குளியலறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாகச் சுருண்டு சிலுப்பிய தலை முடியைக் கரங்களால் வாரி விட்டுப் பின் ஒலிவாங்கியை எடுத்துக் காதில் பொருத்தி, கூந்தலை இழுத்துக் காதுகளை மறைத்தவாறு
“மகிந்தன்…” என்று அழைக்க,
“ஹே… தயாராகி விட்டாயா?” என்றான் கிசுகிசுப்பாய்.
“ஆமாம்…”
“மருந்து குப்பியைக் கவனமாக எடுத்துக் கொள்….” என்றான். உடனே ஓடியவள், தன் கைப்பையில் கையை விட்டு மகிந்தன் கொடுத்த அந்தக் குப்பியை வெளியே எடுத்தாள். கைக்கு அடக்கமான சிறிய குப்பி உடனே அதை எடுத்து மார்புச் சட்டைக்குள் பதுக்கி விட்டுக் கண்ணாடியின் அருகே சென்று பதுக்கியது வெளியே தெரிகிறதா என்று பார்த்தாள்.
வலது மார்புக்கு உள் புறம் தள்ளியிருப்பது போலத் தோன்ற, அதைச் சரிசெய்து விட்டு திருப்தி கொண்டவளாக விரைந்து சென்று கைப்பேசியை எடுத்துப் பார்க்க நாற்பது வீதம் அதற்கு உயிர் ஏறியிருந்தது. இப்போதைக்கு அது போதும். கைப்பேசியை அதன் இணைப்பிடமிருந்து கழற்றியவளுக்கு இப்போது அதை எங்கே மறைத்து வைப்பது என்று தெரியவில்லை.
யோசித்தவளுக்குச் சட்டென்று அந்த எண்ணம் வந்தது. ஓடிப்போய் அந்த அறையிலிருந்த கபேர்டில் ஏதாவது நீளமாகத் துணி கிடைக்குமா என்று பார்த்தாள். இல்லை. அங்கிருந்த இழுப்பறைகளைத் திறக்கக் கையில் கிட்டியது ‘சலோடேப்’.
மகிழ்ச்சி பொங்க அதை எடுத்துக்கொண்டு விரைந்து வந்தவள், கட்டிலில் அமர்ந்து இடது தொடை வரை வெட்டிய ஆடையை விலக்க அந்த நேரமா கதவு தட்டப்படவேண்டும். பதட்டத்தோடு கதவைப் பார்த்தவள், அவசரமாகக் கைப்பேசியை உயிர்ப்பித்து, அதில் ஒலிப்பதிவை இயங்க வைத்து விட்டு, கைப்பேசியின் திரையை லாக் செய்தாள். இல்லை என்றால் இடையில் ஏதாவது தட்டுப்பட்டாலும் திரை ஒலிப்பதிவு செய்வதை நிறுத்திவிடும்.
திருப்தி கொண்டவளாக, வெளியே தெரியாத வலது காலை நீட்டி, உள் பக்கமாக முழங்காலுக்குச் சற்றுக் கீழே வைத்துச் செலோடேப்பால் சுத்தவர ஒட்டும்போது மீண்டும் அறைக்கதவு தட்டப்பட்டது.
“கிவ் மி எ செக்…” என்றவள், மிகக் கவனமாக ஒட்டவைத்து விட்டு எழுந்தபோது, கச்சிதமாக அவளுடைய காலோடு இறுக ஒட்டி நின்றது கைப்பேசி.
நிச்சயமாகக் கைப்பேசியைக் கண்டுபிடிக்க வாய்ப்பில்லை. நிம்மதி கொண்டவளாக,
“மகிந்தன் இருக்கிறாயா?”
“யெஸ் பேபி…”
“எந்த நேரமும் உன்னை அழைப்பேன். தயாராக இரு…” என்று கூறி விட்டு, எழுந்தவள் இறுதியாகக் கண்ணாடியைப் பார்த்தாள்.
அப்போதுதான் கவனித்தாள், கன்னத்தில் ஒரு மெல்லிய கீறல் முகத்திற்குப் பூசிய பூச்சையும் மீறித் தெரிந்தது.
