வாகனத்தில் ஏறிய மீநன்யாவும் எதுவும் பேசவில்லை. நிச்சயமாக அவளுடைய சம்மதமில்லாமல் அந்தக் குழந்தையை அழிக்கமாட்டார்கள் என்பது உறுதி. ஏன் எனில் இது கனடா. இங்கே தாய்க்குத்தான் முழு அதிகாரமும் உண்டு. ஒரு வேளை அவன் வற்புறுத்தினால், நிச்சயமாகக் காவல்துறையின் உதவியை நாடத் தயங்க மாட்டாள். இந்தக் குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்யும் முழு அதிகாரமும் அவளுக்குத்தான் உண்டு. அதை முடிவு செய்யும் உரிமையை யாருக்கும் கொடுக்கப்போவதில்லை. அது இந்தக் குழந்தையின் தந்தையாக இருந்தாலும் சரிதான். அந்த உறுதியுடன் அமர்ந்திருக்க, மருத்துவமனை வந்து சேர்ந்தது.
இறுகிய முகத்துடன் மீநன்னயாவைப் பார்த்தவன்,
“இறங்கு…” என்று விட்டு அவள் இறங்கியதும், இப்போதம் அவளுடைய கரத்தைப் பற்ற வந்தான். இவளோ ஆத்திரத்துடன் தன் கரத்தை இழுக்க, இப்போதும் அவனுடைய இறுகிய பிடியில் அவளுடைய கரம் சிக்கிக் கொண்டது.
பத்து நிமிடக் காத்திருப்பில் மீநன்னயாவின் பெயர் அழைக்கப்பட, இப்போதும் அவளுடைய கரத்தை விடாமலே அழைத்துச் சென்றான் அதகனாகரன். அவனைக் கண்டதும் நட்புடன் புன்னகைத்த வைத்தியர்,
“என்ன… நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பக்கம்…” என்றவர் அவன் கைப்பிடியில் சிக்கியிருந்த அந்தப் பெண்ணைக் கண்டதும்,
“இது…” என்று இழுத்தார்.
“மை வைஃப் மீநன்னயா…” என்று அறிமுகப்படுத்த, தன்னவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் மீநன்னயா.
“மனைவியா… அவளா… எது… பழிவாங்கவென்று ஒரு பத்திரத்தில் கையெழுத்து இட்டுவிட்டால் அவனுடைய மனைவியாகிவிடுவாளா… இதைவிட ஏதாவது அவமானம் அவளுக்கு இருந்துவிடுமா? எரிச்சலுடன் எண்ணும்போதே,
“அட.. எப்போது திருமணம் நடந்தது… சொல்லவேயில்லையே…” என்று குறைபட்ட வைத்தி்யர்,
“சரி சொல்லுங்கள்… என்ன பிரச்சனை…” என்று அவர் முடிக்கவில்லை,
“நான் இந்தக் குழந்தையைக் கலைக்கமாட்டேன்…” என்றாள் மீநன்னயா தெளிவாக அழுத்தமாக. வைத்தியரோ, குழப்பத்துடன் மீநன்னயாவைப் பார்த்துவிட்டு அதகனாகரனைப் பார்த்து,
“வட்… குழந்தையை அழிப்பதா… அதகனாகரன்… என்ன இது?” என்றார் குழப்பமாக. இவனோ திரும்பி மீநன்னயாவை முறைத்துவிட்டு,
“இவள் ஏதோ உளறுகிறாள் டாக்டர்… இப்போதுதான் பரிசோதித்தோம்… கர்ப்பம் என்று வந்திருக்கிறது. அதுதான் உங்களிடம் அழைத்து வந்தேன்… மருத்துவ ரீதியாகவும் இதை உறுதிப்படுத்த வேண்டும் அல்லவா… அந்த சாதனம் எந்தளவு உண்மை என்று தெரியவில்லையே…” என்றதும் மலர்ந்த வைத்தியர்,
