Categories: Ongoing Novel

நிலவே என்னிடம் நெருங்காதே 41/45

நிலவு 41

தொடர்ந்து சர்வமகியைப் பரிசோதிக்கும் நாளும் நெருங்க நெருங்க, இவனுக்கும் வேறு யோசிக்கும் எண்ணமும் வரவில்லை.

மூளையில் வளரும் கட்டி கான்சரா, இல்லையா என்பதைப் பரிசோதிக்க முதல் கட்ட பரிசோதனைக்கு சர்வமகியை அன்று அழைத்து வந்திருந்தான் அநேகாத்மன்.

நேரம் போகப் போக அவன் முகத்தில் மருந்திற்கும் புன்னகையில்லை. உடல் இரும்பென இறுகியிருந்தது. அவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்களோ என்கிற அச்சம், அவனை நிம்மதியில்லாமல் தவிக்கவைத்தது.

கொஞ்ச நேரத்தில் அவளை உள்ளே அழைத்துச் சென்றார்கள். அவனும் கூடவே சென்றான். இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அவளுக்குக் குத்தியபோது, இவனால் அதைக் கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. வேகமாகத் திரும்பி நின்றுகொண்டான். ஆனால் அவன் முகத்தில் மட்டும் எழுந்த வலி, குறையவேயில்லை.

எம் ஆர் ஐ, சி டி ஸ்கானிங் செய்யப்பட்டது. ஊடுகதிர் எடுக்கப்பட்டது. அன்ஜியோக்ராம், ஸ்பைனல் டப்… இப்படி ஆயிரம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஏதாவது சந்தேகப்படும்படியிருந்தால், பின்பு கட்டியில் ஒரு சிறு துண்டை எடுத்து, அது கான்சர்தான் என்பதை உறுதிசெய்வார்கள்.

அதில் வேறு அவள் சித்திரவதை அனுபவிக்கவேண்டும். அவனுக்கு நினைக்கும்போதே வலித்தது.

அவளை ஒரு நாள் அனுமதித்து, பயப்சி செய்து அனுப்பினர். அன்றும், மறுநாளும் சர்வமகியை அநேகாத்மன் கீழே இறங்க விடவில்லை. அவளுக்கென்று தனியாக ஒரு தாதியை நியமித்தான். ஒவ்வொரு கணமும், அந்தத் தாதியின் கண்காணிப்பிலும், அவனுடைய கண்காணிப்பிலும் இருக்குமாறு பார்த்துக்கொண்டான்.

எனக்கொன்றுமில்லை என்று அவள் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்டானில்லை.

இரவின் தனிமையில், அவள் தூங்கிய பின், அவளை இழுத்துத் தன் அணைப்பில் வைத்துக்கொண்டு நீண்ட நேரம், அவளுடைய முடியை வருடிக்கொடுத்தவாறு உறங்காமல் இருப்பான். மனம் மட்டும், அவள் மீண்டு வந்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேயிருக்கும்.

இரண்டு நாள் கழித்து அவர்களை வரச்சொல்லி வைத்தியசாலை அறிவித்திருந்தது. உடனே சர்வமகியை அழைத்துக்கொண்டு சென்றான் அநேகாத்மன். அவனுடைய இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. எங்கே இதயம் தொண்டைக்குள் இடமாறித் துடிக்கத் தொடங்கிவிடுமோ என்று இவன் அஞ்சினான்.

வைத்தியர் அவனை உள்ளே அழைக்கும் வரைக்கும், இவன் நிம்மதியில்லாமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான். அவனுக்கு உடல் நடுங்கியது.

“ஆத்மன்… ப்ளீஸ்… எதற்கு இப்படி பதற்றமாகிறீர்கள்… எது நடக்கவேண்டுமோ அதுதானே நடக்கும்…” என்று இவள் சமாதானப் படுத்தும் அளவுக்கு அவன் நிலை இருந்தது.

“கண்ணம்மா… உனக்கு ஒன்றுமில்லை… உனக்கு ஒன்றுமேயில்லை… நான் இருக்கும்வரை உனக்கு எதுவும் ஆகவிடமாட்டேன்… ஐ ப்ராமிஸ் யு…” என்று அவளைச் சமாதானப் படுத்துவது போலக் கூறினாலும், அந்த சமாதானம் அவனுக்காகவே கூறப்பட்டது என்பதை யாரும் அறியவில்லை.

மீண்டும் சர்வமகி உள்ளே அழைத்துச் செல்லப்பட்டாள். மீண்டும் அவளுக்குப் பரிசோதனை செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பரிசோதனையின் பிறகு, வைத்தியர் அவர்களைத் தன் அறைக்கு அழைத்தார்.

பெரும் படபடப்புடன் அநேகாத்மன் அவரின் அறைக்குள் நுழைந்தான்.

“உட்காருங்கள் மிஸ்டர் அநேகாத்மன்…” என்றவர் சர்வமகியின் அறிக்கையை முன்னால் வைத்தார். அதைக் கண்டதும், அநேகாத்மனின் முகம் வெளிறிப்போனது. உடலில் உள்ள அனைத்து இரத்தமும் வடிந்துபோனது போலப் பதைத்துப் போனான். அந்த கோப்பு எத்தகைய செய்தியைத் தாங்கி வந்திருக்கிறதோ…

கரங்களுடன் மனமும் சேர்ந்து நடுங்க,  சர்வமகியின் கரங்களைப் பற்றியவாறு அமர்ந்திருந்தான். ஏதோ அவள் கை பலமே அவனுக்குத் தாங்கும் சக்தியைக் கொடுக்கும் என்பதுபோல.

“அநேகாத்மன்… ஐ ஹாவ் டூ நியூஸ் ஃபார் யு… வன் இஸ் குட்… அன்ட் அதர் வன் இஸ் நாட் குட். உங்களுக்கு முதலில் எந்த செய்தியைச் சொல்வது…?” என்றார் யோசனையாக.

அநேகாத்மன் தன் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வடிந்துபோவதுபோல உணர்ந்தான். எச்சிலைக் கூட்டி முழுங்கியவன்,

“முதலில் பாட் நியூசையே சொல்லுங்கள் டாக்டர்…” என்றான் நடுங்கும் குரலில்.

“மூலையில் உள்ள கட்டியின் அளவு அதிகரித்துக்கொண்டு செல்கிறது… உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும்… இல்லாவிட்டால்… உடலில் ஏற்படும் வேதனையை அவரால் தாங்கிக்கொள்ள முடியாது… தலையின் அழுத்தம் கூடும்… செல்ஸ் டேமேஜாகும்  ஒரு கடத்தில் வெடித்தால்… அதற்க்கு பிறகு கடவுளாலும் காப்பாத்த முடியாது. தவிர அறுவைச் சிகிச்சையும் பெரும் சிக்கலானதாகவே இருக்கும். அறுவைச் சிகிச்சையில் அவர் தப்புவதற்கு முப்பது விகிதம்தான் வாய்ப்பிருக்கிறது… ஐம்பது விகிதம் கோமா, அல்லது ஸ்ட்ரோக்… இருபது விகிதம்…” என்றவர் முடிக்காமல் அநேகாத்மனைப் பார்த்தார்.

அநேகாத்மனின் முகம் இரத்தப்பசையின்றிப் போனது. காதுகள் அடைத்தன. விட்டால் இப்போதே வாழ்வில் முதன் முறையாக மயங்கிவிடுவான் போல விறைத்துப்போய் நின்றான். அவனையும் அறியாமல் கரங்களும் கால்களும் நடுங்கத் தொடங்கின.

“குட் நியூஸ்…” என்றான் அவன் வேதனையுடன்.

“திஸ் இஸ் நொட் எ கான்சர்… சிறு வயதில் தவறுதலாக எங்கோ பலமாக விழுந்ததால் ஏற்பட்ட இரத்தக் கசிவு… கவனிக்காமல் விட்டதால், அது கட்டியாக மாறியிருக்கிறது…. அல்லது ஜெனட்டிக் பிரச்சனையாகவும் இருக்கலாம்…” என்றார்.

இது கான்சர் இல்லை என்பதற்காக மகிழ்வதா, இல்லை, அவள் இனி அனுபவிக்க இருக்கும் சித்திரவதையை எண்ணிக் கலங்குவதா என்று புரியாமல் தவித்தான் அநேகாத்மன்.

“இதற்கு வேறு ஏதாவது, சிகிச்சை இருக்கிறதா டாக்டர்…” என்றான் அவன் கலக்கத்துடன்.

“இல்லை மிஸ்டர் அநேகாத்மன். அந்தக் கட்டி இருக்கும் இடம் ஆபத்தான இடம். அந்த கட்டியை நீக்க ஒரே வழி… ஓப்பன் ஸ்கல்ப் சேர்ஜரி… வெரி ஹார்ட் அன்ட் ட்ரிக்கியான சேர்ஜரி… என்னைக் கேட்டால், ஹோப் ஃபோர் த பெட்டர்…” என்றார் அவர். அவன் தடுமாற, சர்வமகி அவனைத் தட்டிக்கொடுத்தாள்.

“மிஸ்டர் அநேகாத்மன், தாமதிக்காமல், இந்த சிகிச்சையை உடனடியாக செய்வது நல்லது… இந்தக் கட்டி, இனியும் வளர்ந்தால், அது உங்கள் மனைவிக்குத்தான் பெரும் பின் விளைவுகளைக் கொடுக்கும்…” என்றார் அவர்.

அநேகாத்மன் உதடு கடித்து நீண்ட நேரமாக அமர்ந்திருந்தான். பெரும் கலக்கத்துடன் சர்வமகியைப் பார்க்க, அவளோ தன் கலக்கத்தை மறந்து, அவன் கலங்குவது பிடிக்காமல், தன் விழிகளை மூடித் திறந்து, அவனுக்குத் தைரியம் ஊட்டினாள்.

ஒருவாறு தன்னைத் திடப்படுத்தியவன்,

“ஓக்கே… எதுவாக இருந்தாலும் அவளுக்கு வேண்டிய சிகிச்சையை ஆரம்பியுங்கள். என் மனைவி எனக்கு உயிரோடு வேண்டும். அது எப்படியாக இருந்தாலும் ஐ டோன்ட் கெயர். உலகில் உள்ள அத்தனை பெஸ்ட் டாக்டர்சும் என் மனைவிக்குச் சிகிச்சை கொடுக்கவேண்டும். வில் யு டூ தட்?” என்றான்.

அவரோ, “டோன்ட் வொரி மிஸ்டர் அநேகாத்மன்… வீ வில் டூ அவர் பெஸ்ட்…” என்று உறுதி கூற, அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பது போல சர்வமகியின் கரத்தை விடாது  பற்றியவாறு, வெளியே சென்றான்.

சர்வமகியை வைத்தியரிடம் அழைத்துச் சென்று வந்த பிறகு அநேகாத்மனிடம் நிறைய மாற்றங்கள் காணப்பட்டன. அவன் பெரும்பாலும் சர்வமகியுடனேயே அதிக நேரத்தைச் செலவழித்தான். வெளியே எங்கே செல்வதாக இருந்தாலும் சர்வமகியையும் அழைத்துச் சென்றான். இரவில் தூங்கும்போது அவள் அருகேயே இருந்து அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் நன்றாகத் தூங்கிவிட்டாள் என்பதை அறிந்ததும், அவளுடைய கரத்தைப் பற்றித் தன் இடது மார்பில் அழுத்தமாகப் பதித்துக்கொண்டு நீண்ட நேரம் அப்படியே இருப்பான்.

சர்வமகியும் தூங்குவதுபோல பாசாங்கு செய்வாளே தவிர, அவளும் அவனுடைய அருகாமையைப் பெரிதும் விரும்பினாள். விழிகளை மூடி அவனுடைய கதகதப்பை நன்றாகவே அனுபவித்தாள். இப்படியே ஆயுள் வரை நிம்மதியாக இருந்துவிட வேண்டும் என்று உள்ளம் ஏங்கியது.

இதற்கிடையில் இருவருமாக மாதவி, பிரதீபன், அபிதன் ஆகிய மூவரையும் தனியார் பாடசாலையில் சேர்த்துவிட்டு வந்தார்கள்.

தேவகிக்கும் மாதவிக்கும் பிடித்த பாடம் யுனிவேர்சிட்டி ஆஃப் டொரன்டோவிலேயே கிடைத்தால், அங்கேயே அவர்களைச்  சேர்க்க முடிவுசெய்தார்கள். தவிர அவர்களின் வீட்டிலிருந்து போய் வரும் தூரம் என்பதால், எல்லோருக்குமே அது பெரும் நிம்மதி.

காலையின் அநேகாத்மன் அவனுடைய வேலைத்தளத்திற்குப் போனான் என்றால், மதிய உணவுக்கு வந்துவிடுவான். அதன் பின், சர்வமகியைச் சுற்றிக்கொண்டு திரிவானே அன்றி, வேலைக்குப் போகும் எண்ணமே இருக்காது.

காலம் இப்படியே பொய்க்கக்கொண்டிருந்தால், அனைவருக்கும் நிம்மதிதான்… ஆனால்….

