Categories: Ongoing Novel

தாமரையின் நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே -3

உ ப்பா…

 

NPNN 3

 

ம்மா… என்ற அழைப்புக் குரலுக்கு துணைக் குரலாய் இன்னோரு ம்ம்மோ…. என்று கேட்க, சீரியல் பார்த்தவாறே இரவு உணவுக்கான காய்கறிகள் நறுக்கிக் கொண்டிருந்த வாசுகி, அவசரமாய் வெளியே வந்து பார்த்தார் .

 

 

அவர்களின் பிஞ்சையில் வேலை செய்யும் ஆட்கள் தான்.. ஒரு மாட்டையும் இரு கன்றுகளையும் பிடித்தவாறு நின்று கொண்டிருந்தனர்.

இன்னிக்கு சந்தைல புடிச்சது. மாட்டுக் காடி தொறந்து வுடுங்கம்மா எனவும் ,

 

ஆணியில் மாட்டி இருந்த சாவியை எடுத்தவாறே, மாலை மங்கி இரவு வரத் தொடங்கிய வெளிச்சத்தில் உற்றுப் பார்த்து,

“என்னாது இது.. பசு இரட்டை குட்டி போட்ருக்கா?” என்ன எனக் கேட்டவர், இன்னுமும் உற்றுப் பார்த்து, இல்லையே சாயல் ஒன்னு போல இல்லியே.. என்று சத்தமாய் கேட்க,

 

இரண்டவது கன்றைப் பிடித்து இருந்தவன், ம்மா.. இதும் மாடுதான். இது சைசே இம்புட்டுத்தான். காங்கேயம், புங்கனூர் நாட்டு ரகம், பாவநாசம் சந்தையில வேந்தன் புடிச்ச மாடுங்கம்மா.. எனவும் தலையிலடித்துக் கொண்டவர் , எத்தனை பல் ( வயது கண்டு பிடிக்க), எத்தனாவது ஈத்து (பிரசவம்)?” என விசாரிக்க , பதில்கள் திருப்தியாய் வந்து விழுந்ததும் விலை பற்றி கேட்க, சொன்ன விலை கேட்டு அதிர்ந்தார்.

 

 

 

“என்ன இவனென்ன நாட்டு மாட்டுப் பண்ணை ஏதும் வைக்கப் போறானா.. எதுக்கு இவ்ளோ விலை கொடுத்து மாடு..” என பொரிய.

 

“போறானா என்ன அதா ஏற்கனவே வச்சாச்சே.. மாட்டுக் காடில போய் எண்ணிப் பாருங்க அத்தே.. பதினைஞ்சு பதினெட்டு உருப்படி தேறும்.” என்றவாறு வந்தாள் தேவ மஞ்சரி.

 

 

அவளின் இடுப்பளவு உயரமே இருந்த மாட்டைக் கண்டு ஆச்சரியம் மிக அருகில் சென்றவள், “இதுக்கு மேல இது வளராதா?” என்றவாறு தொட்டுப் பார்க்க முயல, தலையை வேகமாக சுழற்றி அவளை மிரட்டியது.

 

ஹூம் என்ன விட குள்ளமா இருந்துட்டு சிலுத்துக்கிற.. என்று ஒரு தட்டு தட்டியவள்..

 

 

ம்மா பாக்கத்தான் சிறிசு.. வயசு மூனு வருஸமாம்.. இதோ செவலப் பசுவும் கன்னுக்குட்டியும் இருந்து.. அது இரண்டடி கூட இல்லை.. அம்புட்டு அழகு பாத்துக்கிடுங்க..

 

 

ஆங்.. என்றவாறு உற்று நோக்கியவள், அதன் கரிய நிறக் கண்களை பார்த்து ஆனாலும் இதும் செம்ம அழகு தான்.. என்றுவிட்டு லேசாக வருடினாள்.

