Categories: Ongoing Novel

புயலோடு மோதும் பூவை – 12

(12)

 

அவளை இழுத்துக் கொண்டு வந்தவன்,கொழுந்து விட்டெரியும் நெருப்புக்கு முன்பாக வந்ததும்,

“உட்கார்…” என்றான் அதிகாரமாக. உடனே மறுப்புச் சொல்லாமல், சட்டென்று அமர்ந்துகொண்டாள் இதங்கனை. அவனும் அவளுக்குப் பக்கத்தில் சற்றுத் தள்ளிக் கால்களை நீட்டியவாறு அமர்ந்து கொண்டான்.

தக தகவென்று எரிந்த நெருப்பு, குளிரை ஓரளவு போக்கினாலும் முற்று முழுதாகப் போக்கத் தவற, கால்களை மடித்துக் கரங்களால் முழங்கால்களை அணைத்தவாறு அந்த நெருப்பையே வெறிக்கத் தொடங்கினாள்.

வானைத் தொட முயல்வது போல அண்ணாந்து எரிந்துகொண்டிருந்த நெருப்பின் ஒளியில் கால்களை மடித்தவாறு அமர்ந்திருந்த இதங்கனையைத் திரும்பிப் பார்த்த அரவனுக்குத் தன் விழிகளை அத்தனை சுலபத்தில் பிரித்த எடுக்க முடிந்திருக்கவில்லை. வானத்திலிருந்து ரம்பை தவறிக் கீழே வந்துவிட்டாளா என்ன?

அதுவும் அந்த ஒளியில் பட்டும் படாமலும் தெரிந்த பெண்மையின் அழகில் மொத்தமாய் தொலைந்தான் என்றுதான் சொல்லவேண்டும். ஒருத்தி அழகாக இருக்கலாம்… ஆனால் இத்தனை அழகாக இருக்கக் கூடாது. செயற்கை அழகிற்கும் இயற்கை அழகிற்கும்தான் எத்தனை வேறுபாடு. எந்த உணவுக் கட்டுப்பாடும் இல்லாமல், இயற்கையாய் கொண்ட உடலுடன் பெண்களைப் பார்ப்பது இப்போது அரிதான ஒன்றாயிற்றே.

அந்த நிலையிலும் அந்தமென் உடலைத் தீண்டும் வேகத்தை, அவனுடைய உட்சுரப்பிகள் அமோகமாக ஏற்படுத்த, அவன் மெல்ல மெல்லப் போதைக்குள் இழுபட்டுச் செல்லத் தொடங்கிய அந்த நேரத்தில், தரையில் கரங்களைப் பதித்தவாறு தாராளமாக இதங்கனையை விழிகளால் பருகத் தொடங்கினான் அரவன்.

அதுவரை நெருப்பையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த இதங்கனைக்கு திடீர் என்று இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. உள்ளுணர்வு எதையோ சொல்ல, தன் தலையைச் சற்றுத் திருப்பிப் பார்த்தாள். அங்கே இமைக்காது தன்னையே பார்த்துக்கொண்டிருந்த அந்த அரவனைக் கண்டதும், ஆத்திரம் நெருப்பை விடப் பயங்கரமாகக் கொழுந்துவிட்டெரிய,

“வை ஆர் யு லுக்கிங் அட் மி… நீ பெண்களைப் பார்த்ததில்லையா…” என்றாள் சுள்ளென்று. அவனோ, உதடுகளைப் பிதுக்கி,

“பார்த்திருக்கிறேன்… நிறைய… ஆனால்…” என்றவன், அவளை ரசனையுடன் ஏறிட்டு,

“உன்னைப் போல, இப்படிக் கொழு மொழு என்று ஒருத்தியைப் பார்த்ததில்லை…” என்றான் பேச்சில் சற்றுக் காமம் சிந்த.

