Categories: Ongoing Novel

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே! “அத்தியாயம் 16&17

சேதி 16

*********

 

            மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக ஆக கூடிக்கொண்டே செல்ல, பேசியே தீரவேண்டும் என்று அடிமனது துடிக்க, மூன்று முறை அழைத்தும் எடுக்காததால் பதட்டத்துடன் இருந்த வனராஜனை அவளின் மூச்சின் ஒலி ….தளர வைத்தது…என்றால் அவளின் அழைப்பு மூச்சடைக்க செய்தது.

 

“ சொல்லுங்க…கண்ணத்தான்…” 

 

சிறுவயதில் அவள் அப்படி அழைத்த ஞாபகம்…சில வருடங்களாக “ அத்தான்” என்று கூட சொல்வதில்லை…யோசித்தவன்..மெதுவாக கேட்டான்..

 

“தூங்கிட்டியா??”

 

“ம்….தூங்குறவுங்களை எழுப்பிவிட்டு இப்படி கேக்குறது அங்கத்திய பழக்கமோ!!” என்றாள் அலுப்பில் கண்கள் மயங்க, வாய் தானே ஏதோ கேட்டது!!! முறுவலித்தவன்,

 

“எப்படி இருக்கு காலேஜ் லைஃப் ? ஒன்னும் பிரச்சனை இல்லையே? ஹாஸ்டெல்ல தானே இருக்க? ஏதும் கஷ்டமா இருக்கா??” மட மடவென கேள்விகள் வந்து விழ, கண்களை மூடியவாறே பதில் சொன்னாள்,

 

“ ம்….நல்லாத்தான் இருக்கு.. கொஞ்ச நேரம் முன்ன தான் உங்கள நினைச்சேன்!!”

 

இனிய அதிர்ச்சியில் சற்று திகைத்தவனாய், “என்னையா!!! எதுக்கு?” பாதி உறக்கத்திலேயே பதில் சொன்னாள்,

 

“ம்ம்..எனக்கு நீச்ச கத்துக் கொடுக்குறேன்னு நம்ம தோட்டத்துல தொட்டில தண்ணியே இல்லாம நீச்சலடிக்க வச்சீங்கள்ல….அது ரொம்ப உபயோகமா இருந்துச்சு …இவ்ளோ நேரம் அதத்தா பண்ணினோம் எல்லா பரேஷர்ஸ் ம்…” ,கேட்டவன் முகத்தில் கோபம் குடிக்கொள்ள இடம் கேட்க,

 

பல்லை க் கடித்தவன், “ராக்கிங் ஆ…”

 

“ம்ம்ம்..” என்றவள் அப்படியே தூங்கிப் போனாள்..

 

“கம்பலைன்ட் பண்ணலாம்ல..ஏன் அவுங்க சொல்லறதெல்லாம் செஞ்சுட்டு இருக்கீங்க!! வார்டன் அப்புறம் ப்ரின்சிபால் ட்ட கம்பலைன்ட் கொடு..பயப்படாதே…நான் இருக்கேன்..யாரும் ஒன்னும் பண்ணமுடியாது!!!” என்று வேகமாய் சொன்னவன்..

 

“ம்ம்…ம்….ம்” என்று கேட்டு கொண்டிருந்த ஒலி நின்றதும் ,” செல்லம்….” என்று அழைத்து ப் பார்த்தான்…அழைப்பு துண்டிக்க படாமல் அப்படியே இருந்தது.அழைப்பு மணிகாட்டி (call timer) ஓடி கொண்டே இருந்தது..

 

..திரும்ப மென்மையாய் அழைத்தான்,”செல்லம்மா….”…எந்த சத்தமும் இல்லை, 

 

காதில் வைத்தவாறே உறங்கிவிட்டாள் போலும் என்று எண்ணியவன்,எவ்வளவு அலுப்போ.. கஷ்டப்பட்டாளோ.. என்று மனம் தவித்தது , சத்தமின்றி உதடு குவித்தான்…அவனையும் அறியாமல்…..சத்தமின்றி முத்தமொன்று கொடுத்தே விட்டான்… உறங்க தொடங்கிவளின் காது குறுகுறுக்க, தலை அசைந்து..அலைபேசி நழுவி .மார்பில் வழுக்கி இறங்கி…. படுக்கையில் சென்று விழுந்தது.

 

‘தொப்’ என்ற ஒலி கேட்டதும் அலைபேசியை தன் இதழ்களை விட்டு விலக்கியவன், கண்களை மூடிக்கொண்டு சில நொடிகள் நெற்றியில் வைத்தவன்…புன்முறுவல் சிந்தியபடி அழைப்பை நிறுத்தினான்…

 

சற்று யோசித்தவன், மீண்டும் அலைபேசி எடுத்து தொடர்பு கொண்டான்…. தன் நண்பனுக்கு…..

 

*******************

         சௌகார்பேட்டை (Sowcarpet)…… சென்னையின் வடபகுதியில் உள்ள ஓர் குடியிருப்புப் பகுதி. மிகவும் பரபரப்பான வணிக மையமாகத் திகழும் இங்கு பல மொத்த விற்பனை சந்தைகள் அமைந்துள்ளன.

 

     சென்னையின் மிகப் பழைமையான பகுதிகளில் ஒன்றான இப்பகுதியில் தொன்மையான கட்டிடங்களையும் குறுகலானத் தெருக்களையும் காணலாம்.இங்கு விற்பனை செய்யப்படாத பொருளே இல்லை என்னுமளவிற்கு வணிகச் செயல்பாடுகள் மிகுந்து காணப்படுகிறது.

 

இங்கு கணிசமான வட இந்தியர்கள் வசிப்பதால் “சோட்டா மும்பை” எனவும் அழைக்கப்படுகிறது.1950களில் குஜராத், இராஜஸ்த்தானிலிருந்து குடிபெயர்ந்த மார்வாரிகள் அடகு வியாபாரம்,மொத்த விற்பனை முகமைகளில் ஈடுபடுகின்றனர். பல கடைகள் இந்தி அல்லது குஜராத்தி பெயர்ப்பலகைகளைத் தாங்கி நிற்பதைக் காணலாம்.நாராயண முதலித் தெரு,கோவிந்தப்ப நாயக்கன் தெரு மற்றும் ரத்தன் பசார்,காசிச் செட்டி தெரு ஆகியன சில முக்கிய வியாபார இடங்கள் ஆகும். வார நாட்களில் சென்றால் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் செல்வது போல் நகர வேண்டியதிருக்கும்..

      அவ்வளவு கூட்டம். எங்கு திரும்பினாலும் வட இந்திய முகங்கள்..பலவிதமான வட இந்திய மொழிகள் காதில் விழும்.. 

