Categories: Uncategorized

பாலையில் பூத்த காதல் முள் பாகம் 2 – 11

11

உள்ளே சென்றதும், அவர்களிடம் ஒரு விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டது. அதில் ஊர்ப் பெயர் பற்றிய விபரங்கள் கேட்டிருக்க, அதில் இதமியா கொஞ்சம் கூடத் தயங்காமல், மகிழரசி, சிற்பரசாகதன் என்று பதிவு செய்ய, அதைக் கண்டவனுக்கு கடும் ஆத்திரம் கொழுந்து விட்டெரிந்தது. நெடுந்தீவிலும் அவனுடைய மனைவி என்றுதானே கூசாமல் சொன்னாள். கொஞ்சத்துக்கு முன்னம் அந்த விக்ரமிடமும் அதைத்தான் சொன்னாள். இவள் தன் மனசில் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாள்?

பதிவு செய்வது முடிந்ததும், திரும்பி அவளைப் பார்த்து முறைத்தவன்,

“நீ உன்னுடைய மனதில் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய். எத்தனை தைரியம் இருந்தால் உன் பெயரைத் மகிழரசி என்பாய். அதுவும் என் மனைவி என்று வேறு சொல்கிறாய்.” பற்களைக் கடித்தவாறு சீற, நிமிர்ந்து அவனை அழுத்தமாகப் பார்த்தாள் இதமியா.

“பின்னே எப்படிப் பதிவு செய்யச் சொல்கிறீர்கள்? இதமியா திலீப் என்றா? என்னைக் காணவில்லை என்று, இப்போது உலகமே தேடிக்கொண்டிருக்கும். இதில் நான் இதமியா என்றால், சந்தேகப் பட மாட்டார்களா? என்னதான் முகத்தில் போட்டிருக்கும் அரிதாரம் என்னை வேறு ஆளாகக் காட்டினாலும், உடல் பருமன், உயரம் இவை எல்லம் சந்தேகத்தைக் கிளப்பாதா. சின்னதாக என் மீது சந்தேகப்பட்டாலும் போதும் சாகதன். என்னைத் தேடி வந்துவிடுவார்கள். அதற்குப் பிறகு? இந்தக் குழந்தையை உயிரோடு உங்கள் கரங்களுக்குக் கிடைப்பது சந்தேகம்தான்? இதை எல்லாம் யோசித்துத்தான் சொன்னேன். தவிர நமக்குத் திருமணம் ஆகவில்லை என்று சொன்னால், குழந்தைக்குத் தந்தை யார் என்று கேட்பார்கள். உங்களைத்தான் சொல்லவேண்டும். திருமணம் ஆகாமலே குழந்தை சுமப்பது ஒன்றும் நமக்குள் சாதாரணமான ஒன்றாக இன்னும் மாறவில்லை…”

“ஆனாலும் எத்தனை எளிதாகப் பொய்யை மெய் போலச் சொல்கிறாய்!” அவன் சொன்னதும் பளிச்சென்று சிரித்தாள் இதமியா.

“பழக்கம்தான்… எங்கள் காரியம் ஆகவேண்டும் என்றால் நிறையப் பொய்கள் சொன்னால்தான் நடக்கும். நண்பர்களோடு சுற்றவேண்டும் என்றால், உண்மை சொல்லி நடக்குமா” சொன்னவளின் முகம் சட்டென்று கலங்கிப் போயிற்று.

அவனுடைய முகமும்தான். இறுகிப் பாறாங் கல்லாகிப் போனது. அப்படி நண்பர்களோடு ஊர் சுற்றித்தானே அவனுடைய வாழ்க்கையை அழித்தாள். அவனுடைய முகம் பார்க்கும் தைரியம் இல்லாமல் தலை குனிந்தவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதி காத்தாள்.

அதற்குப் பிறகு இருவருக்கும் இடையில் பேச்சு எதுவும் நிகழவில்லை. அமைதியாக அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க,

“மகிழரசி…” என்கிற அழைப்பு வந்தது.

