இருவரும் வெளியே வந்தபோது, வானம் இருட்டத் தொடங்கியிருந்தது.
கிடைத்த முச்சக்கர வண்டியை நிறுத்திய சிற்பரசாகதன், திரும்பி இதமியாவைப் பார்க்க அவனோ ஆவலோடு வானத்தைப் பார்த்தாள்.
“அம்மாடி…. நிறைய இருட்டுகிறதே. இன்று அடைமழைதான் பெய்யும் போல…” சொன்னவளின் முகத்தில் கொஞ்சம் கூடச் சற்று முன் வைத்தியர் சொன்னதற்கான அச்சம் தெரியவில்லை. மாறாக மகிழ்ச்சி தெரிந்தது. இதை சாக்காக வைத்து அவன் கையணைப்பில் உறங்க வாய்ப்பை ஏற்படுத்தலாமே.
இவனுக்குத்தான் மனது கிடந்து பிசைந்தது. அவள் ஏறியதும், அவளுக்குப் பக்கத்தில் ஏறி அமர,
“எங்கே சார் போகவேண்டும்?”
சொன்னான் சிற்பரசாகதன்.
“இல்லை… முதலில் நல்ல சாப்பாட்டுக் கடைக்கு விடுங்கள் அண்ணா…” என்றாள் இதமியா.
திரும்பி அவளைப் பார்த்து முறைத்தவன்,
“இல்லை வீட்டிற்கே விடுங்கள்…” சிற்பரசாகதன் உத்தரவாகச் சொல்ல, அவனை எரிச்சலோடு பார்த்தாள் இதமியா.
“கடந்த நான்கு மாதங்களாக உப்பில்லாத சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்துப் போய்விட்டது. இன்றைக்கு நான் மூக்கு முட்ட காரசாரமாகச் சாப்பிடப் போகிறேன்…”
“ஸ்டாப் இட் இதமியா… டாக்டர் சொன்னதைக் கேட்டாய்தானே. உனக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது. கொஞ்சமாவது அக்கறை படமாட்டாயா…?”
“ப்ச்… அதுதான் உங்கள் பிள்ளை ஆரோக்கியமாக இருக்கிறது என்று வைத்தியர் சொன்னாரே? பிறகு என்ன? என்னைப் பற்றித்தான் உங்களுக்கு அக்கறை இல்லையே…’ சொன்னவள்,
“அண்ணே.. சாப்பாட்டுக் கடைக்கு விடுங்கள்..” என்றாள் உறுதியாக. பற்களைக் கடித்தவன்,
“தம்பி… வீட்டுக்கு விடுங்கள்…” அவன் உத்தரவாகச் சொல்ல,
“இல்லை… என்னை…” அவள் முடிக்கவில்லை அவளுடைய பின்னங் கழுத்தைச் சுற்றித் தன் கரத்தை எடுத்துச் சென்றவன், அவளுடைய வாயை அழுந்த மூடியவாறு,
“சொன்னது போல வீட்டில் விடுங்கள்…” என்றான் அந்த ஓட்டுநரிடம் அழுத்தமாக.
“என்ன சார்… தங்கச்சிதான் ஆசையாகக் கேட்கிறார்களே… வாங்கிக் கொடுத்தால்தான் என்ன?” இதமியாவுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு ஓட்டுநர் வர,
“சொன்னதைச் செய்யுங்கள்… இவர்களுக்கு உப்பு சேர்க்கக் கூடாது என்று வைத்தியர் உத்தரவு… பிறகு ஏதாவது சிக்கல் ஆக்கினால், யார் வதைபடுவது…?” சொல்லவிட்டுத் தன் கரத்தில் சிக்கிக் கிடந்தவளை ஏறிட்டான் சிற்பரசாகன்.
இதமியாவோ கோபத்தோடு அவனுடைய கரத்தை தன் வாயிலிருந்து விலக்க முயன்று தோற்றவளாக அவனைப் பார்த்து முறைத்தாள்.
அவனோ அவளுடைய வாயிலிருந்து கரத்தை விலக்காமல் அவளைக் குனிந்து பார்த்தான்.
ஒரு கணம் இரண்டு விழிகளும் ஒன்றை ஒன்று முட்டி நின்றன. முட்டி நின்ற விழிகளுக்கு அத்தனை சுலபத்தில் ஒன்றை ஒன்று விட்டுப் பிரிந்து செல்ல முடிந்திருக்கவில்லை.
அந்த விழிகள்… அவை அப்படியே அவனுடைய மகிழரசியின் விழிகள். அந்த விழிகளைக் கண்டால் இவன் வேறு ஆளாகிப் போகிறான்….?
இருவரும் ஒருத்தரின் பார்வையை மற்றவர் விலக்காமல் கவ்விப் பிடித்திருக்க, எத்தனை நேரமாக அப்படியே நின்றிருந்தனரோ, வண்டி ஒரு இடத்தில் குலுங்கி நிற்க. இருவருமே சுயநினைவு வந்து திடுக்கிட்டு விழித்தனர்.
அப்போதுதான் அவளுடைய வாயைத் தான் மூடியிருப்பதே சிற்பரசாகதனுக்குப் புரிந்தது. அவசரமாக அவளிடமிருந்து தன் கரத்தை விலக்கினாலும், இன்னும் அந்தக் கரத்தில் அவளுடைய உதடுகள் பதிந்த உணர்வு விலகுவதாக இல்லை.
அவளுடைய வாயைப் பொத்திய கரத்தை கசக்கியவாறு,
“தம்பி… கொஞ்சம் பார்த்து மெதுவாக ஓட்டுங்கள்…” என்றான் கடுமையாக.
“சாரி… குறுக்காக ஒரு நாய் ஓடிற்று.. அதுதான்…” மன்னிப்பு வேண்டியவாறு அவர்களை அழைத்து வந்து வீட்டில் விட, இருவரும் இறங்கினார்கள்.
வண்டி ஓட்டுநருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்புவதற்குள்ளாக இதமியா நடக்க ஆரம்பித்திருந்தாள்.
வயிறு நன்கு பெருத்திருந்ததாலும், பிள்ளை சுமை தாங்க முடியாமல் சற்று சிரமப்பட்டுத்தான் நடந்து சென்றுகொண்டிருந்தாள் இதமியா.
ஏனோ அதைக் கண்டவனுக்கு உள்ளத்தில் ஈரம். அவனையும் அறியாமல் அவளுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் குழந்தை பெற்றுச் சுகபலமாக மீண்டு வரவேண்டும் என்கிற எண்ணம் ஆழமாக அவனுக்குள் பதிந்து போனது.