 

       அதன் ஒரு குறுகலான சந்திற்குள் சிறியவாயிலின் முன் ‘கிறீச்…..’ என்ற சத்தத்துடன் தன் ஸ்கூட்டியை நிறுத்திய நித்யா , “ஹாய் தீதி….” என்று அழைத்த, பக்கத்து வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்த சிறுமியை நோக்கி பறக்கும் முத்தத்தை அனுப்பியவளாய்,”ஹாய்…மீட்டி…” என்று சிரிப்புடன் கை அசைத்தாள்…

  

       தன் பொருட்களை எடுத்தவள், தலைக்கவசத்தை கழட்டியவாறு வீட்டினுள் நுழைந்தவளை ப் பாவ் பாஜி மசாலா மணம் வரவேற்றது. மணம் வயிற்றின் பசியைத் தூண்ட வேகமாக சமையலறைக்குள் நுழைந்தவள், முதுகு காட்டியபடி..தோசை கல்லில் பாவ் பன்களை வெண்ணெய் போட்டு சுட்டுக்கொண்டிருந்த பெண்ணை பின்னிருந்து கட்டிக் கொண்டாள்..

(ஹிந்தியில் இருந்த உரையாடல்கள் தமிழில்…ஆங்காங்கே சில ஹிந்தி வார்த்தைகள் இருக்கும்.nativity காக..)

“கௌரி மாதா …..நல்ல மூட் ஆ…பிரமாதமா வாசனை!!”

 

சிரித்தவாறே திரும்பினார் கௌரி..நித்ய கௌரி மாடர்ன் ஆர்ட் என்றால் கௌரி ….ரவி வர்மனின் ஓவியப்பெண்… ஓட்ஸ் நிறம்..துளியும் களைப்பற்ற மலர்ந்த முகம்..….ஒளிவீசும் கண்கள்…ஐந்தரையடி உயரம்..அதற்கேற்ற வாளிப்பான உடல்.. கழுத்துவரையும் ஏறி நின்ற சட்டை, கைகளையும் முக்கால் பகுதி மறைத்து ,இடையையும் துளியும் வெளிக்காட்டாமல் இன்னொரு தோல் போல் படிந்து இருக்க மடிப்புக் கலையாத சேலை பாந்தமாய் நின்று அவரின் கம்பீரத்தைக் கூட்டியது. 

 

“டாக்டர் மாதா..போய் குளிச்சுட்டு வந்து சாப்பிட்டு சொல்லு..நல்ல மூட ல சமைச்சதா..கெட்ட மூட் ல சமைச்சதா னு..!!”

 

“வாசனையே சொல்லுதே!!! அப்படியே செஞ்ச கையால கொஞ்சம் ஊட்டி விட்டுடீங்கனா குளிச்சுட்டு வரவரைக்கும் ..வயிறு உறுமாம இருக்கும்…” என்றதும் சிரித்தவாறே இரண்டு வாய் ஊட்டினார்.

 

“ம்ம் இப்படியே ஊட்டி ஊட்டி செல்லம் கொடுத்து…அவளை தூக்கி தலைமேல் வச்சுக்கோ!! அதான் சௌகார் பெட் தாதா ரேஞ்சுக்கு அவ அமர்க்களம் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கா!! இந்த சந்துக்குள்ள அவனவன் நடக்கவே பயப்படுவாங்க.. இவ வண்டி எப்பவும் பறக்க தா செய்யுது!!!” என்றவாறே உள்ளே நுழைந்தார் மணிச்சந்த் .

 

அவரின் குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்தவள்,

 

“நீங்க வாங்கி கொடுத்துருக்குற இந்த வாத்து வண்டிய வச்சுட்டு பறந்துட்டாலும்…” என்று தலையை சிலுப்பியவள்..பறந்த கூந்தலை தூக்கி கட்டியவளாய் குளிக்கும் அறைக்கு சென்றாள்.

 

“ஊர்ல எல்லா பெண்களும் இந்த வண்டி தான் ஓட்டுறாங்க… இந்த மஹாராணிக்கு தா புல்லட் வண்டி கேக்குது..எப்போ பார் மன்யு வண்டிய எடுத்துட்டு போயிர்ரா.. “ என்று கூறியவர் சாமான்கள் வைத்திருக்கும் அறைக்கு சென்று 1 பெட்டியை எடுத்தார்.

 

       “சாய் எடுத்துட்டு வரவா?” என்று கேட்ட கௌரியை ப் பார்க்காமலே ,”இப்போ தா கடைல குடிச்சேன் வேணாம்..” என்று சொன்னவர் வேகமாக வீட்டை விட்டு வெளியேறினார்.

 

“ மணி போயாச்சா!!!!” என்று குளியலறையில் இருந்து தலை நீட்டி கேட்டவளைப் பார்த்து சிரித்தவாறு கட்டை விரலை உயர்திக் காட்டினார் கௌரி..

 

அடுத்த ஐந்தாவது நிமிடம் ஆழ்ந்த ரோஜா வண்ண முக்கால் பாண்டும் இளம்சிவப்பு வண்ண காலர் வைத்த டீ ஷர்ட்டும் அணிந்து வந்தவள் பாவ் பாஜியை உள்ளே தள்ள தொடங்கினாள்.

 

 ரோயலெனபீல்டை நிறுத்திவிட்டு உள்ளே வந்தவன் ,சாப்பிட்டு கொண்டிருந்தவளைப் பார்த்து,”ம்ம்ம். இப்படி வெண்ணையும் ஆலு வும் சாப்பிட்டு தான் இவளுக்கு கொழுப்பு ஏறிபோய் இருக்கு!! இவ இன்னைக்கு என்ன செஞ்சா தெரியுமா! அப்பாவி பொண்ணுங்க ரெண்டு பேர் கிடைச்சாங்கன்னு காலேஜ்ல ராக்கிங் பண்ணிட்டு இருக்குறா!! சுத்தி நாலு பேர் நின்னு முறைச்சு பார்த்தா..நீ பெரிய தாதா வா” என்றதும், கோபமானவள்,

 

“உன்னை யாருடா!! என் காலேஜ் குள்ள விட்டது!! இரு இரு வாட்ச்மேன் ட சொல்லி வைக்குறேன் ..இனி வந்தா விடக்கூடாதுன்னு…”

 

“வருங்கால ASP ய உள்ள விடாம விட்ருவான.. உன்னை விட எனக்கு பவர் ஜாஸ்தி !!” என்றான் காலரை பின்னுக்கு இழுத்து விட்டு..கௌரியிடம்,

 

“மா…எஸ்கேப் ஆக பார்க்குறா…நீங்க இவளை பத்தி என்கொயரி வைங்க..”

 

“ நித்யா!!! என்ன பண்ண? “ என்றார் கௌரி அமைதியான ஆனால் அழுத்தமான குரலில்..

 

“மாதாஜி அவன் சும்மா கோர்த்து விடுறான்..பெரிய ஹீரோ மாதிரி பிலிம் காட்டுறான் என் பிரின்ட்ஸ் முன்னாடி..நாங்க பிரேஷர்ஸ் கு welcome தான் பண்ணோம் எங்க ஸ்டைல் ல..” 

 

“நித்யா..விளையாட்டுக்கு எல்லை இருக்கு!! நீ ஜோய்ண்ட் பண்ணப்போ எவ்ளோ பயந்த கஷ்ட பட்ட.. அந்த கஷ்டத்தை இன்னொருதருக்கு கடத்தனும் னு நினைக்க கூடாது.. நம்மால பூக்களை மலர வைக்க முடிலைனாலும் அடலீஸ்ட் முட்களை விதைக்காம இருக்கணும்..பஸ்….” என்றார் கௌரி சற்று கோபத்துடன்..