நிலவு 42

அன்று முக்கிய வேலையிருந்ததால், வேலைத் தளத்திற்கு நுழைந்த அநேகாத்மனின் மேசையில் ஒரு மஞ்சள் துண்டுக் காகிதம் ஒட்டப்பட்டிருந்தது. அதைக் கரத்தில் எடுத்துப் பார்த்தான். டேவிட்டிடமிருந்துதான் வந்திருந்தது. அவனைச் சந்திப்பதற்காக அவன் நேரம் கேட்டிருந்தான். அவன் உதவியாளன் கேர்வினை அழைத்து, உடனடியாக டேவிட் தன்னை வந்து சந்திப்பதற்கான ஆயத்தங்களைச் செய்யுமாறு உத்தரவிட, அடுத்த அரை மணி நேரத்தில் டேவிட் அநேகாத்மனின் முன்னால் வந்து நின்றான்.

ஏதோ ஒரு ஃபைலை கபிநெட்டில் இருந்து எடுத்துக்கொண்டிருந்தவன், டேவிட்டைக் கண்டதும் தன் வேலையை விட்டுவிட்டு, அவன் முன்னால் மார்புக்குக் குருக்காக, கைக்கட்டி, மேசையில் சாய்ந்தவாறு அமர்ந்து கொண்டு,

“சோ… வட்ஸ் அப்…” என்றான் கூர்மையாக.

“யு ஆர் ரைட் அநேகாத்மன்…” என்றவாறு அந்த ஃபைலைக் கொடுத்தான் டேவிட். அதை அலட்சியமாக வாங்கியவன், ஒவ்வொரு தாளாகத் திருப்பினான். திருப்பத் திருப்ப அவன் முகம் இறுகிக்கொண்டு சென்றது. அதைப் படித்து முடித்ததும், அநேகாத்மனின் முகம் கடுமையாக மாறியது. கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல், அமைதி காத்தான் அநேகாத்மன்.

ஃபைலை மேசையில் போட்டுவிட்டு இருந்த நிலை மாறாமலே தன் இரு உள்ளங்கைகளையும் இடுப்புக்குப் பின்னால் மேசையில் முட்டுக்கொடுத்தவாறு, தன் உதடுகள் இணையும் ஓரத்தை வேட்டைப் பற்களால் நன்னியவாறு கொஞ்ச நேரம் அமைதிகாத்தான்.

அவனுடைய முகம், எதையோ அவன் தீவிரமாக யோசிக்கிறான் என்பதைச் சொல்லாமல் சொல்ல, சற்று நேரம் பொறுமை காத்த டேவிட்,

“வட் நெக்ஸ்ட்…” என்றான்.

“பால் இஸ் இன் மை கோர்ட்…” என்றவன் சிரித்தான். அந்த சிரிப்பைக் கண்ட டேவிட்டிற்கே ஒரு முறை உள்ளம் நடுங்கியது.

“நேகன்… ப்ளீஸ்… டோன்ட் ப்ளே எனி நாஸ்டி கேம்…” என்றான் அறிவுரை போல.

ஒரு கணம் டேவிட்டை அழுத்தமாகப் பார்த்த அநேகாத்மன் தன் நிலை மாறி எழுந்து நின்றான். சற்றுக் கால்களை அகட்டி, மார்புக்குக் குறுக்காத் தன் கரங்களைக் கட்டியவாறு, தன் வலது தோளை ஒரு முறை அசைத்து,

“டூ யு நோ வட்… இது வரை எனக்கு அறிவுரை சொல்லும் தகுதியை நான் யாருக்கும் கொடுத்ததில்லை…” என்றான் பெரும் அழுத்தமாக. அந்தக் குரலில் வாயடைத்த டேவிட்,

“இல்லை நேகன்… ஐ நோ யு வெரி வெல்… அஸ் எ ஃப்ரன்ட்… உன்னைத் தடுப்பதும் என் கடமை… ப்ளீஸ்… எதுவாக இருந்தாலும், இரு முறை யோசித்துச் செய்…” என்றான் தன்மையாக.

“ஓக்கே டேவிட்… யுவர் டைம் இஸ் ஓவர்… யு கான் கோ நவ்…” என்று வாசலை விழிகளால் காட்ட, ஒரு கணம் அநேகாத்மனை வருத்தத்துடன் பார்த்தான் டேவிட்.

“யு நெவர் சேன்ஜ் நேகன். ஓக்கே… என்னுடைய கடமைக்குச் சொல்லிவிட்டேன். இனி கேட்பதும், மறுப்பதும் உன் பொறுப்பு… உனக்கு நான் சொல்லவேண்டியதில்லை. இருந்தாலும் சொல்கிறேன்.. பி கெயர்ஃபுள்…” என்று கூறிவிட்டு, அநேகாத்மனின் முஷ்டியில் குத்திவிட்டு வாசலை நோக்கிச் சென்றான் டேவிட்.

சென்றவன் கதவைத் திறந்து, திரும்பி அநேகாத்மனைப் பார்த்தான்.

“ஹேய்… எது எப்படியாக இருந்தாலும், நான் உன் நண்பன்… எப்போதும், எந்த சந்தர்ப்பத்திலும் உனக்கு உதவத் தயாராக இருக்கிறேன்… நெவர் ஃபொர்கெட் தட்…” என்று உறுதியாகக் கூறிவிட்டுச் செல்ல, அவனுக்குத் தலையாட்டிவிட்டுத் திரும்பியவனின் முகத்தில் கொலைவெறி தாண்டவமாடியது.

விழிகளை மூடியவனின் மனதில் சர்வமகியின் விம்பம் அவனைப் பார்த்து இறஞ்சியது.

“ப்ளீஸ்… நம்புங்கள்… என் தந்தை எந்தக் குற்றமும் செய்யவில்லை…” சடாரென்று இமைகளைத் திறந்தவனின் விழிகள் செக்கச் சிவந்திருந்தன.

‘நீ இதற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்…’ என்று முணுமுணுத்தவன், அலட்சியமாகத் தனக்கருகேயிருந்த தொலைப்பேசியை எடுத்து கேர்வினை அழைத்தான்.

“கேர்வின்… ஐ ஹாவ் டு கோ… எந்த வேலையிருந்தாலும், அதை நீயே பார்த்துக்கொள்… எக் காரணம் கொண்டும் என்னை அழைக்காதே… புரிந்ததா?” என்று அவன் கடுமையாகக் கூற, அந்தக் குரலுக்குப் பணியாமல் இருக்க அவன் என்ன மடையனா?

“ஓக்கே சார்…” என்று அவன் அவசரமாகக் கூற, அடுத்த இருபதாவது நிமிடம், அவன் போய் நின்ற இடம் கவிதா இன்டஸ்ட்ரி பிரைவட் லிமிடட்.

நேரத்தைப் பார்த்தான்… ஒரு மணி. இப்போது போனால் அவன் நிற்பானா? தெரியவில்லை. காரை விட்டு இறங்கியவன், நேராக அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தான்”

நெடுநெடுவென்ற உயரத்தில், திமிறிய புஜங்களும், விழிகளில் கூளிங்கிளாஸ் குடியிருக்க அவன் அகன்ற மார்பை மேலும் அகலமாக்குவது போலக் கறுப்பு நிற லதர் ஜாக்கட்டுன் அருகே வந்து நின்றவனை இமைகூட மூட மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த வரவேற்புப் பெண்.

அநேகாத்மனின் விழிகளோ, நாளா புறமும் சுழன்றடித்தது. எல்லா இடமும் சிசிடி கமரா பதிக்கப்பட்டிருந்தது. உதட்டிலே மெல்லிய ஏளனப் புன்னகையை சிந்தியவன், அந்த வரவேற்பாளரின் அருகே வந்தான். “ ஹாய்… ஹெள ஆர் யு… “ என்றான் தன் கவரும் புன்னகையைச் செலுத்தி. அந்தப் புன்னகையில் மயங்கிய வரவேற்பாளர்,

“ஹாய்… ஐ ஆம் ஃபைன்…. வ வட் எபவுட் யு…” என்றாள் அவள்.

“ஐ ஆம் பேர்ஃபக்ட்லி ஓக்கே…” என்று அவன் நகைக்க,

“வட் கான் ஐ டூ ஃபோர் யு சார்?” என்றாள் அவன் கவர்ச்சியில் மயங்கியவளாக,

“உங்கள் எம் டி மிஸ்டர் நடராஜனைப் பார்க்கவேண்டுமே…” என்றான் அநேகாத்மன் தன் புன்னகையைச் சிறிதும் குறைக்காமல். மேலும் அந்தப் புன்னகையில் மயங்கிய வரவேற்பாளர்,

“உங்களுக்கு அவரைச் சந்திக்க அப்பொய்ன்மன்ட் இருக்கா…” என்றாள் அவன் முகத்திலிருந்து தன் விழிகளை அகற்றாமல்.

“நோ… பட் அவருக்கு என்னைத் தெரியும்…” என்றான்.

“ஓ.. யுவர் குட் நேம் ப்ளீஸ்…”

“அநேகாத்மன்… அநேகாத்மன் வெங்கடேஷ்…” என்று இவன் கூற, வரவேற்பாளினியின் முகம், காணக்கிடைக்கா ஒன்றைக் கண்டதுபோல மலர்ந்து, வாய் பிழந்து நின்றது.

“ஓ மை காட்… சார்… இட்ஸ் யு.. ஐ கான்ட் பிலீவ் திஸ்… உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்… இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன்…” என்று மகிழ்வுடன் தன்னை மறந்து குதித்தவளை அடக்க முடியாமல் திணறிய அநேகாத்மன்,

“ஓ… தட்ஸ் நைஸ்… உங்கள் எம் டி… இருக்கிறாரா?” என்று ஒருவாறு இழுத்துக் கேட்க,

“ஐ ஆம் சாரி சார்… இதோ… இப்போதே கேட்டுச் சொல்கிறேன் சார்…” என்றவள் அவனைக் கண்ட மகிழ்ச்சியில், கரங்கள் நடுங்க, உடல் தடுமாற, நடராஜனுக்குத் தொலைப்பேசி எடுத்தாள்.

“சார்…” என்றாள் மறு முனை எடுக்கப்பட்டதும்.

“யெஸ்… என்ற நடராஜனின் குரலில் கடுமை தெரிய, இவளின் மகிழ்ச்சி துணிகொண்டு துடைத்ததுபோல மாயமாக மறைந்து போனது.

“சார்… அது… உங்களைப் பார்க்க… மிஸ்டர்…” அவள் முடிக்கவில்லை,

“ஐ டோன்ட் வான்ட் டு சீ எனி பாடி… ஜெஸ்ட் த்ரோ ஹிம் அவுட்…” என்று கத்திய நடராஜனின் முன்னால், சிசிடி கமராவில் பதிவாகிக்கொண்டிருந்த திரை விரிந்துகொண்டிருந்தது.

எதற்காக இப்படி கோபத்தில் அந்த நடராஜன் கத்துகிறார் என்பது புரியாமல், அநேகாத்மனின் முன்னால், சிரமப்பட்டு தன் முகபாவனை மாறாமல் காத்தவள்,

“ஐ ஆம் சாரி சார்… அவர் வேலையாக இருக்கிறாராம்… அதனால், இன்னொரு முறை வருவீர்களா?” என்றாள் தன்மையாக.

அநேகாத்மனுக்கு சிரிப்புத்தான் வந்தது.

“வை நாட்…” என்றவன், தன் பான்ட் பாக்கட்டிலிருந்த தன் விசிட்டிங் கார்டை வெளியே எடுத்துத் தன் கண்ணடியைக் கழற்றி, கூரிய விழிகள் கொண்டு, அந்தப் பெண்ணை கவர்ந்திழுத்தவன், மேலும் தன் புன்னகையை விரித்து, அந்த விசிட்டிங் கார்டை நீட்டி,

“இதை உங்கள் நடராஜரிடம் கொடுத்து விடுங்கள்…” என்றவன் தன் நகை மாறாமலே,

“டெஃபினட்லி சார்…” என்று அவள் வழிய, அந்த வழிசலில் நன்றாக நனைந்தவன்,

“ஓக்கே… நைஸ் டு சீ யு?” என்று இனிமையாகக் கூறிவிட்டு வெளியே செல்வது போலப் போக்கு காட்டியவன், யாரும் கவனிக்காவண்ணம், சிசிடியின் பார்வையிலிருந்து தப்பி, அங்கிருந்த வாஷ் அறையிற்குள் நுழைந்தான்.

யாரோ கழிவறையின் உள்ளே விசிலடித்தவாறு நின்றிருந்தது தெரிய, இவன் கண்ணடியில் தன் முகத்தைப் பார்த்தான். அதனூடாக, அந்த மனிதன் நின்றிருந்த பகுதியை நோட்டம் விட்டான். அந்தாள் இருக்கும் நிலையைப் பார்த்தால், இப்போதைக்கு வெளியே வருவான் போலத் தெரியவில்லை.

தன்னுடைய மேற்சட்டையைக் கழற்றி, அதைத் திருப்பிப் போட்டான். இப்போது கறுப்பு நிற மேற்சட்டை சிவப்பு நிற ஹூ டியாக மாறியிருந்தது. அதன் சிப்பை இழுத்து விட்டவன், தண்ணீர் குழாயைத் திறந்து விட்டான்.

மீண்டும் கழிவறையிலிருந்தவனை ஒரு முறை நோட்டம் விட்டான். தன் பாக்கட்டிற்குள் இருந்து சிகரட் லைட்டரை வெளியே எடுத்துக் கொஞ்ச டிஷ்யு பேப்பரையுருட்டி, அதில் நெருப்பைக் கொழுத்தி, ஃபயர் அலார்ம் சென்சரில் பிடிக்க, மறு கணம், ஃபயர் அலார்ம் பெரும் சத்தத்துடன் கத்த, கூடவே அந்தக் கட்டடம் முழுவதும் மேலிருந்து தண்ணீர் பாயத் தொடங்கியது.