இதமியாவோ, யாரையோ அழைப்பது போல எங்கோ பார்த்துக்கொண்டிருக்க,

“மகிழரசி…. மகிழரசி இருக்கிறீர்களா?” சற்று பலமான குரல் தள்ளியிருந்து வந்தது.

“ஏய்…! இதமியா…! அவர்கள்  நம்மைத்தான் அழைக்கிறார்கள்… எழுந்து கொள்…” அடிக்குரலில் சாகதன் சொல்லவும்தான் சுயம்பெற்று திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

தற்போது அவளுடைய பெயர் மகிழரசி என்பது நினைவுக்கு வர அசடு வழிந்தவாறு எழுந்தவளை சட்டென்று பற்றிக்கொண்டான் சிற்பரசாகதன். இவள் வியப்புடன் பார்க்க,

“பார்த்து நட…” என்றவாறு அவளை அழைத்துக் கொண்டு, மருத்துவர் அறைக்குச் சென்றான்.

இவர்களைக் கண்டதும் புன்னகைத்தார் வைத்தியர் ராஜபோலன்.

“உட்காருங்கள்…”

“டாக்டர் பாஸ்கரன்தான் உங்களைப் பார்க்கச் சொன்னார்…”

“ஓ…! அவன் அனுப்பி வைத்தானா…? சொல்லுங்கள்… என்ன பிரச்சனை…”

“அது… இவள் வந்து… இவள் என்னுடைய…” சிற்பரசாகதன் திணற,

“நான் இவருடைய மனைவி. இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை எந்த வைத்தியரிடமும் காட்டவில்லை. அதனால், டாக்டர் பாஸ்கரன், உங்களிடம் வந்து முழுப் பரிசோதனையையும் செய்யச் சொன்னார்…” அவள் முடிக்க, உடனே ராஜகொபால் எழுந்தார்.

“சரி… முதல்ல இந்தப் பெட்ல ஏறிப் படுமா…” அத்தியாவசிய பரிசோதனைகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு, அடுத்து குழந்தையின் இதயத் துடிப்பை அறியும் கருவியை எடுத்து வயிற்றில் வைத்துப் பரிசோதிக்க, குழந்தையின் வேகமாகத் துடிக்கும் இதயத்தின் லப்டப் சத்தம் அந்த அறையையே நிரப்பியது.

அந்தக் குழந்தையின் இதயத் துடிப்பின் ஓசையைக் கேட்ட சிற்பரசாகதனின் விழிகள் சட்டென்று கலங்கிப் போயின.

இந்தச் சத்தத்தை முன்பும் கேட்டிருக்கிறான். அவனுடைய ஆருயிர் மனைவியின் வயிற்றிலிருந்து. ஆனால் அந்தத் துடிப்பு உலகைத் தொட முதல் அழிந்து போயிற்றே.

அவசரமாகக் கண்களில் பொங்கிய கண்ணீரைப் புறங்கையால் துடைத்து விட்டவன், முடிந்த வரைக்கும் தன்னைத் திடமாகக் காட்ட முயன்றான்.

அதே நேரம் இதமியாவும் அவன் கண்களைத் துடைப்பதைக் கண்டதும் உதடுகளைக் கடித்தவாறு விழிகளை அழுந்த மூடினாள்.

இந்த ஜென்மத்தில் அவளையே அவளால் மன்னிக்க முடியாது என்று நன்கு புரிய இதயத்தின் பாரம் மேலும் ஏறியது.

அவளைப் பரிசோதித்த வைத்தியரின் முகம் சற்று நேரம் யோசனையில் சுருங்கியது.

