“ அவ என்னைக்கு நம்ம கருத்த கேட்ருக்கான்….அவனென்ன நம்ம புள்ளயா… அவ இசட்டப்படிதா நடக்க…அவே அய்யாவும் துணை நிக்கா நம்ம என்ன சொல்ல…சௌந்தரு… உங்களை போல..இவன் எங்கய்யா குணம்…பிடிவாதம்.. சாமர்த்தியம….வேற…” என கோபத்திலும் பேரனின் புகழ் பாட ,
“ அப்புறம்…என்ன.. அந்த பொண்ண பிடிக்கலையா……” என
“அவளுக்கென்ன…சந்தன அலங்காரம் பண்ண அம்மன் சிலையாட்டம் நல்லத்தானிருக்கா, கொஞ்ச எம்மருமக சாடை வேற , டாக்டர் கு படிக்கா போல, பிடிக்காம போகுமா…”
மெதுவாய் சிரித்தவராய்,” பின்ன ஏன் முகம் வாடிப் போய் இருக்கு??”
“ம்ம்..இவனுக்காக தானே பட்டுப்புடவை கட்டி நகையை போட்டு, அவன் கூப்பிட்டா இடத்துக்கு.., என் புள்ளைய அடிச்சவன் வீட்டுக்கு, என் மனப்பகை மறந்து போனேன்…இவன் என்னைய வான்னும் சொல்லலை, சாப்பிடுற இடத்துக்கும் வரலை, ..என்னோட அவன் நல்லா பேசி மூணு வருசமாச்சு தெரியுமா…” என்றவரின் கண்கள் கலங்கின..
கல்லுக்குள் ஈரம் போல பேரன் பேத்தி மேல் அவரின் அபரிதமான பாசம் புரிந்தவராய் கோவிந்தராஜன்,” அவனுக்கு அவன் அம்மா கஷ்டப்பட்டு இருக்கான்னு கோபம்…அந்த கௌரி வாழ்க்கை திசை மாறினதுக்கு கோபம்…” எனவும், ஆங்காரமாய் நிமிர்ந்தார் ,வேதநாயகி.
“ஊரே நம்ம புள்ளைய ஒரு வடநாட்டுகாரியோட இணைச்சு பேசுச்சு…எத்தனை மேனாமினுக்கிக இது மாதிரி குடும்பத்தை குலைச்சு போட்டதை கண்ணால பார்த்துருக்கோம்..காதால கேட்ருகொம்…எங்க சின்ன அய்யனே ஒரு …பொம்பளை பின்னாடி போய் எல்லா ஆஸ்திய தொலைச்சுபுட்டரு..தெரியுமா…அதான்..
எம் புள்ள வாழ்க்கையை காப்பாத்த..ஒரு தாயா என்ன செய்யணுமோ அதை செஞ்சேன்…அவ அய்யனை பார்த்தா எனக்கு நல்ல ஆளா தெரியல..ஆங்காரம் வந்துச்சு …கத்துனே….” என
“நம்ம புள்ளைட்ட நாம கேட்ருக்கணும்…அந்த பொண்ண சொல்ல நமக்கென்ன உரிமை இருக்கு…”
“எரியுறது புடுங்கினா கொதிக்குறது தானா அடங்கும்…அடங்குச்சுல்லா…”
“அந்த பொண்ணு நல்லவளாம்… உன்னால எவ்ளோ கஷ்டப்பட்டுருக்கா தெரியுமா..ராஜன் சொல்லித்தான் எனக்கே தெரியும்….”
ஸ்ருதி குறைந்தவராய்,” இப்போ என்ன…அந்த பொண்ணுக்கு…எதாச்சும்னபோய் செய்யுங்க…உங்க பேரனையும் செய்ய சொல்லுங்க..நா வேணாமின்னா சொல்ல போறேன்…”என்றவர்
லேசாய் முகம் கலங்க,” இவன என் கூட பேச சொல்லுங்க…வயசான காலத்துல..இனி எனக்கென்ன இருக்கு…”,அவரின் கையைத் பிடித்து மெதுவாய் அமர வைத்தவர்,
“அவனுக்கும் உன் மேல பாசமிருக்கு..சீக்கிரமே கோவம் ஆறிடும்….வருவான்…”
“வருவானா…” என ஏக்கமாய் கேட்க,
“நீ அவ அம்மைய நல்லா நடத்தி, அவன் பொண்டாட்டிட… புள்ளைகட்ட பாசமா இருந்தா…அவ தன்னாலே வருவான் வேதா…” என்றார் சமாதானமாய்…
பணத்தால்…வாயால்..சாதித்து பழகியவரை, எழுபது வயதில், பாசத்தால் , மனதால்,குணத்தால் சாதிக்க சொல்கிறார்…
நடக்குமா….
இயலுமா!!!!!!!! காலம் பதில் சொல்லும்!!!!!
