Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-21

21

 

வாகனத்தை வாசலிலேயே நிறுத்திவிட்டு, இறங்கியவன் அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துக்கொண்டு தங்கள் பொது அறைக்குச் சென்று, கதவை அறைந்து சாற்றிவிட்டு, அவளை ஒரு தள்ளுத் தள்ளக் கட்டிலில் போய் விழுந்தாள் சமர்த்தி. ஆத்திரம் அடங்காதவனாக அங்கும் இங்கும் நடந்தவனுக்குச் சற்று நேரம் எடுத்தது வார்த்தைகள் வெளி வர.

“ஹெள டெயர் யு… ஹெள டெயர் யு டு திஸ் டு மி…?” என்று அவள் மீது பாய்ந்தவனுக்கு இரத்தமே கொதிக்கத் தொடங்கியது.

அவனுடைய நல்லகாலம் அவளுக்கு ஏதும் நடக்கவில்லை. ஏதாவது நடந்திருந்தால் நினைக்கும் போதே உடல் தூக்கிப் போட்டது.

முட்டாள். அன்றிலிருந்து இன்றுவரை எதையும் ஆராய்ந்து செய்யும் பழக்கம் இவளுக்கு இல்லையா… அந்தப் பழக்கம் வரவே வராதா? எல்லாவற்றிலும் அவசரம். அவதி.

ஆத்திரத்துடன் அவளைப் பர்க்க, அவளோ அப்பாவிபோலத் தலையைக் குனிந்திருந்தாளன்றி, ஒரு வார்த்தை பேசினாளில்லை.

“நெவர் எவர் எவர் டு திஸ் டு மி… டு யு அன்டர்ஸ்டான்ட்?” என்று கர்ஜித்தவன்,

“இந்த இடத்தில் நீ மட்டும் ஒரு ஆணாக இருந்திருந்தால்… நடந்திருப்பதே வேறு…” என்று சீற, அந்த நிலையிலும் இவளுடை உதடுகளில் மெல்லிய குறும்புப் புன்னகை ஒன்று மலர்ந்து பின் அடங்கிப் போனது. ஆனாலும் தன்னை அடக்க முடியாதவளாகத் தன் விழிகளை விரித்து,

“அவனா நீங்கள்…” என்றாள் தன்னை மறந்து. முதலில் அவள் என்ன சொல்ல வந்தாள் என்பதைப் புரியாமல் குழம்பியவன், மறு கணம் எதைக் குறிப்பிடுகிறான் என்பதை உணர்ந்துகொண்டவனாக, ஆத்திரத்துடன் அவளை நெருங்கியவன்,

“நான் எப்படிப் பட்டவன் என்று உனக்குத் தெரியாதா என்ன? சந்தேகம் இருந்தால் நம்முடைய படுக்கையைக் கேட்டுப் பார் அது சொல்லும்…” என்று சுள்ளென்ற விழ, பக்கென்று தன் வாயை மூடிக்கொண்டாள் சமர்த்தி.

இன்னும் கோபம் தணியாதவனாக,

“எங்கே உன் அலைபேசி…” என்றதும், அவளோ பதில் கூறாமல் திரு திரு என்று விழித்தாள்.

ஆத்திரம் வந்தவனாகத் தனக்கு அருகேயிருந்த சுவரை ஓங்கிக் கரத்தால் குத்த, அவன் குத்திய குத்தில் ஏற்பட்ட சத்தத்தில் ஒரு கணம் துள்ளி எழுந்தாள் சமர்த்தி. பெரும் பயத்தோடு அவனை ஏறிட்டுப் பார்க்க, வேகமாக அவளை நெருங்கியவன், அவளுடைய கரத்தைப் பற்றித் தூக்கி ஒரு உலுப்பு உலுப்பி,

“அறிவிருக்கிறதா உனக்கு? யாரைக் கேட்டுப் பாதுகாப்பு இல்லாமல் சென்றாய்? என்ன தைரியம் உனக்கு… போகும் வழியில் ஏதாவது நடந்தால்… உன்னை யார் எனக்குத் திருப்பிக் கொடுப்பார்கள்?” என்று அவன் தன்னை மறந்து வாய் விட, சமர்த்தியோ அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றாள்.