“ஆடைகளைச் சரியாக்கிவிட்டு வாமா…” சொன்னவர் மேசையில் வந்து அமர்ந்தார். ஒரு துண்டில் மேற்கொண்டு செய்ய வேண்டிய பரிசோதனைகளை எழுதிவிட்டு மணியை அழுத்த, ஒரு தாதி வந்தார். அவரிடம் அந்தத் துண்டைக் கொடுத்து,

“இத்தனை பரிசோதனைகளையும் இவர்களுக்குச் செய்ய வேண்டும்…” என்றதும் அந்தத் தாதி இதமியாவை அழைத்துக் கொண்டு இன்னொரு இடம் செல்ல, சிற்பரசாகதனைப் பார்த்த வைத்தியர்,

“நீங்கள் வெளியே இருங்கள்… செய்யப் போகும் பரிசோதனைகளின் முடிவு வந்ததும் அழைக்கிறேன்…” அவனை அனுப்பிவிட்டு அடுத்த நோயாளரை அழைக்க இவன் வெளியே வந்து காத்திருந்தான்.

மீண்டும் இரண்டு மணி நேரக் காத்திருப்பின் பின், இருவரும் உள்ளே அழைக்கப்பட்டனர்.

ராஜகோபாலன் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

“காய்ச்சலைப் பற்றி வருந்த ஒன்றுமில்லை. அது இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும்… ஆனால்… நீங்கள் வருந்தவேண்டியது வேறு ஒன்றுக்காக…” என்றார் அவர் யோசனையாக.

அதைக் கேட்டதும் சிற்பரசாகதன் பதறித்தான் போனான்.

“எ… என்ன டாக்டர்… இவளுக்கு ஏதாவது சிக்கலா?” கேட்கும் போதே இதயத்தின் துடிப்பின் வேகம் இவனுக்கு அதிகரித்தது.

“‘ப்ரீஎக்லாம்சியா’இது பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?” வைத்தியர் கேட்க, சிற்பரசாகதனின் முகம் வெளிறிப் போனது. சற்று முன் வைத்தியர் பாஸ்கரனும் அப்படித்தானே சந்தேகப்பட்டார்.

“டாக்டர்.. இவளுக்கு..” முடிக்க முடியாமல் திணற,

“யெஸ்… இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது. கூடவே சிறுநீரகத்தோடு கொஞ்சம் புரதமும் வெளியேறுகிறது… இது நல்ல அறிகுறிகள் இல்லை…” வைத்தியர் கூற, வியர்த்துக் கொட்டியது சாகதனுக்கு. அவன் அச்சத்தோடு இதமியாவைப் பார்க்க, அவளோ வைத்தியரைப் பார்த்து,

“அப்படி என்றால்?” வெகுளியாகக் கேட்டாள்.

“ப்ரீ எக்லாம்சியா என்பது, கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு வரக் கூடிய மிக ஆபத்தான நோய். அதாவது கர்ப்பகாலத்தில் வரக்கூடிய உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படாமல் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் சிறுநீரில் புரதம் வெளியேறும். இதனால், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயல் இழக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். பிரசவம் கூடச் சிக்கலாகிப் போகும்… அதனால் நீங்கள் எப்போதும் மருத்துவருடைய கண்காணிப்பில் இருப்பது அவசியம்…” வைத்தியர் சொல்ல, அதற்குப் புருவங்கள் சுருங்கக் கேட்டாள் இதமியா.

“ஓ… அதற்கான காரணம் என்ன டாக்டர்…”

“இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. இது மரபணுவாகவும் இருக்கலாம். உங்கள் அம்மா, பாட்டி, பூட்டி இப்படி யாருக்காவது இருந்திருக்கலாம். பொதுவாகக் கருவில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைச் சுமப்பவர்கள், முப்பத்தைந்து வயதுக்கு மேல் குழந்தை சுமக்கிற பெண்கள், இல்லை என்றால் பதினாறு வயதுக்குக் குறைந்த வயதில் கருத்தரிக்கும் பெண்கள், முதல் முறை கருவுற்றிருக்கும் பெண்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லாமல் இருப்பவர்கள், நீரிழிவு கட்டுப்படாமல் இருப்பவர்கள், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு இது வர வாய்ப்புகள் அதிகம்…”

“ஓகே… வை மீ… நான் ஆரோக்கியமாகத் தானே இருக்கிறேன். எனக்கு இப்போதுதான் இருபத்தொன்று டாக்டர். எனக்கு ஏன் இது வந்தது?”

