Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-22

22

 

மறு நாள் சமர்த்தி சமையலறைக்குள் நுழைந்தபோது லீயோடு சேர்த்து இன்னொரு புதிய சமையலாளும் நின்று சமைத்துக்கொண்டிருந்தார்.

‘இது யார் புதிதாக? பார்த்தால் இந்தியர் போல இருக்கிறதே…’ என்று வியந்தவளாகச் சற்றுத் தள்ளி நின்றிருந்த லீயைப் பார்த்து, யார் என்பதுபோலப் புருவங்களை மேலேறிக் கேட்டாள்.

புன்னகைத்த லீ,

“இவர் இந்திய இலங்கை உணவுகளைத் தயாரிப்பதற்காக மிஸ்டர் உத்தியுக்தன், புதிதாக வரவழைத்திருக்கிறார். இவருடைய பெயர் அருள்தாஸ்…” என்ற லீ அருள்தாஸின் பக்கமாகத் திரும்பி,

“அருள்தாஸ், இவர்கள்தான் இந்த வீட்டு எஜமானி… இவர்களுக்காகத்தான் சமைக்கப் போகிறாய்…” என்றதும் சமர்த்தி தன் வாயைப் பிளந்தாள்.

அவள் ஒருத்திக்காக என்று ஒரு சமையல் காரரா? நம்ப முடியாதவளாய் விழிகளைப் பலமுறை கொட்டியவளுக்குத் தனக்காகத் தனக்குப் பிடித்த சமையலை செய்ய ஒரு சமயலாளை வரவழைத்த உத்தியுக்தனின் மீது மேலும் காதல் பல்கிப் பெருகியது.

அவள்மீது அன்பில்லாமலா இப்படி அவளுக்குப் பிடித்தமான உணவுகளைத் தயாரிக்கவென்று ஒரு சமையலாளை வரவழைத்தான்? அப்படியானால், அவள் மீது அவனுக்கு ஏதோ ஒரு எக்ஸ் வை ஸட் இருக்கிறது என்றுதானே பொருள்.

குதுகலத்துடன் உத்தியுக்தனைத் தேடிப் போக, அவன் குளியலறைக்குள் நின்றிருந்தான் போலும். தண்ணீர் சத்தம் வந்துகொண்டிருக்கக் கதவைத் தட்டினாள்.

அவள் தட்டியது அவனுக்குக் கேட்கவேண்டுமே. அவனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றதும், கதவின் குமிழைத் திறக்கக் கதவு திறந்தது.

நின்று குளிக்கும் இடத்தின் கண்ணாடிக் கதவு மூடியிருக்கச் சற்றும் யோசிக்காது கதவைத் திறக்க, அவன் அப்போதுதான் தலை முழுவதும் ஷம்பூ போட்டு உடல் முழுவதும் நுரை பொங்க நின்றிருந்தான்.

திடீர் என்று குளிக்குமிடத்தின் கதவு திறந்ததும், அவசரமாகக் கண்களை மறைத்திருந்த நுரையைத் துடைத்துவிட்டவாறு திரும்பிப் பார்க்க, அங்கே முகம் பளபளக்க நின்றிருந்தாள் சமர்த்தி.

எரிச்சலும் ஆத்திரமும் வர,

“வட் த ஹெல் ஆர் யு டூயிங் ஹியர்…” என்று சீற, அவளோ அதைப் பற்றியே கவலை கொள்ளாது,

“எதற்காக அந்தப் புதுச் சமையல் காரரை அழைத்து வந்தீர்கள்…?” என்றாள் பரபரப்பாக.

“வட்…” என்று அவன் புரியாமல் கேட்க,

“அங்கே தென்னிந்திய இலங்கை உணவு தயாரிக்க அருள்தாஸ் என்கிற ஒருவரை வரவழைத்து இருக்கிறீர்களே… ஏன்?” என்றாள் ஆவலாக.

அவனோ அருவி எனக் கொட்டும் நீரில் நின்று தலையில் நுரையாக இருந்த ஷாம்புவைக் கழுவிவிட்டு, முகத்திலிருந்த தண்ணீரை வடித்து எடுத்தவாறு அவளை முறைத்துப் பார்த்தான்.

“அதைக் கேட்க உனக்கு நேரகாலம் இல்லையா. இப்போதா வந்து கேட்பாய்?” என்றான் பெரும் கடுப்புடன். இவளோ, தன் இடையில் கரங்களை வைத்து,

“எங்கே பேச, வாய்ப்புக் கொடுக்கிறீர்கள்? கிடைக்கும் நேரத்திலும் பேச விடுவதில்லை. இல்லை என்றால் வேலை என்று மாயமாகி விடுகிறீர்கள். அதுதான் இங்கே இந்த நிலையில் உங்களை நிறுத்திக் கேள்வி கேட்கிறேன்…” என்று கிண்டலாய் கூறினாலும், அதில் அவளை ஒதுக்கிவிட்டு ஓடும் அவனைப் பற்றிய குற்றச்சாட்டே நிறைந்திருந்தது.

அதைக் கேட்டதும் அவளை அலட்சியம் செய்து, சவர்க்காரம் போகக் குளித்துவிட்டு அங்கிருந்த துவாய் ஒன்றை எடுத்து இடுப்பில் கட்டியவன், இன்னொரு துவாய் எடுத்துத் தலையைத் துவட்டியவாறே, குளிக்கும் இடத்திலிருந்து வெளியே வந்து அங்கிருந்த கண்ணாடிக்கு முன்பாக நின்று தலையைக் கோதிவிடத் தொடங்கினான். அதைக் கண்டவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

இங்கே ஒருத்தி முக்கியமான கேள்வி ஒன்றை இடம் பொருள் ஏவல் இல்லாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறாள், இவன் என்னவென்றால் ஒய்யாரமாகத் தலை கோதுகிறானே… வந்த ஆத்திரத்திற்கு அவன் கரத்திலிருந்த சீப்பைப் பறித்து எறியவேண்டும் என்கிற வேகம் எழுந்தது. ஆனாலும் முடியாதே.