 

வலக்கை விரல்களை குவித்து தொண்டையில் வைத்தவள்

“கசம் மாதாஜி.. நாங்க சும்மா ஜாலி ஆஹ் தான் பண்ணோம்..அந்த பொண்ணுங்க கிராமத்துல இருந்து வந்துருக்காங்க.ட்ரடிஷனல் ட்ரெஸ் போட்டுட்டு..ஹேர் எல்லாம் ஓல்ட் பிலிம் ல வர மாதிரி வாரிருந்தங்க… மத்தவங்க கிண்டல் பண்ற முன்னாடி சரி செய்துக்கணுமே..அதை கொஞ்சம் ஜாலி ஆ..கொஞ்சம் மிரட்டலான தொனில சொன்னா சீக்கிரம் வேலை ஆகுமேன்னு சொன்னேன் ..அவ்ளோ தா…” என்றாள் முகத்தை …பச்சைக் குழந்தை போல் வைத்த படி..

 

‘ இது உலக மகா நடிப்புடா’ என்பது போல் வாயில் கை வைத்தவாறு நின்று பார்த்தவன்,

 

சிட்அப்ஸ் செய்ய வைத்ததை சொல்லலாமென்று வாயைத் திறந்தவன், அவளின் கெஞ்சலான பார்வையில் , சிரித்தவாறே தலையை அசைத்து விட்டு கையில் கொண்டு வந்திருந்த பேப்பர் உறையை அங்கிருந்த அலமாரியில் வைத்து பூட்டினான்.

 

“யாராச்சும் பார்த்துட்டு போட்டு கொடுத்துட்டாலோ, கம்பலைன்ட் கொடுத்துட்டாலோ உன் பியூச்சேர பாதிச்சுரும். கவனம்” என்று சொன்னவன் தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

கௌரியின் நிர்மலமான பார்வை நித்யாவின் முகத்தை நோக்கி இருந்தது ,” நான் சொன்னதையும் ஞாபகம் வச்சுப்பேன்னு நம்புறேன் “ என்றவர் தானும் தன் அலுவலை கவனிக்க சென்றார்.

 

‘ என்னவோ ஸ்கூல் குழந்தை மாதிரி நிக்க வச்சு விசாரிக்குறங்க.. கௌரி மாதா..வர வர இந்த அசோக் பில்லர் சொல்றதெல்லாம் நம்புறீங்க…அது நமக்கு நல்லதில்லையே ‘ என்று யோசித்தவள், 

 

‘சரி ஏதாச்சும் பண்ணுவோம்…” என்றவளாய் தானும் தன் அறைக்குள் புகுந்தாள்.

 

*********************

 

மறு நாள் அதிகாலையில் வழக்கம் போல் விழித்த செல்லக்கிளி அலைபேசியை எப்போதும் வைக்கும் இடத்தில தேடினாள்..வழக்கத்திற்கு மாறாக அது தன் அருகில் இருந்ததை ,பதட்டமான துழாவலில் கண்டு கொண்டவளுக்கு கனவில் நடந்தது போல் சில நினைவுகள் வந்தன..

 

      கனவா நனவா என்று குழம்பியவள் வந்த அழைப்புகளைப் பார்க்க… புது எண்ணிலிருந்து பேசியது வனராஜன்தான்…அவனுடன் பேச ஆரம்பித்தது ஞாபகம் இருந்தது. அப்புறம்ம்……!!!! என்று யோசித்தவளுக்கு அவன் தைரியம் சொன்னது நினைவில் வர ,’அம்புட்டு தொலைவுல போய் உக்கார்ந்துகிட்டு நானிருக்கேன் ஆமே!!’ என்று உதடுகளை செல்லமாய் சுழித்தவள் கல்லூரிக்குப் போக தயாராக ஆரம்பித்தாள். 

 

      திவ்யாவை எழுப்பியவள் குளியலுக்கு செல்ல, அங்கே வழியில் தென்பட்ட சீனியர் களை பார்த்து சற்று மிரண்டபடி காலை வணக்கம் வைத்தாள் நெற்றியில் கை வைத்து, அவர்கள் முந்திய இரவு சொல்லி இருந்தபடி, 

 

வழக்கமாக இந்நேரங்களில் வெளி வராத வார்டன், துணை வார்டன் சுற்றி வருவதைப் பார்த்து கண்களால் சுட்டிக் காட்டியபடி அனைவரும் அமைதியாக கல்லூரிக்கு தயாராகினர்.

 

  கல்லூரியிலும் அறிவிப்புப் பலகையில் எச்சரிக்கை நோடீஸ் போடப்பட்டு இருந்தது. ‘யாரேனும் ராக்கிங் ல ஈடுபடுவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எந்தெந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று UGC 2009 ஆக்ட்ஸ் வகைப்படுத்தப் பட்டு பெரிய அறிக்கை ஒட்டப்பட்டு இருந்தது.ஆன்டி ராக்கிங் கண்காணிப்பாளர்கள் எந்த நேரமும் கல்லூரிக்கோ விடுதிக்கோ வரலாம் என்ற எச்சரிக்கையும் அதில் இருந்தது.

 

 முதலாமாண்டு மாணவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்ட படி காலைநேர வழிபாட்டிற்கு ஒன்று கூடினார். கல்லூரி முதல்வரும் வந்து தனது பேச்சில் அதனை விளக்கி வலியுறுத்தியவர் , முதலாமாண்டு மாணவர்களுடன் நட்புடனும் அன்புடனும் இருக்க இன்று மதியம் ஒரு ஒருங்கினைவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார். 

 

         அதில் அனைவரும் கலந்து கொண்டு அறிமுகம் தரவேண்டும் என்றும்,ஒரு ஒரு சீனியர் மாணவருக்கும் ஒரு ஜூனியர் முதலாமாண்டு மாணவர் ‘buddy’ என்று ஒதுக்கப் படுவார் என்றும்.. அவருக்கு படிப்பிலோ கல்லூரியிலோ விடுதியிலோ என்ன பிரச்சனை என்றாலும் சீனியர் மாணவர் தீர்க்க உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இவற்றை செய்து முடிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ ஆசிரிய பிரதிநிதிகள் அதில் ஒருங்கிணைந்து இவற்றைக் கண்காணிப்பார்கள் என்று சொன்னார்.

 

அனைவரும் முகத்தில் மலர்ந்த சிரிப்புடன் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

 

   அன்று சனிக்கிழமை ஆதலால் அரை நாளில் வகுப்பு முடிந்து உணவிற்குப் பின் அனைவரும் கலை அரங்கத்தில் ஒன்று கூடினர். சுய அறிமுகத்துடன் விருப்பு, வெறுப்புகள், எதிர்கால திட்டங்கள், லட்சியங்கள் பற்றியும் ஒரு நிமிடத்தில் சொல்லி முடிக்குமாறு வழிகாட்டப்பட்டு அவ்வாறே அனைவரும் செய்தனர். 