அதைக் கேட்டதும், அவளுடைய ஆத்திரத்திற்கு எண்ணெய் விட்டது போலானது. கூடவே நூறாவது முறையாக அந்த ஆடையை அணிந்த தன் முட்டாள் தனத்தைத் திட்டியவாறு, அவசரமாக அப்பட்டமாக ஆடைக்குள்ளாகத் தெரிந்த தொடையை மறைக்க முயன்று தோற்றுப் போகக் கண்கலங்கிப் போனது இதங்கனைக்கு.

இயலாமை எத்தனை பயங்கரமான தோல்வி. என்னதான் முயன்றும் அவளால் அதை விரட்ட முடியவில்லையே. அவனுக்கு முன்னால் நிமிர்ந்து நிற்க முடியவில்லையே. கூனிக்குறுக்கியல்லவா அமரவேண்டியிருக்கிறது. அது வேறு தோல்வியுடனான கட்டுக்கடங்காத ஆத்திரத்தைக் கொடுக்கத் தலையை வேகமாக மறுபக்கம் திருப்பினாள்.

 

திருப்பியவளின் விழிகள் மறு கணம் மகிழ்ச்சியில் மின்னின. நம்பாதவளாகத் திரும்பிப் பார்த்தாள். அங்கே அந்த அரவனின் பான்ட் பக்கட்டை  விட்டு எட்டி நின்றிருந்தது கைப்பேசி. இதைக் கொண்டு அவளால் தப்ப முடியுமா? மகிந்தனுக்கு அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரிந்தால் சுலபமாகக் கண்டுபிடித்துவிட மாட்டானா. அதுவும் இந்த கைப்பேசியின் இலக்கத்தை வைத்து, இவர்கள் இருக்கும் இடத்தை அவன் அறிந்துகொள்வானே. கடவுளே கண்முன்னால் வாய்ப்பு இருக்கிறது. அதை எப்படிப் பயன்படுத்துவது…? மங்கிப்போன புத்தியை உசுப்பிவிட முயன்றாள்.

‘யோசி இதங்கனை… யோசி… யோசி…” யோசனையோடு திரும்பிப் பார்த்தாள். அந்த இராட்சதன் இன்னும் அவளைத்தான் வெறித்துக்கொண்டிருந்தான். முதலில் இவன் கவனிக்காதவாறு எடுக்கவேண்டும் முடியுமா இவளால்? ஏன் முடியாது… முயன்றால் முடியாதது என்று எதுவுமில்லையே.

அவனுடைய பலவீனம் பெண்கள்… அதையே ஏன் ஒரு ஆயுதமாக அவள் எடுக்கக் கூடாது? அவளுக்கு வேண்டியது அந்தக் கைப்பேசி… அதை எடுத்துக் காவல்துறைக்கு ஒரு அழைப்பு… அது போதும்.

உடனே முடிவு செய்தவளாக, அதுவரை தன் உடலை மறைக்க முயன்ற முயற்சியைக் கைவிட்டவாறு கால்களை நீட்டி அமர்ந்தாள் இதங்கனை. கரங்களைப் பின்னால் எடுத்துச் சென்று தரையில் பதித்து அதன் பலத்தில் சாய்வாக அமர்ந்தவாறு அவனைக் கவர்ச்சியாகப் பார்த்தாள். இல்லை பார்க்க முயன்றாள். அவனுடைய விழிகளில் ஒரு விநாடி மெல்லிய யோசனை எழுந்ததோ. அடுத்த கணம் அதில் அதீத காமம் வழிய, அவளை வெறிக்கத் தொடங்கினான். உள்ளே எழுந்த கூச்சத்தை உதறித் தள்ளி விட்டு,

“நீ திருமணம் முடித்து விட்டாயா?” என்றாள் அவனைப் பேச்சுக்கு இழுக்கும் நோக்கத்தோடு. அவனோ விழிகளை விலக்காமலே,

“இல்லை…” என்றான்.