வேகமாகத் தன் ஹூ டியை இழுத்துத் தலையில் போட்டவன் வாஷ்ரூமை விட்டு வெளியே வந்தான். கச்சிதமாக அவனுடைய உருவத்தை அவனுடைய ஹூ டி மறைக்க, அங்கு பதிக்கப்பட்டிருந்த சிசிடி கமராவில், அவன் முகம் தெரியாமலே மறைந்து போனது.

உடனே ஃபயர் எலார்ம் என்றதும், அனைவரும் ஆளுக்கொரு திசையில் ஓடி வெளியே செல்ல முயன்று கொண்டிருந்தனர். அந்தக் கலவரத்தில், யாருமே அநேகாத்மனைக் கவனிக்கவில்லை.

கூட்டத்தோடு கூட்டமாக நடந்துகொண்டிருந்த அநேகாத்மனின் விழிகளில் கையில் ஒரு பையுடன் விரைந்து சென்றுகொண்டிருக்கும் நடராஜர் கண்ணில் பட, விரைந்து  அவர் பின்னால் சென்றான்.

ஒரு கட்டத்தில், நடராஜரை நெருங்கிய அநேகாத்மன், ஜன நெரிசலில் நடராஜனுடன் மோதுவது போல வந்தவன், தன் பலம் கொண்ட கையால், அவர் முகத்தை நோக்கி ஓங்கிக் குத்த, மறு கணம், பொறிதட்டக் கீழே மயங்கி விழுந்தவரை, யாருக்கும் சந்தேகம் வராதவாறு தாங்கிக்கொண்டான்.

பார்ப்பதற்கு, தவறுதலாக மோதியதுபோலவும், மோதியதால் நடக்கச் சிரமப்படும் ஒருவரைத் தாங்கி அழைத்துச் செல்வது போலவும் சிசிடி கமராவில் அழகாகப் பதிவாகிக்கொண்டிருந்தது. இத்தனைக்கும், அநேகாத்மன் தன் தலையின் மீது போட்டிருந்த ஹூ டியை எடுக்கவேயில்லை. அதனால், அந்த மனிதரைத் தாங்கிச் செல்லும் நபரும் யார் என்று தெரியாமல் போனது.

நிலவு 43

ஓரிரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு மெதுவாகத் தன்னுடைய விழிகளைத் திறந்தார் நடராஜர். முதலில் அவருக்கு எதுவும் தெளிவாகப் புலப்படவில்லை. எங்கும் கருமையாக இருந்தது. பகலா இரவா என்று எதுவும் தெரியவில்லை. முதலில் மங்கலாகத் தெரிந்த காட்சி பின்பு தெளிவாகத் தெரிய தன் முன்னால் அமர்ந்திருந்தவனை ஆக்ரோஷமாகப் பார்த்தார். வேகமாகக் கதிரையிலிருந்து எழ முயன்றவருக்கு, அப்போதுதான் புரிந்தது, தன்னுடைய கைகளும், கால்களும் கட்டப்பட்டிருப்பது.

அவனோ, ஒரு கதிரையில், அதன் கைப்பிடிமேல், தனது வலதுகாலைப் போட்டவாறு, வாகாக சாய்ந்தமர்ந்து, தன் ஃபோனில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான்.

நடராஜரிடமிருந்து, அசைவு வருவதைத் தன் விழிகளை உயர்த்தாமலே உணர்ந்துகொண்டவன்,

“ஹாய்… குட் ஈவினிங்…” என்றான்.

“ஏய்… என்ன இது விளையாட்டு, எதற்காக என்னைக் கட்டிப்போட்டிருக்கிறாய்… மரியாதையாக விடப்போகிறாயா, இல்லையா? “ என்று நடராஜர் கத்த,

“ஷ்…” என்று தன் காதைக் குடைந்தவன்,

“என்ன மிஸ்டர் நடராஜன்… எதற்கு இத்தனை சத்தம்… ம்…” என்றவன், தன் கரத்திலிருந்த கைப்பேசியை அணைத்துவிட்டு, அதைத் தன் பாக்கட் பையில் போட்டான். தன் இரு கரங்களையும் மார்புக்குக் குறுக்காகக் கட்டியவாறு, அதே ஏளனப் புன்னகையுடன்

“சோ… வட்ஸ் அப்…” என்றான்.

“என்ன விளையாடுகிறாயா… மரியாதையாக என்னை வெளியே விடு… இல்லை…” என்று நடராஜர் சீற,

“இல்லை என்றால் என்ன செய்துவிடுவாய்… தலையைத் துண்டாக்கிவிடுவாயா? இல்லை என் தந்தையைக் கொன்றதுபோல, என்னையும் கொன்றுவிடுவாயா?” என்றான் கிண்டலுடன்.

“வட்… என்ன உளறுகிறாய்… உன் தந்தையை நான் ஏன் கொல்லவேண்டும். அதன் அவசியம் என்ன?” என்றார் நடராஜன் சினத்துடன்.

“ம்… அதை நீதான் சொல்லவேண்டும்…” என்று நகைத்தவன், கொஞ்ச நேரம் அமைதி காத்தான். பின்

“ஐ வோன்ட் டு ஷோ யு சம்திங்…” என்றவன் எழுந்தவன் தனக்கருகேயிருந்த மடிக்கணினியை உயிர்ப்பித்தான். அது விழித்துக்கொண்டதும், எதையோ தட்ட, அதில் அன்று வாசுதேவன், அவனுடைய தந்தையைச் சந்திப்பதற்காக அவருடைய அலுவலகம் வந்தது பதிவாகியிருந்தது.

குறிப்பிட்ட ஒரு இடம் வந்ததும், அதில் அந்த வெள்ளைச் சட்டை அணிந்த மனிதன் தொப்பியுடன் வாசுதேவனுக்குக் கை குலுக்கியவாறு நின்ற இடம் வந்ததும், அந்த இடத்தை அப்படியே ஃப்ரீசாக்கியவன்,

“இதில் ஏதாவது தெரிகிறதா மிஸ்டர் நடராஜன்…” என்றதும் ஒரு கணம் விழிகளில் பீதி தோன்ற, அதை லாவகமாக மறைத்த நடராஜன்,

“தெரியாமல் என்ன? எனக்குக் கண்கள் நன்றாகத் தெரியும்…” என்றார் அவர் அலட்சியமாக.

“சோ…”

“சோ வட்…” என்று நடராஜர் எரிந்து விழ, நகைத்தான் அநேகாத்மன்.

“இவனைத் தெரியுமா?” என்று அந்த தொப்பியணிந்த மனிதனைச் சுட்டிக்காட்டிக் கேட்க,

“எனக்கெப்படித் தெரியும். நான் என்ன சிசிடி கமராவா?” என்று சுள் என்று விழுந்தார் நடராஜன்.

“ம்…” என்று உதட்டைப் பிதுக்கித் தலையை ஆட்டிய அநேகாத்மன், நடராஜனை நெருங்கி,

“டு யூ நோ வட்… மிஸ்டர் நடராஜன்… உங்களுக்கு எத்தனை வயதிருக்கும்… ஒரு ஐம்பத்தைந்து… அறுபது… எனக்கெத்தனை வயது தெரியுமா? முப்பது… வயதளவில் உங்களை விட நான் இளமையானவன்… ம்… உடம்பு… கடைசியாக எப்பேர் ஜிம்மிற்குப் போனீர்கள்? உங்களுக்கு அதற்கு நேரமில்லையல்லவா? எனக்கு ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது அதில் செலவிடவேண்டும்… சோ… பலத்தைப் பொருத்த வரையிலும், உங்களை விட நான் அதிக பலசாலி…” என்றவன், அவருடைய கழுத்தில் தன் கரத்தை வைத்தான். “நிச்சயமாகப் புத்தியிலும் நான் உங்களை விட ஒரு படி மேல்தான்.. இல்லை என்றால், இப்படி மாட்டுவதுபோல ஒரு க்ளு விட்டுவைத்திருக்கமாட்டீர்கள்…” என்றான் தன் பெருவிரலைச் சற்று அழுத்தி,

அவனுடைய பெருவிரல் அழுத்தத்தால், நடராஜனுக்கு இருமல் வந்தது.

“இப்போது… இந்த இடத்தில் உங்களுக்கு மரணம் நேர்ந்து விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள், என்னைக் கண்டுபிடித்து, கைதி செய்வார்கள் என்று நினைக்கிறீர்களா? பச்ப்ச்… அதற்கும் வாய்ப்பில்லை… ஏன் என்றால், நான்தான் உங்களை இங்கே அழைத்து வந்தேன் என்று என்னையும், உங்களையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது… தவிர அதற்கு எந்த சாட்சியமும் கிடையாது… எந்த நல்ல காரியம் செய்வதாக இருந்தாலும், நான் சாட்சியம் வைத்திருப்பதில்லை. நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா… எனக்கு எந்த உதவியாளரும் கிடையாது. என் கையே எனக்குதவி” என்றவனுடைய பெருவிரல், அவரின் தொண்டைக் குழியில் மேலும் அழுத்த, அவர் கமறினார்.

“ஆ… மிஸ்டர் நடராஜன்… நான் ஒன்று சொல்ல மறந்துவிட்டேனே…” என்றவன், அவருக்குப் பின்புறமாக வந்து நின்றான்.

அவர் கழுத்திலிருந்த தன் கரத்தை விலத்தி, இடது கரத்தை அவன் தோளின் மீது முட்டுக் கொடுத்தவாறு குனிந்து, அவரின் வலது கரத்தைத் தன் வலது கரத்தால் எடுத்தான்.

“என் கையால் நீங்கள் இறப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.” என்றவாறு அவருடைய விரல்களை நோக்கித் தன் விரல்களைக் கொண்டு சென்று அவருடைய சுண்டுவிரலைப் பற்றினான்.

நடராஜன் என்ன என்பதை உணர்வதற்கு முன்பாகவே, அவருடைய சுண்டுவிரலை வேகமாகப் பின்பக்கமாக மடக்க, அது ‘படக்’ என்ற சத்தத்துடன் முறிந்துபோனது. நடராஜன் ஒரு கணம் மூச்சு விட மறந்தார். பின் உயிர் போகும் வலி அவரை சுய உணர்வுக்கு அழைத்துவர, வலியில் கதறினார் நடராஜன்…

அவருடைய காதினருகே தன் முகத்தைக் கொண்டு சென்றவன்,

“ஷ்… எதற்கு இத்தனை சத்தம்… ஒரு விரலைத்தானே முறித்தேன்… ம்…” என்றவன் அவரை விட்டு விலகி முன்புறமாக வந்தான். அவனுடைய உதட்டிலிருந்த அந்த எகத்தாள சிரிப்பு மட்டும் மாறவேயில்லை.

இப்போது, உடைந்துபோயிருந்த சுண்டுவிரலுக்குப் பக்கத்திலிருந்த விரலைப் பிடித்தான். இப்போது நடராஜரின் முகம் பயத்தில் வியர்த்துக் கொட்டியது. கத்தக் கூட சக்தியற்று அவருக்கு விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

“மிஸ்டர் நடராஜன்… உங்களுக்கு இந்த நான்கு விரல்களில் எந்த விரல் அதிகம் பிடிக்கும்?” என்றான் கேள்வியாக. நடராஜரின் முகம் பீதியில் விரிய அவன் அந்த நடு விரலைப் பிடித்தான்.

“எனக்கு இந்த விரலைத்தான் நிறையப் பிடித்திருக்கிறது… ஏன் தெரியுமா? இதுதான் உங்களை எனக்கு அடையாளம் காட்டியது…” என்றவன் “புரியவில்லை,” என்று கேட்க, அதிர்ச்சியிலும், பயத்திலும் வியர்த்துக் கொட்ட, உடல் நடுங்க, பற்கள் தந்தியடிக்க, வலியில் நடுங்க அநேகாத்மனைப் பார்த்தான்.

அவனோ மீண்டும் அந்த விரலை மடக்கி, அவருக்கு உயிர் வலியைக் கொடுத்தவன், நிமிர்ந்து நின்றான். வலியில் அழுதவரை, ரசித்துப் பார்த்தான்.

“சொல்லப்போனால், இப்போது நான் உடைத்தேனே இரு விரல்கள் அந்த இரு விரல்களும்தான் எனக்கு உன்னை அடையாளம் காட்டின…” என்றவன் மீண்டும் அந்த காணொளியை ஓட விட்டான். அதில், எங்கோ போவதற்கு இடம் கேட்பது போல கரங்களை நீட்டிக் கேட்டுக்கொண்டிருந்த அந்த வெள்ளைச் சட்டைக் காரனின் நீட்டிய கரத்தை மட்டும் பெரிதாக்கி, அதைச் சுட்டிக்காட்டினான். நீட்டிய அவர் கரத்தின், சுண்டுவிரலும், நடுவிரலும் நீண்டிருக்க, மற்றைய விரல்கள் மடிந்திருந்தன. பார்ப்பதற்கு எங்கே போவது என்று கேட்பதுபோலத்தான் இருந்தது.