அன்று மாலை அவளை அழைத்துக்கொண்டு நடைக்குப் போய்விட்டு வரும்போதே மழை துமிக்க ஆரம்பித்திருந்தது.
அன்று இரவுக்கான உணவைச் சமைத்து வைத்துவிட்டு, பரிமளம் விடைபெற்றுச் சென்றிருக்க, சிற்பரசாகதன், இதமியாவுக்குக் கொடுக்க வேண்டிய உணவைத் தட்டில் வைத்து எடுத்துச் சென்றான்.
இதமியா படுக்கையில் சாய்வாக அமர்ந்தவாறு மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டிக்கொண்டு விழிகளை மூடியவாறு அமர்ந்திருந்தாள்.
இவன் உள்ளே வந்ததைக் கூட அவள் அறியவில்லை.
அவளை நெருங்கியவன் அங்கிருந்த மேசையில் உணவுத் தட்டை வைத்துவிட்டு,
“இதமியா…?” மெதுவாக அழைத்துப் பார்த்தான். அப்போதும் அவளிடமிருந்து எந்த அசைவுமில்லை.
“இதமியா…” மீண்டும் அழைத்தவன், இப்போது அவளுடைய தோள்களைத் தொட, திடுக்கிட்டுத் தன் விழிகளைத் திறந்தாள் இதமியா.
அவனைக் கண்டதும் பளிச்சென்று சிரித்தாலும், அவளுடைய விழிகளில் தெரிந்த சிவப்பைக் கண்டு துணுக்குற்றான்.
“என்னாச்சு…? அழுதாயா?” அவளுடைய விழிகளைக் குறுகுறு என்று பார்த்தவாறு கேட்டான் சிற்பரசாகதன்.
உதடுகளைப் பிதுக்கியவள்,
“அழுவதா… இந்த இதமியாவுக்கு மற்றவர்களை அழ வைத்துத்தான் பழக்கம்… தெரியும்தானே…” சொன்னவள், அவனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல் மேசையில் அவன் வைத்த உணவைத் தன் கரங்களுக்கு எடுத்துக் கொண்டாள்.
ஏனோ அவளுடைய அந்த நிலை அவனுடைய மனத்தைப் பிசைய,
“என்னாயிற்று இதமியா…” என்றான் சாகதன். உணவைப் பிசைந்துகொண்டிருந்தவளின் கரம் ஒரு கணம் அசைவற்று நின்றது. ஆனாலும் மறுப்பாகத் தலையசைத்து,
“ந… நத்திங்…” என்றாள். சொல்லும்போதே அவளுடைய தொண்டையின் கரகரப்பைக் கண்டு கொண்டவன், சட்டென்று அவளுடைய நாடியைப் பற்றித் தூக்கிப் பார்த்தான். விழிகளில் நீர் கோடிட்டிருந்தது.
“இதா…” அவனையும் மீறி அழைக்க இப்போது மேலும் அவளுடைய விழிகளில் நீர்த்துளி அதிகம் கோர்த்திருந்தது.
“உனக்குப் பிரசவத்தை நினைக்கும் போது பயமாக இருக்கிறதா?” தவிப்போடு கேட்டான் சிற்பரசாகதன்.
இவளோ மறுப்பாகத் தலையசைத்துவிட்டு,
“இல்லை… பிரசவம் பற்றி நான் கவலைப் படவில்லை… என் கவலை எல்லாம், இன்னும் ஒரு மாதம்தான் உங்கள் கூட இருக்கப் போகிறேன். அதற்குப் பிறகு நான்… உங்களை விட்டு போய்விடுவேன்…” சொன்னவளின் குரலே சொன்னது, அவன் பிரிவை அவள் எவ்வளவு வெறுக்கிறாள் என்று.
ஆழமாக மூச்சொன்றை எடுத்து விட்டவன்,
“உனக்கு அதுதான் நல்லது இதமியா… என்னோடு நீ வாழ நினைப்பது, உனக்கே நீ சூடு வைப்பது போல. எக்காலத்திலும் நாம் சேர்ந்து வாழ்வது சாத்தியப்படாது இதமியா… ஏன் என்றால் நாம் இருவருமே நம் பாதையில் சரியாக நடந்து கொள்ளவில்லை. என் மகிழைக் கொன்றவர்களுள் நீயும் ஒருத்தி. அதற்காக பழி வாங்க உன்னைக் கடத்திச் சென்றவன் நான். அப்படி இருக்கும் போது ஒன்றாகப் பயணிப்பது என்பது கடைசிவரைக்கும் சரியாக வராது… சொல்வதைக் கேள். இந்தக் குழந்தை பிறந்த பிறகு, உனக்கான நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள். மகிழ்ச்சியாக இரு… உனக்கு நடந்த கசப்பான நினைவுகள் அனைத்தையும் மறந்து விடு… என்னையும் சேர்த்து மறந்து விடு…”
“மறப்பதா?” அதைக் கேட்டதும் வேதனைப் புன்னகை ஒன்றைச் சிந்தினாள் இதமியா. பின் அவனை நிமிர்ந்து பார்த்து,
“நீங்கள் மறந்துவிடுவீர்களா? நமக்கிடையில் நடந்ததை அத்தனை சுலபத்தில் உங்களால் மறந்து விட முடியுமா. இதோ நம் குழந்தை நமக்கிடையில் நடந்ததை நினைவு படுத்தாதா. நீங்கள் சொல்வது போல நாம் இருவருமே தகாததைச் செய்தவர்கள் தான். ஆனால், அதையும் தாண்டி எதுவோ நம்மை இணைத்து வைக்க முயல்கிறதே.. அந்த இணைப்பில் தொக்கி நிற்கும் பாசம், காதல், அன்பு இது எதுவும் இல்லை என்றாகிவிடுமா சாகதன்?” கேட்டவளிடம் என்ன பதிலைச் சொல்வது என்று புரியாமல் தலை குனிந்து நின்றான் சிற்பரசாகதன்.
நிச்சயமாக இருவரும் நடந்ததை மறக்கப் போவதில்லை. மறக்கத்தக்க காரியத்தைச் செய்யவும் இல்லை.
ஆனாலும் தலையை அசைத்தவன்,
“நிச்சயமாக மறக்க முயற்சி செய்வேன். என் மகிழின் நினைவுகள் உன்னை மறக்கடிக்கச் செய்யும்… குழந்தை என்னைப் பொறுத்தவரைக்கும் என் மகிழ் கொடுத்த குழந்தையாகத்தான் நான் நினைப்பேன்..” உறுதியுடன் சொன்னவனை வலியோடு பார்த்தாள் இதமியா.
