அபயவிதுலனுக்கு மகிழ்ச்சி கட்டுக்கடங்காமல் வந்தது. அவனுடைய தனியார் விமானத்தில் மீண்டும் அமெரிக்கா சென்றவன், நேராக மருத்துவமனை வந்தடைந்தான். அடுத்து ஆராதனாவின் அறைக்குள் புயலென நுழைந்தான்.
அவன் உள்ளே நுழைய, அப்போதுதான் மிளிர்மிருதை, ஆராதனாவிற்கு உணவை ஊட்டி முடித்து வாயைத் துடைத்துக்கொண்டிருந்தாள். உள்ளே வந்திருந்த மாமனைக் கண்டு ஆராதனா முகம் மலர, அவளைப் பார்த்து மலர்ந்து நகைத்தவன் மிளிர்மிருதையின் கரத்தைப் பற்ற, திடீர் என்று ஒருவன் கரத்தைப் பற்றியதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கே என்றுமில்லாதவாறு மலர்ந்த முகத்துடனும் ஒரு வித குதூகலத்துடனும் தன் கணவன் நிற்பதைக்கண்டு,
“ஹே… எப்போது வந்தீர்கள்…” என்று கேட்கும்போதே, அவனால் இழுத்துச் செல்லப்பட்டாள்.
முதலில் திகைத்தவள்,
“விதுலா…! வட்… என்ன செய்கிறீர்கள்… எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்… கையை விடுங்கள்…” என்று அவன் பிடியிலிருந்து தன் கரத்தை விடுவிக்க முயல, இவனோ காது கேளாதவன் போல மேலும் முன்னேறத் தொடங்கினான்.
அதே நேரம் காந்திமதியும் அவர்களை நோக்கி வர, அங்கே தன் தம்பி மிளிர்மிருதையைக் கொர இழுவையாக இழுத்துச்செல்வதைக் கண்டு,
“டேய்… என்னடா செய்கிறாய்…?” என்றார் வியந்து.
“பார்த்தால் தெரியவில்லை? இவளை அழைத்துச் செல்கிறேன்… முக்கிய வேலை ஒன்றிருக்கிறது… குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்… வந்துவிடுகிறோம்…” என்றவன் சகோதரியின் பதிலை எதிர்பார்க்காது அவசரமாக ஓட்டமும் நடையுமாகச் செல்ல, அவன் மிளிர்மிருதையை இழுத்துச் சென்ற வேகத்தைக் கண்டு,
“டேய்… அதற்கு எதற்காக அவளை இழுத்துச் செல்கிறாய்… பார்த்துடா… கால் சுளுக்கப் போகிறது.. ” என்று பதற, நின்றவன். பின் தன் புருவத்தைச் சுருக்கித் திரும்பி நின்று சகோதரியைப் பார்த்து,
“அப்படியா சொல்கிறீர்கள்… ம்…” என்றவன், அடுத்து மிளிர்மிருதையைத் தன் கரங்களில் ஏந்தியிருந்தான். காந்திமதி மட்டுமல்ல, மிளிர்மிருதையும் அவனுடைய இந்தப் புதிய அவதாரத்தைக் கண்டு அதிர்ந்துதான் போனார்கள்.
“டேய்.. அபயன்… பாத்து…” என்று காந்திமதி அலற,
“விதுலா…! வட் த ஹெல் ஆர் யு டூயிங்… என்னை இறக்கிவிடுங்கள் என்று” இவள் பதற, இவனோ இருவரின் அலறலையும் பொருட்படுத்தாது நின்று சகோதரியைப் பார்த்து,
“குழந்தைகள் பத்திரம்…” என்றவாறு அவரின் பதிலையும் எதிர்பார்க்காது தன்னவளை ஏந்திக்கொண்டு தன் வாகனம் வரை சென்றான்.
ஆனால் போகிற வழியில் எல்லோரும் இவர்களை ஒரு மாதிரியாகப் பார்க்க மிளிர்மிருதைக்குத்தான் வெட்கத்தில் மானமே போவதுபோலத் தோன்றியது. கூச்சத்தில் நெளிந்தவள்,
“எல்லோரும் பார்க்கிறார்கள்… விதுலா…! ப்ளீஸ்… கீழே இறக்கிவிடுங்களேன்…” என்று அவனுடைய சட்டைக் காலரை இறுகப் பற்றியவாறு கெஞ்ச, அவனோ குனிந்து தன்னவளை ஒரு கணம் ஆழப் பார்த்தான். அந்தப் பார்வையில், தான் வேண்டுவது நடக்காது என்பதைப் புரிந்துகொண்டவளாக, மற்றவர்களின் முகத்தைப் பார்க்கக் கூச்சப்பட்டுத் தன் முகத்தை அவன் மார்பில் மறைத்துக்கொள்ள, அந்த விடாக்கண்டனோ சற்றும் அவளுடைய அவஸ்தையைப் பொருட்படுத்தினானில்லை.