************************
மிகுந்த மனநிறைவுடன், பலகாலம் கழித்து, தம் பிறந்த வீட்டினருடன், தடையற்ற பாசங்களை அனுபவித்து வந்த நெகிழ்வும்… தன் மகனின் எண்ணம் போல் வாழ்வு அமைத்து கொடுக்கப்போகும் மகிழ்வுமாய் தங்களின் அறைக்குள் நுழைந்த சொர்ணகிளியின் மனம், லேசான குற்ற உணர்ச்சியில்…
திருமணம் ஆன புதிதில் தயங்கி தயங்கி நுழைந்த, அதே மன நிலைக்கு தான் வந்துவிட்டதை எண்ணி லேசான ஏளன புன்முறுவல் மலர்ந்தது அவரின் இதழ்களில்..
அவரின் கணவர் முகத்திலோ, மகிழ்ச்சி…மகிழ்ச்சியை தவிர ஏதும் இல்லை.
விழாவுக்கென்று அணிந்திருந்த, ஆடைகள் மாற்றி இலகு உடையில் தளர்வாய், அமர்ந்து, தம் அலைபேசியில் ஏதோ வேலையாய் இருந்தவரைப் பார்த்தவாறு உள் நுழைந்த சொர்ணக்கிளி, தானும் வேகமாக சென்று, பருத்திசேலை மாற்றிக் கொண்டு வந்து, தங்கள் இருவருக்கான, மாத்திரைகளை எடுத்து வந்தார்.
தண்ணீர் டம்ளர் உடன் மாத்திரைகளை நீட்டிய மனைவியை நிமிர்ந்து பார்த்தவர், முறுவலோடு, தன் மனைவியின் கரம் பற்றி அருகில் இருந்த நாற்காலியில் அமர்த்தினார்.
சிரித்தவாறே, “இதெல்லாம் என்ன சொர்ணா.”. என் கேட்க..
“தினமும் நீங்க சாப்பிடுற மாத்திரைகள்..”
.”எதுக்குன்னு தெரியுமா…”எனக் கேட்க,
இல்லை என தலை அசைத்தவரிடம்…
“மனஅழுத்தத்திற்கு…தூக்கத்திற்கு…இனிமே எனக்கு இது தேவையில்லை மா..நிம்மதியா தூங்குவேன்..”
என கண்கலங்க அவரைப் பார்த்தார் சொர்ணா.
“நானும் உங்களை கஷ்டப்படுத்திட்டேன்… “என
“இல்லமா…..”என்றவர்…தன் தாடியை தடவியவாறு
.”எல்லாம் விதி..”என
“விதி என்ன செய்யும் என் மதி சரியா இருந்தா..”
“நீ கேட்கலை..என் கிட்ட…..நா ஆமா ன்னு சொன்னா ..உன்னால தாங்க முடியாது… இல்லை னு சொன்னா…உன்னால நம்பிருக்க முடியாது….என் மனசு தொறந்து காட்ட நா ஆஞ்சநேயனில்லியே…..
ஹா ஹா..உன்னை விட என் புள்ள.. என்னை நல்லா புரிஞ்சு வச்சுருக்கான்..”என்று சிரித்தார்.
…………..
சொன்னானே… ஓர்சொல்லு..உங்க நட்பு கஷ்டப்பட்டதுக்கு நீங்க தண்டனை ஏத்துக்கிடீங்க…சரியான வார்த்தை…
எங்கம்மா, உன் தம்பி பேச்சுல மட்டுமில்ல எனக்கு சரியா பேச தெரியாததாலயும் தா கௌரி வாழ்கை திசை மாறிடுச்சு..இந்த ஊரே அவ பேர வேற விதமா மாத்தி வச்சுருச்சு..
நம்ம குடும்பத்தில் உள்ளவங்க..நம்ம மேல வச்ச பாசத்துல, ஒரு அப்பாவி பொண்ணு வாழ்க்கை…..மாறி போனதுக்கான தண்டனையை.. நாம ரெண்டு பேரும் அனுபவிச்சுருக்கோம்..இவ்ளோ நாளா…அவ்வளவுதான்…”
“உங்க ஞாயம் எனக்கு புரியலைங்க..”
“வேணாம் விடும்மா.. …மனசு அமைதியா இருக்கு. முடிஞ்சு போனது பத்தி வருத்தப் பட்டு ,இருக்குற காலத்த வீணடிக்க வேணா…
இப்போ தான் , நம்ம வாழ்க்கை ஆரம்பிக்குறதா உணருறேன்…
புள்ளையா, தகப்பனா செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சுட்டேன்..இனி நான் சொர்ணாக்கு புருஷன்…அந்த வேலையை மட்டும் சரியா செய்ய போறேன்..
காமம் …..அஞ்சு நிமிஷம்…
காதல் …..மனசுல இளமை இருக்குற வரை..