“ஏன்…”

“பிடிக்கவில்லை…” என்றான்.

“பிடிக்கவில்லையா… ஏன் பிடிக்கவில்லை…” என்று கேட்க இப்போது அவளுடைய முகத்தை உற்றுப் பார்த்தான் அந்த அரவன். அந்தப் பார்வையில் என்னவோ செய்ய, சற்றுத் தடுமாளியவள், இப்போது இரு கால்களையும் மடித்து ஒரு பக்கமாகப் போட்டு ஒற்றைக் கரத்தைத் தரையில் ஊன்றி மறு கரத்தை ஊன்றிய கையின் மீது வைத்து அவன் பக்கமாகச் சரிந்து,

“கேட்டேனே ஏன் பிடிக்கவில்லை….” என்றாள் கிறக்கமாக. இப்போது தலையைச் சரித்து அவளைப் பார்த்தவன்,

“என்னுடைய தொழில் திருமணத்திற்கு ஏற்றது அல்ல…” என்றான்.

“ஓ… எது இந்தக் கொல்வது, கடத்துவது இவைகளா… இதில்தான் நிறைய பெண்களின் சவகாசம் கிடைக்குமே” என்று கேட்டவளின் குரலில் என்னதான் முயன்றும் வெளிப்பட்ட எரிச்சலை அவளால் மறைக்க முடியவில்லை. அவனோ அவளை ஒரு மாதிரிப் பார்த்து விட்டு,

“யார் உனக்குச் சொன்னது…?” என்றான் புன்னகையை மறைக்க முயன்றவாறு.

“யார் சொல்லவேண்டும், அதைத்தானே திரைப்படங்களிலும் கதைகளிலும் திகட்டத் திகட்டக் காட்டுகிறார்கள்…” என்று இவள் கூற, இப்போது அழகாகச் சிரித்தான் அரவன்.

“நீயெல்லாம் திரைப்படம் கூறுவதை நம்பி வாழும் கூட்டமா…?” என்றான் கிண்டலாக.

“வாழ்க்கையில் நடப்பதைத்தானே திரைப்படத்திலும் காட்டுகிறார்கள்…!  க்ளப்… அதில் கடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள், ஆடையில்லாத நடன மங்கையர், அதில் கவற்சியாய் ஒரு பெண்… அடுத்தது படுக்கையறைக் காட்சிகள்… இது எதுவுமே உன் வாழ்க்கையில் இல்லையா?” என்று வியப்பது போலக் கேட்டாலும் கிண்டல் அதீதமாகவே அவள் குரலில் தெரிய, இவனோ மறுப்பாகத் தலையை அசைத்து,

“மற்றவர்களுக்கு எப்படியோ. எனக்கு அப்படியல்ல… அதற்கு நேரமும் இல்லை…” என்று அவன் தெளிவாய்க் கூற, இவளோ வியந்தவள் போல அவனைப் பார்த்தாள்.

“ஒரு பெண் தோழி கூடவா உனக்கில்லை…?”

“இல்லை…”

“அதுவும் இல்லையா…” என்றவள் இப்போது அவனுடைய தொடையில் தன் கரத்தைப் பதித்து,

“ஏன் இல்லை…” என்றாள் குரலில் குழைவைத் தேக்கி. அதை ரசித்தவாறு பார்த்தவன்,

“பெண் தோழிகள் தொல்லை…” என்றான்.