என்ன சொன்னான், அவளை யார் கொடுப்பார்களா? அப்படியால் அதற்கு என்ன அர்த்தம்? புரியாமல் திகைக்க, அப்போதுதான் அவனுக்கும் தான் உளறியது புரிந்ததோ. ஒரு கணம் குழம்பி நின்றான். பின் தெளிந்தவனாய்,

“என் வாழ்க்கையையே அதளபாதாளத்திற்குள் தள்ளிய உன்னைப் பழிவாங்காமல் எப்படி விடுவது” என்றான் சுள்ளென்று.

இன்னும் அவள் செய்த காரியத்தை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதோ இப்போதும் அந்தப் பதட்டம் கொஞ்சம் கூடக் குறையவில்லையே.

“சொல்.. எந்தத் தைரியத்தில் என் காவலர்களை ஏமாற்றித் தனியாக உன் அண்ணன் அண்ணி வீட்டிற்குச் சென்றாய்? யாரைக் கேட்டுத் தனியாகச் சென்றாய்” என்று கேட்க அவனை உதறி விடுவித்தவள்,

“யாரைக் கேட்க வேண்டும் என்கிறீர்கள். என்னுடைய அண்ணா அண்ணியின் வீட்டிற்குச் செல்வதற்கு யாருடைய அனுமதி வேண்டும்…? அங்கே செல்வதைத் தடுக்க, அந்தக் கடவுளுக்கே உரிமை இல்லை என்கிற போது, உங்களுக்கு எங்கிருந்து வந்தது.” என்று சினத்துடன் கேட்டவளைப் புரியாமல் பார்த்தான் உத்தியுக்தன்.

“என்ன உளறல் இது. உன் அண்ணன் அண்ணியிடம் போக வேண்டாம் என்று எப்போது சொன்னேன்…” என்று எரிச்சலுடன் கேட்க, இவளோ குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.

“இ… இப்பொது யாரைக் கேட்டுப் போனாய் என்றீர்களே” என்று அவள் தயங்க,

“யாரைக் கேட்டுத் தனியாகப் போனாய் என்று கேட்டேனே தவிர, உன்னைப் போகவேண்டாம் என்று நான் மறிக்கவில்லையே. எந்தத் தைரியத்தில் பாதுகாவலர்களை விடுத்துத் தனியாகப் போனாய் என்றுதான் கேட்கிறேன்.” என்று ஆத்திரத்துடன் கூற, சமர்த்தி விழித்தாள்.

அப்படியானால் அங்கே போவதால் இவனுக்க எதுவுமே இல்லையா? நான்தான் தவறாகப் புரிந்து கொண்டேனா? இவள் பாதுகாப்பை மறுத்துவிட்டுச் சென்றதுக்காகத்தான் இத்தனை கோபப்படுகிறானா?

“எனக்கு எதற்குப் பாதுகாப்பு. நான் என்ன குழந்தையா தொலைந்து போக. எனக்கு அந்தப் பாதுகாப்பு பிடிக்கவில்லை. சுதந்திரமாகக் கூடச் சென்றுவர முடியவில்லையென்றால் அது என்ன வாழ்க்கை…” என்று பதிலுக்கு எகிற, அவனோ நிதானமாக இவனைப் பார்த்து,

“உனக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, வெளியே போகும்போது பாதுகாப்போடுதான் போகவேண்டும்”

“உங்கள் பாதுகாப்பைக் குப்பையில் கொட்டுங்கள். எனக்கு எந்தப் பாதுகாப்பும் வேண்டாம்…” முறுக்கிக்கொள்ள,

“அப்படியா.. சரி.. அப்படியானால் இன்றிலிருந்து நீ இந்த வீட்டைவிட்டு எங்கும் போகமுடியாது. நான் அழைத்துச் சென்றால் அன்றி… புரிந்ததா?” என்றான் நிதானமாக. அவளோ அவனை அலட்சியமாகப் பார்த்து,