“குறைந்தது உங்களுக்கு மகிழரசியின் நினைவாவது இருக்கிறது…. ஆனால் எனக்கு? உங்களை மறக்கடிக்கச் செய்ய எனக்கு யாருடைய நினைவுகளும் இல்லையே… நான் என்ன செய்யட்டும்?” ஏக்கமாகக் கேட்டவளை வலியோடு பார்த்தான் சிற்பரசாகதன்.
“ஏன்… ஒஷானின் நினைவுகள் இல்லையா?”
அதைக் கேட்டதும் வியந்தவளாக அவனைப் பார்த்தாள் இதமியா.
“உங்களுக்கு எப்படி இது தெரியும்?”
“விசாரித்தபோது தெரிந்துகொண்டேன்.” அவன் சொல்லக் கொஞ்ச நேரம் அமைதி காத்தாள் இதமியா.
“ஒஷான் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது உண்மைதான்… ஆனால் அது காதலா என்று கேட்டால் இல்லை சாகதன். அந்த வயதில் ஏற்பட்ட ஒரு உணர்ச்சி அவ்வளவுதான்…” அவள் சொல்ல,
“அதே போலதான் இப்போது உனக்கு என் மீதிருக்கும் உணர்ச்சியும். காலப்போக்கில் அது காணாமல் அழிந்து போய்விடும்… நம்பு…” அவன் சொல்ல, அவனைக் கோபமாகப் பார்த்தாள் இதமியா.
“உங்களுக்கு மகிழரசி எப்படியோ, அப்படித் தான் எனக்கு நீங்களும். அதையேன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்? ஒஷான் செத்துப் போனான். அவனுக்காக நான் வருந்தினேன்தான். ஆனால் அவன் நினைவுகள் எதுவும் என்னை ஆட்கொள்ளவில்லையே. என்னைக் கடத்தி, மிரட்டி, குழந்தை கொடுத்த உங்களை நினைத்த அளவுக்கு நான் ஒஷானை நினைக்கவேயில்லை தெரியுமா… ஏன் என்றால் ஒஷானின் மீது எனக்கிருந்தது ஈர்ப்பு. உங்கள் மீது இருப்பது காதல்…” என்றாள் அழுத்தமாக.
“அது காதல் இல்லை இதமியா… குற்றவுணர்ச்சி. நீ இரண்டையும் போட்டுக் குழப்புகிறாய்…”
“யார் போட்டுக் குழப்புகிறார்கள்? நானா நீங்களா… உங்களுக்கு என் மீது ஏற்கெனவே ஈர்ப்பு வந்துவிட்டது. அதை ஏற்றுக்கொள்ள நீங்கள்தான் மறுக்கிறீர்கள்… ஏன் என்றால், என்னை விரும்பத் தொடங்கினால், எங்கே மகிழரசிக்குத் துரோகம் செய்துவிடுவீர்களோ என்று அஞ்சுகிறீர்கள். உங்கள் மகிழ் சாகக் காரணமாக இருந்த என்னை உங்கள் மனம் ஏற்றுக்கொள்ளத் தயார் என்பதை உங்கள் உள்ளுணர்வால் தாங்க முடியவில்லை. அதனால்தான் தள்ளி நிற்க விளைகிறீர்கள்… கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தாலே, உங்கள் மனம் உங்களுக்குப் புரிந்து போகும்…” அவள் சொன்னதைக் கேட்டதும், சீற்றத்தோடு எழுந்து நின்றான் சிற்பரசாகதன்.
“போதும் நிறுத்து… என்ன உளறல் இது. எனக்கு உன் மீது இருப்பது வெறுப்பே தவிர வேறு எதுவும் இல்லை… தவிர இந்த ஜென்மத்தில் எனக்கு யார் மீதும் காதலும் வராது… தயவு செய்து உளறுவதை நிறுத்திவிட்டு, குழந்தை பிறந்த பிறகு உன்னுடைய வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை யோசி…”
“அதைத்தான் யோசித்துவிட்டேனே சாகதன்… உங்களோடு வாழவேண்டும், இறுதி மூச்சுவரை…” சொன்னவளின் முகம் சிவப்பதைக் கண்டவன், சட்டென்று தன் கோபத்தைத் தணித்துக்கொண்டான்.
கடவுளே அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது? என்று புரியாமல் குழம்பியவன் விழிகளை ஒரு கணம் அழுந்த மூடித் திறந்தான். பின்.. அவளை அழுத்தமாகப் பார்த்து,
“புரிந்துகொள் இதமியா…! என்னால் பழைய சிற்பரனாக எந்தக் காலத்திலும் மாற முடியாது. அது மகிழோடு அழிந்து போயிற்று… இப்போது இருப்பவன் மனிதன் அல்ல… எக்காலத்திலும் என்னால் நல்ல ஒரு துணையாக உனக்கு இருக்க முடியாது…”
“எனக்குச் சிற்பரன் வேண்டாம்… எனக்கு வேண்டியது இந்தச் சாகதன்தான்… இந்த முறட்டுப் பிடிவாதமான சாகதன்தான் எனக்கு வேண்டும். எனக்கு நீங்கள் நல்ல துணையாக இருக்கவேண்டாம்… ஆனால் நான் உங்களுக்கு நல்ல துணையாக இருக்கிறேன் என்றுதானே சொல்கிறேன். அதற்கு அனுமதி கொடுங்களேன்…”
“காட்… யு ஆர் அன் இடியட்…! திரும்பத் திரும்ப அதிலேயே நின்றால் நான் என்ன செய்ய…? தயவு செய்து இப்படி உளறுவதை நிறுத்து… நடக்காத, நடக்கக் கூடாத ஒன்றுக்காக நீ ஆசைப்படுகிறாய். இப்போது நீ சொல்கிற அத்தனை வசனங்களும் என்னோடு வாழத் தொடங்கிய பின் கசந்து போகும்…! வெறுப்பை வர வைக்கும்..! ஏன் என்றால், நான் உணர்ச்சிகளைத் தொலைத்தவன். உன்னால் மட்டுமில்லை எவராலும் அந்த உணர்ச்சியை மீட்டுக் கொடுக்க முடியாது… உன்னுடைய குற்ற உணர்ச்சிதான்… இப்படிப் பைத்தியம் போல யோசிக்க வைக்கிறது. அந்தத் தவிப்புதான் உனக்குக் காதலாகத் தெரிகிறது… அந்தத் தவிப்பு மறைந்த பின், நீ வாழும் வாழ்க்கை அர்த்தமற்றதாகத் தெரியும்” உறுதியாகச் சொன்னவனைக் கொஞ்ச நேரம் வெறித்தாள் இதமியா. அதற்கு மேல் அவனிடம் எப்படிச் சொல்லிப் புரியவைப்பது என்று சுத்தமாகத் தெரியவில்லை. அவளுடைய அமைதியைக் கண்டவன்,
“புரிந்து கொள் இதமியா… கானல் நீருக்காக ஆசைப்பட்டு, கிடைக்கிற நல்ல வாழ்க்கையை இழந்துவிடாதே… உனக்கு யாராவது வருவார்கள். உன் வலியைப் புரிந்த உன்னைப் புதிதாகப் பிறக்கவைக்க ஒருத்தன் வருவான்…”
“அந்த ஒருத்தன் சிற்பரசாகதனாக இருக்க வேண்டுமே… அவன் இல்லாத எவனையும் இந்த இதமியா ஏற்றுக்கொள்ள மாட்டாளே…” அவள் சொல்ல, இப்போது வலி மறைந்து அங்கே கோபம் உதிக்க அவளை முறைத்தான் சிற்பரசாகதன்.