“நான்கு வருடங்களுக்கு முன்பு, படியிலிருந்து விழுந்தபோது, உங்கள் சுண்டு விரலும், நடு விரலும் மடிந்து போயின. அதை நிமிர்த்துவதற்காக மெட்டல் ப்ளேட் வைத்திருந்தார்கள். அதனால் உன்னால், அந்த இரண்டு விரல்களையும் முழுதாக மடிக்க மடியாது…” என்பவனை அதிர்ச்சியுடன் பார்த்தார் நடராஜர்.

“சோ… அன்று கடைசியாக மிஸ்டர் வாசுதேவனைச் சந்தித்த அந்த வெள்ளைச் சட்டைக் காரன் நீதான்… ஆம் ஐ ரைட்…” நடராஜன் ஒன்றும் கூறாமல் தலையைக் குனிய,

“இன்னொன்றையும் கூறட்டுமா மிஸ்டர் நடராஜன்…? வாசுதேவனின் மனைவி கவிதா… “ என்றதும், விலுக் என்ற நிமிர்ந்தார் நடராஜன்.

“உ… உனக்குப்படி தெரியும்…” என்றார் அதிர்ச்சியுடன்.

“ஐ ஹாவ் மை ஓன் வே… எனக்குத் தெரிந்ததைச் சொல்லட்டுமா? கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு, கவிதா என்னும் பெண், தன் அத்தை பையன் வாசுதேவனை விரும்புகிறாள் என்று தெரிந்தும் வாசுதேவனின் நண்பராக இருந்த நீங்கள், அவள் மீது காதல் கொண்டீர்கள். அப்போதே, அவர்கள் இருவரையும் பிரிக்க எத்தனையோ திருகுதாளம் செய்தும் அது நிறைவேறவில்லை. காரணம், இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்த அப்பழுக்கில்லா அன்பு. எப்படியோ அவர்களின் திருமணம் நடந்தது. இருந்தும் உங்கள் பழி உணர்ச்சி குறையவில்லை. உங்கள் கோபத்திற்கு எண்ணை வார்ப்பதுபோல, வாசுதேவனின் வியாபாரமும் கொஞ்சம் நன்றாக வளரத் தொடங்கியது. வாசுதேவனின் கெட்ட காலம், உங்களின் நல்ல காலம், கவிதா இறந்தும் உங்கள் பழியைத் தீர்க்க அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினீர்கள்.

மனைவி இறந்த நேரத்தில், பெரும் துன்பத்தில் தன்நிலை கெட்டிருந்த வாசுதேவனின் நிலையைப் பயன்படுத்தி, அவருடைய தொழிலை மெல்ல மெல்ல உங்கள் கைவசம் கொண்டுவர முயன்று அதில் வெற்றியும் கண்டீர்கள். பாவம் மிஸ்டர் வாசுதேவன், உங்களை முழுதாக நம்பியதால், உங்கள் நயவஞ்சகத்தை அவர் சாகும்வரை அறிந்துகொள்ளவில்லை.

என் தந்தையின் கொலை வழக்கிலும், மிஸ்டர் வாசுதேவன் அவர் அறியாமலே சிக்கவைக்கப்பட்டிருக்கிறார் என்பதை என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. அவருடைய நாட்குறிப்பைப் படித்தபோதுதான் அது தெரிந்தது. டீ. என் நிறுவனம் பற்றி நீதான் அவருக்குத் தெரிவித்திருக்கிறாய்… நீதான் அதற்கான தொடர்பாடலையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறாய்… வாசுதேவன் மேல் இருந்த பொறாமையால், கோபத்தால், அவரைச் சிக்க வைத்திருக்கிறாய்… பட்… இதில் என் தந்தை எங்கே வந்தார்? அவரைக் கொல்வதற்கான காரணம் என்ன? என் தந்தையை நெருங்குவதற்கும் ஒரு தகுதியிருக்க வேண்டும்… அவர் நிழலைக் கூடத் தொட முடியாத தொலைவில் இருக்கும் நீ எதற்கு அவரைக் கொல்ல எண்ண வேண்டும்… சோ இதற்குப் பின்னால், பெரும் சதி இருக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது… யார்…” சொன்னாய் என்றால், நிம்மதியாகப் போக நான் வழிசெய்வேன். இல்லை என்றால், என் சித்திரவதையைத் தாங்க உன்னிடம் சக்தியிருக்காது…” என்றான் அவன் பெரும் அழுத்தமாக.

“சத்தியமாக உங்கள் தந்தையின் மரணத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்… ஹக்..” என்றவரின் முன் இரு பற்களும் விழுந்து வாயில் இரத்தம் கொட்டத்தொடங்கியது. அதிர்வுடன் அநேகாத்மனைப் பார்க்க,

“சாரி மிஸ்டர் நடராஜன்…” என்றவாறு தன் கரத்தை உதறினான் அநேகாத்மன்.

அவருக்கு முன்பாக ஒரு கதிரையைத் திருப்பி வைத்து, இரண்டு கால்களையும் இருபக்கமாகப் போட்டவாறு அமர்ந்தவன், முதுகு சாயும் பக்கமாகத் தன் மார்பை இலகுவாகச் சாய்த்து, இரண்டு கரங்களையும் மேல் சட்டத்தில் வைத்து, அக் கரங்களில் தன் நாடியைச் சாய்த்து,

“சாரி ஃபோர் த இன் கன்வீனியன்ட்… எனக்குப் பொய் சொன்னால் பிடிக்காது… என்ன செய்யட்டும். என் அப்பா கூட என் கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு பல முறை சொல்லியிருக்கிறார்… என்னால் தான் முடிந்திருக்கவில்லை. இப்போது சொல்… என் தந்தையின் மரணத்திற்கும் உனக்கும் என்ன சம்பந்தம். அடுத்ததும் பொய் சொன்னால்…” என்றவன், தன் பான்ட் பாக்கட்டிலிருந்து கூரிய சுவிஸ் ஆர்மி கத்திக் கொத்தை வெளியே எடுத்து, அதிலிருந்த சிறிய கத்தியின் பொத்தானை அழுத்த   , கத்தி வெளியே நீட்டி நின்றது.

“இது இரண்டு இஞ்ச் இருக்குமா…? உங்கள் கண்ணைத் தோண்டி எடுக்க இந்தக் கத்தி போதுமல்லவா? வேண்டுமானால், ஒரு கண்ணை வெளியே எடுத்துப் பார்க்கவா… ப்ளீஸ்… ஜெஸ்ட் ஃபொர் த எக்ஸ்பெரிமன்ட்… “ என்றான் அவன் ஆவலாக.

குரூரத்துடன் சிரித்த அவன் உதடுகளும். புழபழத்த அவன் கண்களும், சொன்னதைச் செய்வான் என்பதை எடுத்துக் காட்ட, கிட்டத்தட்ட நடராஜர் மயங்கும் நிலைக்குச் சென்றுவிட்டிருந்தார்.

“லிசின் மிஸ்டர் நடராஜன்… எனக்குக் கிடைத்திருக்கும் நேரம் மிகக் குறைவு… இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் வீட்டிற்குப் போக வேண்டும்… என் மனைவி… ஓ காட்… உங்களுக்குத் தெரியாதில்லையா… உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வைத்திருக்கிறேன்… நான் திருமணம் முடித்து விட்டேன்… யாரைத் தெரியுமா? மிஸ்டர் வாசுதேவனின் மகள் சர்வமகியைத்தான் மணந்திருக்கிறேன்…“ என்று அவன் முகம் மலரக் கூற, நடராஜரின் முகம் வெளிறிப் போனது.

“அதிர்ச்சியாக இருக்கிறதா? இருக்காதா பின்னே… அவளையும் அழிக்க நீ என்ன தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்திருக்கிறாய். எனக்குத் தெரியாது என்று நினைத்தாயா? சர்வமகியைக் கூட, அவள் சிறுமியாக இருக்கும்போது, ஒரு முறை மாலில் இருந்த தானியங்கிப் படியில் தள்ளி விழுத்தியிருக்கிறாய் அல்லவா? அன்று அவள் தப்பியது அருந்தப்பு“ என்றவனின் முகம் விகாரமாக இறுகிப் போனது.

அன்று விழுந்ததால்தானே இன்று இத்தனை சித்திரவதைப் படுகிறாள். எதை மன்னித்தாலும், இதை அவனால் மன்னிக்க முடியாதே.

“அது மட்டுமல்ல… எனக்குத் தெரிந்தே இரு முறை அவளை ஆபத்தில் சிக்கவைத்திருந்த நீ எனக்குத் தெரியாமல் எத்தனை முறை அவளை ஆபத்தில் தள்ள முயன்றிருப்பாய்…“ என்றவனின் முஷ்டி மடிந்து அதே வேகத்தில் அவருடைய கன்னத்தில் ஓங்கிக் குத்த, அவன் குத்திய வேகத்தில், கடவாய் பல்லு உடைந்து மேலும் வாயிலிருந்து இரத்தம் கொட்டியது.

“சோ… நேரம் போய்க்கொண்டிருக்கிறது உண்மையைச் சொல்லு…“ என்றவன் கதிரையை விட்டு எழுத்து நடராஜரை நெருங்க, அவன் தன்னை மீண்டும் அடிக்கப்போகிறான் என்கிற பயத்தில்,

“சொல்கிறேன்… சொல்கிறேன்… ப்ளீஸ் என்னை ஒன்றும் செய்யாதே…“ என்று பதற

“ஹே… டோன்ட் பனிக்…“ என்று தன் இரு கரங்களையும் தூக்கிக் கூறியவன், அவர் பான்ட் பாக்கட்டில் கைவிட்டு, அவர் கைப்பேசியை வெளியே எடுத்தான்.

“இதை எடுக்கத்தான் நெருங்கினேன்… நான் ஒன்றும் அத்தனை வில்லனல்ல…“ என்று கிண்டலாகக் கூறியவன், அந்த கைப்பேசியில் எதையோ அழுத்தியவாறு,

“ம்… இப்போது சொல்லு…“ என்றான்.

சுற்று நேரம் கலங்கிய நடராஜன்,.

“சொல்கிறேன்… யெஸ்… ஐ ஹேட் வாசுதேவன்… கவிதா எனக்குச் சொந்தமாகவேண்டியவள்… அவளை அவன் என் கண்ணெதிரே திருமணம் முடித்துக் குழந்தைகளையும் பெற்றான். எனக்கு உரித்தான கவியை எப்படி அவன் தன்னவளாக்க முடியும்.. அன்று முடிவு செய்தேன், வாசுதேவனுக்கு எதுவும் நிரந்தரமாகக் கிடைக்கக் கூடாது என்று. நானும் கவிதாவின் நினைவில் வேறு திருமணம் முடிக்கவில்லை.

கவிதா அபிதனைப் பிரசவித்தபோது, அங்கிருந்த மருத்துவத் தாதிக்கு கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, மோர்ஃபின் அதிகமாகச் செலுத்தி, கொலை செய்ய வைத்தேன்…“ என்றதும் அநேகாத்மனின் கை முஷ்டி மேலும் இறுகியது.

இதை அவன் எதிர்பார்க்கவில்லை. அப்படியானால், சர்வமகியின் தாயின் மரணம் தற்செயலாக நடந்ததல்ல… யாருக்கும் தெரியாமல் கொலை செய்யப்பட்டிருக்கிறார். சினத்துடன், தொடர்ந்து பேசிய நடராஜனைக் கவனிக்கத் தொடங்கினான் அநேகாத்மன்.

“கவிதாவின் மரணத்தால், உடைந்துபோயிருந்த வாசுதேவனிடமிருந்து அனைத்து வியாபாரங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக என் வசப்படுத்தினேன். அவன் ஆசையாகத் தொடங்கிய கவிதா இன்டஸ்ட்ரியும் என் கைகளுக்கு வந்தது. வாசுதேவனைப் பொறுத்தவரை நான் அவனுடைய நல்லதை மட்டுமே எண்ணும் நல்ல நண்பன். என் மீது அவன் அளவு கடந்த நம்பிக்கையை வைத்திருந்தான். அந்த நம்பிக்கையை நான் எனக்குச் சாதகமாக்கினேன். அவனும் என்னை முழுதாக நம்பி நான் கேட்ட இடமெல்லாம் கையெழுத்திட்டான்.