 

 

“அழகா சோறு போடும்.. ஏன்டா இது பாக்க கிடாரி(காளை) போலருக்கே, என்னத்துக்கு வாங்கினான் அந்த பொச கெட்ட பய?” என்று சொல்லிய வேளையில்,

 

டுட் டுட் என்ற ஒலியெழுப்பும் ராக்கெட் சைலன்ஸர் அதிர வந்தான் மகிழ் வேந்தன்.

 

காதை பொத்திக் கொண்ட மஞ்சரி, “எங்கே வந்தாலும் ஒரே கூப்பாடு தா.. நாய்ஸ் பொல்யூஷன் பண்ணிட்டு.. ம்க்கும்.” என்று சலித்தவாறு திரும்ப,

 

 

வாகனத்தின் விசையை திருப்பி ஒலியை நிறுத்தியவன்,

“சத்தமில்லாத போயிட்டு வர நா என்ன பூனைக்குட்டியா.. புலிக்குட்டி.. திருநெல்வேலி சீமைக்காரனாக்கும்.. ” என்றவாறு கறுப்புக் கண்ணாடியை பாக்கெட்டில் வைக்க,

 

 

புலியா.. யானைன்னு வேணா சொல்லலா.. அதும் வெங்கலக் கடைக்குள்ளே புகுந்த யானை.. என்று முணங்கியவள் நகரவும்,

 

 

 

வாசுகி, “ஏ புலி, இந்த கன்னுக்குட்டி சைசு மாட்டுக்குட்டி எதுக்கு வாங்கினேன்னு முதல்ல சொல்லு , வர வர ஒஞ்சேட்டைக்கு அளவில்லாத போயிட்டுருக்கு கேட்டியா, அப்போ மாமா பாத்தா நல்லா திட்டு வாங்கப் போற..

 

எம்மா, நாட்டு மாடுங்கள காங்கறதே இப்போல்லா முடியாத போயிடுச்சு.. அதெல்லா அப்பா ஒன்னும் சொல்ல மாட்டாரு.. அவரு தானே நம்ப தலைவருக்கு மொதோ ஃபேனு.. எனவும்

 

ஏலே…அப்பா இல்லலே, மாமா..

 

அவரும் திட்ட மாட்டாரே.. என்றவன் மஞ்சரி நகர்ந்து சென்றதை உறுதி செய்து கொண்டு, அன்னையின் அருகில் சென்றவன், இந்த மாட்டு எரு போட்டாத்தா பாசுமதி நல்லா விளையும்னு ஏற்கனவே அவரிட்ட முடுக்கி விட்டாச்சு.. என்றுவிட்டு காலரை பின்னால் தூக்கி விட்டுக் கொண்டான்.

 

 

என்ன போட்டா என்ன நல்லா வெளையும் மருமகனே . என்றவாறு வந்து நின்ற பெரிய மாமா நெல்லையப்பரை கண்டவன், அதிர்ந்தாலும் காட்டிக் கொள்ளாதவாறு,

 

அது அது மாமா.. இந்த மாடு , மாடு இல்ல.. இது.. நாட்டு மாடு.. ஆங்.. நம்ப நந்திகேசர் மாறியே இருக்கு பாருங்களேன்.. சிவன் சன்னதில முன்னால இருக்க நந்திகேசுவரர் போலவே.. ஆங் அந்த மாட்டுக்காரன் சொன்னான் மாமா.. திருப்பதில வெங்கடாஜலபதிக்கே இந்த ரக மாட்டுப் பால் வச்சுத்தா அபிஷேகம் பண்ணுவாங்களாம். இந்த மாடு வீட்டில இருந்தா பெரிய யோகமாம்.. நிறைய நல்லது நடக்குமாம். நம்ப சின்ன மாமா வேற, ஜாதகம் பாத்துட்டு வெசனமா இருந்தாரா.. அதா.. இது வந்த வேள நல்லாருக்கட்டும்னு வாங்கிட்டேன். எனவும்

 

 

வந்து அண்ணாந்து கண்ணாடி வழியாக உற்றுப் பார்த்தவர், ஆமா.. நல்ல லட்சணமா என்னப்பன் வாகனம் போலத்தா இருக்கு, என்றவர் அதன் நெற்றி தொட்டு கும்பிட்டு விட்டு நகர,

 

 

ஊஃப் என்று பெரு மூச்சு அம்மையும் மகனும் சேர்ந்து விட்டனர்.