இவளுக்கோ உள்ளே பயங்கரமாக எரிந்தது. இவன் கிடந்த கிடப்புக்குப் பெண் தோழிதான் இல்லாத குறை… ஆனாலும் அடக்கியவளாக, அவன் பக்கமாகக் குனிந்து, இறுகிய அவனுடைய கன்னனைச் சுட்டுவிரலால் வருடிக் கொடுத்தவாறு விழிகளில் கவற்சியைத் தேக்கி. அவனுடைய உதடுகளை உற்றுப் பார்த்து,

“அப்படியானால்… உன் வாழ்க்கையில் சலிப்பு ஏற்படாதா…” என்றவாறு அவன் அறியாமல் தன் கரத்தை அவனுடைய பான்ட் பாக்கட் வரை எடுத்துச் சென்றவாறு, அவனுடைய காதுக்கு நேராகத் தன் உதடுகளைக் கொண்டு வந்து,  எதையோ கேட்கத் தொடங்கிய மறு கணம், தரையில் குப்புறக் கிடந்தாள் இதங்கனை.

அவளைச் சுற்றி அந்த அரவனின் இடக் கரம் தரையில் பதிந்திருக்க, வலது கரமோ, அவனுடைய பான்ட் பாக்கட்டை நோக்கி நகர்ந்த கரத்தைப் பற்றிப் பலமாகப் பின்புறமாக மடித்துத் திருகி, அவளுடைய முதுகோடு அழுத்திக் கொண்டது.
எப்படிப் பற்றினான், எப்படிச் சரிந்தான், எப்படி அவளைக் குப்புற விழுத்தினான், எப்படி அவளுடைய முதுகை அணைத்தாற்போல விழுந்தான், என்று இதங்கனைக்கு சுத்தமாகப் புரியவில்லை. அவள் கைப்பேசியைத் தொட்ட மறு கணம், மின்னல் விரைவுடன் அந்தக் கரத்தைப் பற்றிப் பின்னால் மடித்து, அவளைத் தரையில் தள்ளி, மறுகரத்தால் அவளைத் தனக்குள் சிறைப்படுத்திக்கொண்டான் அவன்.

இதங்கனைக்கு அவன் பிடித்த விதத்தில் கரம் தனியாகக் கழன்று வந்துவிடுமோ என்று தோன்ற, திக்கித் திணறி மறுகரத்தால் தரையில் அடித்து,

“ஆ… ஆ… வலிக்கிறது… என்னை விடு…” என்று திமிற, இவனோ அவள் திமிறுவதை ரசித்தவாறு,

“என்ன… இப்படிப் பேசி என்னை மயக்கலாம் என்று நினைத்தாயா இதங்கனை…” என்று  கிசுகிசுப்பாய் கேட்டவன், கிட்டத்தட்ட இடைவரை வெறுமையாக இருந்த வெண்ணிற முதுகைக் கண்டு மெல்லியதாக நகைத்தவாறு, தரையில் பதித்திருநத கரத்தை விலக்கிச் சுட்டுவிரலால் வெற்று முதுகில் மென்மையாகக் கோடு இழுக்கப் பதறிப்போனாள் இதங்கனை. துடித்துப் பதைத்து விலக முயல, அவனோ, அவளுடைய முதுகோடு தன் உடலை அழுத்தியவாறு சரிந்தவன், அவளுடைய காதுகளுக்குள் தன் உதடுகளை எடுத்துச் சென்று,

“என்னை ஏமாற்றுவது அத்தனை சுலபம் என்று நினைத்தாயா…?” என்றான் சில்லிடும் குரலில். பின், “நீ என்னை ஏமாற்ற முயன்றதற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்… ம்…” என்று அவளையே கேட்டவன், அவளுடைய காதுக்குள்,

“இப்போது காதில் ஒன்று கேட்டாயே… அதற்கான பதிலைச் சொல்லவா, இல்லை செய்து காட்டவா…” என்றான் உதடுகள் அவள் காதுகளோடு உரச. இவளோ வலியிலும் அவஸ்தையிலும் பதட்டத்திலும் திணறியவாறு,

“ஓவர் மை டெட் பாடி…” என்றாள் சீற்றமாக.