“நிச்சயமாக…” என்றுவிட்டு அவளிடம் ஓரிரு கேள்விகளைக் கேட்டார். பின், அவளைத் தனக்கருகே இருந்த இருக்கையில் அமர வைத்துவிட்டு, அவளிடமிருந்து இரண்டு குப்பிகள் நிறைய இரத்தத்தைப் பெற்றுக்கொண்டு, மேசையிலிருந்த மணியை அடிக்கத் தாதி உள்ளே வந்தார். அவரிடம் அந்தக் குப்பியையும், செய்யவேண்டிய பரிசோதனைக்கான தாளையும் நீட்ட, அதை வாங்கிக்கொண்டு தாதி செல்ல, அடுத்து மீநன்னயாவின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தார் வைத்தியர். கூடவே கரங்களைப் பற்றி நாடியைப் பரிசோதித்தார். அதைத் தொடர்ந்து இதர பரிசோதனைகளை முடித்துக்கொண்டு,
“நீங்கள் இருவரும் வெளியே அமர்ந்திருங்கள். இன்னும் அரை மணி நேரத்தில் பரிசோதனைக்கான பதில் வந்துவிடும். வந்ததும் அழைக்கிறேன்…” என்று கூற மறுக்காமல் வெளியே வந்து இருவரும் அமர்ந்து கொண்டனர். இருவரும் ஒருவரின் முகத்தை மற்றவர் பார்க்காமல் உர் என்று அமர்ந்திருந்தனர். சரியாக அரை மணி நேரத்தில் மீண்டும் உள்ளே அழைக்கப்பட்டரன். உள்ளே சென்றதும், அழகாய் புன்னகைத்த வைத்தியர்.
“வாழத்துக்கள்… உங்கள் மனைவி கர்ப்பமாகத்தான் இருக்கிறார்கள்…” என்றதும் அதுவரை இறுகியிருந்த அழுத்தம் வடிந்து செல்வதை அவனே உணர்ந்து கொண்டான். தன்னை மறந்து பிடித்துவைத்திருந்த மூச்சை வெளியிட்டவனுக்கு, உடலிலிருந்த மயிர்க்கால்கள் எழுந்து நின்றுகொண்டன.
ஆனந்தம்… ஆனந்தம்… உடலின் இரத்த அணுக்களிலிருந்து உள்ளுறுப்புகள் வரை ஆனந்தம் தாண்டவம் ஆடியது. கூடவே உடல் இளகியும் போனது.
அவன் தந்தையாகப் போகிறானா.. அவனுக்கென்று ஒரு வாரிசு வரப் போகிறதா… முன்பு திருமணம் குழந்தை என்றாலே வெறுத்து ஒதுக்கியவனுக்கு இப்போது அதுவே வரப்பிரசாதமாக மாறியதன் மாயம் என்ன? அளவுக்கு மீறிய மகிழ்ச்சியில் அவனுடைய கண்கள் கூடக் கலங்கிப்போயின. இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக அந்தக் குழந்தை இருக்குமே. உவகையில் உள்ளம் குதுகலிக்க, வைத்தியரோ, இரத்தப்பரிசோதனையில் வந்திருந்த தாளை மேலோட்டமாலகப் பார்த்தவாறு,
“பயப்படுவது போல் எதுவும் இல்லை அதகனாகரன் ஆனால், சற்று அனிமிக்காக இருக்கிறாள். உடலில் இரும்புச் சத்து போதாது… என்ன.. நன்றாகச் சாப்பிடுவதில்லை போல… உயிர்ச்சத்து மாத்திரைகள் வாங்கிக் கொடுங்கள். ஃபோலிக் அசிட் எழுதித் தருகிறேன். அது குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது. தவறாமல் எடுங்கள்.” என்றவர், திரும்பி மீந்னனயாவைப் பார்த்து,
“மயக்கம் வாந்தி இருக்கிறதாம்மா…” என்றார். இவள் ஆம் என்று தலையை ஆட்ட, அதற்கும் மருந்துகளை எழுதியவர்,
“இதைக் குடியுங்கள்… வாந்தி வருவது குறையும். ஆனால் உங்களால் சமாளிக்க முடியும் என்றால், தேவையற்ற மருந்துகளைத் தவிர்ப்பது நல்லது…” என்று அறிவுறுத்திவிட்டு, அவர்களை அனுப்பிவைக்க, மீநன்யாவுக்குப் பெரும் நிம்மதியானது.