“இதற்குப் பதில் என்னிடம் இல்லை மகிழரசி… உங்களுடைய குடும்பத்தில் யாருக்கேனும் முன் கூட்டியே இந்தப் பிரச்சனை இருந்திருந்தால் உங்களுக்கும் வந்திருக்கலாம். அதே நேரம் நீங்கள் முன்பு மது அருந்துபவராக இருந்தால், இல்லை என்றால் புகை பிடிக்கும் பழக்கம் இருந்திருந்தால், போதைப்பொருட்கள் உட்கொள்ளும் பழக்கம் இருந்தாலும் இது வர வாய்ப்பிருக்கிறது… ஆனால் நம் நாட்டுப் பெண்களுக்கு இந்தப் பழக்கம் இல்லை என்பதால், அதுவாக இருக்காது. ஆனால் என்னுடைய அனுபவத்தில் இது சார்ந்த பழக்கம் உள்ள பெண்களுக்கும் அதீத மன உளைச்சலுக்கு ஆட்பட்டிருக்கும் ஆரோக்கியமான பெண்களுக்கும் இந்தச் சிக்கல் வந்து நான் பார்த்திருக்கிறேன்…” அவர் சொல்ல முகம் கறுத்துப் போனாள் இதமியா.

ஒருவேளை அவளுடைய நண்பர்களுடன் அவள் அடித்த கூத்து தான் இப்போது வினையாகத் திரும்பி வந்திருக்கிறதோ? கலக்கத்தோடு திரும்பி சிற்பரசாகதனைப் பார்க்க, அவனும் அவளைத்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

“உங்களுக்கு அடிக்கடி வயிற்றில் வலி இருந்தது என்று சொன்னீர்கள் இல்லையா…? அதற்குக் காரணமும் இதுதான். ஆனால் நல்ல வேளை உங்களுக்கு உடலில் வீக்கங்கள் எதுவும் இல்லை. தவிர இரத்த அழுத்தம் இன்னும் அதிகமாக எகிறவில்லை. நீங்கள் ஒழுங்காகக் கொடுக்கும் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். தவறாமல் மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டும்…” என்றவர் சற்று நேரம் அமைதியாக இருந்தார்.

“லிசின்… திஸ் இஸ் சீரியஸ் மட்டர்… இதுவரைக்கும் குழந்தைக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் இருக்கிறது. அதனுடைய இதயம் துடிப்பு, வளர்ச்சி எல்லாம் நன்றாகவே இருக்கிறது. நீங்கள் ஒழுங்காகச் சிகிச்சையை மேற்கொள்ளவில்லை என்றால், அது குழந்தைக்கு மட்டுமில்லை குழந்தை சுமக்கிற உங்களுக்கும்தான் ஆபத்தில் முடியும். பிரசவத்தில் வலிப்பு வந்து விட்டால், அது நிறைய சிக்கல்களைக் கொண்டுவரும்… சில வேளைகளில் முப்பத்தேழு கிழமைகளிலேயே குழந்தையை வெளியே எடுக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். நான் சொல்வது புரிகிறதா?”

அவர் சொல்ல அமைதியாகத் தலையை அசைத்தாள் இதமியா.