“ரியலி… ஆனால் நீ ஆவலாகக் கேட்ட கேள்விக்கு நான் பதில் கூறவில்லை என்றால் எப்படி?” என்றவன், பின்,

“தியரியை விடப் ப்ராக்டிக்கல்தான் தெளிவாகப் புரியும் இதங்கனை… செயல்முறையில் செய்து காட்டவா…?” என்றவாறு அவளுடைய வெற்றுத் தோளில் தன் அழுத்தமான உதடுகளைப் பதிக்கத் துடித்துப் போனாள் இதங்கனை.

தாய் சொல்வதுதான், சேலை முள்ளில் பட்டாலும், முள் சேலையில் பட்டாலும் சேதாரம் சேலைக்குத்தான்… அதனால் முள்ளைக் கண்டால் தூர விலகிச் செல்வதுதான் புத்திசாலித்தனம்… அடிக்கடி சொல்லும் அந்த வசனத்தை இவள் அலட்சியமாகத்தான் கேட்டிருக்கிறாள். அதை ஒரு போதும் கருத்தில் கொண்டதில்லை. ஆனால் இப்போது அதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தபோது, அந்த முள்ளிலிருந்து எப்படிச் சேலையைச் சேதமடையாது எடுப்பது என்றுதான் இவளுக்குத் தெரியவில்லை.

தட்டுத் தடுமாற, அடுத்த கணம், இதங்கனை புரட்டி எடுக்கப்பட்டாள். இப்போது அவனைப் பார்த்து மல்லாக்காகக் கிடந்தாள் இதங்கனை. உடனே திமிற முயன்றவளின் கரங்கள் இரண்டையும் பற்றித் தலைக்கு மேலாகப் பிடித்தவன், துடித்த அவளை ரசனையோடு பார்த்தான்.

விழிகளாலேயே அவளைக் கற்பழிக்க முயன்றான். அந்த விழிகள் சொன்ன சேதியில், இதயம் சில்லிட, இப்போது அவனுடைய உதடுகள் அவளை நோக்கிப் பயணிக்கத் தொடங்க, அதற்கு மேல் இதங்கனையால் அவன் அருகாமையைத் தாள முடியவில்லை. பற்களைக் கடித்தவாறு விழிகளை அழுந்த மூடியவளின் தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்து செல்ல, .

“ப்ளீஸ் ஐ ஆம் சாரி…. ஐ பெக் யு… லெட் மீ கோ…” என்றாள் கெஞ்சலாய். அத்தனை சுலபத்தில்  விட்டுவிட அவன் மனுஷனா… மிருகமாயிற்றே. இப்போது அவனுடைய உதடுகள் அவளுடைய கழுத்தை நோக்கி நகரத் தொடங்க,

“நோ… தயவு செய்து என்னை விடு… நான் சத்தியம் செய்கிறேன்…. இனி இப்படிச் செய்ய மாட்டேன்…” என்று திமிற, என்ன நினைத்தானோ, இப்போது மெதுவாக அவளுடைய கரங்களை விடுவித்தான் அரவன். அடுத்த கணம், அவனைத் தள்ளி விட்டு, பதைத்துத் துடித்து, அவனிடமிருந்து விலகி நான்கடி நகர்ந்து சென்று அமர்ந்தவளுக்கு வெளிப்படையாகவே உடல் நடுங்குவது தெரிந்தது. போதாததற்கு, தோளிலிருந்த நூல் போன்ற கை கழன்று விட, அவசரமாக அதை இழுத்து விட்டவளுக்கு இன்னும் தான் அவனிடமிருந்து தப்பியதை நம்பத்தான் முடியவில்லை.

கொஞ்ச நேரம் அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை. திக்கித் திணற, இப்போது நெருப்பைப் பார்த்தவாறு அமர்ந்தவன், பின் அவளைத் திரும்பிப் பார்த்து,

“முதலில் ஒரு காரியம் செய்ய முதல், அந்தக் காரியம் உன்னை எந்தளவு தாக்கும் என்பதை யோசித்து செயல் படு இதங்கனை… எல்லா நேரமும் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள். முக்கியமாக நான்… புரிந்ததா?…” என்று அழுத்தம் திருத்தமாகக் கூற, இதங்கனைக்கு அழுகை பீரிட்டுக் கொண்டு வந்தது. அவனுடைய உதடுகள் பட்ட இடங்கள் எல்லாம் தகித்தன. பத்து முறை குளித்தாலும் அவன் தீண்டிய இடத்தின் தகிப்புத் தணியும் போலத் தெரியவில்லை.