 

பெரிய அண்ணாச்சிட்ட மாட்டினேன்னே நினைச்சே, எப்படிரா மவனே.. ஆனாலும் நீ அறிவுக் கொழுந்து தான், போ.. என்றவர்.. அய்யாய்யோ.. ******** போடற நேரமாச்சி என்று ஒரு சீரியல் பெயரைச் சொல்லி விட்டு உள்ளே விரைய எத்தனிக்க,

 

 

தாய்க்குலமே.. தொறவுகோலத் தந்துட்டு போங்க.. என்று அலறியவனின் குரலில், திரும்பி, வழிந்தவாறு அவனின நீட்டிய கையில் சாவியை வைத்து விட்டு விரைந்தார்.

 

தன் இடுப்பில் மெல்லமாக முட்டிய அந்தக் காளையின் தலையைப் பற்றியவன்,

என்னாடா.. உனக்கு என்ட்ரி வாங்க எம்புட்டு பாடு பட்டுருகே.. என்னைய முட்ற.. செரி வா, என்றவாறு அதன் கழுத்தில் கட்டியிருந்த கயிறைப் பற்றியவன்.. மாட்டுக் காடி நோக்கி அழைத்துச் சென்றான்.

 

 

அவன் நினைத்திருந்த படியே செவலை கன்றுக் குட்டியோடு காங்கேய இன மாடும், போனஸாக இந்த புங்கனூர் ரக மாடும் வாங்கியது அத்தனை மகிழ்ச்சி.

 

விலை அதிகம் தான், ஆனால் மனதின் சில ஆசைகளுக்கும் தேடல்களுக்கும் விலை பொருட்டில்லையே..

 

உடன் சமர்த்தாக நடந்து வரும் கன்னுக்குட்டியை தொட்டு முன்னை தள்ளி வழிகாட்டியவன், “ஆமா உங்களுக்கெல்லா உங்க மொதலாளிங்க, ஏதோ பேருங்க சொன்னாங்களே.. அது.. ஞாபகத்தில இல்ல, நா வேற நல்ல பேருங்க வைக்கிறேன்.. என்றவாறு நடந்தவனின் எதிரே வந்தாள் தீப. தூபக் கரண்டியோடு.. நீலாம்பரி..

 

 

சாயங்காலங்களில் மாட்டுக்காடியில் விளக்கேற்றி, சாம்பிராணி தூபம் காட்டுவது அவளின் வழக்கம். நேர்மறை சக்தி பெருகும் என்பதோடு, பூச்சிகள் வராமல் இருக்க அது அவசியம் என்பதால் யாராவது ஒருவர் முறை வைத்துக் கொண்டு செய்து விடுவார்கள்.

 

 

அட அத்தான், உங்க செண்பகம் கிடைச்சுடுச்சா என்று ஆச்சரியமாக கேட்டவள், இந்த புங்கனூர் ரகம் பற்றி படிச்சுருக்கேன் இன்றைக்குக் தான் நேர்ல பாக்கிறேன்.. க்யூட்..

 

 

பற்கள் தெரிய சிரித்தவன், வாவா அப்படியே இவிங்களுக்கும் சாம்பிராணி காட்டு, நீயே நல்ல பேருங்களா வச்சிட்டு போ.. எனவும்.

 

 

அவளின் துப்பட்டாவை நாவால் சுழற்றி இழுக்க முயன்ற காளையிடம் இருந்து ,காத்துக் கொண்டவளாய்,

 

 

அய்யே அத்தான், பேரு அப்புறம்.. முதல்ல சோத்தை.. பில்லும் தண்ணியும் காட்டுங்க.. எனவும்

 

 

அதுவும் சரிதான் என்றவன், நேராக புல் கிடக்கும் தொட்டிப் பக்கமாய் நகர்த்தி கூட்டிச் சென்றான்.