அன்பும் பாசமும் கடைசி மூச்சு இருக்குற வரை…”
சொர்ணகிளியின் கைகளை பற்றிக்கொண்ட சௌந்தரராஜன்
என் கடைசி மூச்சு, உன் கடைசி மூச்சு இருக்குற வரை காதலோடு… அன்பும் பாசமுமா உன்னோட இருக்க போறேன்…”
என்று மென்மையாய் சிரித்தவரை பார்த்த சொர்ணக்கிளியின் கண்கள் நிறைந்தன…கண்ணீரில்..
பற்றியிருந்த கைகளை கண்களில் வைத்துக்கொண்டவர், தன்னவரின் மடி சாய்ந்தார்.
பலவருடங்கள்கழித்து தன் மடி சாய்ந்த தன் சொர்ணகிளியின் தலையை வருடியவராய் கண்மூடி, அந்த சுகத்தை அனுபவித்தார் சௌந்தரராஜன்.
வனக்கிளி கொண்டு வந்து தந்த சேதியில் ….
இருபத்தி ஐந்து வருட
அஞ்ஞாத வாசத்தில் இருந்து வெளிவந்துவிட்ட….
இந்த சௌந்தரகிளி….
இனியாவது சிறகடித்து பறக்கட்டும்….
எப்போது ஆரம்பித்தால் என்ன!!
காதல் காதல் தானே..
வாழ்வு வாழ்வு தானே..
இனி கிளிப் பேச்சு அதன் தலைவனுக்கு மட்டும்…
=========================================
💞💞💞💞💞முற்றும் 💞💞💞💞💞💞
எபிலாக்
**********
அதிகாலையில் வேதா மாளிகை விழாக்கோலம் பூண்டு இருந்தது. பெரிய மதில் சுவர்களும் வெள்ளை மாளிகை முழுவதும் வெள்ளை மற்றும் நீல நிற சரம்சரமாய் தொங்கும் மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இருக்க, காவலர்கள் போல் விரைப்பான கரடுமுரடான அசோக மரங்களும் பலவண்ண விளக்குகள் தாங்கி ஒளிர்ந்தன..
வீடு மிக பரபரப்பாக இருந்தது…புரோகிதர்கள் அமர்ந்தது ஹோமத்திற்கான ஏற்பாடுகளில் கவனமாக இருக்க, செல்லக்கிளி தங்கள் அறைக்குள் அவசரமாக நுழைந்து, துயிலில் ஆழ்ந்து இருந்த வனராஜனை எழுப்பினாள்.
“என்னங்க….இங்க பாருங்க …நேரமாச்சு …எழுந்திருங்க…”,என்று சொல்லியவாறு நெருங்கி, அவன் அணைப்பில் உறங்கி கொண்டிருந்த ஒன்றரை வயது மகளை த் தூக்கியவள், வெளியே எடுத்துச் சென்று தன் அன்னை கற்பக வள்ளியிடம் அவளை கொடுத்தாள். உள்ளே வந்து பார்த்த போது,
அப்போதும் அவன் அசையாமல் உறங்குவதை பார்த்து, லேசாக உலுக்கி “ எழுந்திருக்கிறீங்களா …என்ன …”என்றவள்…அதற்கும் பலனில்லை என்று ஆனதும்….பின்… மெதுவாக… அவனருகில் சென்று “கண்ணத்தான்…” என்று மென்குரலில் அழைத்ததும் பட்டென திறந்தன அவள் அத்தானின் விழிகள்…..
காலையிலேயே குளித்து, இளம்சிவப்பு வண்ண நிறத்தில் டிசைனர் பட்டு சேலை கட்டி , கால், கைகள் முளைத்த ரோஜா மலரை போலவே நின்ற தன் செல்ல கிளியை கண்டவனின் கண்களில், எப்போதும் போல் மையல் வந்து சூழ்ந்து கொள்ள…..எட்டி பிடிக்க முயன்றவனைப் பற்றி அறிந்தவளாய் , வேகமாக ரெண்டு அடி பின்னே நகர்ந்து கொண்டாள்.. செல்லக்கிளி…
”சும்மா இருக்குறவனை…உசுப்பேத்துறதே பொழப்பா… வச்சுருக்க… போ.. போ” என்றவன்…
கைஅசைத்து விட்டு திரும்ப படுத்து கொள்ளவும், மிரண்டு போனாள்..
“என்னங்க… நேரமாகுது…”
இல்லை என கை அசைத்தவன்..அந்த கையை தன் கன்னத்தில், நெற்றியில் , பின் இதழில் வைக்க…
கோபத்திலோ வெட்கத்திலோ, முகம் சிவந்தது அவனின் மனைவிக்கு….