“இந்த வீட்டிலேயே அடைந்து கிடப்பதற்கு நான் என்ன அடிமையா உங்களுக்கு…? உங்கள் இஷ்டத்திற்கு என்னை ஆட்டிவைக்கலாம் என்று நினைக்காதீர்கள். இரவில் உங்கள் விருப்பத்திற்கு கேற்ப நான் வளைந்து கொடுக்கிறேன் என்றால் அதற்குப் பின்னால் நான் செய்த மாபெரும் தவறுதான் காரணம். அந்தத் தவற்றுக்குப் பிராயச்சித்தமாகத்தான் இரவில் உங்கள் உடல் பசிக்கு இரையாகிப்போகிறேன். தவிர நீங்கள் நினைப்பது போல நான் ஒன்றும் உங்கள் அணைப்பில் பொசுங்கிப் போகவில்லை… சொல்லப் போனால் உங்கள் அணைப்பு எனக்குப் பிடித்துத்தான் இருக்கிறது… அப்படிப் பார்த்தால், இருவருக்குமே ஒருவரை ஒருவர் தேவைப்படுகிறது… ஆனால் பாருங்கள், என்னைப் பழிவாங்கவென்று படுக்கையைப் பயன்படுத்தினீர்கள், அந்தப் படுக்கையே எனக்கு வரமாக இருக்கிறது என்றால் உங்கள் பழிவாங்கல் எந்தளவு பலவீனமாக இருக்கிறது…” என்று கிண்டலுடன் கூற. உத்தியுக்தன் சமர்த்தியை ஒரு வித அழுத்தத்தோடு பார்த்தான். இவளோ அவனை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. மாறாக, அவனை நேராகப் பார்த்தவள்,

“இப்போது என்ன? உங்களுக்கு ஆத்திரம் வரும்… அடுத்து என்ன செய்வீர்கள்… படுக்கைக்கு அழைப்பீர்கள்… அவ்வளவுதானே…?” என்றவள், நிதானமாகத் தன் சட்டையின் மேல் பொத்தானைக் கழற்றியவாறு இவனை நெருங்கினாள்.

இருவரின் தேகமும் ஒன்றோடு ஒன்று உரசும் நிலைக்கு நெருங்க, உத்தியுக்தனோ அவளுடைய முகத்தை உற்றுப் பார்த்தான். அவன் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தவள், அவன் இடையோடு கரங்களைக் கொண்டு சென்று தன்னோடு இறுக்கி,

“நீங்கள் என்ன என்னை அழைப்பது… நானே அழைக்கிறேன். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை…” என்றவாறு கூற, இவனுடைய தேகம் தான் விறைத்துப் போனது. அப்படியிருந்தும் விட்டாளா இவள்.

“அடடே… உங்களுக்கு இரவுதானே அது தேவைப்படும். இப்போது நேரம் மூன்று மணிதானே. ஆறு மணி நேரத்திற்கு காத்திருக்கவேண்டும்… ப்ச்… பரவாயில்லை… காத்திருக்கிறேன்…” என்று கூறப் பலமாக அவளைத் தன்னிடமிருந்து பிரித்தவன், அவளைக் கட்டிலில் தள்ளிவிட்டு ஆத்திரத்துடன் அவளை நெருங்க முயல, அப்போதும் அடங்கினாளா அவள்? அலட்சியமாக அவனை ஏறிட்டு,

“என்ன, இதுவும் பழிவாங்கலின் சேர்த்தி இல்லை என்று தெரிந்ததும், என்னை அடித்துத் துன்புறுத்தப் போகிறீர்களா? இது என்ன இரண்டாந்தர நாடு என்று நினைத்தீர்களா? கனடா நினைவில் இருக்கட்டும்… உங்கள் கரம் என் மீது அத்துமீறிப் பட்டுது… அதன் பிறகு சந்தி சிரித்துவிடும் ஜாக்கிரதை…” அவள் முடிக்கவில்லை மறு கணம் அவளை நோக்கிப் பாய்ந்தவன், அவனுடைய உதடுகளைத் தன் உதடுகளால் வன்மமாகப் பற்றிக்கொண்டான். திடீர் என்று இப்படிச் செய்வான் என்று நினைத்திராத சமர்த்தியோ மலைத்துப் போனாள்.