அவள் பயந்தது போலக் குழந்தையை அழிப்பதற்காக அவன் முயலவில்லை. இது குழந்தைதானா என்று நிச்சயம் செய்ய மருத்துவரிடம் அழைத்து வந்திருக்கிறான் என்கிற நிம்மதியுடன் விவாதம் எதுவும் செய்யாமல் அவனோடு நடக்கத் தொடங்க, வாகனத்தின் முன்னால் அவளை அமர்த்திவிட்டு ஓட்டுநர் இருக்கையில் வந்தமர்ந்த அதகனாகரன் வண்டியைக் கிளப்ப, அவனைத் திரும்பிப் பார்த்த மீநன்னயா,
“நன்றி அதகனாகரன்…” என்றாள் யாரோ அன்னியர்க்குச் சொல்வது போல. அதைக் கேட்டதும் இவனுடைய முகம் மீண்டும் இறுகிப்போனது.
“எதற்கு நன்றி…” என்று பற்களைக் கடித்தவாறு கேட்க,
“என் குழந்தையை அழிக்காமல் விட்டதற்கு…” அவள் முடிக்கவில்லை வாகனம் கிறீச் என்கிற சத்தத்தோடு நடுவழியில் நின்றது.
ஏனோ அதகனாகரனுக்கு ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த மிகச் சிரமமாக இருந்தது. இவள் என்ன, அப்போதிலிருந்து இவன் குழந்தையை அழிப்பதே முழு வேலையாக வைத்திருக்கிறான் என்பது போல அல்லவா பேசுகிறாள்… இவனைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டாள்… அவன் குழந்தையை அவனே அழிப்பதா… ஆத்திரத்துடன் திரும்பி அவளைப் பார்த்தவன்,
“இது உன் குழந்தை மட்டுமல்ல நன்னயா… என்னதும்தான்…” என்றான் பற்களைக் கடித்தவாறு. அதைக் கேட்டதும் கடகடவென்று சிரித்தவள்,
“உங்களதா… அதைக் கூற உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. பழிவாங்கவென்று என்னைக் கடத்திச்சென்று மணந்துகொண்டு இந்தக் குழந்தையைக் கொடுத்தவர் நீங்கள்… அப்படிப் பட்டவருக்கு இந்தக் குழந்தையின் மீது உரிமை கோர எந்த உரியும் கிடையாது…” என்று சீற, இப்போது அதகனாகரனின் உதட்டில் ஏளனப் புன்னகை ஒன்று மலர்ந்தது.
“எப்படி… கடத்திச் சென்றேனா… அது எப்படி… உன் கையைக் காலைக் கட்டியா… இல்லையே… திவ்வியமாக உன் காலால்தானே நடந்து வந்தாய். அதுவும் அந்தக் காட்டில் வாகனம் நடுவழியில் நின்றபோது கூட, உன்னை நான் தூக்கி வரவில்லையே… என்னோடு சிரித்துப் பேசியவாறு தானே வந்தாய்? அப்படியானால் அது எப்படிக் கடத்தலில் வகையில் சேரும்…” என்று கேட்க இவளுடைய முகம்தான் கண்டிப்போயிற்று. அவனை ஆத்திரத்துடன் பார்த்து,
“கடத்துவதென்றால் கைகாலைக் கட்டித்தான் எடுத்துச் செல்லவேண்டும் என்றில்லை… ஏமாற்றியும் அழைத்துச் செல்வது கடத்தலின் வகைதான்…” என்றவளைக் கிண்டலுடன் பார்த்தவன்,
“அப்படிப் பார்த்தால், நீ மட்டும் ஒழுங்கோ… உன்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தானே என்னை மணக்கச் சம்மதித்தாய். அப்போது கூட நீ மறுத்திருந்தால், உன்னை மணந்திருக்கமாட்டேன் தெரியுமா. தவிர, இந்தக் குழந்தை கூட உன்னைக் கற்பழித்துக் கொடுத்தது போல அல்லவா பேசுகிறாய்…
அன்று இரவில், நீயும் இணங்கித்தானே என்னை ஏற்றுக்கொண்டாய்… நாம் இருவரும் விரும்பித்தானே இணைந்தோம்… அன்று உன்னைத் தொட்டபோது, சிறு வெறுப்பைக் காட்டியிருந்தாலும் உன்னை நான் தொட்டிருக்கமாட்டேன் தெரியுமா…” என்றவன், வாகனத்தை மீண்டும் உருளவிட்டவாறு,
“இந்தக் குழந்தை காமத்தால் உருவாகவில்லை நன்னயா, அதே வேளை வெறுப்பாலும் உருவாகவில்லை. அந்த நேரம், அந்தக் கணம், அந்த இரவில் நாம் இருவரும் விரும்பி ரசித்து இணைந்ததால் உருவான குழந்தை என்பதால், நம் இருவரின் அன்புக்கும் பாத்திரமானது அது… அதைப் போய் நான் அழிப்பேன் என்று நீ எப்படி நினைத்தாய்… முதலில் என் குழந்தையை நான் எப்படி அழிப்பேன்… சொல்லப்போனால் உன் மீது கோபம் வரக் காரணமே என்னிடமிருந்து இதை நீ மறைத்ததுதான். என் குழந்தை பற்றி அறியும் உரிமை எனக்கில்லையா நன்னயா…” என்று மீண்டும் சற்று இறங்கிக் கேட்க, இப்போது ஆத்திரத்துடன் அவனை முறைத்தாள் மீநன்னயா.