“என்ன விளாடுறீங்களா..கீழ பூஜைக்கு கூப்பிடுறங்க..இப்போ போய்…
மரியாதையா எழுந்து குளிக்க போங்க..”.என்று மிரட்டினாள்…பலித்தால் தானே….மெல்லமாய் கொஞ்சும் குரலில்,
“என் செல்ல அத்தானில்லை..” என்று தாஜாவில் இறங்கினாள்….ம்கூம்….
‘இப்போ போனா அந்த ஆச்சி,தாத்தா நம்மளைத் தான் இவுக எங்க னு கேப்பாங்க…’என்று பயந்தவள், மெதுவா அவன் அருகில் சென்று குனிந்து கன்னத்தில் இதழ்களை பதித்தது தான் தெரியும்…. அலைஒன்று சுழற்றியடித்த உணர்வில் கண்கள் மூடியவளை…ஆக்ரமித்து இருந்தான் வனராஜன்…
பனியில் நனைந்த ரோஜாவினைப் போல் பரிமளித்து நின்றவளின், முக மலரெங்கும் தன் தாபம் தீர இதழ்களால்ஒற்றி , அதன் மென்மையை தன் இதழ்களுக்கு பரிசளித்துக் கொண்டவன், அவளின் தேன்சிந்தும் இதழ்களை நெருங்க, கண்களில் இறைஞ்சுதலுடன்..”பிலீஸ்…. பிலீஸ்… பூஜைக்கு போகணும்… அப்புறமா……நைட் …நா…..னே..….”என்று திக்கியவள் ‘வாக்கு கொடுத்தால் சும்மா விட மாட்டானே…’ என்று யோசிக்கவும். “…ம்ம்ம் நைட் …நீயே…”..என்று எடுத்துக்க கொடுத்தவனின், காதுக்குள், ஏதோ உறுதியளித்தது அவனின் செல்லக்கிளி….
’டீல் ஓகே’ என்பது போல்
‘..ம்ம்ம்…”என்றவன் பெரிய மனது வைத்து அவள் மேல் படர்ந்து இருந்த காலையும் கையையும் விலக்க…அவனின் காதல் சிறையில் இருந்து தற்காலிகமாக விடுதலை பெற்றவளாய் எழுந்து அமர்ந்தவள், தன்னவனைத் திரும்பிப் பார்க்க,
வெற்று மார்பில்,..VC எழுத்துக்கள் மின்னும் பொன்சங்கிலி புரள,…ஆண்மையின் இலக்கணமென…உறுதி காட்டும் உடலும்….தலை கலைந்து கிடந்தாலும்,..தூங்கி எழுந்த நிலையிலும்…துலங்கிய முக பொலிவிலும்…..கிறங்கிய கண்களினாலும்…. வசீகரித்து கொல்பவனை பார்த்து கொண்டே இருக்க…பெண்ணவளின் மயங்கிய பார்வை ஆணவனின் உடலில் புது ரத்தம் பாய்ச்ச,
“என்ன …..நகர … மனசு வரலைல… “என காதலினால் கரகரத்த குரலில் அவன் புன்னகையோடு கேட்டதும்.. சட்டென்று எழுந்தவள்…
தனை மயக்கும் அவனின்
கண்களை விட்டு பார்வையை விலக்கி..வேகமாக இறங்கினாள்…
தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து…”ஹையோ…
சேலை எல்லாம் கசங்கிருச்சு….” என்று கவலைப் பட…
“வேலை செஞ்சா கசங்க தானே “ என்று கண் சிமிட்டியவன், அவள் முறைக்கவும்,” இல்ல… நீ தானே எல்லா வேலையும் பார்க்குற……. யாரும் கண்டுக்க மாட்டாங்க.போ..….”, என்றவன்,
மெதுவாக சோம்பல் முறித்து எழுந்து, “நைட் படுக்க ரெண்டாகிடுச்சு….”என்றவன் அரவத்தை கவனித்து “அய்யர் எல்லாம் வந்துட்டாங்க ளா??” என,” ஆமா உங்களை தான் தேடுறங்க உங்க அய்யாய்ப்பா..சீக்கிரம் குளிச்சுட்டு நல்ல புள்ளையா பட்டு வேஷ்டி ,சட்டை போட்டுட்டு கீழ் போங்க.. இதோ இருக்கு பாருங்க..”..என்றவாறு
முடிந்த அளவு சேலையை சரி செய்து தலையையும் சரி செய்து…
“சீக்கிரம் வாங்க…” என்றவள்.. வெளியே விரைந்தவள்…வாசலில்…நின்று,
“கௌரி ஆன்ட்டி ..நித்யாக்கா..ஈஸ்வரி அண்ணா….. மன்யூ அண்ணா,ப்ரீத்தி அண்ணி. எல்லோரும் இப்போ வந்துருவங்களாம்..போன் பண்ணாங்க….”எனவும் சிரித்தவாறு.. “காலைல போய் அழைச்சிட்டு வர சொல்லி ட்ரைவர் ட சொல்லிட்டு தான் படுத்தேன்…” என்றுவிட்டு துண்டை எடுத்துக்கொண்டு குளியலைறைக்குள் நுழைந்தான் வனராஜன்..