முதலில் அவன் கரத்திலிருந்த சீப்பைப் பறிக்க வேண்டும் என்றால், அவன் உயரத்திற்கு எட்டும் வகையில் மேடை ஒன்று வைக்க வேண்டும். அப்படியே வைத்தாலும் அவனைத் தொடுவது சாத்தியமல்ல. அவளைப் பின்னிப் பெடல் எடுத்துவிடுவான். அதனால் அடக்கி வாசிக்க எண்ணியவளாய் பொறுமையை இழுத்துபிடித்து நிற்க, அவனோ, சீப்பைக் கிட்டத்தடட்ட அங்கிருந்த மேடையில் தூக்கிப் போட்டுவிட்டு, குளியலறையை விட்டு வெளியேற முயன்றான்.

இவளோ அவசரமாக அவனுக்கு முன்பாக வந்து நின்று, “கேட்டேனே… எதற்காக அவரை வரவழைத்தீர்கள்.. எனக்காகத்தானே… தென்னிந்திய இலங்கை வகையறா உணவுகள் பிடிக்கும் என்று தானே அழைத்து வந்தீர்கள்…?” என்று விழிகள் மின்னக் கேட்க, அவனோ மகிழ்ச்சியில் மின்னிய அந்த இரு விழிகளையும் ஒரு கணம் இமைக்காது பார்த்தான்.

பின் ஒரு வித சுவாரசியத்தோடு அவள் தேகத்தை மேலிருந்து கீழ்வரை பார்த்தான். அவளை நெருங்கி, அவளுடைய குண்டுக் கன்னங்களைக் கிள்ளி விட சட்டென்று சிவந்தன அவை. உடனே சிவந்த கன்னக்கதுப்பை வருடிக்கொடுத்தவாறு,

“யெஸ்… யு ஆர் ரைட்… உனக்காகத்தான் அவரை வரவழைத்தேன்…” என்று கூற, இவளுடைய முகம் பளிச் என்று மலர்ந்தது.

அவளுக்காகத்தான் வரவழைத்திருக்கிறான் என்றால், அங்கே அவள் மீது காதல் பிறந்துவிட்டது என்றுதானே அர்த்தம். குதித்து எழுந்த உணர்வைச் சிரமப்பட்டு அடக்கியவள், கன்னத்தை வருடிய பெருவிரலின் சுகத்தில் சொக்கியவளாய், விழிகளை மூடிக் கிறங்கி நின்றவள், அதை அனுபவித்தவாறே,

“அப்படியென்றால், உங்களுக்கும் என்னைப் பிடிக்கத் தொடங்கிவிட்டதா?” என்றாள் குதுகலமாக.

அதுவரை அவளுடைய கன்னத்தை வருடிக் கொடுத்தவன், அவள் கேட்டதை உள்வாங்காது, அளுடைய கரத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவனுடைய வெற்று மார்பில் மோதி நிற்க, அவளுடைய இடைநோக்கித் தன் ஆண்மை மிக்க கரங்களைக் கொண்டு சென்று தன்னோடு நெரித்தவன்,

“கடந்த இரண்டு கிழமைகளில் உனது உடல் எடை சற்றுக் குறைந்துவிட்டதோ என்று தோன்றியது. நீ வேறு உன் அண்ணி வீட்டில் விரும்பி உண்டாயா… சரிதான்… உனக்குத் தென்னிந்திய இலங்கை உணவுகள்தான் பிடிக்கும் என்று புரிந்து கொண்டேன்… அதனால் அவரை வரவழைத்தேன்…” என்றபோது இவளுடைய கண்கள் கலங்கிவிட்டன.

அவள் சற்று உடல் இளைத்துவிட்டதைக் கூடக் கவனித்திருக்கிறான் என்றால், அது அக்கறை இல்லாமல் வேறு என்ன.

தாளமுடியாத சந்தோஷத்தில் அவனுடைய கழுத்தைச் சுற்றிக் கரங்களை எடுத்துச் சென்று அணைத்தவள், திண்ணிய இரும்பினை ஒத்த அவன் மார்பில் தன் தலையைப் பதித்து,

“ஓ காட்… உதிதன்… இறுதிவரைக்கும் வெறுப்புடனே நம் வாழ்க்கை கடந்துவிடுமோ என்று நினைத்து வருந்தினேன் தெரியுமா… இப்போதுதான் மகிழ்ச்சியாக, மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றவள் அவன் கழுத்தைச் சுற்றிய கரத்தை விலக்காது அவனை அண்ணாந்து பார்த்து,

“மெல்ல மெல்ல என்னை ஏற்கத் தொடங்கி விட்டீர்கள் உதி…” என்று கூற, இவனுடைய உதட்டில் மெல்லிய ஏளனப் புன்னகை ஒன்று மலர்ந்தது. ஒற்றைக் கரத்தின் விரல் கொண்டு அவளுடைய புஷ்டியான பட்டுக் கன்னத்தை வருடிக் கொடுத்தவன்,

“உன்னை ஏற்றுக் கொள்வதா? அந்தச் சமையலாளை வரவழைப்பதற்கும், உன்னை ஏற்றுக்கொள்வதற்கும் என்ன சம்பந்தம்?” என்று இவன் கேட்க, இவளோ மீண்டும் அவன் மார்பு சாய்ந்து,

“அன்பில்லாமலா எனக்குப் பிடித்த உணவைத் தயாரித்துக் கொடுக்கச் சமையலாளை வரவழைத்தீர்கள்…?” என்று கேட்டபோது அவளையும் மீறி உதடுகள் குவிந்து அவன் மார்பில் முத்தமிட்டன.