“நான் இப்போதே மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுக்கிறேன். ஒழுங்காகக் குடியுங்கள். ஒவ்வொரு மாதமும் பரிசோதனைக்கு வந்து விடுங்கள். முக்கியமாக மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்… மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள்… இரத்தப் போக்கு, மூச்சுத் திணறல், தலையிடி, பார்வையில் ஏதாவது சிக்கல், இல்லை என்றால் வித்தியாசமாக ஏதாவது நீங்கள் உணர்ந்தால் உடனே இங்கே வந்துவிடுங்கள். உங்களைக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்…” என்று வைத்தியர் கூற, சற்று நேரம் அமைதியாக இருந்தான் சிற்பரசாகதன். பின் நிமிர்ந்து வைத்தியரைப் பார்த்தவன்,

“டாக்டர்… இந்த… இந்தக் குழந்தை வேண்டாம். அதை அழித்துவிடலாம்…” அவன் இறுக்கத்தோடு சொல்ல இதமியாவும், வைத்தியரும் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தார்கள்.

“என்ன சொல்கிறீர்கள்… குழந்தையை அழிப்பதா?”

“யெஸ்… அவளுடைய உயிரைப் பணயம் வைத்து… எனக்குக் குழந்தை வேண்டாம்… அதை அழித்து விடலாம்…” சொன்னவனை முறைத்தாள் இதமியா.

“உங்களுக்குப் பைத்தியமா.. இதற்காக எத்தனை போராட்டம்… அப்படி இருக்கும் போது சுலபமாக அழித்து விடலாம் என்கிறீர்கள்?” கோபத்தோடு சொன்னவள், ஆழ மூச்செடுத்துத் தன்னை ஆசுவாசப் படுத்தினாள்.

“டாக்டர்.. எனக்கு இந்தக் குழந்தை வேண்டும்.. முழுசாக. ஆரோக்கியமாக… அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்…” என்றாள் அழுத்தம் திருத்தமாக. ஆனால் சிற்பரசாகதன் அடிபட்ட பாவனையோடு அவளைப் பார்த்தான்.

ஏதோ தவறு செய்த உணர்வில் கலங்கிப் போனவனாக, “அது… நீ… எப்படி…” அவன் திணற, அவனை அலட்சியம் செய்தவள்,

“டாக்டர்… குழந்தை பிறந்த பிறகும்… இந்தச் சிக்கல் இருக்குமா….”

“இல்லை. குழந்தை பிறந்ததும் இது காணாமல் போய்விடும். மேபி குழந்தை பிறந்த ஒரு சில

வாரங்கள் தொடர்ந்து இருக்கலாம். இரண்டாவது மூன்றாவது குழந்தைக்கு இது பெரும்பாலும் இருக்காது. ஆனால், நாற்பது நாற்பத்தைந்து வயதுக்குப் பிறகு, உயர் இரத்த அழுத்தம் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு… உங்களுடைய நடைமுறை வாழ்க்கையை ஆரோக்கியமாக வைத்து இருந்தால், இதைப் பற்றிக் கவலைப்பட ஒன்றும் இல்லை…” என்றவர் நிமிர்ந்து சிற்பரசாகதனைப் பார்த்தார்.

“சாகதன்… இவர்கள் ஒன்றும் இரண்டு மூன்று மாதங்கள் கர்ப்பமில்லை. நான்கு மாதங்கள் ஆகி விட்டன. இந்த நேரத்தில் குழந்தை முழு உருவம் கொண்டிருக்கும். இப்போது அழிப்பது மா பாவம்….” என்றவர் அவன் முகம் தெளியாமல் இருக்க,