                முதலாமாண்டு மாணவர்கள் தங்கள் பெயர்களை எழுதி மேடையில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறு கூடையில் போட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டமாண்டு மூன்றாமாண்டு மாணவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு ஒரு பெயர் சீட்டு எடுக்க வேண்டும். முதலாமாண்டு மாணவர்களின் என்ணிக்கை மற்றும் சீனியர் மாணவர்களின் குண இயல்பு வைத்து SB ஸ் அதாவது,சீனியர் baddies தேர்ந்தெடுக்க பட்டு இருந்தனர்.

 

        முதலில் நித்ய கௌரியின் பெயர் அழைக்கப்பட ,மேடையேறி சிரித்தவாறே கூடையை துழாவிய கையில் வந்த சீட்டினை பிரித்து வாசித்தாள், “வீ. செல்லாஆ கிளி” .. கூட்டத்தில் அமர்ந்திருந்த செல்லக்கிளி,’அட பெத்தநாச்சியம்மா…இதென்ன சோதனை…’ என்று எண்ணியவாறே எழுந்து நிற்க , மேடையில் இருந்து இறங்கி வந்த நித்யா அவளருகில் நெருங்கி வந்து கைகளை நீட்டினாள். செல்லக்கிளியும் தயங்கியவாறே தன் கைகளை நீட்ட, அதனை பற்றி தன் அருகே அவளை இழுத்தவள் லேசாக அணைத்து விடுவித்தவள் அவளருகிலேயே அமர்ந்து கொண்டாள்.

 

 

முதலாமாண்டு மாணவர்களின் கரவொலி அரங்கை அதிர வைத்தது. இதே போல் அனைத்து SB- சீனியர் பட்டீஸ் களும் தமக்கான JB – ஜூனியர் பட்டீஸ் ஐ தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஒரு அழகான நல்லுறவு மாணவர்களுகிடையில் உருவானது.

 

         நிகழ்ச்சி முடிந்து இணைந்து வெளியே வந்த செல்லகிளியிடம் ,” நீம் கிலே கி தோத்தி!! கடைசில என்கிட்டயே வந்து மாட்டிக்கிட்டியா!!! என்று சிரித்தவளை லேசான மிரட்சியுடன் பார்த்தாள்.

 

“ஹா ஹா..அதுக்கு ஏன் இப்படி முழிக்குற!! நேத்து நான் சொன்னதெல்லாம் உங்க நல்லதுக்கு தான். நீ கொஞ்சம் கண் தொறந்து யஹாங் கே லோக் பார்திருந்தினா நீ எப்படி ஆட் வுமன் அவுட் ஆ இருந்தேன்னு உனக்கு தெரிஞ்சுருக்கும்.நம்ம ட்ரெஸ் நமக்கு பாதுகாப்பா இருக்கணும்..என்னை பாரு என்னை பாரு னு சொல்ற மாதிரி இருக்க கூடாது சம்ஜெ!! “ என்றவள் முதலமாண்டில் உள்ள பாடங்கள் பற்றியும் அதில் புரிந்து கொள்ள படிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றிய விவரங்கள் சொன்னாள்.

 

அவளின் அறிவையும் குணத்தையும் பார்த்து மலைத்து நின்ற செல்லக்கிளி யை அவளின் அலைபேசி ஒலி கலைத்தது. அலைபேசியில் புதிய எண்ணை ப் பார்த்தவள், பார்வையாலேயே நித்யாவிடம் அனுமதி கேட்டவாறு அழைப்பை எடுத்தாள்.

 

“ செல்லக்கிளி! நான் பூங்காவனம் பேசுறேன் .உன் காலேஜ் கிட்ட தான் இருக்கேன்.நீ காலேஜ் ல இருக்கியா? ஹாஸ்டல்ல இருக்கியா? “ என்று சொல்லவும் என்ன பதில் சொல்ல என்று ஒரு நிமிடம் தயங்கினாள். 

மீண்டும் பூங்காவனம்,” உங்கம்மா உனக்கு சில பொருட்களை கொடுத்து அனுப்பிருக்காங்க.. அதுக்கு தான் வந்தேன்…” எனவும்

 

“காலேஜ் ல தான் இருக்கேன்..” என்றாள்.

 

“அஞ்சு நிமிஷத்துல அங்கே வந்துருவேன். வரட்டுமா? இல்ல ஹாஸ்டெல் கு வரட்டுமா ?” என்று கேட்டவனிடம், பதில் கூற யோசித்தவள் இங்கே இருந்து வாசலை அடையவே பத்து நிமிடங்கள் ஆகிவிடும் ..அப்படியே வாங்கி கொண்டு சென்று விடலாம் என்று நினைத்தவளாய் ,”இங்கேயே கொடுத்துருங்க! நான் இன்னும் பத்து நிமிஷத்துல வாசலுக்கு வரேன். அங்கே பார்க்கிங் ல காத்திருக்குறீங்களா? “ என்று கேட்டாள்.

 

‘பல வருஷமா காத்திருக்குறவன் சில நிமிஷமா காத்திருக்க மாட்டேன்’ என்று எண்ணி மனதுக்குள் சிரித்தவன், “சரி “ என்றான் சுருக்கமாக. சென்னை மருத்துவக் கல்லூரி நோக்கி தன் வாகனத்தைத் திருப்பினான்.

 

ராஜலக்ஷ்மியும் திவ்யபாரதியும் பட்டீஸ்…. ப்ரீத்தி யும் நித்யாவும் ஒருங்கிணைப்புக் குழுவிலும் இருந்தார்கள். தங்களுடன் இணைந்து கொண்ட தோழியருடன் வண்டி நிறுத்தும் இடத்தை அடைந்த அனைவருக்கும் நேற்றைய ஞாபகம் வந்தது . ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டார்கள் .

 

நித்யா,”ம்ம்ம் இன்னிக்கு கோட்டா ஐ லவ் யூ வும் 100 சிட்டப்ஸ் எங்கே!!……” எனவும் திவ்யபாரதியின் முகம் நிலவேம்பு கஷாயம் குடித்த குழந்தை முகம் ஆனது.அவளின் முகம் பார்த்து அனைவரும் சிரிக்க, நித்யா அவள் தோளை அணைத்து,

 

“thyroid பிரோப்ளேம் ஏதும் இல்லியே! செக் பண்ணியா?” என்று கேட்டவளிடம் மறுப்பாக தலை அசைத்தாள் திவ்யா.

 

” எதுக்கும் ஒரு முறை பார்த்துக்கோ.ஜெனெக்டிக் ரீசனும் இருக்கலாம்..சோ டோன்ட் ஒர்ரி…”எனவும் திவ்யா சிரித்தவாறு சொன்னாள்,”ஐ லவ் யூ சீனியர்!” 

 

மலர்ந்து சிரித்தவள்,

“ஆக்சுவலா இன்னிக்கு காலரி ல பிரேஷர்ஸ் பார்ட்டி கொடுக்கிறது பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்னு தான் எல்லோரையும் வர சொல்லிருந்தேன்….இன்னிக்கு நேரமாகிடுச்சு. மன் டே பண்ணுவோம்.” என்றாவறே தன் ஸ்கூட்டி அருகே சென்றாள். 

 

 ஸ்கூட்டியை ஸ்டாண்ட் எடுத்து பின்னோக்கி இழுத்தவள் வண்டி சரிவில் நின்று கொண்டிருந்ததால் வேகமாக பின்னோக்கி நகர சமாளிக்க முயன்றவளின் பின்புறம் யார் மீதோ மோதியது..ஒரு கை அவளின் வண்டி சரியாமல் பிடித்து நிறுத்தியது. 

