Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-13

13

 

ஏற்கெனவே அவனோடு மூச்சுமுட்ட அமர்ந்து இருந்தவள் வாகனம் நின்றதும், விட்டால் போதும் என்பது போலக் கதவைத் திறந்து வெளியேற, அவளை வரவேற்றது மிகப் பிரமாண்டமான அந்த வீடுதான்.

வீடா அது? மாடமாளிகை. வாகனம் ஓடும் பாதைக்கு இரு பக்கமும் மிகக் கவனமாகப் பராமரிக்கப்பட்ட பூமரங்கள். சற்றுத் தள்ளி ஒரு செயற்கை நீரூற்று. ஆங்காங்கே பெரிய பெரிய மரங்கள். கிட்டத்தட்ட இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள பச்சைப் புல்வெளியின் நடுவில் கட்டப்பட்ட மாளிகையின் வலப்புறம் பூந்தோட்டம் அமைத்து இருந்தார்கள். அதைக் கண்டு ரசிக்க விடாமல் வீட்டிற்கு வந்த மணமக்களை நிறுத்தி ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க, திருமதி உத்தியுக்தனாக உள்ளே நுழைந்தாள் சமர்த்தி.

அத்தனை பணக்காரர்களுக்கும் உரிய வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது வீட்டின் முன்னறை.

எங்கு பார்த்தாலும் வெண்மை. வெண்மையும் தங்கமும் கலந்தாற்போலச் சொகுசு நீளிரிகை. நிச்சயமாகப் பல ஆயிரம் டாலர்களை விழுங்கி இருக்கும். அதற்குக் கீழ் கால்கை வைக்கவே அச்சம் கொடுக்கும் வகையில் பஞ்சுப்பொதியென வெண்ணிறக் கம்பளம். அதன் மீது பிரமாண்ட தேநீர் மேசை. பொருத்தமாய் மங்கிய வெண்மையில் திரைச்சீலைகள். சுத்தவரப் பெரிய பெரிய வெள்ளிப் பூச்சாடியில் இனம் தெரியாத மரங்கள். சில இலைகளில்லாது தடிகள் மட்டும் நீண்டிருக்க அது கூட அந்தகக் கூடத்திற்கு அழகாகத்தான் இருந்தது. சுவரைப் பிரிக்கும் இடத்தின் நடுவில் பிரமாண்டமான கண்ணாடிப் பெட்டிக்குள் நீர்வீழ்ச்சிபோல அமைக்கப்பட்டு அதற்குள் மீன்கள் அங்கும் இங்கும் நீந்திக்கொண்டிருக்கப் பார்ப்பதற்கு ஏதோ கடல் வாழ் உயிரினங்களின் காட்சியகம் போலத் தோன்றியது. மேலே நவீனரகத்தில் வெண்ணிற மின்விளக்கு.

அந்த வீட்டில் எப்படிக் குப்பை கொட்டுவாள். பார்க்கும்போதே பெருமை தோன்றுவதற்குப் பதிலாக அச்சமல்லவா தோன்றுகிறது. கூடவே வருத்தமும் தோன்றியது. எத்தனை தேவையற்ற செலவுகள்… இத்தனை பணத்தைக் கொட்டி பிரமாண்டமாக அலங்கரிப்பதற்குப் பதில் தேவைக்கு அளவாகப் பொருட்கள் வாங்கிப் போட்டால் போதாதா? யோசித்துக் கொண்டிருக்கும் போதே வந்த மணமக்களை அங்கிருந்த இருக்கையில் அமர்த்தி விட்டு அவர்களுக்கான உபசாரம் நடந்து முடிய, தயாளன் குடும்பம் தங்கள் வீட்டிற்குப் புறப்பட்டது. அதைத் தெரிந்ததும் அதுவரையிருந்த கொஞ்ச நஞ்ச உறுதியும் காணாமல் போக, நடுக்காட்டில் விடப்பட்ட குழந்தை போலக் கலங்கத் தொடங்கினாள் சமர்த்தி.

