Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-19

19

 

மறு நாள் வழமை போல உத்தியுக்தன் வெளியே சென்று விட, தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டவள், லீயைத் தேடிச் சென்றாள். அவள் எப்போதும் போலச் சமையலறையிலிருந்து எதையோ குடைந்துகொண்டிருக்க,

“லீ… நான் வெளியே போகிறேன்… மாலை தான் வருவேன்… அதனால் எனக்காகச் சமைக்க வேண்டாம்” என்று கூறிவிட்டு லீயுடைய பதிலையும் வேண்டாது வெளியேறியவளின் பின்னால் தொடர்ந்தது பாதுகாப்புப் படை.

இவள் பெரிய கனேடியப் பிரதமர், பின்னால் தொடர் வண்டி போலாப் பாதுகாப்புக்கு ஆட்கள் வர. எரிச்சல் கொண்டவளாய் நின்று திரும்பியவள் அங்கே அவளை விட இரண்டு மடங்கு உயரத்தில் இருந்த பாதுகாவலரைக் கண்டு கடுப்பானவளாகத் தன் இடையில் கரங்களைப் பதித்து அவர்களை முறைத்தாள்.

இரண்டு பனைமரங்களும் அவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.

‘நேந்துவிட்டிருக்கிறான் பார், தன்னைப்போலவே இராட்சசர்களை…’ எரிச்சலுடன் எண்ணியவளாக,

“எனக்கு யாருடைய உதவியும் வேண்டியதில்லை. நான் சொந்த வேலையாகப் போகிறேன்…” என்று கூறிவிட்டு நடக்கத் தொடங்க, அவர்களோ காது கேட்காதவர்கள் போல மேலும் பின் தொடர்ந்தனர். ஆத்திரம் கொண்டவளாக,

“நான் சொல்வது புரியவில்லை… நான் தனியாகப் போகவேண்டும். உங்கள் உதவி எனக்குத் தேவைப்படாது…” என்று சுள்ளென்று விழுந்தவளை ஒரு தூசாகக் கூட மதித்தார்களில்லை அந்தப் பாதுகாவலர்கள். மாறாக அவள் முன்னால் நின்றிருந்த கதவைத் திறந்து,

“கெட் இன் மாடம்…” என்றார்கள்.

வேறு வழியில்லாமல் ஆத்திரத்துடன் வாகனத்தில் ஏறி அமர, இரு காவலர்களும் முன்னிருக்கையில் அமர்ந்து கொள்ள, வண்டி சத்தமில்லாது புறப்பட்டது. அதில் ஒருவன் திரும்பி,

“எங்கே போகவேண்டும்…” என்று கேட்க இவளோ அவனைப் பார்த்து முறைத்தாளன்றி பதிலே சொல்லவில்லை. காவலரும் சற்று நேரம் பொறுமை காத்துவிட்டுத் தன் நண்பரைப் பார்த்துத் தலையசைக்க, வாகனம் ஏதோ ஒரு பாதையில் அமைதியாக ஓடத் தொடங்கியது.

சமர்த்தியோ எவ்வளவு முடியுமோ அவ்வளவு மனதிற்குள் காவலர்களையும், உத்தியுக்தனையும் திட்டித் தீர்த்துவிட்டாள். பாறாங்கல்லோடு மோதுவது போன்ற பயனற்ற திட்டுதான். ஆனாலும் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.

இறுதியாக வேறு வழியில்லாமல் ஜன்னலையே உணர்ச்சியற்றுப் பார்த்துக்கொண்டு வந்தவளுக்குச் சடார் என்று ஒரு எண்ணம் தோன்றியது. முகம் பளிச்சிட்டது. உதடுகள் புன்னகையைச் சிந்த முன்புறம் அமர்ந்திருந்த காவலர்களைக் குறுகுறு என்று பார்த்தாள். பின், இருக்கையில் சாய்வாக அமர்ந்து கொண்டாள். அரை மணி நேரத்திற்கு வாகனம் தன் இஷ்டத்திற்குப் பயணித்துக் கொண்டிருந்தது.

கடைசியாக டொரன்டோவின், முக்கிய மையப்பகுதியை (ஞிஷீஷ்ஸீ ஜிஷீஷ்ஸீ) நெருங்குவது புரிய குதுகலத்துடன் எழுந்தமர்ந்தாள்.