எப்போதும் அவனுடைய உதடுகளின் முத்தம் அவளுக்குப் போதைதான் ஏற்றும். ஆனால் முதன் முறையாகக் காயம் வரும் அளவிற்கு அவை அவளுடைய உதடுகளைத் தண்டிக்க வலியில் திணறிப்போனாள் சமர்த்தி.

அவனிடமிருந்து விடுபட முயன்றவள் முடியாமல் தவிக்க, அடுத்து அவனுடைய கரங்கள் அவள் தேகத்தில் பரவி மிகப்பெரும் வலியை ஏற்படுத்த, முடிந்தவரை தன்னை அடக்க முயன்றவள் ஒரு கட்டத்தில் முடியாதவளாக “ம்மா…” என்று முனங்க, மறுகணம் தன் வலிமையான செயலைக் கைவிட்டவனாக, விலகியவன்,

“என்னுடைய தண்டனை கைகால்களை உடைப்பதாக இருக்காது சமர்த்தி. அதற்கும் மேலாக இருக்கும். வாய் இருக்கிறதே என்பதற்காக எது வேண்டும் என்றாலும் பேசலாம் என்று நினைக்காதே? என்னுடைய கோபத்தின் அளவை உன்னிடம் காட்டினேன் என்றால், பொசுங்கிப்போவாய்… என்னது…? என் வருடல் உனக்குச் சுகமாக இருக்கிறதா? உனக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தால், உன்னை வலிக்கச் செய்யவேண்டும் என்று நான் நினைத்து இருந்தால், இப்போது அனுபவித்தாயே.. இதை விடப் பலமடங்கு வலிகளை உனக்குக் கொடுத்து இருப்பேன். சொல்லப்போனால் இந்தப் படுக்கையை விட்டு எழுந்துகொள்ளவே உனக்கு இரண்டு நாட்கள் எடுத்திருக்கும்… எனக்குத் தேவை நீயே தவிர, உன் வலியல்ல…” என்றவன் படுக்கையை விட்டெழுந்து,

“கெட்டிக்காரத் தனமாகப் பேசுவதாக நினைத்து, நீயே வாங்கிக் கட்டிக்கொள்ளாதே சமர்த்தி… எப்போதும் இப்படி நல்லவனாகவே இருப்பேன் என்று நினைக்காதே… இப்போதும் சொல்கிறேன்… நான் ஹீரோவாகவே இருக்க ஆசைப்படுகிறேன்… வில்லனாக்க முயலாதே…” என்றவன்

“இன்றிலிருந்து இந்த வீட்டை விட்டுத் தனியாக எங்குச் செல்வதாக இருந்தாலும், அது என்னுடைய அனுமதியோடு மட்டும்தான் செல்லவேண்டும்… இதை அலட்சியம் செய்து இன்று நடந்ததுபோல ஏதாவது கோல்மால் செய்தாய் என்றால்… அதன் பிறகு இன்னொரு உத்தியுக்தனை நீ பார்ப்பாய்!” என்றவன் அடுத்துத் தன் அறைக்குச் சென்று கதவைச் சாற்ற, பேச்சற்று அப்படியே அமர்ந்திருந்தாள் சமர்த்தி.

அன்று இரவு ஏனோ உத்தியுக்தன் இவளை நாடி வரவில்லை. திருமணம் முடித்த இந்த இரண்டு கிழமைகளில் ஒரு நாள் கூட அவளை நெருங்காது இருந்ததில்லை. அப்போதெல்லாம் தன்னை மதிக்காது நெருங்குகிறான் என்கிற கோபம் ஆத்திரம் இருக்கும். ஆனால் இப்போது அவன் வரவு இல்லை என்றதும் ஏனோ நெஞ்சம் கிடந்து தவித்தது. அவள் தன்னை மறந்து கடிகாரத்தைப் பார்ப்பதும், பூட்டிய அறையைப் பார்ப்பதுமாகப் புரண்டு புரண்டு படுத்தவளுக்குத் தூக்கம் சுத்தமாக வருவதாயில்லை.