“நிச்சயமாக இல்லை ஆகரன்… இந்தக் குழந்தையைப் பற்றி அறியும் உரிமையோ அதிகாரமோ உங்களுக்கு இல்லை. ஒரு வேளை அந்த ரஞ்சன் என்கிற ஒருவனுக்கு அந்த உரிமை இருக்கலாம்…” என்றதும் அவளைக் கொலை செய்யும் வெறியோடு பார்த்தான் அதகனாரகன்.
“என்ன உளறல் இது…?” என்று சீற,
“இது உளறல் இல்லை… நிஜம்… நான் சந்தித்தது காதலித்தது ரஞ்சன் என்கிற ஒருவனைத்தவிர, அதகனாகரனை இல்லை… இந்தக் குழந்தையும் அந்த ரஞ்சன் என்கிற ஒருத்தனுக்குத்தான் உருவானது… உங்களுக்கல்ல…” என்றவளை எரிச்சலுடன் பார்த்தான் அதகனாகரன்.
உனக்குக் குழந்தை கொடுத்தது அந்த ரஞ்சன் என்கிற பெயரா, இல்லை அந்தப் பெயரிற்குள் ஒளிந்திருந்த நானா… நீ என்ன புராணத்தில் வருகிற பெண்ணா? அனுமாரின் வியர்வைத் துளி பட்டதும் கடலில் நீந்திய தேவகன்னி ஒருத்தி கர்ப்பம்தரித்து மகரத்வஜனைப் பெற்றது போல, ரஞ்சன் என்கிற பெயரைக் கேட்டதும் கர்ப்பம் தரிக்க? அந்த ரஞ்சனுக்குள் ஒளிந்திருந்த என்னால்தான் நீ குழந்தை தரித்தாய்…” என்று கிண்டலுடன் கூறப் பதில் கூற முடியாது பற்களைக் கடித்தாள் மீநன்னயா.
அதற்குப் பிறகு சற்று நேரம் அமைதியாக அந்தப் பயணம் கடக்க, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அதகனாகரன், வாகனத்தைக் கிடைத்த இடத்தில் தரித்து விட்டுப் பெருமூச்சுடன் திரும்பி மீநன்னயாவைப் பார்த்து,
“”ஐ ஆம் டயர்ட் ஆஃப் திஸ் நான்சன்ஸ் நன்னயா… லிசின்… நான் தவறு செய்துவிட்டேன். ஒத்துக்கொள்கிறேன்… அதற்கான மன்னிப்பும் வேண்டியாயிற்று… ஆனால், அதையே நீ பிடித்துக்கொண்டு தொங்கினால் நான் என்ன செய்யட்டும். இதோ பார்… எனக்கு உன்னோடு வாழவேண்டும். உன்னோடு, நம் குழந்தையோடு சாதாரணக் கணவன் மனைவியாக மகிழ்ச்சியாக வாழவேண்டும். சின்னச் சின்னச் சண்டைகள் நிறையச் சிரிப்பு, குதூகலம் என்று உன்னோடு வாழவேண்டும். நிறைய உன்னோடு பகிர்ந்து கொள்ளவேண்டும்… தயவு செய்து நான் செய்ததை மறந்து என்னோடு வாழ முயற்சி செய்ய முடியாதா…” என்று ஏக்கமும் இயலாமையுடனும் கேட்க, வெறுப்புடன் அவனைப் பார்த்தவள்,
“செய்யும் தவறைச் செய்துவிட்டுச் சுலபமாக மன்னிப்புக் கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா மிஸ்டர் அதகனாகரன்… இந்த ஜென்மத்தில் நீங்கள் செய்ததை நான் மன்னிக்கவும் மாட்டேன் மறக்கவும் மாட்டேன்…” என்று உறுதியாகக் கூறியவளைப் பொறுமையிழந்து பார்த்தான் அதகனாகரன்.