“ஷிட்…” எரிச்சலுடன், அதற்கு ஒப்பனை செய்து மறைத்து விட்டு மீண்டும் கண்ணாடியில் பார்த்தாள். இப்போது வெளியே தெரியவில்லை போலத்தான் தோன்றியது. நல்லவேளை தடித்த மேல்சட்டை அணிந்திருந்ததால் விழுந்தபோது காயங்கள் ஏதும் உடலில் ஏற்படவில்லை… ஏற்பட்டிருந்தால் அதை மறைக்க ஒப்பனை சாதனங்கள் கிலோ கணக்கில் வேண்டி இருந்திருக்கும்.
எண்ணும்போதே மீண்டும் அறைக் கதவு தட்டப்பட்டது.
இன்னும் ஒரு முறை தன்னைக் கண்ணாடியில் பார்த்து விட்டுப் பெருமூச்சொன்றை விட்டவள்,
“உன்னால் முடியும் இதங்கனை… நிச்சயமாக உன்னால் முடியும்.” என்று தன்னைத் தானே திடப்படுத்தியவாறு, விரைந்து சென்று கதவைத் திறந்தாள் . அங்கே வேலை செய்யும் பணிப்பெண் இவளைப் பார்த்துத் தலையசைத்து,
“மிஸ்டர் அரவன் உங்களுக்காகக் காத்திருக்கிறார்…” என்றதும், சிரமப்பட்டு ஒரு புன்னகையை வெளியிட்டவாறு அந்தப் பணிப்பெண்ணோடு நடக்கத் தொடங்கினாள் இதங்கனை.
இதயம் பந்தயக் குதிரையாகப் படு பயங்கரமாக அடிக்கத் தொடங்கியது. அவனை எப்படி நேர்காணப்போகிறோம் என்று சுத்தமாக அவளுக்குத் தெரியவில்லை. அதுவும் சற்று முன் நடந்த நிகழ்வு பயங்கரமாக அவளைத் தாக்க, கால்களோ வலுவிழந்தவையாகப் பணிப்பெண் அழைத்துச் சென்ற இடத்திற்குப் போக மறுத்தன.
ஆனாலும் போய்த்தானே ஆகவேண்டும். பயத்தில் பூத்த வியர்வையை துடைத்தவாறு சற்றுத் தூரம் செல்ல, படிகளிலிருந்து இறங்கிக் கீழே சென்று சற்றுத் தூரம் சென்றதும், நின்ற அந்தப் பணிப்பெண், மிகப் பிரமாண்டமாக இருந்த அந்த அறைக் கதவைக் காட்டி,
“மிஸ்டர் அரவன் உங்களுக்காக உள்ளே காத்திருக்கிறார் செல்லுங்கள்…” என்று வழிகாட்டி விட்டு விடைபெற, திக் திக் என்று பயமுறுத்திய இதயத்தையும் புத்தியையும் தற்காலிகமாக ஒதுக்கி வைத்து விட்டு உமிழ் நீர் கூட்டி விழுங்கினாள்.
என்னதான் மனத்தை தைரியமாக வைக்க முயன்றாலும், அச்சம் பிடறியில் வந்து அடிக்கவே செய்தது. வியர்த்துக் குளிர்ந்து போன கரங்களால் அந்தக் கதவின் குமிழைத் தொடுவதற்காகத் தூக்கியவளுக்கு, கரங்கள் நடுங்கிய நடுக்கத்தைக் கண்டு மேலும் பீதியானது.
“காட்… கமான்… யு கான் டு இட்…?” முனங்கியவள், ஆழ மூச்செடுத்துக் குமிழைப் பற்றித் திருப்பிக் கதவைத் திறக்க, உள்ளே மெழுகுதிரிகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளியேற்றப்பட்ட அந்த சாப்பாட்டறை அவளை இருகரம் நீட்டி வரவேற்றது. அம்மாடி வழிதவறி வந்துவிட்டாளா என்ன… சாப்பாட்டறையை தேவலோகம் போலக் காட்சி கொடுக்கிறதே.
கிட்டத்தட்ட இருபது பேர் இருக்கக்கூடிய அந்த நீண்ட மேசையின் மத்தியில் விதவிதமான உணவுகள் சமைக்கப்பட்டு அடுக்கியிருந்தன. நடுவிலே வண்ணமயமான மெழுகுதிரிகள் சுடர் விட்டு எரிந்துகொண்டிருந்தன. காதலுக்கும் காதலர்களுக்கு ஏற்ற இடமாக மாற்றப்பட்டிருந்த அந்த இடத்தைச் சுத்தமாக ரசிக்க முடியவில்லை. அந்தக் கணமே அங்கிருந்து தப்பித்து ஓட அவள் தயாராகத்தான் இருந்தாள். ஆனால் முடியாதே.