“விடிய விடிய ராமன் கதை, விடிந்ததும் ராமன் சித்தப்பா என்பது போலப் பேசுகிறாய். தயவு செய்து நடக்க முடியாத ஒன்றை நினைத்துக் கற்பனையில் வாழாதே… நான் எந்தச் செடியும் கொடியும் முளைக்க முடியாத பாலைவனம்… நீ எனக்கு முட்செடி. ஒரு போதும் நமக்குள் சரி வராது…” எரிச்சலுடன் சொன்னவன், விலகிச் செல்ல, இவளோ விழிகளில் கண்ணீர் பொங்க அப்படியே அமர்ந்திருந்தாள்.
எத்தனை சுலபமாகச் சொல்லிவிட்டான். அவன் பாலை நிலம் என்றும். அங்கே முளைத்த முட்செடி அவள் என்றும். ஏன் முட்செடியில் பூ மலராதா இல்லை மலரத்தான் கூடாதா? விழிகளில் கண்ணீர் பொங்க கரத்திலிருந்த உணவை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு மீண்டும் பழையது போலப் படுக்கையில் அமர்ந்து கொள்ள, வெளியே பயங்கரமாக இடித்த இடியுடன் கூடிய மழை போல அவளுடைய மனமும் தவித்து நின்றது.
அதே நேரம் தன் அறைக்குள் புகுந்து படுக்கையில் விழுந்த அவனின் மனதிலும் பெரும் புயல் அடித்துக்கொண்டிருந்தது.
இதமியாவின் பிடிவாதத்தை எப்படிச் சரி செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவனும் தான் என்ன செய்வான். கிடைக்காத ஒன்று வேண்டும் என்றால் எப்படிக் கொடுப்பான்.
தவிப்போடு திரும்பியவனின் விழிகளில் பட்டது மகிழரசியின் புகைப்படம்.
அதை எடுத்துப் பார்த்தவனுக்கு விழிகள் கலங்கின.
“மகிழ்…” என்றான் மென்மையாக.
அவளோ, சிரிப்பு மாறாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தை வருடிக் கொடுத்தவன், “தப்பு செய்துவிட்டேனா…” என்றான் கலங்கிய குரலில். அதற்கும் அதே சிரிப்புதான் பதிலாக வந்தது.
“போகும்போது என்னையும் உன் கூட அழைத்துப் போயிருக்கலாம்தானே… அப்படிப் போயிருந்தால், இத்தனை மரண வலி எனக்கு இருந்திருக்காதே… அந்த மரண வலி கொடுத்த கோபத்தில்தான் இதமியாவைக் கடத்திச் சென்றேன். நான் செய்தது தப்பா மகிழ்…? என்னவென்று தெரியவில்லை இப்போது பயமாக இருக்கிறது. நான் தப்புச் செய்ததாக உள் மனது குறை சொல்கிறது. அதுவும் வைத்தியர் இதமியாவின் நிலை பற்றிச் சொன்னதும், உள்ளே ஒரு வித தவிப்பாகவே இருக்கிறது… அதில் அந்த முட்டாள் பெண் வேறு என்னைக் காதலிக்கிறாளாம். என்னோடு சேர்ந்த வாழப் போகிறாளாம். நீயே சொல் மகிழ்… என்னால் உன்னை விடுத்து இன்னொருத்தியை ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியாதுதானே… அதுவும் உன்னைக் கொன்றவளைப் போய்… அதற்கு அவள் என்ன சொல்கிறாள் தெரியுமா? எனக்கு அவள் மீது பிடிப்பு இருக்கிறதுதானாம். ஆனால் உன்னைக் கொன்றதால் அதை ஏற்க மறுக்கிறேனாம்… என்ன பைத்தியக்கராத்தனமாகப் பேச்சு… உன்னைக் கொன்றவளைப் போய் நான் விரும்புவேனா…” கேட்டவன் ஒரு வித கலக்கத்துடன் தன்னவளின் விழிகளைப் பார்த்தான்.
“மகிழ்… என் மனம் தடுமாறுகிறதா?” என்று அவளிடமே கேட்டான். பின் சற்று நேரம் விழிகளை மூடி நின்றவன், பின் திறந்து,
“யெஸ்… நான் தடுமாறுகிறேன்… காட்… மகிழ்… நான் தடுமாற ஆரம்பித்துவிட்டேன்… உன்னை விடுத்து அவளை… அதுவும் என்னிடமிருந்து உன்னைப் பிரித்தவளை, என் புத்தியும் உடலும் தேடத் தொடங்கிவிட்டது… இப்போதெல்லாம் நான் உன்னை நினைப்பதைக் குறைத்துவிட்டேன். மகிழ்.. நான் என்ன செய்யட்டும்…? அப்படி என்றால், உன் மீது நான் வைத்த காதல் பொய்யா…? இதை விட நான் செத்துப்போகலாம் போலத் தோன்றுகிறது மகிழ்.. என்னதான் முயன்றும் என் புத்தி என்னை மீறி எங்கெங்கோ செல்கிறதே…! ஐயோ…! நான் உடல் இச்சைக்கு ஆசைப்படத் தொடங்கிவிட்டேனா மகிழ்…! அன்று… அவளுக்கு நீ என்று நினைத்து முத்தம் கூடக் கொடுத்தேன். அது தவறுதானே…? நான் என்ன செய்யட்டும்? பிளீஸ்டி.. என்னை இந்தச் சித்திரவதையில் இருந்து காப்பாற்றிவிடு… எனக்கு ஏனோ மூச்சு முட்டுவது போலத் தோன்றுகிறது மகிழ்.. பிளீஸ் ஹெல்ப் மீ… கெஞ்சியவனுக்குப் பெரும் குற்ற உணர்ச்சி எழத் தொடங்கியது. தன் தமிழுக்குப் பெரிய துராகம் செய்தது போல உள் மனம் அடித்துக் கொள்ள,
“பிளீஸ் மகிழ்… உனக்கு நான் துரோகம் எதுவும் செய்யவில்லை என்றாவது ஒரு வார்த்தை சொல்லேன்… கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விடுவேன்… ஐ ப்ராமிஸ் யு… என்ன நடந்தாலும் அவளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்தக் குழந்தை பிறந்ததும், அவளை அவளுடைய இடத்துக்கே அனுப்பிவிடுவேன். நீ என்னை நம்புகிறாய் தானே…?” கேட்க அதே புன்னகைதான அவனைப் பார்த்துச் சிந்தினாள் மகிழரசி.