இவனோ, அந்த உதட்டு முத்தத்தில் ஒரு கணம் சிலிர்த்தவனாய் நின்றான். பின் சிரமப்பட்டுத் தன்னை நிலைப்படுத்தியவனாய்,

“நீ கொஞ்சம் அவசரக்காரி என்று எனக்குத் தெரியும், ஆனால் இப்படிக் கற்பனை செறிந்த அவசரக்காரி என்று நான் நினைக்கவில்லையே சதி…” என்று கிண்டலுடன் கூற, அந்தக் குரலில் எதுவோ உறுத்த நிமிர்ந்து பார்த்தாள் சமர்த்தி.

அவனோ பளபளத்த விழிகளோடு, இவளை உற்றுப் பார்த்தவன்,

“பின்னே என்னம்மா… எங்கு கரங்களை வைத்தாலும் போதை தரும் பஞ்சுபொதியான உன் உடலைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டாம்..? ஜூலியட்டை விட, உன் தேகம் எனக்கு கொடுக்கும் மகிழ்ச்சி, அளப்பரியது தெரியுமா… இந்த உடல் மெலிந்துபோகாமல் பாதுகாப்பது என்கடமை இல்லையா?” என்றவன் அதைக் கரங்களால் உணர்த்தியவாறே, அவள் காதுகள் நோக்கிக் குனிந்து எதை எதையோ கூறி, அவளுடைய இரத்த அழுத்தத்தை எகிறச் செய்தவன், பின் நிமிர்ந்து அவளுடைய முகத்தைப் பார்த்து,

“உன் உடலின் எடை, சொற்பம் குறைந்தால் கூட, அந்தப் போதை குறைந்துவிடும் சதி… எனக்கு இந்தப் பூரித்த சமர்த்திதான் வேண்டும்… அதனால்தான் உனக்குப் பிடித்தமான சமயலைச் செய்ய ஒருவரை வரவழைத்தேன். எவ்வளவு சாப்பிடப் போகிறாயோ தயங்காமல் கேட்டு வாங்கிச் சாப்பிடு. அப்புறம் உன் அண்ணன் வீட்டிற்குப் போய்க் காணாததைக் கண்டது போலச் சாப்பிட வேண்டி இருக்காது.” என்றான் ஏளனமும் கிண்டலுமாக.

அதைக் கேட்டதும், ஆத்திரத்துடன் அவனை விட்டு விலகிய சமர்த்தி அவனைப் பார்த்து முறைத்தாள்.

“எல்லாமே வெறும் இந்த உடலுக்காகத் தானா?” என்றாள் சீறலாய். இவனோ மெல்லியதாய் நகைத்தவாறு,

“பின்னே வேறு எதற்க்கென்று நினைத்தாய்? நம் இருவருக்கும் உள்ள தொடர்பே அதை வைத்துதான்… அதைக் கவனமாகப் பாதுகாக்கும் பொறுப்பு என்னதுதானே” என்றவன் அவளுடைய முகம்நோக்கிக் குனிய, அருவெறுப்போடு அவனை விட்டு விலக, அவனோ மேலும் அவளை வெறுப்பேற்றுபவன் போல

“இந்தச் சதைப்பற்றான உடல் தானே உங்களுக்குப் போதை ஏற்றுகிறது… இந்த உடலைக் குறைத்து அந்த ஜுலியட் போல மெலிந்து உங்கள் ஆசை மீது மண்ணைப் போடவில்லை… நான் சமர்த்தியில்லை…” என்று சபதம் செய்தவள், கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறு கீழே வந்தாள்.

நெஞ்சமெல்லாம் போர்களமானது.

எத்தனை ஆசை கற்பனைகளோடு இருந்தாள். அத்தனையையும் ஒரு வினாடியில் தவிடுபொடியாக்கி விட்டானே. நினைக்க நினைக்க இவளால் தாளவே முடியவில்லை. இந்த ஜென்மத்தில் அவளை ஏற்று கொள்வான்போலத் தெரியவில்லையே. கடவுளே, எப்போது அவள் செய்ததை மறந்து மன்னிப்பான்…?

நெஞ்சமெல்லாம் விம்ம, அழுகை கொப்பளிக்கச் சமையலறைக்குள் நுழைந்தவளை வரவேற்றது காரசாரமான கட்லட். அதைக் கண்டதும் ஆத்திரம் பற்றிக்கொண்டு வர, தட்டோடு கரத்தில் எடுத்தவள், அதைச் செய்துவைத்த அருள்தாஸை முறைத்தாள்.

அவரோ வேறு ஒரு பலகாரத்தைச் செய்வதில் முனைப்பாக இருந்தார்.

இங்கே ஒருத்தி எதுவும் சாப்பிடாமல் மெலிந்து போவதாகச் சபதம் செய்திருக்க, இங்கே வகை வகையாகப் பலகாரமா செய்கிறாய்… வந்த கோபத்தில் பலகாரத் தட்டைத் தூக்கித் தரையில் விசிறப் போனவள், இறுதியாக அதை மேசையில் தொப்பென்று போட்டுவிட்டு அதிலிருந்த இரண்டு கட்லட்டைக் கரத்தில் எடுத்து ஒன்றை வாய்க்குள் திணித்தாள்.

அதன் ருசியில் அத்தனை கோபமும் பத்தோடு பதினொன்றாய் காணாமல் போனது.

மகிழ்ச்சியோடு அருள்தாஸைப் பார்த்து,

“மிக நன்றாக இருக்கிறது… ஆனால் காரம் கொஞ்சம் தூக்கலாய் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்…” என்று குற்றப்பத்திரிகையும் வாசித்து விட்டு, இன்னும் இரண்டு கட்லட்டை கரத்தில் எடுத்தவாறு, இதுதான் கடைசி, இனிமேல் ஒரு பருக்கை கூட வாயில் வைப்பதில்லை என்கிற மன உறுதியோடு தன் அறை நோக்கிச் சென்றாள்.