அங்கேதான் முக்கிய நிறுவனங்களின் தலைமைப்பீடம் இருக்கின்றன. அதனால் மக்கள் கூட்டமும் மிக மிக மிக அதிகம். ஒரு பக்கம் நுழைந்தால் இன்னொரு பக்கத்தால் இலகுவாக வெளியேறிவிடலாம். ஜன நெருக்கடி அதிகம் என்பதால், மக்களோடு மக்களாகக் கரைந்தால் எந்தக் கொம்பனாலும் கண்டுபிடிக்க முடியாது.

தன் பரபரப்பைச் சிரமப்பட்டு மறைத்தவள், புத்திசாலித்தனமாகத் தன் கைப்பேசியை வெளியே எடுத்து வாகனத்தின் இருக்கையில் வைத்துவிட்டுக் கைப்பையை மட்டும் எடுத்து,

“அங்கே நிறுத்துங்கள் நான் சில பொருட்கள் வாங்க வேண்டும்…” என்று பெண்களுக்கான உள்ளாடைகள் விற்கும் பிரபல்யம் வாய்ந்த கடை ஒன்றைக் காட்ட, பாதுகாவலர்கள் மறுக்காது அந்தக் கடைக்கு முன்பாக வாகனத்தை நிறுத்தினர்.

அவள் வெளியேற, அங்கேயும் அவளுடைய நிழலாய் ஒருவன் பின்தொடர முயல, இவளுக்கு இன்னும் ஏறிக்கொண்டு வந்தது. எரிச்சலுடன் நின்றவள், பின் சிரமப்பட்டுத் தன் உதடுகளை விரித்து, அந்தப் பாதுகாவலனைப் பார்த்து, ஒற்றைப் புருவத்தை மெலுயர்த்தி, அவனுடைய மார்பைக் கிண்டலாகப் பார்த்துவிட்டு,

“ரியலி…?” என்றாள்.

அவனோ சிறு சங்கடத்துடன் எங்கோ பார்க்கத், தன் தோள்களைக் குலுக்கியவள்,

“பெட்டர் ஸ்டே அவுட்சைட்… ஃபோர் அன் அவர்” என்றுவிட்டுக் கடைக்குள் நுழைந்தவள் மறு கணம் மின்னல் வேகத்தில் கடையின் மறு புறம் நோக்கிச் சென்றாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அங்கே வந்து கொண்டிருந்த பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டிருந்தாள். பேருந்து வாசலில் நின்றிருந்த பாதுகாவலர்களையும் தாண்டி நகர்ந்து செல்ல, தாங்கள் பாதுகாக்கவேண்டிய முதலாளியம்மா அந்தப் பேருந்தில் போய்க்கொண்டிருப்பது கூடத் தெரியாது, அவள் வரவுக்காக வெளியே இறுக்கத்துடன் நின்று இருந்தனர். அந்தப் பாதுகாவலர்களை ஏமாற்றிய மகிழ்ச்சியில் உதடுகள் புன்னகையைச் சிந்த தன் அண்ணன் அண்ணியைக் காணும் ஆவலில் இருக்கையில் சாய்வாக அமர்ந்துகொண்டாள் சமர்த்தி.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அண்ணனின் வீட்டை வந்தடைந்தாள் சமர்த்தி.

வீட்டைக் கண்டதுமே விழிகள் கலங்கிப்போயின. அந்த வீட்டிலிருந்த வரைக்கும் அவள் தான் மகாராணி. அவளுக்குப் பிறகுதான் மற்றவர்கள். அவள் நினைத்தவை அனைத்தும் தவறாது நடந்து விடும். வெறும் மூன்று படுக்கை அறைகளுடனான சிறிய வீடுதான். ஆனால் மகிழ்ச்சிக் கடல் போலக் கொந்தளிக்கும். வீடு மாடமாளிகையாக இருந்து என்ன புண்ணியம். அங்கே மகிழ்ச்சி இல்லையென்றால் அது வெறும் கட்டடம்தானே?

பெருமூச்சுடன் வீட்டுக் கதவின் அழைப்பு மணியை அழுத்த, மறு கணம் பெரும் கூச்சலுடன் கதவு திறந்தது. ஏழுபேரும் நான் முந்தி நீ முந்தி என்று அவள் மீது வந்து விழச் சமர்த்திக்கு மூச்செடுப்பதற்கே சற்றுச் சிரமமாகப் போயிற்று.

ஒரு பக்கம் சிரிப்பு ஒரு பக்கம் அழுகை, ஒரு பக்கம் துக்கம் என்று அத்தனை உணர்வுகளுக்கும் மூழ்கித் தவித்தவளுக்கு அவர்கள் கொடுக்கும் அப்பழுக்கற்ற அந்த அன்புக்காக எதை வேண்டும் என்றாலும் இழக்கலாம் என்று தோன்றியது. உயிர் உட்பட.