வேகமாகத் தன் வாகனத்தை நெருங்கி அவளை அமர வைத்துவிட்டு, ஓட்டுனர் இருக்கையில் வந்தமர்ந்த வேகத்திலேயே வாகனத்தை உயிர்ப்பித்துக் கிளப்பிவிட்டான்.
இவளோ குழப்பத்துடன்,
“என்னாச்சு விதுலா…! எங்கே இத்தனை அவசரமாகப் போகிறோம். போன இடத்தில் ஏதாவது பிரச்சனையா? போன காரியம் என்னவாகிவிட்டது… பத்ரிநாத்தைச் சந்தித்தீர்களா? என்ன சொன்னான்” என்று மிளிர்மிருதை கேட்க,
“சொல்கிறேன்…” என்றவாறு ஒற்றைக் கரத்தால் வாகனத்தை ஓட்டியவாறு மறு கரத்தால் அவளுடைய இடக்கரத்தை இறுகப் பற்றிக்கொள்ள, அடுத்தப் பத்தாவது நிமிடம் அவர்கள் தங்கியிருந்த விடுதி வந்திருந்தது.
வாகனத்தைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு, வெளியே வந்தவன், அவள் கதவைத் திறக்க முன்பாக ஓடிவந்து தானே திறந்து, தன் மனைவியின் கரத்தைப் பற்றி இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவன் பக்கமா வந்தாள் மிளிர்மிருதை. இறுகப் பற்றிய கரத்தோடு விடுதியின் உள்ளே நுழைந்து மின்னியக்கியின் பொத்தானை அழுத்தினான்.
மிளிர்மிருதைக்கோ ஒரே குழப்பமாக இருந்தது. இவனுக்கு என்னவாகிவிட்டது. எதற்கு இப்படி நடந்து கொள்கிறான்… அவனிடம் தெரியும் இந்த அவஸ்தை இதுவரை அவள் கண்டிராதது. எதற்கு இத்தனை பதட்டப் படுகிறான்? இது வரை அவனை இப்படிப் பார்த்ததில்லையே… குழம்பிக்கொண்டிருக்கும் போதே மின்னியக்கி தன் கதவைத் திறந்தது.
திறந்தது தான் தாமதம், அவளை உள்ளே தள்ளியவன், தங்கள் தளத்திற்கான இலக்கத்தை அழுத்திவிட்டு வேகமாக மிளிர்மிருதையை நோக்கித் திரும்பினான். இரண்டு கரங்களையும் அவளுடைய தலைப்புறகத்துக்கு அருகாமையில் அழுத்தி வைத்தவன், அவளை நோக்கி நன்றாகக் குனிந்தான். அவனுடைய கூரிய பார்வை அவளுடைய முகத்தை அழுத்தத்துடன் வருடியது. அவை மெல்ல மெல்லக் கீழிறங்க இவளோ தவிப்புடன்,
“வி… விதுலா…! என்… என்னவாகிவிட்டது?” என்று திக்கித் திணற, இவனோ அவள் முகம் நோக்கி மேலும் குனிந்தான்… உதடுகள் நெற்றியிலிருந்து கோடாகக் கீழிறங்கி மூக்கு நுனியை மெல்லியதாய் உரச, இவளுக்குத்தான் இதயம் படபடத்துக்கொண்டு வந்தது.
இதுவரை சந்திக்காத இந்தச் சம்பவத்தில் தடுமாற்றத்துடன் தன் விழிகளை உயர்த்திக் கணவனைப் பார்க்க, அவனுடைய மூச்சுக்காற்றோ பெரும் வெப்பத்துடன் சூடாகி அவள் முகத்தில் பட்டுத் தெறித்தது. உடலுடன் உதடுகளும் நடுங்க பெரும் அவஸ்தைக்குள்ளானவள், அவனுடைய மார்புச் சட்டையை இறுக பற்றி, பெரும் தவிப்புடன்
”எ… என்… என்ன இது…” என்றாள் முடிந்தளவு குரலின் நடுக்கத்தைத் தவிர்க்க முயன்றவாறு. அவனோ, அவனை ஏறிட்டுப் பார்த்த நேரம், மின்னியக்கியின் கதவு திறந்தது.