“காட்… நாட் எகெய்ன்…” என்றவன், இப்போது நேராக அவளைப் பார்த்து,
“சரி… சொல்… நான் என்ன செய்தால் என்னை மன்னிப்பாய்… மகிழ்ச்சியாக இருப்பாய்” என்றான் இறுதியாக. இப்போது சற்று நேரம் வெளியே வெறித்தவள், நெஞ்சம் கனக்க, அவனைத் திரும்பிப் பார்த்து,
“உங்களை மன்னிக்க மாட்டேன்… ஆனால் நான் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றால், ஒரே வழிதான் இருக்கிறது…. அது பிரிவு… உங்களிடமிருந்து விவாகரத்து…” என்று அவள் முடிக்கவில்லை, அவனோ,
“ஓவர் மை டெட் பாடி…” என்றான் ஆத்திரத்துடன். அதைக் கேட்டு மெல்லியதாகச் சிரித்தவள்,
“அப்படித்தான் எனக்கு உங்களிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்றால், அது கூட எனக்குச் சம்மதம்தான்… சொல்லப்போனால் மகிழ்ச்சிதான்… ஏன் என்றால், உங்களைப் பார்க்கும் கொடுமையிலிருந்து எனக்கு நிரந்தர விடுதலை பாருங்கள்… அது மட்டுமில்லை, என் அம்மா கூனிக் குறுகி நின்றது போல நானும் நிற்கவேண்டியதில்லை… என் குழந்தையின் தந்தை இறந்துவிட்டார் என்று சுலபமாகவே சொல்லிக் கடந்துவிடுவேன்… இரண்டு வருடங்களோ, மூன்று வருடங்களோ, எனக்கான புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன்…” என்று அவள் அலட்சியமாகக் கூற, ஒரு கணம் ஆடிப்போனான் அதகனாகரன்.
அந்தளவுக்கா அவன் மீது வெறுப்பை வைத்திருக்கிறாள். அவன் மரணித்தாலும், விடுதலை கிடைக்கும் என்கிறாளே… இதனையும் மீறி அவளிடம் எதை எதிர்பார்க்க முடியும். அதுவும் எத்தனை சுலபமாக அவன் முன்பே, இன்னொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வேன் என்பாள்… நெஞ்சம் வெறுத்துப் போனது அவனுக்கு.
அதற்கு மேல் அவனால் எதையும் பேச முடியவில்லை. பெரும் வலியுடன் அவளை ஏறிட்டவன்,
“ஓ… அதுதான் உனக்கு வேண்டுமா…” என்றவன் அதற்கு மேல் அவளோடு பேசவில்லை. அவளை வீட்டில் இறக்கிவிட்டுத் தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டிருந்தான் அதகனாகரன்.