சற்று நேரம் அவர்களோடு சேர்ந்து செல்லம் கொஞ்சியவளுக்கு அப்போதுதான் தயாளன் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே தங்கியிருப்பது உறுத்தியது.

“அண்ணா இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறீர்கள்? வேலைக்குப் போகவில்லையா?” என்றாள் வியப்பாய். ஏன் எனில் அவளுக்குத் தெரிந்து தயாளன் தேவையற்று விடுப்பு எடுத்தது கிடையாது.

“இல்லையடா… திருமணம் முடித்து முதன் முதலாக வீட்டிற்கு வந்திருக்கிறாய். இந்த நன்னாளை நான் எப்படித் தவிர்ப்பேன்… உன்னுடன் இருப்பதை விட வேலையா முக்கியம்…” என்று அவர் கேட்டதும், அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் கட்டவிழ்ந்தது. தன்னை மறந்து அண்ணனுடைய மார்பில் விழுந்தவள், அழத் தொடங்கப் பதறிவிட்டார் தயாளன். எப்போதும் குதுகலமாய்ச் சிரித்த முகமுமாய் இருக்கும் அன்புத் தங்கை அழுதால் அவரால் எப்படித்தான் தாங்க முடியும்?

“என்னம்மா… ஏன் அழுகிறாய்… புஷ்பா… என்னவென்று பார்…” என்று பதட்டத்துடன் மனைவியைப் பார்க்க, புஷ்பாவோ தயாளனுக்கு மேல் கலங்கிப் போனார். கணவனின் மார்பில் விழுந்தழுதவளை இழுத்துத் தன் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தவாறு,

“சரி… சரி… என் கண்ணில்லையா… அழக் கூடாது… இதோ பார்…” என்று அவளை நிமிர்த்த முயல, அவளோ அத்தனை துன்பத்தையும், ஒரே நிமிடத்தில் கொட்டிவிடுவது போலத் பிடிவாதமாக அழுதுகொண்டிருந்தாள்.

அவள் வலியை, வேதனையைத் தவிப்பைத் துடிப்பை எப்படிக் கூறுவாள்? கூறினால் இந்த நல்ல உள்ளங்கள் துடித்துப்போகுமே. அவள் செய்த ஒரு செயலால் பாதிக்கப்பட்டவனின் பழி உணர்ச்சிக்குத் தண்டனையாக வெறும் உடற்பசிக்குச் சேவகம் செய்யும் பரத்தையாக மாறிப்போன கதையை எப்படிக் கூறுவாள்?

சற்றுநேரத்தில் தானாகச் சமாதானம் அடைந்தவளாகச் சிறு விசும்பலுடன், நிமிர்ந்தவளைத் தயாளனின் விழிகள் ஆராய்ந்தன.

“என்னம்மா… அங்கே ஒரு பிரச்சனையும் இல்லையே?” என்று கேட்ட அண்ணனின் பதற்றத்தையும் அதையும் மீறித் தெரிந்த தயக்கத்தையும் உணர்ந்தவளுக்கு மேலும் கண்களைக் கரித்துக் கொண்டு வந்தன.

என்னதான் உத்தியுக்தன் தங்கையின் கணவராக இருந்தாலும், இருவருக்குமான நெருக்கத்தின் தூரம் மிக மிக அதிகம். எட்டினாலும் தொட முடியாத தொலை தூரம். பணத்தினாலும் சரி, பதவியினாலும் சரி, அவனுடைய தராதரத்தினாலும் சரி, எத்தனையோ படிகள் கீழே இருக்கும் தயாளனால் உத்தியுக்தனை எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாதே. இந்த நிலையில் தங்கையின் வாழ்க்கையில் ஏதாவது சிக்கல் எழுந்தால் எப்படித் தலையிட்டு அதைத் தீர்த்து வைப்பார்…? பெற்ற தாய் தந்தையையே தள்ளி நிறுத்திப் பார்ப்பவன் இவரையா அன்போடு அரவணைக்கப் போகிறான்?