எனக்கு என்ன ஆகிவிட்டது. அவன் வரவில்லை என்றால் நான் மகிழ்ச்சிதானே அடையவேண்டும். மாறாக அவன் அணைப்பிற்காக, அருகாமைக்காக உடலும் உள்ளமும் ஏங்குகிறதே… இது என்ன புதுமை… அதுவும் அவனுடைய அணைப்பு இல்லாமல் உறக்கம் கூட வரமாட்டேன் என்கிறதே…” என்று குழம்பியவள், ஒரு வேளை அன்று சற்று அதிகமாகப் பேசிவிட்டோமோ? அதனால்தான் நெருங்கத் தயங்குகிறானோ? என்று எண்ணித் தவித்தாள்.

அவனுடைய அருகாமையை ரசிக்கிறேன் என்று சொன்னதால், வருவதை நிறுத்திக்கொண்டானோ…? என்று எண்ணியவளுக்கு அப்பாடா இனி நிம்மதி என்று அகமகிழவும் முடியவில்லை.

மனமும் உடலும் அவன் உடல் சூட்டிற்காகப் பெரிதும் தவித்தன. அப்போதுதான் அவளுக்கு மாற்றமுடியாத உண்மை ஒன்று புரிந்தது.

நம்ப மாட்டாமல் தன் மார்பை அழுத்திப் பிடித்தவளுக்கு உண்மை புரிந்தபோது, நம்பவே முடியவில்லை.

இருவருக்கும் எதுவும் பொருத்தமில்லை. எதுவும் சாத்தியமில்லை. பழிவாங்க மணந்தவன் அவன். அவனுடைய வாழ்க்கையைச் சிதைத்தவள் இவள். அப்படியிருக்கையில் காதல் எப்படித் தோன்றும்? இல்லை இல்லை இது காதலில்லை… நிச்சயமாகக் காதலில்லை. நான் வாழ்வில் அறிந்த முதல் ஆண்மகன் இவன். அதனால்தான் இப்படி மனம் தறிகெட்டு ஓடுகிறது… இந்த உடலுக்கு வேண்டியது ஒரு ஆண்… ஆமாம்… அதுதான் உண்மை…” முடிவு செய்தவளுக்கு அதையும் மீறி நெஞ்சம் சுட்டது.

வெறும் ஆண்மகன் தேவைதானா? இல்லையே.. எந்த ஆண்மகனிடமும் இல்லாத ஈர்ப்பு அவனிடம் மட்டும்தானே இருக்கிறது. அவள் வேலைசெய்யும் போது சந்திக்காத ஆண்களா? அத்தனை பேருக்கும் ஒரு எல்லைக்கோடு வகுத்தவள் அவள். யாரையும் விரல்தொடும் அளவில் கூட நெருங்க விடாதவள்… ஆனால் இவனுடைய முதல் தொடுகையிலேயே தன்னிலை கெட்டுக் கிடந்தவளாயிற்றே…. எந்த ஆண்மகனிடமும் இல்லாத தேடல் அவனிடத்தே மட்டும் இருக்கிறது என்றால் அதற்கான விளக்கம் என்ன? உலகில் எத்தனை கோடி ஆண்மகன் இருந்தாலும் அவனருகே மட்டுமே பலமாகத் துடிக்கும் இதயத்திற்கான அர்த்தம் என்ன? அந்த நிலையிலும் அவனுடைய ஒற்றை விழிப் பார்வையில் தேகம் உருகிக் கரைந்து போகிறதே… நிச்சயமாக அது இளமைத் தேடல் அல்ல. அதையும் தாண்டி அவன் மீதான ஏதோ ஒன்று அவளை ஆட்டிப் படைக்கிறது. அந்த உணர்வுதான் காதல் என்றால், ஆம் அவனைக் காதலிக்கிறாள். அதை உணர்ந்த போது கண்களில் கண்ணீர் வேறு குளம் கட்டியது.

இது எத்தனை பெரிய கேவலம். அவளை மருட்டி மணந்தவன் அவன். தன் காதலியாக நினைத்து அவளை அனுபவிப்பவன் அவன். அப்படியிருக்கையில் எப்படி அத்தனை சுலபத்தில் மனதைப் பறிகொடுத்தாள்? இதைவிடக் கேவலம் ஒரு பெண்ணுக்கு இருக்க முடியுமா என்ன? வெறுத்துப் போனாள் சமர்த்தி.