“அடப் போடி… எப்போது பார்த்தாலும் இதே சிரிப்புதானா உனக்கு? நான் என்ன கேட்டாலும் நீ பதில் சொல்லமாட்டாய் என்று தெரிந்தும் கேட்கிறேன் பார்… என்னைச் செருப்பால் அடிக்கவேண்டும்…” என்று அவளோடு ஊடல் கொண்டவனின் கன்னத்தில் இப்போது தாராளமாகக் கண்ணீர் விழுந்தது. குற்ற உணர்ச்சி நெஞ்சைப் பலமாக அரித்தது.
“பட் ஸ்டில் ஐ மிஸ் யு மகிழ்… டெரிபிளி மிஸ் யு…” என்றடவன், கரத்திலிருந்த புகைப்படத்தை மார்போடு அணைத்தவாறு படுக்கையில் விழுந்தான்.
மீண்டும் மனம் கிடந்து அடித்துக் கொண்டது. அவனையும் மீறி மனது மகிழரசியை விட்டு இதமியாவிடம் சென்றது தவிப்புடனே.
‘தயவு செய்து என் வாழ்க்கையை விட்டுப் போ… என்னால் இந்தக் குற்ற உணர்ச்சியைத் தாங்க முடியவில்லை’ மெதுவாக முனங்கினான்.
அந்த நேரம் திடீர் என்று அவனுடைய விழிகளுக்கு முன்பாகப் பிரகாசமான வெளிச்சம் தோன்ற, சட்டென்று எழுந்தமர்ந்தான் சிற்பரசாகதன்.
அந்த வெளிச்சத்திலிருந்து புகையெனத் தோன்றி முழு உருக் கொண்டு வெளியே வந்தாள் மகிழரசி.
அதைக் கண்டதும் முதலில் அதிர்ந்தவன், எழுந்து ஓடிப்போய் அவளை அணைக்க முயன்றான். ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை. ஏதோ அவனை எழ விடாமல் இறுக்கிப் பிடித்திருந்தது.
“மகிழ்… என் மகிழ்… நீ என்னிடமே வந்து விட்டாயா…?” கேட்டவனின் குரலில் கலக்கம் தெரிந்தது.
“ம்… வந்துவிட்டேன்…” சொன்னவளின் முகத்தில் தான் எத்தனை கனிவு.
அவனை நெருங்கியவள், அவனுக்குப் பக்கத்தில் நெருக்கமாக அமர்ந்தாள். அவனுடைய கலைந்த கூந்தலை வருடிக் கொடுத்தாள்.
“என் கண்ணனுக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படித் தவிக்கிறீர்கள். நீங்கள் தவித்தால், என்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியும்தானே. நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தானே என்னாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்…?” கேட்ட மனைவியைக் கண்ணீரோடு பார்த்தான் சிற்பரசாகதன்.
“அதில்லைடி… உன் பாட்டுக்கு நீ என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாய். நீ இல்லாமல் எவ்வளவு சிரமமாக இருக்கிறது தெரியுமா…? தூக்கமே வரமாட்டேன் என்கிறது…” சொன்னவனின் தாடையில் தன் உள்ளங்கையைப் பதித்தவள், அவனுடைய விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்தாள் மகிழரசி.
“நான் இல்லை என்றால் என்ன…? எனக்குப் பதிலாகத்தான் இதமியா இருக்கிறாளே…” சொன்னவளை முறைத்தான் சிற்பரசாகதன்.
“முட்டாள்தனமாகப் பேசாதே மகிழ்… அவளும் நீயும் ஒன்றா…?”
“இல்லையா பின்னே…”
“மகிழ்… நீ… என்ன சொல்கிறாய் என்று புரிந்துதான் பேசுகிறாயா…?”
“புரிந்து மட்டும் பேசவில்லை சாகதன். உங்கள் குழப்பத்திற்கும் பதில் சொல்ல வந்திருக்கிறேன்… இதோ பாருங்கள்… நான் முடிந்து போன அதிகாரம். திரும்ப வர முடியாத தூரத்துக்குப் போய்விட்டவள்… இதமியா அப்படியில்லை… உங்கள் கால்களில் விழுந்து கிடக்கும் அழகிய எதிர்காலம். அதை எட்டி உதைக்க முயலாதீர்கள்…”
“மகிழ்… நான் எப்படி…?”
“ஷ்… நான் பேசி முடிக்கிறேன்… அதற்குப் பிறகு பேச நேரம் கிடைக்காது…” என்றாள் அழுத்தமாக. இவன் வாயை மூட,
“இதோ பாருங்கள்… இதமியா தான் செய்த தவற்றைத் திருத்திக்கொள்ள உங்களிடம் வந்து இருக்கிறாள். அவள் சும்மா வரவில்லை, தன் தவறை உணர்ந்து உங்களிடம் வந்திருக்கிறாள். அவள் நினைத்திருந்தால், வயிற்றில் உள்ள குழந்தையை அழித்திருக்க முடியும், ஆனால் அவள் தன் குற்றத்தை உணர்ந்து செய்த தப்பை மாற்றி அமைக்க வந்திருக்கிறாள்… அதை நாம் மதிக்க வேண்டாமா? யோசித்துப் பாருங்கள்… அவள் மகாராணியாக வளர்ந்தவள். அதை எல்லாம் உதறிவிட்டு அதிக வசதிகள் இல்லாத இந்தக் கிராமத்தில் இருக்க சம்மதிக்க வேண்டியதன் அவசியம் என்ன. இவ்வளவு ஏன், நீங்கள் கூட இந்தக் குழந்தை வேண்டாம் என்று மறுத்தபோது, அவள் வேண்டும் என்றாளே… தான் செய்த தவற்றுக்கு பிராயச்சித்தம் செய்ய நினைப்பவளை மேலும் தண்டிப்பது நியாயமில்லை பரன்..”