அது மட்டுமன்றி, உத்தியுக்தன் வாசலை நெருங்கினாலே, கடவுளாய்ப் பார்க்கத்தானே அவர் மனம் சொல்லும். அப்படியிருக்கையில், எந்தத் தைரியத்தில் கேள்வி கேட்பார். அதுவும் யாரையுமே எடுத்தெறிந்து பேசத் தெரியாத தயாளனால் நிச்சயமாக அது முடியாது. தேவையற்று அவர் மனதை வேதனைப்பட வைப்பதாகிவிடும். கூடவே தன் கையாலாகாத் தனத்தை எண்ணித் துடித்துப் போவார். அவர் ஒரு பக்கம் என்றால் அவளுடைய மருமக்கள் வேறு ரகம். ஆளாளுக்கு அவனைக் கேள்விகேட்கிறேன் என்று புறப்படுவார்களே அன்றி மோதப்போவது இரும்புக் கேடயத்தோடு என்று யோசிக்க மாட்டார்கள்.

அத்தோடு இது அவளுடைய சிக்கல். அவள் விதைத்த விதை… அவள்தானே அறுவடை செய்ய வேண்டும். அவள் செய்த தவறுக்கு தயாளனையும் மருமக்களையும் எப்படிப் பகடைக் காய்களாக்குவாள். அவசரமாக அவரை விட்டு விலகியவள், தன் கண்களைத் துடைத்துவிட்டு,

“ஒ… ஒன்றும் இல்லை அண்ணா.. உங்களையும் அண்ணியையும் பார்க்காமலிருந்தேனா… அதுதான்.. பார்த்ததும் அழுகை வந்துவிட்டது…” என்றவளை உற்றுப் பார்த்தார் தயாளன். பின் அவளுடைய தலையை வருடிக் கொடுத்துவிட்டு,

“சரி.. சரி.. அதுதான் பார்த்துவிட்டாய் அல்லவா.. இனியும் அழக் கூடாது… அது சரி மாப்பிள்ளை எப்போது வருவார்?” என்று அவளைச் சமாதானப் படுத்தியவாறு அவளுடைய புலனைத் திசை திருப்ப முயல, மேலும் வாடிப்போனாள் சமர்த்தி.

அதை உணர்ந்தவராகப் புஷ்பா, சமர்த்தியை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல, அதன் பின் புஷ்பாவை விட்டு இம்மியும் விலகினாளில்லை. இவளை விட்டு மற்றைய ஐந்து வானரங்களும் நகர மறுத்தன.

“நீ சொல்லு தங்கம்… அந்தப் பெரிய வீட்டில் எப்படிச் சமாளிக்கிறாய்?” என்று கேட்க அப்போது தான் முன்தினம் விரலை நறுக்கியது நினைவுக்கு வந்தது. அடடே அதைக் காட்டி அண்ணியின் பரிதாபத்தைச் சம்பாதிக்க மறந்துவிட்டோமே…’ உடனே தன் சுட்டுவிரலிலிருந்த கட்டைத் தூக்கிக் கட்டி உதடுகளைப் பிதுக்க,

“ஐயையோ… என்னடா ஆச்சு…” என்று தாயாய் மாறிப் பதறிய அண்ணியின் பதட்டம் இவளுக்குப் பெரும் குதுகலத்தைக் கொடுத்தது.

“நேற்று வெங்காயம் வெட்டுவதற்குக் கற்றுக் கொண்டேன் அண்ணி… அதுதான் விரலை வெட்டி விட்டேன். நிறைய இரத்தம் வந்தது தெரியுமா…” என்று விழிகளை விரித்துக் குழந்தையாய் மாறிக் கூறியவளைக் கண்கள் கலங்க அணைத்துக் கொண்ட புஷ்பா அவளுடைய உச்சந்தலையில் தன் உதடுகளைப் பொருத்தி,

“நீ ஏன்டா அதையெல்லாம் செய்யப் போனாய்? யாரோ லீ என்று சமைப்பதற்கு வருவதாகக் கூறினாயே. அவர்களைக் கொண்டு வெட்டச் சொல்லியிருக்கலாமே…” என்றவாறு அவளுடைய கட்டை அவிழ்க்கத் தொடங்க, இவளோ,

“அண்ணி… அந்த லீ வெங்காயம் நறுக்கும் அழகைப் பார்க்கவேண்டும் நீங்கள்…” என்று அதி முக்கியமான புதினத்தைக் கூறத் தொடங்கினாள்.

அங்கே பெண்களின் உள்ளாடைகள் கொண்ட கடைக்கு வெளிப்புறம் நின்றிருந்த அவளுடைய பாதுகாவலர்கள் ஒன்றரை மணி நேரமாகச் சமர்த்தி வெளியே வராது போகத்தான் சந்தேகம் வந்தது.