என்ன வெறுத்து என்ன பயன். மனதை அறுத்து ஒரு பக்கத்தில் வைக்கவா முடியும்? இந்த மனம் தான் எத்தனை விசித்திரமானது. அது எந்த நேரத்தில் யாரை விரும்பும் என்று சொல்ல முடியாதே.

வலியோடு தன் கண்களை மூட, ஏனோ கண் முன்னால் வந்து அவளை அணைக்கவா என்று கேட்டுக்கொண்டிருந்தான் உத்தியுக்தன்.

திடுக்கிட்டு எழுந்தமர்ந்தவளுக்கு வியர்த்துக் கொட்டியது. சே…. எனக்க பைத்தியமா என்ன? மனது இப்படித் தறிகெட்டுச் செல்கிறதே… பற்களைக் கடித்தவாறு விழிகளை மூடியவளுக்குத் தூக்கம் சுத்தமாகத் தொலைந்து போனது.

அது அவன் மீது தனக்குக் காதல் உண்டு என்பதை அறிந்ததால் தொலைந்த தூக்கமா, இல்லை கடந்த இரண்டு கிழமைகளாகக் கிடைத்த அணைப்பு இப்போது கிடைக்கவில்லையே என்கிற ஏக்கத்தால் தொலைந்த தூக்கமா என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.

சும்மா படுத்திருக்க முடியாமல் எழுந்தவள், நடந்து சென்று உப்பரிகையின் கதவைத் திறக்க, மெல்லிய வெப்பம் நிறைந்த காற்று அவள் முகத்தில் அடித்துச் சென்றது.

வீட்டிற்குள் ஏசி போட்டிருந்ததால், வெளியே வந்தபோது வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே அவளைத் தாக்கியது. ஆனாலும் ஏதோ சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதுபோலத் தோன்ற உப்பரிகையின் தடையில் சாய்ந்தவாறு விழிகளை மூடிச் சற்று நேரம் அப்படியே நின்றாள்.

திடீர் என்று அவளுடைய முதுகு புறத்தில் ஒரு அழுத்தம். அதிலிருந்து கிறங்க வைக்கும் வெம்மை அவளுடைய உடல் முழுவதும் பரவத் தொடங்க அந்த நொடி, அவளை அழுத்திய அலைப்புறுதல் மாயமாகிப் போனது.

அந்த வெம்மையைத் தன்னை மறந்து ரசித்தவளாய் ஆள மூச்செடுத்து விட இப்போது அவளை அந்த உத்தரத்தின் தடுப்போடு அழுத்தியவாறு ஆண்மை மிக்க உடல் அவள் மீது படர்ந்தது. அந்தக் கணம் அவளுடைய இதயம் தாறுமாறாகத் துடித்தது.

ஒரு வித போதையுடன்தன் உடலை அழுத்திய அந்த ஆண் உடலைத் தரிசிக்கும் பொருட்டு அவன் பக்கமாகத் திரும்ப முயன்ற விநாடி, அவளுக்கு இரு புறமும் பலம் பொருந்திய கரங்கள் அணைபோட்டுத் தடுப்பது போல அவளுக்கு இரு பக்கமும் தடுப்பின் மீது பதிந்தன.

தன்னை அரவணைப்பதுபோல அழுத்தியிருந்த உடலினைக் காமத்தோடு உள்வாங்கியவள், அது கொடுத்த போதையில் விழிகளை மூடி இதழ்களைக் கடித்தவாறு நின்றிருக்க இப்போது அவனுடைய மூச்சுக் காற்று அவளுடைய கழுத்துப் புறத்தில் பட்டுத் தெறித்தது. கூடவே அவனுடைய உதடுகள் பின் முதுகில் படிந்து, பின் கழுத்து வளைவில் புதைந்தன.

“டு யு மிஸ் மி…” என்றான் அவளுடைய காதுகளுக்குள் கிசுகிசுப்பாய்.

என்ன பதிலைச் சொல்வாள். தெரிந்திருந்தும் கேட்கிறானே.

வார்த்தைகள் வராமல், இல்லை என்பது போலத் தலையை ஆட்டிவிட்டு அவன் உதடுகள் கொடுத்த போதையில் கிறங்கிப் போக, இப்போது அவனுடைய உதடுகள் சற்று மேல் எழுந்து அவளுடைய கன்னத்தில் கோலம் போட்டன.