 

“சாரி சாரி” என்றவளாய் சமாளித்து நின்றவள் திரும்பி பார்க்க, கண்களில் கடுப்புடன் நின்று கொண்டிருந்தான் பூங்காவனம்..

 

*************************

 

எக்கணத்தில் காதல்பூ மலரும்..!!

எக்கணத்தில் நட்புப்பூ மலரும்…!!

அக்கணமே மனங்களும் மலரும்..!!

அக்கணமே குணங்களும் மாறும்…!!

 

பூமிப் பந்தை சுழற்றும் அவனே

மனங்களையும் சுழற்றுகிறான்..!

இன்னாருக்கு இன்னாரென்று

எழுதியே வைக்கிறான்……!

 

***********************************

 

 

 

சேதி 17

*********

 

தன் மனம் கவர்ந்தவளை பார்க்கும் ஆவலில் வேகமாக வந்த பூங்காவனம்,அவள் தன் தோழியருடன் நிற்பதைப் பார்த்து அவளைப் பார்த்தவாறே வர, தன் மேல் வந்து மோதுவது போல் வந்த வண்டியைப் பார்த்து அனிச்சை செயலாய் தடுத்து நிறுத்தினான்.

 

தன் மேல் வந்து இடித்த பெண்ணைக் கண்டு அவனின் கோபம் தலைக்கேறியது. பூங்காவனத்திற்கு அல்டரா மார்டர்ன் பெண்கள் என்றாலே ஆகாது. சென்னையின் பல இளம்பெண்களின் ஆடையும் மிதப்பான பார்வையும் முகபூச்சு அலங்காரங்களும்…அவனுக்கு எரிச்சல் மூட்டுவன..பெண்கள் இருக்கும் இடமென்றால் அவர்களை நிமிர்ந்தோ தலைத்திருப்பியோ பாராமல், கண்டுகொள்ளாமல் செல்வது தான் அவன் இயல்பு. அவ்வாறே வந்து கொண்டிருந்தவன் கண்களுக்கு செல்லகிளியைத் தவிர அனைவரும் பார்வை வட்டத்திற்கு வெளியில் மங்கலாக தெரிய, வண்டியை எடுத்து கொண்டிருந்தவளை அவன் கவனிக்கக் கூட இல்லை.

 

தன் மேல் வந்து மோதியவளை ப் பார்த்து ஆத்திரம் மிக,” வண்டி எடுக்கும் போது பின்னாடி பார்க்க மாட்டீங்களா!!? நான்.வந்ததால…பிடிச்சுட்டேன்.. வயசானவங்களோ.. ஏன் இந்த காலேஜ் பொண்ணுங்க யாராவது வந்திருந்தா கூட ஆளுக்கு ஒரு திசைல விழ வேண்டியது தான்!!”

 

“ வண்டி ஸ்லோப் ல இருந்துருக்கு நான் கவனிக்கலை பையா..அதுனால கொஞ்சம் தடுமாறிட்டேன். அடி பட்டுருச்சா சாரி” என்றவளை நிமிர்ந்தும் பார்க்காமல் ,”அதெல்லாமில்ல! “ என்றவன் பேச்சை நிறுத்தி செல்லகிளியை பார்த்தவாறே நகர்ந்தான்.

 

நித்யா தடுமாறியதும் வேகமாக வந்த அவளின் தோழிகள், சிரித்தவாறே வண்டியை பிடிக்க போக, முறைத்தவளை பார்த்து கையை எடுத்து கொண்டனர்.

 

மிருதுளா சிரித்தவாறே,” வாத்து னு நீ கிண்டல் பண்ற வண்டி…. உன்னை சாய்க்க பார்த்ததா!!!

ராயல் எனபீல்டு ஓட்டுறவ…இந்த சின்ன ஸ்கூட்டி கிட்ட தடுமாறிட்டியே..!!”

என்று கேலியை த் தொடரவும்..முறைத்தவள் ,”அரே பாபா!!!! இது ரொம்ப குள்ளமா இருக்கு..அதான் பாலன்ஸ் இல்லை…” என்றவள் திரும்பி பார்த்துவிட்டு “ அந்த பையா குறுக்க வரலைனா நானே சமாளிச்சுருப்பேன்” எனவும் , பூங்காவனம் திரும்பி பார்த்தான்.

 

“ஏங்க என்னை பார்த்தா பையன் மாதிரியா இருக்கு??” எனவும்,

 

தலையில் கைவைத்த நித்யா,” அது பையன் இல்லே…பையா…மத்லப் பிரதர்….” எனவும் ,சரிதான் என்பது போல் திரும்பிக் கொண்டான்.அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பு வர, அவனை கேலி செய்வதாய் நினைப்பனோ என்று அடக்கிக் கொண்டனர்.

 

அவன் செல்லகிளியின் அருகில் சென்று நிற்பதைப் பார்த்த நித்யா, “தோத்தி!!! உனக்கு தெரிஞ்சவரா?”

எனவும்,

 

“ஆமா நித்யா மேம்! எங்க ஊர்காரர்…இங்கே வேலை பார்க்குறார்….அம்மா பொருள் கொடுத்து அனுப்பிச்சுருக்கங்க” என்றாள் வேக வேகமாக.

 

“ஓ..….நீம் கிலே ல இருந்து வந்துருக்காரா!! சாரி ப்ரோ!! “ என்று சிரித்தவள், கை அசைத்துவிட்டு கிளம்பினாள். அனைவரும் கையை அசைத்து விட்டு அவரவர் வழியில் சென்றனர்.

 

அவள் நித்யா மேம் எனவும் ஆச்சர்யமாக பார்த்தவன்,” இவுங்க லெக்ச்சரரா??”

 

“இல்ல ..சீனியர்.!”எனவும்

 

பூங்காவனம்,” ஓ, இவுங்க உனக்கு பிரின்ட் ஆ!! சரி தான்…உன் ஹாஸ்டல் எவ்ளோ தூரம்..நான் கூட வரவா…? இந்த பை உனக்கு கொடுத்து விட்டுருக்காங்க.. நீ எப்படி தூக்கிட்டு போவ..நான் வண்டில கொண்டு வந்து கொடுக்குறேன்..”,

 

“இல்ல நடந்து போற தூரம் தான். நானே எடுத்துக்குறேன் ..” என்று பையை வாங்கக் கை நீட்டினாள்.

 

“உன் அம்மாட்ட பேசுறியா!! நேத்து நீ போன் போடலையாம்..அவுங்க கூப்பிட்ட போது எடுக்கவும் இல்லையாம்….”

 

“காலைல பேசிட்டேன்..” என்றவள்….சற்று தயங்கி,”உங்க அம்மா எப்படி இருக்காங்க?..” எனவும் ,”அதான் தினமும் ஈஸ்வரி கூட பேசுறியே!! சொல்லிருப்பாளே!!! இங்க கூட்டிட்டு வரலாம் னா யாரும் ஒத்து வர மாட்டேங்குறாங்க…..”என்றான் வருத்ததோடு,

 

அவ்வளவு நேரம் கூடவே நின்று கொண்டிருந்த ராஜலக்ஷ்மியும் திவ்யபாரதியும் குடும்ப விவரம் பேச ஆரம்பித்ததும் சற்று நகர்ந்து செல்ல ஆரம்பித்தனர்.