சற்றுப் பொறுத்து, வேலைக்குப் புறப்பட்ட உத்தியுக்தனுக்கு அவளுடைய சபதம் மனத்தைக் குடைந்தது.

ஒருவேளை உண்மையாகவே சாப்பிடாமல் இருந்துவிடுவாளோ. அவளை பார்க்கும்போதே தெரிந்தது பசி பொறுக்கமாட்டாள் என்று. ஏனோ அவள் சாப்பிடாவிட்டால் என்ன என்று அவனால் கடந்துபோகமுடியவில்லை. ஒருவித தவிப்பு மனதை ஆக்கிரமிக்க, சமையலறை நோக்கிச் சென்றான். அங்கே அருள்தாசும் லீயும் ஓய்வாக இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இவனைக் கண்டதும் அவசரமாக எழத்தொடங்க, அவர்களைத் தடுத்தவன்,

“இட்ஸ் ஓக்கே… சிட் டவுன்…” என்றுவிட்டு, “சமர்த்தி சாப்பிட்டாளா?” என்றான் மெல்லிய தயக்கத்துடன்.

இதுவரை யாரைப்பற்றியும் கவலைப்படாதவன், முதன் முறையாகாது தன்னவளுக்காய் வருந்துவது கூட உணராது கெட்டவனிடம்,

“யெஸ் சார்… கட்லட் செய்திருந்தேன் விரும்பிச் சாப்பிட்டார்கள்.” என்றதும்தான் இவனுக்குப் பெரும் நிம்மதியானது.

“ஓ… குட்… எது சாப்பிட்டார்கள்?” என்று இவன் கேட்க, விரைந்து சென்று எஞ்சிய கட்லட்டை எடுத்து அவன் முன் நீட்டினார் அருள்தாஸ்.

அதை எடுத்துப் பார்த்தவனுக்கு, அதை சாப்பிடலாமா வேண்டாமா என்கிற தயக்கம் எழுந்தது.

பொரித்த உருண்டையாய் இருந்ததை மூக்கில் வைத்து முகர்ந்து பார்த்தான். மீன் வாடை அடித்தது. ஆனாலும் மசாலா வாசனை பிடித்தமான இருக்க, அவள் ருசித்ததை தானும் ருசிக்கவேண்டும் என்கிற ஒரு வித வேகத்தில் பாதியைக் கடித்தவனுக்கு, அதில் ஒரு துளியைக்கூட விழுங்க முடியவில்லை. நாக்குத் தொடக்கம், அடிவயிறு வரை காரத்தால் எரிய, முகம் சிவந்து கண்கள் கலங்கிப் பேசக்கூட நா பிறழாமல் திணறிப்போனான் உத்தியுக்தன்.

“வட் த ஜ்ஜ்ஜ்ஜ் இஸ் தட்…” என்று சீறியவனுக்கு மூச்சே எடுக்கவே முடியவில்லை. அருள்தாஸோ பதறிப்போனார்.

“சாரி சார்… சாரி…” என்று பதறும்போதே லீ, குளிர்பானம் கொண்டுவந்து உத்தியுக்தனிடம் நீட்ட, வாங்கியவன் கடகவென்று அதைக் குடித்து முடித்த பின்புதான் ஓரளவு சமநிலைக்கு வந்தான்.

இதுவரை காலமும் காரமான உணவைத் தொட்டே பழக்கப்படாதவனுக்குப் பச்சை மிளகாய் தூக்கலாய் போட்டுச் செய்யும் கட்லட் இனிக்கவா செய்யும்?

அப்படி என்ன விரும்பிச் சாப்பிட்டாள் என்பதை அறிய எண்ணித்தான் அந்தக் கட்லட்டை வாய்க்குள் போட்டான். ஆனால் அது இத்தனை காரமாக இருக்கும் என்று அவன் நினைக்கவேயில்லை. இதை எப்படிச் சாப்பிட்டாள். துடித்திருப்பாளே, ஆத்திரத்துடன் அருள்தாசைப் பார்த்து,

“எதற்கு இப்படிக் காரமாகச் செய்தீர்கள்..” என்று கேட்க, அருள்தாஸோ,

“மாடம் இதற்கே காரம் குறைவாக இருக்கிறது குறைப்பட்டார்கள்…” என்றார் தடுமாறியவாறு.

“வட்… இதை விடக் காரமாகவா?” என்று கேட்டவனுக்கு அவளுடைய நாக்கு சதையா இல்லை நெகிழியா என்கிற சந்தேகமே எழுந்தது.

கரத்திலிருந்த கட்லட்டை அதற்கு மேல் சாப்பிட முடியாமல் குப்பைத் தொட்டியில் போட்டவன், கரங்களைக் கழுவிவிட்டுக் கலங்கிய கண்களை அங்கிருந்த வெண் துவாயில் துடைத்துவிட்டுத் திரும்பி,

“இட்ஸ் ஓக்கே… மடம் விரும்பிக் கேட்பதைச் செய்து கொடுங்கள்…” என்று விட்டு வெளியேறியவனுக்கு எனோ நாக்கு மரத்துவிட்ட உணர்வு. இரண்டு வேறு வேறு துருவங்கள் எப்படி ஒன்றாகப் பயணிக்குமோ.

இப்படியே இரண்டு மாதங்கள் கடந்து சென்றன. இருவருடைய வாழ்க்கையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் பயணித்தது.

உத்தியுக்தன் என்னதான் விலகியிருப்பது போலத் தோன்றினாலும் சின்னச் சின்னச் செயல்களினால், அவளுடைய வசதிகளைக் கவனிக்கத் தவறவில்லை. இவளும் அதைச் சுட்டிக்காட்டுவது இல்லை.