வேகமாக அவளை விட்டுப் பிரிந்தவன், அவளை இழுத்துக்கொண்டு தனக்குரிய அறைக்கு முன்னால் வந்து நின்றான். என்றுமில்லாதவாறு விரல்கள் நடுங்கக் கதவைத் திறந்துவிட்டுத் திரும்பியவன் மறு கணம் மிளிர்மிருதையைத் தன் கரங்களில் ஏந்தியிருந்தான்.
அவனுடைய இச் செயலில் அதிர்ந்து திகைத்து மலங்க மலங்க விழிக்க, உள்ளே வந்தவன் கதவைக் காலால் அடித்துச் சாத்திவிட்டுத் தன் கரங்களில் வீற்றிருந்தவளின் விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்தான். பின் மெதுவாகக் கீழிறக்கித் துடித்த உதடுகளைத் தவிப்புடன் பார்த்தான். அப்படியே அவளை ஏந்திச் சென்று படுக்கையறைக்கு வந்தவன், அவள் சுதாரிக்கும் முன்பே கட்டிலில் விட்டெறிய, அவள் விழுந்த வேகத்திற்குக் கீழே சென்று மேலே வந்தாள் மிளிர்மிருதை.
விழுந்த வேகத்தில் அவள் அணிந்திருந்த பாவாடை விலகியிருக்க, மேலாடையோ சற்று மேலேறி அவள் புடம் போட்ட மென் வயிற்றை மெல்லியதாகப் படம் பிடித்துக் காட்டியது.
அவனோ, ஒரு முழு நிமிடம் அவள் நெற்றியிலிருந்து கணுக்கால் வரை அக்குவேறு ஆணி வேறாக விழிகளால் வெக்கமின்றிப் பருகினான்.
அவனுடைய பார்வையின் வீரியத்தில் முதலில் அதிர்ந்த மிளிர்மிருதை பின் மெல்ல மெல்லமாக அவனுடைய விழிகளின் வேட்கையை உணர்ந்து கொண்டவளாகத் தன் சிப்பி விழிகளை மூட, அவனோ கணவனாய் தன் மார்புக்குக் குறுக்காகத் தன் கரங்களைக் கட்டி தன் மனைவியின் மேனியை உவகையுடன் செதூக்கிப் பருகத் தொடங்கினான்.
கிடைக்காதோ, கிடைக்காதோ என்று ஏங்கித் தவித்த புதையல் அல்லவா அவள்… ரவிவர்மனின் ஓவியமாய், குஞ்சரமல்லன் வடித்த சிற்பமாய், இதோ அழகு அனைத்தையும் தன்னகத்தே கொண்டு அவனுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கிறாளே… அவள் மேனி அழகைப் பார்க்கப் பார்க்க அவனுடைய காதல் கட்டுக்கடங்காமல் பொங்கி வந்தது.
வாழ்வின் முதன் முறையாக எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாது, எந்த வலியும் இல்லாது, எந்த இறந்தகாலப் பாரமும் இன்றி அவளை நுகரப் போகிறான். இது வரை காலமும் ஆன்மாவால் சங்கமித்தவர்கள் முதன் முறையாகக் கலவியால் ஒன்றிணையப் போகிறார்கள். கலைந்த கற்பனைகளையும், தொலைந்த காலங்களையும், மீட்டெடுக்கப் போகிறார்கள். நினைக்கும் போதே தேகமெல்லாம் தித்தித்தது.
அவளை நோக்கி விழுந்தவன், இரு பக்கமும் கரங்களைப் போட்டு, அவளை முட்டாது நின்றவாறு,
“எல்லாக் குற்றங்களும் நீங்கி தூயவனாக, உன்னவனாக வந்திருக்கிறேன் மிருதா…” என்றவன் அதற்குப் பிறகு அவளுக்குப் பேசுவதற்கு நேரமே கொடுக்கவில்லை.
அடுத்து அவளுடைய அனுமதியையும் வேண்டாது வேகமாக அவளுடைய உதடுகளை ஆவேசமாக, அவசரமாகத் தாபத்துடன், எல்லையில்லா காதலுடன் காமம் கலங்க முற்றுகையிட்டவனுக்கு அந்த உயிருள்ள பொற்சிலையை விட்டு விலகவே முடியவில்லை.
கிடைத்த இடைவெளியில் மூச்சு முட்ட, “வி… விதுலா…!” என்று திணறியவளுக்குக் குரலுக்குப் பதில் கிசுகிசுப்புத்தான் வந்தது. மீண்டும் அவனை அழைக்க முயல, அவசரமாக அவன் உதடுகளால் மூடப்பட்டாள்.