இவளும் சென்ற அவனுடைய வண்டியையே வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
மன்னிப்பாம் மன்னிப்பு, ஒரு பெண்ணை ஏமாற்றி அவள் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கிவிட்டு, இப்போது வந்து மன்னித்து ஏற்றுக்கொள் என்றால்… அவள் என்ன ரோபோவா… விசையை அழுத்திய உடன் சொன்னதைச் செய்ய. இப்போது கூட, அவன் செய்த காரியத்தை ஜீரணிக்கக் கூட முடியவில்லையே. அப்படியிருக்கையில் இவனோடு எப்படிச் சேர்ந்து வாழ்வது. இயலும் காரியமா இது. இல்லை… முடியாது… நிச்சயமாக இவனோடு சேர்ந்து வாழவே முடியாது. என்ன குழந்தையைச் சாக்கிட்டு மீண்டும் மீண்டும் அவள் கண்முன்னால் வருவான். ஆனால் குழந்தையின் எதிர்காலத்திற்காகக் கொஞ்சமாவது யோசிக்கவேண்டும். பாதகமில்லை, வாரத்தில் ஒரு நாளோ, இரண்டு நாட்களோ வந்து பார்த்துத் தொலையட்டும். ஆனால் நிச்சயமாக அவனோடு சேந்துமட்டும் வாழப்போவதில்லை, என்று உறுதியாக முடிவெடுத்தவளுக்கு உடல் வேறு சொன்னது. ஆனாலும் நான் என்னும் நியாயமான அகங்காரம் அவளுடைய உணர்ச்சிகளை அடக்கி ஆழ அலட்சியமாகவே வீட்டிற்குள் நுழைந்தாள் மீநன்னயா. அதே நேரம் அதகனாகரனின் வாகனம் படு பயங்கரமாக வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
இதோ இன்னும் இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. அன்றைய அவளுடைய பேச்சுக்குப் பின்னால் அதகனாரகன் அவளைத் தேடி வரவேயில்லை. முதலில் அதை அலட்சியமாகத்தான் நினைத்தாள் மீநன்னயா. ஆனால், ஜெயராமன் விவாகரத்துப் பத்திரத்தைத் தயாரித்து எடுத்துவந்து அவளிடம் நீட்டும் வரை.
அன்று அவனிடம், நான் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றால், என்னை விவாகரத்துச் செய் என்று சொன்னாள்தான்… ஆனால் அதனை நிஜமாக்குவது போல ஜெயராமன் பத்திரத்தை எடுத்து வர ஆடித்தான் போனாள்.
கரங்கள் நடுங்க ஜெயராமனை ஏறிட, அவரோ தன் கரத்திலிருந்த பேனாவை அவளிடம் நீட்டி,
“நீ கையெழுத்துப் போடுமா… முதலில் அவனிடமிருந்து நிரந்தரமாகப் பிரிந்ததும், அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கலாம்…” என்றபோது மாதவி கூடத் துடித்துத்தான் போனார்.
பதட்டத்தோடு ஜெயராமனிடம் எதையோ சொல்ல வர, தன் மனைவியை ஒரு பார்வை பார்த்தாரன்றி, வேறு எதுவுமே அவர் பேசவில்லை.
மீநன்னயாதான் தவித்துப் போனாள். மறுக்கவும் முடியாமல், விவாகரத்தை ஏற்கவும் முடியாமல் கலங்கி நிற்க,
“என்னம்மா யோசிக்கிறாய்… கையெழுத்துப் போடு… உன்னை ஏமாற்றியவன் உனக்கு வேண்டாம்… இன்றோடு முழுதாகவே அவனைத் தலை முழுகலாம்…” என்று கூற, மீநன்னயாவிற்கு நெஞ்சே வெடித்துவிடும் போலத் தோன்றியது.
ஆனாலும் சிரமப்பட்டுத் தன் வலியை மறைத்தவளாகத் தந்தையைப் பார்த்துப் புன்னகைத்தவள், தயக்கத்துடன் அவர் நீட்டிய பத்திரத்தைப் பார்த்தாள்.
விகாரத்துச் செய்தால் மட்டும் அத்தனையும் சரியாகிவிடுமா? அவன் அவளை ஏமாற்றியது இல்லையென்றாகிவிடுமா? அவள் வலி காணாமல் போய்விடுமா… இப்போதிருக்கும் வலியை விட இன்னும் அதிகமாக அல்லவா இருக்கும்…” என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் மலைத்துப் போய் நிற்க.
“என்னம்மா யோசிக்கிறாய்… கையெழுத்தைப் போடு… சட்டத்தரணி மூலம் அவனுக்கு அனுப்பி வைக்கிறேன்…” என்றதும், கலங்கிய விழிகளுடன் அந்தப் பத்திரத்தைப் பார்த்தாள் மீநன்னயா. பின் பெரும் வலியுடன் தந்தையைப் பார்த்து,
“அ… அப்பா… நான்… நான் எப்படி…” என்று கலங்க,
“ஏன்மா… அவனை விவாரத்துச் செய்யப் பிடிக்கவில்லையா… ஒரு வேளை அவனை இன்னும் விரும்புகிறாயா… அவனோடு சேர்ந்து வாழும் எண்ணம் உனக்கு இருக்கிறதா?” என்று ஜெயராமன் கருணையுடன் கேட்க விழிகளை மூடித் தந்தை கேட்டதை ஜீரணிக்க முயன்றாள்.