சிங்கத்தை அதன் குகையில் சென்று சந்திக்கும் மான்போல உடலில் உள்ள அத்தனை அணுக்களும் நடுங்கினாலும், அதை மறைத்தவாறு உயர்ந்த குதிக்கால் சத்தமிட, முன்னேறினாள் அந்தப் பாவை.
அவள் வருவதை உணர்ந்தவன் போல நடுநாயகமாக அமர்ந்திருந்த அந்த அரவன் எழுந்து அவளை நோக்கி வந்தான்.
அவன் எந்த எல்லை வரைக்கும் போவான் என்பதைச் சற்று முன்புதானே கண்டுகொண்டாள். அப்படிப்பட்டவனோடு எதிர்த்து எப்படிப் போராடப்போகிறாள். சத்தியமாக அவளுக்குத் தெரியவில்லை. அவனைக் கண்டதும் சேகரித்து வைத்த தைரியம் சுத்தமாகத் தொலைந்து போயிற்று இதங்கனைக்கு.
இதயம் பலமாகத் துடிக்க, எங்கே அவன் தன்னையும் கொன்றுவிடுவானோ என்கிற அச்சம் தாக்கத் தன்னையும் மீறி இரண்டடி பின்னால் எடுத்து வைத்தவளுடைய அந்த உயர்ந்த குதிக்கால் கட்டுப்பாட்டையும் மீறி மடிய, அவள் தடுமாறிய அந்தக் கணம், அவளது துடியிடையைப் பற்றித் தாங்கிக்கொண்டான் அந்த அரவன்.
அவனுடைய ஒற்றை உள்ளங்கையே போதும் அவளுடைய இடையை வளைக்க. ஆனால் முழுக் கரம் கொண்டும் அவளை அணைத்ததால் அவனுடைய உள்ளங்கை கச்சிதமாக அவளுடைய வயிற்றில் அழுத்தமாகப் படிந்து கொள்ள, அவனுடைய கை வளைவில் சிக்கிக்கொண்டாள் இதங்கனை.
அவன் தாங்கியதும், கிலியில் அவளும், காமத்தில் அவனுமாய் ஒரு கணம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க, எத்தனை நேரமாக அப்படியே நின்றனரோ. அவனை உதறி விட்டு ஓடும் நோக்கத்தில் இவள் அசைய, அவனும் நல்லவனாக,
“ஈசி பேபி…” என்றவாறு அவளை நிமிர்த்தி விட்டு, இப்போது அவளை அக்குவேறு ஆணிவேராக விழிகளால் அலசத் தொடங்கினான்.
“வாவ்… லுக் அட் யு… யு ஆர் கோர்ஜியஸ்…” என்றான். மீண்டும் விழிகளால் அவளை ரசிக்கத் தொடங்கியவனுக்கு மூச்சு விடுவதே சிரமம் போலத் தோன்றியது.
அவனுடைய இடது கரம் மேலெழும்பி சிலிப்பி நின்ற கூந்தலுக்குள் நுழைந்து அதனுடைய தன்மையை அறிய முயன்றதாகி மெதுவாய் அசைந்து பின் கூந்தலை விரல்களுக்குள் கோத்து அப்படியே கீழ் இழுத்து வர இதங்கனைக்கு மயக்கமே வரும் போலத் தோன்றியது.
ஏன் எனில் அவன் கரங்கள் விளையாடிய பகுதி ஒலிவாங்கி காதுக்குள் பொருத்தியிருந்த பகுதி. மூச்சை உள் இழுத்துக் காத்திருக்க அவனோ மேலும் அவள் நோக்கிக் குனிந்து அவள் கூந்தலின் வாசனையை நுகர்ந்து விழிகளை மூடி,
“மெஸ்மரைசிங்…” என்றான் கிசுகிசுப்பாய். அவனுக்கும் மயக்கம்தான். அது காம மயக்கம். இவளுக்கோ கிலி மயக்கம்.