மெதுவாக அவளுடைய கன்னத்தைக் கடித்து விடுவித்தவன்,

“அப்படி என்றால் ஏன் இன்னும் உறங்க வில்லை…” என்று கேட்டபோது அவன் குரலில் என்றுமில்லாத கிறக்கம்.

விழிகளைத் திறக்காமலே பதில் சொல்லாது அப்படியே நின்றிருக்க இப்போது அவனுடைய உதடுகள் அவளுடையகாதின் பின் புறத்தில் பயணப்பட்டவாறு,

“ஏன்…” என்றான் கிசுகிசுப்பாய்.

இப்போது அவளை அணைத்தாற்போலிருந்த ஒற்றைக் கரம் நகர்ந்து அணிந்திருந்த டீஷேர்ட்டின் உள்ளே நுழைந்து வயிற்றினூடாகப் பயணித்துக் கோலம் போட அவஸ்தையுடன் அவன் கரங்களைப் பற்றியவளுக்கு மூச்சுப் பயங்கரமாக வெளியேறியது.

இப்போது அவனுடைய நாசி, காதோரம் சீண்டியவாறு,

“ஏன் தூக்கம் வரவில்லை…?” என்றபோது உள்ளே பயங்கரமாகச் சிலிர்த்தது.

“தெ… தெரியல…” என்றாள் மென்மையாய். இப்போது அவனுடைய கரங்கள் சற்று மேலேற உதடுகளைத் தோள் வளைவில் அழுத்தியவாறு,

“பொய்…” என்றான் போதையாக.

அந்தப் போதை எதையோ இவளுக்கு உணர்த்த, சடார் என்று அவன் பக்கமாகத் திரும்பினாள் சமர்த்தி.

அவன் முகத்தை ஒரு தேடலுடன் பார்த்தாள். அந்த முகத்தில் கொஞ்சமாவது காதல் தெரிகிறதா என்று ஆவலுடன் பார்த்தாள். அங்கே காமம் இருந்ததன்றிக் காதல் தெரியவில்லை.

காதல் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு ஏதாவது அளவுகோல் இருக்கிறதா என்ன? இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்..’ ஏக்கமாக எண்ணும் போதே அவளைத் தன்னை நோக்கி இழுத்த உத்தியுக்தன் அவளுடைய, முகத்தை மறைத்திருந்த தளர் கூந்தலைச் சுட்டுவிரலால் ஒதுக்கி, அந்தமென் கன்னத்தைப் புறங்கையால் வருடிக் கொடுத்தான்.

இவளோ அவனுடைய விழிகளுக்குள் தன் விழிகளைக் கலக்க முயன்றவாறு,

“உதி…” என்றாள் கிசுகிசுப்பாய்.

அவனுடைய பெயரைச் சொன்னபோது அசைந்த செழித்த உதடுகளைப் போதையுடன் பார்த்தவன், அந்தப் போதை கொடுத்த வீரியத்தில், தன் உதடுகளை நாவால் வருடிக் கொடுத்தவாறு அவள் கரத்தில் சிக்கியிருந்த கரத்தைச் சற்று விடுவித்துப் பெருவிரலால் அவளுடைய கீழ் உதடுகளை வருடிக் கொடுத்து,

“ம்…” என்றான்.

“டு யு லவ் மி…” என்றாள் பெரும் ஆவலுடன்.

அதுவரையும் விழிகளில் தெறித்த காமம், சட்டென்று துடைத்தெடுக்கப்பட்டது.

அவளை வருடியதால் குழைந்த உடல் இறுகியது. அதுவரையிருந்த இலகுத் தன்மை கண்ணிமைக்கும் நொடியில் காணாமல் போக

“வட்… காதலா…? அதுவும் உன் மீதா? தூக்கத்தில் கூட வராது…” என்றான் அழுத்தமாக.

அதைக் கேட்டு வேதனையுடன் உதடுகளைக் கடிக்க, மறு கணம் அந்த உதடுகள் அவனுக்கு இரையாகின. எத்தனை நேரம் அதை சுவைத்தானோ, இப்போது அவளை விட்டு விலக, ஒரு வித தவிப்போடு மீண்டும் அவனை அண்ணாந்து பார்த்தாள் சமர்த்தி.