அவன் செய்த காரியத்தால், அவனோடு சேர்ந்து வாழ முடியுமா என்றால் இல்லைதான். அப்படியானால் விவாகரத்துச் செய்யவேண்டியததானே… ஆனால் அதுவும் முடியவில்லையே… அதற்கான காரணத்தைக் கேட்டால் பதில் தெரியவில்லைதான்… ஆனால் மொத்தமாக அவனைத் தலைமுழுக அவளுக்கு ஏனோ தைரியம் பிறக்கவில்லை.?” கலக்கத்துடன் நின்றிருக்க, மாதவியோ,
“வேண்டாம் மீனா… தயவு செய்து கையெழுத்திடாதே… என் தம்பி உன்னை விரும்புகிறான்மா… உயிருக்கும் மேலாக… நீ கையெழுத்திட்டால், அதை அவனால் தாங்க முடியாது… துடித்துப் போவான்… ஒத்துக்கொள்கிறேன்… என் தம்பி செய்தது மிகப் பெரும் தவறுதான்… அந்தத் தவறுக்கான தண்டனை இது இல்லைமா… இது அவனுக்கு மரணதண்டனை கொடுப்பது போல… தப்பு செய்தவனுக்குத் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பதுதானே முறை… தயவு செய்து கெயெழுத்துப் போடாதே மீனா… உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்…” என்று அவர் முடிக்கவில்லை, சீற்றத்துடன் தன் மனைவியைப் பார்த்தார் ஜெயராமன்.
“போதும் நிறுத்து உன் பேச்சை… உன்னால்… உன் அவசரப் புத்தியால்தான் இத்தனையும்… ஒன்றும் தெரியாத ஒரு பெண்ணை ஏமாற்றி, அவள் அறியாமையைப் பயன்படுத்தி அவளை மணந்து, அவளுக்கு ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டு, இறுதியில் மன்னித்துவிடு என்றால், ஆயிற்றா… அவள் பட்ட வலிக்கும் வேதனைக்கும் என்ன பதில்…?” என்று கடுமையாகக் கேட்கக் கலக்கத்துடன் தன் கணவனைப் பார்த்த மாதவி,
“ஒத்துக்கொள்கிறேன் ஜெய்… எங்கள் மீதுதான் தவறு… என் தம்பி என் வாழ்க்கையைக் காப்பாற்றப் போய்தானே இப்படிச் செய்தான்… அவன் தனக்காகச் செய்யவில்லையே” என்று துடிக்க, ஏளனமாகத் தன் மனைவியைப் பார்த்துச் சிரித்த ஜெயராம்,
“தன் சகோதரியின் வாழ்க்கையைக் காப்பாற்றப் போனவனுக்கு, இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்குகிறோம் என்று தோன்றாமல் போயிற்றே… இவளிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், இவளாகவே விலகிப்போயிருப்பாள் தெரியுமா… அதை விட்டுவிட்டு… சே… இத்தனை ஈனப்புத்தியோடு செய்திருக்கவேண்டாம்..” என்று தன் வெறுப்பைக் காட்ட, அழுகையுடன் தன் கணவரைப் பார்த்த மாதவி,
“ஜெய்… இவள் நல்லவள் என்று எங்களுக்கு எப்படித் தெரியும். நாங்கள் சூடு கண்டவர்கள் ஜெய்… எது பொய், எது மெய் என்பதை அறிய கூட நம்மாள் முடியவில்லையே…” என்றவர் இரண்டு கரங்களையும் கூப்பி,
“தயவு செய்து கெஞ்சிக் கேட்கிறேன்… என்னையும் என் தம்பியையும் மன்னித்து விடுங்கள்… ப்ளீஸ்… நன்னயா.. தயவு செய்து அவனை மன்னித்துவிடம்மா… இந்த விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்திடாதே… அவன் நொறுங்கிப் போவான்…” என்று துடிக்க ஜெயராமனோ எரிச்சலோடு தன் மனைவியைப் பார்த்து,