அதைக் கண்ட புஷ்பா, ஓடிவந்து அவளை அணைத்துக்கொண்டு,

“என் தங்கமே… நல்ல காரியங்கள் நடக்கும் போது இப்படி அழக் கூடாது… நல்ல ஒரு குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கிறாய். அதைத் தக்க வைத்துக்கொள்…” என்றவர் அவளுடைய முகத்தை இரு உள்ளங்கைகளாலும் பற்றி,

“கண்ணம்மா… நீ எனக்கு நாத்தனார் முறையாக இருந்தாலும், இதுவரை அப்படி நினைத்ததில்லை. என் முதல் குழந்தையே நீதான். உனக்குப் பின்தான் மற்றவர்கள் எல்லோருமே. நான் வேண்டுவது உன் மகிழ்ச்சியை மட்டும்தான். உங்களுக்குள் என்ன பிரச்சனை வந்தாலும், அதை நான்கு சுவருக்குள் தீர்த்துவிடவேண்டும்… எக்காரணம் கொண்டும் அந்தப் பிரச்சனைகள் படுக்கையறையை விட்டு வெளியே வரக்கூடாது. சொல்வது புரிகிறதா?” என்று கேட்க அதற்கு என்ன பதிலைச் சொல்வாள்.

அண்ணியைப் பொறுத்தவரைக்கும் அவளுக்குக் கிடைத்திருப்பது பூப்படுக்கை. ஆனால் அது முள் படுக்கை என்று இவளுக்குத்தானே தெரியும். ஆனாலும் அண்ணியின் மனம் வருந்தக்கூடாதே என்பதற்காக ஆம் என்று தலையை அசைக்க,

“சத்தி… இனி இதுதான் உன்னுடைய வீடு. இங்கே இருக்கும் வரைக்கும்தான் நீ முடி சூடிய இளவரசி… புரிகிறதுதானே… உனக்குப் பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டோம் என்கிற நிம்மதியோடு மன நிறைவோடுதான் வீட்டிற்குப் போகிறோம்…” என்று கூறி இறுக அணைத்து விடுவிக்க. இவளோ ஒரு விம்மலுடன் அண்ணியின் அணைப்பில் சுருண்டவளாய்,

“அண்ணி… நானும் உங்கள் கூடவே வருகிறேன் அண்ணி… ப்ளீஸ்… என்னையும் அழைத்துப் போங்கள்.. எனக்கு… எனக்குப் பயமாக இருக்கிறது” என்று மெய்யான நடுக்கத்துடன் கூறினாள் சமர்த்தி.

இத்தனை காலமும் தங்களைப் பிரியாதவள், இப்போது பிரிந்திருக்கச் சங்கடப் படுகிறாள் என்று எண்ணிய தயாளன், தன் தங்கையின் தலையில் கரத்தைப் பதித்து அழுத்திக் கொடுத்து,

“என்னம்மா… நீ! காதலித்தவனே உனக்குத் துணையாக உன் அருகே இருக்கும்போது, இப்படிக் கலங்குகிறாய். யாராவது பார்த்தால் நாங்கள் உன்னை வற்புறுத்தி மணந்து கொடுத்ததாக நினைக்கப் போகிறார்கள்…” என்று மெல்லிய நகைப்புடன் கூறிவிட்டு, அண்ணியின் மார்பில் கிடந்தவளை இழுத்துத் தன் மார்பில் போட்டுத் தட்டிக்கொடுத்தாலும் இவருடைய கண்களிலும் கண்ணீர் வரத்தொடங்கியது.

“ஒரு பத்திரிகை நிருபராக இருந்துகொண்டு குடும்ப வாழ்க்கைக்காக அஞ்சலாமா… இதோ பாரடா… நாம் என்ன தொலை தூரமா போகப் போகிறோம். சின்னதாகத் தொலைபேசி அழைப்பே போதும்டா… அடுத்த ஒரு மணி நேரத்தில் உன்னிடம் வந்துவிடுவோம். இதற்குப் போய்க் கலங்குகிறாயே…” என்று கண்டிப்பும் அன்பும் கலந்து கூறத் தன் அண்ணனின் கழுத்தைக் கட்டிக் கொண்டவாறு பிரிய மனமற்றிருக்க அதைப் பெரும் சுவாரசியத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ஜான்சி,

“அவளுக்குத்தான் உங்களை விட்டுப் பிரிய முடியவில்லையே… பேசாமல் இங்கே தங்கிவிட்டுப் போகலாமே…” என்றார் இதமாக.