முதலில் நடுங்கித் தவித்தவளை மெல்ல மெல்லத் தன் கட்டுக்குள் கொண்டு வந்தவனின் உதடுகள் மெதுவாக அவள் உதடுகளிலிருந்து பிரிந்து பின் நெற்றியில் அழுந்த பதிந்தன. அப்படியே வருடியவாறு வந்தவனின் உதடுகள் கன்னத்தில் அழுத்தித் தன் பலத்த முத்திரையைப் பதிந்தன. உதட்டின் மேற்புறத்திலிருந்த சிறிய மச்சத்தை ஒரு அவசரத்துடன் கடித்தன. பின் கழுத்தை நோக்கி விரைந்த அந்த ஆண்மை கொண்ட உதடுகளுக்கு, அங்கிருந்த மச்சத்தில் குடிபுகுந்து விலக முடியாது தடுமாறின. பின் மெதுவாக அது தன் பயணத்தைத் தொடங்க, அந்தப் புதிய அபயவிதுலனின் வேகத்தில் மிளிர்மிருதை திக்கித் திணறித்தான் போனாள்.
அவளுடைய கரைகடந்த வேகத்தில் அவளுடைய உடல் மெல்லியதாக நடுங்க, அதை உணர்ந்தவனாக அவளை அரவணைத்துத் திடப்படுத்தியவனுக்கு முதலில் பெற்றுக்கொள்வதா இல்லை கற்றுக் கொடுப்பதா என்கிற தடுமாற்றம் தோன்றியது.
ஆனாலும் புரியாமல் விழித்தவளுக்குக் கற்றுக் கொடுப்பது அவசியமாகப் பட, தெரிந்ததைக் கற்றுக்கொடுத்தான்… மெல்ல மெல்ல அவளைத் தன் வசம் திருப்பினான்… தன் அன்பில் திக்குமுக்காட செய்தான்…
அதன் பின் நாகரீகம் தொலைந்து போனது. பண்பாடு மறைந்து போனது. மகிழ்ச்சியுடனான இன்பத்தின் எல்லையைத் தொட்டுவிடும் அவசரம் அவனுக்கு. அதைக் கொடுத்துவிடும் அவசியம் அவளுக்கு. இது ஆண் பெண் இருவருக்கும் இடையில் நடந்த யுத்தமல்ல… காதலுக்கும் காமத்திற்கும் நடந்த பேச்சுவார்த்தை. ஆன்மாவுக்கும் உயிருக்கும் இடையில் நடந்த முற்றுகை. இதில் யார் பெரிது யார் சிறிது என்கிற போராட்டமில்லை… விட்டுக் கொடுத்தலும் பெற்றுக் கொள்ளுதலும் வாழ்க்கைக்கு மட்டும்தானா… அவர்களின் ஆத்மார்த்தமான கூடலிலும் குறைவின்றி நிகழ்ந்தது. அவனுக்கு அவளுமாய், அவளுக்கு அவனுமாய்… நான் நீ எனும் அகந்தை அழிந்து நாமாகி இருவரும் இரண்டறக் கலந்து ஓருயிராய், ஓருடலாய், ஓர் இதயமாய் மாறிப் போன போது காலம் கடந்து நீண்ட நேரமாகிவிட்டிருந்தது.
அவன் தொடும்போது, மெல்லியதாய் நடுங்கிக் குழைந்து இளகிய உடலையும், அவள் உணர்வையும் அணு அணுவாக ரசித்துத் தனக்குள் உள்வாங்கிக்கொண்டவனுக்கு, அத்தனை சுலபத்தில் அவளை விட்டு விலக முடியவில்லை. ஆறு வருடத் தேடலை அந்த ஒரே நாளில் தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று எண்ணினானோ, மெல்ல மெல்ல இரசித்து ருசித்து உருகிக் கசிந்து, மிச்சமின்றிப் புசித்து அவளைத் தன்னவளாக்கிய பின்பும் அவளை விட்டு விலகினானில்லை. அவளும் அவனுக்காய், அவளுக்காய் அவர்களுக்காய் தன்னை முழுதாக முற்று முழுதாக அவனிடம் ஒப்படைத்து, அவன் தீட்டிய ஓவியத்தின் அழகில் மிளிரத் தொடங்கினாள் மிளிர்மிருதை.