இப்போது அவளுடைய கூந்தலை விட்டுக் கரத்தை விலக்கியவன், அதே காமத்துடன் அவளைத் தலை முதல் கால்வரை பார்த்தான். அவனை மயக்கிய அந்த சுருண்ட கூந்தல் நெற்றியில் தாராளமாகப் புரள, அடர்ந்த இமையின் கீழ் பொருத்தமாய் மையிட்ட நீண்ட விழிகளும், சிவந்த நிறத்தில் அழுத்தமாய் தீட்டிய உதட்டுச் சாயத்தோடு, அவள் நிறத்தை மேலும் தூக்கலாகக் காட்டும் முகப்பூச்சும். அவள் நிறத்தை மேலும் பிரதிபலிக்கும் வெண்ணிறத் தோளும். அதில் நூலாய் அந்த ஆடையைத் தாங்கியிருந்த சிவந்த கயிறும். மார்பின் அரைவாசி இறங்கிய ஆடைக்கூடாகத் தெரிந்த பித்தம் கொள்ளச் செய்யும் நெஞ்சும், அந்த சிற்ப உடலை நச்சென்று கவ்வியிருந்தது செந்நிற கடல் கன்னி ஸ்பகட்டி ஆடையும், அதனூடாகத் தெரிந்த சிறிய துடியிடையும். நடக்கத் தோதாகவோ இல்லை கவற்சியாகக் காட்டவோ என்று தொடைவரை வெட்டப்பட்ட அந்த ஆடைக்கூடாகத் தெரிந்த செழித்த திரண்ட கால்களும். அப்பப்பா… அவனால் தன் விழிகளை அவளிடத்திலிருந்து எடுக்கவே முடியவில்லையே. அவன் திணறிப்போக, இவள்தான் பெரிதும் கலங்கிப்போனாள்.
அவன் பார்வையின் வீரியம் தாங்க முடியாமல், வெளியே தெரியும் அங்கத்தை மறைக்க எழுந்த வேகத்தைச் சிரமப்பட்டு அடக்க முயன்றவள் ஒரு கட்டத்தில் தோற்றுப் போனவளாகக் கரங்கள் கொண்டு தேகத்தை எப்படி மறைப்பது என்று முயற்சியில் இறங்க. அவனோ,
“பியூட்டிஃபுள்… யு மேக் மி க்ரேசி…” என்றவாறு அவளை நெருங்கி அவளுடைய இடைக்கூடாகத் தன் கரத்தை எடுத்துச் சென்று தன் உடலோடு இறுக்கியவாறு,
“கம்…” என்றவாறு அவளை அழைத்துச் சென்றான் அந்த அரவன்.
கடவுளே இந்தக் கொடுமையிலிருந்து அவளுக்கு எப்போது விடிவு கிடைக்கும். பற்களைக் கடித்தவாறு அவன் கரத்தின் தொடுகையைச் சிரமப்பட்டுச் சகித்தவளாக, அவனோடு நடக்கத் தொடங்க. அவளை அங்கிருந்த ஒரு இருக்கையை இழுத்து அமர வைத்து விட்டு, அவளுடைய வெற்றுத் தோள்களின் மீது தன் பலம் பொருந்திய பெரிய கரத்தைப் பதித்து, ஒரு விநாடி இறுகப் பற்றிப் பின் பட்டும் படாமலும் வருடிக் கொடுத்து அவளுடைய தோலின் மென்மையை உணர்ந்தவனாக, அவள் நோக்கிக் குனிந்து, அவளுடைய காதுகளுக்குள் தன் உதடுகள் தொடும் அளவில் நின்றவாறு,
“ஐ ஆம் கிளாட் தட் யு ஆர் ஹியர்…” என்றபோது அவனுடைய உதடுகள் தீண்டிய தீண்டலில் அவளையும் மீறி உடல் சிலிர்த்துக் கொள்ளத் தன் விழிகளை அழுந்த மூடி அந்தத் தவிப்பிலிருந்து தன்னைக் காக்க விளைந்து தோற்றுக்கொண்டிருந்தாள் இதங்கனை.
பின் அவளுக்கு அருகில் அமர்ந்தவன், அவளுக்கு முன்பாக இருந்த வைன் போத்தலைத் திறந்து குவளையில், ஊற்ற, இவளோ,
“இல்லை… நான் இவை குடிப்பதில்லை…” என்றதும்,
“எனக்குத் தெரியும்… இதில் மதுரசம் இல்லை. அதனால் பயமில்லாமல் குடிக்கலாம்…” என்று விட்டு அதை ஓரமாக வைத்தவன், இன்னொரு போத்தலைத் திறந்து அதைத் தனக்குப் பக்கத்திலிருந்த குவளையில் ஊற்றி, அதை எடுத்துச் சுவைக்க, இவளோ எங்கே தன் கரங்களைத் தூக்கினால் அவை நடுங்குவதை அவன் கண்டுகொள்வானோ என்கிற அச்சத்தில், தடுமாறியவள், முயன்ற வரை தன்னை அடக்கியவளாகக் குவளையை இறுகப் பற்றி ஒரு மிடறு குடிக்க, இவனோ அவள் குடிக்கும் அழகை ரசித்துக்கொண்டிருந்தான்.