இவள் வேறு ஏதாவது ஆர்வமாய் கேட்கப்போய், இவன்வேறு எடைக்கு முடக்கம் பதில் கூறினால்…. அதனால் அவனுடைய செயலைக் கன்டும் காணாமலும் இருந்துகொண்டாள் சமர்த்தி.

என்னதான் பார்த்துப் பார்த்து செய்தாலும், அவளை மட்டும் மனதால் நெருங்கவே விடவில்லை. இவளும் முடிந்த வரை முயன்று பார்த்தாள். ம்கூம் இம்மியும் அவன் விட்டுக் கொடுக்கவில்லை. இறுதியில் கிடைத்த வரை லாபம் என்பது போல அவனுடனான இரவு தனிமையை விரும்பியையே அனுபவித்தாள்.

இப்போதெல்லாம், அனைத்தும் முடிந்த பிற்பாடு, அவளுடைய நெற்றியில் மெல்லியதாய் ஒரு முத்தம் கூட வைக்கத் தொடங்கியிருந்தான் உத்தியுக்தன்.

அவன் கொடுக்கும் இன்பத்தின் கோடானுகோடி மகிழ்ச்சியை அந்த ஒற்றை முத்தம் மொத்தமாய்க் கொடுத்து விடும். அந்த முத்திற்காகவே தவம் இருப்பதுபோலத் தோன்றும் சமர்த்திக்கு.

அந்தப் புதிய பரிமாணம் அவனுடைய மனமாற்றத்தின் வெளிப்பாடு என்பதைத் தெளிவாகவே புரிந்துகொண்ட சமர்த்தி, அவன் முழுதாக மாறும் நாளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.

அன்று மாலை உத்தியுக்தன் மிகுந்த மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வந்தான். இருக்காதா பின்னே, தட்டிச் சென்ற கனடிய வியாபார நிறுவனம் மீண்டும் அவனுக்கு விருது கொடுத்துக் கௌரவிக்க முடிவு செய்திருந்தது. அதற்காக ஒட்டொவாவிற்குப் பிரதமர் கையால் விருது வாங்கச் செல்லவேண்டும். எத்தனை நாள் கனவு இது. பெரும் மகிழ்வுடன் வீட்டிற்கு வந்தவன், நேராகத் தேடிச் சென்றது சமர்த்தியைத்தான்.

அவளால்தானே அந்த வாய்ப்பை முன்பு இழந்தான். மீண்டும் இதோ எழுந்து நின்று விட்டானே. இதை அவளுக்குக் காட்டவேண்டாம். பரபரப்புடன், வீட்டிற்கு வந்தவன், அவளைத் தேடிச் செல்ல, வீட்டில் அவள் இல்லை.

எங்கே சென்றாள்? குழப்பத்துடன் வெளியே வந்தபோது, அவள் தோட்டத்திலிருந்த இருக்கையில் அமர்ந்திருப்பது தெரிய, அவளை நோக்கிச் சென்றபோதுதான் தெரிந்தது அவள் உறக்கத்தில் இருக்கிறாள் என்று.

சத்தமிடாது அவளை நெருங்கியவனுக்கு உறங்கிய அந்தப் பட்டு முகம், இவன் நெஞ்சில் ஏதேதோ புது உணர்வுகளைப் பொங்கியெழச் செய்ய, தூங்கும் அவள் முகத்தைப் பார்க்கும் ஆர்வத்தோடு, அவளுக்கு முன்பாக ஒன்றைக் கால் மடித்து அமர்ந்தவனுக்கு, ஏனோ அவளுடைய முகத்தை விட்டு விழிகளை விலக்கவே முடியவில்லை.

இதுதான் முதன் முறை அவள் உறங்கும் அழகைப் பார்ப்பது. தன்னை மீறி உறங்கிய அந்தக் குழந்தை முகத்தைக் கண்டவனுக்கு ஏனோ அவனையும் மீறி விழிகள் சற்றுக் கனிந்து குழைந்து போயின.

பிறை நெற்றியில் அசைந்தாடிப் பறந்த ஒரு சில கற்றை முடிகள், சற்றுப் பிளந்திருந்த உதடுகளின் மத்தியில் புகுந்து முத்தமிடத் தொடங்க, அதைக் கண்டதும் இவனுக்குள் மெல்லிய எரிச்சல் எட்டிப் பார்த்ததோ? தன் கரத்தைத் தூக்கியவன், சுட்டு விரலால் சதிராடித் திரிந்த கூந்தலை ஒதுக்கிக் காதுகளுக்கு இடையே செருகிவிட இப்போது இம்சித்தன சற்று வெளியே தெரிந்த மாதுளை வித்துக்களைப் போன்ற அழகிய வெண்ணிறப் பற்கள்.

பிளந்த உதடுகளையும், அதில் மின்னலாய்த் தெரிந்த பற்களையும் கண்ட உத்தியுக்தனின் உதடுகள் சடார் என்று வறட்சியைக் கண்ட நிலம் போலக் காய்ந்து போனது. அதை ஈரப்பற்றாக்கும் சக்தி அவளுடைய உதடுகளுக்கு மட்டும்தான் உண்டோ? இப்போது அவனுடைய விழிகள் குண்டுக் கன்னத்தில் நிலைத்தன.