‘ விரைப்பாய் திரிந்த பூங்காவனத்தை , என்ன செய்து மாற்றினாளோ, இந்த நித்யா..’என்று சிரித்தவாறே எண்ணி கொண்டு வேகமாக குளித்து ஆடை அணிந்து வெளியேறினான்.
செல்லகிளியின் மனதிலும் தன் தோழியின் குடும்பத்தை பற்றிய நினைவுதான். செல்லக்கிளி முதல் வருடம் படித்துக்கொண்டு இருந்தபோது,
ஈஸ்வரியின் அன்னை சந்திரா, புபுற்றுநோய்க்கு மருத்துவ சிகிச்சை செய்து கொண்டது நித்யாவின் சீனியர்கள் வேலை செய்யும் மருத்துவ மனையில் தான்.
அந்த சிகிச்சையின் போது, செல்லக்கிளியும் நித்யாவும் இணைந்து ,மாலை நேரங்களில் அந்த மருத்துவமனைக்கு செல்வார்கள்.
நித்யாவிற்கு, மனவியல் மருத்துவத்தில் இருந்த ஆர்வத்தினால், அங்கு நோயாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பது எனப்படும், அவர்களுக்கு நோய் பற்றி புரியவைத்து, மருத்துவ முறைகள் பற்றி தெளிவு படுத்தும், துறைக்கு தானாகவே சென்று , சிறப்பு சேவை செய்து கொண்டிருப்பாள்..
எனவே அந்த மருத்துவமனைக்கு, அங்கிருக்கும் மருத்துவர்களுக்கு அவள் புதியவள் அல்லள்.
எனவே ஈஸ்வரியின் அன்னைக்கும் சிறப்பு கவனிப்பு கிடைத்தது, நித்யா , செல்லக்கிளியின் வருகை மற்றும் உதவியால்..
ஈஸ்வரி மற்றும், அவள் அன்னை சந்திராவின் அன்பான பேச்சினால் , அவர்களின் குடும்பமே நித்யா மற்றும் அவளின் தோழிகளும் நட்பாக மாறிப் போனது.
நிச்சயம் நின்று போயிருந்ததால் பெரிதும் மனது வருத்தத்தில் ஆழ்ந்த தாயை, அவன் தன்னுடனேயே சென்னைக்கு அழைத்து சென்று விட, ஈஸ்வரியும், தன் கல்லூரியை சென்னைக்கு மாற்றிக் கொண்டாள், வனராஜனின் உதவியுடன்.
ஆமாம், தன் உயிர் தோழியின் மீதோ, வனராஜன் மீதோ எப்போதும் அவளுக்கு அன்பு தான், பாசம் தான்.செல்லக்கிளியோடான நட்பு, இன்னும் புரிதலுடன், இன்னும் அன்புடன் தொடர்ந்தது..
சந்திரா வின் மனவருத்தம், உடல்நிலை யில் பாதிப்பை ஏற்படுத்த, மீண்டும் நித்யாவின் கவுன்சிலிங் அவருக்கு தேவைப்பட்டது..
அவ்வாறு சந்தித்த வேளைகளில்,
பூங்காவனம் தன் தாயை,குடும்பத்தை அன்புடனும் பொறுமையுடனும் பார்த்து கொள்வதை கண்டு நித்யாவின் மனதில் ஒரு உயர்ந்த எண்ணம் அவன் மேல் தோன்ற ஆரம்பித்தது,தன் தந்தையான மணிச்சந்தின் ஒட்டாத பாசத்தையும், மன்யுவின் அலட்டல் இல்லாத அன்பையும் அனுபவித்தவளுக்கு, பூங்காவனதின் அக்கறையும், கவனிப்புமான பாசம் வியப்பில் ஆழ்த்தியது..தாய்க்காக தன் வெளிநாட்டு பயணத்தை விலக்கி, தன் சேமிப்பு அனைத்தையும் செலவு செய்பவனைக் கண்டு, வியந்த அவள் உணர்வு,
எந்த கணத்தில் காதலாக மாறியதோ….
அவளின் ஆர்வம் கலந்த காதல் பார்வை கண்டு
முதலில் வெகுவாக விலகியவன், பிறகு காதல் மறுக்கப்படும் வலியுணர்ந்தோ என்னவோ, மெதுவாக அவளுக்கு தன் நிலையை விளக்க தலை பட்டான்.
தாயின் உடல்நிலை கருதி, தன் வெளிநாட்டு பயண வாய்ப்பை அவன் தள்ளி வைத்துவிட,
பூங்காவனத்தின் குடும்பத்தினரின் ஆசீர்வதத்தில் தன் தாக்குதலை அவள் தொடர ஆரம்பித்ததும், அவள் காதலுக்கு முன் மண்டியிடுவது தவிர வேறு வழியின்றி போனது…கம்பஞ்சோறும்…பாவ்பாஜி மசாலாவும் சேர்ந்தே விட்டன..