புஷ்பாவோ, மெல்லியதாகப் புன்னகைத்து மறுப்பாகத் தலையை அசைத்தார்.

திருமண நாள் முழுவதும் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த ரதியையும் ஆதித்தனையும் பார்த்துக்கொண்டு இருப்பவருக்கு ஏனோ அங்கே அதிக நேரம் தாக்குப்பிடிக்கவே முடியவில்லை. அதுவும் இதுவரை ரதி புஷ்பாவோடு ஓரிரு வார்த்தைகள் மட்டும்தான் பேசினார். அது தவிரப் பேசத் தயங்கியவர் போல ஒதுங்கி நின்றவரை புஷ்பாவாலும் நெருங்க முடியவில்லை.

பணம் இருந்து பெரிய மாடமாளிகைகள் இருந்து என்ன பயன்? மனம் நிறைய அன்பு இல்லாத அந்த இடம் வெறும் குப்பைமேட்டுக்கு ஒப்பானதுதானே. அத்தகைய வீட்டில் எப்படி முழு மகிழ்ச்சியோடு இருக்க முடியும். எப்போதடா தங்கள் வீட்டிற்குப் போவோம் என்று ஏக்கத்தோடு இருந்தவரிடம் தங்கச் சொன்னால் அவரால்தான் எப்படி முடியும். உத்தியுக்தன் கூடப் புன்னகைத்தான் அன்றி அவர்களைத் தங்குமாறு கேட்கவில்லை. இவ்வளவு ஏன் சற்றுத் தள்ளி யாரோ அன்னியர் போல நின்றிருந்த ரதி கூட மௌனமாகத்தான் இருந்தார். இந்த நிலையில் எந்தத் தொடர்புமில்லாத யாரோ மிஸஸ் ஜான்சி சொன்னார் என்பதற்காக அங்கேயே தங்கிவிட முடியுமா என்ன? இது வரை நேரமும் சமர்த்திக்காகத்தான் தாக்குப் பிடித்தார். அதற்கு மேல் ம்கூம்…! முடியவே முடியாது.

“இல்லை அம்மா… நாங்கள் என்ன அதிக தூரத்திலேயே இருக்கிறோம்? கூப்பிடும் தூரத்தில் தானே. தவிர எங்களுக்கு எங்கள் வீடுதான் வசதி…” என்று நாகரிகமாக மறுக்கும்போதே, தன்னிலை மாறி அவர்களை நோக்கி வந்தான் உத்தியுக்தன்.

அவனைக் கண்டதும் அதுவரை அண்ணனின் அணைப்பில் இருந்தவள் விருக்கென்று விலகி அச்சத்துடன் அவனைப் பார்க்க, இவனோ அவளை நெருங்கி, சாவதானமாக, அவளுடைய கரத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்துத் தோள்களின் மீது கரத்தைப் போட்டு, குளிர்ந்து போன அவள் தேகத்தை உணர்ந்தவன் போல, அணைத்த கரம் கொண்டே இவளுடைய மேல் கரத்தை மேலும் கீழும் வருடிக் கொடுத்தவாறு, ஆங்கிலத்தில்,

“புஷ்பா இவளைப் பற்றி நீங்கள் வருந்தாதீர்கள்… அவளை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டுமோ, அப்படியே பார்த்துக் கொள்கிறேன்…” என்று கூற அவனுடைய கரங்கள் சொன்ன மொழியை உணர்ந்தவளுக்கு உடல் சில்லிட்டது.

அதே நேரம் மிஸஸ் ஜான்சியோ,

“உத்தி… நீ அவர்களை இப்படியெல்லாம் பெயர் சொல்லி அழைக்கக் கூடாதுபா… அது முறையல்ல…” என்றார் மெல்லிய கண்டிப்புடன். இவனோ வியந்தவாறு புஷ்பாவை ஏறிட்டு,

“ரியலி? வை நாட்…” என்றான். புஷ்பாவும்,

“இட்ஸ் ஓக்கேமா… தம்பிக்கு எப்படி அழைக்க வசதியோ அப்படியே அழைக்கட்டும். சொல்லப் போனால் எனக்குத் தம்பி முறைதானே. தம்பி சகோதரியைப் பெயர் சொல்லி அழைப்பதில் தப்பில்லையே… அப்படியே இருக்கட்டும்… விட்டு விடுங்கள்…” என்று மெல்லிய புன்னகையுடன் கூற, உத்தியுக்தனோ,