அதுவும் அவள் அவசரமாகக் குடித்ததால், உதட்டின் ஓரத்தில் ஒரு துளி வடிந்து செல்ல, தேவமிர்தம் வீணாய்ப் போகிறதே என்பது போலச் சட்டென்று தன் கரத்தை நீட்டியவன், பெருவிரலால் அவளுடைய உதட்டோரத்தில் வடிந்த வைன் ரசத்தைத் துடைத்தெடுத்து, அதே விரலைத் தன் உதட்டில் பொருத்தி அந்தத் திராட்சைரசத்தைச் சுவைத்தவனுக்குப் போதை கட்டுக்கடங்காமல் சுள்ளென்று உச்சியில் சென்று அடித்தது. அது கொடுத்த சுகத்தில் விழிகளை மூடி ரசித்தவன்,
“வாவ்… இதற்கு முன்னம் இந்தத் திராட்சை இரசம் சுவையைக் கொடுத்ததில்லை…” என்றான் கிறக்கத்துடன்.
இவளோ, பெரும் சங்கடமும் தவிப்பும் ஒன்று சேர, அதை வெளிக்காட்டாதிருக்கச் சிரமப்பட்டுச் சிரித்தவளை ரசனையுடன் பார்த்தான் அரவன்.
திடீர் என்று அவனுடைய ரசனை மாறி, அங்கே புருவங்கள் சுருங்கக் கோபம் பிறக்க, அவளை நோக்கிக் குனிந்தவன், தன் பெருவிரலால் அவளுடைய கன்னத்தை வருடிக் கொடுத்து,
“என்ன செய்து வைத்திருக்கிறாய்..?” என்றான் கோபமாக. இவளோ புரியாமல் அவனைப் பார்க்க,
“கன்னத்தில் காயம் எப்படி வந்தது?” என்றான் அதே கோபத்தோடு.
ஐயோ…! கண்டுகொண்டானா… பதறியவள்,
“ச… சட்டை மாட்டும் போது… சிப் (zip) கீ… கீறிவிட்டது போல…” என்று கூறிச் சமாளிக்க, அவனோ அவளுடைய காயத்தை விடுத்துக் கன்னத்தை வருடிக்கொடுத்தான்.
அவனுடைய அழுத்தமான கீழ் உதடு அதீத காமதத்தால் மேல் பற்களுக்குள் சிறைப்பட, அதை உணர்ந்து கொண்டவளுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. இவனை எப்போது வீழ்த்துவது, எப்போது செய்திகளை அறிவது? நினைக்கும் போதே ஆயாசமானது. பெரும் மலையை வெறும் நூல் கொண்டு இழுப்பது என்றால், அது நடக்கும் காரியமா? சலிப்புடன் பார்வையை விலக்கியவளின் விழிகள், கையில் இருந்த மதுரசத்தின் மீது நிலைத்தது.
சட்டென்று புத்தி வேலை செய்ய, உடனே அதைக் கை தவறுவது போலக் கீழே விட, அந்த மதுரசம் அவளுடைய ஆடையில் கொட்ட, கண்ணாடிக் குவளையோ தரையில் விழுந்து சிதறியது.
உடனே தன் கரத்தை விலக்கியவன், சிதறிய குவளையைப் பார்க்க, இவளோ எழுந்து நின்றவாறு,
“மை… காட்.. ஐ… ஐ ஆம் சாரி… ரியலி ரியலி சாரி…” என்று பதறியவளாக விலக முயல, இவனோ
“ஹே… இட்ஸ் ஓக்கே… ரிலாக்ஸ்… விபத்துகள் எதிர்பாராமல்தான் நடக்கும்…” என்றவன் எங்கோ தலையைச் சரித்து ஒற்றை விரலால் வா என்பது போல அழைக்க மறு கணம், ஒரு பணிப் பெண் விரைந்து வந்தாள்.
“க்ளீனப் ப்ளீஸ்…” என்று கூறி முடிக்க முதல்,
“இல்லை… நானே சுத்தம் செய்கிறேன்… இது என் தவறுதான்…” என்று குனியத் தொடங்கியவள் கண்ணிமைக்கும் நொடியில் உட்சட்டைக்குள் மறைத்து வைத்த அந்தக் குப்பியை வெளியே எடுத்திருந்தாள்.