கௌரிக்கு
மனவியல் படிக்க,வாய்ப்பு கிடைக்க, அதன் பின் திருமணம் முடித்து,
மூன்று வருடம் நியூயார்க்கில் இருந்தவர்கள்..இப்போது இரண்டு வயதில் ஆண்குழந்தை ஹர்ஷவர்தனுடன், கர்நாடகாவின் தலை நகரில் இருக்கிறார்கள்.
ஈஸ்வரி பட்டய கணக்காளர் படிப்பு முடித்து, மென்பொருள் பொறியாளரான கௌதம் ஐ திருமணம் செய்து சென்னையில் ஒரு வயது மகளுடன் இருக்கிறாள்.
ஆடிட்டிங் சமயமென்பதால் வர இயலவில்லை என்று மிக வருந்திய
தன் உயிர்த் தோழியை நினைத்தவாறே நடந்த செல்லக்கிளி, தன் தாயை நாடி செல்ல ,வணிகவியல் மற்றும் பொருளாதார மேற்படிப்பு படிக்கும் மாமன் சரவணன் தோளில் தொற்றிய பூச்செண்டாய் அமர்ந்து இருந்தாள், சௌந்தர்யா ஸ்ரீ.
தாயைக் கண்டதும், தாவிய செல்வ மகளை அள்ளியவாறு, பூஜை நடக்கும் இடத்திற்கு செல்ல,
மனையில் அமர்ந்திருந்த கோவிந்தராஜன் வேதநாயகி யைப் பார்த்து போது ,வரவேற்பாய் முறுவலித்த பெரியவரின் அருகில் சென்றாள்.
விருந்தினர் உபசரிப்பில் ஈடுபட்டிருந்த தாயை பிடித்து கொண்டு வந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்த்திய கணவனை பார்த்த கண்கள் விரிந்தன. பட்டு வேஷ்டி சட்டையில், அசத்தும் ஆணழகனாய் நின்றவனைப் பார்த்த விழிகளின் மயக்கத்தைக் கண்டவன், உதட்டில் குறும்சிரிப்புடன், இரு புருவங்களை ‘என்ன’ என்பது போல், ஏற்றி இறக்க ,வெட்கத்துடன் ஒன்றும் இல்லை என்பது போல் தலை அசைத்தவள் தன் அத்தை சொர்ணகிளியின் அருகில் சென்று அமர்ந்தாள்.
அன்று பெரியவர் கோவிந்தராஜனின் ஸதாபிஷேக விழா..அவருக்கு எண்பத்தி ஒன்று வயது பூர்த்தி ஆனதை கொண்டாடும் நோக்கில் அவரின் செல்ல பேரனான வனராஜனின் ஏற்பாட்டில் ஹோம, பூஜை,விழா என் தடபுடல் பட்டது வேதா மளிகை..
மணமகன், மணமகள் போல் தம்பதிசமேதராக அவரும் வேதநாயகி அம்மையாரும் அமர்ந்திருக்க, ஆயுள் விருத்தி மற்றும் குடும்ப நலன் விருத்திக்கென செய்யப்படும் ஹோமங்கள் நடந்து கொண்டிருந்தன.
கோவிந்தராஜன் அருகிலேயே இருந்த வனராஜன், கௌரி குடும்பத்தினர் வருவதை கண்டு வாசலை நோக்கி விரைய, வேதநாயகி திரும்பி பார்த்தார்.
சொர்ணக்கிளியும் முகம் மலர்ந்து எழுந்து செல்ல பின்னாலேயே சௌந்தரராஜன், செல்லக்கிளியும் அங்கே விரைந்தனர்.
அனைவரின் அன்பில் திக்குமுக்கடிய கௌரி குடும்பத்தினர் உணவு உண்ண செல்ல, உடன் செல்ல விழைந்த வனராஜனை, தாத்தா அருகில் இருக்குமாறு பணித்து விட்டு, வேல்ராஜன்…அந்த ப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
ஹோமம் முடிந்து புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்ட போது, கனக புஷ்பங்கள் வைத்து கங்கா அபிஷேகமும் செய்துவித்தனர், வனராஜனும் செல்லக்கிளியும்.
ஆயிரம் பிறைகண்ட தன் அன்பான பட்டானாருக்கு இதை ஏற்பாடு செய்திருந்தான் வனராஜன்.
வேத கௌரியும், செல்லக்கிளியும்
புதிய பட்டு சேலை அணிவித்து வேதநாயகியை அழைத்துவர எண்பதாம் கல்யாண வைபவம் புதுத்தாலி அணிவித்து சிறப்பாக நடந்தேறியது..குடும்பத்தினர் அனைவரும் சூழ்ந்து நிற்க பேரன் பேத்தி, தம் மனைவி கணவரோடு, தத்தம் வாரிசுகளோடு நின்று செய்து வைத்த எண்பதாம் திருமணத்தில் கோவிந்தராஜனும் வேதநாயகியும் கண்கள் பனிக்க அனைவரையும் ஆசீர்வதித்தனர்.