“மகிழ்… என்ன பேசுகிறாய். அவள் உன்னை என்னிடமிருந்து பிரிக்கக் காரணமாக இருந்தவள்…”
“ஒத்துக் கொள்கிறேன்… அந்த நேர வயது கோளாறு… குடிபோதை… எல்லாமாகச் சேர்த்து அவளைத் தகாத நிலைக்குத் தள்ளிவிட்டது… ஆனால் நமக்கு விபத்து நடக்க அவள் முழுக் காரணமில்லையே…”
“அதனால் நான் இழந்தது அதிகம் மகிழ்… ரொம்ப அதிகம். நீ… நம் குழந்தை… அனைத்தையும் இழந்துவிட்டு அநாதையாக இருக்கிறேன்… அது உனக்குப் புரியவில்லையா…?”
“நான் இதமியா செய்தது சரி என்று சொல்ல வரவில்லை கண்ணா… செய்த தவற்றுக்கு அவள் நியாயம் செய்யப் பார்க்கிறாள்… அதை நீங்கள் மதிக்கவேண்டும் இல்லையா… எல்லாவற்றிற்கும் மேலாக அவள் உங்களை நேசிக்கிறாள். அதற்கான மதிப்பை நீங்கள் கொடுக்க வேண்டாமா…”
“மகிழ் நீ ஏன் இப்படிப் பேசுகிறாய்… நான் எப்படி அவளை…”
“புரிகிறது பரன்… ஆனால் இப்போது நீங்கள் கூட அவளை ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டீர்கள். கொஞ்சத்துக்கு முன்னாம் சொன்னீர்களே, அவளை முத்தமிட்டீர்கள் என்று.. அவளை நானாக நினைத்து முத்தமிட்டாலும், உங்கள் ஆழ் மனதுக்கு அவள் இதமியா என்று தெரியும்தானே. ஆக, உங்கள் மனது கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கிவிட்டது. அதை எண்ணி குற்றம் செய்த தவிப்பில் நீங்கள் வருந்தவேண்டிய அவசியமே இல்லை… அந்த மாற்றம் எனக்கு எத்தனை பெரிய நிறைவைக் கொடுக்கிறது தேரியுமா? நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். பரன்… நான் எடுத்துச் சென்ற மகிழ்ச்சியை இதமியா திரும்ப உங்களுக்கு கொடுப்பாள் என்றால், அதுவே எனக்குப் போதும்.. தயவுசெய்து கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துங்கள்…”
“மகிழ்… நான் எப்படி…?”
“பரன்.. நேரமாகிறது.. நான் புறப்பட வேண்டும். இதோ பாருங்கள்…! எனக்கு வேண்டியது எல்லாம் உங்கள் மகிழ்ச்சி மட்டும்தான். நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். தனி மரமாக இல்லாமல், மனைவி குழந்தை என்று நிறைவான வாழ்க்கை வாழவேண்டும்… அதுதான் எனக்கு வேண்டியது. அந்த வாழ்க்கையை இதமியா கொடுப்பாள் என்று நம்புகிறேன்…” சொல்லும் போதே பெரும் இடி முழக்கம் பின்னால் கேட்க, படுக்கையை விட்டு எழுந்தாள் மகிழரசி.
“இதமியாவை போக விட்டுவிடாதீர்கள் பரன். அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்… அவளால் மட்டும்தான் உங்கள் மகிழ்ச்சிய மீட்டுக் கொடுக்க முடியும். பழையன கழிவது உங்களுக்கு மட்டுமில்லை, அவளுக்கும் நல்லது… வாழ்க்கை வாழ்வதற்கு… வாழ்ந்து பாருங்கள். எனக்கு அது தான் தேவை… நான் புறப்படுகிறேன்…”
“நோ… நோ…! போகாதே மகிழ்…! என்னை விட்டு போகாதே…”
“நான் உங்களை விட்டு எங்கும் போக மாட்டேன்.. உங்களை விட்டு நான் எங்கே போக? திரும்பி வருவேன்…! உங்கள் குழந்தையாகத் திரும்பி வருவேன்… திரும்பவும் உங்கள் கரங்களுக்குள் நான் பாதுகாப்பாகக் குளிர்காய்வேன்… எனக்கு நீங்கள் ஒன்றே ஒன்றுதான் செய்யவேண்டும். செய்வீர்களா?”
“உனக்காக உயிரைக் கூடக் கொடுப்பேன் மகிழ்… என்ன வேண்டும் சொல்லு…” பரபரப்போடு கேட்டான் அவன்.
“மகிழ்ச்சியாக வாழவேண்டும். நிறைவோடு இருக்கவேண்டும். செய்வீர்களா?” கேட்க பெரும் வேதனையுடன் அவளைப் பார்த்தான் அவன்.
“நான் எப்படி மகிழ்ச்சியாக இருப்பேன்… உன்னைத் தொலைத்த பின், அது எப்படி என் அருகே வரும்…?”
“முடியும் பரன். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. இதமியாவை மணந்து கொள்ளுங்கள். அவளோடு மகிழ்ச்சியாக வாழுங்கள். அந்த மகிழ்ச்சியில் நீங்கள் என்னைப் பாருங்கள்… நான் உங்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தேன்.. அவள் உங்களுக்கு இதத்தைக் கொடுப்பாள்… அவளை ஏற்றுக்கொள்ளுங்கள்… அது போதும்” சொல்லும் போதே அந்த ஒளி மங்கத் தொடங்க,
“நோ… மகிழ்… போகாதே… என்னை விட்டுப் போகாதே… என்னையும் கூட அழைத்துச் செல்… மகிழ்… என் மகிழ்…” கத்தியவன், அந்த ஒளி மங்கியதும்,
“மகிழ்…” என்கிற அலறலோடு எழுந்தமர்ந்தாள் சிற்பரசாகதன்.
அங்கே இருண்ட அறைதான் அவனை வரவேற்றது.
இல்லையே அவனுடைய மகிழ் வந்தாளே. அவனோடு பேசினாள்… மகிழ்… மகிழ்…” என்றவனின் கரங்களில் எதுவோ உறுத்த, குனிந்து பார்த்தான். மகிழரசியின் சட்டமிட்ட படத்தை இறுக அணைத்துக் கொண்டிருந்தான் சிற்பரசாகதன்.
அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது, தான் கண்டது எனவு என்று.
வியர்த்து கொட்ட, கரங்களால் வியர்வையைத் துடைத்தவாறு கரத்திலிருந்த படத்தை மேசையில் வைத்துவிட்டு எழுந்தான் சிற்பரசாகதன். இன்னும் அவனால் அந்தக் கனவிலிருந்து வெளியே வரவே முடியவில்லை. எத்தனை சுலபமாகச் சொல்லி விட்டாள், இதமியாவை ஏற்றுக்கொள்ளும்படி. அது அவனால் முடியுமா? வேதனை நெஞ்சை அரிக்க நடந்து சென்றவன், சமையலறைக்குச் சென்றான். ஒரு குவளை தண்ணீர் எடுத்துப் பருகியவன் திரும்பி வர அப்போதுதான் பார்த்தான், முன் கதவு திறந்திருப்பதை.
கதவு பூட்டாமலா இருக்கிறது? குழப்பத்துடன் நடந்து சென்றவன். கதவைச் சாத்த முயல, அப்போது தான் பார்த்தான், வாசல் படியில் இதமியா அமர்ந்திருப்பதை.
“இதமியா?” அழைத்தான்.
அதுவரை அடையாய்ப் பெய்துகொண்டிருந்த மழையை வெறித்துப் பார்த்தவள், திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். பார்த்தவளின் விழிகளில் தெரிந்த கண்ணீர் துளியைக் கண்டவனுக்கு இதயம் துடித்தது.
“இதா.. இங்கே என்ன செய்கிறாய்?” கேட்டவனை வலி நிறைந்த புன்னகையுடன் பார்த்தாள் இதமியா.
உதடுகளைப் பிதுக்கியவள்,
“தெரியவில்லை… தூக்கம் வரமாட்டேன் என்கிறது. நெஞ்சை ஏதோ ஒரு பாரம் அழுத்துவது போலத் தவிப்பாக இருக்கிறது… நாளைக்கு என்ன நடக்குமோ என்று இனம்புரியாத அவஸ்தை… ஒரு வேளை எனக்கு ஏதாவது நடந்தால், குழந்தையை உயிரோடு மீட்டு எடுத்துவிடுவார்களா என்கிற பயம்…. அப்படியே தப்பித்தாலும், உங்களையும் குழந்தையையும் பிரிந்து இருக்க முடியுமா என்கிற நடுக்கம்… அது ஒரு மாதிரி என்னை… அமுக்குகிறது…” என்றாள் கிசுகிசுப்பாக. அதைக் கேட்டவனுக்குப் புத்தி வேதனையில் முடங்கியது.
“இதா…” அதற்குமேல் அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.
ஏக்கத்துடன் அவனைப் பார்த்தவள், “எனக்கு ஒரு உதவி செய்வீர்களா சாகதன்…” அவன் பதில் சொல்லாமல் அவளை வெறித்துப் பார்த்தான்.
“எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை… குழந்தையை மட்டும் நீங்கள் பத்திரமாக மீட்டெடுக்க வேண்டும். பெண் குழந்தை என்றால் மகிழரசி. ஆண் குழந்தை என்றால் மகிழரசன். தாயின் பெயராக இந்த இதமியாவின் பெயர். உங்களோடு இல்லாவிட்டாலும், குறைந்தது குழந்தையின் பெயரோடாவது தொத்திக் கொள்கிறேன்….” அவள் சொல்ல, சிற்பரசாகதனுக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
“என்ன உளறல் இது…? திரும்பத் திரும்ப நீ இப்படிப் பேசுவது எரிச்சலாக இருக்கிறது… நீ நினைப்பது போல உனக்கு எதுவும் ஆகாது…”
“ஆகாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் நான் செய்த தவறு, குற்ற உணர்ச்சியாக என்னை பலவீனமாக்குகிறது. உள்ளே என்னவோ செய்கிறது. பந்தை தண்ணீரில் அமிழ்த்தியதும் மேலே பாய்ந்து வருவது போல, உள்ளே அழுத்தியிருக்கும் பாவங்கள் எல்லாம் பூதமாக மாறி என்னை வதைக்கிறது சாகதன். அதுதான் இப்படி திரும்பத் திரும்பப் பைத்தியம் போல பேசுகிறேனோ என்னவோ…” என்றவள் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க,
“என்னால் எந்த வலியையும் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால்… உங்களைப் பிரிந்து செல்வதை… அதைத்தான் என்னால் தாங்க முடியும் போலத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, பிரசவத்தில் நான் இறந்தாலும், இறக்காமல் உங்களைப் பிரிந்து சென்றாலும் இரண்டும் ஒன்றாகத்தான் எனக்கு இருக்கும்…” என்றவள் தன் இடது மார்பை மெதுவாக அழுத்தி விட்டாள்.
“இங்கே நிறைய வலிக்கிறது சாகதன்… பயமாக இருக்கிறது…” சொன்னதுதான் தாமதம், அதற்குமேல் தன் பிடிவாதத்தை இழுத்துப் பிடிக்க முடியாமல் இதமியாவை நெருங்கிய சிற்பரசாகதன் அவளுக்கு அருகே அமர்ந்து அவளை இழுத்துத் தன் மார்பில் போட்டு அணைத்துக் கொண்டான்.
“ஷ்… ஷ்… தயவு செய்து இப்படி நம்பிக்கை இழந்து பேசாதே. எனக்குப் பயமாக இருக்கிறது… இதோ பார்… நம்பு.. உனக்கு.. எதுவுமே ஆகாது…?” சொல்ல அவனுடைய மார்பில் முகத்தைப் புதைத்தவள், சற்று நேரம் அப்படியே இருந்தாள்.
“என்ன நடந்தாலும், என்னைப் பற்றிய எந்தத் தகவல்களும் என் அப்பாவுக்கோ, பெரியப்பாவுக்கோ போகக் கூடாது… தொலைந்த மகள் தொலைந்ததாகவே இருக்கட்டும். தங்களுடைய மகளைக் காப்பாற்ற. இன்னொரு உயிரை அலட்சியப் படுத்தியவர்களுக்கு அதுவே தண்டனையாகவும் இருக்கட்டும்…”
“இதமியா போதும் நிறுத்து… நான்தான் சொல்கிறேன் இல்லையா… உனக்கு எதுவும் ஆகாதென்று… பிறகு என்ன…?” அவளை மேலும் தன்னோடு அணைத்தவாறு கூற, அவனுடைய முடியடர்ந்த மார்பில் சற்று நேரம் அப்படியே கிடந்தாள் இதமியா. அந்த முடி கொடுத்த குறுகுறுப்பில் விழிகளை மூடிக் கிடந்தவள், நிமிர்ந்து அவனை அண்ணாந்து பார்த்தாள்.