“உங்கள் மனைவியின் மீது நீங்கள் வைத்து இருக்கும் பாசத்தை நினைத்து நான் மகிழ்கிறேன்… இதுவரை இப்படிச் சிக்கலைக் கேட்டதும் குழந்தையை அழித்துவிடலாம் என்று சொன்ன கணவன் மிகக் குறைவு… அந்த விதத்தில் உங்களை நான் பாராட்டுகிறேன். ஆனால் பாருங்கள், நீங்கள் பயப்படும் அளவுக்கு இது ஒன்றும் புதிதாக வந்த நோயில்லை. இப்படி நிறையப் பேருக்கு நான் வைத்தியம் செய்திருக்கிறேன். ஒரு சிலரைத் தவிர அத்தனை பேரும் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்று எடுத்திருக்கிறார்கள்… தவிர… இப்போது மருத்துவம் நிறையவே முன்னேறி விட்டது. அதனால் பயப்படுவதற்கு எதுவுமே இல்லை. இப்போது, உங்கள் மனைவிக்கு என்ன பிரச்சனை என்று தெரிந்த விட்டது தானே. அதற்கேற்ப வாழ்க்கை நடைமுறைகளை மாற்றிக்கொள்ளுங்கள். மகிழரசி. நான் கொடுக்கும் மாத்திரைகளைக் கவனமாக வேளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணி நேரமாவது நடவுங்கள். காலையும் மாலையும் பதினைந்து நிமிடங்கள் மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். உப்புக் காரம் குறைவாக உணவை எடுத்துக் கொள்ளுங்கள்… உங்களை அமைதிப் படுத்த கூடிய பாடல்கள், மகிழ்ச்சி ஊட்டக் கூடிய நாவல்கள் நிறையப் படியுங்கள்… யு வில் பி ஓக்கே. எந்தச் சிக்கலும் இல்லாமல், குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம்…” வைத்தியர் உறுதியாகக் கூற, புன்னகைத்தாள் இதமியா.

“நிச்சயமாக டாக்டர்… என்னால் முடிந்ததைச் செய்கிறேன்…” சொன்னவள் திரும்பி சாகதனின் கரத்தின் மீது தன் கரத்தை வைத்தாள்.

அவனோ உணர்ச்சி அற்று அவளைப் பார்த்தான்.

“நாம் புறப்படலாமா சாகதன்…” கேட்க, இயந்திர மனிதன் போல எழுந்தான் அவன்.

அவனால் இன்னும் வைத்தியர் சொன்னதை ஜீரணிக்கவே முடியவில்லை. அவளுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று நெஞ்சம் தவித்தது. ஏதோ தவறு செய்தது போன்ற ஒரு வித குற்ற உணர்ச்சி அவனை ஆட்கொண்டது.

கலக்கத்துடன் நிமிர்ந்து இதமியாவைப் பார்க்க, அவளோ அவன் கரத்தைப் பற்றி இழுத்தவாறு சென்றாள். அதுவும் மிகத் தைரியமாக.

What’s your Reaction?
+1
41
+1
24
+1
1
+1
1
+1
6
+1
4
Vijayamalar

View Comments

  • மியா முடிவெடுத்து விட்டாள்
    இனி சாகதன் நினைத்தாலும் தடுக்க முடியாது

  • இதா இரட்டைக் குழந்தைகளை சுமக்கிறாள் என்று நினைக்கிறேன். சரிதானே நயனி அம்மா.

    • அப்படிங்கிறீங்க. இருந்தாலும் இருக்குமோ?????

  • Genetic disorder endal appo Amma ammamma thana varum…
    Magizhukkum ippadi oru sikkal irunthu irukkumo???

    Adhu sari Ithamiya maariveshathulaya poi irukka??? Doctor ku avalai kandu pidikka mudiyalaya???

    And she is bearing twins??? Appdiya??? Scan la solli iruppangale

  • ஆமா, ஜெனடிக் டிஸாடர்னா அப்படித்தான். ஆனா மகிழுக்கு இருக்கணும்னு இல்லையே. அது பின்னாடி ஏன்னு தெரியும். இதமியா யாழ்ப்பாணத்தில் பிரபலம் இல்லாம இருக்கலாம். பெயர் மட்டும் தெரிஞ்சிருக்கும். ஆள் பாக்க எப்படி இருப்பான்னு தெரியாம இருக்கும்ல