ஏதோ சரியில்லை என்பது புரிய, இருவரும் அந்தக் கடைக்குள் நுழைந்தனர். பெண்கள் குழுமியிருந்த அந்தக் கடைக்குள் வாட்டசாட்டமாக இரு ஆண்கள் நுழைந்ததும், அவர் அவர் தமக்குத் தேவையான ஆடைகளை எடுப்பதை மறந்து அந்த ஆண்மக்களையே வாய்பிளந்தவாறு பார்க்க, இவர்களோ சமர்த்தி எங்கே என்பது போலச் சுற்றும் முற்றும் பார்த்தனர்.

அவள் அங்கில்லை என்பதை உணர்ந்து, தாங்கள் யார் என்கிற அறிமுகத்தோடு, கடையின் கண்காணிப்பு நிகழ் பதிவை எடுத்துப் பார்த்தவர்களுக்குச் சமர்த்திப் பின்பக்கமாக வெளியேறிச் சென்றிருப்பதைக் கண்டதும் அதிர்ந்து போனார்கள்.

உடனே கைப்பேசியிலிருந்து அவளுடைய கைப்பேசி எங்கே இருக்கிறது என்று அறிய முயன்றனர். அது அந்தக் கடைக்கு முன்புதான் இருப்பதாகக் காட்ட இருவருமே விழுந்தடித்துக் கொண்டு முன்புறம் வந்து பார்க்க, அந்தோ பரிதாபம். அவர்களின் கைப்பேசி காட்டிய இடம், அவர்களின் வாகனத்தை.

கதவைத் திறந்து உள்ளே பார்க்க, அங்கே பின்னிருக்கையில் சமர்த்தியின் கைப்பேசி இவர்களைப் பார்த்துக் கெக்கேபிக்கே என்று சிரித்தது. அதைக் கண்டதும் இரு காவலர்களுக்கும் கண்களைக் கட்டிக் காட்டில் விட்டதுபோலானது.

இதை எப்படி உத்தியுக்தனிடம் சொல்வது? ஆனாலும் சொல்லித்தானே ஆகவேண்டும். வேறு வழியில்லையே. உடனே அவனை அழைக்க, திரையில் யாருடனோ முக்கியமாகப் பேசிக்கொண்டு இருந்த உத்தியுக்தன், அலைபேசி அடித்ததும், பேச்சின் தொடர்பு அறாமலே கைப்பேசியை எடுத்துப் பார்த்தான்.

அவனுடைய காவலர்கள் என்றதும் நெஞ்சில் பக்கென்று ஒருவித அச்சம் எழுந்தது.

“மன்னிக்கவேண்டும்… ஒரு நிமிடம்…” என்று வேண்டியவனாய் அலைபேசியை உயிர்ப்பித்துக் காதில் பொருத்தி,

“இஸ் எனிதிங் ஹாப்பன் டு ஹேர்…” என்று சீறியவாறு கேட்டவன், திரையில் பேசிக் கொண்டிருந்தவர்களிடம் அனுமதிகூட வாங்காது அறையை விட்டு வெளியே பாய,

“நோ… நோ… இது வேறு…” என்று தடுமாறிய பாதுகாவலரின் பேச்சைக் கேட்க விரும்பாதவனாக,

“வியர் இஸ் ஷி…” என்றான் ஆத்திரத்துடன்.

“அது வந்து…” என்று தடுமாறிய காவலன் நடந்ததைக் கூற,

“யு ஜ்ஜ்ஜ் இடியட்ஸ்… இஸ் திஸ் ஹெள யு ஜ்ஜ்ஜ் காட் ஹர்… டிட் யு கால் மீ ஜஸ்ட் டு டெல் திஸ்? இஃப் எனிதிங் ஹப்பன் டு ஹேர்… ஐ வில் நாட் ஜ்ஜ்ஜ்ஜ் லெட் யு லிவ்… அன்டர்ஸ்டான்ட்?” கிட்டத்தட்டக் கத்தியவன், அடுத்த கணம் தன் வாகனத்தில் ஏறி அமர்ந்திருந்தான்.

ஏனோ அவனையும் அறியாது, கரங்கள் மெல்லியதாக நடுங்கின. ஏன் நடுங்குகின்றன, நெஞ்சம் ஏன் தடுமாறுகிறது, இதயம் ஏன் பலமாகத் துடிக்கிறது. புத்தியேன் கலங்கிப் போகிறது. விடும் சுவாசம் ஏன் சூடாகிறது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் புரியாமலே, இந்தக் கேள்விகள் எழுவது புரியாமலே தன் வாகனத்தைச் சீற விட்டவன் அடுத்த அரை மணி நேரத்தில் அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தான். நடந்ததை அறிந்ததும் ஒரு கணம் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலானது உத்தியுக்தனுக்கு.