அன்று அண்ணன் வீட்டில் ரசித்து ருசித்து உணவு அருந்தியது நினைவுக்கு வந்தது. அவருடைய அன்பான பராமரிப்பில்தான் அவள் இத்தனை குளுமையாகவும் செழிப்பாகவும் இருக்கிறாள். அவனுக்குத் தெரிந்து சமர்த்தி உடல் எடையைப் பற்றி வருந்தியதே கிடையாது. சாப்பாடு என்றால் கொள்ளைப் பிரியம். அதை அவளுடைய பூசிய தேகம் மிக நன்றாகவே எடுத்துக் கட்டியது. அது இவளுக்கு மிக மிகப் பொருத்தமாகவும் இருந்தது. யார் சொன்னார்கள் மெல்லிய தேகம்தான் அழகு என்று. இதோ சிலையில் சிற்பம் வடித்ததுபோல இருக்கும் இவள் தேகத்தின் அழகுக்கு நிகராக யார் வருவர்…

மெல்ல மெல்ல அவள் முகத்தை விடுத்துச் சரிந்து படுத்திருந்தவளின் தேகத்தின் எழிலை எந்தவிதக் கிலேசமும் இன்றி ரசித்துப் பருகத் தொடங்கினான் உத்தியுக்தன்.

ஒவ்வொரு இரவும் காமம் தீர்க்க அணைத்த உடல்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் அவனுக்குப் புதுப் புதுக் கவிதைகள் சேர்க்க அவை தவறியதில்லை.

அவன் மணந்தது என்னவோ தன் கோபத்தையும் பழி உணர்ச்சியையும் தீர்க்கத்தான். ஆனால் அதையும் மீறி ஏதோ ஒன்று… அவள் பால் அவனை இழுத்துச் செல்வதை அவனால் தடுக்கவும் முடியவில்லை.

ஒவ்வொரு இரவும் அவளை அணைத்தவாறு உறங்கச் சொல்லும் மனதையும் உடலையும் ஒரு கட்டுக்குள் கொண்டுவர அவன் எத்தனை சிரமப் படுவான் என்பது அவனுக்கு மட்டும்தானே தெரியும்.

இப்போது அவனுடைய நினைவுகள் ஜூலியட்டிடம் சென்றது. ஜூலியட் அழகி. மிகப் பெரும் அழகி. இல்லையென்றால் மாடலிங்கில் முன்னணியில் இருந்திருக்கமாட்டாள். அப்படிப் பட்டவளோடு ஒன்றாக இருந்தான்தான். ஆனால் இந்தளவுக்குப் போதையை அவளுடைய உடல் கொடுத்ததில்லை.

அவள் நாகரிக கிட்டார் என்றால், இவள் இனின்னிசையூட்டும் வீணை. அவள் சத்தம் கொடுக்கும் ட்ரம் செட் என்றால், இவள் தாளத்தோடு ஐக்கியமாக்கும் மிருதங்கம். அவள் சற்று அலறலாய் பாடும் சக்ஸஃபோன் என்றால், இவள் சுருதியோடு காதைக் குளிரவைக்கும் புல்லாங்குழல். ஜூலியட்டின் ஒவ்வொரு அசைவிலும் நாகரிகம் இருக்கும். இவள் அசைவில் எதார்த்தத்துடன் கூடிய குழந்தைத்தனம் இருக்கும். அழகு இருக்கும். பெண்மையின் மென்மை இயற்கையாய் கொட்டிக்கிடக்கும்… ஒவ்வொரு முறையும் அவளை நெருங்கும்போது, எதற்கு அவளை மணந்தோம் என்பதைச் சுத்தமாக மறக்கடிக்கும் எழில் இருக்கும்.

தன்னை மறந்து அவளுடைய உறக்க நிலையை ரசித்துக்கொண்டிருந்தபோது, அவளிடம் மெல்லிய அசைவு.

இருந்தாற்போல அவளுடைய தலை ஒரு பக்கமாகச் சரியத் தன்னை மறந்து சரிந்த தலையைத் தன் உள்ளங்கையில் மலரெனத் தாங்கிக்கொண்டான் உத்தியுக்தன்.

சரிந்த மதி முகத்தை இமைக்காது பார்த்தவன் என்ன நினைத்தானோ, அவளுக்கு அருகாமையில் அமர்ந்து அவள் மதி முகத்தைத் தன் மார்பில் சாய்க்க, தன்னவனின் இடது மார்பில் துயில் கொள்கிறோம் என்பது கூடத் தெரியாமல் இன்னும் வாகாகச் சரிந்து படுத்தவள், தன் உதட்டோரத்தில் வீணீர் வடிவது சிறு அசௌகரியத்தைக் கொடுத்ததோ, தூக்கத்திலேயே ஒற்றைகாரம் கொண்டு உதடுகளைத் துடைத்தவள், அதே கரத்தை அவன் மார்புச் சட்டையில் துடைத்துவிட்டு, மேலும் உறக்க நிலைக்குச் செல்ல, அவன் மார்பில் துடைத்த நிலையில் தங்கிய வலது கரம் மெதுவாகக் கீழே விழத் தொடங்கியது.

அந்த ஆண்மகனோ, விழுந்த அவள் கரத்தைத் தன் இடக்கரத்தால்தாங்க சிவந்த அந்தக் குண்டுக் கரங்கள் மானிறம் கொண்ட பலம் மிக்கப் பெரிய கரத்தில் மலரென விழத் தாங்கிக் கொண்டவனுக்கு, அந்தக் கரத்தின் அழகிலிருந்து வெளியே வரவே முடியவில்லை.

தன் தோள் வளைவில் குழந்தையெனச் சுருண்டு கிடந்தவளைக் குனிந்து பார்த்தவனுக்கு அவனையும் மீறி உதடுகள் இளகிப் போயின.

கூடவே வெப்பத்தின் தாக்கத்தால் வியர்வைத் துளிகள் அவள் கன்னத்தில் வழிந்து ஓடுவதைக் கண்டதும், மெல்லிய கோபமும் வந்தது. குளிரூட்டப் பட்ட அறைக்குள் படுப்பதை விடுத்து இப்படி வெய்யில் தணியாத இந்த நேரத்தில் மூசி மூசித் தூங்குகிறாளே…’ எண்ணியவனாக அவளுடைய உறக்கம் கலையாது, அவளைத் தன் கரங்களில் தூக்க முயல, அப்போதுதான் அவளுக்குப் பக்கமாக இருந்து ஒரு புத்தகம் கவிழ்ந்து தரையில் விழுந்தது.