குடும்பத்தினர் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வது வணங்கி ஆசி பெற்று செல்ல, அனைவருக்கும் ஆசீர்வாதத்துடன் ,விழா நினைவாக தங்க நாணயம் வழங்கினார் வேதநாயகி.
நிமிர்ந்து பார்த்தவர், கௌரியை பார்த்து கை அசைத்து வாவென அழைக்க ,அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
“ உன் பையன், பொண்ணு, எல்லோரையும் கூட்டிட்டு வாம்மா “என்று வாய்விட்டு அழைக்க,
அருகில் வந்தார் கௌரி. மன்யு,ப்ரீத்தி,பூங்காவனம்,நித்யாவிற்கு குங்குமம் இட்டு ஆசி வழங்கியவர், கௌரியை அருகழைத்து, தங்க நாணயத்தை வழங்கியவர்,கௌரியின் கைகளை, பற்றி தான் கண்களில் வைத்துக் கொண்டார்.
தம் குடும்பத்தினருக்கு மட்டும் என்று இருந்த கௌரவத்தை, கௌரிக்கு அளித்ததின் மூலம் தான் செய்த பிழைக்கு காலம் கடந்து மன்னிப்பு வேண்டியது போல் இருந்தது.
மென்சிரிப்புடன் அவர் கைகளை தானும் பற்றி கொண்ட கௌரி நிமிர்ந்து பார்க்க அவரின் தோழனின் முகத்தில், விரிந்த புன்னகையும், கலங்கிய கண்களும் கண்டு, அவரின் மனமும் நெகிழ்ந்தது.
சொர்ணக்கிளி அதைவிட மகிழ்வுடன் அவரின் முகத்தை பார்த்தபடி இருப்பதைக் கண்டதும், அவரின் கண்களில் கண்ணீரும் இதழ்களில் புன்னகையும் ஒருங்கே தோன்றின.
இவற்றை பார்த்த வனராஜன் மெதுவாக நகர்ந்து வந்து வேதநாயகியின் தோளை, மெதுவாக பற்றி கொள்ள, பல வருடங்கள் கழித்து, அருகில் வந்து, நின்ற பேரனின் பாசத்தொடுகையை உணர்ந்தவரின் தேகம் சிலிர்த்தது.
நிமிர்ந்து அவனின் கண்களை பார்க்க, அதில் பாவனையில் அவரின் உள்ளம் நிறைந்தது..
தன் கணவர் முன்பு கூறிய , வார்த்தைகளுக்கு அர்த்தமும் புரிவதாய்….
நெருங்கிய சொந்தத்தினர் மற்றும் கலந்து கொண்ட பூஜை மற்றும் விழாவின் தொடர்ச்சியாக,
நாயக் பயர் ஒர்க்ஸ், VC பார்மாஸ் ,சொர்ணா ப்ரின்டிங் ஒர்க்ஸ் மற்றும் வேதகௌரி ரிசேர்ச் ஒர்க்ஸ் பணியாளர்களும் விருந்தும் போனஸ் ம் அறிவிக்கப் பட்டிருந்தது.
சௌந்தரராஜன் னின் எலக்ட்ரானிக்ஸ் ஆர்வத்திற்கு உயிரூட்டும் வகையில் வனராஜன் ஆரம்பித்து இருந்த அந்த வேதகௌரி மின்னணுவியல் ஆராய்ச்சி நிலையத்தின் மூலமாக
பவர்பிளாண்ட்ஸ் என்று சொல்லப்படும் காற்றின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பம் மற்றும் இயற்கை முறையில் தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரிப்பு செய்தல் எனும் தொழில்நுட்பம் நடைமுறை படித்த பட்டு அவை vc பார்மாஸ் கு மிக நல்ல லாபத்தை ஈட்டி தந்தது.