எங்கே போயிருப்பாள். தனியாகப் போனவளுக்குப் போகுமிடத்தில் ஏதாவது ஆபத்து? காட்… எங்கே என்று தேடுவது? புரியாமல் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு மயங்கி நின்றது ஒரு சில நிமிடங்கள்தான். அப்போதுதான் பளிச்சென்று பிறந்த வீட்டிற்குப் போவது பற்றி அவள் பேசியது நினைவுக்கு வந்தது.

நெஞ்சம் பதறத் திரும்பி பாதுகாவலர்களைப் பார்த்தவன்,

“இதை நான் பார்த்துக்கொள்கிறேன்… நீங்கள் கிளம்புங்கள்…” என்று அனுப்பிவிட்டு தயாளனின் வீட்டை நோக்கி வாகனத்தைச் சீற விட்டான்.

அதே நேரம் தன் மடியில் படுத்துக்கிடந்த மருமகளைச் செல்லம் கொஞ்சி முடித்த புஷ்பா,

“சரி நேரமாகிவிட்டது எழுந்துகொள்.. உனக்குப் பசிக்கும்” என்றுவிட்டு எழ முயல, அவளோ மறுப்பாகத் தலையசைத்து, இன்னும் பத்து நிமிடங்கள் அண்ணி. இரண்டு கிழமைகளாக இந்தச் சொர்க்கம் இல்லாமல் மிகக் கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என்றவாறு தன் விழிகளை மூடிய சமர்த்திக்கு, உத்தியுக்தன்தான் நினைவில் வந்தான்.

இப்போது அவள் அங்கே இல்லை என்பது அவனுக்குத் தெரிந்திருக்கும். தேடி வருவானா இல்லையா? புத்திக்குள் நின்று குடைந்தான் அவன்.

சமர்த்திக்குத் தம் இருவரின் வாழ்க்கை போகும் திசையை நினைக்கக் கொஞ்சம் பயமாகவே இருந்தது.

அன்பை வேண்டி இவள், அதைக் கொடுக்கத் தெரியாது அவன். அன்பிலே குளித்து வளர்ந்தவள் இவள். அன்பென்றாலே என்னவென்று தெரியாது வளர்ந்தவன் அவன். இவளுக்காய் பார்த்துப் பார்த்துச் செய்ய அண்ணன் அண்ணி. அவனுக்கோ, யாருமில்லை. இப்படியான இரண்டு வேறு வேறு துருவங்களும் எப்படி இணைந்து பயணிக்கப் போகின்றன. அதுவும் எத்தனை காலங்களுக்கு. புரியாத தவிப்புடன், தன்வயிற்றைச் சுற்றிப் போட்டு இருந்த அண்ணியின் கரத்தைப் பற்றி ஒவ்வொரு விரல்களாகச் சொடுக்கெடுத்து விட்டவாறு,

“அண்ணி…” என்றாள். அவரோ கவனமாகக் கட்டுப் போட்டவாறு,

“ம்…”

“ஒருவரின் அன்பைப் பெற என்ன செய்ய வேண்டும் அண்ணி…?” என்று தயங்கியவாறு கேட்க, புஷ்பாவோ குனிந்து சமர்த்தியை உற்றுப் பார்த்தார்.

“ஏன் திடீர் என்று இந்தக் கேள்வி? உத்தி உன்னோடு நன்றாகத்தானே இருக்கிறார்?” என்று முக்கியப் புள்ளியைப் பிடித்துக் கேட்கத் தடுமாறியவள்,

“அது… வந்து… அண்ணி… அவர் அன்பாகத் தான் இருக்கிறார். ஆனால் பாருங்கள் லீயுடைய கணவர் அன்பாக இல்லையென்று லீ வருந்தினாளா அதுதான் கேட்டேன்…” என்று சமாளிக்க, நிம்மதி கொண்டவராக,