புத்தகம் படித்துக்கொண்டே உறங்கியிருப்பது புரிய, சரிந்திருந்த புத்தகத்தை எடுத்துத் திருப்பிப் பார்த்தான், அவனையும் மீறி உதடுகள் சிரித்தன. ‘த ஆர்ட் ஆஃப் லவிங்…” “கார்பெஜ்… ஏதாவது பயனுள்ளதாகப் படிக்கிறாளா பார்…” எரிச்சலுடன் எண்ணியவாறே புத்தகத்தை மடித்து வைத்துவிட்டு, மார்பில் கிடந்தவளை அணைத்தவாறு தன் கரங்களில் குழந்தையென ஏந்திக்கொண்டான் உத்தியுக்தன்.

சற்றுக் கனம் கூடியவள்தான் சமர்த்தி. ஆனால் அவனுக்குப் பஞ்சுப்பொதியெனத்தான் தோன்றியது. அவன் ஏந்தியதும், அவளுடைய தலை சற்றுச் சரிந்து அவனுடைய திண்ணிய மார்பில் படிந்தபோது ஏனோ அவனுடைய உடல் முதன் முறையாக என்ன காரணத்தாலோ சிலிர்த்துக்கொள்ள, என்றுமில்லாத ஒரு தவிப்பு அவனிடத்தே.

நம்ப முடியாமல் குனிந்து தன் கரங்களில் கிடந்தவளைப் பார்க்க, இன்னும் உறக்கத்தின் வசமிருந்து விடுபடாதவளாக, உள்ளம் கவர் கள்வனின் கரங்கள் கொடுத்த மாயாஜாலத்தில் இன்னும் தன்னை மறந்து உறங்கிக் கொண்டு இருந்தாள்.

அவள் துயில் கலையாதவாறு அவளை ஏந்திக் கொண்டு தன் அறை நோக்கி நடந்து சென்றான்.

படுக்கையை நெருங்கியதும், அவளுடைய உறக்கம் கலையாவண்ணம் மெதுவாகக் கிடத்தி விட்டு விலக முயல, அவளோ தன் இரு கரங்களையும் அவன் கழுத்துக்கு மாலையாக்கி,

“உதி…” என்றாள் பட்டையொத்த மென் குரலில். அந்தக் குரல் இவனுக்குள் பெரும் பூகம்பத்தையே விளைவிக்க அசையாது நின்றான் அந்த மானுடன்.

அந்தக் குரல் சுட்டெரிக்கும் தீயைக் கூடக் குளிர்விக்க, முள்ளிலிருந்தும் மெல்லிய தேன் துளி கசிந்தது. அது கூட உறைக்காது தன்னை அழைத்தவளையே வெறித்துப் பார்த்தான். அந்த அழைப்பில் தெரிந்த காதலைக் கண்டவனுக்கு ஏனோ உலகமே தன் சுழற்சியை நிறுத்திய உணர்வு.

அவளோ அவனைத் தன்னை நோக்கி இன்னும் இழுத்தவாறு,

“உதி… ஐ லவ் யு..” என்றாள் பெரும் முணுமுணுப்புடன்.

அதுவரை தன்னிலை கெட்டிருந்தவனுக்கு அவளுடைய காதலின் வெளிப்பாட்டை அறிந்ததும் யாரோ தன் முகத்தில் குளிர் தண்ணீர் அடித்து ஊற்றியது போலச் சுயநினைவுக்கு வந்தான் உத்தியுக்தன்.

காதல்… அதுவும் அவளுக்கு அவன் மீது… எத்தனை தைரியம் இவளுக்கு… இவள் உறக்கத்தில் பிதற்றுகிறாளா இல்லை, உறங்குவது போல நடித்து இவனை எய்க்கப் பார்க்கிறாளா? அவள் சற்று முன் படித்த புத்தகம் வேறு அப்படிப்பட்டதாயிற்றே…’ என்று எண்ணியவனுக்கு ஏளனத்துடன் உதடுகள் நெளிந்தன.

மெய்க் காதல் என்று நம்பியதே அவன் கூட வரவில்லை. இதில் பழிவாங்குவதற்கென்று கட்டி வந்தவளுக்கு அவன் மீது காதலா? யாரை எய்க்கப் பார்க்கிறாள்.

முன்பும் அண்ணனின் வீட்டிற்கு வரவழைக்க எத்தனை நாடகமாடினாள். இவள் காதலிக்கிறாள் என்பதை நம்பி அவன் பட்ட அவமானங்களையும் ஏமாற்றங்களையும், இழப்புகளையும் மறந்து ஏற்றுக் கொள்வேன் என்று நினைத்தாளா… ஏற்றுக்கொள்ளக் கூடிய தவறையா செய்தாள்? காதலாம் காதல்… யாருக்குக் கதை விடுகிறாள்… நான் என்ன காதில் பூச் சொருகிக்கொண்டு இருக்கிறேனா என்ன? ஆத்திரம் கொண்டவனாச் சடார் என்று அவளைத் தள்ளிவிட்டு எழ, அதுவரை ஏதோ ஒரு உலகில் தன்னவனின் கையணைப்பில் கிடந்த சமர்த்தி அவன் தள்ளிய வேகத்தில் தூக்கம் கலைந்து விழிகளைத் திறந்து பார்த்தாள்.