 

அந்த புங்கனூர் காளையோ அவன் இழுத்த இழுப்பிற்கு வராமல் சண்டித்தனம் செய்ய, கூட இருந்த பண்ணையாட்களும் சேர்ந்து இழுத்து சென்று , முளையில் கட்டி வைத்தனர்.

 

 

மாடுகளுக்கு தீவனம் தயாரிக்கும் அடுப்பில் இருந்து கங்குகள் எடுத்தவள், புதிய செல்வங்களுக்கு புகை போட்டு ஆரத்தி எடுக்க..

 

 

தலையசைத்த காளை ம்மா என்று குரலெழுப்பியது.

 

அத்தான், அந்த செவலை கன்னுக்கு செண்பகம் வச்சிடலாம், அதோட ஆத்தாவுக்கு பேச்சி.. இவனுக்கு மட்டும் முத்துமணி ஓக்கேயா.. என.. அட நல்லாருக்கே பேருங்க.. நா கூட இந்தப் பயலுக்கு மணி வாங்கினேன். என்றவாறு எடுத்து மணியுடன் கூடிய சிவப்பு கழுத்துப்பட்டையினை கட்டி விட்டான்.

 

 

சரிடே….கிளம்புங்க.. நீலூ இவனுங்களுக்கு சம்பளம் போட்டு அனுப்பு, நா படுதா கட்டிட்டு வந்துடறேன்.. என்றவன் திரும்ப,

 

நீங்க அப்பாட்ட போய் சொல்லி வாங்கிக்கங்க அண்ணாச்சி, நா பின்னாடியே வாரேன்.. என்றவள் அவர்கள் நகர்ந்ததும்,

 

அத்தான், உங்கட்ட முக்கியமா பேசனும்.

 

 

எனக்கு எப்படியும் இங்கன பத்து நிமிஷம் ஆகும்.. சொல்லு..

 

லேசாக தயங்கியவள், டேவிட்டு அண்ணாச்சி நிலத்தை வாங்கினவங்க.. எனவும் படுதா சாக்கு திரைகளை எடுத்துக் கொண்டிருந்தவன், அப்படியே வைத்து விட்டு திரும்பிப் பார்த்தான்.

 

அவனுங்களுக்கு என்ன? என நிதானமாய் கேட்க,

 

இல்ல.. அவங்க தாத்தா நிலம் , விட்டதை புடிக்க வந்திருக்கோம்னு, சொன்னாங்க எனவும்

 

 

கூர்மையாய் பார்த்தவாறு, யாரு ,யாரை பார்த்தே பேசினே நீலு. தெளிவா சொல்லு என்றான்.

 

 

இரண்டு பேருதானே அத்தான் காட்டுப் பக்கம் வர்றாங்க. பேரு கூட காரி, ஓரி ச்சே இல்ல ஆங்.. பாரி.. பேரு தான் வள்ளல்கள் போல.. ஒருத்தன் பொண்ணுங்களையே பாக்காதவன் போல, ஒருத்தன் பொண்ணுங்களையே மதிக்காதவன் போல..

 

எனவும் அமைதியாக அவள் சொல்வதை கேட்டுக் கொள்ளும் பாவனையில் நின்றான் வேந்தன்.

 

அந்த புன்னகை மன்னன் போல சிரிப்பாணி அள்ளி வழங்குற ஆள்தான் சொன்னான், இந்த நிலம் அவங்க பரம்பரை சொத்தாம். ஏதோ சேலஞ்சு, மீட்க தான் அப்படின்னு எல்லாம் ஏதோ சொன்னான்.

 

 

டேவிட் அண்ணாச்சி அப்பாருக்கு நம்ம தாத்தா தான் , நிலம் வித்ததா சொல்லுவாங்க நீலு.. 1972 ல பெரிய பஞ்சம் வந்ததாம். அந்த நேரம் தான் வித்தது . அதற்கு முன்னே நம்ப கொள்ளுப் பாட்டன்ட்ட தான் இருந்தது.