“இப்போது என்னதான் செய்யவேண்டும் என்று நினைக்கிறாய் மாதவி… இருவருமே சேர்ந்து வாழமாட்டார்கள் என்கிற நிலையில் வேறு என்னதான் செய்யவேண்டும் என்கிறாய்… ஒருவரின் நினைப்பில் மற்றவர்கள் காலம் முழுதும் வாழவேண்டும் என்கிறாயா… இது என்ன நியாயம்… அவர் அவர் தமக்கென்று புதிய வாழ்க்கை அமைக்கவேண்டாமா… உன் தம்பியை விடு… ஆரம்பம் தொட்டுத் திருமணத்தில் நாட்டமில்லாது இருந்தவன், இவள் என்ன தவறு செய்தாள்? இவளுக்கென்று ஒரு புதிய வாழ்க்கை வேண்டாமா… ஏற்கனவே அவளுக்கு நீங்கள் இருவரும் செய்த நன்மை போதும்… இனியாவது அவளை மகிழ்ச்சியாக இருக்க விடுங்கள்…” என்றவர் திரும்பி மீநன்னயாவைப் பார்த்து,
“நீ கையெழுத்துப் போடுமா…” என்றார் அழுத்தமாக. மீநன்னயாவோ குழப்பத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நிற்க, தன் மகளை நெருங்கி, அவளுடைய கரங்களைப் பற்றி அழுத்திக் கொடுத்தவர்,
“நான் உன்னை வற்புறுத்தவில்லை மீனா… விவாகரத்துச் செய்வதும், செய்யாது இருப்பதும் உன் விருப்பம்… என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்றுதான்… அவனோடு வாழ உனக்கு விருப்பமா…” என்றார் அழுத்தமாக. கலக்கத்துடன் மாதவியை ஏறிட்டவள், பின் தந்தையைப் பார்த்து மறுப்பாகத் தலையை அசைக்க,
“அப்படியானால் யோசிக்காமல் இதில் கையெழுத்துப் போடு…” என்றார். முதலில் சற்றுத் தடுமாறியவள், இறுதியாக அவனோடு வாழ முடியாது என்கிற பிடிவாதம் ஜெயிக்க, நடுங்கும் கரங்களால் தன் பெயரைக் கையெழுத்திட்டுக் கொடுத்தாள் மீநன்யா.
மாதவி அதைக் கண்டு துடித்துப் போனார். தன் தம்பியின் மனத்தை அறிந்துகொண்ட நல்ல சகோதரியாயிற்றே அவர். நிச்சயமாக அதகனாகரனானல் இதைத் தாங்க முடியாது என்று அவருக்குத் தெரிந்தது. ஆனாலும் அவரால் ஒரு வார்த்தை கூடப் பேசமுடியவில்லை என்பதுதான் வேதனையே.
(28) மறு நாள் அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் திகழ்வஞ்சி. பின்னே உறக்கம் வராமல் எத்தனை நேரமாகத்தான் மொட்டு மொட்டென்று படுத்துக்…
(47) அதகானாகரனுக்கு விவாகரத்துப் பத்திரம் அனுப்பி வைத்த பின், அது தண்ணீரில் போட்ட கல்லாக எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் அப்படியே…
(26) நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது.…
(25) அன்றயை இரவு திகழ்வஞ்சிக்குத் தூங்கா இரவாகிப் போனது. எத்தனை சுலபமாக என்னை மணந்துகொள் என்று சொல்லிவிட்டான். அவளால் அவனை…
(43) அதகனாகரன், புகழேந்தியையும், பூங்கோதையையும், அவர்களின் பாடசாலையில் விட்டுவிட்டு மீநன்னயாவை அழைத்துக்கொண்டு அவள் விரும்பிய கடைக்கு வாகனத்தைத் திருப்ப, வாகனத்தில்…
(23) அதிர்ச்சியிலும் ஆவேசத்திலும் எழுந்து நின்று தன் கணவனை ஏறிட்ட ஈஷ்வரிக்குக் கோபத்தில் உடல் நடுங்கியது. ஆனால் விஜயராகவனுக்கு அது…
View Comments
paavam meena
ரொம்ப பாவம்