“மன்னிக்கவேண்டும்… எனக்கு இந்த முறை தலைகள் பற்றி எதுவும் தெரியாது. என் அம்மா…” என்றவன் சற்றுத் தள்ளி நின்றிருந்த ரதியை ஒரு விறைப்புத்தன்மையோடு பார்த்துவிட்டுப் பின் புஷ்பாவை ஏறிட்டு,

“இது வரை சொல்லிக் கொடுத்ததில்லை. சொல்லிக் கொடுப்பதற்கு அவர்களுக்கு நேரமும் கிடைத்ததில்லை… அதனால் தவறாக உங்களை அழைத்திருந்தால் மன்னித்துவிடுங்கள்… இனி சரியாக அழைக்க முயல்கிறேன்…” என்று கூற, மறுப்பாகத் தலையை அசைத்த புஷ்பா,

“அதனால் என்ன… எப்படி அழைத்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை… அழைக்கும் முறைகளில் என்ன இருக்கிறது… அன்பு இருந்தால் போதாதா?” என்று கூற,

“உங்களை நான் எப்படி முறை வைத்து அழைப்பது?” என்றான் புருவங்கள் சுருங்க. புஷ்பா பதில் சொல்லத் தயங்க,

“அவர்களை அக்கா என்று அழைக்கவேண்டும் கண்ணா…” என்றார் ஜான்சி.

“ஓ…” என்றவன் அதை ஒரு முறை சொல்லிப் பார்த்தான். பின் புஷ்பாவை ஏறிட்டு,

“உங்களை அக்கா என்றால் தயாளனை எப்படி அழைப்பது?” என்றான் மெய்யான சந்தேகத்துடன்.

“நான் அக்கா என்றால் இவர் உங்களுக்கு அத்தான் முறை…” என்ற புஷ்பா அடுத்த ஐந்து நிமிடங்களில் உறவுகளையும் அவர்களை எப்படி அழைக்க வேண்டும் என்கிற விளக்கத்தையும் கூற, தன்னை மறந்து வியந்தவாறு விழிகளை விரித்தான்.

“சாரி… இத்தனை உறவுகள் இருக்கின்றன என்று எனக்குத் தெரியாது… அதைச் சொல்லித்தர யாருக்கும் நேரம் இருந்தது கிடையாது… இனி இயன்ற வரை முறை வைத்து அழைக்கப் பார்க்கிறேன்…” என்று கூற புஷ்பாவிற்கு உத்தியுக்தனை முழுவதுமாகப் பிடித்துப் போனது.

அவனுடைய தாய் எப்படியோ, இவன் நன்றாகப் பழகுகிறானே. அது போதும்…’ என்று நிம்மதி கொண்டவராக விடைபெற்றுச் செல்ல, தொடர்ந்து ரதியும் ஆதித்தனும் புறப்படத் தொடங்கினர். ஜான்சி தன்னருகே நின்றிருந்த அவ்வியக்தனைப் பார்த்து,

“கண்ணா… அம்மா புறப்படுகிறார்களே… அவர்களைத் தங்கச் சொல்லேன்…” என்று மெல்லிய கிசுகிசுப்புடன் கூற, சிரித்த அவ்வியக்தன்,

“அவர்களை நிறுத்தவேண்டும் என்று ப்ரோ நினைத்திருந்தால் தடுத்திருப்பார்தானே மிஸஸ் ஜான்சி…” என்றவனுக்கும் அன்னையைத் தடுக்கும் எண்ணம் சுத்தமாக இருக்கவில்லை.