பெண்ணை ஜெயித்தால் உலகையே வென்றுவிடலாமோ… அபயவிதுலனுக்கு ஈரேழு உலகையும் வென்றுவிட்ட மகிழ்ச்சியில் தன் மனைவியிடமிருந்து விலகியவன், அதன் பின்னும் அவளை விட்டுப் பிரிய முடியாதவனாக இழுத்து தன் மார்பில் போட்டு விழிகளை மூடியபோது, துயரில்லாத பேரமைதி, பேரானந்தம் அவனைச் சூழ்ந்து கொண்டது. தியானத்தில் மட்டுமா மனதை அமைதிப் படுத்த முடியும்? தியானத்தில் மட்டுமா இறையைக் காண முடியும்…. இதோ இவன் கண்டுவிட்டானே… கண் முன்னே சொர்க்கத்தைக் கண்டு அங்கே தன் ஆட்சியை நிறுவிவிட்டு வந்துவிட்டானே… பேருவகையுடன், பெரும் நிம்மதியுடன், மார்பில் சரிந்திருந்தவளைத் தன் கை வளைவில் நடுங்கியவளை, அவனைக் கொள்ளைகொண்ட மனையாளைத் தன் கரங்களால் வருடி மெல்ல மெல்லத் திடப்படுத்தியவன், அவள் கூந்தலில் தன் உதடுகளைப் பொருத்தி,
“தாங்ஸ்டி…” என்றான் முணுமுணுப்புடன். அவன் உதடுகள் போட்ட கோலத்தில் கலைந்து போன குங்குமத்துடன் நிமிர்ந்து பார்த்து,
“எதற்கு?” என்றாள் சற்று முன் நடந்ததை நம்ப முடியாதவளாக.
“என்னை நம்பியதற்கு…” என்று கிசுகிசுப்புடன் கூறியவன், பின் அவளைத் தன்னோடு இறுக அணைத்து,
“மிரு… நான்… நான் தப்பு செய்யவில்லை மிரு… நான் தப்பு செய்யவில்லை… அந்தப் பெண்ணை நான் தொடவில்லை…” என்று அவன் கூற, அவனுடைய முடியடர்ந்த மார்பில் வாகாகத் தன் தலையைப் பதித்தவள்,
“அதுதான் எனக்குத் தெரியுமே… உங்களால் நிச்சயமாக என்னைத் தவிர எந்தப் பெண்ணையும் தொட முடியாது என்று எனக்கு அப்பவே தெரியும்… நீங்கள்தான் நான் சொன்னதை நம்பவில்லை…” என்று கூறியவாறு விழிகளை மூட, அவளுடைய வலது தளிர் விரல்களைத் தன் இடது கரத்து விரல்களால் பற்றித் தூக்கித் தன் உதட்டில் பொருத்தி எடுத்தவன், வலது கரத்தால் தன் மேனியின் மீது இளைப்பாறியவளின் முதுகை வருடிக் கொடுத்து,
“நான்… நான் நிறையப் பயந்துவிட்டேன் கண்ணம்மா… எப்பவுமே நீ என்னவளாக முடியாதோ என்று ரொம் ரொம்பப் பயந்திட்டேன்…” என்றவன் அவள் இடையை வருடிக் கொடுத்தவாறு,
“எத்தனை சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா? அன்று… என் பிறந்தநாள் அன்று எனக்காகக் காத்திருந்தாய் அல்லவா… அந்த நேரம் உன்னைத் தொட முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன்… இப்போது அந்தக் கவலையும் தீர்ந்தது…” என்றவனை நோக்கித் தலையைத் திருப்பியவள், அவனுடைய மூக்கைத் தன் கரத்தால் பற்றி,
“ம்கூம்… நமது ஊரில் ஒரு பழ மொழி சொல்வார்கள்… மாடு சொன்னால் கேட்கமாட்டார்கள்.. மணி கட்டின மாடு சொன்னால் கேட்பார்களாம்… அந்த மணி கட்டின மாடு எதுவோ…” என்று மிளிர்மிருதை கிண்டலாகக் கேட்க,
“சீ… என் தேவதையைப் போய் மாடோடு ஒப்பிடுகிறாயே…” என்றவன்,
“ஏதோ ஒரு மாடு சொல்லிச்சு… இப்போது அதுவா முக்கியம்?” என்று கேட்டவனிடம்,
“சரி… போய் என்ன நடந்தது… பத்ரிநாத்தை சந்தித்தீர்களா…?” என்று கேட்கச் சற்று நேரம் விழிகளை மூடி அமைதி காத்தவன், பின் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூற, அவன் கூறியதை வியப்புடன் கேட்டவள்,
“நீங்கள் ஒருவரைப் பழிதீர்ப்பதாக நினைத்து என்னை வலிக்கச் செய்தீர்கள்… இன்னொருவன் உங்களைப் பழிதீர்ப்பதாக நினைத்து நம்மை வதைக்கப் பார்த்தான்… அக்ஷன்ஸ் ஆர் பூமராங்…” என்று கூற இவன் முகம் கறுத்துப் போனது.