எனக்கும் கவிதாவுக்குமாகப் பிறக்கவேண்டியவள் சர்வமகி. ஆனால் அவள் சே… அதனால், அவளையும் கொல்ல நினைத்தேன்… அதனால்தான் மால் ஒன்றிற்கு அழைத்துச் சென்று தானியங்கிப் படியில் தள்ளி விட்டேன்… அவளுடைய நல்லகாலம் தப்பிவிட்டாள்… கடைசியாக அவர்கள் வீடெல்லாம் விற்று விட்டு, சிறிய வீடொன்றிற்குப் போன பிறகுதான் என் மனம் ஓரளவு சமாதானப் பட்டது…“ அது வரை தன்னைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டிருந்த அநேகாத்மன், நடராஜரின் தொலைப்பேசியில் எதையோ செய்துகொண்டே,

“இன்னும் என் தந்தைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்லவேயில்லையே…“ என்றான் அழுத்தமாக. அந்தக்  குரலைக் கேட்டதும், எச்சில் கூட்டி விழுங்கிய நடராஜன்,

“மிஸ்டர் வெங்கடேஷின் போட்டிக் நிறுவனங்களான, பிரைட்டர்ன் இன்டர்நஷனல் கோப்பரேஷன் சேர்மனையும், ஃபியூச்சர் இன்டர்நஷனல் கம்பனி செயர்மனையும் ஒரு பார்ட்டியில் சந்தித்தேன்… அவர்களுடன் இன்னும் நான்கு நிறுவன முதலாளிகள் இருந்தார்கள். அவர்களுடன், நல்ல பழக்கம் ஏற்பட்டது. மிஸ்டர் வெங்கடேஷனால், அவர்களுடைய வியாபாரம் பெரும் சிக்கலில் இருப்பதைப் பற்றி அவர்கள் குறைபட்டார்கள். அவர்களுக்கு வெங்கடேஷின் அசுர வளர்ச்சி பெரும் பிரச்சனைகளைக் கொடுத்தது. விரைவில், வெங்கடேஷின் நிறுவனம், முதல் மூன்று இடங்களில் வந்துவிட்டால், அவர்களின் நிலை கடைசி இருபதையும் தாண்டிவிடும் என்று பயந்தார்கள்…“

“அதனால் என் தந்தையைக் கொல்ல நீங்கள் முடிவு செய்தீர்கள்… அதற்கு எதற்கு வாசுதேவனை தேர்ந்தெடுத்தீர்கள்…“

“அவர்களின் திட்டப்படி, கொலைப்பழியை ஏற்றுக்கொள்ள ஒரு அப்பாவி தேவைப்பட்டது. அதற்கு வாசுதேவன் பொருத்தமாக இருந்தார். அவருடைய தொழிலும், அதற்கு ஏதுவாக இருந்தது… அந்த திட்டத்தை உருவாக்க உடனடியாக டி என் என்கிற நிறுவனம் ஒன்றை உருவாக்கினோம். வாசுதேவனிடம், டி என் நிறுவனம் தன்னுடைய உதிரிப் பாகத்தை வெங்கடேஷிற்கு விற்பது பற்றிக் கூற, அவனும் சந்தோஷமாகவே அதற்குச் சம்மதித்தான். நாங்கள் நினைத்தது போலவே, எந்தக் கறுப்புப் புள்ளியும் இல்லாத வாசுதேவனுக்கு வெங்கடேஷைச் சந்திக்கச் சுலபமாக அனுமதி கிடைத்தது.

இதற்கிடையில் பிரைட்டன் கம்பினியின் சியர்மன் மிஸ்டர் தீரன், தன் பணப் பலத்தைக் கொண்டு, சிலரை விலைக்கு வாங்கினார். முதல் கட்டமாக, அந்தக் கட்டடத்தின் சிசிடி கமரா குறிப்பிட்ட நேரம் வரை, நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அந்த நேரம், கணணிமயமாக்கப்பட்ட தொலை இயக்கி (computerized remote controller)  துப்பாக்கியை யாரும் அறியா வண்ணம், பொருத்துவதற்காக, வெங்கடேஷின் அறைக்குள் நுழைந்தேன். வாசுதேவன் இடதுகைப் பழக்கம் உடையவர் என்பதால், அதற்கேற்றாட் போல, துப்பாக்கியை மறைத்து வைத்தேன். துப்பாக்கியை வைத்து விட்டு வந்தபோதுதான் வாசுதேவனை எதிர்பாராமல் சந்தித்தேன். முதலில் அதிர்ந்த நான் எப்படியோ சமாளித்து அவருக்கு வாழ்த்துக் கூற வந்ததாகக் கூறி விலகிவிட்டேன். குறிப்பிட்ட நேரம் வந்ததும், நமது திட்டப்படியே துப்பாக்கி சுட்டது… ஆனால் வாசுதேவன் பயந்து ஓடுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை. அது கூட நமக்குச் சாதமாகத்தான் இருந்தது. நமது வேலை முடிந்ததும், சிசிடி கமராவை திரும்ப இயக்க வைத்தோம். சிசிடி கமரா நமது கட்டுப்பாட்டிலிருந்ததால்தான், வெங்கடேஷின் அறையில் நடந்த சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை…“ என்று பெருமூச்சுடன் வலியும் சேரக் கூறினார் வெங்கடேஷ்.

“வெல் ப்ளான் மேர்டர்…“ என்றவன் நிமிர்ந்து நின்றான்.

“டூ யு நோ வட்… நீ செய்தது மாபெரும் நம்பிக்கை துரோகம்… உன் நண்பன் உன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை நீ… சே…நினைக்கும் போதே அருவெறுப்பாக இருக்கிறது. நான் நினைக்கிறேன்… உனக்கு மனநலம் சரியில்லை… ஏனெனில் ஒரு ஆரோக்கியமான மனிதன், ஒரு போதும் உன்னைப் போல இப்படிக் கேவலமாகச் சிந்தித்திருக்க மாட்டான்“ என்றவன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.

“டாமிட்… நேரம் போய்க்கொண்டிருக்கிறது…“ என்றவன், பெருமூச்சொன்றை எடுத்து விட்டான்.

“நேரம் கரைகிறது நடராஜன்… நீ இன்னொரு உதவியும் செய்யவேண்டுமே…“

“சொல்லுங்கள் அநேகாத்மன்… என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்… என்னை விட்டுவிடுங்கள்…“ என்றார் அந்த நடராஜர்.

“அடேங்கப்பா… விடுதலைக்காக எவ்வளவு துடிக்கிறீர்கள்… ம்… சரி உங்களை நிரந்தரமாக விட்டுவிடுகிறேன்…. அதற்கு இதை நீங்கள் ஒரு முறை படிக்கவேண்டும்…” என்றவாறு அருகேயிருந்த காகிதம் ஒன்றை எடுத்து அதில் எதையோ கிறுக்கி, அதை நடராஜனுக்கு முன்பாக நீட்டிக் காட்டினான். அவன் நீட்டிய காகிதத்தில் தன் கவனத்தைச் செலுத்திய நடராஜருக்கு மயக்கம் வரும்போல இருந்தது.

“நோ… நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள்…” என்றார் பெரும் கோபத்துடன்.

“நான் ஏமாற்றினேனா… என்ன சொல்கிறீர்கள்… நான் எப்போது யாரை ஏமாற்றினேன்…” என்று புரியாதவன் போலக் கேட்டான் அநேகாத்மன்.

“நான் உண்மையைச் சொன்னால் போக விடுவதாகக் கூறினீர்களே…” என்றார் நடராஜன் பீதியுடன்.

“ஆமாம் இப்போதும் அதைத்தான் சொல்கிறேன்… உங்களை நிம்மதியாகப் போகவைக்கப் போகிறேன்… வலியின்றி, துன்பமின்றி…” என்றான் அநேகாத்மன் பெரும் அலட்சியத்துடன்.

“நோ… நோ… யு கான்ட் டு தட்…”

“வை நாட்… லுக்… நேரம் போய்க் கொண்டிருக்கிறது… நீ கூறிய அனைத்தையும் நான் உன்னுடைய தொலைப்பேசியில் பதிவு செய்துவிட்டேன்… இப்போது நீ செய்யவேண்டியது… நான் எழுதியிருப்பதைப் படிப்பதுதான்… உனக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியுமல்லவா…?” என்றான் அதே கிண்டலுடன்.

“இதில் யோசிக்க என்ன இருக்கிறது… ம்… மிஸ்டர் வெங்கட்டின் கொலை சம்பந்தமாகத் தெரிந்த நபர் நான் ஒருவன் என்பதால், என்னை இன்று தீரனின் ஆட்கள் கடத்திச் சென்று, கொலை செய்ய முயன்றார்கள்… அடித்தார்கள்… எப்படியோ அவர்களிடமிருந்த தப்பி வந்துவிட்டேன்.” என்று வாசித்துக் காட்டியவன், நிமிர்ந்து நடராஜனைப் பார்த்து ,

“இதைப் படிக்க என்ன கஷ்டம்… ஓ… கீழே இருக்கிற வரியைப் படிக்கக் கஷ்டமாக இருக்கிறதா? ‘இனியும் அவர்கள் என்னை உயிரோடு விட்டுவைப்பார்களா என்று எனக்குத் தெரியாது. எந்த நேரமும் எனக்கு எதுவென்றாலும் நடக்கலாம்…. ஒருவேளை எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்தால், அது தீரனும், அவனுடைய கூட்டாளிகளும் செய்த சதியாக மட்டுமே இருக்கமுடியும். மேலே கூறியவை அனைத்தும். என் சுயத்துடனும், யாருடைய கட்டாயமோ, வற்புறுத்தலோ இல்லாது, விரும்பிக் கொடுக்கும் வாக்குமூலம்…’ அவ்வளவுதானே… ம்… வாசியுங்கள்… ஏதோ சொத்தைக் கேட்டதுபோல இப்படித் தடுமாறுகிறீர்களே மிஸ்டர் நடராஜன்…” என்றான் அநேகாத்மன் எகத்தாளமாக.

“ஏய் என்னைக் கொன்றுவிட்டு நீ தப்ப முடியாது… எப்படியும் பொலிஸ் உன்னைப் பிடித்துவிடும்…” என்றார் அவர் கோபமாக.

“ஐ டோன்ட் திங்க் சோ… எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்?” என்றான் அநேகாத்மன், பெரும் ஆவல் போல.

“விளையாடுகிறாயா… நீ ரெக்கோர்ட் பண்ணியதில் உன் குரலும் பதிந்திருக்கும்…” என்றார் நடராஜன் சினத்துடன். அதைக் கேட்டதும், அநேகாத்மன் பெரிதாகச் சிரித்தான்.

“ஐ ஆம் சோ சாரி… என்னால்… என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை…” என்று மீண்டும் சிரித்து,

“ப்ச்.. ப்ச்… மூளை என்கிற ஒரு ஜந்து உன் தலையில் இருக்கா இல்லையா? எல்லாவற்றையும் பக்காவா திட்டம் போட்டு உன்னை உன் வீட்டிற்கே தூக்கி வந்த எனக்கு இதையெல்லாம் யோசிக்கத் தெரியாதா… நான் உன்னுடைய குரலை மட்டும், உன்னுடைய தொலைப்பேசியிலேயே பதிவு செய்திருக்கிறேன். வேண்டுமானால், போட்டுக் காட்டுகிறேன் கேட்கிறாயா? என்ன… ஃபினிஷிங் டச் தான் கொஞ்சம் சொதப்புகிறது… அதனால்தான்… இதை வாசிக்கச் சொன்னேன்… ப்ளீஸ் அடம் பண்ணாமல் வாசிக்கிறாயா?” என்றான் ஆத்மான் நகைப்பு மாறாமலே.

“இல்லை… நான் சாக மாட்டேன்…” என்றார் அவர் பிடிவாதமாக.

“அப்படியெல்லாம் பிடிவாதம் பிடிக்கக் கூடாது நடராஜன்… எனக்கெல்லாம் உன்னைக் கொல்லவேண்டும் என்று ஏதாவது வேண்டுதலா… இல்லையே… எனக்கும் வேறு வழியில்லை… இப்போ உன்னை நான் விட்டேன் என்று வைத்துக்கொள்… உன்னை பொலிஸ்  அரஸ்ட பண்ணும்… அதில் மாற்றமில்லை. ஆனால், பொலிஸ் உன்னைக் கைதுசெய்வதற்கு முதல் நீ என்ன திருகுதாளம் செய்வாயோ என்று முன்னும் பின்னும் என்னால் அலைய முடியாது நடராஜ். ஒவ்வொரு கணமும், என் மனைவிக்கு உன்னால் என்ன ஆபத்து வருமோ என்று அஞ்சுவதும், அவளுடைய சகோதரர்களுக்கு நீ என்ன தீங்கு விளைவிப்பாய் என்று நான் பயந்து கலங்குவதும்… தேவையா… உன்னைக் கொன்று விட்டால், நான் நிம்மதியாக இருப்பேன் அல்லவா… இப்போது நீ உயிரோடு இருந்துதான் என்ன செய்யப்போகிறாய்.. உனக்கென்ன மனைவியா பிள்ளைகளா… நீயோ தனிக்கட்டை. உனக்கு ஒன்றென்றால், கலங்கித் தவிக்க ஒரு நாதி கிடையாது… அதற்கும் என் மனைவிதான் வரவேண்டும்…. அதுவும் உன்னை எண்ணி என் மனைவி அழ வேண்டுமா.. சீ சீ…  அதனால் பிடிவாதம் பிடிக்காமல் இதை மட்டும் வாசித்துவிடேன்…” என்றான்  அவன் கிண்டலாக.

“முடியாது… நான் வாசிக்கமாட்டேன்…”

“அதிகமாகப் பிடிவாதம் பிடிக்கிறாயே நடராஜ்… இங்கே பார்… எல்லாத்தையும் போகட்டும் என்று விட்டுவிட்டாலும், இன்று என் மனைவி படும் சித்திரவதைக்கு முழு முதல் காரணம் நீ… நீ மட்டும்தான்… எதை மன்னித்தாலும் என்னால் அதை மன்னிக்க முடியாது… அதற்கு நீ பதில்சொல்லியே ஆகவேண்டும்… அதனால், இதை வாசித்தாயானால், காதும் காதும் வைத்தால் போல நான் உன்னைக் கொன்று விடுவேன்…” என்றான் அவள் கெஞ்சுவதுபோல.