விழா முடிந்து அனைவரும் கிளம்ப, உடைமாற்றி விட்டு வந்த தன் செல்லம்மாவை பார்த்த வனராஜனின் மனதின் காதல் நரம்புகள் மீட்டப் பெற்றன. அவனுக்கு பிடித்த முத்துவண்ண சேலை அணிந்து, சிவப்புக்கல் வைத்த நகைகள் அணிந்து முத்துநகையை இதழில் அணிந்தவளாய் வந்தவளை கண்ட வனராஜனின் மனம் , ஆஹா காதில் சேதி சொன்ன கிளி , நிறைவேற்ற தன் வேலையை செய்ய ஆரம்பித்துவிட்டது போலவே…என்று எண்ணியவன், இரவு உணவிற்கு பின் அறைக்கு சென்று காத்திருந்தான் அவள் வரவிற்காக,
கையில் பால் தம்ளர் உடன் வந்தவளை பார்த்து,
” இந்த மாம்..இருக்காங்களே…இன்னும் சின்ன குழந்தைக்கு பண்ற மாதிரி பண்றாங்க….” என்று செல்லமாக சலித்தவனாய், அதை வாங்கி அருகில் வைக்க,
“கண்ணத்தான்..”…எனவும் இனிமையாய் தேகம் அதிர…ஆஹா செல்லம் எதற்கோ அடி போடுது என்று அனுமானித்தவனாய் திரும்பினான்…
“வந்து….. ஸ்ரீ க்கு ரெண்டு வயசு ஆகிடுச்சு…”
“அதுக்கு..”
“அடுத்து..அடுத்தது..எப்போன்னு எல்லோரும் கேக்குறாங்க..
ஆச்சி தாத்தா கூட அடுத்து பையன் பெத்துக்கோன்னு ஆசீர்வாதம் பண்ணாங்க ..”என செல்லமாய் மிழற்றியது அவனின்செல்லக்கிளி..
“என்னாது..நீ எம் டி படிக்குறேண்ணியே என்ன ஆச்சு..”என்று அவன் அலறியதும்,நிமிர்ந்து பார்த்தவள்,
கடுப்பாய் முறைத்தாள்
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..எப்படி ஸ்ரீ ய வச்சுகிட்டே DGO பண்ணேனே அதே மாதிரி அதுவும் பண்ணுவேன்..இல்ல 3 வருஷம் கழிச்சு பண்ணுவேன்..உங்களுக்கு என்ன பிரச்சனை.”…புரியாதவள் போல் சொல்ல…
“வாட்…நீ படிச்சு முடிக்கும்குள்ள சென்னைக்கும் இங்கக்கும் நா அலைஞ்ச பாடு எனக்கு தான் தெரியும்..கல்யாணம், நீ எம்டி படிச்சு முடிச்சதும் வச்சுக்கலாம் னு எவ்ளோ சொன்னே கேட்டியா நீ….இப்போ..குழந்தை வேணாம்னாலும் கேக்கலை..பாவம் அத்த..சென்னை ல வந்து ..இருந்து.. எவ்ளோ..டென்ஷன்… ”
எனவும் வேகமாக சென்று கட்டிலில் அமர்ந்து கால்களைக் குத்தவைத்து,முழங்கால்களில் கைகட்டி முகத்தை திருப்பி கொண்டாள்.
“ஹா நிசம்மாவே கோச்சுக்கிட்டா போலவே.”.என்றவாறுஅருகில் சென்றவன் முகத்தை பற்றி மெதுவாக திருப்ப கண்களில் ஒரு துளி கண்ணீரை கண்டதும் ,அவ்வளவு தான் அவனின் வீம்பு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி போனது..
சட்டென்று அவளருகில் அமர்ந்தவன், அவளின் தோளில் கைபோட்டு காதருகில் சென்று,” உன் லட்சியம்,கனவு என்னால ,நம்ம கல்யாணம்னால பாதிக்க கூடாதுன்னு தானே சொல்றேன்…” ,கண்ணீர் நின்று,முறைப்பு கூடியதும்,உல்லாச நகைப்புடன்,
“ஆமா… ரெண்டாவதும் பொண்ணு வந்தா என்ன பண்ணுவ..”…அவள் அவன் பக்கமே திரும்பாமல் இருக்க
“ஏன் கேக்குறேன்னா..பொண்டாட்டி மேல ஓவரா பாசமா…. காதலா……. இருக்குறவனுக்கு பொம்பளை புள்ள தான் பிறக்குமாம்..”என..’டாக்டர்.. நானு…எங்கிட்டயே வா…’என்று
திரும்பி பார்த்தவள்..
“அப்போ ஆம்பள புள்ள பிறந்த பாசம் இல்லை னு அர்த்தமா..”என்றாள், கிண்டலான குரலில்…
“அதூஉஉஉஉஉ…ஆசை ஜாஸ்தி ஆகிடுச்சுன்னு அர்த்தம்…” என…
கண்கள் சுருக்கி ,”காதலுக்கும் ஆசைக்கும் என்ன வித்தியாசம்…” வாய் விட்டு சொல்லிய படியே யோசிக்க
“அது வாய்ல சொல்லமுடியாதுடி..
செயல்ல தான் கட்டணும்…”
என்றவன் சொல்ல தேர்ந்தெடுத்த வழிகளில்
அவனின் செல்லகிளியின் கண்கள் மூடிக் கொண்டது என்றால்,
அவ்வளவு நேரம் பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருந்த நிலவு மகள், நாணத்துடன்… மேகத் திரை எடுத்து தன் முகம் மூடிக் கொண்டாள்…….
*********சுபம்***********