அவனுடைய அந்த விழிகளில் அவளுக்கான பரிதாபமும் வலியும் தெரிய, அதை ரசனையுடன் ஏறிட்டாள். அவளுக்கே அவளுக்காக உதடுகளின் ஓரம் நடுங்குவதைக் கண்டவளுக்கு அதற்கு மேல் முடிந்திருக்கவில்லை.
அவனை நோக்கித் தன் தலையை உயர்த்த அவனும் அவளுடைய முகத்தை ஒருவித தவிப்போடு பார்த்துக்கொண்டிருந்தான்.
சற்று முன் மகிழரசி பேசிவிட்டுச் சென்ற வார்த்தைகளா, இரவு நேரம் கொடுத்த தவிப்பா, இல்லை, இடியுடன் கூடிய மழையா காரணம் தெரியவில்லை, சிற்பரசாகதனும் தன் இறுக்கம் தளர்ந்து தன் முகம் நோக்கி வந்த அந்தப் பெண்ணவளின் முகத்தையே வெறித்துப் பார்த்தான்.
ஏனோ அவனுடைய உதடுகள் இளகிப் போயின. உடலில் அந்தக் குளிர் நிலைக்கு ஒவ்வாத வகையில் சூடு ஏறியது. இருவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க, யார் தொடர்ந்து முன்னேறினார்கள் என்று தெரியவில்லை.
இரண்டு உதடுகளும் அரும்பொட்டில் தொட முயன்றுகொண்டிருந்தது.
இருவரின் மூச்சுக் காற்றும் ஒன்றோடு ஒன்று கலந்து சென்றது. அந்த மூச்சுக் காற்றில் அவன் பெண்மையை நுகர்ந்தான். அவள் ஆண்மையை உணர்ந்தாள். மறு கணம் இருவருக்குள்ளும் சொல்லமுடியாத புதிய அவஸ்தை.
மறு கணம் யார் முதலில் முன்னேறினார்கள் என்று தெரியவில்லை. இரண்டு உதடுகளும் தங்கு தடையின்றி ஒன்றோடு ஒன்று அழுத்தமாக ஆழமாக ஆவேசமாகத் தொட்டு நின்றன.
(1) விதற்பரை ஒட்டாவாவை விட்டு டொரன்டோவிற்கு வந்து இரண்டு மாதங்களாயிற்று. அங்கேயிருந்தால் அவ்வியக்தன் தொடர்ந்து அவளை வதைப்பான் என்பதாலும்,…
27) மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன்…
(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும்…
(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…
(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…
(32) பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…
View Comments
Wow awesome
நன்றி நன்றி நன்றி
Nirmala vandhachu 😍😍😍
வாங்கோ வாங்கொ வாங்கோ
அருமை அருமை அருமை அருமை 🤗🤗🤗🤗🤗🤗.
மகிழ் கனவுல வந்து அவனோட ஆழ்மனசை புரிய வைக்கிறா.
அடப்பாவி கோடு போடச் சொன்னா ரோடே போடறானே 🤭🤭🤭🤭🤭🥰🥰🥰🥰🥰🥰.
அடேய் மங்கூஸ் மண்டையா புடிக்காத பொண்ணை யாரும் தீண்ட மாட்டாங்க டா.
லூசுப்பயலே அதுவும் லவ் பண்ணி கண்ணாலம் மூச்சு கிட்ட உன்றமாதிரி ஆட்கள் வேற பொண்ணை பாக்கவே மாட்டாங்கடா.
மியாவ கடத்தி பயமுறுத்த நெனைச்ச உனக்கு அவளோட கசக்முசக் பண்ணத் தோணுச்சுன்னா அவ உன்ற மனசுல அப்பவே வந்துட்டா டா மடையா
என்னதான் தன்னிலை கெட்டிருந்தாலும் கூட மத்த பொண்ணுங்களை நோ டச்சு டா.( எ.கா. நம்ம மிளிர் வூட்டுக்காரன் அபயவிதுலன் டா😎😎😎😎😎😎. சரியான ஈரோ மெட்டீரியல் டா அவன். போதை மருந்து அடிச்சும் கூட வேற பொண்ணு அப்ரோச் பண்ணியும் கூட ஸ்டிராங்கா நின்னவன் அவன்).
அதனால உன்ற கோட்பாட்டை மாத்திக்கோ.
ரொம்ப நேரமா வாய் விட்டு சிரிச்சிட்டே இருந்தேன் வைஷு உங்க கமன்ட் பாத்து. ஸ்ட்ரஸ் பஸ்டர்யா நீங்க. ஹா ஹா ஹா. ஆமா நல்லா உறைக்கிற மாதிரி இந்த லூசுக்கு சொல்லுங்க. அப்பவாச்சும் கேக்கிறானா பாக்கலாம்.
நயணிம்மா 💖💖💖 என்ற கிட்ட அதிகமா வறுவல் வாங்குனவன் விதுலன் தான் அதேமாதிரி பொண்டாட்டிய அதிகமா வரையறை செய்யமுடியாதளவுக்கு காதலிச்சவனும் அவன்தான். கற்பு ஆணுக்கும் உண்டுன்னு ஃபாலோ பண்ணி என்ற மனசை கொள்ளையடிச்ச நாயகன் அவன்.கோடியில் ஒருவன் தான் இப்படி இருக்கமுடியும்.
அவன் உத்தம வில்லன்பா. ரொம்ப நல்லவன், ஆனாலும் கெட்டவன். அவன் தன்னவள் தவிர இன்னொருத்தியை திரும்பிக் கூட பாக்க மாட்டான்.
super ka...no words to say..
idhamiya enna soldradhu nu theriyala...bp idhamiyaku erudho ilaiyo...engaluku erudhu..என்னோட heartbeat sound kaadhula adikudhu..enna agumo...adutha 5ud udanae potrunga...
சோ ச்வீட். ரொம்ப ரொம்ப நன்றிபா. அதுதானே என்ன நடக்குமோ யாருக்கு தெரியும். இன்னாது 5 யுடிய ஒரேயடியா போடுறதா. என்னைக் காணோம். தொலைஞ்சிட்டேன்.