“நோ… முடியாது… முடியாது… முடியாது…” என்று நடராஜர் கத்த,

“ஓக்கே… நோ ப்ராப்ளம்… நீ வாசிக்கா விட்டால் என்ன? உன் குரலில் நான் வாசித்து ரெக்கோர்ட் பண்ணிவிடுகிறேன்… என்ன அப்படிப் பார்க்கிறாய்? முடியாது என்று நினைத்தாயா? பேசிக் காட்டுகிறேன்… கேட்கிறாயா?” என்றவன் தன் தொண்டையை செருமி, ரெக்கோர்டரை உயிர்ப்பித்து,

“நா.. நா சொல்வது அனைத்தும் உண்மை…” என்று தொடங்க, எந்த மாற்றமும் இன்றி தன் குரலில் அவன் பேசிய திறமையைக் கண்டு அதிர்ந்துபோய் பீதியில் விழி தெறிக்க அநேகாத்மனைப் பார்த்தார் நடராஜன். அவனோ, சற்றும் நடராஜரைக் கருத்தில் கொள்ளாது, தன் போக்கில் பேசிக்கொண்டு போனான்.

“இத்தனை அநியாயங்களையும் செய்த தீரனுக்கு நான் உடந்தையாக இருந்தேன்… இனி என்னை விட்டுவைத்தால், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உண்மையைப் போட்டு உடைத்து விடுவேனோ என்று அவர்கள்…” என்று கூறிக்கொண்டே கைப்பேசியை தன் சட்டைப் பையில் போட்டவாறு, சற்றுத் தள்ளியிருந்த, நைலோன் கயிறொன்றை, எடுத்து அதில் சுருக்கிட்டான். சுருக்கிட்டவாறே,

“பயந்தார்கள். அவர்களுக்கு எதிராக நான் வாய் திறந்து விடுவேனோ என்று அஞ்சி, என்னையும் அவர்கள் கொலைசெய்ய முயன்றார்கள்… அதனால் இன்று என்னை அவர்கள் கடத்திச் சென்று…” என்றவாறு அந்தச் சுருக்கை, நடராஜர் எதிர்பாரா வண்ணம், அவர் கழுத்தில் போட்டு இழுக்க, அவர் துடித்தார், அவனோ,

“என்னைக் கொல்ல முயன்றார்கள். எப்படியோ அவர்களிடமிருந்து நான் தப்பி வந்துவிட்டேன்… இனியும் என்னை அவர்கள் உயிரோடு விடுவார்களா என்று எனக்குத் தெரியாது… அதனால், இதை என் வாக்குமூலமாக நான் பதிவிடுகிறேன்… இந்த வாக்குமூலம், யாருடைய வற்புறுத்தலுமின்றி சுயமாகக் கூறும் வாக்குமூலம்… என் உயிருக்கு ஏதாவது நடந்தால், அதற்கு முழுப் பொறுப்பும் தீரனையும், அவனுடைய கூட்டாளிகளையுமே சாரும்…” என்றவன், இறுதியாக ஒரு இழுவை இழுக்க, நடராஜனுடைய தலை முறிந்து மறுபக்கம் தொங்கியது.

கைப்பேசியை அணைத்தவன், அதை அங்கிருந்த மேசையில் விட்டெறிந்துவிட்டு, கரத்திலும், காலிலும் கட்டியிருந்த அத்தனை கயிற்றையும் கழற்றி, ஓரமாகப் போட்டான். கழுத்தில் தொங்கியிருந்த, கயிற்றை, பேஸ்மன்டின் உத்தரத்தில் போட்டு இழுக்க, நடராஜரின் உடல் மேலே எழுந்தது. கீழே விழா வண்ணம் இறுகக் கட்டியவன், நிமிர்ந்து உயிரற்றிருந்த நடராஜரின் உடலைப் பார்த்தான்.

அவனுக்குக் கோபம் இன்னும் மட்டுப்படவில்லை. எத்தனை பெரிய சதி. அதில் தேவையற்று வாசுதேவனல்லவா பழியாகிவிட்டார். அவரை நம்பி இருந்த ஐந்து பிள்ளைகளின் நிலை என்ன? அது மட்டுமா, வாசுதேவனின் மனைவி கவிதா… அவர் என்ன தவறு செய்தார்? எல்லா வற்றிற்கும் மேலாக, மகி… அவனுடைய மகி… இன்று உயிர் பயத்தைச் சுமந்து, எத்தனை வலியை சுமந்துகொண்டிருக்கிறாள்… அவளுக்குப் பதில் என்ன?

இவனைச் சட்டத்தின் கையில் ஒப்படைக்கலாம்தான்… ஆனால் கனடிய சட்டத்தின் படி, மரணதண்டனை கிடையாதே… குற்றவாளியென்று பார்க்காமல், அத்தனை வசதியையுமல்லவா செய்து கொடுப்பார்கள். அவனுடைய சட்டத்தின் படி நடராஜருக்குக் கொடுக்கவேண்டிய ஒரே தண்டனை, மரண தண்டனை. அதை அவன் கொடுத்துவிட்டான்.  எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாது மனம் அமைதி அடைந்தது… சொல்லப்போனால், நரகாசுரனை வாதம் செய்த திருப்திதான். ஒரு தனிமனிதன் எப்படி சட்டத்தை தன கையில் எடுக்கலாம் என்கிற கேள்வி வரும். எடுக்கவேண்டும்… அநியாயங்கள் தலை தூக்கியபோது, தனிமனிதன் சட்டத்தை கையில் எடுத்துதான் ஆகவேண்டும். வேறு வழியில்லை… நடராஜன் வேறு யார் மீது கைவைத்திருந்தாலும், அவனை பாதித்திருக்காது… ஆனால் அவன் அழிக்க முயண்டது, அவன் உயிரானவளை. அவள் குடும்பத்தை… எப்படி விட்டுவிட முடியும்.  மனம் ஓரளவு சமப்பட்டது. ஆனாலும், நடராஜர் வெறும் அம்புதான்… எய்தவர்கள் நன்றாக இருக்கிறார்கள். அதுவும் எத்தனை நாளைக்கு, நாளைக்கு நடராஜரின் உடல் கண்டு பிடித்தபின், அவர் பதிவு செய்த அவரின் தொலைப்பேசியில் யார் யார் ஈடுபட்டார்கள் என்கிற அத்தனை தகவல்களும் தெரியவரும்… அப்போது அவர்கள் கைதி செய்யப்படுவார்கள். அதற்குப் பிறகு, அவர்களின் முடிவு அவன் கையில்… நிம்மதியுடன் அவனுடைய லைட்னிங்கில் ஏறி அமர்ந்தான், சில நாட்களில்  நடக்கப்போகும் அசம்பாவிதம் அறியாமலே.

நிலவு 44

மறுநாள், அநேகாத்மன் முதல் வேலையாக தொலைக்காட்சி செய்தியைப் போட்டுப் பார்த்தான். எங்கும் நடராஜனின் மரணம் தெரிவிக்கப்படவில்லை. அதிலிருந்து அவரின் இறப்பு இன்னும் வெளி வரவில்லை என்பதை அறிந்துகொண்டான். எப்படியும் ஓரிரண்டு நாட்களில் தெரிந்துவிடும் என்று எண்ணியவனுக்கு, எப்போது தீரனும் அவனுடைய கூட்டாளிகளும் பிடிபடுவார்கள் என்று ஆவலாக இருந்தது.

அந்த ஆவலைக் கட்டுப்படுத்த முடியாதவனாக, உதட்டிலே மெல்லிய புன்னகையுடன், தன் கைப்பேசியிலிருந்து ஒரு இலக்கத்தை அழுத்த, மறு பக்கம், தீரனின் தனிப்பட்ட அலைபேசிக்கு அந்த அழைப்பு சென்றது.

இன்னும் தீரன் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளவில்லை போலும், குரல் கரகரப்பாக வந்தது.

“ஹாய் மிஸ்டர் தீரன்… இட்ஸ் மி…” என்றான் அநேகாத்மன் கிண்டலுடன்.

“சாரி… யார்?” என்று மறுபக்கம் குழப்பமான குரல் வர,

“இடஸ் மி… வெங்கடேஷ் அநேகாத்மன்…” என்றான் அவன் கிண்டலாக.

எடுத்தது அநேகாத்மன் என்பதை அறிந்ததும். விலுக் என்று படுக்கையில் எழுந்து அமர்ந்தார் போலும், அவர் எழுந்து அமர்ந்த சத்தம் இவன் காதில் விழ, இவனுடைய முகம் புன்னகையில் மலர்ந்தது.

“எதற்காக என்னை அழைத்தாய்?” என்றவரின் குரலில் பயத்தை மறைக்க முகமூடியாகப் போட்ட கோபம்தான் தெரிந்தது.

“ஹே… கூல் மிஸ்டர் தீரன்… உங்களுக்கு ஒரு செய்தி கூறவே தொலைப்பேசி எடுத்தேன்…”

“வட் இஸ் இட்…”

“ம்… விரைவில் நீங்கள் ஜெயிலுக்குப் போகப் போவது போல கனவு கண்டேன்… அதைச் சொல்லலாம் என்று… “

“வட்… என்ன உளறுகிறாய் நீ…” என்று தீரன் சீற, அதே நேரம், அநேகாத்மன் எழுந்துவிட்டான் என்பதை அறிந்து சர்வமகி அவனுக்கு பிளாக் கொஃபி வார்த்து எடுத்து வந்தாள்.

மேல்சட்டையின்றி, வெறும் ஷார்ட்சுடன், ஜன்னலடியில் நின்றவாறு பேசிக்கொண்டிருந்த தன் கணவனின் கட்டுடலின் அழகில் ஒரு கணம் மூச்சடக்கி நின்றாள் அத்தேவதை.

அசாத்திய அவனுடைய அகன்ற மார்பில், முறுகியிருந்த தசைகளும், சற்று பெரிய கழுத்தும் அவனைக் குத்துச் சண்டை வீரன் போலக் காட்டியது. ஒரு கரம் ஷார்ட்ஸ் பாக்கட்டில் நுழைந்திருந்தாலும், கிண்ணென்றிருந்த அவனுடைய கரங்களைப் பார்க்கும்போது. அவளை அறியாமலே, அந்தக் கரங்களுக்குள் சிறைப்படவேண்டும் என்கிற பேராவல் எழுந்தது.

அவளையும் அறியாது கரங்கள் நடுக்க, ஓசையெழுப்பாது மெதுவாக அவனை நெருங்கியவள், அவனுக்கருகாக இருந்த கண்ணாடி மேசையில் கொஃபியை வைக்க, தன் இணையாளின் வரவை, உள் உணர்வை வைத்தே உணர்ந்தவன், முகம் மலர, கைப்பேசியில் பேசியவாறே திரும்பினான்.

அவளோ அவன் உடல் பார்க்க நாணித் தலை குனிந்தவாறு திரும்ப, ஷார்ட்ஷ் பாக்கட்டிலிருந்த தன் இடக்கரத்தை வெளியே எடுத்து, அவள் வலக் கரத்தைப் பற்றினான் அவன்.

சற்றுத் தடுமாற்றத்துடன் திரும்பியவள், சிரமப்பட்டு அவனுடைய வெற்று மார்பில் தன் பார்வையைச் செலுத்தாது, அவனுடைய முகத்தை மட்டும் பார்க்க, அந்தக் கள்வனோ, அவள் நிலை அறிந்து, கண்ணடிக்க, இவள் முகம் நாணி இரத்த நிறம் கொண்டது.

அதைக் கண்டதும், இவன் தன்நிலை கெட்டுத் தன் மனைவியைச் சுண்டி இழுக்க, அவள் அவனுடைய முடியடர்ந்த மார்பில் கச்சிதமாக மோதி நின்றாள். நாணத்தால், உடல் சுட, அதை உணர்ந்த கள்வனின் உணர்வுகள் ஒரு கட்டுக்குள் வராமல் தறிகெட்டு ஓடத்தொடங்கின.

அவளோ அவன் நிலை புரியாமல், அவனிடமிருந்து விலக முயல, அவள் முயற்சியை மிக இலகுவாகத் தன் வலக்கரம் கொண்டு இறுக அணைத்துத் தடுத்தான்.

சர்வமகிக்கும் தன் நிலையைக் கட்டுப்படுத்துவது சிரமாகத்தான் இருந்தது. அவனுடைய அணைப்பொன்றும் அவளுக்குப் புதிதல்லத்தான். ஆனால், இப்படி வெற்றுடம்புடன் அவளை அணைப்பது இதுவே முதன் முறை. அதனாhல் அவளுக்குப் பெரும் கூச்சமும், தயக்கமும், பதற்றமும் போட்டிப்போட்டுக்கொண்டு அவளை ஒருவழிப் படுத்திக்கொண்டிருந்தன. கூடவே அந்த வெம்மையிலிருந்து விலகவும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

தன் தலையை நன்கு நிமிர்த்தி, “நான் போகவேண்டும்…” என்று அவன் விழிகளைப் பார்க்காது, மெதுவாகக் கூற, இவனோ

“நோ…” என்று உதட்டை மட்டும் அசைத்து அவளை மேலும் தன்னோடு இறுக்கிக்கொண்டான். அதே நேரம், மறுபக்கமிருந்து,

“ஹலோ… ஹலோ…” என்று பதட்டமான குரல் வர,

“சாரி மிஸ்டர் தீரன்… சாரி… என்ன கேட்டீர்கள்… ஆ… நான் சொல்வது நிஜம்… உண்மை…. சத்தியம்….” என்று கூற, அநேகாத்மன் யாரோடு பேசுகிறான் என்று திகைத்தவள் தன் தலையை உயர்த்தி, விழிகளாலேயே, யார் என்பது போலக் கேட்க,

“எ க்ளையன்ட்…” என்றவன், அவள் தலையை மீண்டும் தன் மார்போடு அழுத்திக் கச்சிதமாக அவள் மறு காதையும் அழுத்துவது போலப் பொத்தியவன்,

“ஆனால் மிஸ்டர் தீரன்… நீங்கள் கவலையே படாதீர்கள்… உங்களுக்கு எதிராக நான்தான் வாதாடப்போகிறேன்… அதனால், ப்ளீஸ் பிரிப்பேர் யுவர் செல்ஃப்…” என்று நக்கலாகக் கூறினான்.