 

 

ஓ.. என்றவள், சரி குளிச்சிட்டு சாப்பிட வாங்கத்தான், அப்பத்தாட்டா கேட்டா வெவரம் தெரியும் என்றவள், வீடு நோக்கிச் செல்ல, யோசனையால் சுளித்த புருவங்களுடனேயே திரைகளை எடுத்து மாட்டினான்.

 

ஆனால் உள்ளே நுழைந்த நேரம், இரு மாமன்களும் பெரிய மாமனின் மகனான கார்த்திக்கின் பெண்ணிற்கு குல தெய்வ கோவிலில் முடி எடுப்பது தொடர்பாக பேசிக் கொண்டு இருந்தனர். யாரை அழைப்பது, விருந்தினரை எங்கு தங்க வைப்பது, என்ன விதமாக சீர் செய்வது , யார் யார் என்னென்ன வாங்க வேண்டும் என்று பட்டியலிட்டதில் அம்மச்சியிடம் கேட்க நினைத்திருந்த விஷயம் மறந்தே போயிருந்தது.

 

 

*************************

 

 

 

கேசி என்ற எழுத்துக்களை சங்கிலி வளையமிட்டிருந்த லோகோவைத் தாங்கியிருந்த கதவுகள் விரியத் திறக்க, உள்ளே அதிக சத்தமின்றி ஊர்ந்து சென்று போர்ட்டிகோவில் நின்றது பாரியின் கை வாகனம் .

 

அந்த இரவு நேரத்தில் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த தாயைக் கண்ட பாரி முகம் கடுக்க, முறைத்தவன்,

 

உங்களுக்கு என்ன வேற பொழுது போக்கே தெரியாதா? எப்பவும் அங்கனயே நின்னுட்டு? அப்பா திட்றது சரிதான். உள்ளே போங்க. என்றவன் தன் அறை நோக்கிச் சென்றான்.

 

மூத்த மகனோ, பார்க்கும் போதெல்லாமா தகப்பனை போலவே திட்ட, இளைய மகனோ, அலைபேசியின் ஏதோ ஒளிப்படத்தினை கண்ணுற்றவாறே உள்ளே செல்வதைக் கண்ட ஜெயராணி , அமைதியாக சென்று இருவருக்கும் இரவுணவு எடுத்து வைக்கலானார்.

 

இந்த அசையா பொருட்களையும் , கணவர் பார்க்கும் ஒளிச்சித்திரங்களும் இயந்திரக் குரல்களும் ஆகாமல் தான் தோட்டத்தில் அமர்வது.. அது பொறுக்கலையா, என்று மகனை கேட்க எண்ணினாலும் வழக்கம் போல ஏதும் சொல்லத் துணிவற்று அமைதியாய் தன் வேலையை செய்து கோண்டிருந்தார். எத்தனை வேலையாட்கள் இருந்தாலும் இங்கே பரிமாறுவது உபசரிப்பது இவரின் கடமை மட்டுமே..

 

மகன்கள் வந்த அரவம் கேட்டு தன் அறையிலிந்து வந்த கிருஷ்ண சேதுபதி , தானும் உணவு மேஜையின் ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.

 

சில நிமிடங்களில் இலகு உடை மாறி வந்தவர்கள் அமர்ந்து உண்ணத் தொடங்க, வழக்கம் போல பேச்சு தொடங்கியது.

 

பாரி போன காரியம் ஜெயமா? நெல்லையப்பர் சிவந்தியப்பர் யாரையாச்சும் பார்க்க முடிஞ்சதா?

 

 

மறுப்பாய் தலையசைத்தவன், அந்த வேந்தனும் ஒரு பொண்ணும் தான் அங்கே பாத்துக்கறாங்க போல.. மத்த எல்லாம் வேலக்கார, கூலிக்கார பசங்க.. இந்த பெரிய தலைங்க அங்கே தலகாட்றது இல்ல போல.. கணக்கு வழக்கு வெளி வேலைங்க பார்ப்பாங்களோ என்னவோ.. நீங்க பாவநாசம் மார்க்கெட்ல புடிக்க முயற்சி பண்ணா என்ன?