“ஒருவருடைய அன்பைப் பெற, ஒரே ஒரு வழிதான் இருக்கிறது தங்கம்… அது நாம் காட்டும் அன்பு. எதைக் கொடுக்கிறோமோ அதைத்தானே திரும்பப் பெற முடியும்…. தவிர அன்பு என்கிறது வியாபாரமில்லை சத்தி. இதைக் காட்டினால்தான் அது கிடைக்கும் என்று கூற. உணர்வால் பிறக்க வேண்டியது. அது தடிவைத்து அடித்துக் கனிய வைக்கவும் முடியாது, கடனெடுத்து அனுபவிக்கவும் முடியாது. அன்பை இப்படித்தான் காட்டவேண்டும் என்று ஒரு அளவுகோலும் கிடையாது. ஒவ்வொருத்தரும் தங்கள் அன்பைக் காட்டும் விதம் வேறு வேறு கண்ணம்மா… சிலர் அன்பை வார்த்தைகளால் பேசிக் காட்டுவார்கள். சிலர் வார்த்தைகளைக் கடினமாக உபயோகத்தாலும், செயலால் தங்கள் அன்பைக் காட்டுவார்கள். சிலர் கடுமையாக நடந்துகொண்டாலும் சிறு சிறு செய்கையால் தங்கள் அன்பைக் காட்டிவிடுவார்கள்… ஆனால் பார்.. அன்பை இப்படித்தான் காட்டவேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்போடு வாழ்ந்தோமானால், பிறர் தம் பாணியில் காட்டும் அன்பு புரியாமலே போய்விடும் தங்கம்… அன்பு என்கிறதை ஒரு செயலின் மூலம்தான் வெளிப்படுத்தவேண்டும் என்றில்லை. அது உணர்வால் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று… அதே வேளை நம்முடைய நடத்தை தான் பிறரை நம்மீது அன்பு வைக்கவும் வழி நடத்தும் கண்ணம்மா…” என்ற புஷ்பாவை நோக்கி நிமிர்ந்து படுத்தவள், அவருடைய முகத்தைப் பார்த்தவாறு,

“அண்ணி ஐ மிஸ் யு அண்ணி… ரியலி ஐ மிஸ் யு… அங்கே நீங்கள் இல்லாமல் நன்றாகவேயில்லை தெரியுமா?” என்றவள் அவருடைய கரங்களை மார்போடு இறுக அணைத்து விழிகளை மூட, ஏனோ இப்படி ஒரு பொழுதாவது உத்தியுக்தனின் மடியில் படுத்து, அவனுடைய கரங்களைத் தன் மார்போடு அணைத்து உறங்கவேண்டும் போலத் தோன்றியது. ஆனால் அதற்குத்தான் வாய்ப்பில்லையே. அவளைக் கண்டாலே அவன் புன்னகை உதட்டோடு உறைந்து போகும். இந்த நிலையில் அன்பாவது, அரவணைப்பாவது. ஏக்கத்துடன் எண்ணுகையில் அவளுடைய தலைமுடியை வருடிக் கொடுத்த புஷ்பா,

“நான் இல்லையென்றால் என்ன கண்ணு… உத்தி தம்பி இருக்கிறாரே. அவர் மடியில் நாள் பூறாகத் தூங்கி எழ வேண்டியதுதானே…” என்று அவள் மனத்தைப் படித்தவர் போலக் கூற, இவளுடைய உதடுகள் சுழிந்தன.

“அவரும் நீங்களும் ஒன்றா அண்ணி… உங்கள் மடி தரும் போதையே தனித் தெரியுமா?” என்றவாறு அவர் மடி வாசனையை ஆழ உள் எடுக்க, அங்கே வந்த ரகுநந்தன்,

“என்ன இன்று நமக்குச் சாப்பிட புவ்வா கிடைக்குமா? இல்லை இருவரும் இப்படியே இருக்கப் போகிறீர்களா? எங்களுக்குப் பசியில் பெருங்குடல் சிறுகுடலைத் தின்கிறது. விட்டால் உங்கள் இருவரையும் சேர்த்துத் தின்றுவிடுவோம்…” என்று வயிற்றைத் தட்டியவாறு கூற, அண்ணியின் மடியைவிட்டு எழாமல் இன்னும் அழுத்தமாகப் படுத்தவள்,

“உனக்குப் பசித்தால் நீ சாப்பிட்டேன். எதற்கு எங்களைக் குழப்புகிறாய்?” என்று எரிச்சலுடன் கூற,

“நீ வராமல் நாங்கள் எப்படிச் சாப்பிடுவதாம்… வா சத்தி சாப்பிட… பசிக்கிறது…” என்று விதற்பரையும் பின்னால் வந்து நின்றாள். கூடவே அத்தனை பேரும் வரிசையாக நிற்க,