“யாரோடு விளையாடுகிறாய் நீ… ஐ வில் கில் யு….” என்று மறுபக்கம் கத்த, சிறு நகைப்புடனே

“ட்ரை… இஃப் யு டேர்…” என்று கூறியவன், கைப்பேசியை அணைத்து மேசையில் எறிந்துவிட்டுத், தன் கைவளைவிலிருந்த தன் மனைவியின் முகத்தைப் பற்றித் தூக்கினான்.

மேலும் சிவந்தவளின் அழகில் தன்னை இழந்தவனாக,

“நான் ஏற்கெனவே சொன்னேன் அல்லவா? இப்படி என் முன்னால் சிவந்து நிற்காதேயென்று… ம்…” என்று அவன் கேட்க, மேலும் சிவந்தவளை மேலும் தன்னோடு புதைத்துக்கொண்டான்.

“ஹே… உன் உடல் சுடுகிறதடி…” என்றான் கிரக்கத்துடன். கூடவே அவனையும் அறியாமல் அவனுடைய கரங்கள். அவள் உடலில் பயணம் செய்யத் தொடங்க, கூடவே இவன் இதழ்கள் அவள் உச்சந்தலையில் சங்கமமாகி நின்றன.

“ஆத்மன்… ப்ளீஸ்…” என்றவளை அவன் கவனத்தில் கொண்டான் இல்லை.

“ஐம் சாரிம்மா… என்னால் இப்படி நீ கைவளைவில் இருக்கும்போது, தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. அதுவும் இப்படி வெட்கப்படும்போது..” என்றவனின் இரு கரங்களும், அவளுடைய குறுகிய இடையை அடைந்து, கள்ளமாக அவளுடைய மேல்சட்டைக்கூடாகப் புகுந்து, சுவாரசியத்துடன் அதன் வளைவில் பதிந்து நின்றன.

அவனுக்கு எப்படியோ, அவளுக்குத்தான் மின்சாரத்தைத் தொட்டதுபோலாயிற்கு.

அவனோ, தன் உதடுகளை அவள் கழுத்து வளைவிற்குள் புதைத்து… “ஐ லவ்யு மா… டு யு லவ் மி…” என்றான் தாபத்துடன்.

அவளோ அவனுக்குப் பதில் சொல்லும் நிலையிலா  இருந்தாள். அவன் வருடல் சொன்ன கதையில் தன்னிலை கெட்டல்லவா இருந்தாள்.

நல்ல வேளையாக, திடீர் என்று அவனுடைய கைப்பேசி அழைக்க, முதலில் விறைத்த அநேகாத்மன், முகத்தில் அப்பட்டமாக எரிச்சல் தெரிய, சர்வமகியை விட்டு விலகப் பிடிக்காதவனாக, அப்படியே கிடந்தான்.

கைப்பேசியின் அழைப்பில் சுயநினைவு பெற்றவள், வேகமாக அவன் அணைப்பிலிருந்து விலகி, கைப்பேசியை எடுத்து அவன் கரத்தில் திணிக்க, இவன் கோபமாக முறைத்தான்.

அவன் முறைப்பைக் கண்டதும், இவளுக்கு நகைப்புதான் வந்தது. கலகலத்து நகைத்தவள், சிறுபிள்ளை போலத் தன்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கும் தன்னவனின் முன்புறத் தலைமுடியை, எக்கிக் கால் பெருவிரலில் நின்றவாறு, வேகமாகக் கலைத்து விட்டவள்,

“கொஃபி ஆறப்போகிறது… குடித்துவிட்டு, விரைவாகக் கீழே வாருங்கள்….” என்று உத்தரவிட்டாள் கனிவுடன்.

பின் திரும்பி, அவனுடைய வெற்று மார்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கண்டதும், மேலும் நாணம் கொண்டவளாக, “ஷேர்ட்டைப் போட்டுக்கொண்டு வாருங்கள்…” என்று விட்டு ஓடினாள் அவன் மனையாள்.

அவளுடைய ஒவ்வொரு அசைவையும் ரசித்துக்கொண்டிருந்தவனுக்கு, திடீர் என்று தன் மார்பைக் கண்டதும், அவளுடைய விழிகள், நாணத்தோடு, வேறு செய்தியையும் கூறியதை உணர்ந்தவன், ‘என்ன இது…” என்று எண்ணியவனாகக் கொஃபியில் கைவைக்கப் போனான்.

அப்போதுதான் அங்கிருந்த கண்ணாடியில், அவன் மார்புக் குழிக்குள், தன் உயிரானவளின் குங்குமம் அழுந்தப் பதிந்திருப்பதைக் கண்டான். கண்டதும், ஏனோ அவனுக்குச் சிலிர்த்தது. என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வில், அந்தக் குங்குமத்தைத் தன் விரல்களால் வருடிக் கொடுத்தான். கொஞ்சம் விரல்களில் படிந்திருக்க, நாசியில் பிடித்து குங்குமத்தின் மஞ்சள் மணத்தை நுகர்ந்தான். அதன் மஞ்சள் வாசனை மூளை வரை அடிக்க, மேலும் அதன் வாணையை நுகர்ந்தான்…. உள்ளங்கால் வரை சிலிர்த்தது… “ஓ மகிமா தொடாமலே கொல்கிறாய்…” என்று முனங்கியவன் அந்த

அந்த இனிய உணர்வுடனே, குளியலறைக்குள் நுழைந்தான் அநேகாத்மன்.

நிலவு 45

இப்படியே நாட்கள் சென்றன. இதற்கிடையில் நடராஜரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய கைப்பேசி கைப்பற்றப்பட்டது. அவருடைய கைப்பேசியில் பதிந்தது அவர் குரல்தானா, யாராவது திட்டமிட்டுச் செய்ததா என்கிற கோணத்தில் எல்லாம் விசாரிக்கப்பட்டது. தீரனையும் விசாரித்தார்கள். அவருடைய மறுப்பால் மேலும் விசாரணை இடம் பெற்றது. இப்படியே அந்த விசாரணை மூன்று கிழமைகளையும் கடந்தன.

இந்த நிலையில் அநேகாத்மன் இது சார்ந்த செய்திகள் சர்வமகியை வந்தடையாமல் இருப்பதற்காக மிகக் கவனமாக இருந்தான். அவனுக்கும் அது ஒன்றும் கடினமாக இருக்கவில்லை. யாருக்கும் செய்தியைப் பார்ப்பதற்கோ, அதனோடு மினக்கடுவதற்கோ நேரம் கிடைப்பதில்லை.

அடுத்த சில நாட்களில் அநேகாத்மன் இரு முறை சர்வமகியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்தான். அடிக்கடி இரத்தப் பரிசோதனை, அந்தப் பரிசோதனை இந்தப் பரிசோதனை என்று அவளுடைய உடலில் ஊசியைக் குத்தும்போது இவனுக்கு வலிக்கும்.

அதைத் தவிர்த்துவிட்டால் வாழ்க்கை இனிமையாகப் போய்க்கொண்டிருக்கும்.

மனிதர்கள் நினைப்பது அனைத்தும் நடந்துவிட்டால் இந்த உலகத்தில் கடவுள் என்பது இல்லாததாகிவிடுமே.

அன்று அநேகாத்மன் கட்டாயமாக ஒரு விழாவிற்குச் செல்லவேண்டியிருந்தது. அதனால் அவன் சர்வமகியையும் அழைத்துக்கொண்டு போக நினைத்தான்.

சர்வமகிக்கு அவனுடன் போகச் சற்றுத் தயக்கமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவனுடைய விருப்பத்திற்காகக் கிளம்பிவிட்டாள்.

தெளிந்த ஆகாய நிற நீல சேலைக்குத் தங்க வேலைப்பாடு செய்த காஞ்சிபுரப் பட்டிற்குத் தகுந்த வேலைப்பாடு செய்த பிளவுசில் தயாரானவளுக்கு, அந்த நிறத்திற்குத் தகுந்தாற் போல, முத்துக்கள் பதித்த ஆரம் போட்டால் இன்னும் எடுப்பாக இருக்குமே என்று எண்ணியவள், தன் பெட்டியைக் குடைந்து, செயற்கையான முத்தில் நெய்த ஆரம் ஒன்றை எடுத்துக் கழுத்தில் மாட்டினாள். அதற்குத் தோதாக, முத்தால் நெய்த தோடு. அனைத்தையும் அணிந்துவிட்டுக் கண்ணாடியில் பார்த்தவளுக்கு ஏனோ திருப்தியே வரவில்லை.

ஏதோ குறைவது போலத் தோன்றியது.

“ப்ச்… நம்மை யார் கவனிக்கப்போகிறார்கள்? என்று அலட்சியமாக எண்ணியவள் திரும்பினாள்.

அதே நேரம், சர்வமகியை இன்னும் காணவில்லையே என்று தேடிவந்த அநேகாத்மன், கண்ணாடியில், தன்னைப் பார்த்து ரசித்துக்கொண்டவளிடமிருந்து தன் வழிகளை அகற்ற முடியாமல், அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

இருவருடைய விழிகளும், ஒன்றோடு ஒன்று மோதின. இருவருக்குமே அடுத்த மூச்சை எடுக்கும் எண்ணம் இருக்கவில்லை. பெண்களுக்கு இலக்கணமாய், அவளும், ஆண்களுக்கு இலக்கணமாய் அவனும், ஒருவரின் அழகில் மற்றொரவர் மயங்கிப்போய் கிறங்கியிருந்தனர்.

அவனுக்கென்றே அளவெடுத்துத் தைத்த, கிரே நிறக் கோட்டும், சூட்டும், நீல நிற டையும், நீண்ட அவன் உடலிற்குக் கச்சிதமாகப் பொருத்தியிருந்தது. பளபளத்த டிசைனர் ஷர்ட். வகிடுச்சி எடுத்துப் படிந்து வாரிய முடி, நெளிந்து நெளிந்து சென்றது கூட, அவன் ஆண்மையைச் சற்று அதிகப்படுத்திக் காட்டியது. கரத்தில் ரோலக்ஸ் கடிகாரம் எடுப்பாய் அமர்ந்திருந்தது.

அடேங்கப்பா… இவன் என் கணவன்… எனக்கே எனக்கானவன். அத்தனை ஆண்மையின் இலக்கணமாகத் திகழும் இவன் எனக்கு மட்டுமே உரிமையானவன். அவள் முகத்தில் பெருமையின் பூரிப்பும் தோன்ற, அவள் அழகு இன்னும் பன்மடங்கானது. அந்த அழகில் தன்னைத் தொலைத்தவனாக, இன்னும் தன் கனியவளை ருசிப்பதற்காக நெருங்கினான் அந்த ஆண்மகன்.

அந்தக் கள்வனின் விழிகளோ, அவள் உச்சிமுதல் பாதம்வரை ரசித்துப் பார்க்கத் தொடங்கின. சேலை மறைக்காத இடையைக் கொஞ்ச நேரம் அதிகம் ரசித்தவன், தன் விழிகளை மெல்ல மெல்ல மேலே கொண்டு சென்றான்.

அவளுடைய செழுமையை ரசனையுடன் பருகியவன், மையிட்ட அந்தத் தாமரையாளின் நீண்ட விழிகளில் இப்போதும் குதித்து நீச்சலடிக்க அவன் தயாராக இருந்தான். வில்போன்ற புருவத்தின் மத்தியில், குங்குமம். அப்படியே சற்று மேலே வகிட்டிலும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மெல்லிய கூர் நாசியின் இடது பக்கத்து மத்தியில், மின்னிக்கொண்டிருந்த மூக்குத்தி. அளவான கழுத்தில், சுற்றியிருந்த ஆரம்… அதைக் கண்டவன் தன் முகத்தைச் சுழித்தவாறு அவளை நோக்கி வந்தான்.

“இது என்ன?” என்றான் கோபமாக.

“எது?” என்று புரியாமல் கேட்டாள் இவள்.

“இது என்றவாறு, அவன் கட்டிய தாலிக்கொடியின் மேலே தொங்கிக்கொண்டிருந்த ஆரத்தைப் பிடித்தவாறு கேட்டான்.

“இது… ஆரம்…” என்றாள் அவள் ஒன்றும் புரியாமல்.

“அது எனக்குத் தெரிகிறது… ஆனால்… இந்த ஆரம் அசல் அல்லவே…” என்றான் அவன் கோபமாக.

“ஓ… அதுவா? இந்த சேலைக்கு முத்தால் செய்த ஆரம் போட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். இது எப்போதோ ஒரு கடையில் வாங்கியது. சரி, இதையே அணியலாம் என்று எண்ணி அணிந்தேன்…” என்றாள் சர்வமகி.

“உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. நீ யார் தெரியுமா? அநேகாத்மனுடைய மனைவி. த லேட் வெங்கடேஷின் மருமகள். நீ இப்படி நகலைப் போடலாமா? என்று கடிந்தவன், எங்கோ சென்றான். திரும்பி வந்தபோது, அவன் கரத்தில் நான்கைந்து நகைப்பெட்டிகள் வீற்றிருந்தன.

“இது… என்ன?” என்றாள் சர்வமகி வியப்புடன்.

“சொல்கிறேன்…” என்றவன் அவளின் கரத்தைப் பற்றி இழுத்துச் சென்று கண்ணாடியின் முன்பாக இருந்த இருக்கையில் அமர்த்தினான்.

அவள் திகைப்புடன் அநேகாத்மனை அண்ணாந்து ஏறிட்டுப் பார்க்க, தன் ஒற்றைப் புருவத்தை மேல் ஏற்றி, என்ன என்பதுபோலக் கேட்டவன், தன் கரத்திலிருந்த நகைப்பெட்டியை அருகேயிருந்த மேசையின் மீது வைத்துவிட்டு, மீண்டும் அவளுக்குப் பின்னால் வந்து நின்றான்.

அவன் என்ன செய்யப்போகிறான் என்பதை யோசிப்பதற்குள்ளாக, அவனுடைய வலிமையான கரங்கள், அவளுடைய கழுத்தை மென்மையாக வருடிக்கொடுத்தவாறே, கழுத்திலிருந்த ஆரத்தை மெதுவாகக் கழற்ற,

“என்ன…? என்ன செய்கிறீர்கள் ஆத்மன்…” என்று அவனைத் தடுக்க முயன்றாள். அவனோ அவளைச் சிறிதும் லட்சியம் செய்யாது, அந்த ஆரத்தை மேசையில் எறிந்தான். காதிலிருந்த தோட்டில் கரத்தை வைக்கும்போது, இவள் சிலிர்த்து விலக,

“ஹேய்… டோன்ட் மூவ்…” என்று, அழுத்தமாகக் கூறியவன்,, தானே அவற்றையும் கழற்றித் தூரமாக எறிந்தான்.

அவள் கரத்தைப் பற்றியவன், அதன் வழவழப்பில் தடுமாறியவனாக, அதை வருடிக்கொடுக்க முயல, இவளோ பெரும் சங்கடத்துடன் தன் கரத்தை இழுத்தாள். அவள் இழுத்த இழுப்பில், அவள் அணிந்திருந்த காப்பு, அவன் கரத்தோடு வந்திருந்தது.

அவன் மறுகரத்தையும் பற்றப்போக, இவள் அவசர அவசரமாக அந்தக் கரத்திலிருந்த காப்பையும் கழற்றி கண்ணாடி மேசையில் மெதுவாக வைத்தாள்.

மெல்லிய புன்னகை ஒன்றைச் சிந்தியவன், தான் எடுத்து வந்த நகைப்பெட்டியைத் திறந்து, அவள் முன்னால் வைத்தான்…

அதனைக் கண்டவளுக்குத் தன் வழிகளையே நம்பமுடியவில்லை. அத்தனையும், நீல சபாயரும், நிஜக் கலப்படமில்லா முத்துக்களும், இடையிடையே வைரங்களும் கலந்து நெய்த நகைசெட். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. ஒவ்வொன்றும் குறைந்தது பல லட்ச டாலர்களுக்குச் சொந்தமானவை என்பதைப் பார்க்கும்போதே நன்கு தெரிந்தது.

“ஆ… ஆத்மன்…. இது…” என்று இவள் தவிப்புடன் நெளிய,

“இதில் உனக்கு எது பிடித்திருக்கிறது மகிம்மா?” என்று கனிவாகக் கேட்டான் அநேகாத்மன்.

“இல்லை… நான்… இதைப் போட மாட்டேன்…” என்றாள் இவள் பயத்துடன்.

“வட்? வை? என்றான் இவன் சற்றுக் கோபமாக.

“இதெல்லாம் அதிக விலை… ஒரு வேளை நான் தொலைத்தால்… நான் மாட்டேன்…” என்று பலமாக அவள் தலையை அங்கும் இங்கும் ஆட்ட, அநேகாத்மன் தானாகவே ஒரு நகைப்பெட்டியைக் கையில் எடுத்தான்.

அதிலிருந்த ஆரத்தை வெளியே எடுத்தவன், சர்வமகியின் மறுப்பையும் கருத்தில் வாங்கிக் கொள்ளாது, அதனை அவள் கழுத்தில் அணிவித்தான்.

“ஓ மை.. காட்… இதன் விலை மிக மிக அதிகம் ஆத்மன்… எதற்கு ரிஸ்க்… ப்ளீஸ்… வேண்டாமே…” என்றவாறு அதைக் கழற்ற முயல, அநேகாத்மனின் கரங்கள் அவள் கரங்களை வேகமாகத் தடுத்தது.

“இனஃப்…” என்கிற அவன் ஒற்றை வார்த்தையில் சர்வமகி சர்வமும் அடங்கி, அவனை அச்சத்துடன் பார்க்க,

“சர்வமகி… நான் ஏற்கெனவே கூறியிருந்தேன்… இனிமேல் நீ பணம் பற்றி எதற்கும் கவலைப்படக்கூடாது என்று… அதை நீ உன் புத்திக்குள் தெளிவாக ஏற்றிவை… உன் கணவன், ஒவ்வொரு டாலருக்கும் கணைக்குப்பார்க்கும் நிலையில் இல்லை. இது தொலைந்தால், இதைப்போல பத்து செட் வாங்கும் அளவு வசதி எனக்கு இருக்கிறது… அதனால்… மனதைப் போட்டுக் குழப்பாதே… என்ன நான் சொல்வது புரிந்ததா?” என்றான் சற்றுக் கடுமையாக.

அவன் கடுமை, அவளுக்கு பெரும் வலியைக் கொடுத்தாலும், அவன் கோபத்தை மேலும் கிளரப் பிடிக்காதவளாக, அமைதி காத்தாள் சர்வமகி.

அதனை அனுமதியாக ஏற்றுக்கொண்டவன், அவள் புறமாக நன்கு குனிந்து, இரு தோடுகளையும் போட முனைந்தான்.

“இல்லை நானே…” என்று இவள் கூறி அவனிடமிருந்து தோடைப் பெற முயல, அவனோ அவளைப் பார்த்து மெல்லியதாகப் புன்னகைத்தான். அந்தப் புன்னகையில், ‘நான் தான் போடுவேன்…’ என்கிற பிடிவாதமும், அழுத்தமும், கூர்மையும் தெரிய சர்வமகிதான் தன் கரத்தை இறக்கவேண்டியதாகப் போய்விட்டது.

அவனோ, அந்தத் தோட்டை அவளுக்கு அணிவித்தவாறு, அவளை மிகவும் நெருங்கி நின்று,

“மகிம்மா… இது என் அம்மாவோடது…” என்றான் வலது புறத்துக் காதில் மிகக் கவனமாகத் தோடை அணிவித்தவாறு. அதை அணிந்து முடிந்ததும், இடதுபக்கமாக வந்து, மண்டியிட்டு அமர்ந்தவன், அந்தப் பக்கத்துத் தோட்டைப் போட்டான்.

“இனி இது எல்லாம் உனக்குத்தான் சொந்தம்…” என்றான் தன் வேலையில் கவனமாக.

சர்வமகி திகைப்புடன் அவனைத் திரும்பிப் பார்க்க முயல,

“ஹேய் டோன்ட் மூவ்… தோடு உன்னைக் குத்திவிடப்போகிறது…” என்று பதறியவன், அவள் திரும்பிய வேகத்தில், அவன் கரமும், தோடும் அழுத்திய இடத்தை மெதுவாக வருடிக்கொடுத்து, பின் அணிந்துவிட்டவாறே,

“என் அம்மாவுக்கு ரசனை அதிகம் மகிம்மா… இதெல்லாம் அவர்களின் சேகரிப்பு. அவர்களிடம் உள்ள நகைகளைப் போல யாரிடமும் இதுவரை இருந்ததில்லை. சொல்லப்போனால், அம்மா சாரிட்டிக்காக தன் கலக்ஷன்சை பலமுறை கண்காட்சிகளில் வைத்திருக்கிறார்கள்… அவர்களின் நகைகளைப் பார்ப்பதற்கென்றே பலர் வருவார்கள். அதில் சிலது என் அம்மாவின் பரம்பரை நகைகள்… பிறகு உனக்கு அவற்றைக் காட்டுகிறேன்…” என்று கூறியவனைக் கண்ணாடியினூடாக, இமை மூடாது பார்த்துக்கொண்டிருந்தாள்.

அடுத்து அவள் கரத்தைப் பற்றிக் காப்பை அணிவித்தான். அவனுடைய கரங்கள், தாராளமாக அவள் மேனியில் பட்டபோது, இவள் பெரிதும் தவித்துப்போனாள். அவனோ, அவளுக்கு நகை அணிவிக்கும் எண்ணம் மட்டுமே கொண்டவனாக, தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தான்.

இறுதியாகத் தன் கரத்தில் குறுக்குச் சிறுத்த இடைக்குத் தோதாக மேகலையை எடுத்தவன், அவள் தோள்களைப் பற்றி எழுப்பி விட்டு, பெரும் இரசனையுடன் அவள் இடைக்கு நேராகக் கால் மடித்து அமர்ந்தான். தன் வெம்மையான மூச்சுக் காற்று அவளுடைய இடையில் பட்டுத் தெறிக்கும் அளவிற்கு நெருங்கி நின்று, அவளைச் சுற்றிக் கரத்தைக் கொண்டு சென்று, அந்த மேகலையை, அணிவித்த போது, அவனுக்கு எப்படியோ, சர்வமகி அவ் உலவை விட்டு நீங்கி சொர்க்க லோகத்தில் பூப்பறிக்கத் தொடங்கினாள்.

மேகலை என்னவோ அணிவித்தாகிவிட்டது. ஆனால் அவனால்தான் உடனே எழுந்துகொள்ள முடியவில்லை. ஒரு கலைஞனின் இரசனையுடன், செதுக்கிய சிற்பமெனக் கண் முன்னே தெரிந்த அந்த இடையின் அழகில் மெய் மறந்தவனாகத் தன் சுண்டு விரல் கொண்டு, மேகலையை வருடிக் கொடுத்தவனின் விரல்கள் தடம் புரண்டு, பளீர் என்று தெரிந்த இடையினூடாக மெதுவாக ஓடிச் செல்லக் கூசிச் சிலிர்த்துப் போனாள் சர்வமகி.

அதற்கு மேல் அவனுடைய வருடலைத் தாங்க முடியாதவளாக, அவன் கரத்தைப் பற்ற, தன் இரசனையைக் கலைத்தவள் மேல் ஏற்பட்ட கோபத்துடன் தன் தலையை நிமிர்த்திப் பார்த்தான். அவளோ துடித்த உதடுகளை, முல்லைப் பற்கள் கொண்டு கடித்தவாறு நாணத்துடன், அவனைப் பார்த்து மறுப்பாகத் தலையை ஆட்ட, காந்தமிழுத்த இரும்பாக

அவளை நோக்கி எழுந்தவன், செங்கொழுந்தாகிப் போனவளின் அழகிய வைத்தனத்தை பற்றிக்கொண்டான். ‘இத்தனை அழகையும் மொத்தமாய் ஒருத்தி கொண்டிருக்கமுடியுமா? உலக அழகிகள் அனைவரும் கண்டு பொறாமைப்படும் அழகியல்லவா என் மனைவி… இவள் எனக்கானவள்… எனக்கு மட்டுமே உரிமையானவள்…’ என்கிற பெருமை அவனை நிமிர்ந்து நிற்கச் செய்ய. முகத்தில் அப்பட்டமாகக் கர்வமும், மகிழ்ச்சியும் தாண்டவமாட, விழிகளால் அவள் முகத்தில் கவிபாடினான்.

அவனுடன் பார்க்கும்போது, அவள் குள்ளம்தான். அவளுடைய தலையே, அவனுடைய மார்பின் கீழ்ப்பகுதி வரைதான் வந்திருந்தது. அவனைப் பார்க்கவேண்டுமானால், அவள் தலைநிமிர்ந்துதான் பார்க்கவேண்டும். சூரியனைக் காணும் ஏக்கத்தில், தாமரை தலை நிமிர்ந்து பார்க்குமே, அப்படித்தான், அவளும் அவனை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் முகத்தில் கரம் பற்றித் தாங்கியவன்,

“மகிம்மா… நீ எத்தனை அழகு தெரியுமா? நீ என்னவள் என்பதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை…” என்றவனுடைய கரங்கள், மெல்ல மெல்ல இறங்கி, மேகலையுடன், அவளுடைய இடையில் தஞ்சம் அடைந்து அழுத்திக் கொடுக்க, சிலிர்த்துப்போனாள் சர்வமகி

அவனுக்கோ, வாக்காகத் தஞ்சம் புகுந்திருந்த இடத்தை விட்டுத் தன் கரங்களை விலக்கும் எண்ணம் சற்றும் இல்லாதவனாக, அந்த மென்மையை அனுபவித்தவாறு, அவள் முகம் நோக்கிக் குனிந்தான். அதே நேரம், பூஜைவேளை கரடியாக, யாரோ அவர்களின் அறைக் கதவைத் தட்டினர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

17 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

7 days ago

நீ பேசும் மொழி நானாக – 36/37

  விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…

1 week ago