அங்கே விழிகள் சிவக்க ஆத்திரத்துடன் உறுத்து விழித்துக்கொண்டிருந்த உத்தியுக்தனைக் கண்டதும், தூக்கம் கலையாமலே குழப்பத்துடன் முன்னால் நின்றிருந்தவனை ஏறிட்டாள். உறக்கத்தில் மூட முயன்ற விழிகளை பிடிவாதமாய் திறந்தவள், சிரமப்பட்டு எழுந்தமர்ந்தவாறு மீனும் அவனைப் பார்த்தாள்.

‘இவன் ஏன் இஞ்சி தின்ற குரங்கு போல இப்படி நிற்கிறான்?’ புரியாமல் குழம்ப,

“என்ன… உன் நடிப்புக்கு மயங்கிக் கிறங்கிப் போவேன் என்று நினைத்தாயா” என்று ஆத்திரத்துடன் கேட்டவன், அவளுடைய பதிலையும் கேக்காது, தன் அறைக்குச் சென்று கதவை அறைந்து சாற்றிவிட்டுக் கதவோடு சாய்ந்து நின்றவனுக்கு சற்று நேரம் எடுத்து சுயத்துக்கு வர.

அத்தனை சீக்கிரத்தில் என்னை ஏமாற்றலாம் என்று நினைத்தாளா என்ன?’ என்று எண்ணியவனால் ஒரு இடத்தில் சும்மா அமர முடியவில்லை.

‘உதிதன் ஐ லவ் யு’ என்கிற அந்த வாசகம் ஏனோ இவனை நிலையில்லாமல் தவிக்க வைத்தது. உண்மையாகவே காதலிக்கிறாளா? என்று எண்ணியவன் தன் தலையை வேகமாகக் குலுக்கி அந்த உணர்வை உதறித்தள்ள முயன்றான்.

ஜுலியட்டின் காதல் எத்தகையது என்று தெரியாதவனா இவன். மூன்று வருடங்கள் நகமும் சதையுமாக இருந்த ஜூலியட்டே அவனை நம்பாமல் நடுத்தெருவில் விட்டுவிட்டுச் சென்றிருக்க, அதற்குக் காரண கர்த்தாவாக இருக்கும் இவள் என்னைக் காதலிக்கிறாளாமா. இதை நான் நம்ப வேண்டுமா… என்னைப் பற்றி இவள் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறாள்? முட்டாள் என்று நினைத்தாளா?” என்று திரும்பத் திரும்ப முனங்கியவனுக்கு, மீண்டும் மனதில் ஆதி முதல் அந்தம் வரை அவளால் தன் வாழ்க்கையில் நடந்த வலிகள் நினைவுக்கு வந்தன.

அதுவும் உறவே வேண்டாம் என்று விலக்கிய அன்னையிடம் பணம் கேட்டபோது, அதற்கு அவர் கணவர் சொன்ன பதிலை இன்றும் அவனால் மறக்க முடியவில்லை. எத்தனை ஏமாற்றங்கள், வலிகள், அவமானங்கள். இவள் உச்சரித்த காதல் என்கிற அந்த சொல்லில் இவையெல்லாம் ஒன்றுமே இல்லையென்றாகிவிடுமா என்ன. எத்தனை தைரியம் இவளுக்கு. காதலிப்பதாகச் சொன்னால், உடனே இவன் உருகிக் கரைந்துவிடுவான் என்று நினைத்தாளா என்ன?

தீயாய் தகித்த உணர்வுகள் அனைத்தும், அவள் மீதிருந்த கொஞ்ச நஞ்ச அக்கறையையும் மொத்தமாய்ச் சுருட்டி மண்ணுக்குள் புதைத்தவன் போன்று நிமிர்ந்தான் உத்தியுக்தன்.

மண்ணுக்குள் புதைத்த அவனுடைய உணர்வுகள் முளை விட்டு விருட்சமாகுமா, இல்லை மண்ணோடு மண்ணாக உக்கிப்போகுமா?

What’s your Reaction?
+1
29
+1
9
+1
1
+1
0
+1
1
+1
0
Vijayamalar

View Comments

  • அருமையான பதிவு 😍😍😍😍
    அடப்பாவி தூங்குன சத்தியா டா உன்னையக் கூப்பிட்டா?.
    வந்தததும் இல்லாம சத்திய ரசிச்சிகிட்டு இருந்தததும் இல்லாம அவளைய தூக்கிட்டு போயி பெட்ல வச்சிட்டு உனக்கு எதுக்கு டா இத்தனை கோவம்!😤😤😤😤😤.
    அவளே தூக்கத்துல பேசறா. அதைக்கூட புரிஞ்சுக்கூட செய்யாம நாய் மாதிரி வள்ளு ன்னு வுழுகறே.🫤🫤🫤🫤🫤.

    இதுல சத்தியையும் அந்த தகரக்குச்சிக்காரியையும் ஒப்பீடா பண்ணறே😡😡😡😡😡😡😡😡😡😡.
    மவனே கைல கிடைச்ச வாரியல் பிய்யறளவுக்கு அடிப்பேன் டா தடிமாடே.
    ஆளும் அவுனும்😐😐😐😐.
    நெட்டைக் கொக்காட்டம் வளந்தா பத்தாது கொஞ்சம் மண்டைல 🧠🧠 கிரைனு வேலை செய்யோனும் டா.
    கையில இருக்குற வைரக்கல்லோட மதிப்பை புரிஞ்சுக்காம குப்பைல இருக்குற கூழாங்கல்லோடு ஒப்பீடு பண்ணறியா மங்கூஸ் மண்டையா 👿👿👿👿

    • உடனே அவன திட்டாட்டிக்கு பொழுது போகாதே. இத்தனைக்கும் உங்க ஆளு செஞ்சது மட்டும் நியாயமாக்கும். இதில அவன திட்டிபுட்டு அவளுக்கு சப்போர்ட்டு. எங்கடா அ்நத அருவாளு.

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

21 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

7 days ago

நீ பேசும் மொழி நானாக – 36/37

  விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…

1 week ago