“ஆமாம்… ஆனால் பழிவாங்கியதிலும் கடவுள் எனக்குச் சொர்க்கத்தைப் பரிசளித்திருக்கிறான்… ஆனால்… அஜய்பட்டேலுக்கு நரகத்தைப் பரிசளித்துவிட்டான்… இதிலிருந்து என்ன தெரிகிறது?” என்று அபயவிதுலன் அவள் தலை முடிக்குள் தன் விரல்களைச் செருகிப் பிடித்து விட்டவாறு கேட்க, அவளோ அவனை நிமிர்ந்து பார்த்து,
“என்ன தெரிகிறது?” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.
“என் பக்கம் நியாயம் இருக்கிறது என்று தெரிகிறது… என் பொண்டாட்டி…” என்றவன், அவளைத் தூக்கித் தனக்கருகாமையில் கிடத்திவிட்டு சற்று முன் முடித்த பயணத்தை மீண்டும் தொடங்க, மீண்டும் ஒரு அழகிய நந்தவனத்தின் நறுமணத்தின் மத்தியில் இருவரும் கூடித் திளைத்தனர். அவளுடைய எதிர்பார்ப்பை அவன் நிவர்த்திச் செய்ய அவனுடைய மெய்க் காயங்களிற்கும், உள் காயங்களுக்கும் தன் உதடுகளை மருந்தாக்கினாள் அந்தத் தேவதை.
மறுநாள் இருவரும் தூக்கம் கலைந்து எழுந்த போது மணி பத்தையும் தாண்டிவிட்டிருந்தது.
அபயவிதுலனுக்கு அப்போதும் எழுந்துகொள்ளும் எண்ணம் இருக்கவில்லை. இவள்தான் பதறிப்போனாள்.
“ஐயோ… அம்மா காத்திருப்பார்கள்…” என்றவள் விழுந்தடித்துப் போர்வையை விலக்காமலே அபயவிதுலனுக்கு அருகாமையிலிருந்த மேசையில் வீற்றிருந்த அவனுடைய கைப்பேசியை அவனைத் தாண்டி எட்டி எடுக்க முயன்றாள்.
அந்தக் கிராதகனோ, அவளை ஒரு இழுவையில் தன் மேல் போட்டுக்கொண்டு இறுக அணைத்தவனாக அவள் கழுத்து வளைவில் தன் முகத்தைப் பதித்து வாசனையை இழுக்க,
“ஸ்டாப் இட் விதுலா…! நேரம் காலம் இல்லாமல் என்ன இது… அம்மா நம்மைக் காணவில்லை என்று பதறப்போகிறார்கள்…” என்று கடிந்தவள், அவனை விட்டு விலகிக் கைப்பேசியை எடுக்க, மெல்லியதாக நகைத்தவன், தன் தலைக்குப் பின்னால் கரங்களைக் கட்டியவாறு தன் மனைவியையே இமைக்காது பார்த்தான். அவளோ இவனை லட்சியம் செய்யாது கைப்பேசியைப் பார்த்தாள்.
காந்திமதி பத்து வாட்டி இவர்களை அழைத்திருந்தார். பதறியவள், கலைந்த கூந்தலை ஒதூக்கியவாறு காந்திமதியை மீண்டும் அழைத்தாள். அடுத்த ரிங் போவதற்குள் கைப்பேசியை உயிர்ப்பித்த காந்திமதி,
“விதுலா…! எங்கேடா போனாய்… எத்தனை முறை உனக்கு அழைத்தேன்… எங்கே இருக்கிறாய்…” என்று கடிய,
“அம்மா… அது வந்து… விதுலன்… ஏதோ…” என்று தடுமாற நல்லவேளை காந்திமதி அதை உணர்ந்துகொள்ளவில்லை.
“எங்கேம்மா இருவரும் போனீர்கள்… மிகவும் பயந்துவிட்டேன் தெரியுமா? உங்கள் இருவருக்கும் ஒன்றுமில்லையல்லவா?” என்று கேட்கத் திரும்பித் தன் கணவனைப் பார்த்து முறைத்தவள்,
“எங்களுக்கு ஒன்றுமில்லை… இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவோம்…” என்று கூறிச் சமாளித்தவள், அவசரமாகப் படுக்கையை விட்டு இறங்கத் தொடங்கினாள். கூடவே விரிப்பை உடலைச் சுற்றியவாறு பிடித்து இறங்க, அதைக் கண்ட அபயவிதுலன் மெல்லியதாகக் குலுங்கி நகைத்தான்.