  • அருமை அருமை அருமை 🤗🤗🤗🤗🤗.
    இப்பத்திய பொண்ணுங்களுக்கு மாசமான சர்க்கரை உப்பு இரத்த அழுத்தம் கொதிப்பு ன்னு நிறையவே வருது.
    குடிகாரி பாரு உன்ற வேலையால எங்க வந்து நிக்குதுன்னு.
    சரி முடிவு பண்ணிட்டே பெத்துக்கலாம்னு.
    அதுக்கு தக்கன இரு. சாதகனோட சண்டை போடதே. எப்படி இவளை வச்சு அந்த தீவுல பாத்துப்பான்? அதிகமா செலவு பண்ணி பாத்துக்கனும் போலவே.
    ஏன்டா பரன் மகிழ் போனதுக்கு அப்பறம் மறுஜென்மம் எடுத்து வந்தியே. எல்லாரையும் போட்டு தள்ளிட்டு ஆசிரமத்துல இருந்து ஒரு குழந்தைய தத்து எடுத்து வளத்திருந்தா அந்த குழந்தை ஓரு அப்பா கிடைச்சிருப்பாரு. உனக்கும் ஒரு புடிமானம் லைப்புல கிடைச்சிருக்கும்.
    மியாவோட கண்ணைப் பாத்து கவிந்துழுந்து உடம்பு பூராவும் விழுப்புண் வாங்குனது தான் மிச்சம்.

    • ஹா ஹாஹா அதேதான். என்னதான் பேச்சுக்கு ஆசிரமத்தில இருந்து குழந்தை எடுத்துகிட்டாலும் அவனோட டிஎன்ஏவை அது சுமக்காதில்ல. இரத்த பந்தம்னு ஒன்னு இருக்கும் வைஷு. அது நிச்சயமா வளர்ப்பு பிளை்ளைகிட்ட இருக்காது. என்னன்னாலும் தன் உயிரை பத்தி யோசிக்காம அவன் பிள்ளைய பெத்துக் கொடுக்க அவ நினைக்கிறது அவகிட்ட இருக்கிற நல்ல மனச காட்டுது இல்லையா.

  • ஆத்தீ என்னைய கிள்ளுங்க.கிள்ளுங்க.
    ஸ்ஸ்ஆஆஆ வலிக்குது.
    அப்ப நயணிம்மா என்றாளை பாராட்டி பேசறாங்களா!!!!!🤗🤗🤗🤗🤗🤗
    வாவ் ! வாவ்! அச்சோ இதைய யாருகிட்டையாவது சொல்லனுமே 📢📢📢🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊 டிங்கிரிடிங்காலோ டிங்கிரிடிங்காலோ💃💃💃💃💃🕺🕺🕺🕺🕺

  • ஹாய் சிஸ்டர் உங்க வெப்ஸய்ட் ஏன் ஓபன் அகல என்னால உங்க ஸ்டோரி ஏதும் படிக்க முடியலையே ஏன் நான் பாலையில் புத்த காதல்முல் இருந்து ட்ரை பண்றேன் முடியல எப்படி படிக்கச் முடியும் சொன்ன நல்லாருக்கும்

    • பாலையில் பூத்த காதல் முள் எடுத்துட்டேன். நீங்க கின்டில்லதான் படிக்கணும். இல்லைன்னா புத்தகம் வாங்கி படிக்கணும். இப்ப இந்த பேஜ்ல நீ பேசும் மொழி நானாக, மற்றும் முள்ளில் கசிந்திடும் தேன்துளி இரண்டும்தான் போட்டுட்டு வர்ரேன்.

Share
Published by
Vijayamalar

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-1

(1)   விதற்பரை ஒட்டாவாவை விட்டு டொரன்டோவிற்கு வந்து இரண்டு மாதங்களாயிற்று. அங்கேயிருந்தால் அவ்வியக்தன் தொடர்ந்து அவளை வதைப்பான் என்பதாலும்,…

14 hours ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-27

27)   மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன்…

3 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-25/26

(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும்…

5 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-24

(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…

1 week ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-23

(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…

1 week ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

(32)   பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…

2 weeks ago