அதை பார்த்த செல்லக்கிளி ,

அவர்கள் தனக்காக காத்திருப்பதை உணர்ந்து சங்கடமுற்றவளாய் ,” நான் கிளம்பட்டுமா!! “ என்றாள் தயக்கத்துடன்.

 

அவளையே ஆழ்ந்து பார்த்தவன் தலை அசைத்தான்.

“இங்கிருந்தே பக்கத்துல தான் நான் தங்கி இருக்கும் இடம். வர இருபது நிமிஷம் தான் ஆகும் . எதுவும்னா கூப்பிடு…”சற்று நிறுத்தியவன்,” அத்தையும் ..உங்க அம்மாவும் உன்னை அடிக்கடி போய் பார்த்துக்க சொன்னாங்க!!” எனவும், ‘இந்த அம்மாவை….’ என்று மனதிற்குள் தாளித்து கொட்டியவள்…

 

சரி என்பது போல் தலை அசைத்து,”தேங்க்ஸ்” என்றாள் .

 

பள்ளிசிறுமியாக இவ்வளவு நாள் தெரிந்தவள், கல்லூரிப் பெண்ணின் மிடுக்குடன் நிமிர்வுடன் இருப்பதை ரசனையோடு பார்த்தான்.

 

இரட்டைசடை பின்னலுக்குள் ஒளிந்திருந்த கூந்தல் லேசாக வாரி தளர ஒற்றை பின்னலாய் இருக்க,

கருநீல சுடிதாருக்குள் மெல்லிய உடல் மறைந்திருக்க ,முகம் மட்டும் அன்றலர்ந்த தாமரையாய் ….பெண்ணவளின் அழகு கண்களை இழுக்க பார்த்தவாறே இருந்தான்.

 

அவனின் பார்வை தன்னை அளப்பதை உணர்ந்தவள் மனதில் ஏனோ எரிச்சல் வர அவ்வளவு நேரம் இருந்த இலகுத் தன்மை தொலைத்தவளாய்,”வரேன்…” என்று விட்டு வேகமாக திவ்யாவிடம் சென்றாள்..

 

பாண்ட் பாக்கெட்டில் கை வைத்தவாறே பார்த்துக்கொண்டிருந்தான்…..அவள் நடந்து செல்வதை……..

 

 

***************************

 

 

அப்போது தான் தன் அலுவலகத்தில் இருந்து வந்த கௌரி, வழக்கத்துக்கு மாறாக வீட்டில் இருந்த மணிச்சந்த் ஐ பார்த்து ஆச்சர்ய பட்டவராய்,

 

“என்ன இந்த நேரத்துல வீட்ல இருக்குறீங்க?”

 

“உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்!!”

 

“சொல்லுங்க” என்றவாறு தன் கைப்பை, முதலான பொருள்களை அதன் இடத்தில் வைத்தார்.

 

“வந்து உட்கார்”எனவும்,

 

“என்ன பந்தோபஸ்தெல்லாம் பலமா இருக்கு..” என்றவாறு வந்து அமர்ந்தார்.

 

“ ம்ம் விஷயம் அப்படி நம்ம கடைக்கு பக்கத்துல இருக்குற கடை காலி பண்ண போறாங்க.. அதை நாம க்ரயம் பண்ணிக்கிட்டு நம்ம கடை இன்னும் பெரிசா போடலாம். அதுக்கு முன்பணம் நான் கொடுத்துருவேன். மிச்ச பணம் கொடுக்க நம்ம ஏற்பாடு பண்ணனும்.”

 

அவரைக் கூர்ந்து பார்த்தவர்,”அதுக்கு….”

 

“நம்ம வீடு நிலம் சிவகாசி ல இருக்குல்ல ,அதை வித்தா என்ன?”

 

கௌரி அந்த இடத்தை விட்டு எழுந்தவராய், “ உங்களுக்கே தெரியும் ,நினைச்சா உடனே இந்த மாதிரி சொத்துக்களை விக்க முடியாது. யாரால இப்போ அங்க போய் தங்கி இருந்து அதற்கான வேலைகள் செய்ய முடியும்?”

 

என்றவரை உட்காரும் படி சைகை செய்தவர்,”நாம ஏன் போகணும் ,யாராவது ப்ரோக்கர்ஸ் ட சொல்லிட்டா போதும்..அவுங்க பார்த்துப்பாங்க..”

 

பெருமூச்சு விட்டவர்,”இப்போ எதுக்கு கடை பெரிசு பண்ணனும், மன்யுக்கோ நித்திக்கோ அது தேவை இல்லை..”

எனவும் கோபத்துடன்,”எனக்குன்னு சில ஆசைகள் இருக்கும்”

 

“எனக்கென்னவோ அது சரினு படலை…”

 

“ நீ அங்கே போக பயப்படுறியா..இல்ல அந்த ஊரோட உன் சொந்தம் விட்டுப் போக கூடாதுன்னு நினைக்குறியா!!” எனவும் கண்ணில் வலி எழ ,உற்று பார்த்தவர், தன் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

 

தன் அறையிலிருந்து வெளியே வந்த மன்யுவை பார்த்து மணிச்சந்த் திகைத்தார்.

 

பொதுவாகவே மணிச்சந்த் குரல் மெதுவாகத்தான் ஒலிக்கும். வியாபாரிகளுக்கே உரிய தனித்துவம். மெதுவாக அழுத்தமாக நிதானமாக ஒலிக்கும் குரல்.

மன்யுவின் அறையில் எப்போதும் ஏதாவது இசை ஒலித்துக்கொண்டிருக்கும்.அதை மீறியா கேட்டுவிட்டது என்று யோசனையாய் அவனைப் பார்த்தார் மணிச்சந்த்.

 

“ஏன் அம்மாவைப் பார்த்து அப்படி கேட்டீங்க ?”

 

“மன்யு உனக்கு இது தேவை இல்லாதது!”

 

“தேவையானது தான். அது நானாஜி அவர் உழைப்புல ஆசையா வாங்கினது னு மா நினைக்குறாங்க..அது தப்புங்குற தொனி வருது உங்க பேச்சு ல!!”

 

என்றவனைப் பார்த்தவர் ஏதும் சொல்லப்பிடிக்காதவராய் ,”டீகே! நான் கடைக்கு கிளம்புறேன்..”,வெளிவந்த கௌரிய பார்த்து,” நல்லா யோசிச்சு வை..இன்னும் அந்த சொத்து அங்கே இருக்கணுமானு….”

 

அப்போது உள்ளே நுழைந்த நித்யா வழக்கத்திற்கு மாறாய் வீட்டில் இருக்கும் தந்தையையும், இறுக்கமாக இருக்கும் அனைவரின் முகத்தையும் பார்த்தவள் ,சூழலை இலகுவாக்க,வேண்டுமென்றே நொண்டியவாறு நடந்தாள்.