ரதிக்கும் கூட அங்கே தங்கவேண்டும் என்று தோன்றவில்லை. அவ்வியக்தனையும் ஜான்சியையும் ஒரு வெறுப்போடு பார்த்துவிட்டு சடார் என்று வெளியேற, ஏனோ அந்தக் காட்சியைக் கண்ட ஜான்சியின் முகம்தான் வாடிப்போனது. சமர்த்தியோ, குழப்பமான அந்தப் புரியாத உறவுகளைக் கண்டு விழித்துக்கொண்டு நின்றாள். அதே நேரம் அண்ணனை நெருங்கிய அவ்வியக்தன்,

“ஓக்கே ப்ரோ… நான் கிளம்புகிறேன்… மிஸஸ் ஜான்சிக்கு அடுத்த கிழமை இலங்கை போக வேண்டுமாம். அதற்கிடையில் அவர்களுடைய நண்பர்களைச் சந்திக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதனால் இப்போதே அவர்களை என் கூட அழைத்துச் செல்கிறேன்…” என்றவாறு அவரை அழைத்துச் செல்ல முயல,

“நோ… மிஸஸ் ஜான்சி இன்று என் விட்டில் தங்கட்டும் அவ்வி… நாளை வேண்டுமானால் நீ அழைத்துச் செல்…” என்று கூறிவிட்டு ஜான்சியைப் பார்த்து,

“மிஸஸ் ஜான்சி இன்று ஒரு நாள் என் கூடத் தங்குங்களேன்…” என்று கேட்டபோது ஏனோ உரிய ஒன்றைப் பிரிய மனமில்லாக் குழந்தையின் பிடிவாதம் அவனிடத்தே தெரிந்தது.

அதைக் கண்டு சமர்த்தி வியந்து போனாள். தாய் தந்தையிடமில்லாத அன்பை யாரோ ஜான்சியிடம் காட்டும் அளவுக்கு அவர் அத்தனை முக்கியமானவரா என்ன? என்று குழம்பிக்கொண்டிருக்கும் போதே, தமையனின் வேண்டுதலுக்குத் தலையசைத்து விட்டு அவ்வியக்தன் விடைபெற்றிருந்தான்.

அவன் சென்றதும் ஜான்சியின் அருகே வந்து அவரைத் தன் தோளோடு அணைத்தவன்,

“எதற்கும் ஒரு மாதம் தங்குவதுபோல வந்திருக்கலாம் அல்லவா மிஸஸ் ஜான்சி…” என்று குறையுடன் கேட்க, மெல்லியதாகச் சிரித்தவாறு அவனுடைய கன்னத்தில் கரத்தைப் பதித்தவர்,

“முன்னதைப் போல உடல் எதற்கும் ஒத்துழைப்பதில்லை கண்ணா… தவிர என்னை நம்பி நிறையக் குழந்தைகள் இருக்கிறார்களே… நான் இல்லாவிட்டால் தவித்துப்போவார்கள்  தவிர முன்னமே வந்திருக்க வேண்டியது.

இந்த விசா ழுபட்டதால் நினைத்ததுபோல உடனே வர முடியவில்லை. எனக்கும் நிறைய பொறுப்புகள் இருக்கிறதே கண்ணா… என்னால் தங்க முடியவில்லை என்றால் என்ன? உனக்கு நேரம் கிடைக்கும் போது, உன் மனைவியை அழைத்துக்கொண்டு இலங்கை வா…” என்று கூற, சிரித்தவாறு

“உங்களை இங்கே தங்குங்கள் என்றால் நீங்கள் என்னை வரச் சொல்கிறீர்களா…?” என்றவன் அவருடைய உள்ளங்கையில் தன் உதடுகளைப் பொருத்தி, “ஐ லவ் யு… மிஸஸ் ஜான்சி… அன்ட் ஸ்டில் ஐ மிஸ் யு…” என்றான் முகம் இளக.

பின் அவரை விட்டு விலகியவன் சற்றுத் தள்ளி இருந்த வேலையாளைப் பார்த்து,

“மிஸஸ் ஜான்சியின் அறையைக் காட்டுங்கள். அவர் கூடவே எப்போதும் ஒருவர் துணையாக நில்லுங்கள்…” என்று உத்தரவிட்டுவிட்டு ஜான்சி தன் அறைக்குச் செல்லும் வரைக்கும் காத்திருந்தவன், அவர் சென்று மறைந்ததும் திரும்பி சமர்த்தியைப் பார்த்து,

“ஆர் யு ரெடி?” என்றான்.

அதைக் கேட்டதும் கலக்கத்துடன் இவனைப் பார்த்தாள்.