அவள் கனவா கண்டாள், தான் செய்தது தனக்கே பூமராங் போல வந்து சேரும் என்று? வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டுக்கொண்டிருக்கும் போதே சற்றுத் தொலைவில் மெல்லிய சலசலப்பு வந்தது.

அவசரமாகத் திரும்பிப் பார்க்க அந்த அடர்ந்த மரங்களின் மறைப்பிலிருந்து நான்கு பேர் கரங்களில் எதையோ சுமந்தவாறு வந்துகொண்டிருந்தார்கள்.

கடவுளே…! அவளைக் காக்க மகிந்தன் ஆட்களை அனுப்பியிருக்கிறானா. பரபரப்போடு, அவர்களை நோக்கி ஓட எழுந்த கால்கள் மறு கணம் சோர்ந்து மடிந்தன.

ஐயோ…! அது அவள் நினைத்தது போல அவளைக் காக்க வந்த தேவதூதர்கள் அல்ல. அது அந்த அரவனின் ஆட்கள். அதுவும் கரங்களில் ஒரு பெரிய பெட்டியும், கூடவே தேள்களில் கனமான பொருட்கள் அடங்கிய பைகளையும் சுமந்தவாறு வந்துகொண்டிருந்தார்கள்.

இந்த மகிந்தன் என்ன செய்துகொண்டிருக்கிறான். இன்னுமா அவளைக் கண்டுபிடிக்கவில்லை. அவளை இந்த வேலைக்கு அனுப்பும் போது உறுதி கொடுத்தானே. அந்த உறுதியைக் காக்க முடியவில்லை என்றால், காவல்துறையில் என்னதான் செய்து கிழிக்கிறான். சோர்வும் வேதனையும் வந்தவர்களை வெறிக்க, அவர்களோ அரவனின் முன்னால் ஏந்திவந்த அந்த பெரிய இரும்புப் பெட்டிகளை வைத்தார்கள்.

“எல்லாம் கிடைத்ததா?” என்றவாறு எழுந்தான் இவன். கொஞ்சம் கூட முன்பு நடந்ததின் தாக்கம் அவனிடம் இம்மியும் இருக்கவில்லை. மாறாக அவதானமும், தெளிவும் கூடியிருந்தது.

“ஆமாம்… நாங்கள் என்ன கேட்டோமோ அத்தனையும் வந்து விட்டன…” என்றவாறு ஒரு பெட்டியைத் திறக்க, அதில் இரும்பினாலான பல உதிரிப் பாகங்கள் பக்குவமாக வைக்கப்பட்டிருந்தன.

 

இவனோ தன் காதலியைப் பார்த்த பரவசத்துடன்

 

“வாவ் ஷி இஸ் பியூட்டிஃபுள்…” என்றவாறு  அந்தப் பைக்குள் கரத்தை  விட்டு அந்த இரும்பு உதிரிப் பாகங்களை வருடிக் கொடுத்தான். மறு கணம், அதிலிருந்து எதை எதையோ எடுத்து ஒன்றோடு ஒன்று பூட்டத் தொடங்க, அடுத்த இரு நிமிடங்களில் பலம்பொருந்திய நீண்ட துப்பாக்கி ஒன்று அவன் கரத்தில் வீற்றிருந்தது. அதைக் கண்ட இதங்கனை விக்கித்துப் போனாள்.