அவனோ சடார் என்று அவளுடைய மேல் கரத்தைப் பற்றத் திக்கென்றது இவளுக்கு. கண்டுகொண்டானோ? அச்சத்தொடு நிமிர்ந்து பார்க்க,
“ஹே… லீவ் இட்… நீ கரங்களைக் காயப்படுத்திக் கொள்வாய்…” என்று கடிந்து விட்டுத் திரும்பிப் பணிப்பெணைப் பார்க்க, அவள் உடனே சுத்தமாக்கி விட்டுச் சென்றாள். அவள் சென்றதும், அதுவரை அவளுடைய கரத்தைப் பற்றியிருந்தவன், அழைத்து வந்து,
“இப்போது உட்கார்…” என்றான் மென்மையாக.
உடனே அமர்ந்துகொண்டாள் இதங்கனை. இல்லையென்றால் கால்கள் வலு இழந்திருப்பது அவனுக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும் அவளுடைய வெளுறிய முகம் அவனை உறுத்தியதோ,
“ஹே… இஸ் எவ்ரிதிங் ஓக்கே…?” என்றான் மென்மையாக. உடனே சமாளித்தவள்,
“சாரி… இந்த ஆடையைக் கறைபடிய வைத்தவிட்டேன்…” என்றாள் அதற்குத்தான் வருந்தியவள் போல. அதைக் கேட்டு அழகாகச் சிரித்தவன்,
“நோ… நீட் டு பேபி… இன்று இரவு எப்படியும் குப்பைத் தொட்டியில் போகப்போகிற ஆடைதானே… அதனால் கவலைப் படாதே… சரி சரி… சாப்பிடு… நீ சாப்பிடும் போது அதை நான் பார்த்து ரசிக்கவேண்டும்… அதற்குப் பிறகு…” என்றவன் அவள் காதுகளை நோக்கிக் குனிந்து, எதையோ கூற, மீண்டும் தேகம் உதறியது. ஆனாலும் ஈ என்றவனுக்கு இதயம் தொண்டையில் வந்து துடித்தது.
கூடவே நிச்சயமாக அவனால் எதுவும் செய்ய முடியாது என்கிற உறுதியும் பிறந்தது. மகிந்தன் அருகேதான் இருக்கிறான். எந்த விநாடியும் இவளைத் தேடி வந்துவிடுவான். மகிந்தனை மீறி, இவனால் எதுவும் செய்ய முடியாது.. திரும்பத் திரும்ப அதையே கூறித் தன்னைத் திடப்படுத்திக்கொண்டிருக்க,
“ஹே… சாப்பிடவில்லை…? சாப்பிடு…” என்றதும்தான் இவள் சுயநினைவுக்கு வந்தாள். குனிந்து தன் தட்டைப் பார்க்க, அவன்தான் தட்டில் உணவை நிறைத்து வைத்திருந்தான். அந்த உணவு வகையறாவைப் பார்க்கும் போது வெறுப்புதான் தோன்றியது.
இவனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு தேவாமிர்தத்தைக் கூட சுவைக்க முடியாதே. ஒரு கொலையைச் செய்து விட்டு எதுவும் நடக்காத மாதிரி இவனால் எப்படிப் பேச முடிகிறது?
சிரமப்பட்டு, அவனைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு, அச்சத்திலும் கோபத்திலும் வலித்த வயிற்றை மருந்துக் குப்பியைத் தாங்கிய கரத்தால் அழுத்திக் கொடுத்தவாறு, மறு கரத்தில் முள்ளுக் கரண்டியை ஏந்தி உணவை அளையத் தொடங்கியவளுக்கு எப்படி தன்னிடமிருக்கும் மருந்தை அவனுடைய மதுரசத்தில் கலப்பது என்று தெரியவில்லை.
வாய்ப்புக் கிடைக்காமல் எப்படிக் காயை நகர்த்துவது? குழம்பியவளுக்குப் பளிச்சென்று ஒன்று தோன்றியது.
உடனே அதிலிருந்த இறாலை முள்ளுக் கரண்டியால் குத்தி எடுத்து வாயில் வைத்துச் சுவைப்பது போல விழிகளை மூடியவள்,
“மை காட்… மிகவும் சுவையாக இருக்கிறது அரவன்…” என்றாள் ரசனையுடன்.