“ப்ச்… இப்போது என்ன அவசரம்… தம்பியும் வரட்டுமே… எல்லோரும் ஒன்றாகச் சாப்பிடலாம்…” என்று புஷ்பா கூற, அப்போதுதான் அவன் வரமாட்டான் என்பதே சமர்த்திக்கு உறைத்தது. உடனே புஷ்பா மடியைவிட்டு எழுந்தவள்,

“இல்லை அண்ணி… நாம் சாப்பிடலாம். அவருக்கு எப்போது கூட்டம் முடிவது. எப்போது நாம் சாப்பிடுவது… எனக்கும் பசிக்கிறது.” என்றவாறு சாப்பாட்டு மேசை நோக்கிச் செல்ல, தன் நாத்தனாருக்குப் பசித்துவிட்டதே என்கிற வருத்தத்துடன் சமையலறை நோக்கி ஓடியவர், பதார்த்தங்களை எடுத்துவந்து மேசையில் வைக்கத் தயாளனும் புஷ்பாவிற்கு உதவி செய்தார்.

ஆவலுடன் ஒவ்வொரு மூடியாக எடுத்துத் திறந்து பார்த்தவள், தன் அண்ணியின் அன்பில் உருகிப்போனவளாக, அள்ளித் தன் கோப்பையில் வைத்து இருக்கையில் அமர்ந்தவள், உத்தியுக்தனைச் சுத்தமாக மறந்துபோனவளாக, நாவில் நீர் ஊற, ஒரு கவளம் எடுத்தவள், வாயில் வைக்க முயன்ற அந்தக் கணம் வீட்டு அழைப்பு மணி அடித்தது.

What’s your Reaction?
+1
30
+1
12
+1
2
+1
4
+1
0
+1
0
Vijayamalar

View Comments

  • அருமையான பதிவு 😍😍😍😍😍.
    அடேய் சத்திய ஸ்பை வச்சு கவனிக்கறியாடா😤😤😤😤😤😤.
    அசையாத தேரு மாதிரி நிக்கறானுங்களே🫤🫤🫤🫤🫤.
    வரச்சொல்லி கேட்டோம். வராம டாக்கா காமிச்சு வேலைய பாக்கப் போறேனு போயிட்டே.
    அதனால நாங்க சொகுசா பஸ் ஏறி வூட்டுக்கு வந்துட்டோம்.
    பாரு அத்தனை பேரும் எப்படி அன்பை பொழியறாங்கன்னு. இதெல்லாம் உன்னைய மாதிரி காஞ்சபயலுக்கு பழிவாங்கப் போறேன்னு குதிக்கிறவனுக்கும் தெரிய வாய்ப்பில்லை 😡😡😡😡😡😡.

    ஆமா சத்திய தான் கரிச்சு கொட்டறியே டா அப்பறமெதுக்கு காணோம் ன்னு கலவரமாகறே?🙄🙄🙄🙄🙄

    • இப்படி திடீர்னு கேட்டுபுட்டா என்ன சொல்றது. அது வந்து... என்னாச்சுன்னா... அது வந்து... எனக்கு டிமிக்கி கொடுத்துட்டு அவ எஸ் ஆயிட்டால்ல. அதனால வந்த கோவம்தான். வேற ஒன்னும் இல்ல. இத போயி லவ்வு கிவ்வுன்னு தப்பா நினைச்சுபுடாதீங்க. ஓகேவா.

      • 😍😍😍😍😍🤣🤣🤣🤣🤣🤣🤣.
        அப்புடி யெல்லாம் சொல்ல மாட்டோமே. பயபுள்ள கவுந்துழுந்து மண்ணும் மங்கானியுமாக புதையல் வாரி கிட்டு எந்திரிக்கும்.
        அந்த கண்கொள்ளா காட்சியை காண ஆவலுடன் வெயிட்டிங் ப்பா 😎😎😎😎

        • அவனை மண் கவ்வ வைக்கிறதில எம்பிட்டு ஆர்வம் இந்த பயபுள்ளைக்கு. ஐயோ ஐயோ

  • அவன் போக வேணாம்னு சொல்லியும் கேக்காம இங்க வந்து அளப்பறையை பன்னிட்டிருக்க வரான் இல்லை நம்ம ஹீரோ இருக்கு உனக்கு

    • அதுக்கு புத்தி இருந்தா ஏன் இந்த பாடு. ஐயோ ஐயோ

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

23 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

7 days ago

நீ பேசும் மொழி நானாக – 36/37

  விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…

1 week ago