 

“இந்த வாத்து வண்டி யால நான் இன்னிக்கு கீழ விழ த்தெரிஞ்சேன். ஒரு ஆள்ட்ட திட்டும் வாங்கினேன்,எனக்கும் மன்யு வண்டி மாதிரி பைக் தான் வேணும்…” என்று சொன்னதும்

 

தலையில் அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். கௌரியின் அருகில் வந்தவள் அவரின் முகத்தைப் பார்த்து, “இன்னிக்கு என்ன ஸ்னாக்ஸ் பண்ணலாம்னு யோசிக்குறீங்களா கௌரி மாதா!! ஏதாவது சிம்பிள் ஆ ரோட்டி நவரத்ன குருமா ஆர் மலாய் கோப்தா பண்ணுங்க போதும்!” எனவும் சிரித்தவாறு அவள் தலையில் தட்டினார்…

 

“ இன்னிக்கு ஸ்னாக்ஸ் உனக்கு ஜீரா பானி தான்”

 

“ஒஹ்..பானி பூரியா!!! நோ பிரோப்ளேம்” என்றுவிட்டு நொண்டியவாறு தன் பொருட்களை மேசைமீது வைத்தாள். அதைப் பார்த்த மன்யுவிற்கும் சிரிப்பு வந்தது.

 

“ நீ வாசல்ல இருந்தே நொண்டுறதுக்கு மறந்துட்ட சுட்கி. “

 

‘அடடா பார்த்துட்டானா….இவன போலிஸ் கு படினா..இப்போவே போலீஸ் மாதிரி…இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு அலையுறான்…” என்று தலையில் கை வைத்தவள்…

 

“பாணி பூரில பங்குக்கு வருவீல்ல அப்போ சொல்றேன்..” என்று நாக்கை துருத்தி பழிப்பு க் காட்டியவள், தன் அறைக்குள் நுழைந்து,’என்ன..மாநாடு போட்டு பேசிட்டு இருந்தாங்க எல்லோரும்..கௌரி மாதாஜி முகம் டல்லா ஆகிடுச்சு…எல்லாம்….இந்த மணி பண்ற அமர்க்களம்….ம்ம்ம் மணிக்கு மணிகட்டனும் போலவே…’ என்று நினைத்தவள் தோளை க் குலுக்கிவிட்டு ,வழக்கம்போல குளிக்க சென்றாள்.

 

**************************

 

வனராஜன் தன் மின்னஞ்சலை பார்த்த போது ,அதில் சில முக்கிய விஷயங்கள் கிடைத்திருப்பதாகவும் , நேரம் கிடைக்கும் போது அழைக்கும் படியாகவும் துப்பறியும் நிறுவன நபரிடம் இருந்து தகவல் வந்திருந்தது.

 

உணவு இடைவெளியின் போது அழைத்த வனராஜனுக்கு கிடைத்த தகவல்கள் , கௌரி கோபிச்சந்த் மேத்தாவை நெருங்கி கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை தோற்றுவித்தது.

 

கௌரி மேத்தா தன் பெயரை கௌரி அகர்வால் என்று மாற்றியிருக்கிறார். அதற்கான ஆவணங்களைக் கொடுத்து பெயர் மாற்றம் மற்றும் அவர் மேல் படிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழக த்தில் தொடர போவதாக இடமாற்றம் போன்றவற்றிற்கு விண்ணப்பித்து வாங்கி இருக்கிறார்…இது அவர் வேம்பகோட்டை விட்டு சென்று இரண்டு வருடங்களுக்குப் பிறகு. எனவே சென்னையிலும் மாற்றம் செய்யப்பட்ட பெயரை வைத்தும் தேடினால் அவரை கண்டுபிடிக்க முடியும் என்று நம்பிக்கை தருவதாக இருந்தது.இந்த தகவல்கள். இந்த பெயர் மாற்றம், ஏனோ வனராஜனின் மனதில் நம்பிக்கை தருவதாய்.

 

அடுத்து மத்திய அமைச்சரின் மகனான நண்பனுக்கு அழைத்து சில விவரங்களைக் கேட்டவன் புன்முறுவலுடன் அழைப்பை துண்டித்தான்.

 

மணியைப் பார்த்தவன், இப்போது கல்லூரி முடிந்திருக்கும் என்று எண்ணியவனாய், ‘good evening’ என்று செய்தி அனுப்பிவிட்டு தன் அலுவலை பார்க்க ஆரம்பித்தான். அலைபேசி ஒளிரவும் ,பார்த்தவன, நீந்துவது போல் எமோஜி பார்த்து, சிரித்தவாறு, கட்டை விரல் காட்டும் எமோஜி அனுப்பிவிட்டு தன் அலுவலில் இறங்கியவன், அடுத்து வேலை முடித்து கிளம்பும் நேரம் தான் பார்க்க முடிந்தது.. என்ன!! ஏதாவது கோபமாக அனுப்பி இருப்பாள் என்று பார்த்தவனின் எதிர்பார்ப்பை பொய்க்கா வண்ணம் கோப எமோஜிக்கள் வந்து விழுந்து கிடந்தன.

 

புன்முறுவலுடன் கோட்டை எடுத்தவனின் அருகில் வந்தாள் சினேகா..,” ராஜ்!! ஷால் வீ கோ போர் அன் அவுட்டிங் அண்ட் டின்னர்? “ என்று கேட்டவளிடம், முக்கிய வேலை இருப்பதாக சொல்லி மறுத்தவன், தான் தங்கியிருக்கும் இடம் நோக்கி சென்றான்.

 

‘சாப்டாச்சா’ என்று செய்தி அனுப்பிவிட்டு தனக்கான தேநீரை நுண்ணலை அடுப்பில் வைத்துவிட்டு உடைமாற்றி வந்தவன், அலைபேசியை பார்க்க குறட்டை விடும் எமோஜி வந்திருந்தது.

 

‘தூங்குமூஞ்சி’ என்று அனுப்பிவிட்டு தேநீரை அருந்தினான். பின்

 

‘பேசணும்’ என்று அனுப்பவும் ஒரு நிமிடம் கழித்து,

‘கூப்பிடுங்க’என்று பதில் வந்தது.

 

‘ப்பா ரொம்ப பண்றாளே’ என்று நினைத்தவன்,அழைக்க, எடுத்தவளின் ‘ கண்ணத்தான் ‘ காக காத்துக் கொண்டியிருக்க,

 

“ஹலோ” எனக் கிளி கொஞ்சியதும்…சொத்தென்று ஆனது வனராஜனுக்கு. அந்தக் கோபத்தைக் கேலியாக மாற்றி,

 

“இன்னிக்கும் வெறும் தரையில் நீச்சலடிக்கும் ராகிங் தானா…. ஒரு சேஞ்சு வேண்டாம்… நானா இருந்த கூவம் ல நீச்சலடினு சொல்லிருப்பேன்.” என்றான்.

 

 

“என்னது கூவம் ஆஹ்..உவ்வக்..” என்றாள்.

 

“ஹா ஹா.. கம்மாயில குதிச்சு குதிச்சு குளிச்சவ தானே நீ…அதுவும் இன்னும் கொஞ்ச நாள் ல…. இல்ல … இப்போவே அப்படித்தான் …எல்லாரும் கழிவு தண்ணி எல்லாம் அதுல தானே விடுறீங்க.”