“ரியலி…” என்றவன், இறால் அடங்கிய பாத்திரத்திலிருந்து துண்டு இறாலை முள்ளுக்கரண்டியால் குத்தி எடுத்து வாயில் வைத்து நாகரிகமாகக் கடித்துப் பார்க்க, நன்றாகத்தான் இருந்தது.
“நட் பாட்…” என்று இரசனையுடன் சொன்னவனை ரசிப்பது போலப் பார்த்தவள், அடுத்த இறாலை முள்ளுக் கரண்டியில் குத்தி அவன் பக்கமாகச் சற்றுக் குனிந்து அவனுடைய உதடுகளை நோக்கி நீட்ட, அவனோ ரசனையுடன் அவளைப் பார்த்தவாறே அவள் நீட்டிய இறாலைத் தன் உதடுகளால் பற்றி எடுக்க, இவளும் அவனுக்கு ஊட்டும்போதே கரத்திலிருந்த அந்தக் குப்பியின் மூடியைக் கழற்றிவிட்டிருந்தாள்.
இப்போது அவனுடைய மதுவில் ஊற்றுவதுதான் பாக்கி.
மீண்டும் அதே போல இறாலைக் குத்தி செந்நிறமாகக் கிடந்த ஏதோ ஒரு சாசில் தோய்த்து, அதை அவனை நோக்கி நீட்ட, அவனும் அதை வாங்குவதற்காக அவள் கரம் நோக்கி முன்னேறத் தொடங்கிய அந்த நேரம், தவறுதலாகத் தன் கரத்தை விடுவது போலக் கைவிட, அந்தோ பரிதாபம், சாசினால் தோய்ந்த இறால் அவனுடைய உதடுகளைச் சென்றடையாமல், அவன் அணிந்திருந்த விலை கூடிய கோட்டின் மீது விழுந்து உருண்டு அவன் பான்டைத் தொட்டுக்கொண்டு தரையில் விழுந்தது.
இறாலில் படிந்திருந்த சாஸ் அப்படியே அவன் கோட்டில் கொட்டிப்போகப் பதறியவள் போல எழுந்து அவனை நோக்கி வந்தவள், அவனை மறுபக்கம் திரும்ப வைத்து,
“ஓ மை காட்… ஓ மை காட்… ஐ ஆம் சாரி… ரிசயலி ரியலி சாரி…” என்று அவன் கோட்டில் படிந்த சாசைத் துடைப்பது போல நெருங்கி நின்று அந்தக் குப்பியிலிருந்த மருந்தை அவன் மதுபானத்தில் ஊற்றி விட்டு, எஞ்சிய குப்பியை அவனுடைய கோட் பாக்கட்டிலும் போட்டுவிட்டாள்.
இதை அறியாத அந்த அரவனோ,
“இட்ஸ் ஓக்கே பேபி… ரிலாக்ஸ்…” என்றவாறு எழுந்து, அழுக்கேறிய கோட்டைக் கழற்றி அங்கிருந்த இருக்கையில் போட்டு விட்டு, அமர்ந்தவன், அடுத்த கணம் அவளை இழுத்துத் தன் மடியில் அமர்த்திக்கொள்ளப் பதறிப்போனாள் இதங்கனை.
வேகமாக அவன் பிடியிலிருந்து விடுபட முயன்றவளாக எழ முயல, எங்கே எழுவது. அவனுடைய பலம் பொருந்திய கரம் அவளுடைய வயிற்றை அழுந்தப் பற்றி, அவளை எழவிடாது செய்தது. கூடவே, தனக்காப் பதறும் அந்தப் பெண்ணவளை ரசித்தவனாக,
“எதற்கு இத்தனை வருத்தம். துவைத்துவிட்டால் கறை போய்விடும்…” என்று கூறியவாறு அவளுடைய முதுகில் தன் உதடுகளைப் பதித்து அங்கும் இங்கும் வருடிச் செல்ல கூசித் தவித்துப் போனாள் அந்தப் போதை. அதே நேரம் அவனுடைய கரங்கள், மெல்லிய கயிறாய் தோளில் தொங்கிக்கொண்டிருந்த ஸ்பகடி ஆடையின் கையைக் கழற்றத் தொடங்க, அதற்கு மேல் அவன் மடியில் அர்ந்திருக்க முடியாமல், அவனை உதறி விட்டு எழுந்தவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தன. அந்தக் குளிரிலும் வியர்த்துக் கொட்ட,
திக்கித் திணறியவளாக.