அதைக் கண்டு கோபம் கொண்டவள்,
“என்ன நகைப்பு வேண்டியிருக்கிறது… கிளம்புங்கள்… அம்மா காத்திருக்கிறார்கள்…” என்றவாறு குளியலறை நோக்கி ஓட, அவள் ஓடிய விதத்தைக் கண்டு மேலும் நகைத்தான் அபயவிதுலன். முதன் முறையாக எல்லாமே அவனுக்குத் தித்தித்தன. எல்லாமே அழகாய்த் தெரிந்தன. யாராவது கொலையாளி இவனைக் கொல்ல வந்தால் கூட மலர்ச்சியுடனேயே இறந்துபோவான் போலும். உதட்டில் புன்னகை மலரக் கைப்பேசியை எடுத்தவன், கனடிய செய்தியைத் திறந்து பார்த்தான். முதல் தலைப்பே, அஜய்பட்டேல் பற்றிய செய்திதான்.
“பிரபல தொழிலதிபர் போதைப்பொருள் கடத்தலின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கூடவே பயங்கரவாத செயலில் ஈடு பட்டதாகத் தெரிய வருகிறது.” இதைக் கண்டதும் அபயவிதுலனின் உதடுகள் சிரிப்பைப் பெரிதாக்கியன. இனி ஜென்மத்திற்கும் அஜய்பட்டேல் வெளியே வரமுடியாது என்பது மட்டும் தெளிவாகத் தெரியக் கைப்பேசியை அணைத்துப் படுக்கையில் எறிந்தவன் தலையைத் திருப்பிக் குளியலறையைப் பார்த்தான்.
அதே நேரம் குளியலறைக்குள் நின்றிருந்த மிளிர்மிருதைத் தன்னைத்தான் அங்கிருந்த கண்ணடியில் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய முகம் சிவந்திருந்தது. உதடுகள் மெல்லியதாக வீங்கி மலர்ந்திருந்தன. கண்கள் மின்னிக்கொண்டிருந்தன… முகமோ ஏதோ ஒன்றைச் சாதித்தது போல ஒளியுடன் மிளிர்ந்தது அவள் பெயரைப் போல.
மீண்டும் விழிகளை மூடி, முன்னிரவு நடந்ததை எண்ணிய போது உடல் முழுவதும் வெட்கத்தில் சூடேறியது. முதன் முறையாகத் தாம்பத்தியம் என்றால் என்ன என்பதை அவளும், முதன் முறையாக அதன் இன்பத்தை அவனும் உணர்ந்த புண்ணிய தருணம் அது.
சத்தியமாக அவளால் இத்தனை மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எண்ணவேயில்லை. தன் வலியை மறந்து அல்லது மறைத்து அபயவிதுலனுடன் கூடுவாள் என்றுதான் எண்ணியிருந்தாள். ஆனால்… அவன் தொட்ட உடனே உடல் குழைந்து இளகி உருகிப் போனதே. அதுவும் அவன் தொடுகை… நினைத்தபோதே அவள் உடல் சிலிர்த்தது. அந்த நினைவில் தன்னை மறந்து முகத்தைக் கரங்களால் மூடியவளுக்கு உலகமே மகிழ்ச்சியின் திளைப்பில் ஒளிர்வது போன்ற உணர்வு.
தாம்பத்திய உறவு இத்தனை இனிமையானதாகவா இருக்கும். இத்தனை அழகானதாகவா இருக்கும் வாசனை நிறைந்த மென்மை நிறைந்த பூப் படுக்கையில் படுத்தால் எப்படியிருக்கும்…? வறண்ட பாலைவனத்தில் நடந்த பின், ஆலமரத்தின் நிழல் கிடைத்தால் எப்படி இருக்கும்… தாகம் தீர்க்க வழியில்லாதிருந்தபோது, பெரும் அருவியே கண்முன்னால் இருந்தால்… அவள் உலகமும் அப்படி அழகாக மாறிவிட்டதே… அதுவும் அவளை அவன் கையாண்ட விதம்… மெல்லினத்தில்தான் தொடங்கினான்… ஆனால் போகப் போக இடையினத்தில் போய் வல்லினத்தில் அல்லவா முடித்தான். அதுவும் பழைய நினைவுகள் எதுவும் அண்டாத விதமாக அல்லவா பார்த்துக் கொண்டான். அதுமட்டுமா எதற்காக அஞ்சி நடுங்கினாளோ, அதனையே வரமாகப் பெறும் வகையில் கற்றுக்கொடுத்துவிட்டான் அபயவிதுலன். அதை எண்ணியபோதே இன்பத்தில் மேனியெங்கும் புல்லரித்தது.
அந்த இனிமையிலும் குறும்பாய் அவன் செய்த சேட்டையையும் எண்ணி உடல் குலுங்க நகைத்தவள் அப்போதுதான் கவனித்தாள். உடலின் காயங்களை.