அந்தப் பார்வையில் கெஞ்சல் இருக்க கொஞ்சமாவது இரங்கினானா அவன்? அலட்சியமாக அவளைப் பார்த்துதன் அறை இருக்கும் இடத்தைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு,

“தாமதிக்காமல் விரைவாக வா…” என்றுவிட்டுக் கடகடவென்று படிகளில் ஏறிச் சென்றான்.

இவளோ எச்சிலைக் கூட்டி விழுங்கியவாறு உடல் நடுங்க ஆடாது அசையாது அங்கேயே நின்றிருந்தாள்.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. வேறு வழியில்லாமல் மெதுவாகப் படிகளில் ஏறி அவன் சொன்னது போல அந்த இரட்டைக் கதவுகளுக்கு முன்பாக வந்து நின்றாள்.

எச்சி கூட்டி விழுங்கியவாறு அறைக் கதவைத் தட்ட உள்ளேயிருந்து சத்தம் எதுவும் வரவில்லை. யோசனையோடு கதவின் குமிழில் கரம் வைத்துத் திறக்க, அது தானாகத் திறந்து கொண்டது.

தயக்கத்துடன் உள்ளே நுழைந்தவளுக்கு அந்த அறையின் பிரமாண்டம் ஒரு விதப் பயத்தைக் கொடுத்தது. அத்தனையிலும் பணத்தின் செழுமை கொட்டிக் கிடந்தது. ஏனோ கால் வைக்கவே கூசியது.

இத்தகைய அறைகளைத் திரைப்படத்தில் மட்டும்தான் கண்டிருக்கிறாள். நேரடியாகப் பார்க்கும் பொது அவளையம் மீறி விழிகள் விரிந்தன.

வியப்புடன் அந்த அறையைப் பார்த்துக் கொண்டு வந்தவள் சற்றுத் தள்ளியிருந்த கதவுக்கு உள்ளே தண்ணீர் விழும் ஓசை கேட்டதும் அது குளியலறை என்று தெரிந்தது. அதற்கு அருகேயும் ஒரு கதவிருக்கச் சென்று திறந்து பார்த்தாள். அது இன்னொரு படுக்கையறை. திறந்ததும் அவள் நாசியில் மோதிய வாசனையில் அது உத்தியுக்தனின் பிரத்தியேக அறை என்பது புரிந்துபோக ஏனோ நெஞ்சம் படபடத்தது.

உடனே அந்தக் கதவை முடிவிட்டு, மீண்டும் படுக்கையை நோக்கி வந்தவளின் கவனம் இரண்டு ஆளுயர ஜன்னல்களுக்கு மத்தியில் அமைக்கப் பட்டிருந்த கதவில் நிலைத்தது.

விரைந்து சென்று திறந்து பார்த்தாள். திறந்ததும் சில்லென்ற மென்காற்றோடு அழகிய உப்பரிகை வரவேற்றது. ஆவலுடன் வெளியே வந்தவளை மெல்லிய குளிர் காற்று அணைத்துக் கொள்ள, மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு வானத்தை அண்ணாந்து பார்த்தாள்.

இருளத் தொடங்கியதற்கு அடையாளமாக ஆங்காங்கே பல நட்சத்திரங்கள் இவளைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டின.

அதைக் கூட ரசிக்க முடியாமல், மனதிற்குள் மிகப்பெரும் மகாபாரதப் போரே நடந்து கொண்டு இருந்தது.

அவனோடு என்ன பேசுவது எப்படிப் பேசுவது பேசினாலும் கேட்பானா? அவளுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்வானா? அன்றுபோல வன்மையாகக் கையாள முயல்வானா, இல்லை மிரட்டிவிட்டு விட்டுவிடுவானா… எப்படி இந்த சிக்கலிலிருந்து நீந்திக் கரையேறப் போகிறாள்? புரியாத குழப்பத்துடன் நின்றிருக்க எங்கோ கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சுயம் வந்தவளாகத் திரும்பியவளின் இதயம் படு வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

அவன் குளித்துவிட்டு வந்துவிட்டான் போலும். அடுத்தது என்ன செய்யப்போகிறான். இவளைத் தேடி வந்துவிடுவானா… கடவுளே… இப்படியே எங்காவது ஓடிவிடலாமா? ஓடுவதாக இருந்தால் எங்கே ஓடுவது… அச்சம் பாதம் முதல் உச்சந்தலை வரை அடிக்க அசைய முடியாதவளாக அப்படியே நின்றிருந்தாள் சமர்த்தி. தொண்டை வறண்டு போனது.