“மு… முதலில்… சாப்பிடலாமே…” என்றாள் அவசரமாக.
அவனோ தன் தோள்களைக் குலுக்கி விட்டு,
“அஸ் யு விஷ்…” என்றவன், தள்ளியிருந்த தன் மதுரசக் குவளையை எடுத்து உதடுகளை நோக்கி எடுத்துச் சென்றான். இவளோ ஆர்வமாக அவன் குடிக்கும் தருணத்திற்காகக் காத்திருந்தாள்.
அந்தோ பரிதாபம், அவனோ உதடுவரை கொண்டு சென்ற மதுவை மீண்டும் மேசையில் வைத்து விட்டு,
“சாப்பிடு முதலில்…” என்றான்.
“இதோ சாப்பிடுகிறேன்…” என்று விட்டுப் பரிதாபமாக அவனுடைய மதுக் குவளையைப் பார்க்க, அவனோ அந்த மதுக் குவளையை அவளை நோக்கி நிட்டி,
“சுவைத்துப் பார்க்கிறாயா?” என்றான் சுவாரசியமாக. இவளோ பதறியவாறு,
“ஓ… நோ…! நான் மது அருந்துவதில்லை…” என்று திக்கித் திணறி மறுக்க, அவனோ தோள்களைக் குலுக்கி விட்டு,
“நீ வேறு இதையே உற்றுப் பார்த்தாயா… ஒரு வேளை சுவைத்துப் பார்க்க ஆசைப்படுகிறாயோ என்று நினைத்துவிட்டேன்…” என்றவன், மீண்டும் அந்தக் குவளையை உதடுகளை நோக்கி எடுத்துச் சென்றான். இவளோ ஆர்வத்துடன் அவன் குடிக்கும் தருணம் பார்த்திருக்க, அந்தக் கிராதகன் மீண்டும் அதைக் குடிக்காமல் போக்குக் காட்டியவாறு,
“என் முகத்தில் ஏதாவது இருக்கிறதா என்ன?” என்றான் வியந்தவனாக. இவளோ, தடுமாறியவளாக,
“ஹீ… ஹீ…. இல்லையே… ஏன் கேட்கிறீர்கள்…?” என்று கேட்க,
“என் முகத்தையே பார்த்தாயா… அதுதான் கேட்டேன் என்றவன், மதுக் குவளையை மீண்டும் மேசையில் வைத்து விட்டு,
“சரி சரி நேரம் போகிறது… படுக்கை நமக்காகக் காத்திருக்கிறது. விரைவாகச் சாப்பிடு இதங்கனை….” என்று அவன் கூற, அசடு வழிந்து விட்டு ஒரு வாய் எடுக்கப் போனவளுக்குக் கரங்கள் அப்படியே நின்றன. அதிர்ச்சியுடன் விறுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளை எப்படி அழைத்தான்? இதங்கனை என்றுதானே…? இல்லை அவள்தான் தவறாகக் கேட்டுவிட்டாளா… நம்ப முடியாதவளாக அவனை உற்றுப் பார்க்க, அவனோ உண்பதில் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தான்.
(10) இதங்கனை கண் விழித்தபோது எல்லாமே மங்கலாகத்தான் தெரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலிக்க ஒற்றைக் கரத்தால்…
(9) இப்போது அவளை எப்படி அழைத்தான்... இதங்கனை என்றா? உடலில் உள்ள இரத்தம் அத்தனையும் வடிந்து செல்ல அவனை விறைத்துப்…
(23) இரண்டு நாட்கள் கழிய, அன்றும் அலரந்திரிக்குத் தூக்கம் சுத்தமாக வருவதாக இல்லை. நடந்த சம்பவத்தை எண்ணி எண்ணித் தவித்தவளுக்கு…
(22) இதோ… எல்லாம் முடிந்தது… பெய்யும் மழையில் இரத்தம் கரைந்து போக, நசிந்து போயிருக்கும் தன்னவளைப் பார்க்கும் சக்தியில்லாதவனாக எகிறித்…
(7) அவள் நினைத்தது போலப் பாழாய்ப் போன அரவனில்லை. அங்கே வேலைசெய்யும் ஒரு சீனத்துப் பெண்மணி. அவளுடைய கரங்களில் ஒரு…
(21) அன்று ஏகவாமனும் அலரந்திரியும் ஜெயவாமனின் அருகேயே அமர்ந்திருந்தனர். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை… பேசினால் மட்டும் வலிகளின் அளவு…