“ஐயையோ…” என்று பதறியவாறு நெருங்கிக் கண்ணாடியில் பார்த்தாள்… கழுத்தில் அவன் திருவிளையாடல்களால் கண்டியிருந்தது. கழுத்து மட்டுமா? தன்னை முழுதாகப் பார்த்தவளுக்கு மேலும் வெட்கம் அவளைக் கொல்லாமல் கொன்றது. கூடவே மற்றைய காயங்களைப் பற்றி அவளுக்குக் கவலையில்லை. ஆனால் கழுத்தில், தாடையின் ஓரத்தில் இருக்கும் காயத்தை எப்படி மறைக்கப் போகிறாள்… இதைக் கண்டால் என்ன நினைப்பார்கள், அபயவிதுலன் மீது மெல்லிய கோபம் தோன்றினாலும், அந்த நினைவில் அவள் மதிமயங்கிதான் போனாள்.
தன்னைச் சுற்றியிருந்த போர்வையை விலக்கி ஓரமாகப் போட்டுவிட்டுக் குளிப்பதற்காக அவள் உள்ளே இறங்கி ஷவரைத் திறந்தாள்.
படுக்கையிலிருந்த அபயவிதுலனுக்கு உடல் படுக்கையிலிருந்தாலும், உணர்வு குளியலறையிலேயே தஞ்சம் புகுந்திருந்தது.
எத்தனை காலத்து ஏக்கம்… மனம் முழுவதும் நிறைந்திருந்தது. ஒரு மனிதனுக்குப் பணமும், கல்வியும் புகழும் மட்டும்தானா வாழ்க்கை. மனைவியின் பரிபூரண அன்புடன் கூடிய தாம்பத்தியம் எத்தனை அழகானது. நிறைவானது. ஆழ்கடலில் தனிமையில் தவித்தவனுக்கு, இனி தீரவே தீராதோ என்று ஏங்கியிருந்த வேளையில் பொற்கலமே அவனைக் கரங்களில் ஏந்தினால் எப்படியிருக்கும். இதை விட வேறு என்ன வேண்டும்… நிம்மதியுடன், எல்லையில்லா மகிழ்ச்சியுடன் விழிகளை மூடியவனுக்குக் குளியலறையில் தண்ணீர் திறக்கும் சத்தம் கேட்டது.
உதட்டில் குறும்புப் புன்னகை தவழ, துள்ளி எழுந்தவன் குளியலறை நோக்கிச் சென்று அதன் குமிழைத் திறக்க அது திறந்து கொண்டது. மெல்லிய சிரிப்புடன் உள்ளே நுழைந்து கதவை முடிய சில வினாடிகளில், மிளிர்மிருதையின் கிறீச்சிடும் சத்தமும், கூடவே” ஹா ஹா ஹா… நோ… விது… நோ… லீவ் மீ… ஹா ஹா ஹா… ஸ்டாப் யு… இடியட்…” என்கிற பெரும் சிரிப்புச் சத்தமும் வெளி வர, கூடவே இவனுடைய பலமான நகைப்பொலியும் அந்த அறையையே நிறைத்தன. அடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு வந்த போது நேரம் இரண்டு மணியையும் கடந்து விட்டிருந்தது.
(41) சற்று நேரம் அப்படியே இருந்தவன் பின் தன் தலையை நிமிர்த்தினான். இப்போது அவனுடையைக் கண்கள் சிவந்து கலங்கியிருந்தன.…
(39) சித்தார்த் நினைத்த அளவில் அந்தக் கைப்பேசியை உயிர்ப்பிப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. பல வகையில் முயன்றுகொண்டிருந்தவனுக்குப் பெரும்…
(38) ஆராதனா மாமா என்றதும், அனைவரும் திகைத்துப்போய் நின்றனர். ஒருவராலும் அதை நம்பக் கூட முடியவில்லை. இதுவரை நேரமும்…
(37) ஓரளவு பாதுகாப்பான இடத்தைத் தாண்டியதும் நிம்மதி மூச்சு விட்ட அபயவிதுலன், திரும்பி மிளிர்மிருதையின் தோளைத் தொட, அவளோ…
(36) “வாட்…” என்று அதிர்ந்தவளின் முகம் வெளிறிப் போக, அவள் நிலை உணர்ந்தவனாய், அவளுடைய கரத்தைப் பற்றி அழுத்துக்…
(35) அதன் பிறகு அபயவிதுலனுக்கு நேரமே இருக்கவில்லை. அவன் குற்றம் செய்யவில்லை என்றாலும், அதை ஜேர்மனிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டியிருந்தது.…