 

 

அதெல்லா நம்ப கவுரவத்திற்கு சரிப்படாது. நம்ம வேற எப்படியாச்சும் தான் அவங்களையே நம்மத் தேடி வந்து பாக்கும் படியா வைக்கனும். அதுக்கு என்ன பண்ணலாம்னு பாரு..

 

ம் ம் என்றவாறு உணவினை உண்டான் பாரி.

 

ஈஸி எடுத்து பாத்தாச்சு . அந்த நிலம் ஆறா சரிபங்கா பிரிச்சுருக்ஙாங்க, ஒரு பங்கு பக்கத்திலேயே இருக்க பூர்வீக நிலம் நெல்லையப்பர் அவரு வாரிசு கார்த்திக், இரண்டு கிணறுங்க இருக்க நிலங்கள் வாசுகி அவங்க வாரிசு மகிழ் வேந்தன் அப்புறம் சிவந்தியப்பர் அவரு பொண்ணுங்க நீலாம்பரி, தேவ மஞ்சரி.. எப்படி இத்தனை பேரை ஒன்னா நிலத்தை தர வைக்க, யோசிங்க.. மக்கா.. என

 

அப்போது வேலையாள் பெரிய மூட்டைகளைக் கொணர்ந்து வைக்க, மேலேயிருந்த பை கீழே விழுந்து சிதறின விதைகள்..

 

 

திரும்பிப் பார்த்த ஜெயராணி.. என்னது இது மணல் மாதிரி..

 

 

ஹூம் மணல் இல்ல விதைங்க.. நாம அவங்க விவசாயத்தை எப்படி நிறுத்தலாம்னு யோசிக்கப் போனா, ஒரு அண்டிக்(முந்திரி) கொட்டைக்காரி , நமக்கே ரோசனைங்க சொல்லி , விவசாயம் பண்ண காட்டைத் திருத்த விதைங்க எடுத்து நீட்டறா. என்றான்.

 

 

ஓ அந்த காட்டுல வேல செய்யற பொண்ணா? என்ற தந்தையின் கேள்விக்கு

 

அவசரமாய் பதிலளித்தான் இந்திரன், இல்லப்பா அந்த சிவந்தியப்பர் பொண்ணு நீங்க கூட இப்போ சொன்னேங்களே, ஆங்.. அங்கே ஆட்கள் நீலாம்மானு தான் கூப்பிட்டாங்க.. நீலாம்பரி.. அக்ரி படிச்சுருக்காள். அவளும் அந்த மகிழ் வேந்தனும் சேர்ந்து தான் பாக்கிறாங்க..

 

 

ஓ.. நெல்லையப்பர் பையன் ஏதோ வடநாட்டுப் பொண்ணை கல்யாணம் பண்ணிட்டான் போல.. பேங்கில பெரிய உத்யோகம், அதனால சொத்து எல்லாம் சிவந்தியப்பர் கண்ட்ரோல் தான். அவர் சொல்றது தான் நெல்லையப்பர், வாசுகி கேட்பாங்க, சீக்கிரமே மகிழ்வேந்தனுக்கு நீலாம்பரிக்கு கல்யாணம் பேசி சம்பந்தம் கலக்கி ஒன்னுக்குள்ள ஒன்னு ஆகிடுவாங்க போல.. எனவும்

 

 

அய்யய்யோ என இந்திரன் கூவ,

 

பாரி வேந்தனின் கை அசைவற்று நின்றது..

 

நாயகன் ஆடுவான்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

What’s your Reaction?
+1
4
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
தாமரை

Recent Posts

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே!” அத்தியாயம் 21,22,23

    சேதி 21 *********                 சென்னையின், போக்குவரத்து…

3 hours ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-19

(19)   அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது…

6 hours ago

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…

2 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-17/18

(17)   அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…

2 days ago

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே அத்தியாயம் 18,19,20

சேதி 18 *********                    நள்ளிரவை நெருங்கப் போகும்…

3 days ago

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே! “அத்தியாயம் 16&17

சேதி 16 *********               மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…

6 days ago