 

“ம்ம்..இந்த ராத்தரில கழிவுநீர் மேலாண்மை பத்தி பேச தான் கூப்பிடீங்களா!”

 

“அட…இவ்ளோ தமிழ் தெரியுமா உனக்கு!!”

 

திரும்ப முன்பு போல் வம்பிழுக்கும் வனராஜனுடன் பேசுவது அவளுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

 

“ தமிழ் தெரியும் …பிடிக்கும் . நான் தான் டிஸ்ட்ரிக்ட் பரஸ்ட்…தெரியுமா!!!”

 

“தெரியுமே “ எனவும்

 

“ம்க்கும் ஒரு வாழ்த்து கூட சொல்லாதவுங்களுக்கு நான் வாங்கின மார்க் தெரியுமாம்!!!”

 

எனவும் கடகடவென்று அவளின் மதிப்பெண்கள் விவரம் சொன்னான்.

 

“அய்யாட்ட கவுன்சிலிங் பத்தி எல்லாம் பேசுநீங்க தானே… பின்ன ஏன் நீங்க பேசலை என்கூட…”

 

சற்றுநேரம் அமைதியாய் இருந்தவன்,

“இன்னிக்கு ராகிங் இல்லை தானே ஹாஸ்டல் லயும் பிரச்சனை இல்லை தானே !!”

 

“ம்ம் காலைலயே ஏதோ மந்திரம் போட்ட மாதிரி ஹாஸ்டல் அமைதியா இருந்துச்சு.. காலேஜ் லயும் நோடீஸ் போர்ட் லயே போட்துருந்தங்க.” என்றவள் இன்றைய கல்லூரி நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டாள். சீனியர் பட்டிஸ் ஜூனியர் படடீஸ் பற்றி சொன்னவள்..தன் SB பெயர் நித்யா என்றுவிட்டு ,ராகிங் செய்ததை சொன்னாள்.

 

பொதுவாக அதிகம் பேசாத செல்லக்கிளி , இப்போது தயக்கமே இல்லாமல் பேசுவதை ஆச்சர்யதுடனும் மகிழ்ச்சியுடனும் கேட்டு கொண்டிருந்தான் வனராஜன்.

 

 

தோழியை.. குடும்பத்தை பிரிந்து இருப்பவள் , அக்கறையுடன் பேசும் சொந்ததுடன் பேசுவதால் வந்த மாற்றமா, இல்லை தனக்கென்று வந்ததா,அந்த கள்ளமில்லா கிள்ளை மனதில் தனக்கு என்ன இடம் கொடுத்திருகிறாள் என்று அறியும் ஆர்வம் வந்தது அவன் மனதில். அதற்கான சமயம் இன்னும் வரவில்லை என்று எண்ணிக்கொண்டவன்,

 

இப்போது சாயங்காலம் தானே, நைட் சாப்பாடு நீங்களே செய்வீர்களா, வெளியே போவீர்களா..என்று ஏதேதோ கேட்டவளின் கேள்விகளுக்கு பதில் சொன்னவன், “சரி தூங்கு, குட் நைட்” எனவும்,

 

அவனின் கிளியும் சமர்த்தாக”குட் நைட்”, என்றது

 

”குட் நைட்………” என்று அவன் இழுக்க அதற்கும் குறும்பு சிரிப்புடன் ”குட் நைட்” என்றாள்.

 

 

‘அத்தான்னு சொல்ல வைக்க இவ்ளோ அலைய வைக்குறாளே’ என்று கடுப்பானவன்…அழைப்பை துண்டித்தான்.

 

இந்த கௌரி மேத்தா பிரச்சனை எல்லாம் சரி செய்துவிட்டு, அப்பறம் பேசிக்குறேன் உன்னிடம் என்று நினைத்தவன், திரும்பவும் மனதில் மலர்ந்து மனம் வீச தொடங்கிய அவள் நினைவுகளை என்ன செய்வது என்று புரியவில்லை. இதற்கு தானேடி உன்னுடன் பேசாமலே இருந்தேன் என்று எண்ணியவன், படிக்கும் பெண்ணை இதற்கு மேல் மனதை குழப்பக் கூடாது என்று தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டவனாய், தன் வேலையை கவனிக்க சென்றான்.

 

வழக்கம் போல் அன்னையுடன் பேசியவன் தந்தையைக் கேட்க, அவர் பிரிண்டிங் ஆர்டர் விஷயமாக சென்னை சென்றிருப்பதாக சொன்னார் சொர்ணக்கிளி. மாதம் ஒரு முறை சென்னைக்கும் அவ்வப்போது வட இந்தியாவிற்கும் செல்வது அவர் வழக்கம் தானே என்று எண்ணிக்கொண்டவன், ஏதோ யோசனையில் ஆழ்ந்தான். தலையைக் குலுக்கி அதை தடை செய்தவன், தந்தைக்கு அழைக்க அவரின் அலைபேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக வந்தது..விரக்தி சிரிப்புடன்..பல வருடங்களாவே அப்படி தான் போல என்று எண்ணிக் கொண்டான்.

 

********************

 

வறண்டு கிடந்த மனக்குளத்தில்

மழையாய் வந்து விழுந்தாளே…

புதைக்கப்பட்ட ஆசைகள்..

விதைக்கப்பட்ட நேசமாய்..

வீறுகொண்டு எழுகிறதே…

வேறுபெயர் வைத்துக்கொண்டு

அடிநெஞ்சில் தித்திக்குதே….

 

 

கிள்ளை மொழி கேட்டவுடன்..

கயல்களாய் துள்ளுதே

அவள் நினைவுகள்..

மலர்ந்து மணம் வீசுதே …

மறக்கப்பட்ட உணர்வுகள்…

 

மறைக்கப்பட்ட காலப்பதிவு…

காலாவதியான காதல்…

தூற்றப்பட்ட நட்பு..

போற்றப்பட்ட உறவு…

எதிர்கொண்டு நிற்குமே…

ஏனென்று கேட்குமே…

 

தந்தையின் தவறுகளுக்கு

பதில் சொல்வானா(ளா)…

தாயின் வேதனைக்கு

விடை சொல்வானா….!!!!!

 

****************************

 

கிளி பேசும்!

What’s your Reaction?
+1
1
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0
தாமரை

Recent Posts

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…

1 day ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-17/18

(17)   அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…

2 days ago

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே அத்தியாயம் 18,19,20

    சேதி 18 *********                    நள்ளிரவை…

3 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-15/16

(15)   அன்று மாலை வீடே பெரும் களோபரமாக இருந்தது. நாளை நிச்சயதார்த்தம் என்பதால், அலங்காரம் செய்வதற்கு ஆட்களை அழைத்திருந்தான்…

6 days ago

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே! அத்தியாயம் 15

சேதி - 15 “கால் மீ சீனியர்! ஆர் நித்யா மேம்! ஐ ஆம் நித்யகௌரி மேத்தா!” எனவும், அவளின்…

7 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-13/14

(13)   அவன் நடக்க நடக்க அணைந்திருந்த விளக்குகள் தாமாகவே எரிய, அவன் அந்த இடத்தை விட்டு அகன்றதும் யாருடைய…

7 days ago