இவளுக்கு மூச்சே அடைத்துப் போனது. அதிர்ச்சியோடு அவன் ஏந்தியிருந்த துப்பாக்கியையும், அவனையும் மாறி மாறிப் பார்க்க, இவனோ அந்தத் துப்பாக்கியைத் தூக்கி விழிகளுக்கு நேராக வைத்து எங்கோ குறி வைத்தான். பின் திருப்தி கொண்டவனாக,

“ப்யூட்டிஃபுள்…” என்றவன், அதை தனக்குப் பக்கத்திலிருந்த நண்பர்களிடம் கொடுத்து விட்டு மற்றப் பையை நோக்கி நகர, அந்த நீண்ட துப்பாக்கியை வாங்கிய நண்பன், அதைக் கழற்றி மீண்டும் அந்தப் பெட்டியில் அடுக்கத் தொடங்கினான்.

அடுத்த பையிலும் துப்பாக்கிகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சிலது சிறிதாய். சிலது சற்றுப் பெரிதாய். இதங்கனைக்கு அதைக் கண்டதும் மயக்கமே வரும்போல இருந்தது. அவள் ஒன்றும் துப்பாக்கியைப் பார்க்காதவள் அல்ல. மகிந்தன் ஒன்று வைத்திருக்கிறான். ஆனால் அது வேறு. இவை வேறு. திரைப்படங்களில் மட்டும் பார்த்து வியந்த துப்பாக்கிகளை நேரடியாகக் காணும்போது இவளுக்குத் தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது.

கடவுளே எந்தவிதமான பயங்கரவாதிகளிடம் இவள் சிக்கியிருக்கிறாள்? இவள் கலங்கி நிற்கும்போது, அந்த அரவன் அதிலிருந்த ஒரு துப்பாக்கியை எடுத்துச் சடார் என்று அவளை நோக்கி நீட்டினான்.

 

நீட்டிய தோடு மட்டும் நின்றுவிடாமல் குண்டைத் துப்பும் விசையையும் அழுத்தத் தொடங்க, இதங்கனைக்கு அச்சத்தில் விழிகள் பிதுங்க, அதிலிருந்து பாய்ந்துவரும் குண்டுகளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்

What’s your Reaction?
+1
12
+1
2
+1
1
+1
1
+1
2
+1
0
Vijayamalar

Recent Posts

புயலோடு மோதும் பூவை – 13

(13) அந்த அரவன், அவளை நோக்கித் துப்பாக்கியை நீட்டியதும், தன்னைக் கொன்று    அங்கேயே புதைக்கப் போகிறான் என்று இதங்கனைக்குப் புரிந்து…

8 hours ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 28

(28) அன்று அவனைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டுத் தன் கணவனிடம் கேட்டிருக்க, அவனாகவே அவர்களைத் தேடி வருவான் என்று மீனாட்சிப்பாட்டி…

1 day ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 27

(27) நரைத்த முடி, சற்று சுருங்கிய வெண்ணிற முகம். நெற்றியில் பெரிய வட்டப் பொட்டு. அதற்கு மேல் திருநீற்றுக் குறி…

4 days ago

புயலோடு மோதும் பூவை – 11

(11)   கரங்களில் இரத்தம் வடிய, பற்களைக் கடித்து வலியைப் பொறுத்துக்கொண்டு அவனோடு இழுபட்டுச் சென்ற இதங்கனைக்கு போராடத் தோன்றவில்லை.…

5 days ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 25/26

(25) எப்படியோ அனைத்தும் ஒரு நிலைக்கு வந்து, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்காலிகமாக ஆவன செய்துவிட்டு நிமிர்ந்தபோதே, அதிகாலை ஐந்து மணியையும் கடந்துவிட்டிருந்தது.…

6 days ago

புயலோடு மோதும் பூவை – 10

(10) இதங்கனை கண் விழித்தபோது எல்லாமே மங்கலாகத்தான் தெரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலிக்க ஒற்றைக் கரத்தால்…

1 week ago