“உங்களுக்கு… என் மீது இன்னும் அதே அளவு கோபம் இருக்கிறதா?…” என்றாள் மென் குரலில்.

தன் முத்தத்தால் சிவந்த உதடுகளைப் பெருவிரலால் வருடிக் கொடுத்தவாறு,

“இந்தக் கேள்விக்கான பொருள் விளங்கவில்லையே சமர்த்தி…” என்றபோது, எல்லை மீற முயன்ற கரங்களைத் தடுத்தவாறு,

“இல்லை… என் மீது உங்களுக்குக் கொஞ்சம் கூட இரக்கம் தோன்றவில்லையா?” ஏக்கத்துடன் கேட்டவளின் விழிகளில் கண்ணீர் பொங்கி நின்றது.

ஒருவித எரிச்சலோடு அவளுடைய கண்ணீரைப் பார்த்தவன்,

“இரக்கம் தோன்றும் வகையிலா நீ நடந்து இருக்கிறாய்? சாரி சமர்த்தி… இந்த ஜென்மத்தில் உன் மீது எனக்கு இரக்கம் தோன்றுமா என்று தெரியவில்லை. கூடவே உன்னை என்னால் மன்னிக்க முடியுமா என்றும் தெரியவில்லை…” என்றவன் மறு கணம் அவளைத் தன் கரங்களில் ஏந்தியிருந்தான்.

அதை உணர்ந்து திமிறியவள், தன்னை விடுவிக்க முயன்று,

“விடுங்கள் என்னை… எனக்கு இது பிடிக்கவில்லை…” என்று அழுகையினூடே கூற,

“பிடிக்கவில்லையா? இன்று நீதானே சொன்னாய் என் அருகாமையை ரசிப்பதாக… இப்போது எதற்கு மறுக்கிறாய்…” என்றபோது, அன்று பேசிய தன் முட்டாள்தனப் பேச்சை எண்ணித் தன்னையே திட்டியவாறு,

“அது.. அது அப்போது..” என்று ஆத்திரத்துடன் கூற,

“இப்போது மட்டும் என்ன பாவம் செய்தது?” என்றவன் அதற்குப் பிறகு அவளைப் பேசவே விடவில்லை. எப்போதும் போல அவன் தன் வேலை முடிந்ததும் அறைக்குள் சென்று கதவைச் சாத்த, இவளுக்குத்தான் வாழ்க்கையே வெறுத்துப்போனது. ஏனோ உத்தியுக்தனின் காதலுக்காகப் பெரிதும் ஏங்கத்தொடங்கினாள் சமர்த்தி.

அது முட்டாள்தனமான ஏக்கம் என்று நன்கு புரியத்தான் செய்தது. ஆனாலும் அவன் தன்பக்கம் சாயமாட்டானா என்கிற அற்ப ஆசை அவளை விடவேயில்லை.

அந்த ஜூலியட்டை மறந்து, அவள் செய்த காரியத்தை மறந்து தன் சரிபாதியாக ஏற்று இதுவரை யாரிடமும் பெறாத அன்பை அவளிடமிருந்து பெறமாட்டானா என்கிற மாபெரும் ஏக்கம் பிறந்தது. அவனுக்கு அன்னையாய் மாறி, அன்பென்றால் என்ன என்று கற்றுக்கொடுக்க மாட்டோமா என்று உள்ளம் அடித்துக் கொண்டது.

என்ன ஆசைப்பட்டு என்ன பயன்? நெஞ்சம் முழுவதும் வெறுப்பை சுமந்திருப்பவன் ஆயிற்றே. அவள் காதலை அவன் புரிந்துகொள்ள வேண்டுமே. புரிந்துகொள்வானா? புரிந்துகொண்டாலும் ஏற்றுக் கொள்வானா? அது காலத்தின் கையில்தான் இருக்கிறது.

What’s your Reaction?
+1
34
+1
5
+1
1
+1
0
+1
2
+1
3
Vijayamalar

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

22 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

7 days ago

நீ பேசும் மொழி நானாக – 36/37

  விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…

1 week ago