எத்தனை நேரம் அப்படியே நடுக்கத்துடன் நின்றிருந்தாளோ, அடுத்து அவனுடைய உருவம் வாசலில் நிழலெனத் தெரிய திக்கென்றானது இவளுக்கு. நெஞ்சம் நடுங்கிப்போக, இரத்தம் வற்றிப்போகத் திரும்பியவளுக்குக் கால்கள் ஒத்துழைக்காமல் துவளத் தொடங்கின. வியர்த்து விறுவிறுக்க அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவன் நின்றிருந்த கோலமே பயத்தைப் பலமடங்கு அதிகரிக்கச் செய்தது.

குளித்திருந்ததால் திண்ணிய வெற்று மார்பில் ஈரம் இன்னும் இருந்தது. கீழே பிஜாமா அணிந்து இருந்தான்… அதைக் கண்டதுமே நெஞ்சுக்குள் பெரிய தொடர்வண்டியே ஓடத் தொடங்கியது. தயக்கத்தோடு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்க,

“எவ்வளவு நேரமாக வெளியே இருப்பதாக உத்தேசம்?” என்றான் கிண்டலாக.

இவளுக்கோ ஒட்டி நின்ற உதடுகள் பிரிவதா இல்லை. தன் நடுக்கத்தை மறைப்பதுபோல சிரிக்க முடியாது சிரித்தவள்,

“நான்… வந்து… அது…” என்று திக்கித் தடுமாறியவளுக்கு, ஒரு வார்த்தை கூட முழுதாக வருவதாயில்லை.

அவனோ மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டிக் கதவில் சாய்ந்து நின்றவாறு அவளைத் தலை முதல் பாதம் வரை சுவாரசியத்துடன் பார்த்தான். அதுவும் அந்த விழிக்ள எங்கே தங்க வேண்டுமோ அங்கே தங்கி, எங்கே நகர வேண்டுமோ அங்கே நகர்ந்து என்று அவளைப் பர்வையாலேயே துகிலுரிக்க, இவளுக்கு மயக்கமே வரும் போலிருந்தது.

தேகம் வேறு வெளிப்படையாக நடுங்கியது. கரங்களோ தன்னையும் மறந்து மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டன.

அவளுடைய முயற்சியைக் கிண்டலுடன் பார்த்து சிரித்தவன்,

“முதலிரவை வெளியேயா கொண்டாடுவது?” என்றவன் சுத்தவரப் பார்த்தான். பின் முகத்தில் இரசனை பொங்க,

“ம்.. பரவாயில்லை… இங்கே கூட நன்றாகத் தான் இருக்கிறது… ஆனால் தரை உருத்துமே…” என்றவன் இப்போது அவளை நோக்கி நிதானமாக வரத் தொடங்கினான்.

அவன் நெருங்க நெருங்க இவளுக்குள் மிகப் பெரும் பூகம்பம். அவசரமாகப் பின்னடைந்தவாறு

“இ… இல்லை… நான் வந்து… நான்… உங்கள் கூடச் சற்றுப் பேசவேண்டும்…” என்றவளிடம்,

“பேசலாம்… நிறையவே பேசலாம். நான்தான் எங்கே ஓடப்போகிறேன், நீதான் எங்கே போகப் போகிறாய். நிதானமாகவே பேசலாம். அதற்கு முதல் என் தேவையை நிறைவு செய்துவிட்டுப் பேசலாம்…” என்றவாறு மேலும் நெருங்க, அதிர்ந்துபோனாள் சமர்த்தி. இரண்டடி பின்னால் வேகமாகச் சென்றவள் அங்கிருந்த தடுப்பில் முட்டித் தடுமாற, ஓரெட்டில் அவளை நெருங்கி, அவளுடைய கரங்களைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவன், மறு கணம் அவளைத் தன் கரங்களில் ஏந்தியிருந்தான்.

What’s your Reaction?
+1
26
+1
8
+1
2
+1
0
+1
0
+1
2
Vijayamalar

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

22 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

7 days ago

நீ பேசும் மொழி நானாக – 36/37

  விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…

1 week ago